நான் ஒரு தீவிரமான அஜீத் ரசிகன் ... சின்ன வயதில் நான் இன்னும் சில நடிகர்களை இதை விட அதிகமாக ரசித்திருக்கிறேன் .. ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதில் எனக்கு வாழ்க்கை குறித்த பக்குவமும் புரிதலும் வந்த பின்னர் ஒரு சினிமா நடிகனை நாம் ஏன் தலையில் தூக்கி வைத்து கொண்டாடவேண்டும் என்று அந்த ரசிப்புதன்மையில் இருந்து என்னை விடுவித்து கொண்டேன்... ஆனால் ஏனோ அஜீத் மீதான ஒரு பாசம் மட்டும் என்னை விட்டு நீங்கவே இல்லை .. நானே ஒரு சினிமா நடிகனை நாம் ஏன் ரசிக்க வேண்டும் , நேசிக்க வேண்டும் என்று பல சமயங்களில் எண்ணியதுண்டு ஆனால், இன்று பத்ரி சேஷாத்ரி அவர்களின் வலையில் வந்த ஒரு பதிவு நான் நேசிப்பதும் ரசிப்பதும் ஒரு நல்ல மனிதனைத்தான் என்ற திருப்தியை எனக்குள் ஆழமாக விதைத்து விட்டது ... அந்த பதிவை எனக்கு தெரிந்த சில அஜீத் ரசிக நண்பர்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்று என்னுடைய பதிவில் ரி ஷேர் செய்கிறேன் ... அவர் பதிவின் லிங்க் இதோ
http://thoughtsintamil.blogspot.com/2011/11/blog-post_05.html
1 comment:
ராஜா.. நானும் எந்த ஒரு சினிமா நடிகரையும் கொண்டாடியவன் கிடையாது. ஆனால் எம்ஜியாரை பிடித்துப்போனதிற்கு காரணம் அவரது மனிதாபிமானமே. கடவுள் ஒரு சிலருக்கு மட்டும் அழகுடன் அறிவுடன் அன்பையும் சேர்த்து படைக்கிறார். புகழின் உச்சிக்கு சென்றாலுமே இவர்கள் தங்களை மாற்றிக்கொள்வதில்லை. அஜீத்தையும் எனக்கு பிடித்துப்போனதிற்கு காரணமும் இதுதான். அவர் நடிப்பல்ல. பண்பு மட்டுமே. ஏனெனில் நடிப்பு எல்லோராலும் முடியக்கூடிய ஒன்று மனம் தான் வரவேண்டும். பணம் இருக்கும்போது கூட...
Post a Comment