டிராவிட்டும் , சேவாக்கும் ஒபெனிங்க் ஏறங்கி , ஆரம்பத்தில இருந்தே கொஞ்சம் கொஞ்சமா சேவாக்
தன்னோட அதிரடிய ஏத்திக்கிட்டே போக ,
இன்னொரு பக்கம் டிராவிட் விக்கெட் விழாம டீம ஸ்டெடி பண்ணிக்கிட்டு இருக்க , பாதி ஆட்டம் முடிஞ்சதும் 50 அடிச்ச சேவாக் ,அடுத்து முழுக்க முழுக்க ஆட்டத்த தன்னோட கண்ட்ரோளுக்கு
கொண்டு வந்து ருத்திரதாண்டவம் ஆடுனா எப்படி இருக்கும் , அதுவும் கடைசி பத்து ஓவரில் சேவாக்கோட யுவ்ராஜும் சேர்ந்து
பட்டைய கெளப்புனா அந்த கேம் எப்படி இருக்குமோ
அப்படி இருக்கு இந்த மங்காத்தா.... இதுல சேவாக் அஜீத் , டிராவிட் மத்த கதாபாத்திரங்கள்
, யுவ்ராஜ்
அர்ஜூன் ... இவங்க எல்லாரும் அடிச்சி விளையாட அருமையான பிட்ச் அமைத்து கொடுத்திருக்கிறார் வெங்கட்.... வெங்கட் பிரபுவின் இந்த கேம் பல சாதனைகளை உருவாக்கும்
என்பதில் சந்தேகமே இல்லை , இந்த கேமின் மேன் ஒஃப் தி மாட்ச்
சந்தேகமே இல்லாமல் தலதான் .. அந்த சேவாக் இன்னும் டபுள் செஞ்சுரி போடவில்லை , ஆனால் தல இந்த படத்தில் அட்டகாசமா டபுள் செஞ்சுரி அடித்திருக்கிறார் .... அதுவும் இடைவேளைக்கு அப்புறம் கிடைக்கிற பால் எல்லாம் சிக்ஸெரும் , போருமா
பறக்க வைத்திருக்கிறார் தல .. சந்தேகமே இல்லாமல் தலையோட
கேரியரில் வாலிக்கு அடுத்து இரண்டாவது பெஸ்ட் performance இந்த விநாயக் மாதவன்தான் ... வாவ் வாவ் வாவ் .... எத்தனை
நாள் ஆகிவிட்டது தலையை இவ்வளவு ஆக்டிவாக திரையில் பார்த்து ... எங்க இருந்தார் இப்படி ஒரு தல இவ்வளவு நாளா?
அம்பதாவது படத்தில் முழுக்க
முழுக்க எதிர்மறையான வேடம் , நரைத்த
முடியுடன் தோன்றியிருக்கிறார் , யாருமே
செய்ய தயங்கும் விஷயங்கள் இவை இரண்டும் , திரைக்கு பின்னால் படம் வெளிவருவதற்க்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னாள் தன் ரசிகர்
மன்றங்களை கலைத்து விட்டார்... இந்த தைரியம் வேறு யாருக்கு
வரும்... அதான் தலையின் இந்த தைரியத்திர்க்கு அவர் ரசிகர்கள் நாங்கள் அடித்திருக்கும் ராயல்
சல்யூட்தான் படத்திர்க்கு கிடைத்த இமாலய ஒபெனிங்க் ... king of openingன் king of opening இதுதான் .. இனிமேல் எவனாவது நான்தான் இனி king
of opening என்று சொல்லுங்கடா பாப்போம் என்று
அடித்து நொறுக்கியிருக்கிறார்கள் தல ரசிகர்கள்
... முதல் நாள் மட்டும் இல்லை இன்று வரை ஹவுஸ் ஃபுல்... ஹவுஸ் ஃபுல் என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் கொடுத்திருக்கிறார்
தல .. ஆமாம் அரங்கில் உக்கார மட்டும் இல்லை நின்று கொண்டு பார்க்க கூட இடம் இல்லை ...
நேற்று இரவில் மூன்றாவது முறையாக படம் பார்க்க சென்றிருந்தேன் ... தியேட்டர் ஒனர் தம்பி
தயவு செஞ்சி புரிந்து கொள்ளுங்கள் உள்ள நிக்க கூட இடம் இல்லை , போயிட்டு நாளைக்கு வாங்க என்று எனக்கு முன்னர் வந்து வரிசையில்
நின்று கொண்டு இருந்த ரசிகர்களிடம் கெஞ்சி கொண்டு இருந்தார் .... அந்த வரிசையில் மட்டும்
நூறு பேர் இருந்தார்கள் ... இப்படி படம் பாக்க வந்தவர்களை போய்ட்டு நாளைக்கு வாங்கப்பா
என்று எங்கள் ஊரில் இதுவரை சொல்லியதே இல்லை... முதல் இரண்டு நாளில்
எங்கள் ஊர் தியேட்டரில் மட்டும் வந்த கலெக்ஷன் 7 லட்சதிர்க்கும் மேல் ... இந்த வருடத்தின்
சூப்பர் டூப்பர் ஹிட் என்று சொல்லபடும் கோ படம் அம்பது நாட்கள் தாண்டி வசூலித்த தொகை
இதை விட கொஞ்சம்தான் அதிகம் , ஸோ நீங்களே
முடிவு செய்து கொள்ளுங்கள் அது சூப்பர் ஹிட் என்றாள் மங்காத்தா என்ன மாதிரியான ஹிட்
என்று ... இந்த ஹைப் இப்படியே இன்னும் இரண்டு வாரங்கள் தொடர்ந்தால் போதும் படம் மெகா
ஹிட் ஆக நிறைய வாய்ப்பு இருக்கிறது ...
ஒரு அஜீத் ரசிகனா வெங்கட் பிரபு ஸாருக்கு நன்றி சொல்லியே ஆகணும் ... படத்தில் பிரேம்ஜி போடும் சில மொக்கைகள் , அப்பறம் கொஞ்சம் நீளமாக வரும் சண்டைக்காட்சிகளை தவிர்த்து பெரியதாக குறை சொல்லும்படி எதுவும் இல்லை ... வெங்கட் அண்ட் டீமின் உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது .... நன்றி வெங்கட் ... நாங்க நன்றி சொல்ல வேண்டிய இன்னொரு ஆள் தயாநிதி அழகிரி ... இவர் இல்லை என்றாள் மங்காத்தா சாத்தியமே இல்லை ... ஸார் உங்க குடும்பத்துல யாரையும் எனக்கு பிடிக்காது , யாருக்குமே நான் இது வரை ஓட்டு போட்டதில்லை , ஆனால் தலைக்கு இப்படி ஒரு படம் கொடுத்ததற்க்காகவே நீங்க மட்டும் எலக்ஷன்ல நின்னா அந்த தொகுதியில எனக்கு ஓட்டு இல்லை என்றாலும் கள்ள ஒட்டாவது கண்டிப்பா போடுவேன் ...
அப்பறம் யுவன் , இவருக்கு எத்தனை தடவைதான் நன்றி சொல்றதுன்னே தெரியவில்லை ... எல்லா நன்றியையும் இப்பவே சொல்லாமல் பில்லா2 வுக்கு ஒரு நன்றியை ஒதுக்கி வச்சிக்கிடுறேன்... அடிச்சி ஆடுங்க யுவன் ...
மங்காத்தா - இந்த வருடம் வந்த படங்களில் காஞ்சனா திரையில் பேயாட்டம் ஆடினது என்றாள் மங்காத்தா வசூலில் பேயாட்டம் ஆடி கொண்டு இருக்கிறது... தமிழ் சினிமாவில் ஓலை வெடிகள்தான் அடிக்கடி வெடிக்கும் , பொஹ்ரான் அணுகுண்டுகள் எப்பவாவதுதான் வெடிக்கும் ... ரொம்ப நாளைக்கு அப்பறம் தமிழ் சினிமா வெடித்திருக்கும் பொஹ்ரான் அணுகுண்டு இந்த மங்காத்தா...
19 comments:
தல தலதான் அணுகுண்டு சத்தம் காத கிழிக்குது
// தல தலதான் அணுகுண்டு சத்தம் காத கிழிக்குது
தலைய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே ...
wer did u watched the movie? APK or VNR?
தல இல்லனா படம் இல்லை.........
dai ovara polambaatha
Super... Ajith brakes all the records in Mumbai tooSuper... Ajith brakes all the records in Mumbai too
வாவ் வாவ் வாவ் .... எத்தனை நாள் ஆகிவிட்டது தலையை இவ்வளவு ஆக்டிவாக திரையில் பார்த்து
:)
//wer did u watched the movie? APK or VNR?
APK boss... ilaiyarani theatre
//தல இல்லனா படம் இல்லை.........
yes .. one man show... திரைக்கதையும் அவருக்கு நல்லா கை கொடுத்திருக்கு ...
@ SRI
நமக்கு நாமே திட்டமா? உங்களுக்கு நீங்களே அட்வைஸ் பண்ணிக்கிறீங்க....
@ கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )
தல போல வருமா?
@ SShathiesh-சதீஷ்
நன்றி
நான் காதல் கோட்டை காலத்திலிருந்து அசல் வரை ஒபெநிங் ஷோ அல்லது முதல் நாள் பார்க்காமல் இருந்தது கிடையாது( ராஜஸ்தான் ல் இருந்தபோது வந்த வரலாறு தவிர) . ஆனால் மதுரையிலிருந்தும் இதுவரை மங்காத்தா பார்க்க டைம், சந்தர்பம் கிடைக்கவில்லை. இன்று காலை ஜாஸ் தியட்டர் போய் படம் பார்க்கலாம் என்று போனால் அது ஒரு காம்ப்ளக்ஸ் தியட்டர் , இன்றும் ,நாளையும் டிக்கெட் இல்லை(ரெண்டு நாளும் மொத்தம் 10 ஷோ ).ஹவுஸ்புல் .....
சந்தோசமாக திரும்பிவந்தேன். படம் ஹிட் , நல்ல இருக்கு என்று பலதரப்பட்ட மக்களிடமிருந்தும் ரிசல்ட்.
"ஆத்தா ஜெயிக்கணும் ,அஜித் படம் ஓடனும்,அன்றைக்குத்தான் எல்லாத்துக்கும் நல்ல காலம் பிறக்கும்" என்பது எங்கள் பக்கத்து நம்பிக்கை ரொம்ப நாளாக.
ஆத்தா வும் ஜெயிசாச்சி, மங்காத்தா வும் ஜெயிச்சாச்சி, இனி நல்ல காலம் தான்.
என்ன வயிதெரிச்சல் பிடிச்சவுக(SRI ) புலம்பல் ஜாஸ்தியாயிடும். என்ன செய்வது..?
சிறு தவறு...ஜாஸ்,அர்ஸ் ரெண்டு தியட்டர் களிலும் மொத்தம் 20 ஷோ (சனி,ஞாயிறு) டிக்கெட் புக் ஆகிவிட்டது, ஹவுஸ்புல். டிக்கெட் விலை 120 , 150 .
ரசிகர் மன்றம் இல்லை, என்ன ஆகுமோ என ஆசையுடன் எதிர்பார்த்த நிறைய பேர் பேதியாகி கிடப்பதாக சேதி.
@ vivek kayamozhi
well said
//ரசிகர் மன்றம் இல்லை, என்ன ஆகுமோ என ஆசையுடன் எதிர்பார்த்த நிறைய பேர் பேதியாகி கிடப்பதாக சேதி
ரசிகர்கள் இதயத்தில் இருப்பவருக்கு மன்றம் எதற்க்கு? எங்க ஊரில் ஒரு பேனரில் இருந்த வாசகம் ...
"நாங்கள் மன்றங்களை மட்டும்தான் கலைத்துள்ளோம் , எங்கள் மனங்களை அல்ல"
இதே மனநிலையில்தான் எல்லா தல ரசிகனும் இருந்திருக்கிறான்... அரசியலில் இறங்கி பதவிகளை பிடிக்க வேண்டும் என்பதற்காய் மன்றத்தில் இணைந்தவர்கள் இல்லை நாங்கள் என்பதை அழுத்தமாய் நிரூபித்திருக்கிறார்கள்...
கரூர்ல 2 தியேட்டர்ல படம் ரிலீஸ்.. டிக்கெட் வாங்குறதுக்குள்ள தாவு தீந்திடுச்சு. அஜீத்க்கு இது மாஸ் ஹிட்தான். அதுல சந்தேகமே இல்ல. வாலிக்கு அப்புறம் தலயோட வில்லத்தனத்தை ரசிச்சு பார்த்தேன். அய்யயோ உங்களை எல்லாம் கொஞ்ச நாளைக்கு கைல புடிக்க முடியாதே..
அணுகுண்டா..? தளபதி ரசிகர்களே தேவலாம் போல இருக்கே.. உங்க பில்ட்-அப் தாங்க முடியலயே.. நீங்க சொல்றதுல ஒன்னே ஒன்னு தான் கரெக்ட்.. அஜீத்தோட நடிப்பு.. சும்மா பட்டய கிளப்பி இருக்காரு.. ஆனா படம் படு மொக்கை.. சென்னை-ல இப்பவே காத்து வாங்க ஆரம்பிச்சிடிச்சு.. நேத்தே டிக்கெட் ஈசியா கிடைச்சிது. படம் ஹிட், அதில் சந்தேகம் இல்ல. ஆனா கோ அளவுக்கெல்லாம் ஹிட் கிடையாது. ஆவரேஜ் ஹிட்..
// அந்த சேவாக் இன்னும் டபுள் செஞ்சுரி போடவில்லை ,//
Unga Vaai mugurtham.. ippa Shevak'um double cntury pottachu..
Post a Comment