Followers

Copyright

QRCode

Tuesday, April 26, 2011

மங்காத்தா....



 பத்து நாட்களுக்கு முன்னாள் மாப்பிள்ளை படம் பார்த்தேன் , அதில் தல கட் அவுட்டுக்கு தனுஷ் மாலை போட்டு ட்ரம்ஸ் வாசிப்பதை போல ஒரு சீன் , சென்ற வாரம் கோ படம் பார்த்தேன் அதில் தல ரேஸ்ல ஜெயிக்கணும்னு மொட்டை போடுறோம் , தோனி சிக்சர் அடிக்கணும்னு காவடி தூக்குரோம்னு ஒரு வசனம் வந்தது ... இந்த இரண்டு படங்களிலும் திரை அரங்கில் அதிக விசில் சத்தம் கேட்ட காட்சிகள் இவைதான் ...அடுத்தவன் படத்துலயே தலைய காட்டுனா இவ்வளவு விசில்னா? தல படத்துக்கு .... சும்மா ஏரியாவே அதிர விடுவோம்ல... இதோ அந்த நாள் நெருங்கி விட்டது ...

தலையோட மாங்காத்தா கிட்டதட்ட ரெடி .... யுவனின் இசையில் பாடல் ரிக்கார்டிங்க் அனைத்தும் முடிந்து விட்டதாம்... இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் சூட் பண்ணி முடிந்துவிட்டால் சூட்டிங் ஓவர் ... எப்படியும் ஜூன் மாதம் படம் வெளிவந்து விடும் .... சென்ற வருடம் பிப்ரவரி மாதத்திர்க்கு பிறகு ஒன்றைவருட இடைவெளியில்  ஒரு தல படம் .. நீண்ட இடைவெளிதான். ஆனால் எங்களுக்கு அதுதான் கிக்கே ... தலையை மீண்டும் திரையில் தரிசிக்கபோக்கும் நாளுக்காய் இப்பவே வெயிட்டிங் ... அதுவும் தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் யாருமே செய்ய துணியாத ஏன் செய்ய முடியாத ஒரு விஷயத்தை தல இந்த படத்தில் செய்துள்ளார் , நரைத்த முடியுடன் நடித்துள்ளார் .... ஆனால் அதுவும் அவருக்கு ஸ்டைளாகத்தான் உள்ளது.. இந்த படத்தை பாருங்கள் , வேறு எந்த ஹீரோவுக்காவது நரைமுடி இவ்வளவு எடுப்பாக இருக்குமா?


(அமர்க்களம் படத்திலேயே பல காட்சிகளில் தல காதோர நரைமுடியுடன் நடித்திருப்பார்... அந்த நரைமுடி இவர் அழகை ஒருபடி மேலே ஏற்றி காட்டி இருக்கும்... )

இந்த படத்தின் பாடல் உரிமையை சோனி ம்யூசிக் வாங்கி இருக்கிறார்களாம் .. பாடல்கள் மே 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது .... பாடல்கள் வருவதற்க்கு முன்னரே பாடல் வரிகள் தல ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது ...
வாடா வாடா பின்லேடா பாடலும் ஓபன் த பாட்டில் பாடலும் இப்பொழுதே எங்கள் எதிர்பார்ப்பை ஏகத்திர்க்கும் எகிற வைத்திருக்கிறது.... யுவன் வேறு ஒரு முறை டிவிட்டரில் இப்பொழுது காரில் மாங்காத்தா தல இண்ட்ரோடக்சன் சாங்க் கேட்டு கொண்டு இருக்கிறேன் .... கேட்க கேட்க தாளம் போட வைக்கிறது பாடல்.. அஜீத் ரசிகர்களே கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க  தாளம் போட என்று எங்களை உசுப்பேத்தி விட்டு இருந்தார் ... மே 27 எப்ப ஸார் வரும்?


தல இந்த படத்தில் முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோலில் வருகிறாராம்... படத்தில் அவர் பெயர் விநாயக் மாதவன்... இது வரை தல நடித்த எல்லா நெகட்டிவ் ரோல்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.... இந்த படமும் கண்டிப்பாக எனக்கு பிடிக்கும் (நாங்க எல்லாம் ஆழ்வாரையே தலைக்காக ரசித்து பார்த்தவர்கள் )...இந்த படத்தில் தல பேசும் பன்ச் வசனம் எல்லாரும் கெட்டவங்கன்னா .. நான் ரொம்ப கெட்டவன்.... எனக்கு விசில் அடிக்க தெரியாது , படம் வெளிவருவதற்க்கு முன் கண்டிப்பாக விசில் அடித்து பழக வேண்டும் ...

படத்தில் மொத்தம் ஆறு பாடல்களாம்.. இதில் மூன்று பாடல்கள் தலைக்கு (அறிமுக பாடலையும் சேர்த்து), ஒரு பாடல் த்ரிஷா வரும் சோக பாடலாம் , ஒரு பாடல் வைபவ் அஞ்சலி ஜோடிக்கும் இன்னொரு பாடல் அர்ஜூன் ஆன்ட்ரியா ஜோடிக்கும் பிரித்து கொடுத்திருக்கிறார்கள்... தல படத்தில் தல இல்லாத பாடலை பார்க்க கொஞ்சம் கடுப்பாகத்தான் இருக்கும், இருந்தாலும் ஆறு பாட்டுக்கும் சேர்த்து அந்த மூணு பாட்டுக்கு நாங்க பட்டைய கெளப்புவோம்ல...

இந்த படத்தின் இயக்குனர் , கூட நடிக்கும் நடிகர்கள்  , இசையமைப்பாளர் (நம்ம தல படம் , சும்மா விட முடியுமா , பாட்டிற்காக தீவிரமாக உழைத்து கொண்டு இருக்கிறேன் என்று சொன்ன யுவன் ), ஏன் படத்தின் தயாரிப்பாளர் என்று எல்லாருமே அஜீத் ரசிகர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ... இதுதான் படத்தின் பெரிய பலம்



படம் வெளிவரும் நாள் நெருங்க நெருங்க படத்தை பற்றி பல வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது .. அதில் ஒன்று இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று .. ஆனால் அது வெறும் வதந்திதான் என்று நினைக்கிறேன் ... எது எப்படியோ உலகத்திர்க்கு தீபாவளி நவம்பர் மாதம்தான் .. ஆனால் இதோ எங்கள் தீபாவளி நெருங்கி விட்டது... ஜூன் மாதம் கலக்குறோம் தல ....


15 comments:

Anonymous said...

அஜித்தை ஒரு சூப்பர் ஹிரோவாக்கும் படம் மங்காத்தா

Anonymous said...

super post boss

Anonymous said...

தல போல வருமா ..

Anonymous said...

டை அடிக்காத வெள்ளை முடி ஸ்டைல் செம கலக்கல் ..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தல படம் பார்க்க காத்துக்கிட்டுருக்கேன்..

பகிர்வுக்கு நன்றி..

வினோத் கெளதம் said...

Super..

"ராஜா" said...

@ ஆர்.கே.சதீஷ்குமார்

வாங்க சதீஷ் அண்ணாச்சி தலய பத்தி கமெண்ட் போட்டதுக்கு நன்றி

"ராஜா" said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
தல படம் பார்க்க காத்துக்கிட்டுருக்கேன்..

பகிர்வுக்கு நன்றி..//

நானும்தான் தல ...

"ராஜா" said...

//வினோத் கெளதம் said...
Super..//

வாங்க தல .. அஜீத் பதிவு போடும்பொழுதே உங்கள் கமெண்ட் எதிர்பார்த்தேன் .. நன்றி

ராஜகோபால் said...

உங்காத்தா எங்காத்தா இல்ல மங்காத்தா வாங்கடா பாக்கலாம்!

சௌந்தர் said...

நானும் வெயிட் பண்றேன் படத்திற்காக

சூனிய விகடன் said...

தல ரசிகர்களே...உங்களுக்கு புண்ணியமாப்போகட்டும்.....உங்க தல கிட்ட சொல்லி " கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு குறுக்கு நெடுக்கா பரேடு நடக்கராமாதிரி போறது .....பாட்டு சீன்ல கேமராவைப் பாத்துகிட்டே ஆடுறது.......அப்புறம் எந்த சீனா இருந்தாலும் எழவு வீட்டுக்குப் போனவனாட்டமே மூஞ்சிய வச்சிருக்கறது ...லவ் சீன்ல பேசும் போதும் வாயில வெங்கைக்கல்லை போட்டுக்கிட்டு கொழ கொழன்கிறது "....இதையெல்லாம் மங்காத்தாவில எடிட்டிங்குல கட் பண்ணிடச்சொல்லுங்களேன்.....ப்ளீஸ்...

பாலா said...

படம் வர்ற வரைக்கும் பேசுறதா இல்லை. கப்சிப்

Karthikeyan said...

என்ன பாஸ்.. உங்க தல ரசிகர் மன்றத்தை எல்லாம் கலைச்சிட்டாராமே?

Ansif said...

எனக்கு விசில் அடிக்க தெரியாது , படம் வெளிவருவதற்க்கு முன் கண்டிப்பாக விசில் அடித்து பழக வேண்டும்

LinkWithin

Related Posts with Thumbnails