நான் மகான் அல்ல!!
நேற்று கிறிஷ்ணகிரியில் ஒரு கல்லூரி பெண் கல்லூரி விட்டு வீட்டுக்கு நடந்து வரும் வழியில் யாரோ சில பொறுக்கிகளால் கற்பழிக்கபட்டு தலை நசுக்கபட்டு கொலை செய்யபட்டு ஆளரவமற்ற தென்னந்தொப்பில் வீசபட்டு இருக்கிறாள்... இந்த சம்பவத்தை கேள்விபட்டவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது நான் மகான் அல்ல படம் ... இந்த கொலையை செய்தவர்கள் நான் மகான் அல்ல படத்தை பார்த்துதான் இப்படி செய்துள்ளார்கள் என்று நான் சொல்லவரவில்லை ... இன்னும் யார் செய்துள்ளார்கள் என்ன நடந்தது என்று முழுவதும் தெரியவில்லை ... ஆனால் அப்படி நடந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது ... இந்த மாதிரியான யதார்த்தமாக எடுக்கிறேன் என்று எடுக்கப்படும் படங்கள் நமக்கு நல்ல பொழுதுபோக்கை கொடுத்தாலும் அதனால் சின்ன பிள்ளைகளும் டீன் ஏஜ் வாலிபர்களும் கெட்டு போக நிறைய வாய்ப்பு இருக்கிறது.... அப்படி எடுக்கும் இயக்குனர்களையோ இல்லை அதில் நடிக்கும் நடிகர்களையோ நான் குறை சொல்லவில்லை ... அதை ரசிக்கும் நம்மை போன்றவர்களின் தவரே இது ... நான் இப்படி சொன்னாலும் நாளைக்கே டிவியில் சுப்ரமணியபுரம் படம் போட்டால் உக்கார்ந்து பார்க்கதான் செய்வேன் ... தவறு செய்கிறோம் என்று தெரிகிறது ஆனால் திருந்த முடியவில்லை ... பலருக்கு இருக்கும் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை போலவே ...
என்ன ம@#$@ருக்கு இந்த அரசாங்கம்?
பெட்ரோல் விலையை மறுபடியும் ஏற்றி விட்டார்கள்... லிட்டர் அறுபத்து நான்கு ரூபாய் ... கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பத்து ரூபாய் ஏறி இருக்கிறது விலை ... நான் முதன் முதலில் ஒரு பைக் வாங்கி (எங்க அப்பா வாங்கி கொடுத்தது பத்து வருடங்களுக்கு முன்னர் நான் கல்லூரியில் சேர்ந்த பொழுது) ஒட்டியபொழுது விலை முப்பத்தி இரண்டு ரூபாய்... இப்பொழுது இரண்டு மடங்கு ஆகி விட்டது ... மதுரையில் இருந்து காரில் சென்னைக்கு சென்று வர வேண்டும் என்றாள் மொத்தமாக் மூவாயிரம் ரூபாய் பெட்ரோலுக்கு மட்டுமே அழ வேண்டும் .. அதுவாவது பரவா இல்லை ... புதியதாய் போட பட்டிருக்கும் நான்கு வழிசாலையில் அம்பது கிலோமீட்டருக்கு ஒரு டோல் கேட் போட்டிருக்கிறார்கள் .. ஒவ்வொரு டோல் கேடிலும் அறுபது ரூபாய் அழவேண்டி இருக்கிறது .. கேட்டால் இந்த சாலையே தனியார் நிறுவனம் போட்டதுதானாம் ... அதனால் குத்தகைக்கு எடுத்ததை போல அந்த சாலையை யாராவது பயன்படுத்தினால் அவர்களுக்கு காசு தர வேண்டுமாம் ... என் கேள்வி என்னவென்றால் அப்பறம் என்ன @#$@ருக்கு வண்டி வாங்கிரப்ப ரோட் டாக்ஸ் கட்ட சொல்லுறீங்க... இந்த ரோட்டக்கூட அரசாங்கம் அதோட காசுல இருந்து போட முடியலைனா என்ன @#$@#ருக்கு எங்ககிட்ட இருந்து அந்த வரி இந்த வரி வருமான வரின்னு ஆயிரத்தெட்டு வரி வாங்குறீங்க...
நாலரை லட்சம் கோடிக்கு ஊழல் பண்ண மட்டும் வழி இருக்குள இந்த ரோட்ட போட வழி இல்லையா? இப்படி எங்க காச ஆட்டைய போட்டு உங்க வருங்கால சந்ததிக்கு சுவிஸ் பேங்ல சேத்து வைக்கிற உங்களையெல்லாம் பாக்கும்போதுதான் தெய்வம் நின்று கொல்லும்கிற பழமொழி உண்மையா இருக்கணும்னு ஆசையா இருக்கு ... நீங்க அழியிரத நாங்க பாக்க முடியலைனாலும் எங்களின் அடுத்த ஏதாவது ஒரு தலமுறை மக்கள் கண்டிப்பாக பார்ப்பார்கள் ....
இப்படி நம்ம காசை ஆட்டையபோட்டுகிட்டு இருக்குற இவனுக நமக்கு ஏதாவது நல்லது பண்ணி இருக்காணுகளா? காந்தி பரம்பரை என்ன ஆட்சுன்னே தெரியல... காமராஜர் கக்கண் அம்பேத்கார் இவங்க சொந்தக்காரங்க எங்க இருக்காங்கன்னே தெரியல? குறைந்தபட்சம் அண்ணாவோட பரம்பரைகூட காணாம போட்சி....(நேரு மட்டும் விவரமா அவரு பரம்பரையை வாழ வச்சிட்டாறு) இவங்க பரம்பரையில யாராவது ஒருத்தன் தின்னாக்கூட இவங்க பண்ண நல்லதை நினைத்து ஏதோ மனதை தேத்திக்கலாம் ... ஆனா நம்ம நாட்டுக்காக சின்ன துரும்பை கூட கிள்ளிபோடாத யார் யாரோ நம்ம காசை தின்னுகிட்டு இருக்காணுக.. அத நெனச்சாத்தான் கடுப்பா இருக்கு ...
நீங்க எங்களுக்கு நண்பனா விஜய்?
இன்று விஜய் டீவியில் காஃபி வித் அனு நிகழ்சியில் விஜய் கலந்து கொண்டு பேசினார் ... அதில் விஜையை மாஸ் வித் கிளாஸ் ஹீரோ என்று அறிமுகம் செய்தார்கள் .. அதை ஏற்றுக்கொள்ளுவதை போல அவரும் ஒரு புன்னைகை பூத்தார் .... அவர் மாஸ் என்றாள் அப்ப ரஜினி யார்? அவர் கிளாஸ் என்றாள் கமலை எப்படி சொல்லுவது... ஏற்கனவே இப்படி அளவுக்கு மீறி தன்னை மீடியாவிலும் சினிமாவிலும் எக்ஸ்போஸ் செய்ததால்தான் தனக்கு இருந்த மார்க்கெட்டை இழந்து இன்று இந்த நிலமைக்கு வந்திருக்கிறார் ... இன்னமும் திருந்தவில்லை போல ... அவருக்கு வேறு யாரும் வெடி வைக்க தேவை இல்லை .. அவர்கூட இருப்பவர்களும் அவர் ரசிகர்களுமே போதும் அந்த வேலையை கச்சிதமாக செய்து விடுவார்கள் ... அதில் ஒரு கேள்விக்கு அஜித் ரசிகர்களும் எனக்கு நண்பர்களே என் ரசிகர்களை மதிப்பதை போல அவர்களையும் நான் எப்பொழுதும் மதிப்பேன் என்னும் பொருள்பட கூறினார்.... அவர் வேண்டுமானால் எங்களை நண்பன் என்று கூறலாம் ஏன் தலையே அவரை மன்னித்து நண்பனாக ஏற்று கொள்ளலாம் .. ஆனால் அஜித் ரசிகர்கள் நாங்கள் என்றும் அப்படி நினைக்கக்கூட மாட்டோம் ... ஒருவன் தோல்வி மேல் தோல்விகளை சந்தித்து அடிமட்டத்தில் இருக்கும் போது பேசும் பேச்சை விட அவன் வெற்றியின் உச்சத்தில் இருக்கும் போது பேசும் பேச்சே அவனின் உண்மையான குணத்தை காட்டும் .. இன்று குருவி வில்லு வேட்டை சுரா என்று அடி மேல் அடி வாங்கி நீங்கள் இப்படி பேசுகிறீர்கள் ஆனால் கில்லி திருப்பாச்சி என்று வெற்றி மேல் வெற்றியை குவித்து கொண்டு இருந்த போது நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று எங்களுக்கு தெரியும் .. குறிப்பாக சச்சின் படத்தில் தொப்பை வைத்து நீங்கள் ஆடிய ஆட்டம் .... நாங்கள் அதை எல்லாம் கண்டிப்பாக மறக்க மாட்டோம் விஜய் ....
பொங்கல் ரேசில் முந்துறது யாரு ?
பொங்கலுக்கு வெளிவந்த அனைத்து படமும் பார்த்தாகி விட்டது .. நேற்றுதான் சிறுத்தையை ஓசியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ... என்னை பொறுத்தவரை ஆடுகளம் காவலன் சிறுத்தை என்ற இந்த மும்முனை போட்டியில் சிறுத்தை பரவாயில்லை .... அக்மார்க் தெலுங்கு கரம் மசாலா ... அதிலும் சந்தானம் காமெடி டாப்.... காட்டுபூச்சி – ராக்கெட் ராஜா காம்பினேசனை ரசிக்கலாம் ...அதும் அந்த இடுப்பு மேட்டர் சூப்பரப்பு ... என்ன நான் முதல் பத்தியில் சொல்லியதை போல வன்முறை நிறைந்த படம் இது ...
வசூலில் எந்த படமும் சொல்லிக்கொள்ளுவதை போல இல்லையாம் .... தூங்கா நகரம் வரும்போது எங்க ஊரில் ஆடுகளத்தை தூக்க போகிறார்கள் ... அந்த படத்தின் ஆயுள் இருபது நாட்கள்தான் ... காவலனின் வசூல் ஆடுகளத்தை விட சுமார்தானாம் ... விஜய் இப்ப எல்லாம் அடிக்கடி டிவிகளில் தோன்றி ரசிகர்களுக்கு நன்றி சொல்லுவதை பார்த்தால் முதலுக்கே மோசமாகி போய்விட்டது என்று நினைக்கிறேன் அதான் தன் ரசிகர்களை உசுப்பேற்றிவிட்டு அவர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்து முதலை தேத்தி விடலாம் என்று நினைக்கிறார் போல ... ஆனால் அவர் என்னதான் விளம்பரம் செய்தாலும் படம் தேறுவது கஷ்டமே ... சிறுத்தை சிடிக்கள் தமிழ்நாடு முழுவதும் பரவிவிட்டது... அதனால் அதுவும் தப்பிபது கடினம் .. ஆக மொத்தம் இந்த பொங்கலும் கோலிவுட்டுக்கு மரண அடிதான் ...
அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
16 comments:
Well Said about Naan Mahaan Alla...
நீங்க கற்றது களவு படம் பார்த்து இருக்கீங்களா... பிணத்தை அப்புறப்படுத்தவது பற்றி அருமையாக ஒரு ஐடியா கொடுத்திருக்காங்க...
பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html
sariya sonneenga thala
@ philosophy prabakaran
உங்க வைன் ஷாப் அமோகமாக நடக்க வாழ்த்துக்கள் ...
@ சினிமா ரசிகன்
நன்றி
ம்ம்ம்ம் நல்ல இருக்கு பதிவு
என்ன ம@#$@ருக்கு இந்த அரசாங்கம்?
என்ன ம@#$@ருக்கு இந்த அரசாங்கம்?//
என்னப்பா பாராட்டு விழா போகணும். ஆடியோ ரிலீஸ் இருக்கு. கதை வசனம் எழுதணும், இதை விட்டுட்டு உங்களுக்கு ரோடு போடனுமா?
அனைத்து செய்திகளும் சுவாரஸ்யம்; சுவை!
ன்று குருவி வில்லு வேட்டை சுரா என்று அடி மேல் அடி வாங்கி நீங்கள் இப்படி பேசுகிறீர்கள் ஆனால் கில்லி திருப்பாச்சி என்று வெற்றி மேல் வெற்றியை குவித்து கொண்டு இருந்த போது நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று எங்களுக்கு தெரியும் .. குறிப்பாக சச்சின் படத்தில் தொப்பை வைத்து நீங்கள் ஆடிய ஆட்டம் .... நாங்கள் அதை எல்லாம் கண்டிப்பாக மறக்க மாட்டோம் விஜய் ...
Nachu comments thala, oru thala rasikanaaga naanum marakkavillai..
//என்ன ம@#$@ருக்கு இந்த அரசாங்கம்?//
என்னப்பா பாராட்டு விழா போகணும். ஆடியோ ரிலீஸ் இருக்கு. கதை வசனம் எழுதணும், இதை விட்டுட்டு உங்களுக்கு ரோடு போடனுமா?//
ஆமா இல்ல...
//கலையன்பன் said...
அனைத்து செய்திகளும் சுவாரஸ்யம்; சுவை//
நன்றி நண்பரே
// Sakthi Doss said...
ன்று குருவி வில்லு வேட்டை சுரா என்று அடி மேல் அடி வாங்கி நீங்கள் இப்படி பேசுகிறீர்கள் ஆனால் கில்லி திருப்பாச்சி என்று வெற்றி மேல் வெற்றியை குவித்து கொண்டு இருந்த போது நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்று எங்களுக்கு தெரியும் .. குறிப்பாக சச்சின் படத்தில் தொப்பை வைத்து நீங்கள் ஆடிய ஆட்டம் .... நாங்கள் அதை எல்லாம் கண்டிப்பாக மறக்க மாட்டோம் விஜய் ...
Nachu comments thala, oru thala rasikanaaga naanum marakkavillai..//
நீங்களும் தல ரசிகரா? வாங்க வாங்க ... அடிக்கடி வாங்க ...
Very good article Raja. தருதல தலைக்கு எதிரா செஞ்ச கீழ்த்தரமான நடவடிக்கைகளை எந்தத் தல ரசிகனும் மறக்க மாட்டான். மறக்கவும் கூடாது. தல இவன் கூட நட்புடன் இருப்பதாக காண்பிப்பதும் பல வித்தில் நல்லது. மீடியாவில் நம்மை சண்டைக்கோழியாக சித்தரித்த நாட்கள் போய் இப்போது இவன் காமெடி பீசாகி நாளாகிறது. தலயும் அரசியல் செய்வதில் தப்பே இல்லை.
ராஜா, நல்லா எழுதுறீங்க. பல நாட்கள் கமெண்ட் போட நினைப்பேன். சோம்பேறித்தனம் மேலிடும். எழுதுவதை தொடருங்கள்.
// Very good article Raja. தருதல தலைக்கு எதிரா செஞ்ச கீழ்த்தரமான நடவடிக்கைகளை எந்தத் தல ரசிகனும் மறக்க மாட்டான். மறக்கவும் கூடாது.
எல்லா தல ரசிகர்களுக்கும் இந்த உணர்வு கண்டிப்பாய் இருக்கும் .... தேவபட்டா மட்டும் ஒட்டி உறவாடுற மனிதர்கள் அவர்கள் என்பது எல்லாருக்கும் கண்டிப்பாக புரிந்திருக்கும் ...
//மீடியாவில் நம்மை சண்டைக்கோழியாக சித்தரித்த நாட்கள் போய் இப்போது இவன் காமெடி பீசாகி நாளாகிறது
அந்த காமெடி பீஸ் இமேஜில் இருந்து வெளிவரவே இந்த நாடகம் ...
Post a Comment