Followers

Copyright

QRCode

Tuesday, March 1, 2011

உலகக்கோப்பை- 2011 இதுவரை




பத்தாவது கிரிக்கெட் உலக கோப்பை விறுவிறுப்பாக நடந்து வருகிறது .... இதுவரைக்கும் நடந்த முக்கியமான போட்டிகளின் சின்ன அலசல்தான் இந்த பதிவு ...

முதலில்
 இங்கிலாந்து நெதர்லாந்து :


எல்லா உலக கோப்பையிலும் ஒரு அதிர்ச்சிகரமான , யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் கண்டிப்பாக நடக்கும் .. ஏதாவது ஒரு குட்டி அணி வலிமை வாய்ந்த பெரிய அணியை போட்டு தள்ளி ஆப்பு அடிக்கும் ... 2003 இல் கென்யா , 2007 இல் பங்களாதேஷ் இந்த வேளையை கச்சிதமாக செய்தன ... இந்த உலக கோப்பையில் அப்படி ஒரு ஆட்டமாக அமைந்திருக்க வேண்டிய போட்டி இது ... போட்டி தொடங்கும் முன்னர் இங்கிலாந்து எளிதாக வெற்றி பெரும் என்றுதான் அனைவரும் நினைத்திருப்பார்கள் ஆனால் நெதர்லாந்து அணியின் கச்சிதமான ஆட்டம் ஒரு இறுதி போட்டிக்கு உரிய பரபரப்பை ஆட்டத்தில் கொண்டு வந்து விட்டது ...இங்கிலாந்து அணி இன்னொரு இந்தியா என்றுதான் சொல்ல வேண்டும் ... பேட்டிங் பலமாக இருந்தாலும் பந்து வீச்சு அணியை அதலபாதாளத்தில் தள்ளி விடுகிறது ... நெதர்லாந்து அணி அவர்கள் பந்து வீச்சை நொறுக்கி தள்ளி பெரிய இலக்கை எட்ட இங்கிலாந்து அணிக்கு பெரிய தலைவலியாக மாறிவிட்டது போட்டி ... ஆனால் அவர்கள் பேட்டிங் அவர்களுக்கு கைகொடுத்தது .. இந்திய ஆடுகளத்தில் எப்படி ஆடவேண்டும் என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள் ... எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் ஒன்று இரண்டாக தட்டி கிடைக்கும் வாய்ப்பில் ஃபோர் சிக்ஸ் என்று அடித்து எதிர் அணிக்கு விக்கெட் எடுக்கும் வாய்ப்பே கொடுக்காமல் விளையாடி ஒரு வழியாக  ஆட்டத்தை ஜெயித்து விட்டார்கள் ... ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து வெற்றி பெற்று இருந்தாலும் மாரல் வெற்றி என்னவோ நெதர்லாந்துக்குதான் .. அவர்கள் தன்னம்பிக்கை இந்த ஆட்டத்தின் மூலம் எக்குதப்பாக எகிறி இருக்கும் .. கண்டிப்பாக எதிர்வரும் போட்டிகளில் ஏதாவது ஷாக் டிரீட்மெண்ட் எந்த பெரிய அணிக்காவது கிடைக்கலாம் இவர்கள் மூலம் ... எனக்கு என்ன பயம் என்றாள் அது இந்தியா வாக இருந்து விட கூடாது என்பதுதான் ... நம்ம பௌலிங் வேற மகா  மட்டமா இருக்கு….

இந்தியா இங்கிலாந்து:


இந்த உலக கோப்பையில் இதுவரைக்கும் நடந்த போட்டிகளில் ரசிகர்களை கடைசி வரை சீட்டின் நுனியில் அமர வைத்து பார்க்க வைத்த ஒரே போட்டி இதுதான் ...அன்று இரவு  இந்தியா முழுவதும் அனைவருக்கும் இதய துடிப்பு எகிறியிருக்கும் ...  அன்று என் இதயம் துடித்த சத்தம் எனக்கே கேட்டது ஒரு வித்தியாசமான அனுபவம் ... பரிட்சை ரிசல்ட் நெட்டில் பார்ப்பதை  போல , கலந்து கொண்ட நேர்முக தேர்வின் ரிசல்ட் அறிவிக்கபடுவதை கேட்பதை போல பரபரப்பாக இருந்தது அந்த ஆட்டம் ... நான் முதலிலேயே சொல்லியதை போல இங்கிலாந்தும் இந்தியாவும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் .. பேட்டிங்கில் தூள் கிளப்புகிறார்கள் ஆனால் பந்து வீச்சில் கோட்டை விட்டு விடுகிறார்கள் ... இந்தியாவை பொறுத்தவரை பேட்டிங் கவலையே இல்லை .. சேவாக் அடிக்கிறார் அவர் போனால் சச்சின் , அவரும் கைகொடுக்கவில்லையா கம்பீர் , ஒரு வேலை அவரும் காலை வாரினால் கோலி , யுவராஜ் தோனி , பதான் என்று பெரும் படையே இருக்கிறது ... இவ்வளவு பெரிய பேட்டிங் வரிசையை வைத்து கொண்டு அதுவும் சச்சின் ஆரம்பத்தில் பெரிய அடித்தலம் அமைத்து தந்தும் நம்மவர்கள் எடுத்தது 338 ... கடைசி நான்கு ஓவர்களில் பழைய இந்திய அணியை பார்க்க முடிந்தது ... இந்த ஆட்டத்தில் இந்தியா செய்த முதல் தவறு இது ... இன்னும் முப்பது ரன்கள் அதிகம் வந்து இருந்தால் மனதளவில் இங்கிலாந்து வீரர்களுக்கு  பெரிய அழுத்தத்தை உண்டு பண்ணி இருக்கலாம் ... 338 என்பது பெரிய இலக்குதான் என்றாலும் அடிக்கவே முடியாத இலக்கு இல்லை முயன்றால் அடிக்கலாம் , இதுதான் இங்கிலாந்து அணியினர்க்கு ஒரு தெம்பை கொடுத்தது ... அதுவும் இந்திய ஆடுகளங்களில் எவ்வளவு பெரிய இலக்கையும் எட்டலாம் , ஆனால் ஒரே ஒரு விஷயம் ஸ்பின் பந்து வீச்சை சமாளிக்க வேண்டும் .... அவர்கள் அதை அருமையாக செய்தார்கள் .. பந்து வானத்தில் பறக்கவே இல்லை .. ஆனால் தரையில் உருண்டு கொண்டே இருந்தது ... அயர்லாந்து அணிக்கு எதிராக எப்படி விளையாடினார்களோ அதே போல எதிரணிக்கு அவ்வளவாக வாய்ப்பே கொடுக்காமல் அதே நேரம் தேவையான ரன் விகிதமும் அதிகரித்து விடாமல் safety play செய்தார்கள் .. அவர்களை மிரட்டும் அளவுக்கும் இந்திய அணியின் பந்து வீச்சு அமையவில்லை ... ஒரு கட்டத்தில் இந்திய பௌலிங் படை ஸ்டிராஸ் முன்னாள் சரணடைந்து விட்டது ... ஸ்டிராஸ் தன்னுடய வாழ்நாள் ஆட்டத்தை அன்று ஆடி விட்டார் .. என்னை பொறுத்தவரை அன்று சச்சினை விட மிக சிறந்த ஆட்டம் ஸ்டிராஸ்சினுடையது... ஆனால் கடைசியில் கேப்டன் தோனிக்கு எப்பொழுதும் ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் ஒரே பௌலர் ஜாகீர் கான் தன் ஒரே ஓவெரிலேயே ஆட்டத்தை எதிர்திசையில் மாற்றி விட்டார் ... அந்த ஓவரில் இங்கிலாந்து பக்கம் விழுந்து கொண்டிருந்த பூனை மீண்டும் மதில் மேல் ஏறி விட்டது ... அடுத்து அடுத்து வந்த ஓவெர்களில் விக்கெட் மளமளவென சரிய பூனை இந்தியாவின் பக்கம் விழ ஆரம்பித்தது ... நமக்குதான் பூனை என்று நினைத்திருக்க கடைசி இரண்டு ஓவெர்களில் அடிக்கபட்ட சிக்ஸெர்கள் மீண்டும் பூனையை மதில் மேல் ஏற்றிவிட , நல்ல வேலை கடைசி வரை அது அப்படியே யார்பக்கமும் விழாமல் நின்று விட்டது ... எனக்கு இந்த ஆட்டத்தை பார்த்த பொழுது ஒரே ஒரு விசயம்தான் மனதில் தோன்றியது we miss you kumble “… அவரின் இடம் அணியில் இன்னமும் நிரப்பபடாமலேயே இருக்கிறது .... இப்பொழுது இருக்கும் நிலமையில் இந்தியா 350 ரன்னுக்கு மேல் அடித்தாள் மட்டுமே உறுதியாக சொல்ல முடியும் வென்று விடலாம் என்று ... இல்லை என்றாள் கஷ்டம்தான் போல ...   

இந்த இரண்டு அணிகளுமே சம பலத்துடன் இருக்கிறார்கள் .. இவர்களில் யாராவது ஒருவர் கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது .. ஆனால் அது யார் என்பதை இனி வரும் ஆட்டங்களில் யார் தன் பௌலிங் டிபார்ட்மெண்ட்டை பலபடுத்துகிறார்கள் என்பதை பொறுத்துதான் இருக்கிறது .. பெங்களூர் இவர்களுக்கு கற்று கொடுத்திருக்கும் பாடம் பந்து வீச்சை பலபடுத்தினால் நீங்கள் கோப்பையை வெல்லலாம் என்பதே .. பார்ப்போம் எந்த அணி அதை சரியாக புரிந்து கொண்டு தன்னை சரிபடுத்தி கொள்கிறது என்று..

பாகிஸ்தான் இலங்கை :


இந்த உலககோப்பையில் திடீரென ஃபார்முக்கு வந்திருக்கும் அணி ... அஃப்ரீடி நாங்கள் கண்டிப்பாக இறுதி போட்டிக்கு நுழைவோம் என்று சொல்லி இருக்கிறார் ... அதுவும் நடக்கலாம் காரணம் அவர்களின் பௌலிங் ... வேகத்தில் அக்தர் மிரட்ட , சுழலில் அஃப்ரீடி கலக்குகிறார் ... இதுவரை நடந்த ஆட்டங்களை வைத்து பார்க்கும் போது பௌலிங் மிரட்டலாக இருப்பது இவர்களுக்குதான்... இது இப்படியே தொடர்ந்தால் அஃப்ரீடி சொல்லியதை போல இறுதி  வரை கலக்கலாம் ... இலங்கை மைதானத்திலேயே அவர்களை தோற்கடித்ததில் மனதளவில் பெரிய உற்சாகத்தில் இருப்பார்கள் ... 

ஆனால் இவர்கள் இறுதி போட்டிக்கு வந்தால் ஒரு பெரிய சிக்கல் காத்து கொண்டு இருக்கிறது ... அது போட்டி நடப்பது மும்பையில் ... சிவசேனா இவர்களை உள்ளேயே விடமாட்டோம் என்று மிரட்டி கொண்டு இருக்கிறது ... எனவே இவர்கள் ஒருவேளை நன்றாக விளையாடினாலும் ஐசிசி ஏதாவது செய்து இவர்களை இறுதி போட்டிக்கு வர விடாமல் செய்து விடும் என்றே நினைக்கிறேன்....

 இவர்களை தவிர்த்து  ஆஸ்ட்ரேலியா சௌத் ஆபிரிக்கா என்று  இரண்டு பெரிய அணிகள் இருக்கிறார்கள் ... இவர்கள் இன்னமும்  ஆட்டத்தை (பெரிய அணிகளுடன் ) ஆரம்பிக்கவே இல்லை , இவர்களும் ஆரம்பித்தாள் போட்டி இன்னமும் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்  .... நம் ஒவ்வொருவரின் ஆசையும் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் எனபதே ... ஆனால் இங்கிலாந்து உடனான ஆட்டத்தின் பின் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை குறைந்து விட்டது ... ஐயா தோனி ஏதாவது பண்ணி பௌலிங் டிபார்ட்மெண்ட்டெவலப் பண்ணுயா இத விட்டா வேற நல்ல வாய்ப்பு நமக்கு திரும்ப கெடைக்காது ...    

9 comments:

Anonymous said...

எனக்கு கிரிக்கெட் பிடிக்காதுனாலும் உங்க விமர்சனம் சூப்பர்

Anonymous said...

எனக்கு கிரிக்கெட் பிடிக்காதுனாலும் உங்க விமர்சனம் சூப்பர்

Unknown said...

//ஆனால் இவர்கள் இறுதி போட்டிக்கு வந்தால் ஒரு பெரிய சிக்கல் காத்து கொண்டு இருக்கிறது ... அது போட்டி நடப்பது மும்பையில் ... சிவசேனா இவர்களை உள்ளேயே விடமாட்டோம் என்று மிரட்டி கொண்டு இருக்கிறது ... எனவே இவர்கள் ஒருவேளை நன்றாக விளையாடினாலும் ஐசிசி ஏதாவது செய்து இவர்களை இறுதி போட்டிக்கு வர விடாமல் செய்து விடும் என்றே நினைக்கிறேன்....//

அவர்கள் (சிவா சேனா போன்றவர்கள்) மறந்தாலும் நீங்கள் நியாபகம் படுத்திக்கொண்டே உள்ளீர்கள். அவர்களை விட உங்களை போன்றவர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள். தயவுசெய்து விளையாட்டை விளையாட்டா பாருங்க.

ராஜகோபால் said...

//இந்த ஆட்டத்தை பார்த்த பொழுது ஒரே ஒரு விசயம்தான் மனதில் தோன்றியது “we miss you kumble “… அவரின் இடம் அணியில் இன்னமும் நிரப்பபடாமலேயே இருக்கிறது//

I am also miss kumble, we miss that guy.

Jayadev Das said...

\\இந்த ஆட்டத்தில் இந்தியா செய்த முதல் தவறு இது ... இன்னும் முப்பது ரன்கள் அதிகம் வந்து இருந்தால் மனதளவில் இங்கிலாந்து வீரர்களுக்கு பெரிய அழுத்தத்தை உண்டு பண்ணி இருக்கலாம் ... \\கடைசியில் வந்த ஆறு மட்டையாளர்கள், ரன் அதிகம் அடித்துவிட்டோம் என்ற நினைப்பில் ஊதாரித் தனமாக விக்கட்டுகளை பரிகொடுத்துவிட்டுச் சென்றனர். கோலி, பதான் போன்றோர் இன்னமும் பொறுப்பாக நிதானத்துடன் ஆடியிருக்க வேண்டும். இன்னொரு விஷயம், தற்போது இந்திய அணியில் நல்ல ஆல் ரவுண்டர்கள் இல்லை. என்னதான் ரன் சேர்த்தாலும் அதை காத்துக் கொள்ளும் அளவுக்கு பவுலிங் திறன் இருக்க வேண்டும். பவுலிங் மோசமில்லை என்றாலும் ஆஸ்திரேலிய அணியைச் சமாளிக்கும் அளவுக்கு வலுவானதாக இருப்பதாகத் தெரியவில்லை. [பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தோற்றத்தை நம்ப வேண்டாம்!!].

Jayadev Das said...

\\இவர்களில் யாராவது ஒருவர் கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது ..\\ இது தப்புக் கணக்கு. ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிடத் விட்டீர்கள். இந்திய அணி கோப்பையை ஜெயிக்கனும் என்ற ஆசை எனக்கும் இருக்கு. ஆனா இந்த முறை ஆஸ்திரேலியஅணியே கோப்பையை தட்டிச் சென்றாலும் வியக்க ஒன்றுமில்லை.

Jayadev Das said...

\\ஆனால் இவர்கள் இறுதி போட்டிக்கு வந்தால் ஒரு பெரிய சிக்கல் காத்து கொண்டு இருக்கிறது ... அது போட்டி நடப்பது மும்பையில் ... சிவசேனா இவர்களை உள்ளேயே விடமாட்டோம் என்று மிரட்டி கொண்டு இருக்கிறது.\\ அது சும்மா உதாரு. ஒன்னும் பண்ண மாட்டாங்க. சமீபத்தில் ஷாரூக் கான் படம் ஒன்றை சில கண்டிஷன்களைப் போட்டு அதை நிறைவேற்றாமல் முன்பையில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டிக் கொண்டிருந்தனர். கடைசியில் எந்த நிபந்தனையும் இல்லாமல் படம் வெளியானது. கிரிக்கெட் சர்வ தேச பிரச்சினை, அங்கே அதிகம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். \\ஐசிசி ஏதாவது செய்து இவர்களை இறுதி போட்டிக்கு வர விடாமல் செய்து விடும் என்றே நினைக்கிறேன்....\\ஐசிசி ஓரளவுக்கு மொள்ளமாரி வேலைகளைப் பண்ணுவார்கள், ஆனால் இந்தளவுக்குப் போக மாட்டார்கள். அதிக பட்சம் போட்டி நடக்கும் இடத்தை மாற்றலாம்.

கலையன்பன் said...

விரிவான விமரிசனம்.
நன்றி நண்பரே, இந்திய அணி
ஜெயிக்க வேண்டும் என்பதே
நமது அனைவர் எண்ணமும்.
நம்புவோம்!

Karthikeyan said...

ஹர்பஜனிடம் இருந்து நிறைய எதிர்பார்த்தேன். ஒன்றும் இல்லை. எனினும் ஆஸ்திரேலியா போன்ற அணிகளை சமாளிக்க இவர் வேண்டும்.

இலங்கையின் மாலிங்கா பாகிஸ்தானுடன் விளையாடவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். ஆட்டத்தின் போக்கினை மாற்றும் திறன் அவரிடமும் உண்டு.

எனக்கு என்னமோ தென் ஆப்பிரிக்காதான் மற்ற அணிகளுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இன்னும் போட்டிகள் நடக்கும்போது நமக்கு தெளிவாகிவிடும் யார் சரக்கு விற்கும் என்பது.

LinkWithin

Related Posts with Thumbnails