Followers

Copyright

QRCode

Thursday, November 14, 2013

ஆரம்பம்


படம் வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது , கிட்டதட்ட ஐந்து முறை படம்
பார்த்தாகிவிட்டது ஆனால் இப்பொழுதான் அதை பற்றிய பதிவு எழுதுவதற்க்கு வாய்ப்பு
கிடைத்திருக்கிறது , இந்த பத்து நாட்களாக நேரம் கிடைக்கும் சமயங்களில் இணைய
வசதி இல்லாமல் போய் விட்டது , இணைய வசதி இருந்த சமயங்களில் இதை பற்றி எழுத
நேரம் கிடைக்காமல் போய் விட்டது . இனிமேல் இதை எழுதினால் யாரும் படிப்பார்களா
என்று தெரியவில்லை , ஆனால் ஒரு தல ரசிகனாக இருந்து கொண்டு ஆரம்பம் படத்தை
பற்றி எதுவும் எழுதாமல் போனால் நாளைக்கு எதிரிகள் நம் வரலாற்றை திரித்து எழுதி
விடுவார்கள் என்பதால் இந்த கடமையை கொஞ்சம் தாமதம் ஆனாலும் முடித்து விடலாம்
என்று இந்த பதிவை எழுதுகிறேன் ..

முன்பு எல்லாம் தல படம் வந்தால் காக்கா மாமாவின் ரசிகர்களுக்கு வயிறெரியும் ,ஆனால் இப்பொழுது வேறு சிலருக்கு வயிற்று வலியே வந்து விடுகிறது
, அவர்கள் வழியில் வாந்தி எடுத்து வைத்து விடுகிறார்கள் . மங்கத்தாவில் சாதாரண
வயிற்று கடுப்பாக ஆரம்பித்தது , பில்லா 2 வில் வயித்து போக்காக மாறி இப்பொழுது
ஆரம்பத்தில் அவருக்கு அல்சரே வந்து விட்டது... இப்படியே போனால் அண்ணனுக்கு
பொங்கலில் கேன்சரே வந்தாலும் வரலாம் அந்த கோச்சடையாந்தான் அவரை காப்பாற்ற
வேண்டும். இந்த படத்தில் தல தன்னை அடுத்த ரஜினியாக காட்டிக்கொள்ளவில்லை ,படத்துக்கு வெளியே ரஜினியையோ இல்லை அவரின் ரசிகர்களையோ எந்த விதத்திலும்
சீண்டவில்லை , இருந்தும் சில ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து காண்டாவது
ஒரு தல ரசிகனாக எனக்கு சந்தோசமே...

நான் ஏற்கனவே பில்லா 2 வில் சொல்லியதுதான் , ஒரு மசாலா படத்தை தனி ஒரு ஆளாக
தூக்கி பிடித்து அதை வெற்றியடைய செய்யும் திறமை ஒரு சிலருக்கே அமையும் , அதில்
ரஜினிக்கு என்றுமே முதலிடம்தான் , பாட்ஷா , அருணாசலம் , படையப்பா போன்ற
படங்களில் எல்லாம் ரஜினியை எடுத்தி விட்டு பார்த்தால் படத்தில் ஒன்றுமே
இருக்காது , அவருக்கு பின்னர் அந்த திறமை இருக்கும் ஒரே நடிகர் தலதான் ,பில்லா
, மாங்காத்தா இந்த இரண்டு படங்களிலும் அஜித்தை நீக்கி விட்டு பார்த்தால்
பூஜியம்தான் , அதே போல ஒரு நடிகர் என்ன செய்தாலும் அதை பார்த்து திரையரங்கமே
ஆர்பாரிக்கும் என்றாள் அதுவும் ரஜினிதான் , இந்த ஆரம்பத்தில் அந்த
மேஜிக்கையும் நிகழ்த்தி விட்டார் தல , போலீஸ் கஷ்டடியில் இருந்து தப்பிக்கும்
அஜீத் அடுத்த காட்சியிலேயே துபாய் செல்கிறார் , உக்கார்ந்த இடத்தில்
இருந்துகொண்டு ஒரு சாட்டிலைட் நெட்வொர்க்கையே ஸ்தம்பிக்க செய்கிறார் ,ஜேம்ஸ்பாண்ட் ஒருவரால் கூட ஹேக் செய்ய முடியாது என்னும் அளவுக்கு செக்யூர்
செய்ய பட்ட வங்கி செர்வரை ரொம்ப சாதாரணமாக ஹேக் செய்கிறார் ... ஆனால் இந்த
லாஜிக் மீறல்கள் அனைத்துமே படத்தில் தெரிந்தேதான் வைக்கபட்டுள்ளது , விஷ்ணு
என்னும் இயக்குனரின் ஸ்டைலான காட்சியமைப்பும் , யுவனின் அதிரடியான பின்னணியும்
, கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிபதிவும் எல்லாவற்றிருக்கும் மேலாக தலயின்
மேஜிக்கலான ஸ்கிரீன் பிரெஸென்சும் இருக்கும் பொது லாஜிக்காவது
மண்ணாங்கட்டியாவது ... இதற்க்கு முன் சிவாஜியில்தான் இப்படி தெரிந்தே லாஜிக்கே
இல்லாமல் காட்சிகளை அமைத்து அதில் வென்றும் காட்டியிருந்தார்கள் .. சிவாஜியில்
நிகழ்த்தபட்ட அந்த அதிசயத்தை பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவும்
அஜித்தும் தமிழ் சினிமாவில் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். ஒரு பைக்கை
காட்டியவுடன் விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது இது வேறு எந்த சம கால நடிகனின்
படத்திலும் சாத்தியமே இல்லை ..
தல படத்தை முதல் நாள் பார்ப்பது என்பது என்றுமே மகிழ்ச்சியான விஷயமே ,படத்துக்கு படம் அவரின் ஒப்பேனிங் பிரமாண்டமாய் கூடிக்கொண்டே செல்கிறது..
தளபதி பாட்ஷா காலத்து ரஜினி பட முதல் நாள் காட்சிகளில் இருந்த எனர்ஜி ,உற்சாகம்
, வெறி , ஆட்டம் பாட்டம் எல்லாம் ரஜினியோடு முடிந்து விடும் என்று எல்லாருமே
சொல்லிக்கொண்டு இருக்கும் போது அந்த மொத்த என்ர்ஜியையும் , உற்சாகத்தையும் ,கொண்டாட்டத்தையும் இன்றைய இளைங்கர்களிடம் மறு உருவாக்கம் செய்து
கொண்டிருக்கிறார் தல ... முதல் மூன்று நாட்கள் பல திரையரங்குகளில்
(அருப்புக்கோட்டை , சென்னை ) இந்த படத்தை பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்
ஒரு ஜாதிய கட்சியின் ஊர்வலத்தில் கூட இவ்வளவு கொண்டாடத்தை பார்க்க முடியாது.
அஜீத் படம் வெளிவரும்போது மட்டும்தான் இந்த கூட்டமும் வெளியே வரும் , மற்ற
நாட்களில் இவர்கள் எங்கே இருப்பார்கள் என்றே தெரியாது .  இந்த கூட்டத்தை தனது
சுயநலத்துக்காக தல பயன்படுத்தாமல் இருக்கும் வரை இது பெருகிகொண்டேதான் போகும்..

LinkWithin

Related Posts with Thumbnails