நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஏதோ ஒரு கணத்தில் ஒரு மூன்றாவது மனிதன் எடுக்கும் முடிவினால்தான் பெரும்பாலும் அமைகிறது ... என் அப்பா என் அம்மாவை திருமணம் செய்வதர்க்கு முன்னாள் அவருக்கு வேறு ஒரு பெண் பார்பதர்க்காய் மதுரையை அடுத்த மேலூருக்கு சென்றுக்கிறார் ... அந்த வயதில் அவர் அப்படியே இந்த வயதில் நான் ... தாடியை ஒரு ஆண்மையின் அடையாளமாக கருதி எப்பொழுதும் அதை தன்னுடனே வைத்திருப்பாராம் ... பெண் பார்க்க சென்ற பொழுதும் அவர் அண்ணன் தம்பிகள் எவ்வளவு கெஞ்சியும் மிரட்டியும் அவர் தன் தாடியை எடுக்கவில்லை ... எனக்கு என்னை பிடித்த பெண் மட்டும் தேவை இல்லை அவளுக்கு என் தாடியும் பிடித்திருக்க வேண்டும் என்பது அவர் எண்ணம் ... அவருக்கு அந்த வயதில் தாடியின் மேல் அவ்வளவு பாசம் ... அவர் எண்ணியதை போலவே அந்த பெண்ணுக்கு இவரை பிடித்து விட்டதாம் ... குறிப்பாய் தாடி வைத்த என் அப்பாவை .... ஆனால் பெண்ணின் வீட்டார் பெண்ணின் அண்ணன் வியாபார விஷயமாக பர்மா சென்றிப்பதாகவும் அவர் ஒருவாரத்தில் வந்து விடுவதாகவும் அவர் வந்து மாப்பிள்ளையை பார்த்து அவருக்கும் பிடித்திருந்தாள் மேற்கொண்டு பேசலாம் என்றும் சொல்லி இருக்கிறார்கள் .. என் அப்பாவும் தன் தாடியை பிடித்த ஒரு பெண் கிடைத்த சந்தோசத்தில் அதர்க்கு சரி என்று சொல்லி வந்து விட்டார் ....
ஒரு வாரத்தில் சரியாக அந்த பெண்ணின் அண்ணன் வந்து பார்த்திருக்கிறார் ... அதன் பின்னர் ஒரு வாரம் கழித்தும் எந்த பதிலும் பெண் வீட்டாரிடம் இருந்து வரவில்லை ... பிறகு என் அப்பா புரோக்கர்ரிடம் கேட்டு தெரிந்துகொண்டாராம் , அந்த ஆளுக்கு என் அப்பாவின் தாடி பிடிக்கவில்லை , என் அப்பாவை சுத்த பத்தமில்லாத ஆள் என்று நினைத்துக்கொண்டு வேணாம் என்று சொல்லி விட்டானாம் ... தாடியை எடுக்கமாட்டேன் என்ற என் அப்பாவின் பிடிவாதமும் , தாடி இருந்தால் அவன் சுத்தபத்தமில்லாதவன் என்ற அந்த மூணாவது மனிதனின் எண்ணமும்தான் இன்று நான் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்க காரணம் ... இந்த இருவரில் ஒருவர் மாறி இருந்திருந்தாலும் நான் இன்று இங்கு இல்லை ... ஒருவேளை இருவரில் ஒருவர் மாறி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நான் எங்கு இருந்திருப்பேன்? இருந்திருப்பேனா இல்லையா? இருந்திருந்தால் இதே உருவம் எனக்கு இருந்திருக்குமா? இல்லை வேறு உருவத்தில் இருந்திருப்பேனா? என்னுடைய குணநலங்கள் மாறி இருந்திருக்குமா? அப்படி என்றாள் நான் என்ற எனக்கான அடையாளம் எது? இந்த கேள்வி என் மூளையின் ஒவ்வொரு செல்களிலும் நுழைந்து அதர்க்கான விடையை தேடி கிடைக்காமல் சம்பட்டியால் அடித்த தலைவலியாய் மூளையோடு உறைந்து போகிறது.... புரியாத புதிர்தானே வாழ்க்கை ....
சென்ற வாரம் இரண்டு புத்தகங்களை படிக்க நேர்ந்தது... இரண்டுமே சினிமா சம்பந்தபட்டவர்கள் எழுதிய பிளாஷ்பேக் புத்தகங்கள் .. ஒன்று பாலாவின் இவன்தான் பாலா இன்னொன்று பிரகாஷ்ராஜின் சொலுவதெல்லாம் உண்மை .. இரண்டும் ஆனந்த விகடனில் தொடராக வந்தது ... இந்த இரண்டு புத்தகங்களிலும் எனக்கு பிடித்த விஷயம் எதர்க்கும் அஞ்சாமல் உள்ளதை உள்ளபடி கூறிய அவர்களின் நேர்மை .... குறிப்பாய் பாலா .. எட்டாம் வகுப்பில் டோப்பு அடித்தது , பத்தாம் வகுப்பிலேயே கொலை செய்ய பிளான் பண்ணியது , இன்னும் ஒரு வருடம்கூட உயிருடன் இருக்கமாட்டான் என்று அவர் குடும்பத்தினரே என்னும் அளவுக்கு போதையில் ஊறி போயி இருந்தது என்று தன்னுடய கடந்த காலத்தை எதர்க்கும் அஞ்சாமல் அப்படியே புட்டு புட்டு வைத்திருக்கிறார் ...
சமூகத்தில் வெற்றி பெற்ற எவருமே தன்னை பற்றி சிறு வயதில்இருந்தே கடுமையாக உழைப்பவன் என்று பொய்யாக ஒரு பிம்பத்தை உருவாக்கவே நினைப்பார்கள் ... என்னை போல நீங்கள் ஆவது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம் எல்லாராலும் அது முடியாது என்று ஏதோ கடவுள் விசேசமாக அவர்களை மட்டும் உலகிர்க்கு ஆசீர்வதித்து அனுப்பியதை போல அள்ளி விடுவார்கள் .. ஆனால் பாலா சொல்லியதோ வேறு : “நானே இவ்வளவு உயரத்தை தொடும் போது நீங்கள் எல்லாம் தங்கம் ... எதை வேண்டுமானாலும் அடையலாம்”… ஏர்வாடியில் வைத்து அவரின் நண்பன் கூறினானாம் “ பாலா நீயும் இங்க இப்படி ஒரு பைத்தியமா இருந்திருக்க வேண்டியவன் ஜஸ்ட் எஸ்கேப் “ என்று .படித்த எனக்கு கிறுகிறுத்தது .....
சிறு வயது அனுபவங்களை பெரிய ஆள் ஆனவுடன் மரக்கின்ற அல்லது மறந்ததை போல நடிக்கின்ற ஆட்களுக்கு மத்தியில் அந்த அனுபவங்களை காலம் காலமாய் தன்னோடு சுமந்து செல்கிற பாலா எனக்கு தெரிந்து இப்போதைய தமிழ் சினிமாவின் உண்மையான பிதாமகன் .... அந்த அனுபவங்கள்தான் அவரின் மூன்றாவது கண் அல்லது ஏழாவது புத்தி என்று எண்ணுகிறேன் ....
ரோட்டில் போகும் பிச்சைக்காரனை பார்க்கும் போது முதலில் பரிதாபம் எழும் , இரண்டாவது முறை காணும் போது எரிச்சல் எழும் , அடுத்த தடவை அந்த எரிச்சல் கோபமாய் மாறும் ... பிச்சைக்காரர்களிடம் நான் காட்டிய உணர்வு சுழற்சியை மொத்தமாய் மாற்றி போட்டது பாலாவின் அந்த ஏழாவது அறிவு ... இன்று ஏதாவது ஒரு பிச்சைக்காரனை பார்க்கும் போது அவர்களின் வாழ்க்கையின் பின்னால் இருக்கும் பயங்கரம் என்னை நடுநடுங்க வைக்கிறது .என்றாள் காரணம் பாலாவின் அனுபவங்களும் அதை திரையில் அப்படியே கொண்டு வந்த அவரின் திறமையும்தான் ... உலக படம் எடுக்கிறேன் என்று நம்மை வாட்டி வதைக்கும் அறிவு ஜீவி இயக்குனர்கள் பாலாவிடம் கற்று கொள்ள நிறைய இருக்கிறது ...
பிரகாஷ்ராஜின் சொல்லுவதெல்லாம் உண்மை தலைப்பை போலவே உள்ளே இருப்பதெல்லாம் உண்மை ... தொழியோடு இரவில் லாட்ஜில் இருந்தது , வீட்டு வேலை பார்க்க வந்த சித்தாலுடன் ஒரு மாதம் குடும்பம் நடத்தியது , ஷூட்டிங் ஸ்பாட்ட்டில் நடிகையுடன் ஒவ்வொருவராக உடலுறவு கொண்டது என்று தன் காமத்தையும் மறைக்காமல் பந்தியில் பரிமாறிய தைரியம் எல்லாருக்கும் அமையாது ... இந்த புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு குறும்படம் பார்த்த உணர்வை கொடுத்தது ... காதல் , அம்மா பாசம் , காமம் , பொறாமை , இழப்பு , துரோகம், ஈகோ என்று எல்லாவற்றையும் பற்றி ஒரு ஞானியை போல தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்தே நமக்கு விளக்கி இருப்பார் .... இந்த புஸ்தகம் படித்த பின்னர் எனக்கு பிரகாஷ்ராஜின் மேல் இருந்த மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது ... ஆனால் இதை படித்த பின்னர் தன் மனைவியின் மீது இவ்வளவு பாசத்தை பொழிந்த ஒரு மனிதன் எவ்வாறு அவரை விவாகரத்து செய்தான் என்று எனக்கு விளங்கவே இல்லை… the most dynamic component in the world is human’s mind... இந்த இரண்டு புஸ்தகங்களும் எனக்கு சொல்லி தந்தது அதுதான் ....
இந்த இரண்டு புஸ்தகங்களும் நண்பர் குண்டு ராஜகோபால் அவர்களின் வலைத்தளத்தில் இருந்துதான் தரவிறக்கம் செய்து பிடித்தேன் ... சிறந்த புஸ்தகங்களை தேடி தேடி தன் தளத்தில் போதும் நண்பர் குண்டுவிர்க்கு நன்றிகளும் வாழ்ததுக்களும்... தொடரட்டும் நண்பா உங்கள் பணி ... அவரின் தளத்தில் இருந்து சுஜாதாவின் பல நூல்களை தரவிறக்கம் செய்துள்ளேன் .. இனிதான் படிக்க வேண்டும் ... ஆனால் எனக்கு சுஜாதா மீது அவ்வளவு ஈர்ப்பு கிடையாது .. அவர் ஒரு படைப்பாளி என்று ஏற்றுக்கொள்ள எனக்கு முடியவில்லை ..... என்னை பொறுத்த வரை அவர் ஒரு எழுத்துலக விரிவுரையாளர் அவ்வளவே... மேலும் அவர் வாழ்க்கையோடு இயந்த கதைகளோ இல்லை படைப்புகளையோ இதுவரை கொடுத்ததில்லை ... பத்தினியின் கணவனுக்கு மட்டுமே கடவுள் தெரிவார் என்ற லாஜிக்தான் சுஜாதாவின் பெரிய வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன் .... ஆனால் எங்கெங்கோ படித்த பல விசயங்களை கோர்வையாக நமக்கு புரியும்படி எளிமையாக கொடுப்பதில் அவருக்கு இணை அவர்தான் ... மற்றபடி மனதை விட்டு நீங்காத படைப்புகளை அவரால் கடைசி வரை தர முடியவில்லை.... காரணம் நாம் வாழ்வியலோடு அவருக்கு இருந்த அன்னியதன்மை .... திரை உலகில் கூட அவரின் இந்த அன்னியதன்மை தெளிவாக ஒவ்வொரு படைப்பிலும் தெரியும் ... விக்ரமும் சரி எந்திரனும் சரி என் மனதில் ஒட்டாமல் போனதர்க்கு காரணம் அந்த யதார்த்தமின்மைதான் ... சுஜாதா சிறந்த பொழுதுபோக்குவாதி ஆனால் சிறந்த படைப்பாளி அல்ல ...
34 comments:
நானும் படித்து மகிழ்ந்த ஆச்சரியத்த புத்தகம்தான் இங்கு வருபவர்களுக்கு இந்த புத்தகங்களை படிக்க வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்கள் இங்கு வாருங்கள்
இவன் தான் பாலா
http://gundusbooks.blogspot.com/2011/02/blog-post_2554.html
பிரகாஷ் ராஜ் - சொல்லாததும் உண்மை
http://gundusbooks.blogspot.com/2010/08/blog-post_8624.html
சுஜாதாவை பற்றிய விளக்கம் சரிதான். நானும் அவர்களின் பல நூல்களை படித்து கொண்டு தான் இருகிரேன். எனது கருத்து என்னவென்றால் ஒரு சோகமான படம் பார்ப்பதை விட சந்தோசமான படம் பார்க்கும் பொது ஆனந்தமாக இருக்கும் அது போலத்தான் நகைச்சுவைகளை எழுத்துவடிவில் அதிகம் கண்டது சுஜாதாவின் படைப்புகளில் மட்டும்தான்
இன்னும் பல வருடங்கள் சென்று படித்தாலும் அதில் கையாளப்பட்ட நகைச்சுவை நம்மை சிரிக்க வைக்கும்
மேலும் சில சுஜாதா புக்ஸ் இருக்கிறது அதை பதிவிட முடியாது வேண்டும் என்றால் எனக்கு மெயிலில் தொடர்புகொள்ளவும் அனுப்பி வைகிரேன்
mail Id : s.rajagopal1984@gmail.com
//என்னை பொறுத்த வரை அவர் ஒரு எழுத்துலக விரிவுரையாளர் அவ்வளவே...//
:)
சுஜாதாவை எனக்கு அவ்வளவா பிடிக்காது.மற்றவர்கள் புகழும் அளவுக்கு அவர் எழுத்தில் அப்படி என்ன தான் இருக்குன்னு பார்த்தும் எனக்கு ஒண்ணும் கிடைக்கல.அவர் கதைகள(படித்தது கொஞ்சமே :) ) விட அவர் எழுதிய ஏன் எதற்கு எப்படி முதல் பாகம் பிடிக்கும்.அவருடைய எழுத்துக்களில் நிறைய stereotypical விசயங்களும்,வசீகரமில்லாத எழுத்து நடையும் இருப்பதா தான் எனக்கு தோன்றி இருக்கு.
பாலாவும் பிரகாஷ் ராஜும் நான் மதிக்கும் இரு நபர்கள்.இந்த ரெண்டு புக்கையும் படிக்கணும்.சீக்கிரமே.. :)
சுஜாதா எழுதிய புத்தகங்களை எல்லாம் தூக்கி சாப்பிடக் கூடிய ஒரு புத்தகம் உள்ளது. அது, "வந்தார்கள், வென்றார்கள்". சுஜாதாவை விட மதன் எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனா இப்ப ஹாய் மதன்ல முன்ன இருந்த புத்திசாலித்தனம் இல்லாத மாதிரி தோணுது.
// ஒரு சோகமான படம் பார்ப்பதை விட சந்தோசமான படம் பார்க்கும் பொது ஆனந்தமாக இருக்கும் அது போலத்தான் நகைச்சுவைகளை எழுத்துவடிவில் அதிகம் கண்டது சுஜாதாவின் படைப்புகளில் மட்டும்தான்
அப்ப அவரை எழுத்துலக சுந்தர்.C என்று சொல்லுங்கள் ...
//இன்னும் பல வருடங்கள் சென்று படித்தாலும் அதில் கையாளப்பட்ட நகைச்சுவை நம்மை சிரிக்க வைக்கும்
அப்படி ஏதாவது அவரின் புஸ்தகம் இருந்தால் சொல்லுங்கள் .. படிப்போம்
// அவருடைய எழுத்துக்களில் நிறைய stereotypical விசயங்களும்,வசீகரமில்லாத எழுத்து நடையும் இருப்பதா தான் எனக்கு தோன்றி இருக்கு.
அதேதான் என்னுடய கருத்தும் நண்பா ...
//இந்த ரெண்டு புக்கையும் படிக்கணும்.சீக்கிரமே.. :)
படியுங்கள் நண்பா ... குறிப்பாய் இவன் தான் பாலா ... கண்டிப்பாக பிடிக்கும்
// அது, "வந்தார்கள், வென்றார்கள்". சுஜாதாவை விட மதன் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அதில் இருக்கும் கோர்வையான எழுத்துநடை எனக்கு மிகவும் பிடிக்கும் ... சுஜாதாவின் ஏன் எதர்க்கு எப்படியை விட பல படிகள் மேல் ....
// ஆனா இப்ப ஹாய் மதன்ல முன்ன இருந்த புத்திசாலித்தனம் இல்லாத மாதிரி தோணுது.
நானும் இதை உணர்திருக்கிறேன் ... காரணம் வயதாகி விட்டதாலோ?
எனக்கு ஒரு டவுட் சுஜாதா, மதன் இல்லாத ஆனந்த விகடன் எப்படி இருக்கும்?
மிக ஆழமான தேடல் உடையவர்களும்
அதிக எதிர்பார்ப்பு உடையவர்களும்
உங்களைபோல என்னை போல கஷ்டப்படவேண்டும் .
சுஜாதாவை பற்றிக்கொண்டு வளர்ந்ததால் கொஞ்சம் உங்கள் மேல் கோபம் வருகிறது .வேதனையும் வருகிறது
ஓஷோ போல அவரும் புரிந்து கொள்ளபடதவராக ஆகிவிட்டாரே
என்ற வருத்தம்தான் .
நீங்கள் உங்கள் கருத்தை சொல்லிவிட்டீர்கள்
--
என்றென்றும் அன்புடன் ,
சுகி ...
// மிக ஆழமான தேடல் உடையவர்களும்
அதிக எதிர்பார்ப்பு உடையவர்களும்
உங்களைபோல என்னை போல கஷ்டப்படவேண்டும் .
உண்மைதான் .... தேடல்கள் இல்லாமல் இருந்தால் அந்த நிமிடம் சந்தோஷமாக நிம்மதியாக இருக்கலாம் ஆனால் தேடல்கள் வெற்றி அடைந்தால் அடுத்து வரும் பொழுதுகள் நிம்மதியாக அமையுமே ...
//கொஞ்சம் உங்கள் மேல் கோபம் வருகிறது .வேதனையும் வருகிறது
ஓஷோ போல அவரும் புரிந்து கொள்ளபடதவராக ஆகிவிட்டாரே
என்ற வருத்தம்தான் .
நீங்கள் உங்கள் கருத்தை சொல்லிவிட்டீர்கள்
உங்கள் புரிதலும் என் புரிதலும் வேறு வேறு திசைகளில் இருந்துவிட்டது ... ஒரு வேளை இன்னும் அதிக நேரம் சுஜாதாவிர்க்காய் நான் செலவழித்தால் நானும் உங்கள் திசையில் பயணப்பட ஆரம்பித்துவிடுவேனோ என்னவோ?
நான் படித்தவரையில் என்னை சுஜாதா கவரவில்லை ....
மதன் இல்லாத விகடன் இப்ப இருக்கிற மாதிரி தான் இருக்கும் என் கருத்து.இப்பயே மதன் இருக்கிற மாதிரி தெரியல.விகடன் standard ரொம்ப குறைஞ்சு போச்சு.It looks like a model these days.Looks glossy and attractive at the outside but has nothing of worth inside.
//
ILLUMINATI said...
It looks like a model these days.Looks glossy and attractive at the outside but has nothing of worth inside. //
ha ha ha I am accept, its just like go to vannathirai but too much cost now.
// It looks like a model these days.Looks glossy and attractive at the outside but has nothing of worth inside.
ஹா.. ஹா... ஹா... மேக் அப் மட்டும்தான் .. மேட்டர் எதுவும் இல்லைன்னு சொல்லுறீங்க ...
ஆனால் அந்த மேக் அப்புக்கு அவர்கள் கேட்கும் காசு ரொம்ப அதிகம் ...
//...ஒருவேளை இருவரில் ஒருவர் மாறி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நான் எங்கு இருந்திருப்பேன்? இருந்திருப்பேனா இல்லையா? இருந்திருந்தால் இதே உருவம் எனக்கு இருந்திருக்குமா? இல்லை வேறு உருவத்தில் இருந்திருப்பேனா? என்னுடைய குணநலங்கள் மாறி இருந்திருக்குமா? அப்படி என்றாள் நான் என்ற எனக்கான அடையாளம் எது?...//
இதை நான் எதிர்பார்த்தேன். காரணம், கல்யாணம் ஆச்சுல்ல... ஹாஹா
Jokes apart, wishing you a Happy Married Life. திருமண வாழ்த்துகள் நண்பா. :)
சுட்டியை தந்த நண்பர் ராஜகோபால் அவர்களுக்கு நன்றிகள் பல. :)
கஞ்சாகுடுக்கியைப் பற்றி எனக்கு கவலை இல்லை, பிரகாஷ்ராஜின் புத்தகத்தை அவசியம் படிப்பேன்.
சுஜாதாவை பற்றிய உங்களது கருத்துடன் வேறுபடுகிறேன். :P
//
Yoganathan.N said...
கஞ்சாகுடுக்கியைப் பற்றி எனக்கு கவலை இல்லை, பிரகாஷ்ராஜின் புத்தகத்தை அவசியம் படிப்பேன்.//
உங்கள் கருத்து எனக்கு உடன் பாடு இல்லை., அவர் சேது எடுபதர்க்கு பட்ட கஷ்ட்டங்கள் அதற்காக அவர் காத்திருந்த காலங்கள் பற்றி தெரிந்தால் நீங்கள் இந்த மாதிரி சொல்லமாட்டீர்கள் இவன் தான் பாலா படித்து பாருங்கள் அதன் பின் தெரியும்
//இன்று ஏதாவது ஒரு பிச்சைக்காரனை பார்க்கும் போது அவர்களின் வாழ்க்கையின் பின்னால் இருக்கும் பயங்கரம் என்னை நடுநடுங்க வைக்கிறது .என்றாள் காரணம் பாலாவின் அனுபவங்களும் அதை திரையில் அப்படியே கொண்டு வந்த அவரின் திறமையும்தான் //
உண்மையில் அது பாலாவின் படைப்பு அல்ல அதற்க்கு தூண்டுகோலாக இருந்தது ஜெயமோகனின்
"ஏழாம் உலகம்" நாவல்., இந்த நாவல் கிடைத்தால் படித்துபாறு நண்பா.
எழுத்தாளர் ஜெயமோகனின் தளம் இது முடிந்தால் சென்று பாரு
http://www.jeyamohan.in/
// கஞ்சாகுடுக்கியைப் பற்றி எனக்கு கவலை இல்லை,
நீங்க எதுக்கு சொல்றீங்கண்ணு எனக்கு தெரியும் ... எனக்கும் அந்த விஷயத்தில் பாலாவின் மேல் வன்மம்தான் ... தலையை போல சொல்ல வேண்டும் என்றாள் , இவர்களையெல்லாம் கடவுள் பார்த்து கொள்வார் ... ஆனால் அவருக்குள் இருக்கும் திறமைகளை நாம் பாராட்டியே ஆகவேண்டும் ... அதனால்தான் இந்த பதிவே ..
//சுஜாதாவை பற்றிய உங்களது கருத்துடன் வேறுபடுகிறேன். :P
சுஜாதாவிடம் அப்படி என்ன இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை... டெக்னாலஜி சம்பந்தமாக எழுதுகிறார் ஆனால் அதில் எந்த சுவாரஷ்யாமும் இருப்பதாய் தெரியவில்லை .. எந்திரன் திரைக்கதை அவர்தான் என்று கேள்விபட்டேன் ... ரோபோவை ஐஸ்வர்யா ராயை காதலிப்பது போல கற்பனை பண்ண அவரால் மட்டுமே முடியும் ...
// உண்மையில் அது பாலாவின் படைப்பு அல்ல அதற்க்கு தூண்டுகோலாக இருந்தது ஜெயமோகனின்
"ஏழாம் உலகம்" நாவல்., இந்த நாவல் கிடைத்தால் படித்துபாறு நண்பா.
எழுத்தாளர் ஜெயமோகனின் தளம் இது முடிந்தால் சென்று பாரு
http://www.jeyamohan.in/
கேள்விபட்டு இருக்கிறேன் ... ஆனால் அதை திரையில் அப்படியே கொண்டு வந்தது பாலாதான் என்பதால்தான் அப்படி எழுதினேன் ... அந்த நாவல் படித்ததில்லை ... ஆனால் படிக்க வேண்டும் என்று நினைத்து முடியாமலே போயி கொண்டு இருக்கிறது ..
// இதை நான் எதிர்பார்த்தேன். காரணம், கல்யாணம் ஆச்சுல்ல... ஹாஹா
Jokes apart, wishing you a Happy Married Life. திருமண வாழ்த்துகள் நண்பா. :)
அப்படி எல்லாம் இல்லை நண்பா ... கல்யாண வாழ்க்கை அருமையாக சென்று கொண்டு இருக்கிறது ... திருமானத்திர்க்கு அழைக்கமுடியாமல் போனதார்க்கு மன்னித்து விடுங்கள் ....
//உங்கள் கருத்து எனக்கு உடன் பாடு இல்லை., அவர் சேது எடுபதர்க்கு பட்ட கஷ்ட்டங்கள் அதற்காக அவர் காத்திருந்த காலங்கள் பற்றி தெரிந்தால் நீங்கள் இந்த மாதிரி சொல்லமாட்டீர்கள் இவன் தான் பாலா படித்து பாருங்கள் அதன் பின் தெரியும்//
நண்பரே, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என புரிகிறது.
அவரவருக்கு ஒரு பிண்ணணி. இவர் ஒருவர் மட்டுமே ஆரம்ப காலத்தில் கஷ்டபட வில்லையே. நிறைய பேர் இருக்கிறார்கள். :)
He simply doesn't interest me.
//நீங்க எதுக்கு சொல்றீங்கண்ணு எனக்கு தெரியும் ... எனக்கும் அந்த விஷயத்தில் பாலாவின் மேல் வன்மம்தான் ... தலையை போல சொல்ல வேண்டும் என்றாள் , இவர்களையெல்லாம் கடவுள் பார்த்து கொள்வார் ... ஆனால் அவருக்குள் இருக்கும் திறமைகளை நாம் பாராட்டியே ஆகவேண்டும் ... அதனால்தான் இந்த பதிவே .. //
அட, அதற்காக மட்டும் இல்லை நண்பா. எனக்கு இவரது படங்கள், 'hey look, only I can make award movies' போன்ற ஒரு உணர்வை அளிக்கும்.
உங்களுக்கு சுஜாதா போல, எனக்கு இந்த மனுஷன். அவ்வளவே. :)
//சுஜாதாவிடம் அப்படி என்ன இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை... டெக்னாலஜி சம்பந்தமாக எழுதுகிறார் ஆனால் அதில் எந்த சுவாரஷ்யாமும் இருப்பதாய் தெரியவில்லை .. எந்திரன் திரைக்கதை அவர்தான் என்று கேள்விபட்டேன் ... ரோபோவை ஐஸ்வர்யா ராயை காதலிப்பது போல கற்பனை பண்ண அவரால் மட்டுமே முடியும் ... //
சுவாரசியம் என்பது அவரவரைப் பொருத்தது அல்லவா?
எந்திரன் திரைக்கதை சங்கருடையது தான். மூலக் கதை வேண்டுமானால் சுஜாதாவுடயதாக இருக்கலாம். 'என் இனிய எந்திரா & மீண்டும் ஜீனோ' படித்திருந்தால், you will understand what Sujatha is capable of.
அவற்றை படித்த பிறகும், நீங்கள் இதயே சொல்ல வாய்ப்புண்டு. முன்பே சொன்னது போல, எனக்கு 'அவர்' போல உங்களுக்கு 'இவர்'. ஹிஹி
கல்யாணத்துக்கு அப்புறம் புலம்புவது நம்மவர்களிடம் இயல்பே. அதான் சும்மா சீண்டி பார்த்தேன்.
//அப்படி எல்லாம் இல்லை நண்பா ... கல்யாண வாழ்க்கை அருமையாக சென்று கொண்டு இருக்கிறது ... //
Nice to hear this. Say 'hi' to anni for me. :)
//திருமானத்திர்க்கு அழைக்கமுடியாமல் போனதார்க்கு மன்னித்து விடுங்கள் .... //
அதற்கென்ன, பரவாயில்லை. அடுத்த முறை இந்தியா வந்தால், சந்திப்போம். நீங்கள் தான் மலேசியா வந்துட்டு silent-ஆ போயிட்டீங்க. :P
// Nice to hear this. Say 'hi' to anni for me. :)
சொல்லியாச்சி தல...
//அதற்கென்ன, பரவாயில்லை. அடுத்த முறை இந்தியா வந்தால், சந்திப்போம். நீங்கள் தான் மலேசியா வந்துட்டு silent-ஆ போயிட்டீங்க. :P
என் கூட வந்த கோஷ்டி அப்படி தல.. எங்கேயும் தனியா நகர முடியவில்லை ...அதான் பார்க்க முடியவில்லை ... நெக்ஸ்ட் இந்தியா வரும் பொழுது கண்டிப்பாக தகவல் கொடுங்கள் நாம் கண்டிப்பாக சந்திப்போம் .. சந்திக்க வேண்டும் ...
இரு புத்தகங்களையும் தரவிறக்கம் செய்து முழுமையாக படித்தேன். அற்புதமான எழுத்து நடையுடன் எழுதி இருக்கிறார்கள் இருவரும். இந்த மாதிரி உள்ளபடியே எழுதனும்னா நிறைய தைரியம் வேணும்.
சுஜாதா என்பவர் ஒரு மிண்ணனு பொறியாளர். அவ்வளவே. யாருக்கும் எளிதில் புரியாமல் இருந்த மிண்ணனுவியலை எளிமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் கட்டுரைகள் எழுதினார். வெறும் கட்டுரைகள் எல்லோராலும் படிக்கபெறாது என்பதால் அதை கதை வடிவில் கொடுத்துவந்தார். வரவேற்பு இருந்ததால் வேறு சில கதைகளையும் எழுதினார். புத்திசாலியான எழுத்தாளர்.
// புத்திசாலியான எழுத்தாளர்.
lot of my blog friends says about him like this... i am reading his books one by one now...
sorry for not able to type in tamil...
இரு புத்தகங்களையும் தரவிறக்கம் செய்து முழுமையாக படித்தேன். அற்புதமான எழுத்து நடையுடன் எழுதி இருக்கிறார்கள் இருவரும். இந்த மாதிரி உள்ளபடியே எழுதனும்னா நிறைய தைரியம் வேணும்.
thats y i recommend this book to read... especially their style of writing is excellent... tanx for reading this books sir...
Post a Comment