நண்பர்களுக்கு வணக்கம் .. பதிவு எழுதி நிறைய நாட்கள் ஆகி விட்டது .... காரணம் எனது திருமணம் .... சென்ற வாரம் புதன்கிழமை தென்காசி அருகே இருக்கும் புளியங்குடியில் இனிதே நடந்து முடிந்தது ... திருமணத்தை பற்றிய பதிவை நான் எழுதி அதை பதிவிட முடியாமல் ட்ராஃப்ட்டில் வைத்திருந்தேன் , ஆனால் நேரம் கிடைக்காமல் போய்விட்டபடியால் அதை கடைசி வரை பதிவில் ஏற்றவே முடியவில்லை... என் எழுத்தின் மூலம் கிடைத்த நண்பர்களை என் மனவிழாவிற்க்கு அழைக்க முடியாமல் போனதர்க்கு வருந்துகிறேன் .. பதிவுலகில் இருந்து நண்பர் பாலா மட்டும் வந்திருந்தார் ... அவர் தன்னுடய தளத்தில் இந்த பதிவில் எங்களுக்கு வாழ்த்துகள் சொல்லி இருந்தார் ... அவருக்கும் அதில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றிகள் .... முன்னரே பதிவில் தெரிவிக்க முடியாமல் போனது எனக்கு மிகவும் வருத்தமே ....
நாய்கள் :
நடுநிசி நாய்கள் படம் பார்க்கும் அவல நிலை எனக்கு நேற்று நேர்ந்தது .. நல்ல வேலை என் மனைவியை அழைத்து செல்லவில்லை .. அவளுக்கு படம் பார்க்கவே பிடிக்காதாம் .... பேசாமால் நானும் அப்படியே இருந்திருக்கலாம், இந்த மாதிரியான மரண மொக்கைகளை பார்க்காமல் மூன்று மணிநேரம் ரண வேதனையை அனுபவிக்காமல் இருந்திருக்கலாம்...
சின்ன வயசில் பேய் கதை நிறைய கேட்டு இருந்திருப்போம் ... அதில் ஒரு பாழடைந்த பங்களாவில் ஒரு சூனியக்கார கிழவி இருப்பாள் , அவளுக்கு அடிமையாக அவள் சொல்லுவதை எல்லாம் கேட்டு நடக்க ஒரு பூதம் கூடவே இருக்கும் .. அந்த சூனியக்காரி தனக்கு மாயமந்திர சக்திகள் கிடைக்க வேண்டும் என்பதற்காய் ஊரில் இருக்கும் அழகான கன்னி பெண்களை எல்லாம் பூதத்தை கொண்டு கடத்தி வந்து நரபலி கொடுப்பாள் ... ஆனால் கதாநாயகி மட்டும் கடைசியில் தப்பி விடுவாள்... இதெல்லாம் நான் சின்ன பையனாக இருந்த போது வழக்கில் இருந்த திகில் கதைகள் ...இந்த கதையை saw hostel , Friday the 13 என்று தினந்தோறும் எச்பிஓ வில் பார்த்து கொண்டு இருக்கும் இந்த காலத்து சின்ன பசங்ககிட்ட சொன்னா அவன்கூட பயப்பட மாட்டான் .. ஆனா இதே கதையை கொஞ்சம் டிங்கரிங் வேலை பார்த்து , மல்டிபில் பேர்சொனாலிட்டி சாயம் பூசி முழு படமா எடுத்திருக்கார் நம்ம கௌதம் ... திகில் படம்னு நினைத்து எடுத்திருக்கிறார் ஆனால் பார்க்கும் எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் ... அதுவும் கடத்தி/வசியம் செய்து கொண்டு போகும் பெண்களை ஹீரோ என்ன செய்கிறார் என்பது படத்தின் உட்சபட்ச காமெடி ... இயக்குனர் இந்த வகையான saw hostel போன்ற படங்கள் எல்லாம் பார்த்ததில்லை போல(மிஷ்கினிடம் இந்த மாதிரியான படங்களின் DVD கலெக்ஷன் இருக்கும் கேட்டு வாங்கி பாருங்கள் கௌதம்).
அந்த படங்களை போல இல்லை என்றதும் நம் மக்களுக்கு ஏற்றது போல படத்தை எடுத்திருக்கிறார் என்று நீங்கள் நினைத்தால் , நீங்கள் பெரிய முட்டாளாக மாற நிறைய வாய்ப்பு இருக்கிறது ... படத்தில் வரும் பாலியல் வன் புணர்வு காட்சிகள் இதுவரை தமிழ் சினிமா உலகில் காண கிடைக்காதது .... அதுவும் ஒரே ஆண் பல பெண்களுடன் வண்புணர்வு செய்கிறான் ... ஒவ்வொன்றையும் கேமேரா நீண்ட நேரத்திர்க்கு ரொம்ப கவனமாக பதிவு செய்திருக்கிறது ... வேட்டையாடு விளையாடுவில் இவருக்கு பிடித்த காம காய்ச்சல் இந்த படத்தில் ஜூரமாக வெடித்திருக்கிறது ...தயவு செய்து குடும்பத்துடன் சென்று விடாதீர்கள் ....
சின்ன குழந்தைகளை கூட்டி சென்று அவர்கள் கெட்டு போக நீங்களே காரணமாக இருந்து விடாதீர்கள் ... அதுவும் ஹீரோ சின்ன வயது பையனாக காட்டபடும் காட்சிகள் ஆபாசத்தின் உட்சம்... எல்லா உறவுகளையும் கேவலபடுத்தி ஆகி விட்டது ...உருப்படியாக இருப்பது பெற்றோர் பிள்ளை உறவுதான் ... அதையும் கவுதம் இந்த படத்தில் சீரழித்து விட்டார் ... ஒருவன் எதனால் சைக்கோ ஆகிறான் என்று காட்ட வேறு வழியே தோன்றவில்லையா உங்களுக்கு? .... ஏதோ ஒன்றை வக்கிரமாக காட்டி மக்களை ரசிக்க வைத்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார் .... பார்க்கும் போது சகிக்க முடியவில்லை ...
அதுவும் ஹீரோ ஒரு பெண்ணுடன் ஒரு காட்சியில் உறவு கொள்கிறான் . அடுத்த காட்சியில் அவளை “மீனாட்சி அம்மா “(அவள் பெயர் மீனாட்சி ) என்று கூப்பிடுகிறான் .. கருமம்டா சாமி ... சென்சார் போர்டு என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை ...
சின்ன குழந்தைகளை கூட்டி சென்று அவர்கள் கெட்டு போக நீங்களே காரணமாக இருந்து விடாதீர்கள் ... அதுவும் ஹீரோ சின்ன வயது பையனாக காட்டபடும் காட்சிகள் ஆபாசத்தின் உட்சம்... எல்லா உறவுகளையும் கேவலபடுத்தி ஆகி விட்டது ...உருப்படியாக இருப்பது பெற்றோர் பிள்ளை உறவுதான் ... அதையும் கவுதம் இந்த படத்தில் சீரழித்து விட்டார் ... ஒருவன் எதனால் சைக்கோ ஆகிறான் என்று காட்ட வேறு வழியே தோன்றவில்லையா உங்களுக்கு? .... ஏதோ ஒன்றை வக்கிரமாக காட்டி மக்களை ரசிக்க வைத்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார் .... பார்க்கும் போது சகிக்க முடியவில்லை ...
அதுவும் ஹீரோ ஒரு பெண்ணுடன் ஒரு காட்சியில் உறவு கொள்கிறான் . அடுத்த காட்சியில் அவளை “மீனாட்சி அம்மா “(அவள் பெயர் மீனாட்சி ) என்று கூப்பிடுகிறான் .. கருமம்டா சாமி ... சென்சார் போர்டு என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை ...
சிவப்பு ரோஜாக்கள் போல ஒரு படம் தரவேண்டும் என்ற இயக்குனரின் ஆசையில் தவரே இல்லை ... ஆனால் அதர்க்கு ஏற்றார் போல நல்ல சரக்குடன் இறங்கி இருந்தால் பாராட்டி இருக்கலாம் ... இரண்டாம் பாதி பெரிய மொக்கை ... இயக்குனர் ரசிகர்கள் சீட் நுனியில் அமர்ந்து பார்ப்பார்கள் என்று நினைத்து எடுத்திருக்கும் ஸீன்களில் எல்லாம் அரங்கம் முழுவதும் சிரிப்பு சத்தம் கேட்கிறது ... ஹீரோ பேசும் மாடுலேசன் பயங்கர காமெடி ... அதுவும் அவர் இரண்டு குரல்களில் மாற்றி மாற்றி பேசுவதெல்லாம் அன்னியனிலேயே பாத்தாச்சி ....
எனக்கு சைக்கோ படம் எடுக்கும் இயக்குனர்களிடம் ஒரு கேள்வி .. சைக்கோ என்றாள் பெண்களை கடத்தி கொடூரமாக கற்பழித்து கொலை செய்பவனாகத்தான் இருப்பானா? ஏன் உலகத்தில் வேறு மாதிரியான சைக்கோகளே இல்லையா? அந்த மாதிரியான சைக்கோ படங்கள் ஏன் எடுக்க மாட்டேங்கிறீங்க? கிளுகிளுப்பா எதுவும் காட்ட முடியாது என்ற பயமா? இதுக்கு பேசாம நீங்க ஷகீலாவ வச்சி ஒரு பிட்டு படம் எடுத்து ஓட்டலாம்... என்னை பொறுத்த வரைக்கும் ரெண்டும் ஒண்ணுதான் ...
நடுநிசி நாய்கள் : தலைப்பில் நாய் என்று குறிப்பிடபட்டு இருப்பது இயக்குனரையோ என்ற சந்தேகம் படம் பார்த்ததும் எனக்கு வந்து விட்டது...
25 comments:
same bloooooooooooooooooooooooood
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை ப்ரேம் பை ப்ரேம் ரசிக்க வெச்ச கவுதம் மேனனா இந்தப்படத்தை எடுத்தது? இந்த வருடத்தின் மிக ஏமாற்றமான படம் இது..
எனக்கு அப்பவே தெரியும். இந்த அதிமேதாவி கவுதம் மேனன் இப்படி ஏதாவது அறிவாளிதனமா செய்வார்ன்னு..
பாய்ஸ்க்கு அப்புறம் ஒரு ச்சீ டைப் படம்
பாய்ஸ் கூட அந்தளவு மோசமில்லை ஆனா இந்த படம் வக்ரத்தின் உச்சம்
//சிவப்பு ரோஜாக்கள் போல ஒரு படம் தரவேண்டும் என்ற இயக்குனரின் ஆசையில் தவரே இல்லை //
உண்மைதான் என்ன அதுல ஸ்ரீதேவிக்காக பலமுறை பார்த்த படம் இத ஒரு முறை பார்த்ததும் போதும் என்றாகிவிட்டது
நடுநிசி நாய்கள் : தலைப்பில் நாய் என்று குறிப்பிடபட்டு இருப்பது இயக்குனரையோ என்ற சந்தேகம் படம் பார்த்ததும் எனக்கு வந்து விட்டது... //
சரிதான். இந்த மாதிரி படம் எடுத்தால் வேறு என்னதான் சொல்வது.
திருமண வாழ்த்துக்கள் நண்பா!சில வாரங்கள் நெட் அவ்ளோவா வராததால,(வழக்கப்படி) லேட். :)
உங்க மணவாழ்க்கை அன்பும்,அமைதியும்,சந்தோசமும் நிறைந்து அமைய வேண்டிக்கொள்கிறேன்.
//இதுக்கு பேசாம நீங்க ஷகீலாவ வச்சி ஒரு பிட்டு படம் எடுத்து ஓட்டலாம்... என்னை பொறுத்த வரைக்கும் ரெண்டும் ஒண்ணுதான் ... //
உண்மை தான்.ஆனா,தான் வித்தியாசமானவன்னோ,புரட்சிகரமானவன்னோ சொல்லிக்க முடியாதுல்ல.அனேகமா அதுக்கா தான் இருக்கும்.இதுன்னா,எந்த கருமத்தையும் எடுத்துட்டு,படம் வித்தியாசம்னு சொல்லிடலாம்.அதுவும் இல்லன்னா யூத் பிலிம்னாவது சொல்லலாம்னு தான்.
படம் பத்தி கேள்விப்பட்டேன்.இன்னும் பார்கல.பார்க்கும் ஐடியாவும் இல்ல.இவர் படங்களை ஒரு கட்டத்துக்கு மேல கடுப்பாகி பார்க்குறத நிறுத்திட்டேன்.விண்ணைத் தாண்டி வருவாயா ஒரு ஸ்வீட் surprise. பல படங்களை சுட்டு எடுத்தது என்றாலும்,அந்த படத்தின் அழகியல் அதை தூக்கி நிறுத்தியது.இவரை பத்தி ரொம்ப கடுப்பாக வேணாம் தல.இவருக்கு வினை வேற யாரும் வேணாம்.இவரே போதும்.
உங்கள் திருமணத்திற்கு வாழ்த்துக்கள்.. படம் விர்மசனம் - நன்றி
@ கவிதைகாதலன்
VTV மென்மையான காதலை சொன்னதால் ரசிக்க முடிந்தது .. இதில் காமத்தை அல்லவா வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்
@ பாலா
வாயால் கெட்ட பல பேரில் இவரும் ஒருவர் ..
@ ஆர்.கே.சதீஷ்குமார்
பாய்ஸ் அது தமிழ் சினிமாவின் அவமானம் நண்பரே ... அந்த லிஸ்டில் இதுவும் சேரும் ...
@ ராஜகோபால்
ஆமா தல சமீரா ரெட்டி காஞ்சி போன ரொட்டி மாதிரி இருக்காங்க படத்துல....
@ கே. ஆர்.விஜயன்
நாய்க்கு நிறைய திறமைகள் உண்டு .. ஆனால் அது பெரும்பாலும் காமத்தை தேடித்தான் அலையும் ... அதனால்தான் அந்த வார்த்தையை உபயோகித்தேன் ....
@ ILLUMINATI
// திருமண வாழ்த்துக்கள் நண்பா!சில வாரங்கள் நெட் அவ்ளோவா வராததால,(வழக்கப்படி) லேட். :)
உங்க மணவாழ்க்கை அன்பும்,அமைதியும்,சந்தோசமும் நிறைந்து அமைய வேண்டிக்கொள்கிறேன்.
tanx நண்பா ...
//தான் வித்தியாசமானவன்னோ,புரட்சிகரமானவன்னோ சொல்லிக்க முடியாதுல்ல.அனேகமா அதுக்கா தான் இருக்கும்.இதுன்னா,எந்த கருமத்தையும் எடுத்துட்டு,படம் வித்தியாசம்னு சொல்லிடலாம்.அதுவும் இல்லன்னா யூத் பிலிம்னாவது சொல்லலாம்னு தான்.
உண்மைதான் ... இன்றைய இயக்குனர்கள் பெரும்பாலும் அந்த மாதிரியான மனநிலையில்தான் இருக்கிறார்கள்
படத்தை பத்தி எச்சரிக்கை கொடுத்ததுக்கு நன்றி.
//இதுக்கு பேசாம நீங்க ஷகீலாவ வச்சி ஒரு பிட்டு படம் எடுத்து ஓட்டலாம்... //
ஷகீலா மாதிரி ஒரு பீப்பாயையும் கவர்ச்சி பன்னி...சாரி கவர்ச்சி கன்னி என்ற அந்தஸ்தை கொடுத்த தமிழனின் பெருந்தன்மையை நினைத்து மெய்சிலிர்க்காமல் இருக்க முடியவில்லை.
.
@ வினோ
நன்றி நண்பரே
@ Jayadev Das
//படத்தை பத்தி எச்சரிக்கை கொடுத்ததுக்கு நன்றி.
எதோ என்னால முடிஞ்சது ஒரு நாலு பேரையாவது காப்பாத்துவோமேன்னு...
வணக்கம் ராஜா... நான் உங்களின் புதிய வாசகன்.
தங்களது பதிவுகள் ஒவ்வொன்றாக படித்து வருகிறேன். அருமையாக உள்ளது எழுத்து நடை.
முதலில் உங்களுக்கு என் திருமண வாழ்த்துக்கள். பதினாறும் பெற்று பெறுவாழ்வு வாழ்க. (நானும் உங்கள் ஊர் பக்கம் பெண் எடுத்தவன் தான்)
வாழ்க வளமுடன்.
கார்த்திகேயன், கரூர்
கல்யாணம் பண்ணிட்டு (வாழ்த்துக்கள்),தனியா படத்துக்குப் போன இப்படி ஏடாகூடப் படமாத்தான் அமையும். அவுங்க சாபம் அவ்வளவு வலிமையானது. இயக்குநர் கெளதமை நாயோடு ஒப்பிடாதீர்கள். அது பணத்திற்காக, புகழுக்காக தன் இனத்தையே சீரழிக்காது. மேலும் அது ஒன்று தான் அன்று முதல் இன்று வரை மனிதர்களைச் சகித்துக் கொண்டு நண்பனாய் இருப்பது.
//நடுநிசி நாய்கள் : தலைப்பில் நாய் என்று குறிப்பிடபட்டு இருப்பது இயக்குனரையோ என்ற சந்தேகம் படம் பார்த்ததும் எனக்கு வந்து விட்டது...//
'இயக்குனர் நல்ல நாய்களைப் பற்றி படம்
எடுக்கவில்லை; கெட்ட நாய்கலைப் பற்றி
எடுத்திருக்கார்' என்று நினைக்கிறேன்.
சரிதானே?
இனிய திருமண தம்பதி நீங்கள் பல்லாண்டு
மகிழ்ந்து இணைந்திருக்க எனது நல்வாழ்த்துக்கள்!!!
ஒரு உலக தர இயக்குணர் நம்ம ஊருல உதயமாவது உங்களுக்கெல்லாம் பொருக்காதே... :P
வாழ்த்துக்கள் ராஜு..........நீங்களும் புளியங்குடி மாப்பிள்ளையா???????????????
Post a Comment