கிரிக்கெட் – சினிமா
முதலில் இந்தியா – தென் ஆஃப்ரிகா ஆட்டம் .... இந்த டூர் ஆரம்பத்தில் இந்தியா மரண அடி வாங்கினாலும் , பின்னர் விஸ்வரூபம் எடுத்து தென் ஆஃப்ரிகா அணியினரை கதிகலங்க வைத்து கொண்டு இருக்கிறது .... உலக கோப்பையை பொறுத்த வரை ஒரு அணியின் சமீபத்திய டெஸ்ட் வெற்றிகள் பெரிய இம்பாக்ட் உருவாக்க போவதில்லை .. அந்த அணியின் தற்போதைய ஒருநாள் ஆட்டதிறனே அந்த அணியின் உலக கோப்பை வாய்ப்பை முடிவு செய்யும் ... இதில் இந்த இரண்டு அணிகளை கவனித்து பார்த்தால் இந்திய அணியின் கையே சற்று ஓங்கி இருக்கிறது... முதல் ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்து இருந்தாலும் , அடுத்த இரண்டு ஆட்டங்களில் திரில் வெற்றியை ருசித்து இருக்கிறது ...முதல் ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசம் இரண்டாம் ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசம் என்று வெற்றி வித்தியாசங்கள் மிக குறைவாகவே இருப்பதால் இரண்டு அணிகளும் சம பலம் கொண்ட அணிகளாக உங்களுக்கு தெரியலாம் , ஆனால் இரண்டு அணிகளையும் வேறுபடுத்துவது போட்டி நடக்கும் இடம் மற்றும் அதில் ஆடும் அணி வீரர்கள் ...
நாங்க ஏன் நம்பர் 1 :
போட்டி நடப்பது தென் ஆஃப்ரிகா , அங்கு இருக்கும் ஆடுகளங்கள் இப்பொழுது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்படி அமைக்க பட்டு உள்ளன ... முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டேயின் மற்றும் திஸோட்சோப் வீசிய பந்துகள் எகிறிய எகிறில் இருந்தே அதை அறிந்து கொள்ளலாம்... அதில் இந்தியா படு தோல்வி அடைந்தது .. ஆனால் அடுத்த இரண்டு ஆட்டங்களில் மைதானம் சுழல் பந்து வீச்சிர்க்கு ஸலாம் போட ஆரம்பித்தது... ஹர்பஜனின் சுழலை சமாளிக்க முடியாமல் தென் ஆஃப்ரிகா சறுக்கியது ... இதுதான் உலககோப்பையில் இரு அணிகளுக்கும் இருக்க போகும் பெரிய வித்தியாசமே.. சொந்த மைதானத்திலேயே இந்திய வீரர்களின் ஸ்பின் பௌலிங்கை சமாளிக்க தினரும் அவர்கள் ஸிபின்னுக்கு சாதகமாக அமைக்கப்பட்டு இருக்கும் இந்திய பிட்ச்களில் ஜொலிப்பது கஷ்டமே ... இந்திய அணியினருக்கு அவர்கள் தென் ஆஃப்ரிகா மைதானங்களில் பந்து வீச்சில் கலக்கியது ஆறுதலான விஷயம் .. குறிப்பாக ஜாகீர் கான் பந்து வீச்சில் ஃபார்ம்முக்கு திரும்பி இருப்பது தோனிக்கு பெரிய நிம்மதியை கொடுத்திருக்கும்...
நாங்க ஏன் நம்பர் 1 :
அடுத்து இன்னொரு முக்கியமான விஷயம் , இந்த தொடரில் தென் ஆஃப்ரிகா தன்னுடய முழு பலத்தையும் காட்டி விளையாடி இருக்கிறது , ஆனால் இந்திய அணியில் முன்னணி துடுப்பாட்டக்காரர்கள் பாதி பேர் விளையாடவில்லை .. குறிப்பாக சேவாக் , கம்பீர் , டெண்டுல்கர் என்று அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் யாரும் களமிறங்கவில்லை ... குறிப்பாக சொல்ல வேண்டும் என்றாள் தென் ஆஃப்ரிகாவின் முதல் நிலை அணியை இந்தியாவின் இரண்டாம் நிலை அணி திணறடித்து கொண்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் ... இப்பொழுது தெரிந்திர்க்கும் அவர்களுக்கு ஏன் இந்திய அணி நம்பர் ஒன் என்று சொல்லப்படுகிறது என்று ...
இந்தியாவை போல இந்த மாதம் ஆட்டத்தில் கலக்கி கொண்டு இருக்கும் இன்னொரு அணி இங்கிலாந்து ... ஆஸ்ட்ரேலியா மண்ணிலேயே பேட்டிங் பௌலிங் ஃபீல்டிங் என்று எல்லா துறையிலும் அவர்களை விட பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது ... ஆனால் அவர்களால் இந்திய அணியை ஜெயிக்க முடியுமா? அப்படி ஒரு போட்டியில் யார் ஜெயிப்பார்கள்? இதுதான் இன்று கிரிக்கெட் உலகில் மில்லியன் டாலர் கேள்வி... இதற்க்கு ஒரு அதிமேதாவி இப்பொழுது இருக்கும் இங்கிலாந்து அணி ஒரு வாரம் முழுவதும் விளையாண்டாலும் அந்த ஏழு ஆட்டங்களிலும் இந்தியாவை ஜெயிக்கும் பலம் வாய்ந்தது என்று திருவாய் மலர்ந்து இருக்கிறது .. 2003 உலக கோப்பையில் இதே போல ஒரு ஆதி மேதாவியின் வாய் சச்சின் ஒன்றும் பெரிய பேட்ஸ்மென் கிடையாது அவரை தன்னால் எந்த ஆட்டத்திலும் அவுட் ஆக்க முடியும் என்று திருவாய் மலர்ந்து சச்சின் அடித்த அடியில் வாயில் புண்ணோடு ஊர் போயி சேர்ந்தது .. அவர்கள் இதே போல நிறைய பேச வேண்டும் என்பதே என் ஆசை ... கண்டிப்பாக பேசிய பேச்சுக்கு ஏற்றவாறு அடி கிடைக்கும் ...
இந்திய அணிக்கு இந்த உலக கோப்பை ஒரு பெரிய வாய்ப்பு ... 2003 உலக கோப்பையில் அணி எந்த ஃபார்மில் இருந்ததோ அதைவிட அருமையான ஃபார்மில் இப்பொழுது இருக்கிறது ... 2003 இல் நமக்கு வில்லனாக இருந்த ஆஸ்ட்ரேலியா இப்பொழுது பலமிழந்து ஒரு காமெடி பீஸாக காட்சி தருகிறது .. சமீப காலங்களில் மற்ற எல்லா அணியினரையும் நாம் மண்ணை கவ்வ வைத்திருக்கிறோம் (வெஸ்ட் இண்டீஸ் , பாகிஸ்தான் தவிர... அவர்களுடன் நீண்ட காலமாக விளையாடவே இல்லை ஆனால் அவர்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பார்மில் இல்லை) எனவே இது நமக்கு நல்ல வாய்ப்பு ... 2007 போல திடீரென்று எல்லாரும் பார்ம் இழந்து கவுத்திராதீங்கப்பு...
இந்தியாவை தவிர்த்து பார்த்தால் இந்த உலக கோப்பையை வாங்கும் தகுதியுடன் தற்போது இருக்கும் அணிகள் இங்கிலாந்து மற்றும் தென் ஆஃப்ரிகா ... ஆனால் இந்த இரண்டு அணிகளுமே ஸ்பின்னில் ஒழுங்காக விளையாட தெரியாத அணிகள் .. இந்திய மைதானங்களில் அவர்களால் இந்தியாவை வெல்ல இயலுமா என்று தெரியவில்லை .. ஆனால் ஆஸ்ட்ரேலியாவையும் ஒதுக்கி வைக்க முடியாது .. எப்பொழுது வேண்டுமானாலும் முழு திறனுடன் மீண்டு வரும் அணி அது ... இதை தவிர்த்து இந்திய ஆடுகளங்களில் இந்தியாவை வெல்லும் திறன் படைத்தவை என்று பார்த்தால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்ரீலங்காவை கூறலாம் ... ஆனால் இரண்டும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சமீபத்தில் விளையாடவில்லை ... ஆனால் எது வேண்டுமானாலும் நடக்கும் கிரிக்கெட்டில் .. திடீரென்று பங்களாதேஷ் கூட கோப்பையை வெல்லலாம்... (1983 ஞாபகம் வருகிறது .. அன்று இந்திய அணி அப்படிதானே இருந்தது ) அதானே அந்த விளையாட்டின் சுவாரஷ்யமே ....
சினிமா :
மாங்காத்தா பட ஸ்டில்ஸ்களில் தல நரைத்த முடியுடன் காட்சி தருகிறார் .. பார்க்க படம்
சில ரசிகர்கள் இதை ரசித்தாலும் சில ரசிகர்களுக்கு இது பிடிக்கவில்லை ...என்னை கேட்டால் படம் வெளிவரும் வரை இதை பற்றி எதுவும் பேச வேண்டாம் என்றுதான் சொல்லுவேன் ... தல ஒரு விஷயம் செய்தால் அது சினிமாவில் ஒரு ஃபேஷன் போல எல்லாராலும் பின்பற்றபடுகிறது... இன்று போல பெரிய பெரிய நடிகர்கள் தொடங்கி நண்டு சுண்டு நடிகனெல்லாம் படத்தில் கோட்டு சூட்டு போட்டு நடிப்பது அதையே காட்டுகிறது ... யாருக்கு தெரியும் நாளைக்கு இதுவும் ஒரு பெரிய ஃபேஷன் ஆகலாம்... தல பவர் அப்படி ... என்ன ஓவரா பேசுறேண்ணு நினைக்கிறீங்களா? அப்ப இந்த மேட்டர படியுங்கள்
யார் வசூல் சக்கரவர்த்தி?
எங்க படத்த குடும்பம் குடும்பமா வந்து பாக்குறாங்க... சின்ன கொழந்தைங்க எல்லாருக்கும் பிடிச்ச நடிகர் எங்காளுதான்... எங்காலு டான்ஸ் ஒண்ணு போதும் படம் ஓட .. எங்க பாட்டு எப்பவுமே சூப்பர் ஹிட்டுதான்... நாங்கதான் வசூல் சக்கரவர்த்திகள் ... என் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் ம்யூசிக் போடனும் ... பெரிய இயக்குனர்கள் படத்துல மட்டும்தான் நடிப்பேன் ... நொடிக்கு நூறு முறை விளம்பரங்கள் தரனும் ...இப்படி என்னணவோ சொல்லிகிட்டு இருந்தவணுக நடிச்ச எந்த படமும் இந்த லிஸ்டில் கிடையாது ...
குடும்ப ஆடியன்ஸ் அவ்வளவாக கிடையாது .. கொழந்தைகள் ரசிக்கும்படி இன்னமும் படம் கொடுக்கவில்லை ... நடனம் சுத்தமாக தெரியாது ... பாட்டு நல்லா இருந்தாலும் ஊடகங்கள் புறக்கணித்து விடும்... படங்களுக்கு எந்த விளம்பரமும் கிடையாது ... இப்படி எந்த விஷயமும் இல்லாமல் ரசிகர்கள் பலம் ஒன்றை மட்டுமே நம்பி இருக்கும் ஒருவரின் படங்கள் இரண்டு இந்த லிஸ்டில் இடம் பிடித்து உள்ளன ..
காரணம் சிம்ப்ளி ஒரே வார்த்தை அது “தல” ... இதில் வரலாறு பெரிய ஆச்சரியம் நொடிக்கு நூறு முறை விளம்பரம் போடப்படும் படங்கள் வசூலிக்க முடியாத தொகையை குறைந்த பட்சம் பேப்பரில்கூட விளம்பரம் கொடுக்கபடாத ஒரு படம் வசூலித்திருக்கிறது ... இந்த படத்திர்க்கு நூறாவது நாள் விளம்பரம் தூத்துக்குடி ரசிகர்களால் தினத்தந்தி பேப்பரில் போடபட்டது ... தூத்துக்குடியிலும் நாகர்கோவிலிலும் படம் நூறு நாட்கள் ஓடி இருந்தது ... இப்படி தயாரிப்பாளர் மொத்தமாய் கைகழுவிய படம் .. ஆனால் வசூல் சாதனை ... தரமான விசயங்களுக்கு விளம்பரம் தேவை இல்லை என்று அழுத்தமாக சொல்லி இருக்கிறது வரலாறு... வசூல் சக்கரவர்தி என்று தங்களுக்கு தாங்களே முடிசூட்டி கொண்டவர்கள் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்?
இன்னொன்று பில்லா .. நான்தான் எப்பவும் kinf of opening என்று அஜித் அழுத்தமாய் தன் போட்டியாளர்களுக்கு உணர்த்திய படம் .. அருப்புக்கோட்டை தமிழ்மணி திரை அரங்கில் இதற்க்கு அமைந்த ஒபேணிங்க் மாஸ் இதுவரை வேறு எந்த படத்திர்க்கும் நான் கண்டதில்லை ... டிக்கெட் கிடைத்து உள்ள போன கூட்டத்தை விட டிக்கெட் கிடைக்காமல் வெளியேறிய கூட்டம் அதிகம் ... ஒரு மணிநேரத்திர்க்கு தியேட்டர் அமைந்திருந்த விருதுநகர் – அருப்புக்கோட்டை சாலையில் பேருந்துகள் செல்ல முடியவில்லை ... தல இதை போன்ற தான் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் படங்களாய் தெரிவு செய்து நடிக்க வேண்டும் என்பதே ஒரு ரசிகனாய் என்னுடய ஆசை...
3 comments:
செம காமெடி பீஸ் சார் நீங்க. குமுதம் சொல்றத எல்லாம் நம்பிக்கிட்டு. சந்திரமுகி வசூலவிட பில்லா வசூல் அதிகமா? எதால சிரிக்கிரதனு தெரில.
இதையும் கொஞ்சம் படிச்சி பாருங்க.
http://www.indiaglitz.com/channels/tamil/article/63274.html
// செம காமெடி பீஸ் சார் நீங்க
சொல்லிட்டாருயா கவர்னறு
// எதால சிரிக்கிரதனு தெரில.
அது என்ன எப்ப பாத்தாலும் இப்படி ஒரு கேள்விய பல பேர் கேக்குறீங்க .. என்னமோ மூக்குலையும் சூ@@#@$ ளையும் பல்லு இருக்கிற மாதிரி ... எங்க வாய தவிர வேற எதாவுலயாவது சிரிச்சி காட்டுங்க பாப்போம் ...
அப்பறம் அந்த லிங் போயி பார்த்தேன் .... உங்களுக்கு மூட்ட மூட்டையா எலுமிச்சம் பழம் தேவப்படும் போலயே ... எங்க ஏரியா பக்கம் சீப்பா இருக்கும் ... அனுப்பி வைக்கட்டுமா?
கிரிக்கெட் பற்றி விலவாரியாக (அல்லது வரி, வரியாக)
நிறைய விஷயங்கள்.
அடுத்து, சினிமா (புள்ளி அல்லது பட்டியல்) விவரங்கள்.
இந்த பதிவில், ஒவ்வொரு பத்திக்கும் தலைப்பிட்டிருந்தது
சுவையாயிருந்தது.
Post a Comment