Followers

Copyright

QRCode

Monday, March 22, 2010

இட ஒதுக்கீடும்.... ஹைதராபாத் ரேணிகுண்டாவும்......





பெண்களுக்கு 33 % இட ஒதுக்கீடு தந்தாலும் தந்தாங்க, பொண்ணுங்க இம்ச தாங்க முடியல.... இப்பவே எல்லா இடத்துலயும் அவங்கதான்.. ஒரு பையனால நிம்மதியா பஸ்சுல போக முடியுமா சென்னையில? எல்லா சீட்டும் பிரீயாதான் இருக்கும் ஆனா இவனால ஒக்கார முடியாது... கேட்டா அது லேடீஸ் சீட்டாம்... சரி உக்காரதான் முடியல ஓரமா நின்னுகிட்டாது போவோம்னு நின்னா தம்பி லேடீஸ் சீட் பக்கத்துல நிக்காத கொஞ்சம் தள்ளி வா அப்பிடின்னு நடத்துனர் சத்தம் போடுவாரு... சரிப்பான்னு பஸ் நடுவுல நின்னா அடுத்த ஸ்டாப்புல காலேஜ் பொண்ணுங்க திமு திமுன்னு ஏறி வருவாங்க.. உடனே நம்ம பெண்கள் காப்பாளர் நடத்துனர் , தம்பி அதான் பொண்ணுங்க வருராங்கள கொஞ்சம் தள்ளி அவங்களுக்கு இடம் விட வேண்டியதுதான அப்படின்னு நமக்கு கடுப்ப கிளப்புவாரு... போயா அப்படின்னு நாம புட் போர்டு பக்கம் போய் நின்னோம்னா "சாவு கிராக்கி" மேல ஏறி வான்னு ஓட்டுனர் அண்ணாச்சி நமக்கு பாராட்டு பத்திரம் வாசிப்பாரு, அத கேட்டவுடனே பஸுல உக்காந்து வர்ற எவளாவது சிரிப்பாலுக , அப்ப நமக்கு வரும் பாருங்க ஒரு கோபம் கெட்ட வார்த்தையில நாலு திட்டு திட்டணும்னு தோணும் , திட்டுனா என்ன ஆகும்னு நெனச்சி பாத்தா நமக்கு கெட்ட வார்த்தைகளே மறந்து போற அளவுக்கு போலீசுகிட்ட அடி விழும்.... அவங்ககிட்ட சொல்லவா முடியும் டிரைவர் என்ன திட்டுனதுக்கும் , நான் அவள திட்டுனதுக்கும் காரணம் இந்த இட ஒதுக்கீடுதான்னு... (இப்ப பஸ்சுல மட்டும்தான் இந்த நிலைமை இனிமே எல்லா எடத்துலயும் இப்படி ஆயிடுமோ?)

               
IPl வியாபராம் நல்லா போய்கிட்டு இருக்கு மோடிக்கு.... இன்னும் புதுசா ரெண்டு அணிகள் உருவாக்கி இருக்காரு... விலைய பாத்தா ரெண்டுமே ஆயிரம் கோடி... எனக்கு இப்பதான் ஒரு விஷயம் புரியிது.... மொத IPl ல எல்லா அணிகளுமே 500 கோடிக்கும் கம்மியாதான் விலை போய் இருந்தது... இப்ப அதே மாதிரியான அணிகள் 1000 கோடி... அப்படினா 500 கோடிக்கு வாங்குனவனுக்கு இது வரைக்கும் குறைந்தபட்சம் 500 கோடி லாபம் கெடச்சிருக்கும்.... எல்லாம் யார் வீட்டு காசு .... நாம வீணா பொழுத போக்குற நேரம்தான் அவங்களுக்கு காசா மாறி கல்லாவ நெரப்புது.... முன்ன எல்லாம் ஒரு ஓவர் முடிஞ்ச பின்னாடிதான் விளம்பரம் போடுவானுக இப்ப என்னடான்னா 3 பந்துக்கு ஒருதடவ ஒரு விளம்பரம்... அதுவும் மைதானத்துல இருக்குற பெரிய டீவீயில ஓடுற விளம்பரத்த அப்படியே காட்டுறானுக ... எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க... எனக்கு இதுவரைக்கும் ஒரு கிரிக்கெட் வீரனை பார்க்கும் பொழுது நாட்டின் மானதிற்க்காக விளையாடும் ஒரு போர் வீரர்களை போலதான் தெரிந்தார்கள் ஆனால் IPL லில் அவர்களை பார்க்கும் பொழுது கிண்டி ரேசுல ஓடுற குதிரை மாதிரி ரொம்ப பாவமா தெரியிறாங்க 




என்னதான் நாம இப்படி வாய் கிழிய பேசுனாலும் போட்டிகளும் விறுவிருப்பாதான் போய்கிட்டு இருக்கு... எனக்கு முதல் ipl லில் இருந்தே டெக்கான் அணியை ரொம்ப பிடிக்கும் , காரணம் என் மனம் கவர்ந்த ரெண்டு பாட்ஸ்மென் கில்லி மற்றும் கிப்ஸ் அந்த அணியில் விளையாடுவது, டோனி இருக்கும் ஒரே காரணத்துக்காக சென்னை அணியை பிடிக்கவே செய்யாது ... டெக்கான் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வென்று முன்னணியில் உள்ளனர்.... வேறு எதுவும் அந்த அணியை பற்றி நான் சொல்ல பயமாக உள்ளது ... நம்ம ராசி அப்படி .... (எனக்கு "தெரிந்த" ஒரு பெண்ணின் விருப்பதிற்காக எனக்கு விஜய்யை பிடிக்கும் என்று நான் அவளிடம் (பொய்)சொன்ன நாளில் இருந்து இன்று வரை விஜய் ஒரு படம் கூட ஹிட் கொடுக்க முடியவில்லை)...


முன்ன எல்லாம் மாணவர்களுக்குள்ள சண்ட வந்ததுனா அது கண்டிப்பா சட்ட கல்லூரியாதான் இருக்கும். அதுக்கு காரணம் நம்ம அரசியல் வியாதிகள், சட்ட கல்லூரி மாணவர்களை குறி வைத்து அவர்களை தங்கள் அரசியல் பணிகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்து வந்ததுதான்... சட்ட கல்லூரி மாணவர்கள் என்றால் கண்டிப்பா ஏதாவது ஒரு அரசியல் கட்சி சார்ந்தவராகத்தான் இருப்பார்... ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு அரசியல் வியாதிகளின் உண்மை முகம் தெரிய ஆரம்பித்தவுடன் அந்த சண்டைகள் எல்லாம் குறைந்து விட்டன...

இப்பொழுது அரசியல் வியாதிகள் தங்கள் ஆதாயத்திற்கு பொறியியல் கல்லூரி மாணவர்களை பயன்படுத்த நினைகின்றனர்... அதுவும் நிகர் நிலை பல்கலைகழகங்கள் விசயத்தில் அவர்கள் மாணவர்களை நிறையவே தூண்டி விட்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்... நான் கூற வந்த விஷயம் இது இல்லை..

நேற்று சன் செய்திகளில் பார்த்த ஒரு செய்தி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குள் நடந்த சண்டையில் நான்கு மாணவர்கள் சேர்ந்து ஒரு மாணவனை அடித்து துவைத்து உள்ளனர்.... அவன் உடம்பெல்லாம் காயங்களுடன் குருதிபுனல் கமலை போல முகமெல்லாம் வீங்கி அழுது கொண்டு இருந்தான் ... எல்லா பள்ளிகளிலும் சிறுவர்களுக்குள் சண்டை வரத்தான் செய்யும் , அது அவர்களுக்குள்ளாகவே பேசி தீர்த்து கொள்ளப்படும்... அல்லது மிஞ்சி மிஞ்சி போனால் அவர்களின் வகுப்பு ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல பட்டு ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ suspend செய்யபட்டு பிரச்சனை முடிவுக்கு வந்து விடும் ..

ஆனால் இன்று பள்ளி மாணவர்களின் பிரச்சனை police station வந்து விட்டது அது மட்டும் இல்லாமல் ஊடகங்களிலும் அது முக்கிய செய்தியாக ஒளிபரப்பபடுகிறது... இந்த பிரச்சனையின் காரணமாக சில மாணவர்களின் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளதாம் ... எல்லாம் கலி காலம்... இன்னும் கொஞ்ச நாளுல LKG பெண்ணின் மீது திராவகம் ஊற்றிய LKG பையன் கைது!! தன் காதலை ஏற்க மறுத்ததால் பயங்கரம்னு!!! செய்து வாசிப்பாங்க நாமளும் அத கேட்டுகிட்டு டீவீயில துள்ளுவதோ இளமையோ , ரேனிகுண்டாவோ பாத்து கிட்டு இருப்போம் .. அதுக்கெல்லாம் இதுவும் ஒரு காரணம்னு யோசிக்க தெரியாமலேயே....

(புடிச்சிருந்தா வோட்டு போடுங்க....பிடிச்சிருந்தாலும் பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க)

7 comments:

Yoganathan.N said...

இட ஒதுக்கீடு விசயத்தை நங்கு அலசியுள்லனர். நம்மால் என்ன செய்ய முடியும், புலம்பத் தான் முடியும். ஹிஹி
பள்ளியில் நடக்கும் பிரச்சனைகளில் (குறிப்பாக பெரிய/சீரியசான சண்டைகள்) போலீசார் அழைக்கப் படுவர் எங்கள் ஊரில். ஆசிரியர்கள் இதைக் கைக்கழுவி போலீசிடம் ஒப்படைத்துவிடுவர்.
சட்டமம் தன் கடமையைச் செய்யும். ஹிஹி

Bala said...

//டோனி இருக்கும் ஒரே காரணத்துக்காக சென்னை அணியை பிடிக்கவே செய்யாது

ஏன் சச்சினை விட அவர் விளம்பர வருமானத்தில் முந்தி விட்டார் என்பதாலா?
இல்லை சச்சினை 200 ரன்னை எடுக்க விடாமல் செய்ய முயன்றதாலா?
இல்லை சரிவு பாதையை நோக்கி சென்ற இந்திய அணிக்கு தொடர் வெற்றி பெற்று தந்ததாலா?

//3 பந்துக்கு ஒருதடவ ஒரு விளம்பரம்...
இது மட்டுமா? ஸ்க்ரீனுக்கு கீழே பிளாஷ் விளம்பரம், டிவியில் மாட்ச் ஓடி கொண்டிருக்கும் போதே படம் உள்ள நோக்கி சென்று ஓரத்தில் விளம்பரம்... இன்னும் பல.

"ராஜா" said...

@ bala
//சச்சினை விட அவர் விளம்பர வருமானத்தில் முந்தி விட்டார்

சச்சின் ஒரு legend அவரை யாராலும் எந்த விசயத்திலும் முந்த இயலாது .... ஒரு வருஷ வருமானத்தில் வேண்டுமானால் அவர் முன்னே இருக்கலாம் ஆனால் எல்லா கணக்கையும் கூட்டி கழிச்சி பாத்தா?

//சச்சினை 200 ரன்னை எடுக்க விடாமல் செய்ய முயன்றதாலா?

எனக்கு அதுக்கு முன்னாடி இருந்தே தொனிய பிடிக்காது அதுக்கு அப்பறம் சுத்தமா புடிக்காது...

//சரிவு பாதையை நோக்கி சென்ற இந்திய அணிக்கு தொடர் வெற்றி பெற்று தந்ததாலா?

தேவர் மகனில் ஒரு வசனம் சிவாஜி பேசுவாரு.. இன்னக்கி நான் வித விதைப்பேன் நாளைக்கு நீ பழம் சாப்புடுவ.. நாளான்னிக்கு உன் மகன் சாப்புடுவான்... ஆனா வித நான் போட்டது ... கங்குலி போட்ட விதை, மரம் டோனி கையில் வந்தது அவ்வளவுதான் ....
நான் கங்குலியின் ரசிகன்,,, தோனியும் வேறு சிலரும் அவரை பல விதங்களில் அவமான பட வைத்த விதம் எனக்கு அறவே பிடிக்க வில்லை... டெண்டுல்கரை மட்டுமே நம்பி இருந்த அணியை யுவராஜ் ஷேவாஹ் அப்புறம் டோனி இப்படி பல இளம் வீரர்களை அணியில் இணைத்து அவர்களை ஊக்கபடுத்தி உலக கோப்பையின் இறுதி வரை கொண்டு சென்ற அவரை கடைசியில் கேவலமான முறையில் அணியை விட்டு விரட்டிய விதம் டோனி மேல் எனக்கு வெறுப்பை உண்டு பண்ணியது....

"ராஜா" said...

//பள்ளியில் நடக்கும் பிரச்சனைகளில் (குறிப்பாக பெரிய/சீரியசான சண்டைகள்) போலீசார் அழைக்கப் படுவர் எங்கள் ஊரில். ஆசிரியர்கள் இதைக் கைக்கழுவி போலீசிடம் ஒப்படைத்துவிடுவர்.

ஆனா இது ரொம்ப ஓவரு தல... பத்தாம் வகுப்பு படிக்கிற பசங்க மேல FIR போட போறாங்களாம்... அவன் இனிமேல் என்ன ஆவான்? பள்ளியில ரெண்டு தடவ என்கொயரி அட்டென்ட் பண்ணுனாலே அதுக்கு அப்புறம் அவனுக்கு பயமே இல்லாம தப்பு பண்ண ஆரம்பிச்சிடுவான்....

இந்த வயசுலேயே போலீஸ் என்கொயரி அட்டென்ட் பன்னுனானா கண்டிப்பா பயந்து திருந்த மாட்டான்.... பயமே இல்லாமதான் போகும்

Bala said...

சச்சினை 200 ரன்கள் எடுக்க விடாமல் செய்தார் என்பது வீணான கற்பனை. எனக்கும் கங்குலி பிடிக்கும். கங்குலி அணியை விட்டு துரத்தப்பட்டது டிராவிட் மற்றும் இன்ன பிற மூத்த வீரர்கள்(சச்சினும் உட்பட) மற்றும் டால்மியா எதிர்ப்பாளர்களால். இதில் எங்கிருந்து டோனி வந்தார் என்று தெரியவில்லை. அப்போது வெளிவந்த ஒரு பத்திரிகையில் வந்த செய்தி டிராவிட் தேர்வாளர்களுடன் பேசிய விஷயங்கள் வெளியிடப்பட்டிருந்தது. "இன்று கங்குலியை எந்த அரசியலை பயன் படுத்தி தூக்கி எறிந்தாரோ அதே அரசியல் டிராவிடையும் தூக்கி எறியும்" இவ்வாறு கூறியிருந்தார்கள். அது நடந்தது உலகறிந்ததே... கங்குலியை ஒழிக்க வேண்டும் என்று டோனி நினைத்திருந்தால் அதன் பின் அணியில் சேர்க்காமல் இருந்திருக்கலாம்..அப்படி செய்ய வில்லையே?

மதார் said...

பெண்கள் சைடு சீட் புல் . நானும் ஆண்கள் சைடு சீட்ல உக்காந்தா ஓர் ஆள் வந்து இது gents சீட் எழுந்திரிங்கன்னு சொல்ல நானும் எழுந்தேன் .அவர் மட்டும் உக்காந்தா பரவா இல்ல கூடவே அவர் மனைவியும் . gents சீட்ல மனைவி உக்காரலாம் நான் உக்காரக்கூடாதா ? என்ன கொடுமை இது ?

Unknown said...

கிரிக்கட்டை புறக்கணிப்பது உங்களுக்கும்,வீட்டிற்க்கும்,நாட்டிற்கும் மற்ற விளையாட்டிற்க்கும் நல்லது.

LinkWithin

Related Posts with Thumbnails