Followers

Copyright

QRCode

Monday, May 28, 2012

நம்ம தல தோனிக்கு பெரிய சங்கு ஊதுங்க...



வழக்கத்தை விட இந்த முறை ஐ‌பி‌எல் கொஞ்சமல்ல அதிகமாகவே பரபரப்பாக நடந்து முடிந்து விட்டது.. இந்த முறை மைதானத்தை விட மைதானதுக்கு வெளியேதான் நிறைய சுவாரஷ்யமான நிகழ்வுகள் நடந்தேறியது.. ஒரு வீரர் வெளிநாட்டு பெண்ணிடம் சில்மிஷம் செய்யததில் இருந்து அணியின் உரிமையாளர் குடித்து விட்டு சண்டித்தனம் பண்ணியது வரை அத்துணை அசிங்கங்களும் அரங்கேறியது... இவைகளுக்கு நடுவில்தான் மைதானத்தில் கிரிக்கெட் பொம்மலாட்டமும் ரசிகர்களுக்கு காட்டப்பட்டு வந்தது... யாரோ வெளியில் இருந்து ஆட்டுவிக்க அதற்க்கு ஏற்றார் போல உள்ளே வீரர்கள் அடித்தார்கள் , லட்டு போல பந்து வீசினார்கள் , மொக்கை பந்திலும் போல்ட் ஆனார்கள் , கைக்குள் வந்து விழும் பந்துகளையும் நழுவ விட்டு நடித்தார்கள்... கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட சில அணிகள் மொக்கை போட்டிகளில் தோற்கடிக்கபட்டு வெளியேற்றபட்டன , இந்த முறை தேராது என்று கணிக்கப்பட்ட அல்லது ஐ‌பி‌எல் நிர்வாகிகளால் அவ்வாறு மறைமுகமாக விளம்பரபடுத்தபட்ட அணிகள் ஆரம்பத்தில் நொண்டியடித்து தமிழ் பட ஹீரோக்களை போல கடைசியில் வீறு கொண்டு எழுந்தன. அதுவும் பிளே ஆஃப் சுற்றும், இறுதி போட்டியும் சென்னையில் நடக்கிறது என்பதற்காக மூன்று அணிகளை வலுகட்டாயமாக தோற்கடித்து சென்னையை உள்ளே நுழைத்த சாமர்த்தியம் சபாஷ் ...ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த தந்திரம் அது , ஜெயித்து கொண்டிருந்த அணிகளை கடைசியில் தோற்கடித்து பெட்டிங்கில் பணம் அள்ளியது ,சென்னை என்று பெயர்  வைத்துவிட்டதால் அதை ஆதரித்தால்தான் நாம் தமிழன் இல்லையென்றால் நாம் தமிழனே கிடையாது என்று நம்பிக்கொண்டிருக்கும் மற தமிழர்களை கூட்டம் கூட்டமாக மைதானதுக்கு வர வைத்து காசு பார்த்தது என்று என்று ராஜதந்திரத்தின் உச்சம் தொட்டது நம் பி‌சி‌சி‌ஐ...




தகுதி சுற்றில் பல ஆட்டங்களில் எதிரணியின் ஒரே ஒரு வீரர் அடித்த ஓட்டங்களை கூட மொத்த வீரர்களும் சேர்ந்து அடிக்காத சென்னை அணியை பிளே ஆஃப் சுற்றில் சுத்தி சுத்தி அடிக்கவிட்டு இறுதி போட்டிக்கு ஒரு பெரிய பரபரப்பை உருவாக்கினார்கள்.. அப்பொழுதுதானே நம் தமிழர்கள் நாம் தமிழர் என்ற பாசத்தோடு கூட்டம் கூட்டமாக போட்டியை பார்க்க வருவார்கள்.. (பிளே ஆஃப் சுற்றில் மூன்றாவது போட்டியில் டெல்லி அணி வீரர்கள் விட்ட கேட்ச்களை பார்த்தும் ஐ‌பி‌எல்ளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் நாம்  இளிச்சவாயர்கள் என்ற பட்டத்துக்கு  முற்றிலும் பொருத்தமானவர்கள்)



அப்படி நாம் தமிழர் பற்றோடு இறுதி போட்டியை பார்த்த தமிழனுக்கு பொம்மலாட்டத்தின் முடிவு என்னமோ பெரிய ஏமாற்றமாகத்தான் அமைந்தது. ஒரு பிரமாண்டமான மசாலா படத்தின் கிளைமாக்ஸ் எப்படி இருந்தால் படம் வெள்ளிவிழா கொண்டாடுமோ அதே போலவே விறுவிறுப்பாக இயக்கபட்டிருந்தது இந்த ஐ‌பி‌எல்ளின் கிளைமாக்ஸும்... ஆட்டத்தின் முதல் பாதி முடிந்ததும் சென்னை அணி எளிதில் வென்று விடும் என்று எனக்கு தெரிந்த  பல சுத்த தமிழர்கள் அப்பொழுதே தமிழகத்தின் வெற்றியை கொண்டாடும் மனநிலைக்கு வந்திருந்தார்கள்... ஐ‌பி‌எல் போட்டியின் கடைசி பந்து வரைக்கும் அதை நடத்துபவர்களுக்கு  பணம் மழை பொழியும் என்ற சின்ன விஷயம் கூட அவர்களுக்கு புரியவில்லையா இல்லை புரியாதது போல நடிக்கிறார்களா என்று எனக்கு புரியவில்லை... 






அதுபடியே போட்டியும் கிட்டதட்ட கடைசி பந்து வரைக்கும் இழுத்து கொண்டு வரப்பட்டது,அதுவும் சென்னை ஜெயிப்பது போல இருந்த ஆட்டம் ஒரு கட்டத்தில் கொல்கத்தா ஜெயிப்பது போல மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது... ஆனால் அங்குதான் கதையில் ஒரு ட்விஸ்ட், நன்றாக விளையாடிக்கொண்டிருந்த கொல்கத்தா அணியில் அடுத்தடுத்து விக்கெட் விழ மீண்டும் ஆட்டம் மற தமிழன் பக்கம் சாய்ந்தது... இப்படி கடைசி வரை அங்கும் இங்கும் மாறி மாறி பயணித்த திரைக்கதை கடைசியில் கொல்கத்தா பக்கம் சாய்ந்து  மற தமிழனுக்கு ஆண்டி கிளைமாக்ஸாக மாறி விட்டது...  எத்தனை முறைதான் ஒரே அணியை ஜெயிக்க வைப்பது , பிறகு மற்ற மாநில ரசிகர்கள் வெறுப்பில் ஐ‌பி‌எல்லை ஒதுக்கிவிட்டால் என்ன செய்வது, அதுவும் இல்லாமல் கங்குலி வெளியேறியதில் இருந்து கொல்கத்தா ஈடன் கார்டனில் எந்த போட்டி நடந்தாலும் ஈயாடுகிறது , இந்த முறை கொல்கத்தா ஜெயித்து ஷாருக்கான் இது என்னுடைய அணியின் வெற்றி கிடையாது ஒவ்வொரு வங்காளியின் வெற்றி என்று சொல்ல வைத்து விட்டால் தமிழனுக்கு இப்பொழுது இருக்கும் அதே “நாம் தமிழன்  பற்று வங்காளிக்கும் பொத்து கொண்டு வந்து அடுத்தடுத்த ஐ‌பி‌எல்ளில் கூட்டம் கூட்டமாக ஈடன் கார்டனில் கூடுவானே... இந்த கிளைமாக்ஸ் இப்படியாக முடித்து வைக்கபட்டதற்க்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்...




என்ன இருந்தாலும் கம்பீர் வாயால் தோனிக்கு சங்கு ஊதியது போல அமைக்கபட்டிருந்த இந்த கிளைமாக்ஸ் எனக்கு பிடித்திருந்தது என்பதை ஒத்துக்கொள்ளதான் வேண்டும்...        

Friday, May 4, 2012

“முதல் அடியில் நடுங்க வேண்டும் ... மறு அடியில் அடங்க வேண்டும் “ – பில்லா 2



நீண்ட நாட்களாகவே எதிர்பார்த்து கொண்டிருந்த பில்லா 2 படத்தின் பாடல்கள் மே 1  வெளியாகிவிட்டது.(நேரமின்மையால் கொஞ்சம் தமாதாமாக எழுதுகிறேன் ) இந்த வருடத்தின் மிக பெரிய எதிர்பார்ப்புக்குரிய முதல் படம் பில்லா 2  .. காரணம் இது அஜீத் படம் என்பதையும் தாண்டி மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற பில்லா genre படம் இது என்பதுதான்... அதேபோல பாடல்கள் மிக பெரிய எதிர்பார்ப்பை பெற காரணம் அஜீத் யுவன் கூட்டணி...இதுவரைக்கும் இவர்கள் இணைந்து பணியாற்றிய நான்கு திரைபடங்களிலும் பாடல்கள் பெரிய ஹிட்... இவர்களின் கூட்டணியில் கடைசியாக வந்த மங்காத்தா சென்ற வருடத்தின் ஒரே   பிளாக்பஸ்டர்(சிங்கம் சிங்கிளாத்தான் வரும்)... சரி இந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் பில்லா 2 பாடல்கள் பூர்த்தி செய்ததா என்றாள் தாராளமாக சொல்லலாம் யுவன் அஜீத் கூட்டணியின் மிக சிறந்த ஆல்பம் இதுதான் என்று , 


யுவனின் பாடல்கள் என்றாலே இளமை துள்ளும் , இதில் அவர் செய்திருக்கும் சில வித்தியாசமான முயற்சிகள் அவரை உச்சத்தில் ஏற்றும் என்பதில் சந்தேகமே இல்லை... படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் , அதில் நான்கு அதிரடி சரவெடி என்றாள் இரண்டு அடை தேனடை”… . விஷுவல் நன்றாக இருக்கும்பட்சத்தில் பாடல்கள் படத்திற்க்கு பெரிய பலமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை... அஜீத் ரசிகர்களுக்கு வெறியேற்றும்படியான வரிகளை  ஆங்காங்கே போகிற போக்கில் அள்ளித்தெளித்திருக்கிறார்கள்.. குறிப்பாக இந்த வரிகளை இனி அஜீத் சம்பந்தமான பேனர் , போஸ்டர்களில் அடிக்கடி காணலாம்... முதல் அடியில் நடுங்க வேண்டும் , மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால் மீண்டும் அடி , அது மரண அடி... ஆனால் சில வரிகள் மிக பழசாக இப்பொழுது கேக்க கொஞ்சம் மொக்கையாக இருக்கிறது என்பதும் உண்மைதான்... முகவரி , சிட்டிசன் , வில்லன் என்று அஜித்துக்கு மாஸ் பாடல்களை எழுதிய வைரமுத்துவின் அருமையை  அந்த வரிகளை கேக்கும்போது உணர முடிகிறது.. நா. முத்துக்குமாருக்கு பதிலாக வைரமுத்து எழுதியிருந்தால் பாடல்களின் வீச்சு இன்னும் கூடியிருக்கும்..

இந்த ஆல்பத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஏதோ மயக்கம் ... யுவனின் நாதஸ்வர இசையோடு ஆரம்பிக்கும் பாடல் மெல்ல மெல்ல வெஸ்டர்ன் பக்கம் சாய்ந்து நடு நடுவே நாதஸ்வரம் மேளம் என்று கலந்து கட்டி கலக்கல் காக்டெயிலாக தந்திருக்கிறார் யுவன்.. ஆல்பத்தின் இன்னொரு சுயர் ஷாட் மதுரை பொண்ணு... உன் காதல் இங்கே பேசாது , உன் காசு மட்டும் பேசும் என்ற ஒரு வரி போதும் பாடல் எப்படி இருக்கும் என்று சொல்ல.. முதல் தடவை கேட்டு பிடிக்காதவர்கள் மறுமுறை கேளுங்கள் அசந்து விடுவீர்கள்... yuvan on his best….

இதயம் பாடல் மூலம் நீண்ட நாளுக்கு பிறகு யுவன் ஒரு அருமையான மெலடியோடு வந்திருக்கிறார்.. மழை பொழுதில்  சசூடான  காஃபியோடு ஜன்னல் வழியே நுழையும் சாரலில் நனைந்துகொண்டே மழையை ரசிக்கும் மனநிலையை கொடுக்கும் பாடல் ... என்னை பொறுத்த வரை சிறந்த மெலடி என்பது அமைதியான சூழலில் அதை கேட்டுக்கொண்டிருக்கும் போது நம்மையும் மறந்து நம்மை தூங்க வைக்கவேண்டும்... நான் வீட்டில் என்னுடைய அறையில் இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் தூங்கிவிடுகிறேன்... ஆனால் மங்காத்தா போல அதிரடி பாடல்களை எதிர்பார்க்கும் பக்கா அஜீத் ரசிகர்களுக்கு இது பிடிக்குமா என்று தெரியவில்லை.. 


கேங் கேங் கேங்க்ஸ்டர் , உனக்குள்ளே மிருகம் பாடல்கள் முழுக்க முழுக்க அஜீத் ரசிகர்களுக்காக மட்டுமே.. இந்த இரண்டு பாடல்களிலும் பில்லா தீம் ம்யூசிக்கை நுழைத்த விதம் அருமை... வெவ்வேறு இசை கருவிகளில் அந்த தீம் ம்யூசிக் வாசிக்கபடுவது பக்கா... இந்த இரண்டு பாடல்கள் போதாதென்று தனியாக தீம் ம்யூசிக் வேறு ... அதே பில்லா தீம்தான் ,ஆனால் அதை வித்தியாசமாக தந்த விதத்தில் ஜெயித்திருக்கிறார்... தீம் ம்யூசிக் படத்தின் ட்ரீட்மெண்ட் எப்படி இருக்கும் என்பதை சரியாக பிரதிபலிக்கிறது... சோகமாக ஆரம்பிக்கும் ம்யூசிக் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்து கடைசியில் உச்சம் தொடுகிறது.. யுவனுக்கு king of theme music என்று பட்டமே கொடுக்கலாம்...

மொத்தத்தில் இன்றைய காலகட்டத்தில் ஒரு பக்கா ஆக்ஷன் படத்துக்கு எந்த மாதிரியான இசையை கொடுக்க வேண்டுமோ அதை மிக சரியாக கொடுத்திருக்கிறார் யுவன்...

                “யுவன் மிரட்டிட்டீங்க போங்க





LinkWithin

Related Posts with Thumbnails