Followers

Copyright

QRCode

Friday, September 23, 2011

எங்கேயும் எப்போதும் – போலி மனிதாபிமானம்








சரியாக 8 வருடங்கள் முன்பாக , நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன்,  திருமங்கலத்தில் ஒரு சர்சில் சுவிசேஷ வழிபாட்டு கூட்டம் ஒன்று நடந்தது. எங்கள் குடும்பம் மிக தீவிரமான கடவுள் கடவுள் பக்தி உடைய குடும்பம்... எனவே நாங்கள் எல்லாரும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானித்தோம், ஆனால் அது ஒரு வெள்ளிக்கிழமை என்பதால் என்னுடைய அப்பாவும் , அம்மாவும் விடுப்பு எடுத்து கலந்து கொள்வதில் சிக்கல் , எனவே என்னை மட்டும் அனுப்பிவைத்தார்கள்.. என்னுடன் என் பங்காளி முறை அண்ணன் தம்பி , தங்கைகள் சிலர் வந்திருந்தனர் , எங்களை வழிநடத்துவதற்க்கு எங்களுடன் சித்தி ஒருவரும் வந்திருந்தார்... திருமங்கலம் செல்லவேண்டும் என்றாள் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் சென்று அங்கிருந்து மதுரை வண்டி பிடித்து செல்ல வேண்டும்... நாங்கள் விருதுநகர் வண்டி பிடிக்க அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்திர்க்கு சென்றிருந்தோம்.. 


வரிசையாக இரண்டு தனியார் பேருந்துகள் நின்றுகொண்டிருந்தன, அதில் சந்திரா பேருந்தின் முன்பாக அந்த வண்டியின் டிரைவர் புகை பிடித்துக்கொண்டிருந்தார், அவரிடம் எந்த வண்டி முதலில் செல்லும் என்று கேட்டோம் , இந்த வண்டி கிளம்ப இன்னும் பத்து நிமிடங்கள் ஆகும்  அந்த ஜெயவிலாஸ் வண்டி இன்னும் ஐந்து நிமிடத்தில் சென்றுவிடும் என்று இன்னொரு வண்டியை காட்டினார் , அவர் காட்டிய  ஜெயவிலாஸ் வண்டியில் உக்கார இடம் இல்லை , எனவே ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும் பாராவாயில்லை எண்டு சந்திரா வண்டியில் ஏறினோம். நானும் இன்னொரு அண்ணனும் டிரைவர் சீட்டின் பின் சீட்டில் அமர்ந்தோம் , எங்களுக்கு அடுத்தடுத்த இருக்கைகளில் எங்களுடன் வந்தவர்கள் அமர்ந்தனர்...  வண்டியில் ஓடிய டிவியில் எம்‌ஜி‌ஆர் ஏதோ ஒரு வடநாட்டு நடிகையின் ஜாக்கெட்டை பிடித்து கிழித்து கொண்டிருந்தார், நான் அதை ஆர்வமாய் பார்த்து கொண்டிருந்த பொது குடிக்க தண்ணி வேண்டும் என்று யாரோ கேட்க நான் இறங்கி தண்ணி வாங்க சென்றேன் , அப்பொழுது எதேச்சையாக ஜெயவிலாஸ் வண்டியை பார்க்க அங்கே வரிசையாக ஐந்து சீட்டுகள் காலியாக இருந்தன .  வண்டியில் ஏறியவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக இறங்கி விட்டிருந்தனர்.. நான் எங்கள் சித்தியிடம் அதை சொல்ல உடனே அனைவரும் இறங்கி ஜெயவிலாஸ் வண்டியில் காலியான இருக்கைகளில் அமர்ந்து விட்டோம்... அப்பொழுது எனக்கு தெரிந்த ஒரு நபர் சந்திரா வண்டியில் ஏறினார் , நான் அவரிடம் ஜெயவிலாஸ் வண்டிதான் முதலில் செல்லுமாம் , அங்கே உக்காரவும் இடம் இருக்கிறது என்று சொல்லி அதில் ஏற சொன்னேன் , ஆனால் அவரோ அந்த வண்டியில் டிவி இல்லை , நான் டிவி பார்த்துக்கொண்டே சந்திரா வண்டியில் வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு சந்திரா வண்டியில் ஏறி கொண்டார்...



நாங்கள் சரியாக 1 மணி 15 நிமிடங்களில் திருமங்கலம் சென்று விட்டோம், அப்பொழுது மணி காலை 9:30 , சுமார் பதினொன்று மணி அளவில் அந்த சர்ச் வாசல் முன்பாக ஒரு கார் வந்து நின்றது , அதிலிருந்து என் அப்பாவும் அவர் நண்பரும் இறங்கினார்கள் , என் அப்பாவின் முகத்தில் ஏதோ ஒரு பதட்டம் , உள்ளே வந்ததும்  அவர் கண்கள் என்னை தேடி அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது ,  என்னை பார்த்த அந்த நொடியில் அவர் மயக்கம் அடைந்து விழுந்து விட்டார்... எனக்கு ஒன்றும் புரியவில்லை , பிறகு என் அப்பாவின் நண்பர் சொல்லிதான் எனக்கு தெரிந்தது  , காலையில் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் சென்ற சந்திரா வண்டியும் , செங்கோட்டையில் இருந்து அருப்புக்கொட்டை வந்துகொண்டிருந்த அரசு பேருந்தும் அருப்புக்கோட்டையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் நேருக்கு நேராக மோதி பெரிய விபத்து நடந்திருக்கிறது.. நாங்களும் அதே நேரத்தில்தான் விருதுநகருக்கு சென்றதால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பயம் , நானும் அந்த பேருந்தில் சென்றிருப்பனோ என்று.. அப்பொழுது செல்போன் வசதி எல்லாம் கிடையாது எனவே உடனே எங்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை, விபத்து நடந்த இடத்திர்க்கும் சென்று  பார்பதற்க்கு பயம், எனவே ஒரு வாடகை காரை எடுத்து கொண்டு என் அப்பா திருமங்கலத்திற்கே வந்துவிட்டார்.. 





என் அப்பா கண்விழித்தவுடன் ஒரு எஸ்‌டி‌டி பூத் சென்று எங்கள் வீட்டிற்கு  ஃபோன் போட்டு என் அம்மாவுடன் பேச சொன்னார் , நான் பேசிய ஹேலோ என்ற வார்த்தையை கேட்டவுடனே  என் அம்மா உடைந்து அழ ஆரம்பித்து விட்டார்கள்... அந்த அழுகையிலேயே தெரிந்தது கடந்த இரண்டு மணிநேரமாக அவர்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று... விபத்து நடந்த வண்டி நாங்கள் ஏறி இறங்கிய அதே சந்திரா வண்டிதான், வண்டியின் டிரைவர் சீட்டிலிருந்து அடுத்த நாலு சீட்டு வரைக்கும் அமர்ந்திருந்த அத்தனை பேரும்  சம்பவ இடத்திலேயே உயிரழந்து விட்டனர்.. அந்த டிரைவரின் உடல் டி‌வி பெட்டிக்குள் சொருகி மிகவும் கொடூரமான முறையில் கிடந்திருக்கிறது... அன்று முழுவதும் எங்கள் ஊரே உறைந்து போயிருந்தது... அதுவரை செய்தியாக மட்டுமே பார்த்த விபத்து , முதல்முறையாக  என் வாழ்க்கையை லேசாக  உரசி சென்றது.. அன்றிலிருந்து எந்த விபத்து நடந்தாலும் என் அம்மாவின் அழுகையும் , என் அப்பாவின் மயக்கமும்தான் என் ஞாபகத்திற்கு வருகிறது... 

சரி விசயத்திற்கு வருகிறேன் , நேற்று எங்கேயும் எப்போதும் படம் பார்த்தேன். அதிலும் ஒரு விபத்தைதான் மாறி மாறி காட்டியிருந்தனர் , அதை பார்த்தபொழுது என் அம்மாவின் அழுகை ஞாபகம் வந்ததா என்றாள் இல்லை எனக்கு எரிச்சல்தான் வந்தது...   அதற்க்கு காரணம் காலம்காலமாய் ஊனமுற்றவர்களை காட்டி பார்க்கும் நம்மை பரிதாபபடவைத்து தங்கள் கல்லாவை நிரப்பி  கொள்ளும் போலி மனிதாபிமான படைப்புகளில் வரிசையில் வந்து சேந்திருக்கும் இன்னொரு படம்தான் இது .. ஒரே வித்தியாசம் ஊனத்திற்கு பதிலாக விபத்து ...  தில்லாலங்கடி என்று ஒரு படம் , அதில் மனநிலை பிழன்ற குழந்தைகளின் மருத்துவசெலவுக்கு பணம் சேர்க்க ஹீரோ கொள்ளையடிக்கிறான், அதை நியாபடுத்த பல மனநிழைபிழன்ற குழந்தைகளை திரையில் காட்டுவார்கள், அதை பார்த்தவுடன் நமக்கும் ஒரு பரிதாப உணர்ச்சி உருவாகும் , அந்த பரிதாபம் அவர்களுக்காக உழைக்கும் அந்த ஹீரோவின் மேல் ஒரு மரியாதையாக மாறும்  , அதுவே அந்த படம் நமக்கு பிடித்துபோக ஒரு காரணமாகும் , நாமும் வெளியே நான்கு பேரிடம் சொல்ல அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பரவி படம் பெரிய ஹிட்டாகி தயாரிப்பாளரின் கல்லா நிரம்பும் , ஹீரோவின் அடுத்த படம் சம்பளம் இரட்டிப்பாகும் , ஆனால் இவர்கள் யாரை வைத்து சம்பாதித்தார்களோ அந்த குழந்தைகளின் நிலமை அப்படியேத்தான் இருக்கும்... ரோட்டில் தன் குழந்தையின் உடலை கீறி அந்த ரத்தத்தை காட்டி பிச்சை எடுக்கும் வித்தைக்காரர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை , சொல்லபோனால் வித்தைக்காரன் வரும் பணத்தில் அந்த குழந்தைக்கும் செலவழிப்பான் ஆனால் இவர்கள்?






இந்த படமும் இப்படிதான் , படம் முடிந்து வெளியேவரும் பொது நம் ஞாபகத்தில் இருப்பது அந்த விபத்துதான் , இதற்க்கு முன் நாம் பார்த்த படித்த அல்லது நமக்கு நேர்ந்த விபத்துகள் நம் மனதில் உருவாக்கியிருக்கும் தழும்புகளில் கத்தி விட்டு ஆட்டியிருக்கிறது இந்த படம் , அதனால்தான் படம் முடிந்து வெளியே வரும்போது நம் மனம் வலிக்கிறது... அது மட்டுமே இந்த படத்தின் வெற்றி...  விபத்தை திரையில் காட்ட உழைத்திருப்பது மட்டுமே அவர்கள் வேலை , மற்றபடி அந்த காட்சி நம் மனதில் உருவாக்கும் வலிகளுக்கு அவர்களின் கற்பனையோ , உழைப்போ காரணம் இல்லை , இதற்க்கு முன் நாம் பார்த்த விபத்துகளின் பாதிப்பே காரணம்...  நியாயமாக பார்த்தால் இந்த படத்தின் மூலம் வரும் வருவாயில் பாதி மட்டுமே இவர்களுக்கு சொந்தம் , மீதியை இதுவரை நடந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு சமர்பிக்க வேண்டும்... ஆனால் இந்த போலி மனிதாபிமானிகள் அதை மட்டும் செய்யவே மாட்டார்கள்... ஆனால் நான் விபத்து குறித்த விழிப்புணர்வுடன் ஒரு நல்ல படத்தை இந்த சமூகத்திர்க்கு தந்துவிட்டேன் என்ற பெருமையை  மட்டும் சாகும் வரைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்...... இவர்களைத்தான் “லேட்டஸ்ட் மனிதாபிமானிகள் என்று நம் சமூகமும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடபோகிறது..  

 அனன்யா வரும் காதல் காட்சிகளுக்காக வேண்டுமானால் படத்தை ஒருமுறை பார்க்கலாம்... 



44 comments:

பால கணேஷ் said...

நெகடிவ்வான பார்வையில் பார்க்கிறீர்கள் ராஜா! விபத்துக்களினால் பாதிக்கப்படுபவர்களின் வலிகளை இயன்ற அளவு நன்றாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். படம் பார்த்தவர்களில் சிலராவது அசுர வேகத்தில் சாலைகளில் வாகனம் ஓட்டுவதை விடுத்து நியாயமான வேகத்தில் வாகனத்தை ஓட்டினால் நல்லது என்று நான் பாசிடிவ்வாகத் தான் பார்க்கிறேன்.

"ராஜா" said...

// படம் பார்த்தவர்களில் சிலராவது அசுர வேகத்தில் சாலைகளில் வாகனம் ஓட்டுவதை விடுத்து நியாயமான வேகத்தில் வாகனத்தை ஓட்டினால் நல்லது என்று நான் பாசிடிவ்வாகத் தான் பார்க்கிறேன்.

ஸார் எனக்கு தெரிந்து யாரும் படம் பார்த்து திருந்தபோவதில்லை , அப்படி திருந்தி இருந்தால் எம்‌ஜி‌ஆர் காலத்திலேயே நம் நாட்டில் மது பழக்கம் ஒழிந்திருக்கும்... இது சினிமாவிலேயே இருக்கும் அவர்களுக்கு தெரியாதா? இந்த மாதிரியான கதைகளை அவர்கள் தெரிவு செய்வதற்க்கு காரணம் சமூகத்தை திருத்தலாம் என்பதைவிட இந்த விஷயத்தை படத்தில் காட்டுவதன் மூலம் படம் உறுதியாக வெற்றி அடைய வாய்ப்பு அதிகம் , நாம் அதிகம் சம்பாதிக்கலாம் என்பதே...

muthukumaran said...

ரொம்ப யோசிக்கிறீங்க. இன்னமும் இந்த படத்துக்கு நெகடிவ் கமெண்ட் வரலேன்னு யோசிச்சேன். நேத்து வினவு. இன்னிக்கு நீங்க. நீங்க நெனச்சபடி தமிழிஷ் முன்னணி பதிவுகளில் வந்துடுச்சு. என்ஜாய்.

"ராஜா" said...

//நீங்க நெனச்சபடி தமிழிஷ் முன்னணி பதிவுகளில் வந்துடுச்சு. என்ஜாய்.

பாஸ் , இந்த மாதிரி பதிவு எழுதிதான் தமிழிஷ் முன்னணியில் வரவேண்டும் என்று இல்லை , அப்படி வரவேண்டும் என்று நினைத்தால் அஜீத் விஜய் பற்றியோ , இல்லை வேறு ஏதாவது கிளுகிளுப்பான பதிவோ எழுதினால் சீக்கிரம் வந்துவிடும்...

நான் நேற்று படம் பார்த்தபொழுது என் மனதில் என்ன தோன்றியதோ அதைத்தான் எழுதியிருக்கிறேன்..
இதை எழுதும்போதே கண்டிப்பாகாக நிறைய எதிர்மறை பிநூட்டங்கள் வரும் என்று தெரியும்.. ஆனாலும் இது என் வலைபக்கம் என் கருத்தைத்தானே எழுத முடியும்...

"ராஜா" said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கணேஷ் ஸார் , மற்றும் முத்துக்குமரன்

jaihind2050 said...

ஸார் எனக்கு தெரிந்து யாரும் படம் பார்த்து திருந்தபோவதில்லை , அப்படி திருந்தி இருந்தால் எம்‌ஜி‌ஆர் காலத்திலேயே நம் நாட்டில் மது பழக்கம் ஒழிந்திருக்கும்... இது சினிமாவிலேயே இருக்கும் அவர்களுக்கு தெரியாதா? இந்த மாதிரியான கதைகளை அவர்கள் தெரிவு செய்வதற்க்கு காரணம் சமூகத்தை திருத்தலாம் என்பதைவிட இந்த விஷயத்தை படத்தில் காட்டுவதன் மூலம் படம் உறுதியாக வெற்றி அடைய வாய்ப்பு அதிகம் , நாம் அதிகம் சம்பாதிக்கலாம் என்பதே... nadigan sonna right ...neenga sonna thavaru vidunga raja...unga salary 10000 irukkuma?
avanukaluku kodi kodi sampalam .. kedda kali sevai yam.. savai enru vai koosama sollathe ... kuppai alravan sollanum savai endru

IlayaDhasan said...

பார்வைகள் பல விதம் , ஒவ்வொன்றும் ஒரு விதம்...இதுவும் யோசிக்க வேண்டிய பார்வை தான்.

சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி

Unknown said...

இந்தப் படம் பார்த்த பிறகு வண்டியோட்டும்போது எனது மகன் அப்பா பாத்து நிதானமா வாங்கப்பா..என்று சொல்வது மாதிரி இருந்தது. கல்லாவுக்கு காசு கொடுத்தாலும் ஒரு நிமிடம் யோசித்து பார்த்துவிட்டு வண்டியின் வேகத்தை குறைக்கிறோமே....அங்குதான் காசு கொடுத்தது நிறைவானதாக தெரிகிறது.

Rajesh kumar said...

என்ன நண்பா .. தில்லாலங்கடி படம் வரைக்கும் ஏன் போகணும் ? நம்ம தல நடிச்ச வில்லன் அதுக்கு முன்னாடி வந்த படம்தானே அதிலயும் அவர் ஒரு மனநிலை சரியில்லாத நபரா நடிச்சு கொள்ளை அடிச்சு ஒரு காப்பகம் அமைப்பாரே.. அதனால ஒரு படமா மட்டும் பார்க்கலாமே ..எங்கேயும் எப்போதும் படம் பார்த்து கொஞ்ச பேர் திருந்தினா நல்லதுதானே. பொழுதுபோக்கு ஊடகத்தை ஒரு நல்ல விஷயத்துக்காக பயன்படுத்துறதுல தப்பொண்ணும் இல்லையே.. கண்டிப்பா நம்ம தல படமும் ஓடணும் .. அப்படியே நல்லா இருக்கிற எல்லா படமும் ஓடணும் ...

Unknown said...

//நான் நேற்று படம் பார்த்தபொழுது என் மனதில் என்ன தோன்றியதோ அதைத்தான் எழுதியிருக்கிறேன்..
இதை எழுதும்போதே கண்டிப்பாகாக நிறைய எதிர்மறை பிநூட்டங்கள் வரும் என்று தெரியும்.. ஆனாலும் இது என் வலைபக்கம் என் கருத்தைத்தானே எழுத முடியும்...//

இந்தப் பதிவு அவரின் நிதர்சனம் - எதிர்மறை கருத்து (நெகடிவ்)அல்ல !

Jayadev Das said...

\\நியாயமாக பார்த்தால் இந்த படத்தின் மூலம் வரும் வருவாயில் பாதி மட்டுமே இவர்களுக்கு சொந்தம் , மீதியை இதுவரை நடந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு சமர்பிக்க வேண்டும்.\\ ஒரு வேலை படம் ஓடாம நஷ்டம் வந்திருந்தால், அதை விபத்தில் செத்தவங்ககிட்ட இருந்து வசூல் பண்ணச் சொல்லுவீங்களா? வெள்ளைக்காரன் படத்து திருட்டு சி.டி. வாங்கிப் பார்த்து படம் பண்ணும் உலக நாயகர்கள், ரத்னங்கள், ஷங்கர்கள் மத்தியில் யோசிச்சு ஒரு படத்தை எடுத்திருபதைப் பாராட்டவில்லை என்றாலும் தூற்றாமலாவது இருக்கலாமே?

Jayadev Das said...

\\ரொம்ப யோசிக்கிறீங்க. இன்னமும் இந்த படத்துக்கு நெகடிவ் கமெண்ட் வரலேன்னு யோசிச்சேன். நேத்து வினவு. இன்னிக்கு நீங்க. நீங்க நெனச்சபடி தமிழிஷ் முன்னணி பதிவுகளில் வந்துடுச்சு. என்ஜாய்.\\ புரிஞ்சு போச்சு!!

Jayadev Das said...

சினிமா எடுப்பது பொழுது போக்குக்காகவும், மற்ற தொழில் போல பணம் சம்பாதிக்கவும் தான். நீங்க உங்க கருத்தை உங்க பிலாகில சொல்ல உரிமை இருக்கிற மாதிரி, தன்னுடைய படத்தில் கதைக் களத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை அதன் இயக்குனருக்கு உண்டல்லவா? படத்தைப் பார்த்துவிட்டு நாலு பேர் திருந்தினால் பரவாயில்லை, அப்படி ஒரு மாற்றம் வரவில்லை என்றாலும், அதற்காக படத்தை எடுத்தவரை எப்படி குறை கூற முடியும்? ஊரைத் திருத்தத்தான் படமேடுக்கவேண்டும் என்று சட்டம் போட்டிருக்கிறார்களா என்ன? படத்தை இப்படித்தான் எடுக்கணும், படத்தை எடுத்து முடித்துவிட்டு இதைத்தான் பேசணும் என்றெல்லாம் நீங்கள் சொன்னபடி நடக்க வேண்டுமென்றால் நீங்களே காசுபோட்டு படமெடுத்தால் தான் உண்டு.

"ராஜா" said...

@ jaihind2050

thanks for your visit and comment

"ராஜா" said...

@ ilaiyadasan

நன்றி

"ராஜா" said...

@ வெண் புரவி

நீங்கள் இன்னும் இரண்டு நாட்கள் அந்த படத்தின் தாக்கத்தில் வண்டியை மெதுவாக ஓட்டுவீர்களா? எந்த படமும் யாரையும் திருத்தபோவதில்லை அவர்களின் தேவை எதை கொடுத்தால் கல்லா கட்டும் என்பதே ...

"ராஜா" said...

@ Rajesh kumar

நண்பா நான் படம் ஓடாது என்று பதிவில் எங்கேயும் சொல்லவில்லையே ... மேலும் இந்த படத்தை புறக்கணியுங்கள் என்று முட்டாள்தனமாக கூவவும் இல்லையே ... மேலும் எனக்கு இந்த மாதிரியான எரிச்சல் வில்லன் படத்தை பார்த்தபோதே வந்தது ... அப்பொழுது எனக்கு வலைப்பூ இருந்திருந்தால் தலையோட நடிப்பை எந்த அளவுக்கு பாராட்டி எழுதியிருந்திருப்பெனோ அதே அளவுக்கு இந்த விசயத்தில் குறையும் சொல்லியிருப்பேன்

"ராஜா" said...

@ ஆகாயமனிதன்..

நன்றி நண்பரே ...

"ராஜா" said...

@ jayadev das

மணிரத்னம் ஷங்கர் இங்கே எதற்கு வந்தார்கள் ... சார் திருநெல்வேலியில ஒரு போலீஸ்காரர் நடுரோட்டுல வெட்டுப்பட்டு கிடந்தப்ப அவரை காப்பத்தனும்னு தோணாமல் வளச்சி வளச்சி போட்டோ எடுத்தா திட்டுவீங்க ... ஆனால் இப்படி ஒரு படம் எடுத்து கல்லா கட்டுனா பாராட்டுவீங்க ... ரெண்டுக்குமே காரணம் எதை காட்டினால் மக்கள் அதிகம் பார்ப்பார்கள் என்பதே ... ஜாதி பிரட்ச்ச்சனையை தீர்க்கிறேன் என்று சொல்லி கடைசிவரை ஜாதி சண்டையை காட்டிவிட்டு கடைசி ஐந்து நிமிடம் ஹீரோ சமத்துவ வசனம் பேசினால் சண்டை தீர்ந்து விடுமா?

"ராஜா" said...

//சினிமா எடுப்பது பொழுது போக்குக்காகவும், மற்ற தொழில் போல பணம் சம்பாதிக்கவும் தான்.

pozhuthupokkavum panam sambaathikkavum ivarkalukku intha mathiriyana visayangalthan kidaiththanava?

"ராஜா" said...

படம் நல்லா இருக்கு என்று சொல்லுங்கள் ஒத்துகொள்கிறேன் ஆனால் இது ஒரு விழிப்புணர்வு படம் என்று சொன்னால் கண்டிப்பாக ஏற்றுகொள்ளவே முடியாது

Jayadev Das said...

\\மணிரத்னம் ஷங்கர் இங்கே எதற்கு வந்தார்கள் .\\ இந்திய அளவில் புகழ் பெற்ற இரண்டு தமிழ் இயக்குனர்கள், உலகத் தரம் வாய்ந்த படங்களை எடுப்பதாகப் போற்றப் படுபவர்கள். ஒன்றிரண்டு படங்களைத் தவிர மற்ற எல்லா படங்களின் கதைகளையும் வெளிநாட்டுப் படங்களில் இருந்து உருவி படமெடுத்து, சிறந்த படைப்பாளர்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி வெட்கமில்லாமல் சொல்லித் திரியும் கதைத் திருடர்கள். இவர்கள் மத்தியில் சொந்தமாக சிந்திக்கும் ஒரு படைப்பாளர் சரவணன் என்று சொல்ல வந்தேன். [இவ்வளவு விளக்கம் கொடுக்கனுமா.....]

Jayadev Das said...

\\சார் திருநெல்வேலியில ஒரு போலீஸ்காரர் நடுரோட்டுல வெட்டுப்பட்டு கிடந்தப்ப அவரை காப்பத்தனும்னு தோணாமல் வளச்சி வளச்சி போட்டோ எடுத்தா திட்டுவீங்க ... ஆனால் இப்படி ஒரு படம் எடுத்து கல்லா கட்டுனா பாராட்டுவீங்க ... .\\ இந்தப் படத்தில் நிஜ நிகழ்சிகள் எதுவும் படமாக்கப் படவில்லை.

\\ரெண்டுக்குமே காரணம் எதை காட்டினால் மக்கள் அதிகம் பார்ப்பார்கள் என்பதே\\ இதுதான் ஓடும், இது ஓடாது என்று எவராலும் கணித்துச் சொல்லவே முடியாது என்பது தமிழ் சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்டவர்களின் அனுபவம். ஆஹா ஓஹோ என்று ஓடும் என்று எதிர்பார்க்கப் பட்ட பல படங்கள் ஊத்திக் கொண்டுள்ளன, இதைப் போயி எவண்டா பார்ப்பான் என்று விநியோகஸ்தர்கள் வாங்க மறுத்த படங்கள் சரித்திரம் படைக்கும் அளவுக்கு ஓடியும் உள்ளன. விபத்தைப் போட்டால் படம் ஓடும் என்றால் எல்லோரும் போட்டு விடுவார்கள். சொல்லப் போனால் சண்டைக் காட்சி, கவர்ச்சி நடிகை அரைகுறை ஆடை அணிந்த காட்சியைப் போல விபத்துக் காட்சியில் பார்க்கத் தூண்டும் விஷயம் எதுவுமில்லை, அருவருக்கத் தக்க வகையிலேயே இருக்கும், இதை எடுத்தும் ஓட வைக்க முடியும் என்று துணிந்த இயக்குனரை பாராட்ட வேண்டும்.

Jayadev Das said...

\\ஜாதி பிரட்ச்ச்சனையை தீர்க்கிறேன் என்று சொல்லி கடைசிவரை ஜாதி சண்டையை காட்டிவிட்டு கடைசி ஐந்து நிமிடம் ஹீரோ சமத்துவ வசனம் பேசினால் சண்டை தீர்ந்து விடுமா?\\ ஜாதியைத் தூண்டுவதும், விபத்தைக் காட்டுவதும் ஒன்றல்ல. அங்கு படம் பார்ப்பவர்களின் ஜாதி வெறி கூடலாம், இங்கே விபத்தைப் பார்த்துவிட்டு நாமும் விபத்தை எர்ப்படுத்துமாறு வாகனத்தை ஓட்டலாம் என்று நல்ல மன நிலையில் உள்ள யாருக்கும் எண்ணம் வராது.

Jayadev Das said...

\\pozhuthupokkavum panam sambaathikkavum ivarkalukku intha mathiriyana visayangalthan kidaiththanava?\\ எந்த மாதிரியான விஷயங்களைப் படமெடுக்க வேண்டும் என்று நீங்கள் எப்படி ஐயா dictate செய்ய முடியும்? அல்லது விபத்தை படமாக்கக் கூடாது என்று சட்டம் போட்டுள்ளார்களா என்றாவது கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்?

Jayadev Das said...

\\ஆனால் இது ஒரு விழிப்புணர்வு படம் என்று சொன்னால் கண்டிப்பாக ஏற்றுகொள்ளவே முடியாது.\\ ஆளாளுக்கு இஷ்டத்து என்ன தோணுதோ அதைச் சொல்லிக்கட்டும், உங்களுக்கு தோணுவதை நீங்க சொல்லிக்கோங்க, இப்ப என்ன கெட்டுப் போச்சு?

Jayadev Das said...

ராஜா !!
அவன் கல்லா கட்டுறான், இவன் பணம் அடிக்கிறான் என்று புலம்புறீங்களே, நீங்க பணம் சம்பாதிப்பதே இல்லையா, அல்லது நீங்க சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் ஏதாவது சமுதாய முன்னேற்றுத்துக்கே செலவு செய்து விடுகிறீர்களா, கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்.

aotspr said...

படம் சூப்பர்.....
பதிவுக்கு நன்றி.........

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

"ராஜா" said...

Jeyadevdas

intha mathiriyana padangalukku tholviyai vida vetrikkuthan probability athikam.

Policekarar mettaril nadanthukondirukkum oru kodooraththai katti panam sambathitharkal. Ithil nadanthu mudintha visayangalai katti sambathikkirarkal.

Neengal solluvathai pola ithu matravarkal thirunthuvatharkaka endral cinimavai parthuthan ethaiyum katrukolla vendum endra alavukku tamilan muttala

தாஸ். காங்கேயம் said...

என்னை கேட்டால் கதைக்குத் தேவை என்கிற போர்வையில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்சிகள் வைக்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு படத்தை குடும்பத்தோடு பார்க்கும் வகையில் படம் எடுத்திருக்கிறார்களே, அதை மனம் விட்டு பாராட்டுங்கள் சார்.
தாஸ். திருப்பூர்

sweet said...

ஜெயதேவ தாஸ், & மற்ற எல்லோருக்கும்...

பாஸ்.... நம்ம எல்லாம் இப்படி சொல்றதால ராஜா திருந்த போறாரா?

சொல்லி வேஸ்ட்

மங்காத்த மாதிரி படம் இல்லை என்று சொன்னா தான் அவருக்கு திருப்தி

விடுங்க பாஸ், சில்வண்டு ப்ளாக் எழுதுறதை எல்லாம் கண்டுக்கிட்ட பொழப்பை பார்க்க முடியுமா?

ராஜா பயமா இருந்த இந்த பதிலை பதக்கம விட்டு விடுங்க

ஹி ஹி மொக்கை பதிவு தல.... ஹி ஹி ...

மதுமிதா

Good citizen said...

This prooves that Raja is one of the worst blogger who doesn't accepts his mistake,, so just avoid his blog
Mr.Jayadev and sweet

vivek kayamozhi said...

உங்கள் கருத்துக்கள் முற்றிலும் சரியே...!!!! எதிர் கருத்திடுவோரை சொல்லி குற்றமில்லை. இவர்களெல்லாம் எ.வி.எம்- காந்தி யை காட்டி, பாரதி பாட்டை போட்டு தேசப்பற்றை வைத்து கல்லா கட்டியதை புரட்சி, நாட்டுபற்றை ஊட்டினர் என்று புலன்காஹிதம் அடைந்த கூட்டமே.

பாரதிராஜாவின் சுய சாதி தம்பட்டத்தை கிராமியம், யதார்த்தம் என்று கொண்டாடுவர்.

அமிதாப் இன் ஈ அடிச்சான் காப்பி ரஜினி யை புது ஸ்டைல், ரியல் ஹீரோ என்பர்.

உலக படங்களை காபி பேஸ்ட் பண்ணும் மணி, கமல் போன்றோரை அறிவு ஜீவிகள் என்பர்.

ஒரு குரூரத்தை காட்டி ,அதை குத்திக்காட்டி கல்லா கட்டும் கூட்டமும் ஒன்று இருக்கிறது(நம்ம சைக்கோ பாலா மாதிரி) அதே மாதிரி முயற்சிதான் இதுவும். அவரவர் பார்வையில் ஒவ்வொருமாதிரி இருக்கும்.
நேர்மறை விமரிசனம் வந்தாலும் இந்த படத்துக்கு வரவேர்ப்பில்லை என்பதே நிதரிசனம். ஒரு சப்பை படத்தை பற்றி ஒரு கருத்தை முன் வைப்பதற்காக உங்கள் சம்பளத்தை பற்றியெல்லாம் ஆராய நிறைய நேர்மையாளர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் இன்னும் எழுதினால் உங்கள் சாதி, கட்சி எல்லாவற்றையும் தேடுவர் உங்கள் மீது சேற்றை வாரி இறைக்க...
ஜாக்கிரதை....

"ராஜா" said...

//இந்த காலத்தில் இப்படி ஒரு படத்தை குடும்பத்தோடு பார்க்கும் வகையில் படம் எடுத்திருக்கிறார்களே, அதை மனம் விட்டு பாராட்டுங்கள் சார்.
தாஸ். திருப்பூர்

குடும்பத்தோடு உக்காந்து பார்க்கிற படம் என்ற வகையில் பாராட்டலாம் .. விழிப்புணர்வு படம் என்று சொல்லும்போதுதான் காமெடியாக இருக்கிறது ...

"ராஜா" said...

யோவ் ஸ்வீட் யாருயா நீ? உன்னை யாரு வந்து என் பதிவை படின்னு கூப்பிட்டா? பிடிக்கலைனா போய்கிட்டே இரு திரும்ப வராத

"ராஜா" said...

//This prooves that Raja is one of the worst blogger who doesn't accepts his mistake,,

இந்த படம் கல்லா கட்ட எடுத்த படமா ? இல்லை சமூக விழிப்புணர்வு படமா? பதில் சொல்லுங்கள் ....

நடுநிசி நாய்கள் படத்தை கூட சின்ன வயதில் பாதை தவறி போனால் என்னவாகும் என்ற விழிப்புணர்வை தருகிற படம் என்று சொல்லலாம் ... அப்படி சொன்னால் அது எவ்வளவு கேனைத்தனமானதோ அதேபோலதான் இந்த படத்தை மனிதாபிமான படம் என்று சொல்லுவதும்

"ராஜா" said...

@ vivek kayamozhi

thanx for your support

"ராஜா" said...

இந்த பதிவிற்கு இப்படியான எதிர்ப்புகள் வரும் என்று தெரிந்துதான் எழுதினேன் ... ore kallil rendu maankaai என்று solluvaarkale அதை செய்து காட்டியிருக்கிறார்கள் இந்த பட குழுவினர் ... பணமும் சம்பாதித்தாகி விட்டது , மனிதாபிமானிகள் என்ற பட்டமும் வாங்கியாகிவிட்டது... முதல் மான்காயிக்கு இவர்கள் தகுதியானவர்களே , ஆனால் இரண்டாவது பட்டத்திற்கு இவர்கள் தகுதியற்றவர்கள் என்பதே என் வாதம் ...

சரி சினிமாவின் மூலம் மக்களை திருத்திவிடலாம் என்று சொல்லும் நண்பர்களே , விபத்துகள் மூலம் உயிரலப்பவர்களை விட சினிமா கதாநாயகர்களை நம்பி தன வாழ்க்கையை தொலைத்தவர்கல்தான் அதிகம் ... இன்று எதோ ஒரு நடிகன் நடத்தும் பேரணிக்கு கூடும் கூட்டமே அதற்க்கு சாட்சி ... இதற்க்கு எதிராக ஒரு விழிப்புணர்வு படம் எடுக்க இவர்கள் ரெடியா? அப்படி எடுத்தால் பணம் சம்பாதிக்க முடியாது என்று தெரியும் , அதனால் அந்த டாபிக்கை தொட மாட்டார்கள் .. வி.சேகரின் நீங்களும் ஹீரோதான் படம் பட்ட பாடு இவர்களுக்கு தெரியுமே ...இதை போல இன்னும் எத்தைனையோ பிரச்சனைகள் நாட்டில் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு ஊனமுற்றவர்களையும் , விபத்தையும் தடுப்பதிலேயே இவர்கள் முனைப்பாக இருக்கிறார்களே , ஏன்?

"ராஜா" said...

//இவர்கள் இன்னும் எழுதினால் உங்கள் சாதி, கட்சி எல்லாவற்றையும் தேடுவர் உங்கள் மீது சேற்றை வாரி இறைக்க...

இந்த பதிவிற்கு நிறைய நண்பர்கள் உண்மையிலேயே அவர்கள் கருத்தை நல்ல முறையில் வெளியிட்டு இருக்கிறார்கள் .. என் கருத்திற்கு எப்படி மதிப்பளிக்கிறேனோ அதே போல அவர்கள் கருத்துக்கும் மதிப்பளிக்கிறேன் .. ஆனால் சில பேர் நீங்கள் சொல்லியதை போல வம்பிழுக்க வேண்டும் என்பதற்காகவே பதில் எழுதியிருக்கிறார்கள் ... அவர்கள் கருத்துகளைஎல்லாம் நான் மதிப்பதே இல்லை நண்பரே ...

Karthikeyan said...

ராஜா... வந்தான் வென்றான் மாதிரி மொக்கை படங்களுக்கு மத்தியில இப்படி ஒரு படம் வந்ததுக்கு நாம பாராட்டித்தான் ஆகனும். தேவையில்லாம கவர்ச்சி, சண்டைன்னு இல்லாம தெளிவாக படத்தை சொல்லி இருக்காங்க.. இந்த படத்தை வச்சி இவ்வளவு கும்மி அடிச்சிருக்கவேண்டாம்.. எது எப்படியோ வேலாயுதம் வந்ததும் இந்த படத்தை நல்ல படம்னு சொல்லப்போறோம்.

Adhee said...

திரைக்கதை என்பது சொல்ல வந்த விஷயத்தை (Even if positive or negative) சரியாக சொல்வதுதான. அதை இயக்குநர் மிகச் சரியாகவே செய்திருக்கிறார். இதைபோன்ற நெகடிவ் விமர்சனம் செய்து பார்வையாளர்களை திசைதிருப்பாதீர்கள்... இந்த வருட சிறந்த திரைப்படம் "எங்கேயும் எப்போதும்" என்பது என்னுடைய கருத்து. உங்களுக்கு மங்காத்தா பிடித்திருந்தால் நீர் நீடுழி வாழ்க........

"ராஜா" said...

என்ன கொடுமை இது? ஒரு அஜீத் ரசிகன் அஜீத் படம் வந்தா மத்த படங்களை பற்றி எழுதவோ , விமர்சிக்கவோ கூடாதா?

//இந்த வருட சிறந்த திரைப்படம் "எங்கேயும் எப்போதும்" என்பது என்னுடைய கருத்து.

இருந்திட்டு போகட்டுமே , அதுக்கு என்ன இப்ப... நான் இந்த பதிவில் அதைபற்றிய விவாதம் எங்குமே செய்யவில்லையே... நான் சொல்ல வந்த விஷயத்தை நீங்கள்தான் திசைதிருப்பி கொண்டிருக்கிறீர்கள்..

"ராஜா" said...

//ராஜா... வந்தான் வென்றான் மாதிரி மொக்கை படங்களுக்கு மத்தியில இப்படி ஒரு படம் வந்ததுக்கு நாம பாராட்டித்தான் ஆகனும். தேவையில்லாம கவர்ச்சி, சண்டைன்னு இல்லாம தெளிவாக படத்தை சொல்லி இருக்காங்க.. இந்த படத்தை வச்சி இவ்வளவு கும்மி அடிச்சிருக்கவேண்டாம்.. எது எப்படியோ வேலாயுதம் வந்ததும் இந்த படத்தை நல்ல படம்னு சொல்லப்போறோம்.


ஸார் நீங்களுமா? நான் படம் நன்றாக இல்லை, யாரும் பாக்கதீங்க என்று சொல்லவில்லையே... படம் பார்க்கும் பொது எனக்கு தோன்றிய ஒரு விஷயத்தை பகிர்ந்திர்க்கிறேன் ..

அப்பறம் நான் கண்டிப்பாக வேலாயுதம் என் சொந்த காசை செலவு செய்து பார்க்கமாட்டேன் ஸார்... எனக்கு பிடித்த நடிகர்களின் படங்களை மட்டுமே திரையில் பார்க்க பிடிக்கும் (அஜீத் , கமல் , ரஜினி )... சில நேரங்களில் சில படங்களை ரொம்பவும் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் மட்டுமே பார்ப்பேன்... மற்றபடி யாராவ்து விஜய் ரசிகர்கள் காசு போட்டு டிக்கெட் எடுத்து கூப்பிட்டு சென்றாள் பார்க்கலாம் என்று இருக்கிறேன்..

Karthikeyan said...

Freeயா விடுங்க பாஸ்.. சும்மா தமாஷ் பண்ணினேன். நீங்க சொல்ல வந்ததை சொல்லி இருக்கீங்க.. அதுபோதும். தொடர்ந்து எழுதுங்க..

LinkWithin

Related Posts with Thumbnails