Followers

Copyright

QRCode

Monday, July 25, 2011

உலக சினிமாக்களும் , உள்ளூர் எழுத்தாளனும்


நேற்று ஒரு பிரபல டீவியில் ஒரு பிரபல எழுத்தாளரின் பேட்டி  ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது .... என் கெட்ட நேரம் அதை என் மனைவியோடு சேர்ந்து பார்க்க வேண்டியதாகிவிட்டது .... அதில் அந்த பிரபலம் தன்னை ஒரு மிஸ்டர் கிளீன் என்பதை போல பேட்டி கொடுத்து கொண்டு இருந்தார் .... அவர் தளத்தில் சென்று படித்தால் தான் ஒரு பொம்பளை பொறுக்கி , தண்ணி வண்டி என்று தன்னை பற்றி மிக உயர்வாக எழுதி வைத்திருப்பார் ... கேட்டால் நான் எதர்க்கும் அஞ்சாதவன் , யாருக்கும் பயப்படாதவன் , என் வாழ்க்கை ஒரு சரோஜா தேவி புத்தகம் என்றெல்லாம் பெருமை பீத்தி கொள்வார்  ... ஆனால் நேற்று அந்த ஊடகத்தில் தன்னை தமிழகம் முழுவதும் நிறைய பேர் பார்ப்பார்கள் என்று நினைத்ததாலோ என்னவோ , அவர் மேற்கூறிய "பெருமைகளை" அதிகம் பீற்றிக்கொள்ளவில்லை .... தன்னை ஒரு "மிஸ்டர் கிளீன்" என்று காட்டி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே அதிகம் யோசித்து யோசித்து நிதானமாக பேசிக்கொண்டிருந்தார் ... அதை பார்த்த என் மனைவி எவ்வளவு நல்லவரா இருக்காரு யாருங்க இவரு என்று கேட்டாள்  .. நான் உடனே நெட்டில் தேடி இந்த படத்தை அவளுக்கு காட்டினேன் ...


அதை பார்த்து விட்டு , இனிமேல் பிளாக் எழுதிரேன் , கவிதை எழுதுறேன்ன்னு பேப்பரையும் பேனாவையும் எடுத்தீங்க கைய உடச்சி அடுப்புல சொருக்கிடுவேன் ஜாக்கிரதை என்று என்னை மிரட்டி விட்டு டீவி யில் தெரிந்த அந்த நல்லவரை காரி உமிழ்ந்து விட்டு சென்றுவிட்டாள் ...

இந்த மாதிரி ஆட்களால்தான்  பிளாக் எழுதுறவன்கூட வெளியில தன்னை ஒரு எழுத்தாளன் என்று பெருமையாய் சொல்லிக்கொள்ள முடிவதில்லை ...  

  

சென்ற வாரம் இரண்டு திரைபடங்கள் பார்க்க நேர்ந்தது ... இரண்டும் கொரிய திரைபடங்கள் .... இப்பொழுதெல்லாம் தியேட்டருக்கு சென்று அதிகம் படங்கள் பார்க்கமுடிவதில்லை ... நான் தியேட்டரில் சென்று கடைசியாக பார்த்த படம் எத்தன் .... அதனால்தான் கொஞ்சம் செலவு செய்து ஒரு எல்‌சி‌டி டீவி , ஒரு ஹோம் தியேட்டர் வாங்கி வீட்டிலேயே ஒரு மினி தியேட்டர் எஃபக்ட் உருவாக்கி வைத்திருக்கிறேன் ... அதில் தமிழ் படங்களை பார்ப்பதை விட ஆங்கில மற்றும் கொரிய படங்களை பார்க்கும் பொழுது அதன் எஃபக்ட் நன்றாக தெரிகிறது ,,, நாம் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் பின்தங்கிதான் இருக்கிறோம் என்று நினைக்கிறேன் ...  சரி மெயின் மேட்டருக்கு வருவோம் .. அந்த இரண்டு படங்கள் I  saw the devil மற்றும் someone special …


Mind blowing என்று சொல்லுவார்களே அதை அனுபவித்தேன் இந்த இரண்டு படங்களையும் பார்த்தபொழுது ...  I saw the devil , ஒருவகையான பழிவாங்கும் கதை , சைக்கோ படம் என்று கூட சொல்லலாம் .... நம்மூர் படங்களில் எல்லாம் ஒரு டயலாக் வரும் , நீ அவ்வளவு சாதாரணமா சாக கூடாதுடா... அணு அணுவா துடிதுடிச்சி சாவனும் , 1990 காலகட்டத்தில் பெரும்பாலும் எல்லா படங்களிலும் இந்த வசனம் வரும் ... இந்த வசனம் வரும்போதெல்லாம் அணு அணுவாக சாகடித்தல் என்றாள் என்ன? அது எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசையாக இருக்கும்  ஆனால் எந்த படத்திலும் அந்த அணு அணுவான சித்திரவதையை பார்க்க முடியவில்லை ... அந்த குறை I saw the devil பார்த்த பொழுது போய் விட்டது... 

கர்ப்பிணி காதலியை ரேப் செய்து அவளை துடிக்க துடிக்க துண்டு துண்டாக வெட்டி சாகடித்த ஒரு சைக்கோவை தன் காதலி எப்படி சாகும் பொது சித்திரவதையை அனுபவித்தாலோ அதே போல அவனும் வாழும் போதே அதே சித்திரவதை அனுபவிக்க வேண்டும் என்று காதலன் சபதம் செய்து   அவனை துரத்தி துரத்தி டார்ச்சர் செய்வதே படம் .... இதில் காதலன் ஒரு போலீஸ் , அந்த சைக்கோ அவனை விட கெட்டிக்கார கிரிமினல் என்று கதாபாத்திரங்கள் அமைந்தால்  சுவாரஸ்யத்திர்க்கு கேட்கவா வேண்டும் ... அதகளபடுத்தி இருக்கிறார்கள் ... 

குறிப்பாக வில்லன் ஒவ்வொரு இடத்திற்க்காய் சென்று ஏதாவது ஒரு பெண்ணை மிரட்டி அவளை அனுபவித்து கொண்டிருக்கும் போது  ஹீரோ இடையில் வந்து அவனை நையபுடைப்பது , உண்மையான பழி வாங்குதல் என்றாள் அது இதுதான் என்று சபாஷ் போட வைக்கிறது ... ஆனால் ஒருகட்டத்தில் வில்லன் எப்படி இவன் நாம் போகும் இடத்திற்கெல்லாம் வருகிறான் என்று சந்தேகபட்டு , விஷயத்தை கண்டுபிடித்து (அது என்ன விஷயம் என்பதை படத்தில் பாருங்க, அதை இங்கே சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் குறைந்து விடும்) அதை அழித்து ஹீரோவின் கண் பார்வையில் இருந்து  தப்பி விடுகிறான் ... அதன் பின்னர் என்ன நடக்கிறது ஹீரோ எப்படி வில்லனை பழி வாங்கினான் என்பதை படு விறுவிறுப்பாக சொல்லி இருப்பார்கள்...


இந்த படத்தின் மிக பெரிய பிளஸ் சைக்கோ வில்லனாக நடித்திருப்பவரின் அலட்டலான நடிப்பு ... இவரின் நடிப்பிற்காகவே மிஸ் பண்ணக்கூடாத படம் இது ... குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் ரத்தக்களரியாய் , வாயில் சிகரெட் புகைத்து கொண்டே ஸ்டைலாக நடந்து வந்து போலீஸிடம் சரணடைய வரும் காட்சி ஒரு சின்ன உதாரணம் ... எனக்கு தெரிந்து ரஜினியால்கூட அவ்வளவு ஸ்டைலாக அந்த காட்சியில் நடித்திருக்க முடியாது .... செம மாஸ்.... கூடிய விரைவில் அதிமேதாவி கவுதம்மேனன் இயக்கத்தில் இந்த படம் தமிழில் சிதைக்கபடலாம் ஸாரி எடுக்கபடலாம் .. ஆனால் அப்படி எடுத்தால் அந்த வில்லன் கதாபாத்திரத்தில் யார் நடிப்பது ... என்னிடம் கேட்டால் நான் சொல்லும் ஒரே ஒரு நடிகன் ரஜினி மட்டும்தான் .... அஜீத் கூட நெருங்கி வருவார் .. ஆனால் ரஜினிதான் அதை பெட்டராக செய்ய முடியும் ...





இரண்டாவது someone special , இது I saw the devil படத்திற்க்கு முற்றிலும் எதிரானது ...  a romantic comedy Korean film… நாயகன் ஒரு பேஸ் பால் வீரன் ... அவன் காதலி அவனை விட்டு ஏதோ சில காரணங்களுக்காய் பிரிந்து விடுகிறாள் ... இப்படிதான் படம் ஆரம்பிக்கிறது ....  அவனுக்கு கேன்சர் வேறு வந்து விடுகிறது , டாக்டர் இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே நீங்கள் உயிரோடு இருக்க முடியும் என்று சொல்கிறார் , அவனுக்கு சாவதற்குள் உண்மையான காதல் என்றாள் என்னவென்று அனுபவித்துவிட வேண்டும் என்று ஆசை .... அப்பொழுதுதான் அவனுக்கு ஒரு பெண்ணின் நட்பு கிடைக்கிறது ... அவள் யார்? அவள்மூலம் இவன் காதல் என்றாள் என்ன்வென்று தெரிந்து கொள்கிறானா? இன்னும் மூன்று மாதத்தில் இறக்க போகும் இவனை அவள் காதலிப்பாளா? இப்படி எல்லா கேள்விகளுக்கும் சிரிக்க சிரிக்க பதில் சொல்லியிருக்கிறார்கள்...  இடையில் சில காட்சிகளில் சிந்திக்கவும் வைத்திருப்பார்கள் ...

மிக மிக சோகமாக ஆரம்பிக்கும் படத்தை தடாலென்று இயக்குனர் காமெடி டிராக் பிடித்து கடைசி வரை சோகம் கலையாமலே படத்தை காமெடி டிராக்லேயே பயணப்பட வைத்திருப்பார்(?......) ஒரு காட்சியில் நாயகன் நாயகியிடம் உன் வீடு எங்கு இருக்கிறது என்று கேட்பான் ... நாயகி உன் வீட்டில் இருந்து சரியாக 32 அடியில் என் வீடு இருக்கிறது என்று சொல்லுவாள் ... அதெப்படி சரியாக 32 அடி என்று உனக்கு தெரியும் என்று அவன் கேட்கும் போது வரும் ஃபிளாஷ்பேக் காட்சி அருமை ... பின்னர் இதே 32 அடி லாஜிக்கை கதையின் மிக முக்கிய திருப்பத்திற்க்கு பயன்படுத்தி இருப்பார்கள் ...



அதே போல நாயகன் நாயகியிடம் உனக்கு பேஸ்பாலில் பிடித்தது எது என்று கேட்க , அவள் பந்தை பிடித்து அதை ஆடியன்ஸ் இருக்குக் கேலரியில் தூக்கி வீசினால் பார்பதற்க்கு வேடிக்கையாக இருக்கும் என்று சொல்ல , நாயகன் தான் சாக போவதற்க்கு முன் தான் ஆடும் கடைசி ஆட்டத்தில் முக்கியமான கட்டதில் பந்தை  கேட்ச் பிடித்து பேட்ஸ்மேனை அவுட் ஆக்காமல் , அதை ஆடியன்ஸ் மீது தூக்கி எறிவது ரசனையான காட்சி ...

இதே போல இன்னும் பல சுவாரஷ்யாமான ரசனையான காட்சிகளை படம் முழுவதும் அமைத்திருப்பார் இயக்குனர் ... வீட்டுக்கு வரும் திருடனுக்கு காசு கொடுத்து அனுப்பி வைப்பது , பாங்க் கொள்ளை அடிக்க வருபவர்களை காதல் பண்ணுங்கடா , வாழ்க்கை நல்லா இருக்கும் என்று அட்வைஸ் செய்து திருத்துவது என்று நிறைய அட போட வைக்கும் காட்சிகள் படம் முழுவதும் .... பீல் குட் மூவி பார்க்க பிடிக்கும் என்றால் இந்த படத்தை தவற விடாதீர்கள் .....

  
எனக்கு ரத்தக்களரியான த்ரில்லர் படங்கள்தான் பிடிக்கும் என்று சொல்லுபவர்கள் I saw the devil படமும் , இல்லை எனக்கு ரொம்ப சாஃப்ட்டான பீல் குட் படங்கள்தான் பிடிக்கும் என்று சொல்லுபவர்கள் someone special படமும் தாராளமாய் பாருங்கள் ... என்னை போல இரண்டுமே பிடிக்கும் என்பவர்கள் இரண்டையும் பார்க்கலாம் ,

ஆனால் தயவு செய்து மாற்றி  பார்த்து விடாதீர்கள் , என்னை நீங்கள் அசிங்க அசிங்கமாக திட்ட வாய்ப்பு அதிகம்....  இரண்டு படங்களும் தங்களுடைய களத்தில் அந்த அளவு முத்திரை படித்த படங்கள் ....  

19 comments:

Anonymous said...

/// நான் உடனே நெட்டில் தேடி இந்த படத்தை அவளுக்கு காட்டினேன்///ஹாஹஹா நல்ல காரியம் செய்தீர்கள் ))

Katz said...

Someone special படத்தை நான் பார்த்து விட்டேன். I saw the devil படத்தை இனி தான் பார்க்க வேண்டும்.

ILLUMINATI said...

It's been a while since I saw korean films. Both the films are on my to-see list. Watch "Old Boy". The villain of 'I saw the devil' is the hero there. A stunning film. A film that redefines the very word 'vengeance'. That, to me, is the ultimate vengeance film.

நிரூபன் said...

இணைய எழுத்தாளர்களுக்கே கேடு விளைவிக்கும் நபர் பற்றிய காமெடி கலந்த காத்திரமான அலசலை ரசித்தேன்.

கொரிய மொழிப் படம் பற்றிய பார்வையும், எதிர்காலத் தமிழ் சினிமாவில் இடம் பெறும் அதன் தாக்கமும்... வித்தியாசமான அலசலாக வந்திருக்கிறது.

பாலா said...

"""இந்த மாதிரி ஆட்களால்தான் பிளாக் எழுதுறவன்கூட வெளியில தன்னை ஒரு எழுத்தாளன் என்று பெருமையாய் சொல்லிக்கொள்ள முடிவதில்லை ...""""


எவ்வளவு சுலபமா ஒரு எழுத்தாளனை விமர்சனம் பண்ணிடுறீங்க முந்தா நாள் எழுத வந்த நீங்க . உங்களுக்கு கூசலையா?

"ராஜா" said...

@ கந்தசாமி.

ஹி ஹி .. நன்றி

"ராஜா" said...

@ Katz

பாருங்கள் நண்பரே .. அருமையான படம் ....

"ராஜா" said...

@ ILLUMINATI

மச்சி நீ இன்னும் பாக்கலையா?

//Watch "Old Boy".

இன்னைக்கே டவுண்லோட் பண்ண ஆரம்பிச்சிட வேண்டியதுதான் ...

"ராஜா" said...

@ நிரூபன்

//இணைய எழுத்தாளர்களுக்கே கேடு விளைவிக்கும் நபர் பற்றிய காமெடி கலந்த காத்திரமான அலசலை ரசித்தேன்.

நன்றி நண்பரே நீங்கள் ரசித்தமைக்கு ...

"ராஜா" said...

@ பாலா

முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும் .. என்னையும் முந்தாநாள் வந்த எழுத்தாளன் என்ற அளவிற்காவது ஏற்றுக்கொண்டாமைக்காக .... அப்பறம் கண்டிப்பாக நானெல்லாம் எழுத்தாளனே கிடையாது ... அது ஒரு பெரிய தவம் , மனதில் தோன்றுவதை எல்லாம் கிறுக்குவது எழுத்தாக்காது ... நீங்கள் உங்கள் நண்பருடன் அடிக்கும் அரட்டையை நான் பிளாக் தொடங்கி எழுத்து வடிவில் தருகிறேன் அவ்வளவே ....இது வெறும் அரட்டை மட்டுமே ...


அப்பறம் ரஜினியை கமலும் , கமலை ரஜினியும் , மன்மோகனை அத்வானியும் , அத்வானியை மன்மோகனும் மட்டுமே விமர்சித்து கொண்டிருக்கும் இந்த சமூகத்தில் , அந்த பிரபல எழுத்தாளரை ஞானி , ஜெயகாந்தன் போன்ற இன்னொரு பிரபல எழுத்தாளர் மட்டுமே விமர்சிக்க வேண்டும் என்ற உண்மை புரியாமல் விமர்சித்து விட்டேன் ... மன்னிக்கவும்

ILLUMINATI said...

இல்ல மச்சி. கொரிய படங்கள் நிறைய பார்த்துகிட்டு இருந்ததால கொஞ்சம் கேப் விடுவோம்னு விட்டது, பெரிய கேப் ஆயிடுச்சு. திரும்ப எல்லாத்தையும் பார்க்க ஆரம்பிக்கணும்.

//எவ்வளவு சுலபமா ஒரு எழுத்தாளனை விமர்சனம் பண்ணிடுறீங்க முந்தா நாள் எழுத வந்த நீங்க . உங்களுக்கு கூசலையா?//

ஏன்,அவர் மனுஷன் கிடையாதா என்ன?முதல்ல, எழுத்தாளன மனுசனா பார்த்து பழகுங்க. எழுத்தாளர்னு சொன்னா அவர் அவ்வளவே.ஒரு எழுத்தாளர்.அதை முதல்ல புரிஞ்சுக்கங்க.

ILLUMINATI said...

@ பாலா: பாஸ்,கருத்து சுதந்திரம்னு ஒண்ணு இருக்காம்.கேட்டுருக்கீங்களா?

"ராஜா" said...

//பாஸ்,கருத்து சுதந்திரம்னு ஒண்ணு இருக்காம்.கேட்டுருக்கீங்களா?

ஒருவனை பற்றிய கருத்தை அவனை விட பெரிய ஆட்கள்தான் சொல்லவேண்டும் என்று சொல்லி இருக்கிறாரே நண்பா ....

நமக்கு அமைதியா சுத்தி நடக்கிறத பாக்க மட்டுமே உரிமை உண்டு ... கருத்தெல்லாம் சொல்லபடாதாம் ....

ILLUMINATI said...

//ஒருவனை பற்றிய கருத்தை அவனை விட பெரிய ஆட்கள்தான் சொல்லவேண்டும் என்று சொல்லி இருக்கிறாரே நண்பா .... //

ச்சே ச்சே..
எங்க சொன்னாரு?
அதை மாதிரி எவனாவது சொன்னா அதையும் ஒத்துக்க மாட்டானுக.காழ்ப்புணர்ச்சினு சொல்லிடுவாணுக.

"ராஜா" said...

// காழ்ப்புணர்ச்சினு சொல்லிடுவாணுக.

அதுவும் சரிதான் ... இப்படி பேசி பேசியேதான பொழப்ப ஒட்டணும் ...

சரி அப்படி யாருமே விமர்சிக்க கூடாதுன்னா , இவரு என்ன கடவுளா? கடவுளையே கிழிச்சி நார் நாரா தொங்க வீட்டுக்கிட்டு இருக்கானுக ...

முதுகுல அழுக்கு இருந்தாத்தான் சொரிய தோணும் ... முதுகுல அழுக்கில்லாதவன் எதுக்கு சொறிய போறான் ...

Karthikeyan said...

ஏன் எல்லாரும் டென்சன் ஆகுறீங்க. சொன்ன சொல்லிட்டு போறார் விடுங்கப்பா.. அப்புறம் டீடெய்லா போய் பின் நவீனம், சைடு நவீனம் உளறிகிட்டு இருப்பாங்க. ராஜா.. நீங்க சொல்ல வந்ததை கரெக்ட்டா சொல்லீட்டுங்க. அது போதும்.

//அதை பார்த்து விட்டு , இனிமேல் பிளாக் எழுதிரேன் , கவிதை எழுதுறேன்ன்னு பேப்பரையும் பேனாவையும் எடுத்தீங்க கைய உடச்சி அடுப்புல சொருக்கிடுவேன் ஜாக்கிரதை என்று என்னை மிரட்டி விட்டு டீவி யில் தெரிந்த அந்த நல்லவரை காரி உமிழ்ந்து விட்டு சென்றுவிட்டாள் ...
// உங்க வீட்லயுமா??

"ராஜா" said...

@ karthikeyan
ella veetulaiyum ella wife um ippadithan iruppankalo?

Unknown said...

முதல் தடவை வருகிலும் உங்கள் எழுத்தை ரசித்தேன்..மீண்டும் தொடர்வேன்!!

"ராஜா" said...

//முதல் தடவை வருகிலும் உங்கள் எழுத்தை ரசித்தேன்..மீண்டும் தொடர்வேன்!!

நன்றி நண்பரே ....

LinkWithin

Related Posts with Thumbnails