Followers

Copyright

QRCode

Thursday, March 24, 2011

ஆடு கோழியயாவது விட்டு வையுங்கப்பா?


தேர்தல் கமிசனா? இல்லை தாதா  கமிசனாயா இது.... ரோட்டுல ஓடுற ஒரு வண்டிய விட்டு வைக்கிறது கிடையாது... எல்லாத்தையும் கைமறைச்சி நிறுத்தி சோதனைங்கிர  பேர்ல  இம்சை பண்றது ... உங்களுக்கு கவர்மெண்ட் சம்பளம் தருது .. நீங்க எவ்வளவு நேரம் வேணும்னாலும் வண்டியை நிறுத்தி சோதனை போடலாம்  .. ஆனா நாங்க? வண்டியில ஆட்ட ஏத்திக்கிட்டு போய்கிட்டு இருக்கோம் ... சரியா இன்னும் அரைமணிநேரத்துல பார்ட்டி கையில எல்லா ஆட்டையும் ஒப்படைக்கணும் ...அப்பத்தான்  அவன் அத பிரியாணி போட முடியும் ... எங்களுக்கும் காசு கிடைக்கும்  ... இல்லைனா பெருசா வப்பான் ஆப்பு .... நான் மட்டும் இல்லை , என்னை மாதிரி ஏகப்பட்ட வணிகர்கள் இதனால பாதிக்கப்பட்டு இருக்காங்க தெரியும்ல.... நம்ம தமிழின தலைவர் அய்யா கலைஞர் கூட இத பத்தி அறிக்கை விட்டிருக்காரு ...

அவரு எவ்வளவு பெரிய ஆளு , அவரே எங்களுக்கு சப்போர்ட் பண்ணி இருக்காரு ... அவரு எவ்வளவு பெரிய ஆளுன்கிறதுக்கு ஒரு சின்ன உதாரணம் ... எனக்கு அப்ப சின்ன வயசு (இப்ப வரைக்கும் நான் சின்ன பையந்தான்) எங்க ஊருல தேர்தல் வந்துச்சி .... வோட்டு போட போற எல்லாரையும் ஏத்திக்கிட்டு போக கருப்பு சிவப்பு வண்டி ஒண்ணும் , முன்னாடி எம்‌ஜி‌ஆர் படம் போட்ட வண்டி ஒண்ணும் எங்க தெருக்குள்ள சுத்திக்கிட்டே இருந்திச்சி ... எங்கப்பா எம்‌ஜி‌ஆர் விசிறி .. அதனால கருப்பு சிவப்பு வண்டிய விட்டுட்டு எம்‌ஜி‌ஆர் படம் போட்ட வண்டியில ஏறுனாறு ... நான் எங்கப்பாகிட்ட கெஞ்சி கூத்தாடி , அவரோட எம்‌ஜி‌ஆர் படம் போட்ட அந்த வண்டியில ஏரிக்கிட்டேன் .... வண்டி நேர எங்க ஊருல ஒதுக்குபுறமா இருந்த டீ கடைக்கு போச்சி ... எங்கப்பா என்ன வண்டியிலேயே இருக்க சொல்லிட்டு  டீ கடைக்குள்ள போனாறு ... அங்க கரை வேட்டி கட்டுன நாலு பேரு எங்கப்பாவுக்கு டீயும் நாலு வடையும் வாங்கி கொடுத்தாணுக , கூட வந்த எனக்கும் ஒரு டீ , ரெண்டு வடை கிடச்சது ... எங்க கூட வந்த எங்க பெரியப்பா அப்படியே கடைக்கு பின்னாடி பெரிய தோட்டம் இருந்தது அதுக்குள்ள போய்ட்டாறு .. ஒரு பத்து நிமிஷம் கழிச்சி எங்க பெரியப்பா வந்தாறு , கிட்ட போனா அவரு வாயில இருந்து சாராய நெடி .. நான் எங்கப்பாகிட்ட கேட்டேன் ஏம்ப்பா வீட்டுல இருந்து வண்டியில கூப்பிட்டு வந்து ,ஓசியில டீ வடை எல்லாம் வாங்கி தாரணுக?” அவரு தேர்தல எம்‌ஜி‌ஆர் ஜெயிக்கணும்னா , நிறைய பேரு ரெட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடணும் , அதான் எல்லாருக்கும் டீ வடை வாங்கி கொடுத்து ரெட்டை இலைக்கு ஓட்டு போட வைக்கிறாணுக அப்படின்னு ,, அப்போ உதைய சூரியனுக்கு யாருமே ஓட்டு போட மாட்டாங்களேன்னு அப்பாவியா நான் கேட்டேன் .. அதுக்கும் இப்படி நாலு பேரு டீ வடை வாங்கி கொடுத்துக்கிட்டு இருப்பானுகடான்னு சொன்னாரு ... இப்படி கேவலம் டீக்கும் வடைக்கும் எங்க அப்பங்க எல்லாம் அந்த காலத்துல ஓட்ட அடமானம் வச்சிக்கிட்டு இருந்தாணுக... ஆனா இன்னைக்கு நிலமை அப்படியா? என்னோட ஒரு ஓட்டுக்கு இன்னைக்கு மதிப்பு என்ன தெரியுமா? ஒரு டி‌வி , ஒரு காஸ் அடுப்பு , 3000 பணம், ரெண்டு கிராம் தங்கம் அது மட்டும் இல்லாம மிக்ஸி கிரைண்டர் , 3ஜி மொபைல் இதெல்லாம் வந்துகிட்டு இருக்காம்.... எப்பூடி???? இந்த மாபெரும் மாற்றதுக்கு யார் காரணம்? இந்த தேர்தல் கமிசனா? இல்லை ஊழல் ஊழல்னு தெனமும் கூப்பாடு போட்டுகிட்டு இருக்குற சுப்ரீம் கோர்ட்டா? எங்க கலைஞர் அய்யாயா..... எங்க அய்யாதான் காரணம்....

இப்படி ஒரே தலைமுறையில இவ்வளவு பெரிய புரட்சிய செஞ்ச அவரையே பொலம்ப வைக்கிறாணுக இந்த தேர்தல் கமிஷன் பன்னாடைக...  அவரு எங்கள மாதிரி வணிகர்கள் ரொம்ப கஷ்டபடக்கூடாதுன்னு எவ்வளவு அக்கறையா பேசுராறு? இந்த நல்ல மனசு யாருக்குயா வரும்?  இத நம்ம தோஸ்து ஒருத்தங்கிட்ட சொன்னேன் ,, அவன் இன்னா சொல்லுறானா ... யோ கூமுட்ட... பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டுளையும் ஆட்டுறாராறு உங்க தலைவரு... ஊரு உலகத்துல இவரு மட்டுமா கட்சி நடத்துராறு ... மத்தவங்க எல்லாம் சும்மா இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் வலிக்கிது? இப்படி அறிக்கை விட்டே எங்கப்பன் பரண்ல இல்லைன்னு இவரே ஒளரிக்கிட்டு இருக்காரு... வணிகர்கள் மேல அக்கறை உண்மையிலேயே இவருக்கு இருந்துச்சுனா , மின்சாரம் அரைகுறையா கொடுக்க மாட்டாறு , பெட்ரோல் விலைய தாறுமாறா ஏத்தி விட்டிருக்க மாட்டாறு , விலைவாசி இப்படி செவ்வாய் கிரகத்த தொட்டு இருக்காது ... அதை எல்லாம் பண்ணாம ஏதோ இந்த கெடுபிடினால உங்க வியாபாராமே நொடுஞ்சி போறது மாதிரி இதுக்கு எதிரா அறிக்கை விட்டிருக்காரே இதுக்கு காரணம் நீ நெனைக்கிற மாதிரி உன் மேல இருக்கிற அக்கறை இல்லடா? மக்கள் ஆப்பு வைக்க ரெடியா  இருந்தா காச கொடுத்து ஆஃப் பண்ணிடலாம் , அந்த காசுக்கே ஆப்பு வந்தா? இதுதான் அவரு இப்படி பம்மிக்கிட்டு அறிக்கை விட காரணம் ....

இவன் இப்படி சொன்னதும் எனக்கு பகீர்னுது ... பின்ன இவணுக இப்படி பயங்கர கெடுபிடியா இருந்தா மறுபடியும் நாங்க ஒரு டீக்கும் , ஓட்ட  வடைக்கும் , ஒரு டம்ளர் சாராயத்துக்கும் எங்க வோட்ட அடமானம் வைக்க வேண்டியதுதானா?” தமிழனின் தலைவிதி மாறவே மாறாதா?

எங்கள மாதிரி ஆளுங்க இப்படி கஷ்டபடவேண்டாமேன்னுதான் நம்ம ஹை கோர்ட் புண்ணியவானுங்க தேர்தல் கமிஷனுக்கு கடிவாளம் போட்டுட்டாணுக... ஆமா சும்மா சும்மா ஆதாரம் இல்லாமல் எந்த வண்டியையும் நிப்பாட்டி சோதனை பண்ண கூடாதாம்.... இத கேட்ட  பின்னாடிதான் எனக்கு நிம்மதியே.... இனி அய்யா தைரியமா மினி பஸ்லயும் , டிராவல்ஸ் வண்டிலேயும் , சரக்கு லாரிலயும் பண மூட்டையை ஊர் ஊருக்கு அனுப்பி வைக்கலாம்.. இனி எங்க ஊருக்கு வர்ற மினி பஸ்ல டெய்லி சரக்கு பாட்டிலும் , முனியாண்டி கடை பிரியாணியும் வந்து சேந்திரும்....  தேர்தல் வரைக்கும் ஜாலிதான்...



ஏண்ணே நமக்கு இந்த வேண்டாத வேலை

இருளை விளக்க வந்த விடிவெள்ளியாய் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் தோன்றி இருக்கிறது ... அந்த சுயமரியாதையின் மொத்த உருவம் , தேவர் குல சிங்கம் தமிழ்நாடு முழுவதும் தனித்து போட்டி போட போகிறதாம் .... நம் முழு ஆதரவையும் கொடுத்து அவரை தாறு மாறாக வெற்றி பெற செய்தால் மட்டுமே தமிழ் நாடு சுபிட்சம் பெரும் ....





அண்ணே 234 தொகுதி இருக்குற தம்ழ்நாட்டுல வெறும் நாப்பது தொகுதியில மட்டும் போட்டி போடுறீங்களே , அதுக்கு காரணம் தமிழ்நாட்டுல மொத்தமே நாப்பது பேருதான்(உங்களையும் சேத்து)   உங்க கட்சியில இருக்காணுக அப்படின்னு எதிர்க்கட்சிகாரங்க ஏளனமா பேசுராங்க... எனக்கு என்ன டவுட்னா உங்களையும் நம்புறதுக்கு நாப்பது பேர் இருக்குராணுகளா?  


காலிறுதி யாருக்கு இறுதி? 

இன்னைக்கு இந்தியாவுக்கு வாழ்வா சாவா போட்டி ... நமக்கு சங்கு ஊதுறதுக்குன்னே காலிறுதில ஆஸ்ட்ரேலியாகூட மோத வைக்கிறாணுக ...   போண்டிங்க் வேற இன்றோடு டெண்டுல்கரின் உலக கோப்பை கனவுக்கு முடிவு கட்டுவோம்னு தெனாவெட்டா  அறிக்கை விடுராறு .... அண்ணே நாங்க எல்லாம் சுனாமிலேயே சிக்சர் அடிக்கிறவணுக   நீங்க எல்லாம் ஜூஜூப்பி  ... இன்னும் இருபது வருஷம் கழிச்சும் உங்க பையன் இதே மாதிரி பேட்டி  கொடுத்துக்கிட்டு இருப்பான் ... வயசானவுடனே டீம விட்டு தூக்குறதுக்கு தெண்டுல்கர் என்ன ஆஸ்ட்ரேலியன் டீம்லயா விளையாடுராறு .... இது இந்தியன் டீம் ... 2003ல ஒரு மாட்ச் ஜெயிக்க வச்ச ஆஷிஷ் நெஹ்ராவ அதுக்காகவே பத்து வருஷமா டீம்ல வச்சிருக்கோம் ... டெண்டுல்கர அவ்வளவு சீக்கிரம் விட்டிடுவோமா? ஆனா ஒண்ணு உறுதி இன்னைக்கு நீங்க தோத்தா இதுதான் உங்களுக்கு கடைசி மாட்ச் ,  ... பாத்து சூதானமா விளையாடுங்க ராசா ....     


  

2 comments:

ILLUMINATI said...

ஹாஹா,ஆடு நனையுதேனு அழுத கதை தான் இது.

நானு நேத்து போட்ட ட்விட் இது.

//தேர்தல் கமிஷன்,வாகன சோதனையில் ஆடு, கோழிகளைக் கூட விட்டுவைக்கவில்லையே-கருணாநிதி #ஆனா பெருச்சாளிங்க தப்பிச்சுடுதாமே!உங்களுக்கு எதுனா தெரியும்?// ;)

Karthikeyan said...

nice...very nice. உங்க அப்பாவும் டீக்கும் வடைக்கும்தானா ஓட்டை போட்டாரு? என்ன பண்றது எங்கப்பாவும் அதே கேஸ்தான். இதே அனுபவம்தான் எனக்கும்.

எங்க ஏரியாவில இன்னும் ஒன்னும் குடுக்க ஆரம்பிக்கலியே?

LinkWithin

Related Posts with Thumbnails