பதிமூன்று வருடங்களாக சிறைக்குள் அடைபட்ட கைதியை போல ஆஸ்ட்ரேலியா அணியின் வசம் அகப்பட்ட கிடந்த உலக கோப்பையை தோனி அண்ட் கோ பிடிங்கி பொதுவில் வைத்து விட்டார்கள் அது மட்டும் இல்லாமல் பாண்டிங்கின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுபுள்ளியும் வைத்தாகி விட்டது... இந்த உலக கோப்பையில் நடந்த மிக சிறந்த விஷயம் இவை இரண்டும்தான்....
கிட்டதட்ட பதிமூன்று வருடங்கள் , கிரிக்கெட் உலகில் கோலோச்சிய ஒரு அணி , நேற்று அகமெதாபாத்தில் அடியோடு நொறுங்கியது .... 1992க்கு பிறகு ஒரு வேர்ல்டு கப் ஃபைனல் நடக்க போகிறது அதில் ஆஸ்ட்ரேலியா இல்லாமல்.... லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அவர்களின் தொடர் வெற்றிக்கு முற்றுபுள்ளி வைத்திருந்தாலும் , அவர்களை முழுமையாய் இந்த உலககோப்பையில் இருந்து வெளியேற்றியது நாம் இந்திய அணி தான் .... 2003 உலககோப்பை ஃபைனலில் காயம்பட்ட ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் மனதும் வராதா வாரதா என்று காத்து கிடந்த நாள் நேற்றுதான் வந்தது ... போட்டியின் முடிவில் மைதானத்தில் யுவராஜ் கொக்கரித்ததை விட அதிகமாய் ஒவ்வொரு ரசிகனும் தன் மனதிர்க்குள் கொக்கரித்திருப்பான்.... இந்த முறை யார் ஜெயித்தாலும் பரவாயில்லை இவர்களை வெளியேற்றியதே இந்தியாவுக்கு பெரிய வெற்றிதான்...
ஆனாலும் அந்த அணியை குறை சொல்லவும் முடியாது .. கடைசி வரை ரத்தம் சொட்ட சொட்ட போராடினார்கள் ... என்ன இருந்தாலும் பதிமூன்று வருட பெருமை அல்லவா? அது நம்மை விட்டு போய்விட கூடாது என்னும் துடிப்புடன் அவர்கள் முடிந்தவரை போராடினார்கள் .. ஆனால் டெண்டுல்கர் மற்றும் கம்பீர் இணைந்து அமைத்து கொடுத்த வலுவான தளத்தில் யுவராஜும் , ரெய்னாவும் ஆஸ்ட்ரேலியாவுக்கு வலுவான சமாதியை கட்டி முடித்தனர் ..
டீம் ஸ்பிரிட் டீம் ஸ்பிரிட் என்று சொல்லுவார்களே , அதை நேற்று இந்திய அணியில் பார்க்க முடிந்தது... பௌலிங் ஃபீல்டிங் , பேட்டிங் என்று அனைத்திலும் ஒருங்கிணைந்து விளையாடினார்கள்... வாட்சனை அஸ்வின் போல்ட் ஆக்கியதும் ஆரம்பித்தது ஆஸ்ட்ரேலியாவுக்கு சனி , 200 ஓட்டங்களைக்கூட தொட மாட்டார்கள் என்றுதான் நான் எண்ணினேன் .. ஆனால் எளியவர்களின்(கஷ்டபடுபவர்களின்) மேல் கருணை காட்டும் நம்மவர்களின் கருணை குணம் பாண்டிங்கின் மேலும் வெளிபட்டது ... அதுவரைக்கும் இருபதை தாண்டவே திணறி கொண்டிருந்த அவர் எளிதாக நூறை கடக்க ஆஸ்ட்ரேலியா கொஞ்சம் கவுரவமான இலக்கை எட்டியது ... இது பாண்டிங் அவர்களுக்கு கடைசி ஆட்டமாக அமைய அதிக வாய்ப்பு இருக்கிறது ...(குறைந்தபட்சம் உலக கோப்பையிலாவது)... சயீத் அன்வர் 2003இல் இந்தியாவுடனான சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இதே போல்தான் சதம் அடித்து தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடித்து கொண்டார் ... எனக்கு அவரின் ஞாபகம்தான் வந்தது நேற்று பாண்டிங்கை பார்த்த பொழுது ... இருவருமே இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடியவர்கள் , அவர்களின் முடிவும் (கிட்டதட்ட) இந்திய அணியினாலயே எழுதபட்டது துரதிருஷ்டம் ....
260 என்பது எதிரணிக்கு பெரிய சவால் இல்லை , ஆனால் அதே போல சுருட்டவே முடியாத அடிமட்ட இலக்கும் இல்லை , அதுவும் எதிரணி இந்தியா , எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்றே தெரியாது ... வென்று விடலாம் என்ற நம்பிக்கையில்தான் ஆஸ்ட்ரேலியா பந்து வீச ஆரம்பித்தது ... ஆனால் அவர்கள் கெட்ட நேரம் , பவுன்ஸ் பந்துகளாக போடுகிறேன் என்று அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகள் அனைத்தும் ஆரம்பத்தில் வைட் பந்துகளாக போக , இந்திய அணியின் அபாயகரமான துவக்க ஆட்டக்காரர்கள் தங்கள் வேலையை ஆரம்பித்தார்கள் ... ஓவர் ஓவருக்கு பவுண்டரிகள் பறக்க ஆரம்பித்தது ... ஆனால் சேவாக் நேற்று கொஞ்சம் பயந்தது போலவே விளையாடினார்... எங்கே மறுபடியும் ஜான்சன் பந்தில் ஆட்டமிழந்து விடுவோமோ என்ற பயமா என்று தெரியவில்லை(கடைசி பதினைந்து ஆட்டங்களில் அவர் ஒன்பது முறை ஜான்சன் பந்தில் வீழ்ந்திருக்கிறார்).... ஆனால் நேற்று அவரை வாட்சன் வெளியேற்ற ஆட்டத்தில் பதட்டம் ஆரம்பித்தது ... அடுத்து வந்த கம்பீரும் நன்றாக விளையாடினாலும் உடலில் பதட்டம் தெரிந்தது .... மறுமுனையில் சச்சின் அரைசதம் அடிக்க என் மனம் கவலை கொள்ள ஆரம்பித்தது எங்கே இன்றும் அவர் சதம் அடித்து இந்தியாவை தோற்கடிக்க வைத்து விடுவாரோ என்று (அவர் ராசி அப்படி), ஆனால் அவர் 52 ஓட்டங்களில் வெளியேற இந்திய அணிக்கு நெருக்கடி இன்னமும் அதிகரித்தது... அடுத்து வந்த கோக்லியும் வந்த வேகத்தில் வெளியேற , யுவ்ராஜ் வந்து கம்பீரை ரன் அவுட் செய்ய ஆட்டம் ஆஸ்ட்ரேலியா வசம் சாய்ந்தது....
நேற்று நடந்த போட்டியில் மன்னிக்கவே முடியாதபடி மகா மட்டமாக விளையாடிய ஒரே ஒரு இந்திய பேட்ஸ்மேன் தோனி மட்டும்தான் ... அணி இக்கட்டான நிலையில் இருக்கும்பொழுது இவ்வளவு அசால்டாக விளையாடிய அவரை எவ்வளவு திட்டினாலும் தகும்.. அதிர்ஷ்டத்தால் மட்டுமே அவர் அணியில் இருக்கிறார் .. இல்லை என்றாள் அவரை தூக்கி விட்டு யூசூஃப் பதானையும் ரெய்னாவையும் நிரந்தரமாக டீமில் வைத்து விடலாம் .... இதுவரை அவர் அணிக்காக எந்த பங்களிப்பையும் தரவில்லை கேப்டன் சுமையை சுமப்பதை தவிர ....
அவர் அவுட் ஆனவுடன் கிட்டதட்ட இந்தியாவுக்கு சங்கு ஊதிவிட்டார்கள் , தோனியின் கேப்டன் பதவிக்கும் , சச்சினின் உலக கோப்பை கனவுக்கும் சாவு மணி அடித்து விட்டார்கள் என்றுதான் நினைத்தேன் ... ஆனால் கடைசி கட்டத்தில் யுவ்ராஜ் மற்றும் ரெயினாவின் அற்புதமான ஆட்டம் அந்த மணியை ஆஸ்ட்ரேலியாவுக்கு மாற்றி அடித்து விட்டது(dead song for Australia and Ponting) ... இவர்களின் பாட்னர்ஷிப் 2003 சூப்பர் சிக்ஸில் பாகிஸ்தானுக்கு எதிராக டிராவிட்டும் யுவ்ராஜும் போட்ட பாட்னார்ஷிப்பை நினைவுபடுத்தியது .. ஆனால் அதை விட இது ஒருபடி மேல் .... ரெயினா பதானை நிறுத்திவிட்டு தன்னை டீமுக்குள் கொண்டுவந்தது சரிதான் என்பதை அழுத்தமாய் நிரூபித்து இருக்கிறார் .. ஆனால் இது இறுதி போட்டி வரை தொடரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்....
நேற்று கடைசி கட்டத்தில் பாண்டிங்கின் முகத்தை பார்க்கவே எனக்கு பாவமாக இருந்தது .... கிரிக்கெட் உலகில் சிங்கமாக வலம் வந்த அவர் நேற்று என்ன செய்வது என்றே தெரியாமல் பரிதாபமாக நின்று கொண்டிருந்தது கொஞ்சம் அவர் மேல் வருத்தபடவே வைத்தது .. என்ன செய்ய பாண்டிங் உச்சத்தில் இருக்கும் எல்லாருக்குமே கண்டிப்பாக அஸ்தமன காலம் ஒன்று வரத்தானே செய்யும் ... ஆனால் கிரிக்கெட் இருக்கும் வரை அவர் கண்டிப்பாக எல்லார் மனதிலும் நிலைத்து நிற்பார்... bye bye ponting…..
14 comments:
எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்குதுங்க...
உண்மையா சொல்லனும்னா ப்ரட்லீயோட உண்மையானா வேகத்த நேத்து பாக்க முடிஞ்சது 157 அது மட்டும் இல்லாம லாஸ்ட்டா ரத்தம் சிந்தி பந்து போட்டது எல்லாம் சூப்பர்.
\\கிரிக்கெட் உலகில் சிங்கமாக வலம் வந்த அவர் நேற்று என்ன செய்வது என்றே தெரியாமல் பரிதாபமாக நின்று கொண்டிருந்தது கொஞ்சம் அவர் மேல் வருத்தபடவே வைத்தது .\\ இது சிங்கம் இல்லீங்க, மரியாதை தெரியாத அசிங்கம். கொலை வெறியோட திரிஞ்ச நீங்களே இப்படி ஆகாலாமா?
//அதிர்ஷ்டத்தால் மட்டுமே அவர் அணியில் இருக்கிறார் ..// Dhoni is a very good leader. He deserve that captain post. Mokka vimarsanam pandratha vittu velaya parunga.
@jainadhiya
ipda kappithanama comment podama poi yuvrajum sachinum olunga velaiyadanumnu pray pannunga unga dhoni postinga kappathikka
@"ராஜா": அருப்புக்கோட்டை ராஜா அவர்களின் கோபத்துக்காக தோனியின் திறமையை சந்தேகிக்க முடியுமா? அவரின் leadership skill நமக்கு wc வாங்கித்தரும்.
@ராஜா: இந்த மேட்ச்ல பாண்டிங் அவுட் ஆகிய விதத்தை உற்று பார்த்தால் தோனியின் திறமை புரியும். ஃபைன் பொஸிஷனில் ஷார்ட் 3rd man ஜாஹிரிடம் பந்து அகப்பட்டது... பாண்டிங் வெளியேற்றப்பட்டார்... நன்றாகக் கவனிக்க வேண்டும்.... வலதுகை பேட்ஸ்மேன் ரிக்கிக்கு ஆஃப் சைடில் ஷார்ட் 3rd மேன் ஜாஹிர் என்பதை... இதுதான் தோணியின் பிரத்யேக ஃபீல்டிங் ஸ்டைல்.... கிரிக்கெட்டில் அதிர்ஷ்டம் மட்டும் இருந்தால் 3 அல்லது 4 மேட்ச்சோடு வீட்டுக்கு செல்லவேண்டும். Try to analyse technically.
jainadhiya..antha fielding setup ashwin kettu vanginathunga.dhoni set panninathu illa...
சச்சின் நல்லா விளையாண்டா டீம் தோத்துடும்னு சொல்றது சரியில்லை நண்பா. அவர் அடித்த 48 சதங்களில் 30க்கும் மேற்பட்ட ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இம்முறை சச்சின் அவுட் ஆனபொழுது நம்மால் இருந்து ஜெயிச்சுக்கொடுக்க முடியலியேங்கிற ஆதங்கம் முகத்தில் தெரிந்தது. இவர் ரெக்கார்டை உடைக்கனும்னா ஒருத்தர் 15 வயசில இருந்து 40 வயசு வரைக்கும் ஃபார்ம்ல இருந்து ஆடனும்.
இம்முறை கோப்பை நமக்கு கிடைக்க நல்ல வாய்ப்பிருக்கிறது. ஸ்ரீலங்காதான் கடும் போட்டியாக இருக்கும் என்பது என்பது என் கணிப்பு. பார்க்கலாம்.
//எல்லாத்துக்கும் ஒரு முடிவு
அடுத்த முடிவு தோனிக்கா இல்லை afridikkaa? ekirikittu irukku ethirpaarppu
//உண்மையா சொல்லனும்னா ப்ரட்லீயோட உண்மையானா வேகத்த நேத்து பாக்க முடிஞ்சது 157 அது மட்டும் இல்லாம லாஸ்ட்டா ரத்தம் சிந்தி பந்து போட்டது எல்லாம் சூப்பர்
but it coudln't save the team.. tat was pathetic ..
//இது சிங்கம் இல்லீங்க, மரியாதை தெரியாத அசிங்கம். கொலை வெறியோட திரிஞ்ச நீங்களே இப்படி ஆகாலாமா
kolai veri irukku . aanaalum pointing ippa pavam
//இந்த மேட்ச்ல பாண்டிங் அவுட் ஆகிய விதத்தை உற்று பார்த்தால் தோனியின் திறமை புரியும். ஃபைன் பொஸிஷனில் ஷார்ட் 3rd man ஜாஹிரிடம் பந்து அகப்பட்டது... பாண்டிங் வெளியேற்றப்பட்டார்... நன்றாகக் கவனிக்க வேண்டும்.... வலதுகை பேட்ஸ்மேன் ரிக்கிக்கு ஆஃப் சைடில் ஷார்ட் 3rd மேன் ஜாஹிர் என்பதை... இதுதான் தோணியின் பிரத்யேக ஃபீல்டிங் ஸ்டைல்.... கிரிக்கெட்டில் அதிர்ஷ்டம் மட்டும் இருந்தால் 3 அல்லது 4 மேட்ச்சோடு வீட்டுக்கு செல்லவேண்டும். Try to analyse technically
சரிங்க நீங்க சொல்லுறது போலவே அவர் நிப்பாட்டுனதுன்னே இருக்கட்டும் ... சவுத் ஆப்ரிக்கா கூட கடைசி ஓவரை நேஹ்ராவுக்கு கொடுத்ததும் அவர்தானே ... இங்கிலாந்த் உடன் பில்டிங் செட் பண்ணி கப்பிதனமா கோட்டை விட்டதும் அவர்தானே .... அவர் நன்றாக விளையாடினால் போதும் , அவர் அதை செய்ய தவறுகிறார் .... koliyum
திரு.ராஜா அவர்களே இப்போது உங்களின் முகத்தை எங்கு கொண்டு பொய் வைத்து கொள்ள போறீர்கள்? This is the ability of Dhoni.
Post a Comment