இது ஒரு மீள் பதிவு...
இளைய தளபதிக்கு இன்னமும் ரசிகர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை
எனக்கு நிறையவே உண்டு எனவே இது யார் மனதையும் புண்படுத்தாது என்று நம்புகிறேன். விஜய்க்கு
இன்னமும் ரசிகர்கள் என்று யாராவது இருந்து இதை படித்து காண்டானால் அது என்னுடைய தவறு
இல்லை , அவருக்கும் ரசிகராக இருக்கும் உங்கள்
தப்புதான்... (ஒரு காலத்துல என்னமா ஆட்டம்
போட்டீங்கடா , இப்ப எங்க டர்ன் சும்மா
பிரிச்சி மேய்வோம்ல...)
இன்னைக்கு எங்க ஏரியாவே திருவிழா கொண்டாட்டத்துல இருக்கு.. பின்ன எங்க ஏரியாவுல இருக்குற எல்லாருக்கும் செல்ல புள்ள எங்க இளைய தளபதியோட பிறந்தநாள் இன்று... மத்த இடங்களில் எப்படியோ தெரியாது ,எங்க தெருவுல இன்னைக்கு ஒரே அட்டகாசம்தான்... எங்க தெருல இருக்குற எல்லா வீட்டு தாய்மார்களும் இன்னைக்கு தளபதியோட பிறந்த நாளை அவங்க வீட்டு பையனோட பிறந்த நாளை கொண்டாடுற மாதிரி காலையிலேயே இனிப்பு செய்து கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்... எங்க ஏரியா யூத்துக்கள் எல்லாம் தீபாவளி குஷியில இருக்காங்க ... தெருல குழாய் செட் கட்டி குத்து பாட்டா போட்டு ரணகள படுத்திகிட்டு இருக்கானுக .. தெருவுல குழாய் செட் கட்டி பாட்டு போட்டாளே சண்டைக்கு வர எங்க தெரு ஜோசப் அண்ணன் (தீவிர கிருத்துவர்) இன்னைக்கு தளபதியோட பிறந்த நாளுன்னு தெரிஞ்சவுடனே குழாய் கட்டுற காசுக்கு நானும் பங்கு தருவேன்னு அடம் பிடிச்சி காச கொடுத்திட்டு போறாரு.... இப்படி மதம் கடந்து எல்லார் மனசையும் பிடிச்சிருக்காரு எங்க இளைய தளபதி.. எங்க தெரு கன்னி பொண்ணுங்க எல்லாம் காலையிலேயே தளபதி பேருக்கு எங்க தெரு அம்மன் கோயில்லுல சிற்ப்பு யாகம் நடத்திட்டு வந்துட்டாங்க... அவர மாதிரி ஒரு அழகான வீரமான பையன்தான் அவங்களுக்கு புருசனா வரணுமாம் ...
பின்ன தளபதின்னா சும்மாவா... அவர் எங்கள பொறுத்த வர எங்களோட காவல்காரன் ... சின்ன கொழந்தைங்க அவர் முகத்த பார்த்து மொதல்ல பயந்தாலும் அப்புறம் அவர் பண்ணுற சின்ன சின்ன சேட்டைகளை பார்த்து அவரோட தீவிர ரசிகர்களா ஆகிட்டாங்க... அவர் முகத்த பாத்துட்டாலே அதுகளுக்கு கொண்டாட்டம்தான்... சின்ன சின்ன சேட்ட பண்ணி கொழந்தைகளை குஷிபடுத்துற தளபதி சண்டைன்னு வந்துட்டா அவருதான் எப்பவும் சச்சின்.. நம்பர் ஒண்ணுன்னு சொல்ல வந்தேன்... காதல் விசயத்துல எங்க தளபதி பயங்கர போக்கிரி ... அவருகிட்ட மயங்காத பொண்ணுங்களே இல்ல .... அந்த விசயத்துல அவருக்கு போட்டியா யார் வந்தாலும் கில்லி மாதிரி எல்லாரையும் போட்டு தள்ளிடுவாரு ... எங்க ஏரியா கதாநாயகன் எங்க தளபதிதான், அவருக்கு போட்டியா எத்துனை பேர் வந்தாலும் எங்க ஏரியா மக்களோட சப்போர்ட் எப்பவும் இளைய தளபதிக்குதான்... அவரு முகத்தை ஒரு நாள் பாக்காமல் போயிட்டாலும் எங்க தாய்குலங்களுக்கு தாங்காது .. அவர் முகத்த பார்த்த பின்னாடிதான் நிம்மதியா தூங்கவே போவாங்க... இப்படி சிருசுல இருந்து பெருசு வரை எல்லாருமே அவரோட தீவிர விசிறிகள்தான்...
எங்க தளபதியோட போட்டோவ இங்க போட்டா கண்ணு பட்டுடும்னு எங்க ஏரியா தாய்குலம் எல்லாம் ரொம்ப பீல் பண்ணுனாங்க.. இருந்தாலும் தளபதியோட புகழை பரப்ப வேண்டியது என்னை போன்ற அவரது தீவிர ரசிகர்களின் கடமை அதனால் உங்களுக்காக அவரின் அழகிய புகைப்படம் கீழே...
எங்ககிட்ட நெறைய பேரு சண்டைக்கு வந்தானுக ஏண்டா இந்த நாய்க்கு இளைய தளபதின்னு பேரு வச்சீங்கன்னு .. அவனுகளுக்கு ஏன் இதுல கோபம்னு தெரியல .. நீங்களே சொல்லுங்க எங்க தெருவ காப்பாத்த நைட் முழுவதும் கண்முழிச்சி கவனமா இருந்து எதிரிகளோட சண்ட போடுற அதுக்கு நாங்க தளபதின்னு பேர் வச்சது தப்பா? தளபதின்னு சொன்னா ஏதோ வயசான பீலிங் வருது . அதோட வயசு வெறும் ஏழுதான் அதான் முன்னால அதோட வயச குறிக்கிற மாதிரி இளையங்கிற வார்த்தைய சேர்த்து இளைய தளபதின்னு கூப்பிடுறோம் ... இதுல வேற எந்த உள்குத்தும் கிடையாது ...
எங்கள் இளைய தளபதிக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
பி.கு1: இன்னைக்கு வேற யாரோ ஒரு இளைய தளபதிக்கும் பிறந்த நாளாம்.. அதுக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ...
5 comments:
பின்னிட்டிங்க தல....
பின்னிட்டிங்க தல....
பாஸ் மதுரையில " தமிழ்நாட்டின் ஒசாமாவே" அப்படீன்னு ஒசாமா கெட்-அப் ல" டாகுடர்ர் " இருக்கமாரி கசுமாலம் புடிச்ச முட்டா நாயிக போஸ்டர் அடிச்சுருக்காணுக. எங்கெங்க குண்டு வச்சானோ...அசிங்கம் இல்லாம எப்படித்தான் பொது இடத்துல " விசை" ரசிகன் நு சொல்றானுகளோ?
என்ன இருந்தாலும் நீங்க செய்துள்ளது மோசம், அநியாயம், அக்கிரமம். யாரையும் கீழ்த் தரமாக பேசக் கூடாது. அவமானப் படுத்தக் கூடாது. ஒவ்வொருத்தருக்கும் அவருக்குண்டான மரியாதையை தரனும். அதில நீங்க தவறிட்டீங்க. ஒருத்தரைக் கேவலப் படுத்தலாம், ஆனாலும் இவ்வளவு தரைமட்ட leval-ளுக்கா போவது? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? நேரில் உங்க முன்னால வந்து ஏன் இப்படி எழுதினீங்கன்னு கேள்வி கேட்க சான்ஸ் இல்லை என்பதற்காக இப்படி ஒரு பாதகச் செயலை செஞ்சிருக்கீங்க. ஆனாலும் நான் உங்களை சும்மா விடப்போவதில்லை. இப்ப நான் கேட்கிறேன் பதில் சொல்லுங்க. பாவம், அந்த நாய் உங்களுக்கு என்ன தீங்கையா செஞ்சது, அதப் போயி தளபதியோட ஒப்பிட்டுருக்கீங்களே? வாயில்லா ஜீவன் பாவமையா, திரும்ப இப்படி அத கேவலப் படுத்தாதீங்க. மீறி செஞ்சீங்க புளூ கிராஸ் காரங்க கிட்ட சொல்லிடுவேன், ஆமா...........
ரொம்ப நல்லா இருக்கு...
Post a Comment