Followers

Copyright

QRCode

Wednesday, March 3, 2010

ப்ரியமுடன் ப்ரியா --- Autograph 1

அது ஒரு மாலை மயங்கும் நேரம் , ஆனா எனக்கு அது டாஸ்மாக்கில் மயங்கி கிடந்த நேரம். மூடியில இத்துனூண்டு பீர ஊத்தி நானூறு மீட்டருக்கு அப்பால வச்சாலே அந்த வாசனையில மப்பு  மண்டைக்கி ஏறி என்னால உன்ன மறக்க முடியல " ப்ரியா"ன்னு எங்க அப்பா செல்லுக்கு SMS அனுப்புற அப்புராணி பய நான் , இன்னைக்கி யாருமே துணைக்கு இல்லாம ஒரு ஹாப்பும் ரெண்டு  புல் பீரும்  அடிச்சா?

டாஸ்மாக் படிக்கட்டு பழனி மல படிக்கட்டு மாதிரி மலைப்பா தெரிய அப்டியே மயங்கி விழுந்துட்டேன்...இதுக்கெல்லாம் காரணம் அந்த நாசமா போன காதல் .... அழகா பொறந்து தொலைச்ச அந்த  ப்ரியா.... .
ப்ரியா நான் காதலிச்ச முதல் பெண் , ஆனா அவ என்ன காதலிக்கல. ஏன்னா நான் அவள காதலிச்ச விசயத்த அவகிட்ட சொல்லாமலே மறச்சி வச்சி இருந்தேன்.... 

ப்ரியானா பயம் ...எல்லாருக்கும் பயம், செருப்பால அடிப்பாங்கிற பயம். செருப்பு பிய்யிற வரைக்கும் அடிப்பா , மாசத்துக்கு எப்படியும் நாலு செருப்பு மாத்துவா . எங்க ஊரு செருப்பு கட பாயே அவ பிறந்த நாளுக்கு "எங்க குடும்பத்த வாழ வைக்கிற தெய்வமே" ன்னு போஸ்டர் அடிச்சி ஒட்டுவாரு , அந்த அளவுக்கு எங்களால அவருக்கு பிசினஸ். அவகிட்ட பேசுறதுக்கே எல்லாரும் பயப்படுவாணுக....

ஆனா அவள பாத்த மொத நாளே அந்த பாழா போன காதல் எனக்குள்ள வந்து தொலச்சிடுச்சே... எப்படி என்னோட காதல அவகிட்ட சொல்லுறதுன்னு எனக்கு புரியாம பைத்தியம் பிடிச்சி  அலைஞ்சிக்கிட்டு இருந்தேன் . அப்பத்தான் கடவுள் கணக்கு வாத்தியார் ரூபத்துல வந்தாரு.

நான் பொண்ணுகள கணக்கு பண்ணி கணக்கு பண்ணி கணக்குல பெரிய புலியாகிட்டேன்.  ப்ரியாவுக்கு அழக அதிகமா படைச்ச ஆண்டவன் அறிவ சுத்தமா வலிச்சி எடுத்துட்டான். காலாண்டுல கணக்குல பல்ப் வாங்கிட்டா, கணக்கு வாத்தி அவளுக்கு நெறைய கேள்விகள கொடுத்து , இத எல்லாம் சால்வ் பண்ணிட்டு வந்தாதான் உன்ன அடுத்த பரிட்ச எழுத விடுவோம் இல்லைன்னா அடுத்த வருசமும் நீ இங்கதான் இருக்கணும்னு அவ சால்வ் பண்ண மாட்டாங்கிற தைரியத்துல அவள அடுத்த வருசமும் சைட் அடிக்கலாம்னு ஜொள்ளு விட்டுகிட்டே சொல்லி இருக்காரு. அவளுக்கு அப்ப கடவுளா தெரிஞ்சது நான் மட்டும்தான்....

எனக்கு அது, ஆண்ட்ரோஜன் அப்பத்தான் அது வேலைய காட்ட ஆரம்பிச்ச கால கட்டம் , அதுவரைக்கும் பாத்து பயந்துகிட்டு இருந்த பள்ளிகூடத்து மிஸ்கள எல்லாம் இப்ப பாத்தா பயத்துக்கு பதிலா வேற ஏதோ தோணுது.... எதிர் வீட்டு ஆண்டி இடுப்புல கொழந்தைய தூக்கி வச்சிருந்தா ஓடி பொய் அந்த கொழந்தைய தொட்டு கொஞ்சி தூக்கி திரும்பவும் அந்த ஆண்டிகிட்டயே கொடுத்து கொழந்தைக்கு கொடுக்குற முத்தத்துல பாதிய ஆண்டிக்கும் கொடுக்குற வயசு... ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டாரா ஒத்த காலுல நின்னுகிட்டு இருந்த மனசுல , ஷகீலா அரகுற டிரஸ்சோட(சில சமயம் டிரஸ்ஸே இல்லாம ) படுக்க ஆரம்பிச்ச நேரம் .... கூட்டமே இல்லாத பஸ்ஸ விட்டுட்டு கூட்டமா இருக்குற பஸ்சுக்காக காத்துகிட்டு இருந்த மனசு... இப்படி டெண்டுல்கர் அடிக்கிற பந்து மாதிரி எல்லா திசையிலும் பறந்துகிட்டு இருந்த என் மனச இஷாந்த் ஷர்மா வீசுற பந்து மாதிரி ஒரே இடத்துல விழ வச்சவ அவதான்........ "ப்ரியா"...

(தொடர்ந்து வருவா)

3 comments:

Yoganathan.N said...

//எங்க ஊரு செருப்பு கட பாயே அவ பிறந்த நாளுக்கு "எங்க குடும்பத்த வாழ வைக்கிற தெய்வமே" ன்னு போஸ்டர் அடிச்சி ஒட்டுவாரு , அந்த அளவுக்கு எங்களால அவருக்கு பிசினஸ்.//

டைரக்டர் 'touch' :P

//ஆனா அவள பாத்த மொத நாளே அந்த பாழா போன காதல் எனக்குள்ள வந்து தொலச்சிடுச்சே..//

ஓ... கண்டதும் காதலா... ஹிஹி

//மதனாவுக்கு அழக அதிகமா படைச்ச ஆண்டவன் அறிவ சுத்தமா வலிச்சி எடுத்துட்டான்.//

ஆண்டவன் ஒரு கதைவை திறந்தா, மறு கதவை பூட்டு போட்டுருவார்... :P

கதை சுவ்வாரசியமாக இருக்கு... அடுத்த தொடருக்கு waiting... :)

"ராஜா" said...

@Yoganathan.N

எல்லாம் ஒரு காலத்துல பண்ணுன சேட்டதான் தல ... இன்னும் சுவாரசியமாய் அடுத்த பதிவை கொடுக்க முயற்சி செய்கிறேன்... தொடர்ந்து படித்து உங்கள் ஆதரவை கொடுங்கள் ...

Unknown said...

இன்னும் வரட்டும் உங்க பிரியா

LinkWithin

Related Posts with Thumbnails