பத்துவருடங்களுக்கு முன்பாக எல்லாம் எந்த புது படங்களும் எங்கள் ஊரில் ரிலீஸ் ஆவதில்லை , சுட சுட படம் பார்க்க வேண்டும் என்றால் இருபது கிலோமீட்டர் பயணித்து நாங்கள் விருதுநகர் சென்றுதான் பார்க்க வேண்டும்.. எங்கள் சுற்று வட்டாரத்தில் விருதுநகர்தான் A சென்டர் , எங்கள் ஊர் திரையரங்குகள் எல்லாம் B சென்டர் , எங்கள் ஊரை சுற்றி இருக்கும் சின்ன சின்ன ஊர்களில் இருக்கும் திரையரங்குகள் (டெண்டு கொட்டாய்கள் ) C சென்டர் என்று சென்டர் வாரியாக அப்பொழுது சினிமா வியாபாரம் நடந்து கொண்டிருந்தது , A சென்டரில் முதலில் ரிலீஸ் ஆகி அங்கு பிலிம் தேய தேய ஓடி எங்கள் ஊரில் அதே படம் திரையிடப்படும் பொழுது திரை முழுவதும் கோடுகள்தான் தெரியும் ,C சென்டர் கதி இன்னும் கேவலம் , ஒலியும் தேய்ந்து பல படங்களில் எல்லா கதாபாத்திரங்களும் அழுது கொண்டேதான் வசனம் பேசுவார்கள் ... அந்தே நேரத்தில் மெல்ல மெல்ல கேபிள் டிவி விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிக்க பழைய படங்கள் என்றாலும் தெளிவாக குறிப்பாக இலவசமாக படம் பார்க்கும் வசதி கிடைத்தவுடன் B மற்றும் C சென்டர்களில் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் வெகுவாக குறைய தொடங்கியது ,
சின்ன படம் பெரிய படம் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா படங்களுக்கும் பொன் முட்டையிடும் வாத்தாக இருந்த B & C திரையரங்குகள் எல்லாம் கல்யாண மண்டபங்களாக மாறி , இனி சினிமா மெல்ல சாகும் என்ற நிலை வந்துகொண்டிருந்த நேரத்தில் இதற்க்கு தீர்வாக உலக நாயகன் ஒரு பக்காவனா திட்டத்தோடு களம் இறங்கினார் , மளிகை சாமான் போல சினிமாவும் மக்கள் நினைத்த நேரத்தில் கிடைக்கவேண்டும் A, B, C என்று சென்டர் பாகுபாடு இல்லாமல் எல்லா ஊர்களிலும்நேரடியாக படங்களை ரிலீஸ் செய்வோம் ,வீட்டுக்கு பக்கத்திலேயே படம் பார்க்கும் வாய்ப்பு இருந்தால் மக்கள் கண்டிப்பாக திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பார்கள் என்று புது வியாபார யுக்தியை அறிமுகபடுத்த முயற்சித்தார் , ஆனால் அதற்க்கு அப்பொழுது ஏகப்பட்ட எதிர்ப்புகள் இவர் தன்னுடைய படத்தை அதிக விலைக்கு விற்க முயற்சி செய்கிறார் , அவர் பேச்சை நம்பி எல்லாரும் படத்தை வாங்கி வெளியிட்டால் தயாரிப்பாளராக அவருக்கு லாபம்தான் ஆனால் திரையரங்குகள் இன்னும் பெருத்த நட்டத்தை சந்திக்க வேண்டி வரும் என்று பயமுறுத்தி அதற்க்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே வந்தார்கள் , ஆனால் எதற்கும் அஞ்சாமல் தன்னுடைய வேட்டிடையாடு விளையாடு படத்தை தமிழ்நாட்டில் இருக்கும் சின்ன சின்ன ஊர்களில் கூட நேரடியாக வெளியிட்டார் , ரிசல்ட்??? தனக்கு அருகில் இருக்கும் திரையரங்கிலேயே புது படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் எல்லாரும் மீண்டும் திரையரங்குகளை நோக்கி நகர ஆரம்பித்தனர் . அன்று யாரெல்லாம் கமலை திட்டினார்களோ அவர்கள்தான் இன்று இதனால் கொள்ளை லாபம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள் , ஏன் கமல் கல்லடி படும் போது அவருக்கு தோள் கொடுக்காத அவர் முயற்சிக்கு ஆதரவு கரம் நீட்டாத அவரின் சக சினிமா கதாநாயகர்கள் கூட அதன் பின்னர் இதே முறையை பின்பற்றி தங்கள் படங்களின் வியாபரத்தை பெருக்கி கொண்டார்கள் , அன்று கமல் மட்டும் வித்தியாசமாக யோசிக்காமல் இருந்திருந்தால் இருபது கோடி முப்பது கோடி என்றிருந்த தமிழ் சினிமாவின் வியாபாரம் இன்று எழுபது கோடி எம்பது கோடி என்று இருந்திருக்காது ...
ஆனால் கமலை அன்று எதிர்த்த திரையரங்க உரிமையாளர்கள் அதன் மூலம் கிடைக்கும் கொள்ளை லாபத்தை பார்த்தவுடன் டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக ஏற்றி குறைந்த பார்வையாளர்களை வைத்து அதிக லாபம் சம்பாதிக்க ஆரம்பித்தனர் , ஆனால் இன்று அதுவே படம் பார்க்கும் நமக்கு பெரிய தலைவலியாக மாறிவிட்டது , எங்கள் ஊரில் பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு திரையரங்கம் எப்படி இருந்ததோ அதே நிலைமையில்தான் இன்றும் இருக்கும் , ஓளி ஒலி அமைப்பிலோ , குளிர்சாதன அமைப்பிலோ , ஏன் கழிவறை கட்டமைப்பிலோ எந்த முன்னேற்றமும் இருக்காது , ஆனால் பத்து ரூபாயாக இருந்த கட்டணம் மட்டும் இன்று நூறு ரூபாயை தாண்டி இருக்கும் , இந்த கொள்ளையை பொறுக்க முடியாமல்தான் பலரும் இப்பொழுது திரையரங்கம் பக்கம் செல்வதே இல்லை , படம் வந்து ஒரே வாரத்தில் ஒரு காட்சிக்கு ஐந்து பேர் பத்து பேருடன் ஓடிய பெரிய நடிகர்களின் படங்கள் ஏராளம் , முன்பெல்லாம் ஒரு ஐநூறு பேர் படம் பார்த்தால் அவன் இன்னொரு ஐநூறு பேரிடம் படத்தை பற்றி சொல்லுவான் , அதில் ஒரு இருநூறு பேராவது படம் பார்க்க வருவார்கள் , கட்டணம் குறைவாக இருந்தாலும் வசூல் அதிகமாக இருக்கும் , ஆனால் இன்று அதிக விலை கொடுத்து பார்ப்பதே ஐம்பது பேர்தான் என்பதால் மௌத் டாக்கின் வீச்சு குறைவாகவே இருக்கும் , குடும்பத்தோடு படம் பார்க்க வருபவன் எல்லாம் திரையன்குகளின் கேவலமான கட்டமைப்பினாலும் , அதிகமான விலை கொடுக்க வேண்டியதிருப்பதாலும் ஒரு திருட்டு VCD வாங்கி அந்த குவாலிட்டியொடு திருப்திபட்டு கொள்கிறான் ... இப்படி திரையரங்கம் சென்று படம் பார்க்க பிடிக்காதவர்களின் பணமெல்லாம் ஒன்று அவர்களுக்கே மிச்சமாகிறது , இல்லையென்றால் திருட்டு VCDகாரனுக்கு சென்று விடுகிறது... தயாரிப்பாளருக்கு அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை...
இதை எப்படி சரி செய்வது என்று எல்லாரும் (சினிமா வியாபாரிகள்) யோசித்து கொண்டிருக்கும் பொது மீண்டும் ஒரு அட்டகாசமான திட்டத்தோடு வந்திருக்கிறார் நம் உலக நாயகன் ... உலகம் உருண்டை என்று முதலில் சொன்னவர்களுக்கு கிடைத்த அதே கல்லடிதான் கமலுக்கும் , இந்த கல்லடி படம் வெளிவந்த பிறகும் தொடருமா? DTH தொழில் நுட்பம் சினிமாவுக்கு வரமா? சாபமா? என்று எனக்கு தெரிந்த சில விசயங்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்
தொடரும் ..........
தொடரும் ..........
4 comments:
ராஜா...
நீங்க சிவகாசியா ? அருப்புகோட்டையா ?
அருப்புகோட்டை நண்பா
கமல்தான் ஒவ்வொரு தடவையும் தமிழ் சினிமாவை டெக்னிகல் ஆக்கிக்கொண்டிருக்கிறார். டால்பி ஸ்டீரியோ, டீடிஎஸ் போன்ற வெளி நாட்டு சினிமா அனுபவத்தை நமக்கு பரிச்சயமாக்கியது கமலே. அருப்புக்கோட்டை தியேட்டராவது பரவாயில்லை. கரூர் ரொம்ப மோசம்.
நல்லபகிர்வு...
Post a Comment