ஒருவழியாக தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டது .... தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டதாக பத்திரிக்கைகள் அனைத்தும் தலையில் தூக்கி வைத்து கொண்டுடாடுகின்றன ... ஆனால் உண்மை என்ன என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் ... பாம்பு வேட்டைக்கு போயி தவக்களைய பிடித்து வந்தது போல எல்லாத்தையும் ஒழுங்கா பண்ணிய கமிஷன் கடைசி நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க முடியவில்லை .. எங்கள் ஊரில் தெனாவட்டாக தேர்தலுக்கு முந்தின நாள் இரவு மின்சாரத்தை நிறுத்தி விட்டு வீடு வீடாக சென்று பணம் கொடுத்தார்கள் ... தேர்தல் நடக்க இருந்த பூத் இருந்த தெருவில் இந்த கமிஷன் நியமித்த போலீஸ்காரர்கள் கண் முன்னாலயே பணம் விநியோகம் செய்யபட்டது ... அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை .... அதற்க்கு முந்தின நாள் இரவு வேறு ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் இதே போல மின்சாரத்தை நிறுத்தி விட்டு பணம் பட்டுவாடா செய்தனர் ...அவர்கள் அதோடு நிறுத்து இருந்தால் பரவாயில்லை ... தேர்தல் முடிந்ததும் ஒருவாரதிர்க்குள் ஒவ்வொரு வீட்டிற்க்கும் மிக்ஸி ஒன்று தரப்படும் என்று வீடு வீடாக சென்று வாக்குறுதி கொடுத்து சென்றனர் .. இதை கேள்விபட்ட இன்னொரு கட்சியை சேர்ந்த கும்பல் அடுத்த நாள் வீடு வீடாக சென்று அவர்கள் மிக்ஸி கொடுப்பதற்க்கு முன்னரே உங்கள் வீட்டில் கிரைண்டர் இறக்கி வைக்கப்படும் என்று எதிர்வாக்கு கொடுத்து சென்றனர் ...
இவர்கள் சொன்னதையும் நம்பி தேர்தல் முடிந்த நாளில் இருந்து இன்று வரை இரவு எங்கள் ஊரில் மின்சாரம் எப்பொழுதாவது தடைபட்டால் மக்கள் கதவை திறந்து வைத்து கொண்டு மிக்ஸிக்கும் கிரைண்டருக்கும் காத்து கிடக்கிறார்கள்.... இதை பயன்படுத்தி இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு கொள்ளை கும்பல் ஒதுக்குபுறமான ஒரு வீட்டில் தங்கள் கைவரிசையை காட்டி சென்றது .... மக்கள் எப்பொழுதுதான் திருந்தபோகிறார்களோ?
இவர்கள் சொன்னதையும் நம்பி தேர்தல் முடிந்த நாளில் இருந்து இன்று வரை இரவு எங்கள் ஊரில் மின்சாரம் எப்பொழுதாவது தடைபட்டால் மக்கள் கதவை திறந்து வைத்து கொண்டு மிக்ஸிக்கும் கிரைண்டருக்கும் காத்து கிடக்கிறார்கள்.... இதை பயன்படுத்தி இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு கொள்ளை கும்பல் ஒதுக்குபுறமான ஒரு வீட்டில் தங்கள் கைவரிசையை காட்டி சென்றது .... மக்கள் எப்பொழுதுதான் திருந்தபோகிறார்களோ?
(இவர்கள் மிக்சி கிரைண்டர் , கட்டில் மெத்தை , வாஷிங் மெசின் என்று கொடுப்பதை விட ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு UPS INVERTOR வாங்கி கொடுத்தால் வெற்றி நிச்சயம்.... இப்ப எல்லாம் கரண்ட பாக்குறதுதான் கடவுள பாக்குற மாதிரி இருக்கு )
ரஜினி நின்னா மாஸ் , நடந்த மாஸ் , உக்காந்தா மாஸ் , படுத்தா மாஸ் , சாயா குடிச்சா மாஸ் , கக்கூஸ் போனா மாஸ் , இப்ப ஓட்டு போட்டாலும் மாஸ் .... அவர் யாருக்கு ஓட்டு போட்டார் என்பதை தெளிவாய் படம் பிடித்து காட்டி விட்டார்கள் .... மீடியாகாரர்கள் செய்தது பெரும் தவறுதான் என்றாலும் இதில் ரஜினிக்கும் , தேர்தல் கமிசனுக்கும் பங்கு இருக்கிறது ... கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ரஜினியும் கமலும் கலைஞருக்கு மிக நெருக்கமாக இருந்தனர் அல்லது இருக்க வைக்கபட்டனர் ... ஆனாலும் உள்ளுக்குள் இரண்டு பேருமே அவர் மேல் வெறுப்பில்தான் இருந்தனர் என்பது அனைவரின் கணிப்பு ... எனவே இந்த தேர்தலில் அவர்கள் ஓட்டு யாருக்கு என்பதை அறிய மக்கள் ஆர்வமாக இருந்தனர்... கமல் எப்பொழுதும் போல அமைதியாகவே இருந்து விட்டார் ... ரஜினியும் தன்னை சந்தித்த எல்லா கட்சி வேட்பாளர்களுக்கும் வாழ்த்து சொல்லி விட்டு நடுநிலையுடன்தான் இருந்தார் தேர்தல் நடக்கும் நாள் வரைக்கும் ... ஆனால் தேர்தல் அன்று அவருக்கு சனி உச்சத்தில் இருந்திருக்கிறது .... கேமராவை தன் தலைக்கு மேலே ஒருத்தன் தூக்கி பிடித்திருக்கும் போது பட்டனை அழுத்தி விட்டார் , அது கேமராவில் பதிவாகி விட்டது ... கமலை போல இவரும் அவர்கள் வெளியேறும் வரைக்கும் கையை கட்டி கொண்டு சும்மா இருந்திருக்கலாம் , செய்யாததால் பாவம் இன்று கேலிக்குரிய விஷயமாக ஆகிவிட்டது இது ....
அதன் பின்னர் ஒரு ஆங்கில தொலைகாட்சி நிருபரை தனியாக அவர் வீட்டுக்கு அழைத்து ஆளுங்கட்சியை மறைமுகமாக எதிர்த்து ஒரு பேட்டி கொடுத்தார் ... 1996 இல் இந்த அம்மா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது என்று ஜெயலலிதாவுக்கு எதிராக அவர் ஆட்சியில் இருக்கும் போதே அறிக்கை விட்ட ரஜினியா இது? என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது ... அன்று அம்மாவை தைரியமாக எதிர்த்த ரஜினியால் இன்று அய்யாவை அப்படி எதிர்க்க முடியாமல் போக காரணம் என்ன? அம்மா என்றால் ஜெயித்தாலும் அதன் பின்னர் இவரை கண்டு கொள்ளவே மாட்டார் ,. ஆனால் அய்யா அப்படி இல்லையே , கல்யாண மண்டபம் இடிந்து விழும் , கர்நாடகாவில் இருக்கும் நிலங்கள் ஆக்கிரமிக்கபடும் , படம் எடுத்து அதை வெளியிட முடியாமல் அல்லாட வேண்டி இருக்கும் .... இப்படி பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கும் அதனால்தான் அய்யாவை தைரியமாக எதிர்க்க பயப்படுகிறார் .... உண்மையிலேயே மக்கள் மேல் தமிழகத்தின் மேல் அவருக்கு அக்கறை இருந்திருந்தால் 1996 இல் வெளிப்படையாக ஆளுங்கட்சியை எதிர்த்தது போல இப்பொழுது எதிர்திருக்கலாம் ரௌடிகளின் வன்முறை தேர்தலில் ஜெயிக்க பணம் என்று தமிழகம் அப்பொழுதை விட இப்பொழுது ரொம்ப கேவலமான நிலையிலேயே இருக்கிறது .... அன்று ஒரு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் போல கம்பீரமாக தெரிந்த ரஜினி இன்று பயணங்கள் பிரித்திவிராஜ் போல பரிதாபமாக தெரிகிறார் ...
இந்த விஷயத்தில் விஜய் எவ்வளவோ பரவாயில்லை .... அவர் 1996 ரஜினியை போல சிங்கமாக கர்ஜனை செய்யவில்லை என்றாலும் செம்பரி ஆட்டை போல மே மே என்றாவது (சுயநலத்திர்க்காகவாது )ஆளுங்கட்சியை எதிர்த்து குரல் கொடுத்து விட்டார் ... ஆனால் பாவம் கருணாநிதி திரும்பவும் ஜெயித்து வந்து விட்டால் இந்த ஆடு கோபாலபுரத்தில் பிரியாணி ஆகுமா இல்லை மட்டன் சுக்காவாகுமா தெரியவில்லை....
ரஜினி ரசிகர்கள் சொல்லுவதை போல அவர் ஒரு நடிகர் அவரை அவர் தொழிலை நிம்மதியாக செய்ய விடுங்கள் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை .. அவர் அவருடைய தொழிலை மட்டும் பார்த்து கொண்டு இருந்திருந்தால் அவரை பற்றி இப்படியான விமர்சனங்கள் வந்தே இருக்காதே .... தெரிந்தோ தெரியாமலோ ரஜினி இந்த அரசியல் சாக்கடைக்குள் கால் வைத்து விட்டார் .... அந்த சாக்கடை கண்டிப்பாக அவரை அவரே விரும்பாவிட்டாலும் உள்ளே இழுத்து விடத்தான் செய்யும் ....
(தலைவா ஒண்ணு முழுசா அரசியலுக்குள் எறங்கி ஒரு கை பாருங்க , இல்லையா மொத்தமா அத விட்டு வெளிய வந்து உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க .. அதை விட்டு இப்படி அரைகுறையா எதையும் பண்ணி உங்களை நீங்களே அசிங்கபடுத்தி கொள்ளாதீர்கள் ... )
(தலைவா ஒண்ணு முழுசா அரசியலுக்குள் எறங்கி ஒரு கை பாருங்க , இல்லையா மொத்தமா அத விட்டு வெளிய வந்து உங்க வேலை என்னவோ அதை மட்டும் பாருங்க .. அதை விட்டு இப்படி அரைகுறையா எதையும் பண்ணி உங்களை நீங்களே அசிங்கபடுத்தி கொள்ளாதீர்கள் ... )
5 comments:
//இந்த விஷயத்தில் விஜய் எவ்வளவோ பரவாயில்லை .... அவர் 1996 ரஜினியை போல சிங்கமாக கர்ஜனை செய்யவில்லை என்றாலும் செம்பரி ஆட்டை போல மே மே என்றாவது (சுயநலத்திர்க்காகவாது )ஆளுங்கட்சியை எதிர்த்து குரல் கொடுத்து விட்டார் ... ஆனால் பாவம் கருணாநிதி திரும்பவும் ஜெயித்து வந்து விட்டால் இந்த ஆடு கோபாலபுரத்தில் பிரியாணி ஆகுமா இல்லை மட்டன் சுக்காவாகுமா தெரியவில்லை....
//
கண்டிப்பா கைமாதான்...
Leave Rajini alone. He's not worth it.
விடுங்க பாஸ்.. ரிசல்ட் என்ன வருதுன்னு பாத்துடலாம்.
Result pakka oru masam kakka vendi irukke. School pasanga exam ezhuthi resultukku wait pandra mathiri
Post a Comment