இன்றைய தேதியில் தமிழ்
நாட்டு அரசியலில் ஹாட் டாபிக் தூக்கு தண்டனைதான் .... எனக்கு அவர்களை தூக்கில் போடணுமா
வேண்டாமா என்று அரசுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு அனுபவமோ அறிவோ கிடையாது , ஆனால் ஒரு விஷயம் மட்டும் எனக்கு இந்த தண்டனை விஷயத்தில்
உறுத்தலாகவே இருக்கிறது , அது மனிதனை
கொல்லும் உரிமை இன்னொரு மனிதனுக்கு இருக்கிறதா? என்பதே .... ஆண்டவனின் படைப்பில் எல்லா உயிர்களும் ஒன்றே
, எல்லா மதங்களும் இந்த சித்தாந்தத்தையே
அடிப்படையாக கொண்டவை , எந்த மதமும்
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொல்லுவதை ஏற்றுக்கொள்வதில்லை , ஒருவன் யாராக இருந்தாலும் அவனை துன்புறுத்துவது என்பது
கண்டிப்பாக பாவமான செயல்தான், அப்படி
இருக்க ஒருவன் பாவம் செய்து விட்டான் என்பதற்காக அவனை கொல்லுவதும் ஒரு பாவம்தானே , அந்த பாவத்தை போக்க அவனை கொன்றவர்கள் என்ன செய்வார்கள்...
சரி , இனிமேல் யாரும் இந்த மாதிரியான
கொடுஞ்செயல்களை செய்ய அஞ்சுவார்கள் என்பதற்காக தூக்கு தண்டனையை நடமுறையில் வைத்திருக்கிறார்கள்
என்றாள் , 150 வருடங்களாக நடைமுறையில்
இருக்கும் இந்த சட்டத்தால் இன்று குற்றங்கள் குறைந்து ஒன்றும் இல்லாமல் போயிருந்திருக்க
வேண்டுமே... மரண தண்டனை நடைமுறையில் இருக்கும் எல்லா நாடுகளிலும் குற்றங்கள் இன்னமும்
தலைவிரித்தாடுகிறதே , மரணதண்டனையே
இல்லாத ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் குற்றங்கள் பெரிய
அளவில் நடப்பதில்லையே .... நீங்கள் குற்றம் குறையவேண்டும் என்பதற்காகத்தான் மரணதண்டனை கொடுக்கிறோம்
என்று வாதிட்டீர்கள் என்றாள் , I am sorry , குற்றங்களை ஒரு போதும் தண்டனைகளால் குறைத்து விட முடியாது , குற்றங்கள்
பல்கி பெருகி போய் இருக்கும் நம் பாரத நாடே இதற்க்கு
ஒரு பெரிய சாட்சி.... நன்றாக சிந்தித்து பாருங்கள்
லட்சங்களில் சம்பாதிக்கும் உயர் நடுத்தர
வர்க்கமோ , இல்லை ஆயிரம் ஆயிரமாய் சம்பாதிக்கும்
நடுத்தர வர்கமோ பெரும்பாலும் குற்றங்களில் ஈடுபடுவதில்லை , அடுத்த வேளை கஞ்சிக்கு வழி இல்லாதவனும் , தன் வாழ்வை ஓட்ட நிரந்த வருமானம் இல்லாதவனுமே இன்று
நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு காரணம் , அவர்களின் இந்த நிலைக்கு காரணம் இன்றைய அரசாங்கமே , முதலில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள்
, ஊழல் , லஞ்சம் என்று மேல்மட்டத்தில் நீங்கள் செய்யும் குற்றங்களை
குறைத்து , நம் மக்களின் வாழ்வாதாரத்தை
உயர்த்துங்கள் , பிறகு பாருங்கள் நீங்களே
காசு கொடுத்து கொலை செய்யுங்கடா என்று சொன்னாலும் ஒருவனும் வரமாட்டான் ...
கீழே இருக்கும் இந்த மூன்று
படங்களையும் பார்த்ததில் இருந்து எனக்கு மோஷன் நிக்காம போய்கிட்டு
இருக்கு , இந்த பிளக்ஸ் , மற்றும் கட் அவுட்களை டிசைன் பண்ணுண அந்த பதினொரு பேர் கொண்ட குழு யாருன்னு தெரியவில்லை , டேய் உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட வெக்கமே கிடையாதாடா? ரோஷம் கெட்ட பன்னாடைகளா... உங்களையெல்லாம்
நடுத்தெருவுள நிக்கவுட்டு மனுஷ கழிவாலயே அடிக்கணும்டா? இப்படியெல்லாம் அவனுங்களை திட்டணும்னு ஆசையாத்தான் இருக்கு ஆனா நாளைக்கே நம்ம
தமிழ்நாட்டின் “அன்னா ஹசாரே” முதலைமச்சர் ஆகிட்டாருணா இதை காரணம் காட்டியே என்னை புடிச்சி தூக்குள போட்டிருவானுங்கன்னு பயமா இருக்கு... என்னமோ போங்கடா வடிவேலு இல்லாத குறையை நீங்கதாண்டா தீர்த்து வைக்கிறீங்க?…
கொசுறு:
காந்திக்கு வந்த சோதனைய பாருங்க மக்களே ...
அப்பறம் மக்களே தீபாவளிக்கு முதல் நாள் சாயந்திர மனநிலையில் இன்று இருக்கிறேன்....
நாளைக்கு தலையோட மங்காத்தா
படம் ரிலீஸ் ஆகுது .... படம் ரிலீஸ் ஆகுறவரைக்கும் எதுவும் எழுதக்கூடாதுன்னு விரதம் இருக்கேன், தல
படம் ரிலீஸ் ஆக போவுதுன்னு சொன்னாலே மனசு ஒரு கொண்டாட்ட நிலைக்கு
வந்தாலும் ஓரத்துல லேசா திக்கு திக்கு அடிச்சிக்கிட்டு கெடக்கு... எக்ஸாம் ரிசல்ட்
பாக்க போற மாதிரி... அதனால நாளைக்கு முதல் ஆளா ரிசல்ட் பாத்திட்டு, ரிசல்ட் என்ன ஆச்சுன்னு
பதிவுல விலாவரியா சொல்லுறேன்... தல ரசிகர்களே படத்தை மிஸ் பண்ணாம பாருங்க , அதுவும் end credit மிஸ் பண்ணிடாதீங்க , தல படத்தில் முதல் முறையா behind the scenes போட போறாங்க ... பாருங்க என்ஜாய் பண்ணுங்க ...
8 comments:
தளபதிக்கு முருகன் கெட்அப் சூப்பர். என்ன கோவணத்தையும், மாட்டி இருந்தா நல்லா இருந்திருக்கும்...
அப்படியே டாக்குடருக்கு ரெண்டு பக்கமும் வள்ளி தெய்வானை மாதிரி சங்கீதாவையும் , சங்கவியையும் நிக்க வச்சிருந்தா இன்னும் டாப்பு டக்கரா இருக்கும் ...
Sri anne , nandrinne. Ungalukku intha post pidikkalaina enna thittunga. Don't scold thala, hope u understandSri anne , nandrinne. Ungalukku intha post pidikkalaina enna thittunga. Don't scold thala, hope u understand
சிவனுக்கு அவங்க அப்பாவ போட்டிருக்கலாமே?
padam pakka thala rocz
பாஸ் மங்காத்தா விமர்சனம் சீக்கிரம் போடுங்க உங்கள் விமர்சனத்திற்காக வெய்டிங்...!
என்ன தல... டாக்டரு படத்தை வச்சு காமெடி பண்ணீட்டு இருக்கீங்க.. அடுத்த பதிவா நான் மங்காத்தா ரிசல்ட் தானே உங்க கிட்டே இருந்து நான் எதிர்பார்த்தது.... சீக்கிரம் ஆகட்டும்..
Post a Comment