தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் பார்க்கும்படியான
ஒரு நகைசுவை திரைப்படம் , இதில் ஆச்சரியம் என்னெவென்றால் இந்த
படத்தை இயக்கியிருப்பது ஷங்கர் என்பதுதான். இதுவரை தன்னுடைய
படங்களையே ரீமேக் செய்து கொண்டிருந்தசங்கர் முதல் முறையாக
அடுத்தவரின் திரைப்படத்தை ரீமேக் செய்திருக்கிறார். சுஜாதா இருந்திருந்தால்
அவருக்கு கண்டிப்பாக இந்த நிலை வந்திருக்காது. ஆனால் இதனால் நடந்திருக்கும்
ஒரு நல்ல விஷயம் தமிழுக்கு ஒரு அருமையான திரைப்படம் கிடைத்திருப்பதே. ஷங்கர் இனிமேலாவது ஊழலை ஒழிக்கிறேன் தனிமனித ஒழுக்கத்தை சீற்படுத்துகிறேன் என்று மொக்கை படங்களை எடுக்காமல் ஹிந்தியிலும் வேறு சில மொழிகளிலும் வந்த சிறந்த சில படங்களை தமிழாக்கம் செய்யலாம். அந்த திறமை அவரிடம் நிறையவே இருக்கிறது என்பதை நண்பன் நன்றாகவே எடுத்துரைக்கிறது.பின்னே மொக்கை நடிகர்களும் அதைவிட மொக்கையான இசையமைப்பாளரையும் வைத்து கொண்டு 3 இடியோத்ஸ் மேஜிக்கை அப்படியே இந்த படத்திலும் கொண்டுவந்திருப்பது சாதாரணமான விசயமில்லை. ஷங்கர் அதை சாதித்திருக்கிறாரே.
முதலில் படத்தின் பிளஸ் என்னேவேன்ன என்று பார்ப்போம் இது 3 idiots
படத்தின் ரீமேக் என்பதை விட பெரிய பிளஸ் வேறு எதுவும் இந்த படத்துக்கு தேவையில்லை. அந்த படத்தின் மேஜிக்கில் பாதியை கொண்டுவந்தாலே போதும் படம் கண்டிப்பாக ஹிட். பிரசாந்த் நடித்து பிரபு தேவா இயக்கியிருந்தால் கூட இது சாத்தியமே. ஆனால் அந்த படத்தை நூறு சதவீதம் கொஞ்சம்கூட சிதையாமல் தமிழ்படுத்துவது கொஞ்சம் சவாலான விசயமே. சங்கர் வென்றது இதில்தான். பாடல்களை தவிர வேறு எதிலும் கைவைக்காமல் அப்படியே செராக்ஸ் எடுத்ததும் ஒருவகையில் நல்லதுதான்.படத்தின் ஜீவன் சிதையவில்லை.
இரண்டாவது பிளஸ் ஒரு சில கதாபாத்திரங்களின் தெரிவு. குறிப்பாக சத்தியன் ஜீவா ஸ்ரீகாந்தின் அப்பாவாக வருபவர். சத்தியன் தைரியமாக இதுதான் தன்னுடைய முதல் படம் என்று சொல்லிகொள்ளலாம். ஹிந்தி பட கதாபாத்திரத்தின் உடல் மொழியை இம்மி பிசகாமல் அப்படியே கொண்டுவர முயற்சித்து அதில் ஏறக்குறைய வெற்றியும் பெற்றிருக்கிறார். அடுத்து ஜீவா சிவா மனசு சக்தி படத்தைஒத்த கதாபாத்திரம் , கஷ்டமே இல்லாமல் பட்டைய கிளப்பியிருக்கிறார்.
ஆனால்ஒருசில சீரியஸ்ஷான காட்சிகளில் மட்டும் சொதப்பியிருக்கிறார். ஒரிஜினல் படத்தை விட இந்த படத்தில் சில காட்சிகள் நன்றாக வந்திருகிறது அதில் ஒன்று ஸ்ரீகாந்த் அவர் அப்பாவிடம் மனம் விட்டு பேசும் காட்சி , அந்த காட்சி சிறப்பாக அமைய காரணம் அப்பா கதாபத்திரத்தில் நடித்திருக்கும் நடிகரின் இயல்பான நடிப்பே. ஒரு நடுத்தர குடும்ப தலைவரை அப்படியே கண்முன்னே நிறுத்தியுள்ளார்.
படத்தின் அடுத்த பிளஸ் என்று பார்த்தால் ஒளிப்பதிவு. ஒரிஜினலை அப்படியே சங்கர் கொண்டுவர முடிந்ததில் ஒளிப்பதிவாளரின் பங்கு நிறையவே உண்டு. கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு.
அடுத்து எனக்கு தெரிந்து படத்தின் சில மைனஸ்கள். முதலில் இலியானா , 3 இடியோத்ஸ் படம் பார்க்காதவர்களுக்கு எப்படியோ ஆனால் அந்த படத்தை பார்த்தவர்களுக்கு கரீனா கபூரின் இடத்தில் இவரை நினைத்துகூட பார்க்கமுடியாது பேசாமல் ஷங்கர் இன்னும் ஒரு ஐந்து கோடி அதிகம் செலவு செய்து கரீனா கபூரையே நடிக்க வைத்திருக்கலாம். அந்த கதாபாத்திரத்தில் அவரை யாராலும் ரீ பிளேஸ் செய்ய முடியாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அடுத்து பின்னணி இசை ,ஹாரிஸ் இந்த படத்துக்கு ரீ ரெகார்டிங் செய்வதற்கு முன் பழைய இளையராஜா-பாலுமகேந்திரா , இளையராஜா-மகேந்திரன் கூட்டணி படங்களை ஒருமுறை பார்த்துவிட்டு அதில் வரும் பின்னணி இசையை அப்படியே இன்றைய காலத்திருக்கு ஏற்றவாறு மாற்றி போட்டிருக்கலாம். படம் பல இடங்களில் ஒரிஜினலை விட ஒரு படி கீழே இறங்க காரணம் இவரின் பின்னணி இசையே.
மூன்றாவது மைனஸ் என்னவென்று நான் இங்கே எழுதினால் பின்னூட்டத்தில் ஒரு கும்பல் என்னை சராமரியாக கெட்ட வார்த்தைகளால் திட்ட வாய்ப்பு அதிகம் என்பதால் அமீர்கானிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு அதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன். அமீர்கான் சங்கரோடு சேர்த்து என்னையும் மன்னிப்பாராக. எப்பொழுதும் தூங்கி எழுந்ததை போன்று இருக்கும் முக அமைப்பை சங்கர் எப்படி கவனிக்காமல் விட்டாரோ தெரியவில்லை .கேமராவை பார்க்காமல் வேறு எதையோ பார்த்து கொண்டு பேசினால் அமீர்கானின் உடல் மொழி வந்து விடும் என்று யார் சொல்லிகொடுத்தார்கள் என்று தெரியவில்லை பல காட்சிகளில் அந்த கதாபாத்திரம் அப்படிதான்திரையில் பேசுகிறது.ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் இதேபடம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் இந்த படத்தில் அமீர்கானை ரீபிளேஸ் செய்ய கூடிய ஒரே ஆள் அந்த பழைய கார்த்திக் மட்டுமே.... ஆனால் இந்த படத்தின் ஒரே ஆறுதல் படத்தின் கதாநாயகன் ஓவர் பில்ட்அப் எதுவும் இல்லாமல் அடக்கி வாசித்திருப்பதே. இமேஜ் பார்க்காமல் எல்லோரிடமும் அடிவாங்கியதை கண்டிப்பாக பாராட்டலாம்.
அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரிந்திருந்தாலும் அதை தமிழில் பார்க்க போகிறோம் என்பதால் ஒரு சுவாரஷ்யம் இருந்துகொண்டேதான் இருந்தது , எனவே 3இடியோத்ஸ் பார்த்தவர்களுக்கும் இந்த படம் போர் அடிக்காது என்பது படத்தின் வெற்றிக்கு பக்கபலமான விசயமே
மொத்தத்தில் நண்பன் ஷங்கரின் "optimal remake "....
தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மட்டும் தங்கள் தகுதிக்கு மீறி புகழபடுகிரார்கள். அதில் முதன்மையானவர் கௌதம் மேனன் அடுத்த இடம் சேரன் , அந்த லிஸ்டில் லிங்குசாமிக்கும் இடம் உண்டு . சண்டைகொழியோடு அவருக்கு சரக்கு தீர்ந்து விட்டது என்பதை பீமா , பையா படங்களை பார்த்தால் புரியும். ஆனால் இன்னமும் எனக்கு திறமை இருக்கிறது என்று பிடிவாதமாய் அவர் இயக்கி இருக்கும் படம்தான் வேட்டை. வறட்டு பிடிவாதம் என்னவாகும் என்பதற்கு வேட்டை ஒரு நல்ல உதாரணம்.
குடியிருந்த கோயிலில் இருந்து அட்டகாசம் வரை பல ஹீரோக்களுக்கு கைகொடுத்த ஆள்மாறாட்ட கதைதான் வேட்டையும்.
ரௌடிங்க ஆள் வச்சி அடிக்கும் பொது போலீஸ்ஆள் வச்சி அடிக்க கூடாதா
என்ற சுவாரஷ்யமான ஒருவரிதான் முதல் பாதி. அடுத்தடுத்தசுவாரஷ்யமான
காட்சியமைப்புகளால் கலகலப்பாக போகிறது முதல்பாதி. அதுவரை வில்லன்களை
வேட்டையாடியபடம் , இடைவேளை முடிந்தவுடன் வில்லன் ஆள்மாராட்டத்தை
கண்டிபிடித்தவுடன்பார்க்கும் நம்மை வேட்டையாட ஆரம்பித்து விடுகிறது.
மாதவனுக்கு தைரியம் வர வேண்டும் என்பதற்காக ஆர்யா அடிவாங்கும் காட்சி,
ஒரு வீடியோகேமராவைவைத்துகொண்டு வில்லன் ஆள்மாராட்டத்தை
கண்டுபிடிக்கும் காட்சி , பாதிக்கப்பட்ட போலீஸ்காரரை வைத்தே வில்லனின்
அடியாளை போட்டு தள்ளும்காட்சி , வீட்டுக்குள் ரௌடிகள் நுழைந்ததும்
சமீரா எனக்கு வலித்தாலும் பரவாயில்லை ஒருத்தனும் வீட்டை விட்டு
உயிரோடு போககூடாது என்று வசனம் பேசும் காட்சி என்று படத்தில் வயிறு
குலுங்க சிரிக்க நிறைய காட்சிகள்.
யுவனின் பாடல்கள் சுமார் ரகம். பையாவில் தன உழைப்பை கெடுத்த லிங்குவை
வேட்டையில் நன்றாகவே பலி வாங்கிவிட்டார் என்று நினைக்கிறேன். பப்பரப்பா
பாடல் படமாக்கிய விதம் யுடுப்பில் பார்த்த அளவுக்கு கூட சுவாரஷ்யமாக இல்லை.
பின்னணி இசையில் யுவன் தான் இளையராஜாவின் வாரிசு என்பதை நிரூபித்து இருக்கிறார்.
மொக்கை காட்சிகளுக்கும் ஒரு பரபரப்பை உருவாக்கியிருக்கிறது அவரின் பின்னணி இசை.
படத்தின் பெரிய குறை திரைகதை. அதுவும் இரண்டாம் பாதியில் திரைகதை மொத்தமாக கவிழ்ந்து விட்டது.
பீமாவும் பையாவும் எச்சரிக்கை மணி அடித்தும் கண்டுகொள்ளாத லிங்குசாமி என்னும்
பீமாவும் பையாவும் எச்சரிக்கை மணி அடித்தும் கண்டுகொள்ளாத லிங்குசாமி என்னும்
இயக்குனருக்கு சாவு மணி அடித்திருக்கிறது இந்தவேட்டை .
டிஸ்கி -எவ்வளவோ முயன்றும் அளிஞ்மென்ட் சரியாக வரவில்லை .... உங்கள் பொறுமையை சோதித்திருந்தால் மன்னிக்கவும்





