.. 7 ஆம் அறிவு படம் மொக்கை என்று நேற்று இரவே தெரிந்துவிட்டபடியால் வேறு வழியே இல்லாமல் இந்த படம் பார்க்க நேர்ந்தது ... இந்த படம் பார்க்க இன்னொரு முக்கிய காரணம் இதற்க்கு முன் DVD யில் நான் பார்த்த ஷாருக்கானின் சில ஹிட் படங்கள் .... ஆனால் திரையில் நான் பார்க்கபோகும் முதல் ஷாருக்கான் படமே இவ்வளவு பெரிய மொக்கையாக இருக்கும் என்று நினைக்கவே இல்லை ... படம் வருவதற்கு முன்னாள் இது எந்திரன் படத்தின் காப்பி என்று பரபரப்பாக பேசப்பட்டது... தானாக யோசித்து இப்படி ஒரு அட்டு படம் எடுத்ததற்கு பேசாமல் எந்திரனையே காப்பி அடித்திருக்கலாம் ... ரஜினி ஒரு காட்சியில் வருகிறார் என்பதை தவிர எந்திரனுக்கும் இதற்கும் வேறு சம்பந்தம் கிடையாது... ஆனால் tron legacyயை கொஞ்சம் உல்ட்டா செய்து இந்த படம் எடுத்திருக்கிறார்கள்...
இந்த படம் ஒரு வகையில் tron legacy படம் போன்றதுதான் .. அதில் நிஜ உலகில் இருந்து டிஜிட்டல் உலகிற்குள் மனிதர்கள் செல்லுவார்கள்... இதில் டிஜிட்டல் உலகில் இருந்து வீடியோ கேம் கதாபாத்திரங்கள் நிஜ உலகிற்குள் நுழைகின்றன... ஷாருக்கான் ஒரு வீடியோ கேம் ப்ரோகிராமர்... அவர் எப்பொழுதும் வீடியோ கேமில் ஹீரோவுக்கே அதிக பவர் இருக்கும்படியாக வடிவமைப்பார் .. ஆனால் அவரின் மகள் ஒரு சண்டை பிரியை .. அவளுக்கு ஹீரோவை விட வில்லனையே அதிகம் பிடிக்கும் ... காரணம் ஹீரோவுக்கு சில rules and regulations இருக்கும் , ஆனால் வில்லனுக்கு அது கிடையாது ... அவன் எதற்கும் கட்டுப்பட தேவையில்லை , ரொம்ப கூலாக இருந்துகொண்டு தான் நினைத்ததை முடிக்க எது வேண்டுமானாலும் செய்ய வில்லனால் மட்டுமே முடியும் (சிம்பிளா நம்ம மங்காத்தா தல மாதிரி) , தன மகளின் ஆசைக்கு கட்டுப்பட்டு ஷாருக் அப்படி ஒரு வில்லன் கதாபத்திரத்தை artificial intelligence உதவியுடன் வடிவமைக்கிறார் ... கூடவே அவனை அழிக்க ஒரு ஹீரோ... வில்லன் ரா ஒன் ... ஹீரோ ஜி ஒன் ... ஒரு எதிர்பாராத சயமத்தில் ரா ஒன் நிஜ உலகிற்கு ஷாருக்கின் மகளை கொல்லும் திட்டத்தோடு நுழைகிறது ... ஷாருக்கின் மகள் எப்படி ரா ஒன்னை ஜி ஒன் உதவியுடன் அழிக்கிறாள் என்பதே மீதி கதை ...
படத்தின் ஒரே பலம் ஷாருக் மட்டுமே ... நேர்மையான ப்ரோக்ராமர் மற்றும் ஜி ஒன் என்று ரெட்டை வேடம் , முதல் பாதி முழுவதும் படம் கொஞ்சம் கலகலப்பாக செல்ல ஒரே காரணம் ஷாருக் மட்டுமே... மைக்கல் ஜாக்சன் வேடம் போட்டு அவர் போடும் கெட்ட ஆட்டம் கலக்கல் ... பகவத் கீதையில் இருந்து தன மகளுக்கு நேர்மையின் அவசியத்தை உணர்த்தும் காட்சிகளில் பக்குவம் தெரிகிறது ... ஆனால் அவர் கதாபாத்திரம் இடைவேளைக்கு கொஞ்சமே கொஞ்சம் முன்னாள் சாகடிக்கப்பட்டு விடுகிறது... அதிலிருந்து ஜி ஒன்னின் அட்டகாசம்... ஜி ஒன்னின் அறிமுகம் சும்மா ரஜினி அறிமுகம் போல உள்ளுக்குள்ள நமக்கு அதிருது ... ஆனால் சுவாரசியமில்லாத திரைகதை , ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் என்று இயக்குனர் சொதப்பியதால் கொஞ்ச நேரத்திலேயே நமக்கு நமநமத்து போகிறது....
ரஜினி வரும் காட்சி பற்றி சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை .. வழமையாக ஷாருக்கான் படங்களில் மற்ற நடிகர்கள் எப்படி பயன்படுத்தபடுவார்களோ அதேபோல இவரும் நக்கலடிக்கவே பயன்படுத்தப்பட்டு இருக்கிறார் ... ரஜினியை காட்டும் போது கரீனா கபூர் தலையில் முக்காடு போட்டு கன்னத்தில் போட்டு கொள்ளுவதை ரஜினியின் தீவிர ரசிகர்கள் எப்படி எடுத்துகொள்ளுவார்களோ தெரியாது... எனக்கு ரஜினியோடு சேர்த்து நம்மையும் நக்கலடிப்பதை போலவே தெரிகிறது... அந்த காட்சியில் ரஜினியை பார்க்கும் போது கந்தசாமியில் கிருஷ்ணாவை பார்த்தது போலவே இருந்தது ... வயசும் நோயும் சேர்ந்து ரஜினியின் கம்பீரத்தை கொஞ்சம் ஆட்டம் காண வைத்துவிட்டனவோ?
படத்தின் மிக பெரிய பலவீனம் லாஜிக் ஓட்டைகள் படம் முழுவதும் நிரம்பி கிடப்பதுதான் , குறிப்பாக வீடியோ கேம் கதாபாத்திரங்கள் எப்படி நிஜ உலகிற்குள் நுழைகின்றன , கேமில் simulation மூலம் இயங்கும் அவைகள் நிஜ உலகில் எவ்வாறு இயங்குகின்றன என்பதற்கான ஏற்றுக்கொள்ளும் படியான விளக்கம் எதுவும் படத்தில் இல்லை , அதேபோல் இரண்டாம் பாதி முழுவதும் எளிதில் யூகித்து விட கூடிய காட்சியமைப்புகள்.. நிஜ உலகில் நடக்கிறதா இல்லை டிஜிட்டல் உலகில் நடக்கிறதா என்று புரிந்து கொள்ளமுடியாத கிளைமாக்ஸ் என்று பல விஷயங்கள் என்னதான் கிராபிக்ஸ் மலைக்க வைத்தாலும் படத்தோடு நம்மை ஒன்றவிடாமல் செய்து விடுகின்றன...
நான் இந்த படத்தை சென்னை கோயம்பேடு ரோகினி காம்ப்ளெக்ஸ்சில் பார்த்தேன் ... அதில் இன்று வெளியான மூன்று படங்களுமே திரையிடபட்டிருந்தன ... ரா ஒன் திரையிடப்பட்ட திரையரங்கில் காலையில் வேலாயுதம் ஸ்பெஷல் ஷோ திரையிடபட்டிருந்தது... நாங்கள் திரையரங்கிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த போது வேலாயுதம் கிளைமாக்ஸ் ஓடிகொண்டிருந்தது ... அப்பொழுது இருவர் தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள் .. ஆனால் தியேட்டர் ஊழியர்கள் அவர்களை வெளியே போகவிடாமல் வீட்டுக்கு போகணும் சார் என்று அவர்கள் கெஞ்சியும் கேட்காமல் அவர்களை மீண்டும் தியேட்டருக்குள் அனுப்பி கதவை மூடிவிட்டார்கள்... அதை பார்த்து கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் விஜயை பற்றி வரும் எஸ்எம்எஸ் எல்லாம் உண்மையாகத்தான் இருக்கும் போல என்று நக்கல் விட்டார் ... அதேபோல் இன்னொரு திரையரங்கில் 7 ஆம் அறிவு பார்த்து விட்டு வெளியே வந்த கும்பலில் ஒருவர் எங்களை நோக்கி யாராவது 7 ஆம் அறிவு படம் பார்க்க நின்றுகொண்டு இருந்தால் இப்படியே தப்பிச்சி ஓடிருங்க என்று எச்சரித்து விட்டு சென்றார் ... முதல் நாள் மௌத் டாக்கில் இருந்து ஒன்று மட்டும் உறுதியாகிவிட்டது ... 7 ஆம் அறிவோ இல்லை வேலாயுதமோ ஹிட் ஆக வாய்ப்பு இருக்கே தவிர பெரிய அளவில் வசூலை குவிக்க முடியாது என்பதுதான் அது ... ஸோ இந்த வருடத்தின் ஒரே ப்ளாக்பஸ்டர் தலையோட மங்காத்தா மட்டும்தான் ... 2011 தமிழ் சினிமாவை பொறுத்தவரை தல வருஷம்... அதே போல ஒபெநிங்கை பொறுத்த வரை தலைதான் கிங் என்பதை ஆகஸ்ட் 31 மற்றும் இந்த தீபாவளிக்கு தியேட்டரில் கூடிய கூட்டங்கள் அழுத்தம் திருத்தமாக நிரூபித்துவிட்டன ... 5 நாளில் 27 கோடி இல்லை அதில் பாதி 14 கோடி கூட இந்த படங்களால் வசூலிக்க முடியாது என்பது இந்த ஒரே நாளில் தெரிந்துவிட்டது ...
THIS DEEPAVALI CLEARLY SHOWS THALA IS THE ONE AND ONLY EMPEROR OF OPENING IN TAMIL CINEMA
9 comments:
நாளைக்கே வேலாயுதம் பாத்திடனும் அப்பத்தான் விழுந்து கெடந்த எங்க தளபதி எழுந்துட்டாறு , எழுந்து உக்காந்துட்டாரு , நடந்துட்டாருன்னு கப்சா அடிக்கிரவணுக கழுத்துல ஏறி மிதிக்கலாம்
super
நல்ல நல்ல வார்த்தையெல்லாம் சொல்லியிருக்கீங்க... ஐயாம் வெரி ஹேப்பி...
7Am Arivu......... Supper AwsM.Non Entertainment Movie................ Loving IT so Much......Luv tht Historical And Scientific Part...........♥ ♥ Dual Salute Surya And MurugaDos.............♥♥♥ suruthi ♥ ♥ ♥
@mk
tanx
@philosophy prabhakaran
பாஸ் நீங்க எதை சொல்லுறீங்கன்னு புரியுது ... உண்மையை எழுதுனேன் அவ்வளவே ... அன்புள்ள கமல் படத்தில் கமலை பார்த்தீர்களா? இன்னமும் காதல் இளவரசன்தான் அவர் ..
@hajascreen
நான் இன்னமும் படம் பார்க்கவில்லை என் நண்பர்கள் வட்டத்தில் படம் போர் என்று சொன்னார்கள் , அடுத்த வாரம்தான் பார்க்க முடியும் , பார்த்துவிட்டு பதிவிடுகிறேன்
இப்படி எல்லாரும் பேசிக்கிட்டே இருங்க.. நான் போய் படம் எல்லாம் பாத்துட்டு வந்து பதில் எழுதுறேன்.. சரியா? எதையுமே பாத்துட்டு வந்து தான் சொல்லனும்..
மிகவும் நன்று. உங்கள் விமர்சனம் உபயோகமாக உள்ளது.
Post a Comment