தமிழ் சினிமாவுக்கு
இருக்கும் பெரிய சாபமே நடிக்க தெரியாத நடிகர்களின் கையில் எப்பொழுதும் அது மாட்டி
கொண்டு அல்லாடுவதே .... நடிப்பு என்பது என்னை பொருத்தவரைக்கும் நான் நடிக்கிறேன்
என்பதை பார்பவர்களுக்கு புரியவைக்க வேண்டி கஷ்டபட்டு நடிப்பதோ , இல்லை வித விதமான
கெட்டப்புகளில் ஸ்கிரீனில் வந்து ஒவ்வொரு கெட்டப்புக்கும் வித்தியாசமான குரலில்
பேசி நடிப்பதோ , இல்லை தன்னை
முற்றிலும் மாற்றி கொண்டு நடை உடை பேச்சு தோற்றம் என்று அனைத்தையும் தழைகீழாய்
மாற்றி தேசிய விருதை குறிவைப்பதோ இல்லை ....
இயல்பாய் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் வாழ்ந்து காட்டுவதே ...
அப்படி இயல்பான நடிப்பை வெளிபடுத்தும் திறமை வாய்ந்த நடிகர்கள் தமிழ் சினிமாவில்
மிக மிக குறைவு ... எனக்கு தெரிந்து பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் நாடக தன்மை சிறிதும் இல்லாமல் இயல்பாய்
நடித்த ஒரே நடிகன் பாலையா மட்டுமே ... ஒரு சில எம்ஜிஆர்
படங்களை தவிர்த்து பார்த்தால் நாகேஷ்
அவர்களையும் அந்த லிஸ்டில் சேர்த்து கொள்ளலாம் .... அதன் பின்னால் அந்த லிஸ்டில்
பெரிய தேக்கம் இருந்து வந்தது நீண்ட நாட்களுக்கு... இரண்டு நடிகர்கள் நுழையும் வரை .. ஒருவர் ரகுவரன் , இன்னொருவர் கார்த்திக் ....
சினிமாவில் நுழைய மிக
எளிதான வழி நடிகரின் மகனாக இருப்பதே ... கார்த்திக் அவர்களும் சினிமாவில்
அப்படிதான் நுழைந்தார் , அவர்
தந்தை முத்துராமன் மூலமாய் ... முதல் படமே மிக பெரிய வெற்றி பெற்ற அலைகள்
ஓய்வதில்லை... தான் முதல் படத்திலேயே யார் இந்த பையன் என்று அனைவரையும்
கவனிக்க வைத்திருப்பார் ... அதுவும்
அம்மா சென்டிமெண்ட் , காதல் காட்சிகள் , வில்லனிடம்
அவமானப்படும் காட்சிகள் என்று எல்லா வகையான காட்சிகளிலும் ஒரு தேர்ந்த நடிகனின் நடிப்பு இருக்கும் ... இன்றும் அந்த படத்தை
எப்பொழுதாவது பார்க்க நேர்ந்தால் எனக்கு இது ஆச்சர்யமாக
தெரியும்.... எனக்கு பதினாறு வயதினிலே
கமலை விட (கவனிக்க கமல் ஒரு சிறந்த நடிகன் இல்லை என்று நான் சொல்லவில்லை) அலைகள் ஓய்வதில்லை கார்த்திக் சிறந்த நடிகனாக தெரிய காரணம் அந்த
இயல்பான நடிப்பே ...
அதன் பின்னர்
அவருக்கு சில வருடங்களுக்கு சொல்லி கொள்ளும்படியான படம் இல்லை ... அவருக்கு
அடுத்து பெரிய பிரேக் கொடுத்த படம் நினைவெல்லாம் நித்யா... அந்த படங்களின் பாடல்கள் எல்லாமும்
பெரிய ஹிட் குறிப்பாக பணி விழும் மலர்வணம் என்ற பாடல் இப்பொழுது
கேட்டாலும் சொக்க வைக்கும் பாடல் ... இந்த படத்தின் மூலமாய் கார்த்திக் காதல் இளவரசனாக புது பரிமாணம் பெற்றார் ... 85-90 காலகட்டங்களில் அவர்
நடித்த பெரும்பாலான படங்கள் காதல் படங்களே .. கோபுர வாசலிலே , மௌன
ராகம் போன்ற படங்கள் அவருக்கு பெரிய பேரை பெற்று கொடுத்தன
... இந்த படங்களை பார்க்கும் பொழுது எனக்கு கார்த்திக் கண்ணுக்கு தெரிவதில்லை , காதல்
வயபட்ட இளைஞன் ஒருவனே தெரிவான் ... ஒரே ஒரு காட்சி கோபுர
வாசலிலே படத்தில் பானுபிரியா கார்திக்குக்கு
கேசட் அனுப்பி வைப்பார் ... அதை கார்த்திக் போட்டு
கேட்கும் காட்சியில் அவர் காட்டும் முகபாவங்கள் no chance அது அவரால் மட்டுமே முடியும் .... பரபரப்பு ,சந்தோஷம் , குழப்பம் , அமைதி என்று பல உணர்ச்சிகளை ஒரு சேர வெளிபடுத்தி
இருப்பார் இயல்பாய் ...
மௌனராகம் படத்தில் அவர் இருபது நிமிடங்கள் மட்டுமே வருவார் .. ஆனால் படம் பார்த்து
முடிக்கும் பொழுது நம் மனசு முழுவதும் அவர்தான் இருப்பார் ... சச்சின் என்று ஒரு படம் , விஜய்
நடித்திருப்பார் .... அந்த படத்திர்க்கு ஆனந்த
விகடன் விமர்சனம் இவ்வாறு எழுதி இருந்தார்கள் ... மௌன ராகம் கார்த்திக் போல
நடிக்க விஜய் முயற்சி செய்திருக்கிறார்.... திரையில் அதை பார்க்கும்
பொழுது விஜய் இனிமேல் இப்படி முயற்சி செய்யாமல் இருப்பது நல்லது என்று தோன்றுகிறது
என்று .... எனக்கும் சச்சின் படம் பார்க்கும் பொழுது கார்த்திக் ஞாபகம்தான் வந்தது ... அந்த மாதிரியான வேடங்களில்
வெளுத்து கட்டுவார் கார்த்திக் .... அவரின் குறும்பான நடிப்பு வேறு யாருக்கும் கண்டிப்பாக
கிடையாது .... விஜய் பல முறை அப்படி நடிக்க முயன்று தோற்று இருக்கிறார்... காரணம் மற்றவர்கள் குரும்பை வலிந்து முகத்தில் வெளிபடுத்துவார்கள் ,, ஆனால்
கார்த்திக் முகத்தில் இயல்பாகவே அது வெளிப்படும்....
அடுத்து தமிழ் சினிமா கிராமத்து கதைகள்
பக்கம் தன் பார்வையை திருப்பியது .... நிறைய படங்கள் கிராமத்து
கதையில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்று எல்லாரும் கிராமத்து கதையாக எடுத்து கொண்டிருந்த நேரம். கார்த்திக் நடித்து வெளிவந்த கிராமத்து படம்தான் கிழக்கு வாசல் .... எனக்கு தெரிந்து கிராமத்து
கதையில் ஹீரோ பேண்ட் போட்டு நடித்த முதல் படம் இதுதான் என்று நினைக்கிறேன் ... கிராமத்து கதாநாயகன் என்றாலே வேட்டி அல்லது பட்டாபட்டி , இரண்டில்
ஒன்றைதான் ஹீரோ கட்டி இருப்பார் .... அப்படி நடித்தால்தான்
ரசிகன் மனதில் அந்த ஹீரோ கிராமத்தானாக எளிதில் பதிவான் ... அப்படி இல்லாமல் பேண்ட் போட்டு
நடித்தும் ஒரு கிராமத்து அப்பாவியாக பார்க்கும் ரசிகனின் மனதில் பதிவது என்பது அந்த காலகட்டத்தை பொறுத்த வரை
கொஞ்சம் கஷ்டமான காரியம் ... ஆனால் கார்த்திக் அவரின் இயல்பான நடிப்பினால் அதை
வெற்றிகரமாக செய்திருப்பார் ... அதன் பிறகு அவர் நடித்த பொண்ணுமணி , நாடோடி தென்றல் , பெரிய வீட்டு பண்ணைக்காரன் என்று நிறைய படங்களில்
கிராமத்து இளைங்கனாக நடித்திருப்பார் குறையே சொல்ல முடியாதபடி ...
கார்திக்கிடம்
இருக்கும் இன்னொரு பெரிய திறமை ,
அவரின் இயல்பான நகைசுவைதான் .... இது எல்லா கதாநாயகர்களுக்கும் அமைந்துவிடாது ....
எனக்கு தெரிந்து நகைசுவையில் கலக்கிய கதாநாயகர்கள் என்று பார்த்தால் கமல், ரஜினி தவிர்த்து கார்திக்கும் ஒருவர் ...
கவுண்டமணி கூட நடிக்கும் பொழுது மட்டும் சத்தியராஜ் மிண்ணுவார் .. ஆனால்
கார்த்திக் யாருடன் நடிக்கும் பொழுதும் காமெடியில் கலக்குவார் ... அந்த வகையில்
கார்த்திக் தன் முழு திறமையையும் வெளிபடுத்தி நடித்த படம் உள்ளத்தை அள்ளித்தா ...
அவரின் குறும்புதனமும் ,
நகைசுவையும் படம் முழுவதும் வெளிபட்டிருக்கும் .... அதே வருடத்தில் இதற்க்கு
முற்றிலும் வித்தியாசமாக ஒரு படம் நடித்திருப்பார் .. அது கோகுலத்தில் சீதை ....
அந்த ரிஷி கதாபாத்திரம் அவரை தவிர வேறு யாராலும் கண்டிப்பாக இவ்வளவு யதார்த்தமாக
செய்து இருக்க முடியாது ... இப்படி ஒரே வருடத்தில்
இரண்டு ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு கதாபாத்திரங்களை அதிலும் இவரை தவிர வேறு யாராலும் அந்த கதாபாத்திரங்களை
இவ்வளவு சிறப்பாக செய்ய முடியாது என்று அனைவரும் பாராட்டும் வகையில் நடிக்க இவரை விட்டால் தமிழ்
சினிமாவில் வேறு ஆளே கிடையாது
.... நவராசநாயகன் என்று தனக்கு தானே படம்
கொடுத்து கொண்டாலும் , அந்த
பட்டத்திர்க்கு முற்றிலும் தகுதியானவர் அவர் ...
ஆரண்யகாண்டத்தில் ஒரு
விஷயம் சொல்லி இருப்பார்கள் ... கமல் பிடிக்கும்
என்று சொல்லும் பெண்கள் எல்லாம் எளிதில்
மடங்கி விடுவார்கள் என்று ..... ஆனால் உண்மையில்
அப்படிபட்ட பெண்களுக்கு கமலை விட கார்திக்கைதான் மிகவும் பிடிக்கும் ... காரணம்
கமலுக்குள் இருக்கும் இயல்பான திமிர் கார்திக்கிடம் கிடையாது ... அவர்தான் தமிழ் சினிமாவின்
ஒரிஜினல் சாக்லேட் பாய் ...நிஜ கார்த்திக்குக்கு
வயசாகி இருக்கலாம் , ஆனால் மௌன ராகம் , கோபுர
வாசலிலே கார்த்திக் போட்டியே இல்லாமல் இன்னமும்
செல்லுலாய்டில் இளைமையோடுதான் இருக்கிறார் ...
இன்றும் அந்த படங்களை பார்க்கும் போது நம்மூர் பெண்களால் கார்திக்கின் மேல் காதல்வயபடாமல் இருக்க முடியாது ....
குறிப்பிட்ட ஜாதி ஓட்டை நம்பி அரசியலில் இறங்கி அவமானபட்டது , குடிக்கு அடிமையானது , இன்னும் சில சொந்த பிரச்சனைகள் என்று சில விஷயங்களில் அவர் சறுக்கி
இருந்தாலும் , இந்த 75 வருட தமிழ்
சினிமாவின் வரலாறு கார்த்திக் இல்லாமல் முழுமை பெறாது என்னும் வகையில் நடிப்பில்
தன் முத்திரையைபதிக்க செய்தது அவர் செய்த மாபெரும் சாதனை ...
(தமிழ் சினிமாவில் எனக்கு பிடித்த நடிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதால் இந்த பதிவை அப்பப்ப தொடரலாம் என்று நினைத்திருக்கிறேன்)
28 comments:
Yes, boss. Tamil cinema history cant be filled without the name of Karthik. He is the only talented actor in Tamil cinema after Kamal. But due to personal activities he has spoiled his film career.
http://www.karthikfan.blogspot.com/
தற்போதைய நடிகர்களை போல இல்லாமல் கார்த்திக்கின் சிறப்பம்சம் எந்த வேடமானாலும் அதில் வெளுத்துவாங்குவது தான். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசியும் (கோகுலத்தில் சீதை) வருவார், வாய் நிறைய வெற்றிலையோடும் (பொண்ணுமணி) வருவார், நாகரீக இளைஞராகவும் வருவார்(கோகுலத்தில் சீதை, உள்ளத்தை அள்ளித்தா, தொட்டா சிணுங்கி) பேட்டை ரவுடியாகவும் வருவார் (அமரன்). 80 களின் இறுதியில் அவர் இளம் தாடியுடன் நடித்தால் படம் வெற்றி என்ற செண்டிமெண்ட் பரவியபோது சினம் கொண்ட இளைஞனாக இவர் நடித்த இதய தாமரை, உரிமை கீதம், காளிச்சரண், அக்னி நட்சத்திரம், காதல் கீதம், போன்ற படங்கள் இன்றளவும் சிறப்பாகவே உள்ளன. அது போல சின்ன தம்பி, சின்ன கவுண்டர், என்று கிராமிய படங்கள் ஆதிக்கம் செலுத்திய 90களின் தொடக்கத்தில் அவர் நடித்த கிழக்கு வாசல், பொண்ணுமணி, முத்துக்காளை, சின்ன ஜமீன் (மனவளர்ச்சி குன்றிய வேடம்), படங்களில் கிராமத்து இளைஞனாகவே வாழ்ந்து காட்டியிருப்பார் கார்த்திக். இத்தனைக்கும் அவர் கான்வெண்டில் ஆங்கில மொழியில் படித்து வளர்ந்தவர். பின்னர் நகைச்சுவை படங்களும் மென்மையான உணர்வுகளி கொண்ட படங்களும் (நட்பு, காதல், பாசம்) வெற்றி பெற்ற 90 களின் பிற்பகுதியில் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, பிஸ்தா, மேட்டுக்குடி, கண்ணன் வருவான், அழகான நாட்கள் போன்ற நகைச்சுவை படங்களும், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூவேலி, தொட்டா சிணுங்கி, கோகுலத்தில் சீதை, நிலவே முகம் காட்டு போன்ற மென்மையான படங்களும் பெரு வெற்றி பெற்றன. அதுவும் கோகுலத்தில் சீதை, தொட்டா சிணுங்கி, பூவேலி போன்ற நடிப்பினை இப்போதைக்கு மற்றவர்களால் நினனத்துப் பார்க்க கூட முடியாது.
மிக நன்றாக வந்திருக்கிறது இந்த பதிவு.தொடர்ந்து நவரச நாயகனை பின் தொடர்ந்து வருகிறீர்கள்.நானும் அக்னி நட்சத்திரம் படம் எனது சிறு வயதில் பார்த்தது முதல் அவரின் ரசிகராக இருக்கிறேன்.ஒரு விஷயம், கார்த்திக் என்ற VERSATILE பாதிப்பை இப்போதைய நடிகர்களில், குறிப்பாக விஜய், அஜித் மற்றும் சூர்யா (ஒரு பேட்டியில் இவர் வெளிப்படையாக கார்த்திகின் நடிப்பை புகந்துள்ளார். இவரிடம் கார்த்திக் & கமலின் பாதிப்பை அதிகளவில் நான் பார்க்கிறேன்) விக்ரமிடம் கார்த்திகின் பாதிப்பு அதிகளவில் இருக்கிறது.அவ்வளவு ஏன் ஜெயம் ரவியிடம் அப்படியே நான் கார்த்திகின் பாதிப்பையே காண்கிறேன். ஒரு தலைமுறை நடிகர்களையே இவர் பாதித்திருக்கிறார்.ஒரு காலத்தில் இவரது படங்களை முதல் காட்சியில் பார்த்த ஞாபகம் உள்ளது (அமரன் – மதுரை சினிப்ரியாவில் முதல் காட்சியில் இடம் கொள்ளாக் கூட்டத்தோடு, உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. பூவரசன் படத்தை நெல்லையில் அடிதடியோடு பார்த்தது நினைவில் உள்ளது.) எல்லா நடிகர்களின் ரசிகர்களில் கூட இவரை ரசிப்பவர்கள் இன்றளவில் உள்ளது ஆச்சர்யமான உண்மை.இன்றும் இவர் தென் மாவட்டங்களுக்கு(மதுரை, ராஜாபாளையம்,நெல்லை) வரும் போது கூடும் கூட்டங்களுக்கு இணை வேறு யாருக்கும் கிடையாது. தென் மாவட்டங்களில் இன்றும் இவரது ரசிகர்கள் அதிகளவில் இருக்கிறார்கள். இவரது மன்றங்கள் இன்னும் இயங்கி வருகிறது.எனது பள்ளி, கல்லூரிக் காலங்களில் கார்த்திகின் படங்களை விரட்டி பார்த்து ரசித்த ஞாபகங்களை உங்கள் பதிவு நினைவூட்டியது."உலக நாயகன்" கமலுக்குப் பிறகு அவரது இடத்தைப் பிடித்திருக்க வேண்டிய "நவரச நாயகன்" கார்த்திக் திசை மாறி அரசியல் என்று சென்றது, மிக துன்பியல் நிகழ்வு. ஒரு "சமூகத்திற்கு" ள்ளாக தன்னை சுருக்கிக் கொண்டது மிகவும் வருந் தத்தக்க நிகழ்வு."மணி" சார் ஒரு பிரேக் கொடுப்பாரா? ஆனால் கார்த்திகே தனது மகன் கெளதமை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக ஒரு செய்தி படித்தேன். கார்த்திகின் அரசியல் வாழ்வு சிறக்கவில்லை. யாரோ கூறும் ஆலோசனைப்படி இதில் இறங்கி அவர் தோற்றுவிட்டார்.இனியாவது, திரை உலகில் மிகச்சவாலான வேடங்களை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே அவரின் ரசிகன் என்ற முறையில் எனது வேண்டுகோள்.உங்களது அடுத்த 2வது பதிவை ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறேன்.உங்களுக்கு நன்றி.அன்புடன்,லட்சுமி நரசிம்மன், மதுரையிலிருந்து..
http://muralikkannan.blogspot.com/2009/01/blog-post_28.html
மௌன ராகம் படத்தில் நடித்ததற்க்கு கார்த்திக்கிக்கு கிடைத்த முக்கியமான விருதுகளில் ஒன்று புனே திரைப்பட கல்லூரியில் ஹால் ஆப் பேமில் சிறந்த துணை நடிப்புக்கான நடிப்புகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அக்னி நட்சத்திரம் (1988), வருஷம் 16 (1989), கிழக்கு வாசல் (1990) ஆகிய படங்களில் நடித்ததற்க்காக தொடர்ந்து மூன்று பிலிம்பேர் விருதுகளை வாங்கி ஹேட்டிரிக் அடித்தார். கிழக்கு வாசல் வெற்றி விழாவில் பேசிய ரஜினி சின்ன புள்ளையா இப்பதான் பார்த்த மாதிரி இருக்கு அதுக்குள்ள இப்படி ஒரு பெர்பார்மன்சா என பாராட்டினார்.
மவுனராகம் படத்தின் கார்த்திக் கேரெக்டர் இன்றும் பேசப்படுகிறதென்றால் அதற்கு கார்த்திக்தான் காரணம்.
அவருடைய நகைச்சுவை டைமிங் சென்சும் மிக சிறப்பானது.
ஆனால் கால்ஷீட் வாங்கி விட்டு சூட்டிங் வராமல் இருப்பது போன்ற ஒரு சில நடவடிக்கைகளே அவரது சரிவுக்கு காரணம்.
உண்மை தான் காரத்திக் சிறந்த நடிகர்தான் .வாலி Manja velu funcation சொல்லியிருந்தார் கமலைவிட யதார்த்தமான நடிகன் கார்த்திக் என்று. இதனை கமலகாசனும் ஒத்துக் கொண்டுள்ளார் என்று குறியுள்ளார்.
கார்த்திக் மிகசிறந்த நடிகர் என்பதில் சந்தேகமே இல்லை. அசாத்தியமான நடிகர். ஆனால் அவரோடைய வீழ்ச்சிக்கு காரணம் அவரே தான். ஆனால் விக்ரமின் நடிப்பும் என்னை பெருமளவு கவர்ந்தது தெய்வதிருமகளில். ரொம்ப நாள் கழித்து விக்ரமின் படத்தை ரசிக்க முடிந்தது. ஏன் இதேப்போல் கார்த்திக் படம் ஓன்று கூட நியாபகத்திற்கு வந்தது. படப்பேர் நியாபகமில்லை கிட்டதட்ட இதே கதை.
Nalla pathivu,chinnajameensongs
Super
@ rajan
yes... his misbehaving activities only made him worse..
@ Welcome Karthik Fans
இந்த பதிவைவிட கார்த்திக் பற்றி அதிகம் சொல்லி இருக்குறீர்கள் ...பூவேலி படம் பற்றி பதிவில் சொல்ல மறந்து விட்டேன் ... பின்னூட்டத்தில் குறிப்பிட்டமைக்கு நன்றி ...
//ஒரு தலைமுறை நடிகர்களையே இவர் பாதித்திருக்கிறார்.
உண்மைதான் ... எனக்கு மிகவும் பிடித்த அஜீத்தின் காதல் படம் படம் காதல் மன்னன் .. அதில் கார்திக்கின் பாதிப்பு அதிகம் தெரியும் .... இந்த தலைமுறை மட்டும் இல்லை இனி அடுத்து வரும் தலைமுறை நடிகர்களும் இவரின் பாதிப்பு இல்லாமல் காதல் வேடங்களில் நடிப்பது சிரமமே ...
// அக்னி நட்சத்திரம் (1988), வருஷம் 16 (1989), கிழக்கு வாசல் (1990) ஆகிய படங்களில் நடித்ததற்க்காக தொடர்ந்து மூன்று பிலிம்பேர் விருதுகளை வாங்கி ஹேட்டிரிக் அடித்தார்.
வருஷம் 16 கார்த்திக் போல் இனிமேல் எந்த நடிகனாலும் அவ்வளவு இயல்பான குறும்புத்தனமோடு நடிக்க இயலாது ... கார்திக்கின் ஸ்பெஷாலிடி அது ... எத்துணை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் அந்த படத்தை ... கார்த்திக் குஷ்பூ கெமிஸ்ட்ரி பக்காவாக இருக்கும் ...
@ பாலா
நன்றி நண்பரே வருகைக்கு ....
@ வினோத் கெளதம்
வாங்க நண்பரே ... தல பதிவுகளில் உங்களை பார்க்க முடிவதில்லையே ...
@ dharma
அவர் படங்களில் பெரும்பாலும் பாடல்கள் அனைத்தும் நன்றாக அமைந்து விடும் ...
Karthik is a versatile actor.மௌன ராகம் ஒன்று போதும் அவர் நடிப்பிற்கு சாட்சியாக.நமது ஆட்களுக்கு இயல்பான நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் போனது கொடுமை.
@ illuminatti
versatile - சரியான வார்த்தை மச்சி ....
//நமது ஆட்களுக்கு இயல்பான நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் போனது கொடுமை.
உண்மைதான் .. அப்படியே யாராவது இயல்பாக நடிக்க ஆரம்பித்தால் அதையே அவரின் ஸ்டைல் ஆக மாற்றி , திரும்ப திரும்ப அதையே பண்ண சொல்லி வீனடித்து விடுகிறார்கள் .. அமரனில் வெத்தலை பாக்கை குதப்பியது போல பேசி கார்த்திக்க்கும் இதில் மாட்டி கொண்டார் .. கடைசி வரை அவரை அப்படியே பேச வைத்து விட்டார்கள்...
KATHICK, What a lovely actor ?...
There's hardly a little hope that Tamil cine field will find an actor like Karthick. Today most of leading tamil actors are a great appa tuckaru... esp watching movies of Vijai & Ajith for 3 hours...., sth more cruel than death sentence...
namma oorla eppadi oru pulla irukkirathu theriyama pochee..
very good kanna keep it up (visuvin dialog pola padikkavum)
"மாதி யோசி" என்ற தத்துவத்தை பின்பற்றியிருக்கிரீர்கள்... யாருக்குமே இந்த யோசனை தோன்றியிருக்காது!
karthik always good actor ,even "AYAGIYA THIRUMAGAL'" ALSO BASED ON "CHINNA KANNAMMA"
THANK YOU FOR GOOD ARTICAL ABT OUR LOVELBLE IDOT.
SARAVANA.R
BANGALORE
ரொம்ப அருமையான பதிவு ராஜா. நான் அடுத்து எழுதப்போற பதிவு, ரகுவரனை பற்றி.
ராஜா.. நல்ல பதிவு..
சின்ன ஜமீன் படப்பதிவு நடந்து கொண்டிருந்த சமயம் அதன் படப்பதிவில் கார்த்திக்கை பார்த்திருக்கிறேன். இயல்பாகவே சிரித்த முகம். நல்லா ஜோக்கிற்கு சிரித்தமாதிரி இருந்தவர் கேமரா ஆக்சன் என்று சொன்னதும் கண்ணீர் மல்க நடிப்பினை வெளிப்படுத்தினார். நான் சிலிர்த்த அனுபவம். நல்ல நடிகன். அரசியல் அவருக்கு தேவையற்றது. ஆனால் அவரது சரணாலயம் அமைப்பு சிறப்பாக செயல்பட்டது என அறிந்தேன்.
பதிவினை தொடர வாழ்த்துக்கள்.
@karthikeyan
// நல்ல நடிகன். அரசியல் அவருக்கு தேவையற்றது.
உண்மைதான் நண்பரே...
// அவரது சரணாலயம் அமைப்பு சிறப்பாக செயல்பட்டது என அறிந்தேன்.
இப்பொழுதும் இருக்கிறதா அந்த அமைப்பு ?
//இப்பொழுதும் இருக்கிறதா அந்த அமைப்பு ? //
தெரியலை.. நீங்க தான் சொல்லனும். உங்க ஏரியாலதான் செயல்பட்டுக்கொண்டு இருந்தது. அதாவது சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரம்.
http://writetamil.weebly.com/karthick.html
கரத்து கதைகளில் மட்டும் அல்ல கிராமத்து கதைகளில் கூட கதாபாத்திரத்துடன்
பொருந்தி விடுவார். கிழக்கு வாசல்,பொன்னுமணி,போன்ற கிராமத்து கதை அம்சம்
உள்ள படங்கள் பெரும் வெற்றி பெற்றன.
தமிழ் சினிமாவிலிருந்து ஒதுக்க பட்டாலும் தமிழ் சினிமாவில் அவர் விட்டு சென்ற்
இடம் இன்னும் காலியாகவே உள்ளது என்றால் அது மிகை அல்ல.
அவரிடம் பல குறைகள் இருந்தாலும் ஒரு நடிகனாக அவருடைய தாக்கம் இன்றைய இளைய தலைமுறையிடம் காணமுடியும்.
குறிப்பாக படித்த நுனி நாக்கில் ஆங்கிலம் பேசகூடிய அப்பாவியான கேரக்டர் என்றால்
அனைத்து நடிகர்களுக்கும் உடனே ஞாபகத்தில் வரகூடியது கார்திக்கின் கோகுலத்தில் சீதை படம் தான். அந்த படத்தில் அவருடைய நடிப்பு பல நடிகர்களுக்கு ஒரு பல்கலை கலகம். உதாரணத்திற்கு பிரியமானவளே படத்தில் விஜயோட நடிப்பில் கார்த்திகோட தாக்கத்தை காணலாம்.
அதே போல துருதுருப்பான காதலன் ரொமான்டிக் காதலன் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது அந்த மௌன ராகம் கேரக்டர்தான்.
நகரத்து கதைகளில் மட்டும் அல்ல கிராமத்து கதைகளில் கூட கதாபாத்திரத்துடன்
பொருந்தி விடுவார். கிழக்கு வாசல்,பொன்னுமணி,போன்ற கிராமத்து கதை அம்சம்
உள்ள படங்கள் பெரும் வெற்றி பெற்றன.
இவருடைய நடிப்பில் யாருடைய சாயலையும் காணமுடியாது.அந்த வகையில் நடிப்பில் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி கொண்டவர். தொடர்ந்து மூன்று வருடம் பிலிம் பேர் விருதை வெண்ர பெருமை கமலுக்கு பிறகு இவறையே சாரும்.
1988ம் வருடம் அக்னி நட்சத்திரம் படத்துக்காகவும்,1989ம் வருடம் வருஷம் பதினாறு
படத்துக்காகவும்,1990ம் வருடம் கிழக்கு வாசல் படத்துகாகவும் இவர் இந்த விருதை
வென்றிருகின்றார். இது அல்லாமல் 1993ம் வருடத்தின் பிலிம் பேர் விருதையும் இவர்
பொண்ணுமணி படத்துக்காக வென்றிருக்கின்றார்,
தமிழ் நாட்டு அரசின் சிறந்த நடிகருக்கான விருதை இரண்டு முறையும்,நந்தி அநார்ட்
ஒருமுறையும் பெற்றிருப்பது குறிப்பிட தக்கது.
தமிழ் சினிமாவில் இவர் முன்னனி நடிகராக இருந்த போது அப்போதைய முன்னனி
நடிகர்களுடன் ஈகோ பார்காமல் சேர்ந்து நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. அவ்வாறு சேர்ந்து நடித்த படங்கள் இவருக்கு நல்ல பெயரையே பெற்று தந்தன.
நல்லவனுக்கு நல்லவன் படத்தில் ரஜினியுடனும், நன்றி படத்தில் அர்ஜுனுடனும்,அக்னி
நட்சத்திரம், உரிமை கீதம்,குஸ்தி போன்ற படங்களில் பிரபுவுடமும்,ஊமை விழிகள், தேவன் போன்ற படங்களில் விஜய காந்துடனும்,மௌன ராகம் படத்தில் மோகனுடனும்,உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், ஆனந்த பூங்காற்றே படத்தில் அஜித்துடனும் சேர்ந்து நடித்துள்ளார்.
அதே போள் இவர் கால்சீட் சொதப்புகின்றார் என்ற பேச்சு பரவலாக இருந்தாலும் இவரை
இயக்கிய இயக்குனர்கள் மீண்டும் இவரை வைத்து இயக்குவதே இவரின் திறமைக்கு
சான்று..
மணிரத்தினம் இயகத்தில் மௌன ராகம்,அக்னி நட்சத்திரம், இராவணன் போன்ற
படங்களிலும்,ஆர்.வி.உதய குமார் இயக்கத்தில் உரிமை கீதம்,கிழக்கு வாசல்,பொண்ணு
மணி,நந்தவன தேரு போன்ற படங்களிலும்,இயக்குனர் ராஜ் கபூர் இயகத்தில் சின்ன
ஜமீன்,குஸ்தி,ஆனந்த போங்காற்றே போன்ற படங்களிலும்,ஆர்.ராஜேஸ்வர் இயக்கத்தில்
இதயதாமரை, அமரன் போன்ற படங்களிலும், பி.வாசு இயக்கத்தில் இது நம்ம போமி,சீணு,புலி வேஷம் போன்ற படங்களிலும்,சுந்தர் .சி. இயக்கத்தில் இயக்கத்தில் உள்ளத்தை அள்ளித்தா,மேட்டுக்குடி,உனக்காக எல்லாம் உனக்காக,உள்ளம் கொள்ளை போகுதே பொன்ற படங்களிலும்,பாரதி ராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை,நாடோடி தென்றல் போன்ற படங்களிலும், நடித்துள்ளார்.
இன்றைய தலைமுறை நடிகரான ஜெயம் ரவிக்கு பிடித்தமான நடிகர் இவர்தான் என்பது
பலபேறுக்கு தெரியாது.
ராஜா சார், உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. எத்தனை வெளிப்படையாக இப்படி ஒரு பாராட்டை கொடுத்திருக்கீங்க. உண்மையிலேயே சந்தோஷமாக் இருந்தது , படித்து முடித்ததும் நிறைவான மனநிலை எனக்கு கண்ணீரை வரவழைக்கும். ரொம்ப நாளைக்கு பிறகு அந்த பரவசம் எனக்கு கிட்டியது. நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். இன்றைய படங்களில் கார்த்திக் சாரை ரொம்பவே மிஸ் பண்றேன். எத்தனை நடிகர்கள் வந்தாலும், மௌனராகம் அசோக்கையும், கோகுலத்தில் சீதை ரிஷியையும் நம்மால் மறக்கமுடியாது.
தற்போதைய நடிகர்களில் ஜெயம் ரவி மிகவும் பிடிக்கும், அவர் கார்த்திக் போல இருப்பதால் கூட இருக்கலாம்.
கார்த்திக் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்
Post a Comment