Followers

Copyright

QRCode

Monday, September 12, 2011

மங்காத்தாவும் நானும் , குரு பூஜைகளும் சில அப்பாவிகளும்





இதற்க்கு முன்னர் நான் அதிக முறை திரையரங்கிற்க்கு சென்று பார்த்த படம் படையப்பாதான் ... அந்த படம் வெளி வந்த காலகட்டம்தான்  எனக்கு சின்னதாக  மீசை அரும்ப  தொடங்கிய காலம்  , அதற்க்கு முன்பு நான் தியேட்டரில் சென்று  படம் பார்க்க வேண்டும் என்றாள் என்னுடைய மாமாக்கள் யாராவது அழைத்து சென்றால்தான் உண்டு ... ஒரு மாமா தீவிர ரஜினி ரசிகர் அவர் ரஜினி படம் எது வந்தாலும் என்னை அழைத்து சென்று விடுவார் ... தளபதி முதல் முத்து வரை அவர் புண்ணியத்தில்தான் எனக்கு தியேட்டர் தரிசனம்... அப்பொழுதெல்லாம் படம் பார்க்க போகிறோம் என்பதை விட , இடைவேளையில் ஐஸ் கிரீம் சாப்பிடலாம் என்பதுதான் அதிக சந்தோஷத்தை கொடுக்கும், அந்த ஐஸ் கிரீம் சுவைக்காகவே ரஜினி படம் வந்தால் எங்கள் மாமாவை நச்சரிக்க ஆரம்பித்து விடுவேன் .. அவரும் போனால் போகிறது என்று என்னை ஒரு முறை படத்திர்க்கு அழைத்து செல்வார்... அதே போல இன்னொரு மாமா கமல் ரசிகர் .. அவர் கமல் படம் எது வந்தாலும் அழைத்து சென்று விடுவார்... அப்பொழுதெல்லாம் ரஜினி படங்கள் அளவுக்கு கமல் படங்கள் எனக்கு ஈர்ப்பை கொடுத்ததில்லை , படத்தில் ரஜினியை யாராவது அடித்து விட்டாள் ,  அவர் எப்படியாவது  படம் முடிவதற்க்குள் அவர்களை அடி வெளுத்து விடுவார் ... நான் ரஜினி அவனை எப்பொழுது  அடிப்பார் என்ற ஆவலிலேயே தூங்காமல் படம் பார்ப்பேன் .. ஆனால் கமல் படங்களில் அவர் கடைசி வரை அடி வாங்கி கொண்டேதான் இருப்பார் ... அதனால் எந்தவிதமான ஈடுபாடும் இல்லாமல் தூங்கிவிடுவேன் ,,, அப்படி  நான் தூங்கிய படங்களில் ஒன்று சதிலீலாவதி ... அதை என் மாமா பார்த்து விட , சதிலீலாவதியோடு கமல் படம் பார்க்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன் ...


இப்படி எத்தனை நாளைக்குத்தான் படம் பார்க்க எங்கள் மாமாவையே நம்பி இருப்பது , நாமாக தனியாக படம் பார்க்க சென்றாள் என்ன என்று எனக்கு தோன்றிய பொழுது நான் பத்தாம் வகுப்பு சென்றிருந்தேன்... என்னுடைய நெருங்கிய நண்பனும் நானும் சேர்ந்து அதற்கான திட்டம் தீட்டினோம் எங்கள் ஊரில் அப்பொழுது வாலி என்று ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது , எங்கள் வகுப்பை சேர்ந்த சுரேஷ் என்பவன் அதை பார்த்து விட்டு அதன் கதையை ஏற்கனவே எங்களுக்கு சொல்லி இருந்தான்...  எங்களுக்கு கதை மீதெல்லாம் பெரிய ஈடுபாடு இல்லை , எப்படியாவது தனியாக ஒரு படம் பார்த்துவிட வேண்டும் என்பதுதான் எங்களின் அப்போதைய இலக்கு , அவன் சொல்லிய இன்னொரு விஷயம்தான் இந்த படத்தை தனியாக பார்த்தே தீருவது என்று எங்களை முடிவே செய்ய வைத்தது , அது டேய் இந்த படத்துல ஹீரோ ஒரு பாட்டுல சிம்ரன் ஜாக்கெட்டுக்குள்ள கைய விடுராண்டா என்பதுதான் ...  விடுமுறை நாட்களில் வீட்டிற்க்கு தெரியாமல் செல்ல முடியாது என்பதால் , பள்ளிக்கூடத்தை கட் அடித்து விட்டு செல்வது என்று முடிவு செய்து அதன்படியே ஒரு சுபயோக சுப தினத்தில் பள்ளிக்கு மட்டம் போட்டு வெற்றிகரமாக படமும்   பார்த்தாகி விட்டது ... அன்றிலிருந்து மனதிர்க்குள் பெரிய மனுஷ தோரணை வந்து விட ,எல்லா படங்களையும் தனியாகவே சென்று பார்க்க தொடங்கினேன் .... அப்படி பார்த்ததுதான் படையப்பா .

 முதல் தடவை பார்த்ததுமே  ரஜினியின் ஸ்டைல்  இரவு முழுவதும்  என்னை தூங்க விடவே இல்லை , கண்ணை மூடினால் விசுக் விசுக் என்று ரஜினி கையை சுற்றுவதுதான் ஞாபகம் வந்தது , எப்படா விடியும் என்று காத்திருந்து , அப்பாவின் பையில் இருபது ரூபாய் "ஆட்டைய" போட்டு , மறுநாள் படத்திர்க்கு சென்ற பின்னர்தான்  மனம் நிம்மதி அடைந்தது  , இப்படியாக ஒன்றல்ல இரண்டல்ல தொடர்ந்து பதிமூன்று நாள் அந்த படம் பார்த்தேன் ... இருந்தும் ரஜினியின் ஸ்டைல் எனக்கு அலுக்கவே இல்லை , கடைசியில் தினமும்  பையில் காசு குறைவதை பார்த்து உஷாரான என் அப்பா காத்திருந்து கையில் காசோடு என்னை பிடிக்க அன்றோடு முடிந்து போனது எனக்கும் படையப்பாவுக்கும் இருந்த உறவு , அதன் பின்னால் பல வருடங்களுக்கு பின் டிவியில் படம் போடும்பொழுதுதான் மீண்டும் எனக்கு படையப்பா தரிசனம் கிடைத்தது ....  




அந்த படத்திர்க்கு பின் நீண்ட வருடங்கள் கழித்து ஒவ்வொரு முறை பார்க்கும் போதும்  அலுக்காமல் அடுத்து எப்பொழுது பார்க்கலாம் என்று படம் முடியும் போது நினைக்க வைக்கிறது இந்த மங்காத்தா.... இதுவரை எத்தனை முறை பார்த்தேன் என்றே தெரியவில்லை .... டெய்லி தண்ணி அடிக்கிறதுதான் தப்பு , எப்பொழுதாவது இப்படி தினமும் படம் பார்ப்பது தப்பே இல்லை , நான் கடைசியாக பார்த்த படம் எத்தன்... அதன் பின்னர் planet of apes பார்த்தேன்... வேறு தமிழ் படங்கள் எதுவும் பார்க்க தோன்றவில்லை , அதர்க்கெல்லாம் சேர்த்துதான் இப்பொழுது மங்காத்தா பார்த்து கொண்டிருக்கிறேன்... அதே போல டான்ஸ் ஷோ , ஃபோன் போட்டு மொக்கை போடுறது என்று எங்கு திரும்பினாலும் மொக்கைகளாகவே தெரிந்ததால் , சில வருடங்களாக  டிவியே பார்க்க பிடிக்கவில்லை , ஆனால் சன் டிவியில் மங்காத்தா பற்றி எந்த நிகழ்ச்சி போட்டாலும் விளம்பர இடைவேளை முதற்கொண்டு பார்த்து விடுகிறேன்... என் மனைவியே அஜீத் மேல இவ்வளவு தீவிரமான ஈடுபாடு எப்படி உங்களுக்கு வந்தது என்று ஆச்சரியமாக கேட்கிறாள்... அந்த அளவுக்கு இப்பொழுது மங்காத்தா ஃபீவர் பிடித்து அலைகிறேன்...


நான் மட்டும் இல்லை , ஒவ்வொரு அஜீத் ரசிகனும் ஏன் அவர் மேல் இவ்வளவு வெறியோடு இருக்கிறான் என்பதற்க்கு ஒரு பதிவில் நண்பர் ஒருவர் அருமையாக விளக்கம் அளித்திருக்கிறார் .. அஜீத் பற்றி நான் படித்த பதிவுகளில் மிக சிறந்த பதிவு இதுதான்... நீங்களும் படித்து பாருங்களேன் ...



அஜித்தை நான் ஏன் நேசிக்க ஆரம்பித்தேன் , எனக்குள் அந்த நேசிப்பு எப்பொழுது அளவு கடந்த பாசமாக மாறியது , எதுவரை நான் அந்த மனிதனை நேசிப்பேன் எல்லா கேள்விகளுக்கும் அந்த பதிவே பதில் சொல்லிவிட்டது ... அதன் ஒவ்வொரு வரிகளும் என் மனதில் இருப்பதை அப்படியே சொல்லுகின்றன ...


குருபூஜையும் அப்பாவி இளைஞர்களும் ..


நேற்று எங்கள் ஊரில் பெரிய கலவரம் ... ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த தலைவரின் குரு பூஜைக்கு அந்த ஜாதி இளைஞர்கள்  வண்டியில் கும்பலாக சென்று கொண்டிருந்த பொழுது வழியில் அவர்களுக்கும் காவல் துறையினருக்கும் கைகலப்பு ஆகிவிட , லத்தி சார்ஜ் நடத்தி இருக்கிறார்கள்... அதனால் பெரிய கலவரம் உருவாகும் சூழல் உருவாகிவிட  ,நேற்று மதியம் முழுவதும் கடைகள் அனைத்தும் மூடபட்டுவிட்டன... எங்கு திரும்பினாலும் மக்கள் பீதியுடனே இருந்தார்கள்... பொதுவாக எந்த  தலைவர்களின் குருபூஜை நடந்தாலும் எங்கள் ஊர் சிக்கி சின்னாபின்னமாகி விடும் .. காரணம் பசும்பொன் , பரமக்குடி இந்த இரண்டில் எங்கு   செல்ல வேண்டும் என்றாலும் அருப்புக்கொட்டையை தாண்டிதான் செல்ல வேண்டும்... குரு பூஜை நடக்கும் அந்த இரண்டு நாட்களில் சாதாரண மக்கள் வண்டியில் வெளியே எங்கும் செல்லவே முடியாது .... வரிசையாக டாடா சுமோவிலும் , வேனிலும் கொடியை கட்டி கொண்டு செல்லுவார்கள் ... அதிலும் வாகனத்தில் உள்ளே உக்கார இடம் இருந்தாலும் , வெளியே தொங்கி கொண்டேதான் செல்லுவார்கள்... இவர்களின் இந்த ஊர்வலத்தில் அந்த தலைவர்களுக்கு மரியாதை செய்ய செல்வதற்கான எந்த அறிகுறியும் இருக்காது .. மாறாக பாருங்கடா எங்க ஜாதி பலத்தை என்று அடுத்தவர்களுக்கு அவர்கள் ஜாதியின் கெத்தை காட்டுவதற்காக மட்டுமே இந்த குருபூஜைகள் நடக்கின்றன.... 


ரோட்டில் ஏதாவது ஒரு பெண் வண்டியில் சென்றாள் அவ்வளவுதான் விசில் அடிப்பதும்  , கெட்ட  வார்த்தையில் திட்டுவதுமாக அந்த பெண்ணை நாணி கூச செய்து விடுவார்கள் ... எனக்கு தெரிந்து அந்த தலைவர்களின் மேல் உண்மையிலேயே மரியாதை இருப்பவர்கள்  இப்படி அடாவடிதனம்  எதுவும் செய்ய மாட்டார்கள்.... நேற்று இரண்டு வாலிபர்கள் டாடா சுமோவின் கூரையில் அமர்ந்து கொண்டு சரக்கு அடித்து கொண்டே போகிற வருகிறவர்களை பார்த்து கத்தி கொண்டே சென்று கொண்டிருந்தனர் ... இதில் கொடுமை என்னவென்றால் போலீஸ்காரர்கள் வரிசையாக நின்று அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததுதான்...  தமிழ்நாட்டில் ஜாதி பெயரை சொல்லி எண்ணவேண்டும் என்றாலும் செய்யலாம் என்னும் சூழல் உருவாகி விட்டது ... ஓட்டு அரசியல் நடக்கும் நம் நாட்டில் யாரும் இதை தட்டி  கேட்க போவதும் இல்லை... மாறாக இவர் ஆட்சியில் அவரும் , அவர் ஆட்சியில் இவரும் கலவரத்தை தூண்டி விட்டு எரியும் நெருப்பில் எண்ணை வார்த்து கொண்டிருக்கிறார்கள்... இவர்களின் அரசியல் விளையாட்டில் சிக்கி உயிரையும் வாழ்க்கையும் இழப்பது இவர்களால் மறைமுகமாக மூளை சலவை செய்யபட்ட குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த இந்த வாலிபர்கள்தான்.. நேற்று தமிழகம் முழுவதும் நடந்த கலவரத்தில் 8 பேர் உயிரிழந்து இருக்கிறார்களாம்... அவர்கள் கண்டிப்பாக அந்த தலைவருக்காக வந்திருக்கமாட்டார்கள் , சரக்குக்காகவும் ஒருநாள் பொழுதுபோக்கிர்க்காகவும் வந்து உயிரை விட்டு இருக்கிறார்கள்... ஆளும் கட்சிக்கு இடைஞ்சல் குடுப்பதர்க்காக எதிர்க்கட்சிகளால் திட்டமிட்டு அரங்கேற்றபட்ட கலவரம் இது என்று ஒரு பேச்சு அடிபடுகிறது , அது உண்மையாக இருக்கவும் வாய்ப்பு அதிகம்... எது எப்படியோ ஜாதியை காட்டி ஏமாற்றுபவர்களின் வாய்ஜாலத்திர்க்கு ஏமாறாமல் இளைஞர்கள் என்று சொந்தமாக சிந்தித்து செயல்படுகிறார்களோ அன்றுதான் இதுக்கெல்லாம்  விடிவுகாலம் பிறக்கும் ...    




7 comments:

பனித்துளி சங்கர் said...

மங்காத்த பற்றிய உங்களின் உங்களின் எண்ணம் சிறப்பு

சேலம் தேவா said...

மங்காத்தாவைப் பற்றிய பதிவையும்,குருபூஜை பற்றிய பதிவையும் தனித்தனியாக போட்டிருக்கலாம் என்பது என் எண்ணம்.தவறாக எண்ண வேண்டாம்.உங்கள் ஊரில் வருடாவருடம் நடப்பதால் அதைப்பற்றி நேரலையில் வர்ணிப்பது போல் உணர்ச்சிபூர்வமான,உண்மையான பதிவு.

Philosophy Prabhakaran said...

ஹா... ஹா... நான் சொல்ல வேண்டியதை சேலம் தேவா சொல்லிவிட்டார்... தனித்தனியாக பதிவிட்டிருக்கலாம்...

Philosophy Prabhakaran said...

அஜீத் குறித்த இடுகையை ரசித்தேன்...

'பரிவை' சே.குமார் said...

அஜீத் குறித்த இடுகையை ரசித்தேன்.

பாலா said...

அஜீத் பற்றிய அந்த பதிவு மிக எதார்த்தம். அப்புறம் குருபூஜை என்ற பெயரில் வருடம் தோறும் நடக்கும் அராஜகங்கள் அத்தனையுமே உண்மைதான்.

Karthikeyan said...

அஜீத் உங்கள் மனதில் சிம்மாசனம் போட்டு இருக்கிறார் என்பது வரிக்கு வரி தெரிகிறது. இடையில் அருப்புக்கோட்டைக்கு வந்தும் உங்களை சந்திக்க இயலாமைக்கு வருந்துகிறேன். இருந்த ஒரு நாளில் வீட்டம்மாவுடன் இளையராணியில் மங்காத்தா மறுபடியும் பார்த்தேன்.

இப்பொழுது நிலவரம் அமைதியாகிவிட்டதா ராஜா? லொள்ளு பண்றவங்களை ஓட விட்டு சுடுறதுல தப்பே இல்லை. அப்பாவிகள் பாதிக்கக்கூடாது. அவ்வளவுதான்.

LinkWithin

Related Posts with Thumbnails