Followers

Copyright

QRCode

Sunday, October 16, 2011

வேலாயுதம் வரட்டும் – மினி தொடர்கதை பாகம் 2


முதல் பாகம் படிக்க

சுரேசும் , அவன் நண்பன் ஜோஸெப்பும் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு விடுமுறையில் பொழுதுபோகாமல் சிம்ரனுக்காக தமிழ்மணி திரையரங்கில் வாலி படம் பார்க்க சென்றிருந்தனர்... அதுதான் அவர்கள் பார்க்கும் முதல் அஜீத் படம், அதில் வரும் அஜித்தின் வில்லத்தனம் எப்படியோ சுரேசுக்கு பிடித்துவிட , அதுவரை தளபதியின் கோட்டையாக இருந்த ஊரில் முதல் அஜீத் ரசிகன் ஜனனம் ஆனான்... வாலி படத்தை அவன் சார்ந்த எல்லாரையும் பார்க்க வைத்து அவர்களையும் அஜீத் ரசிகனாக உருமாற்றினான்.. ஏற்கனவே சுசி மற்றும் அவன் கூட்டத்தினர் மேல் கடுப்பில் இருந்த இவர்கள் , சுரேஷ் அவர்கள் கூட்டத்தில் இருந்து வந்தால் போதும் என்ற நினைப்பில் தங்களை அஜீத் ரசிகர் படையில் இணைத்து கொண்டனர்...



வில்லன் படமும் பகவதியும் ஒன்றாக வெளிவந்தபோதுதான் இவர்களுக்குள் முதல் மோதல் வெடித்தது , இரு திரைபடங்களும் அருகருகே இருக்கும் திரையரங்குகளில் வெளிவந்தது, வில்லன் படத்துக்கு பெரிய அளவில் கூட்டம் திரண்டு  நிற்க,  ஷாஜகான்  தமிழன் போன்ற படங்களின் தாக்கத்தால் பகவதிக்கு சொல்லிக்கொள்ளும் கூட்டம் இல்லை... இதை பார்த்த சுரேஷ் கோஷ்டியில் ஒருவன் , என்னடா உங்க தளபதிக்கு கூட்டமே இல்லையா, பேசாம எங்க தலைக்கு அல்லக்கையா ஒரு படத்துல நடிக்க சொல்லு உங்காளுக்கும் கூட்டம் கூடும் என்று நக்கல் பண்ண அன்று இரவு ஊருக்குள் மினி கலவரமே உருவானது... தன் தலைவனை அசிங்கபடுத்தி விட்டார்களே என்ற துக்கத்தில்  அன்று தூக்கத்தை தொலைத்த சுசியால்  அடுத்த வருடம் தீபாவளிக்கு ஆஞ்சநேயா வந்து மூன்றே நாட்களில் கூட்டம் குறைந்து விட  என்னங்கடா உங்க ஆளு படத்துக்கு கூட்டமே இல்லையாமே , பேசாம  எங்க தளபதிக்கு உங்க தலயை ஜோடியா நடிக்க சொல்லுங்க , கூட்டம் கூடும் என்று பதிலுக்கு அவர்களை நக்கல் அடித்த பின்னர்தான் நிம்மதியாக தூங்கமுடிந்தது...இப்படி அஜீத் படம் ஓடினால் அவர்கள் இவர்களை அசிங்கபடுத்துவதும் , விஜய் படம் ஓடினால் இவர்கள் அவர்களை அசிங்கபடுத்துவதுமாக தங்களை அறியாமல் ஒருவருக்கொருவர் வெறியேற்றிக்கொண்டு அலைந்தனர்...      



மங்காத்தா படம் வெளிவந்த நாள், அஜித்தின் அம்பதாவது படம் என்பதால் சுரேஷ் கோஷ்டி பயங்கர உற்சாகத்துடன் படம் பார்க்க வந்திருந்தனர்... தங்கள் தலைவனின் அம்பதாவது படம் ஊத்திய வருத்தத்தில் இவனின் படமும் ஓடிவிடக்கூடாது என்ற ஆவலோடு சுசி கோஷ்டியினரும் அதே திரையரங்கிற்குள் நுழைந்தனர்... படம் ஆரம்பித்து தல போலீஸ் உடையில் தொப்பையோடு நடந்து வந்தார்... யே இங்க பாருடா சிரிப்பு போலீஸ என்று சுசி கோஷ்டியில் ஒருவன் நக்கல் அடிக்க , சுரேஷ் கோஷ்டியினருக்கு கோபம் தலைக்கெறியது , உடனே அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று தோன்றினாலும் , அசல் ,ஏகன் கொடுத்த அனுபவத்தால் அமைதியானார்கள்... ஆனாலும் இடைவேளை முடிந்து மச்சி ஓபன் தி பாட்டில் பாடல் முடிந்ததும்  படம் உறுதியாக ஹிட் என்று தெரிந்தவுடன் அதற்க்கு மேல் அமைதி காக்க முடியாமல் சுரேஷ் கோஷ்டியில் ஒருவன் எழுந்து   டேய் அம்பதாவது படம்னா இப்படி இருக்கணும்டா... உங்க தளபதியை எங்க தல ***தை பிடிச்சி ***ப சொல்லுங்கடா என்று கத்த , இதை கேட்டவுடன் ஒருவிதமான பரவச நிலையில் தியேட்டர் முழுவதும் இருந்த ஆயிரக்கணக்கான தல ரசிகர்களும் சேர்ந்து கத்த , சுசி கோஷ்டியினர்க்கு பெரிய அவமானமாகிவிட்டது...   


(தொடரும்)

2 comments:

K.s.s.Rajh said...

////மச்சி ஓபன் தி பாட்டில் பாடல் முடிந்ததும் படம் உறுதியாக ஹிட் என்று தெரிந்தவுடன் அதற்க்கு மேல் அமைதி காக்க முடியாமல் சுரேஷ் கோஷ்டியில் ஒருவன் எழுந்து “ டேய் அம்பதாவது படம்னா இப்படி இருக்கணும்டா... உங்க தளபதியை எங்க தல ***தை பிடிச்சி ***ப சொல்லுங்கடா” என்று கத்த , இதை கேட்டவுடன் ஒருவிதமான பரவச நிலையில் தியேட்டர் முழுவதும் இருந்த ஆயிரக்கணக்கான தல ரசிகர்களும் சேர்ந்து கத்த , சுசி கோஷ்டியினர்க்கு பெரிய அவமானமாகிவிட்டது... ////

ஹா.ஹா.ஹா.ஹா....பாஸ் நல்ல சுவாரஸ்யாமக இருக்கு நீண்ட நாளுக்கு பிறகு வந்திருக்கு போல இரண்டாம் பகுதி அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்க

sutheshks said...

aale illa bellu

LinkWithin

Related Posts with Thumbnails