Followers

Copyright

QRCode

Monday, December 27, 2010

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்




நாம் ஒவ்வொருவரும் பணம் சம்பாதிப்பதார்க்காக எவ்வளவு கஷ்டபடுகிறோம் என்பது நமக்கு மட்டுமே தெரியும் ... நாம் செய்யும் பணிக்காக தூக்கத்தை துறந்து , சாப்பாட்டை துறந்து , குடும்பத்தை மறந்து , யார் யாரிடமோ திட்டு வாங்கி , யார் யாருக்கோ தன்மானத்தை விட்டு சொம்பு  தூக்கி இப்படி நமக்காகவும் நம் குடும்பத்துக்காகவும் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடுபட்டு கொண்டிருக்கிறோம்... இவ்வளவு கஷ்டபட்டு சம்பாதித்தாலும் அதில் வரும் கணிசமான தொகையை நம் நாட்டிற்க்காய் வரி பணமாக கொடுக்கிறோம் .. வாங்கும் சம்பளம் தொடங்கி வண்டிக்கு போடும்  பெட்ரோல் வரைக்கும் நிறைய பணம் வரியாக   கட்டி கொண்டு இருக்கிறோம் .. எல்லாம் எதற்க்காக நம்மை போல நம் சமூதாயமும் முன்னேற வேண்டும் என்பதற்காக மட்டுமே ... நாம் வரி கட்டினால்தான் நம் ஊருக்கு ரோடு போட முடியும் ... நாம் வரி கட்டினால்தான் நம் ஊரில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு மதியம் இலவசமாக சத்துணவு போட முடியும் ... நாம் வரி கட்டினால்தான் குடிநீர் வினியோகம் சிறப்பாக நடக்கும் .. இப்படி நமக்கான வசதி வாய்ப்புகள் எல்லாம் சிறப்பாக அமைய வேண்டும் என்றுதானே வரி கட்டி கொண்டு இருக்கிறோம் ...


ஆனால் எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா? ... நாம் இரவும் பகலும் கஷ்டபட்டு சம்பாதித்த பணத்தை சில மொள்ளமாரி முடிச்சவிக்கி நாதாரி முண்டங்கள் அரசியல் , பதவி என்ற பெயரில் மொத்தமாக கொள்ளை அடித்து போகிறார்களே ... நாம் கட்டிய வரிப்பணம் முழுவதும் அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் சொகுசு வாழ்க்கை வாழ பயன்பட போகிறதே ... இங்கே நாம் குண்டும் குழியுமான சாலையில் பயணித்து  சம்பாத்தித்த காசை வைத்து அந்த நாதாரி முண்டங்கள் சொந்தமாக சொகுசு வானூர்திகள் வாங்கி பயணம் செய்கிறார்களே ... சரி போகிறது இந்த பிணம் தின்னி கழுகுகள் அவர்கள் தின்றது போக மீதி இருக்கும் சொற்ப பணத்தையாவது ஒழுங்காக மக்கள் தேவைகளுக்காக பயன்படுத்துகிறார்களா?

அவர்கள் கொண்டு வரும் திட்டங்களை எல்லாம் பாருங்கள் மக்களுக்கு பயன்படுகிறதோ இல்லையோ , அவர்கள் நம்மிடம் இருக்கும் மீதி பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் இருந்து லவட்டி கொண்டு போக நன்றாக பயன்படுகின்றன ... ஒரு சின்ன உதாரணம் , ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் ... மேலோட்டமாக பார்த்தால் அது ஏழைகளுக்கான திட்டமாக தெரியும் , ஆனால் உண்மையில் அது பயன்படுவது கொழுத்த முதலாளிகளுக்கே ... அந்த ஒரு ரூபாய் அரிசியை மக்களை ஏமாற்றி கொஞ்சம் அதிக விலை கொடுத்து(மூன்று முதல் ஐந்து ரூபாய் ) வாங்கி , அதையே திரும்பி மக்களிடம் இன்னும் அதிக விலைக்கு விர்க்கிறார்கள் ... இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கி அதையே கொஞ்சம் பாலிஷ் செய்து இருபது ரூபாய்க்கு விர்க்கிறான் ... பெரிய பெரிய ஹோட்டல் முதலாளிகளுக்கெல்லாம் இந்த ஒரு ரூபாய் அரிசி பெரிய வரபிரசாதம் ... இப்படி வெறும் ஒரு ரூபாய் செலவு பண்ணி நம் காசு பதினெட்டு ரூபாய்யை நம்மிடம் இருந்து பறித்து அவர்கள் தங்கள்  சொத்தில் சேர்த்து கொள்கிறார்கள் ... வரி பணம் கட்டுவதோடு இல்லாமல் இப்படி பொருட்களை நமக்கே தெரியாமல் அதிக விலை கொடுத்து வாங்கி நம் காசை நாமே அவர்களுக்கு தூர்வாரி கொண்டு இருக்கிறோம் ...

இன்னொரு திட்டம் இருநூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் ... இந்த திட்டத்தில் பயன் பெரும் கிராம மக்கள் அனைவரும் மறைமுகமாக ஏதோ ஒரு முதலாளிக்குதான் அரசாங்கத்தின் செலவில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள் .... எங்கள்  ஊரில் சமீபத்தில்  இப்படி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் மக்கள் சாலை பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர் ... அந்த சாலை போடுவதர்க்கு அரசாங்கம் ஒரு தனியார் நிறுவனத்திர்க்கு டெண்டர் விட்டு இருந்தது ... அவன் செய்ய வேண்டிய வேலை ... வேலை செய்பவர்களுக்கு அவன்தான் காசு தர வேண்டும் ஆனால் அரசாங்கத்தின் செலவில் அதாவது நம் வரி பணத்தில் இருந்து அவர்களுக்கு சம்பளம் தந்து கொண்டு இருந்தார்கள் இந்த திட்டத்தின் மூலம் ... சரி அப்படியாவது அவனுக்கு டெண்டர் காசு கம்மியாகிறதா என்று பார்த்தால் அவன் இதற்க்கு முன்னர் எவ்வளவு சொல்லி இருந்தானோ அதே காசுதான் ... அதாவது இந்த கூலி தொழிலாளிகளுக்கும் அவனே சம்பளம் தருவதை போல கணக்கு காட்டுகிறார்கள் .. எல்லாம் யார் பணம் நீங்களும் நானும் கஷ்டபட்டு சம்பாதித்த காசு ... நம் காசில் நாம் போயி வர ரோடு போடுவதில் கூட ஏதோ ஒரு நாதாரி நம் காசை பிடுங்கி தின்கிறான் ...

இன்று செல்போனே பயன்படுத்தாத ஆளே கிடையாது .. ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமாவது செல்லில் பேசுகிறோம் ... லோக்கல் கால் என்றாள் அம்பது பைசா , STD என்றாள் ஒரு ரூபாய் .. வெளிநாடுகளுக்கு என்றாள் ஐந்து ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறார்கள் ... சரி இவர்களுக்கு அப்படி என்ன செலவு இருக்கிறது ... நாம் கொடுக்கும் வரிபணத்தில் அரசாங்கம் செயர்க்கை கோள் ஒன்றை செய்து விண்ணில் ஏவுகிறது ... அதில்  இங்கு இருக்கும் செல் கம்பனிகள் ஏலத்தில் அவர்களுக்கு தேவையான அலைவரிசையை வாங்கி கொள்கிறார்கள் ... அந்த ஏல தொகைதான் அவர்கள் போடும்  முதல்...  அதை தவிர்த்து ஊர் ஊருக்கு டவர் அமைத்தல் , அதை பராமரித்தல் என்று சில செலவுகள் உண்டு ... ஆனால் இது எல்லாம் இவர்கள் சம்பாதிக்கும் பணதிர்க்கு  முன்னாள் பிஸ்கோத்து காசு ...



அரசாங்கம் அந்த ஏலத்தை மட்டும் எந்தவிதமான ஊழலும் இல்லாமல் நேர்மையாக நடத்தி இருந்தால் இன்று லோக்கல் கட்டணம் வெறும் ஒரு பைசாவாக இருந்திருக்கும் , STD பத்து பைசாவில் பேசி இருக்கலாம் ... இன்று மாதம் ஆயிரம் ரூபாய் மொபைல் பில் கட்டும் ஒருவர் வெறும் நூறு ரூபாய்க்குள் முடித்து கொள்ளலாம் ... ஆனால் இவர்கள் அநியாய விலைக்கு ஏலம் விட , அதை எடுத்த முதலாளிகள் அந்த காசை நம்மிடம் கறந்து விடுகின்றனர் ..ஆக மொத்தம் அந்த செயற்கை கோள் தாயாரிக்கபட்டதும் நம் காசில் ... அது விண்ணில் ஏவபட்டதும் நம் காசில்...ஆனால் அதை பயன்படுத்த நாம் அநியாய விலை கொடுக்க வேண்டி இருக்கிறது ... அதை பயன்படுத்தி எவன் எவனோ சம்பாதிக்கிறான் ..

நீங்கள் ஒரு பசு மாட்டை  உங்கள் சொந்த பணத்தில் வாங்கி , அதர்க்கு நல்ல தீவனம் போட்டு வளர்க்கிறீர்கள் ... அந்த மாட்டில் பால் கரக்க ஒரு வேலை ஆளை நியமனம் செய்கிறீர்கள் .. அவன் உங்கள் மாட்டிலேயே பால் கறந்து உங்களிடமே அதை ஐந்து மடங்கு விலைக்கு விற்றால் என்ன செய்வீர்கள்?   போடா நாயே என்று அவனை அடித்து விரட்ட மாட்டீர்கள் .. நான் மேலே சொன்ன விஷயமும் கிட்டதட்ட இதே மாதிரிதான் ஆனால் இங்கே நாம் வெறுமனே கைகட்டி வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும் ...

நம்மை சொல்லி குற்றம் இல்லை .. முதலில் வீடு கட்டுவதில் ஊழல் என்றார்கள் , அந்த பிரசனை முடிவதற்க்குள் பீரங்கி வாங்கியதில் ஊழல் என்றார்கள் , சரி இதிலாவது ஏதாவது தண்டனை வாங்கி தருவார்கள் என்று நினைத்து முடிப்பதற்க்குள் காமென்வெல்த் போட்டிகளில் ஊழல் என்றார்கள் , அடுத்து அதை விட பெரிய அளவில் 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வந்து விட்டது ..


காய்ச்சல் அடிக்கிறது என்று ஊசி போட போனவனை டாக்டர் பரிசோதித்து விட்டு உனக்கு டைபாய்டு என்று சொல்ல , அதர்க்கு ட்ரீட்மெண்ட் எடுக்க அதை விட பெரிய டாக்டரிடம் போனால் அவர் பரிசோதித்து விட்டு உனக்கு கேன்சர் என்று சொல்ல , சரி என்று கேன்சர் ஸ்பெஷலிஸ்ட்டிடம் ட்ரீட்மெண்ட் எடுக்க போயி அவர் தம்பி உனக்கு எய்ட்ஸ் என்று குண்டை தூக்கி போட்டால் அவன் சாகுறது சாக போறோம் இருக்குற வரை எந்த கவலையும் இல்லாமல் சந்தோஷமாக வாழுவோம் என்ற மனநிலைக்கு வந்து விடுவான் ... நம் அரசியல்வாதிகள் இன்று நம்மை இந்த மனநிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள் ...  ஊழலை சகித்து வாழ கற்று கொண்டு விட்டோம் நாம் ...

சரி இதற்க்கு தீர்வே கிடையாதா? என்றாள் கண்டிப்பாக இருக்கும் ... பெரிய பெரிய சர்வாதிகாரிகளையே மண்ணோடு மண்ணாக மக்கி போக செய்யும் வல்லமை படைத்தது காலம் ... இவர்கள் எல்லாம் எம்மாத்திரம் ... ஆனால் அது ஒரே நாளில் நடந்து விடாது .. மக்கள் மத்தியில் ஏதோ ஒரு புரட்சி வெடிக்கும் , எல்லாமும் மாறும் ... புரட்சி ஒரு காட்டு தீயை போன்றது ... காட்டை சாம்பலாக்கும் தீயை போல ஒரு நாட்டையே மாற்றி போடும்  சக்தி அதர்க்கு உண்டு ..  அந்த காட்டு தீ தொடங்குவது ஒரு சின்ன பொறியில்தான் ... அதே போல் புரட்சியும் ஏதோ ஒரு சின்ன பொறியில்தான் தொடங்கும் ...நாம் காலகட்டத்தில் அந்த சின்ன பொறியையாவது இந்த சமூகத்தில் உண்டாக்குவோம் ... நம் சந்ததிகள் அதை அழிக்கும் அனலாக  மாற்றி காட்டுவார்கள்...

அவர்கள் காலத்திலாவது இந்தியா உண்மையான ஜனநாயக நாடாக இருக்கட்டும் ...       


Friday, December 24, 2010

மன்மதன் அம்பு - என்னாச்சு கமல்?

மன்மதன் அம்பு




மன்னாரு மதன் அம்புஜஸ்ரீ இந்த மூன்று பேருக்குள்  நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டமே படம் ... பொதுவாக கமல் படங்கள் ஒன்று ஹெய்ராம் மகாநதி போல ரொம்ப சீரியஸாக இருக்கும் இல்லை காதலா காதலா , பஞ்சதந்திரம் போல முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும் ... இந்த படம் கடவுள் பாதி மிருகம் பாதி போல சீரியஸ் பாதி காமெடி பாதி கலந்து வந்திருக்கிறது ...


படத்தின் கதை ரொம்ப சிம்பிள் .. திரிஷாவால் கமல் தன் மனைவியை இழக்கிறார் .. கமலால் த்ரிஷா தன் காதலன் மாதவனை விட்டு பிரிக்கிறார் .. கடைசியில் இருவரும் இணைகிறார்கள் ... இதுதான் கதை ... முதல் பாதியில் திரைக்கதையில் பட்டைய கிளப்பிய கமல் இரண்டாம் பாதியில் காமெடியில் ஒளிந்து  கொள்ளுகிறார் ... இரண்டுமே தனித்தனியாக நன்றாக வந்திருக்கிறது ... ஆனால் மொத்தமாக ஒரு படமாக பார்க்கும் போது ரொம்ப இடிக்கிறது...


கமல் the show stealer” , அளப்பரையாய் அறிமுகம் ஆகும் முதல்  காட்சியில் இருந்து கடைசியில் திரிஷாவை கட்டி பிடிக்கும் கிளைமாக்ஸ்  காட்சி வரைக்கும் பின்னி பெடல் எடுத்திருக்கிறார் ... நடிப்பிலும் , காமெடியிலும் ... அதுவும் மாதவன் அவரை ஏமாற்றிய பின்னர் போனில் திரிஷாவை பற்றி பொய் சொல்ல ஆரம்பிக்கும் காட்சியில் அவரின் பாடி லாங்குவேஜ் பிரமாதம் ... தியேட்டரில் விசில் பறக்கிறது ... சில காட்சிகளில் அவரின் நடிப்பு தேவை இல்லாமல் திணிக்கபட்ட்டது போல தனியாக தெரிவதை தவிர்த்திருக்கலாம் . மற்றபடி கமல் அவர் ரசிகர்களை ஏமாற்றவில்லை ...

த்ரிஷா, அம்மணிக்கு படத்தில் அருமையான கேரக்டர் .. எனக்கும் நடிக்க தெரியும் என்று நிரூபித்து இருக்கிறார் பல இடங்களில் .. மாதவனுடன் காருக்குள் சண்டை போடும்  இடம் டாப் கிளாஸ் ... நெஞ்சில் குத்தி இருக்கும் டாட்டூஸ் தெரிய வேண்டும் என்பதற்க்காகவே படம் முழுவதும் கவர்ச்சியான உடையிலேயே வருகிறார் .. டாட்டூஸை கண்டுபிடித்த மகாராசன் யாரோ? எங்கிருந்தாலும் வாழ்க ...


மாதவன் , படத்தில் டம்மி பீஷாக வருகிறார் .. தண்ணி அடித்து விட்டு கமலுடனும் திரிஷாவுடனும் போனில் பேசுவதோடு அவர் வேலை முடிந்து விடுகிறது ... அவர் கதாபாத்திரம்தான் அப்படி டம்மியாக்க பட்டு இருக்கிறது ஆனால் நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார் ... ஆனால் ரன் படத்தில் நடித்த மாதவ்ன் இந்த படத்தை பார்த்தால் தூக்கில் தொங்குவதை தவிர வேறு வழி இல்லை ..  எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்க?

படத்தில் நடிப்பில் கமலை அப்பப்ப ஓவர்டேக் பண்ணும் இன்னொருவர்  சங்கீதா ... தன் மகன் தூங்கி விட்டானா இல்லையா என்பதை அவர் கண்டுபிடிக்கும் டிரிக் சூப்பர்.... அவர் பேசும் வசனங்கள் ஷார்ப் ... ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார் ...



படத்தில் ஒளிப்பதிவு அருமை .. புதியவராம் நம்ம முடியவில்லை ... கொடைக்கானல் மலை காட்சிகளும் , கப்பல் காட்சிகளும் கண்ணுக்கு குளிர்ச்சி ... கமலுக்கு முகத்தில் முதுமை எட்டி பார்ப்பதை இவர் பல காட்சிகளில் தன் கேமரா கோணங்களால் நம் பார்வையில் இருந்து மறைத்திருக்கிறார் ... the best work of this film  …



படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அந்த பிளாஷ்பேக்கில்      வரும் பாடல் ... அதை படமாக்கி இருக்கும் விதம் அருமை .. கமலின் மனைவி சாவதில் ஆரம்பிக்கும் பாடல் கமல் அவரை முதன் முதலாய் பார்க்கும் அந்த நொடியோடு முடிகிறது .... கமலின் சிறந்த பாடல்களில் இது கண்டிப்பாக இடம் பெரும்

வசனம் பக்கா ... போய் படத்தில் பாருங்கள் ... சிரிக்கவும் வைக்கிறது .. சிந்திக்கவும் வைக்கிறது ... அதே போல காமெடி காட்சிகள் மிகவும் அருமையாக வந்திருக்கிறது ... மாதவன் ஒவ்வொரு முறையும் குடித்து விட்டு அடிக்கும் லூட்டிகள் வயிறு குழுங்க சிரிக்க வைக்கிறது ... அதுவும் கடைசி அரைமணி நேர படம் அக்மார்க் கமல் கே.எஸ்.கூட்டணி காமெடி கதம்பம் ...


ஆனால் படத்தின் பெரிய குறையே கதைதான் ... கிளைமாக்ஸில் கதை அந்த நதியில் ஓட்டை விழுந்த படகு போல மொத்தமாக மூழ்கி விடுகிறது ... இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் ... கமலின் மற்ற காமெடி படங்களில் இருக்கும் ஏதோ ஒன்று இதில் குறைகிறது .. அது படத்தின் அடிநாதமாக வரும் கதை கரு .. பஞ்சதந்திரத்தில் தன் நண்பர்களுக்காக பழிகளை தாங்கி கொள்ளும் கமல் , கடைசியில் சிம்ரன் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது தன்னை தப்பாக பேசும் அந்த நண்பர்களின் குடும்பத்தாருடன் அவர் பேசும் காட்சி ... அதுவரை படத்தில் வந்த  காமெடி ட்ரீட்மெண்டை  தாண்டி நம் மனதில் ஒரு சின்ன வலியை உண்டு பண்ணும் ... அதே போல பம்மல் கே சம்பந்தம் படத்தின் கடைசி அரைமணி நேரம் சிம்ரனால் ஏமாற்றபட்ட கமலின் மேல் நமக்கு பரிதாபம் வரும் ... ஆனால் இதை போன்ற மனதை தொடும் எந்த விஷயமும் படத்தின் கதையில்  இல்லை .. மும்பை எக்ஸ்பிரஸ் படம் பெரும் தோல்வியை சந்தித்ததிர்க்கும் காரணம் இதுதான் ... ஆனால் மன்மதன் அம்பு அந்த அளவிர்க்கு பெரிய தோல்வியை சாந்திக்காது என்றாலும் கமலின் சறுக்கிய படங்களில் இடம் பெற வாய்ப்பு நிறையவே உண்டு ...  



மொத்தத்தில் கமல் என்னை போன்ற அவர் ரசிகர்களை இந்த படத்தில் கொஞ்சம் ஏமாற்றி விட்டார் ... நடிகனாக என்னை பிரமிக்க வைத்த கமல் இந்த படத்தில் திரைக்கதை ஆசிரியராக கொஞ்சம் சறுக்கியே இருக்கிறார் ...

மன்மதன் அம்பு : முனை மழுங்கிவிட்டது...



டிஸ்க்கி : தியேட்டர் இடைவேளையில் இரண்டு பேர் பேசி கொண்டு இருந்தார்கள் காலையில காய்கறி வாங்கிட்டு மெத்துக்கு போவான் .. சாயாங்காலம் திரும்பி வீட்டுக்கு போவான் ... இத வச்சி ஒரு படம் எடுக்க இவராள மட்டும்தான் முடியும்   அந்த இன்னொருவர் ஆனா அதுளையும் ஒரு மெசேஜ் இருந்ததுல ... பொறுமையா பாக்கணும்யா ... நல்லா இருக்கும்

அந்த இருவர் முண்டா பனியனும் பட்டாபட்டி தெரிய கைலியை தூக்கி கட்டி கொண்டு வாயில் பீடியை வலித்து கொண்டு இருந்த சுமை தூக்கும் தொழிலாளிகள் ... எம்ஜிஆர் ராலும் , சிவாஜியாலும் , ரஜினியாலும் ஒரு காலத்தில் கமலாலும் மசாலா உருண்டைகள் வலுக்கட்டாயமாக திணிக்கபட்டு சினிமா என்றாலே மசாலாதான் என்று புத்தியில் திணிக்கபட்ட கோடானுகோடி சாதாரண தமிழனின் பிரதிநிதிகள் அவர்கள் ... அவர்களின் இந்த பேச்சை கேட்ட போது கமல் கொஞ்சம் கொஞ்சமாக தன் முயற்சியில் வெற்றி பெற்று கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது ...




Sunday, December 19, 2010

2010 தமிழ் சினிமா - கோவா முதல் காவலன் வரை ஒரு பார்வை

ஆமா இவரு பெரிய மணிரத்தினம்  இருபத்தினாலு மணிநேரமும் சினிமாவ பத்தியே யோசிச்சிக்கிட்டு சினிமாவிலேயே வாழ்ந்துக்கிட்டு இருக்காரு நானும் சினிமாவும் அப்படின்னு கட்டுரை எழுத வந்துட்டாறு என்று நீங்கள் திட்டுவது புரியிது ... சினிமாவுக்கும் எனக்கும் நேரடியான தொடர்புகள் எதுவும் இல்லை என்றாலும் சினிமாவை வாழ வைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் இந்த வருடம் நான் பார்த்த சினிமாக்களை பற்றி ஒரு சின்ன பார்வைதான் இந்த பதிவு ...

அதுக்கு  முன்னாடி நீங்க இந்த வருஷம் எந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருந்திருக்கீங்கண்ணு டெஸ்ட் பண்ண ஒரு சின்ன க்விஸ் ... ரெண்டே ரெண்டு கேள்விதான் ... நீங்க நல்லவரா , ரொம்ப ரொம்ப நல்லவரா இல்ல கெட்டவராண்ணு நான் சொல்லுறேன்.. ஆனா ஒண்ணு பிட் அடிக்காம எக்ஸாம் எழுதனும் , அப்பதான் என்னால கரெக்டா சொல்ல முடியும் ...

கேள்விக்கு போகலாமா?\

கேள்வி 1 :

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஷகீலா ஆண்டி நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
    a) பரிமளா
    b) சியாமளா  
    c) விமலா  

கேள்வி 2

நித்தி ரஞ்சி விடியோவில் ரஞ்சி அணிந்திருந்த செருப்பின் நிறம் என்ன?

   a) கறுப்பு
   b) வெள்ளை
   c) செறுப்பே அணியவில்லை

மேல இருக்கிற ரெண்டு கேள்விக்கும் பதில் கண்டுபிடிச்சாசா வெயிட் வெயிட் அவசரபடக்கூடாது முடிவை நான் பதிவோட கடைசியில சொல்லுறேன் ... அதுவரைக்கும் இந்த மொக்கையை கொஞ்சம் படிங்க


2010இல் நான் ரசித்த சிறந்த ஐந்து படங்கள் :


2010ல நான் மொத்தம் 32 படம் தியேட்டர்ல போய் பாத்திருக்கேன் ... இதுல நான் மிகவும் ரசித்த ஐந்து படங்கள் அதே வரிசையில் ( இது என்னுடய பார்வையில் மட்டுமே )

  1. களவாணி இந்த வருசத்தின் மிக சிறந்த பொழுதுபோக்கு படம் இதுதான்
  2. பாஸ் என்கிற பாஸ்கரன் சென்டிமெண்ட் ஹீரோயிசம் என்று எந்த தலைவலியும் இல்லாமல் முழுக்க முழுக்க சிரிக்க வைத்த படம்
  3. மைனா எந்த இடத்திலும் போர் அடிக்காத திரைக்கதை
  4. எந்திரன் ரஜினியின் வில்லத்தனம்
  5. ஆயிரத்தில் ஒருவன் விறுவிறுப்பான முதல்பாதி மட்டும்


சென்ற வருடம் நான் அதிகமுறை தியேட்டரில் பார்த்த படம் அசல் , மொத்தம் ஐந்து முறை . முதல் இரண்டு தடவை தலைக்காக மட்டும் .. அடுத்த இரண்டு தடவை தலைக்காக மட்டும்  கடைசி ஒருமுறையும்  தலைக்காக மட்டும் .... (படம் எங்கள் ஊரில் இருபது நாட்கள் மட்டுமே ஓடியது என்பது குறிப்பிடதக்கது)

அதற்க்கு அடுத்து நான் இரண்டு முறை பார்த்த படம் களவாணி .. எந்திரன் டிக்கெட் விலை அதிகமாக இருந்ததால் ஒரு முறையோடு நிறுத்தி கொண்டேன் ... இல்லை என்றால் குறைந்தது இரண்டு முறையாவது பார்த்திருப்பேன் ...



தியேட்டரில் சென்று பார்க்க முடியாமல் தவற  விட்ட நல்ல படம் நான் மகான் அல்ல


தியேட்டரில் சென்று பார்க்காமல் தப்பிய மொக்கை படங்கள் ஆறுமுகம் , தம்பிக்கு இந்த ஊரு , தீராத விளையாட்டு பிள்ளை, கோவா , காதல் சொல்ல வந்தேன்

மூன்று மணிநேரம் தியேட்டரில் கதற கதற அடிவாங்கிய படங்கள்
  1. சுறா உயிர் பொழச்சது தமன்னா புண்ணியம்
  2. பையா  பாட்டு மட்டும் இல்லைனா படம் வடக்குபட்டி ராமசாமி காசு ஊதான்... 
  3. தில்லாலங்கடி வடிவேலு மட்டும் இல்லைனா  இந்த படம் ஜெயம் ரவியின் கேரீயரில் மிகப்பெரிய ஊத்தாக அமைந்திருக்கும்  
  4. மதராசபட்டினம் டைட்டானிக்க ஏற்கனவே நான் பத்து தடவைக்கு மேல பாத்துட்டேன் அதனால இந்த படம் பாக்கும் போது  பயங்கர தலைவலி ...
  5. குட்டி இப்படி ஒரு கதைய ரீமேக் பண்ணுற தைரியம் தனுசுக்கு மட்டும்தான் வரும் .. வளர்ந்த இடம் அப்படி ... நான் இண்டர்வெல் விட்டதும் எழுந்திருச்சி வெளிய வந்த ஒரே படம் இதுதான் ...
  6. மாத்தியோசி தயாரிப்பாளர் அவ்வளவு காச எங்கையில கொடுத்திருந்தாக்கூட இதவிட நல்ல படம் எடுத்து கொடுத்திருப்பேன் .. அந்த அளவுக்கு மட்டமான படம்
  
சென்ற வருடம் வந்த படங்களில் நான் ரசித்த இரண்டு பாடல்கள்

  1. காதல் அணுக்கள் எந்திரன்
      ஷங்கர் சொல்லியதை போலவே ரொம்பவே பிரீஷியான பாடல். இதில் ரஜினி ஒரு சிவப்பு கலர் டி ஷர்ட் போட்டு நடந்து வரும் சீன் செம மாஸ் ...  

  1. இதுவரை கோவா
      யுவன் சங்கர் ராஜாவின் தி பெஸ்ட் பாடல் இது ... காதலர்களுக்கான உண்மையான பாடல் இது ...



விஷுவலில் என்னை கவர்ந்த பாடல் விண்ணைத்தாண்டி வருவாயாவில் வரும் மன்னிப்பாயா பாடல் , அந்த ஆற்றங்கரை வீடும் , இரவில் ஒளிரும் மின் விளக்குகளும் , பவுர்ணமி இரவில் படகு சவாரியும் அதைவிட பட்டு சேலையில் தேவதை போல பளபளக்கும் திரிஷாவும் (திரிஷா இப்ப எல்லாம் ரொம்ப அழகாய்கிட்டே போறாங்க என்ன ரகசியம்னே தெரியல) என ஒட்டுமொத்தமாக என்  மனதை மொத்தமாக அள்ளிய பாடல் இது ...


வருஷம் முடியபோகுது ஆளாளுக்கு விருது குடுக்க ஆரம்பிச்சிடுவாணுக, இதோ என்னுடய பங்குக்கு நானும் இவங்களுக்கெல்லாம் விருது கொடுக்க போறேன்

  1. அஞ்சா நெஞ்சன் விருது சக்தி சிதம்பரம் (பெருந்தலைகள் எல்லாம் கவுக்க பாக்குற , வரிசையா மண்ண கவ்விக்கிட்டு இருக்கிற தளபதி நடிச்ச  காவலன் படத்த தைரியமா காசு கொடுத்து வாங்கி இப்ப படத்த ரிலீஸ் பண்ண போராடுற தைரியத்துக்காக )
  2. நினைத்ததை முடிப்பவன் விருது ரஜினிகாந்த் (ஐஸ்வர்யா ராயுடன் நடித்தே ஆக வேண்டும் என்ற தன் ஆசையை நிறைவேற்றி கொண்டதால் )
  3. வெள்ளி விழா நாயகன் விருது இளையதளபதி டாக்டர் விஜய் (அவர் நடித்த ஜோஸ் ஆளுக்காஸ் விளம்பரம் நூற்றி அம்பது நாட்களை தாண்டி இன்னமும் திரையரங்குகளில் தூக்கபடாமல் ஓடிக்கொண்டிருப்பதால்)
  4. நான் உண்மையிலேயே ஏழைங்கோ  விருது கருணாநிதி (அவர் காட்டிய சொத்து கணக்கு விபரத்திற்க்காக )
  5. நானும் ரௌடிதான் விருது  ஜாக்குவார் தங்கம்  (அஜித் ரஜினிக்கு எதிராக வாய்சவாடல் விட்டதால் )
  6. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் விருது- விக்ரம் (கந்தசாமி , ராவணன் என்று அடி மேல் அடி வாங்கியதால் )

கொஞ்சம் சீரியஸ் விருதுகள்

கண்டிப்பா சிறந்த நடிகன் அப்படின்னு இந்த வருசத்துல சொல்லணும்னா நந்தலாலாவில் வந்த அந்த சின்ன பையானத்தான் நான் சொல்லுவேன் ... மிகைபடுத்தபடாத நடிப்பை அவனிடம் இருந்த வாங்கிய மிஷ்கினை பாராட்டலாம்...

அதே மாதிரி சிறந்த இயக்குனர்னா அது என்னை பொறுத்தவரை களவாணி இயக்கிய சற்குணம்தான் ... நான் கொஞ்சம் கூட சலிப்படையாம இந்த வருடம் பார்த்த ஒரே ஒரு திரைபடத்தை அவர் இயக்கியதால் அவரை நான் சொல்லுவதே முறை ... இவரின்  அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பாக்கிறேன் .. சொதப்பாமல் இருந்தால் சரி...

சிறந்த இசை என்றாள்  ஏஆர். ரகுமான் அவர்கள்தான் .. வழக்கம் போல இந்த வருசமும் இசை அமைத்த எல்லா பாடல்களும் ஹிட் ... அப்ப அவரைதான  சொல்ல வேண்டும் சிறந்த இசையமைப்பாளர் என்று ...

சிறந்த காமெடினா அது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல சந்தானம் பண்ணுனதுதான்   ....  

இந்த வருடம் பதிவுலகில் நான் அதிகம் காண்டாகிய ஒரு விஷயம் சில அதிமேதாவிகள் எழுதும் சினிமா விமர்சனங்கள்தான் ...

சினிமா விமர்சசனம் எழுதும் பதிவர்களே , நீங்க காசு கொடுத்து பாக்குற சினிமாவ விமர்சனம் பண்ண உங்களுக்கு முழு உரிமையும் இருக்கு ,, ஆனா சில பேர் சினிமா விமர்சனம் எழுதுரேங்கிர பேருள கொஞ்சம் அதிகமாகவே அந்த படத்தை டெமேஜ் பண்ணி எழுதுராங்களோண்ணு தோணுது ... ஒரு படத்த விமர்சனம் பண்ணும் போது படத்துல இருக்கிற குறைகளை சொல்லலாம் தப்பே இல்ல ஆனால் இவனேல்லாம் ஒரு இயக்குனரா ? நீயெல்லாம் எதுக்கு நடிக்கிற ... என்று வரம்பு மீறி எழுதுவதெல்லாம் ரொம்ப ஓவர் ... சிறந்த விமர்சனம் அந்த படங்களின் நிறை குறைகளை அலசுவதுதான் என்று நான் எண்ணுகிறேன் ... அதை விட்டு விட்டு உங்கள் அதிமேதாவிதனத்தை அதில் காட்டுவதை தவிர்க்கலாமே ... ஒரு பேச்சுக்கு நீங்க எழுதிக்கிட்டு இருக்கிற பிளாக்க யாராவது இப்படி ரொம்ப மோசமா விமர்சனம் செஞ்சா உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்? சந்தானம் பாணியில சொல்லணும்னா ஓசியில அஞ்சுபைசா செலவில்லாம பதிவு எழுதிர நமக்கே இவ்வளவு அடப்பு இருந்ததுனா , கோடி கோடியா செலவு பண்ணி படம் எடுக்கிற அவனுகளுக்கு எவ்வளவு இருக்கும் ... நான் எல்லா படங்களையும் நல்லாவிதமா எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை .. படம் பற்றிய உண்மையை அப்படியே எழுதலாம் தப்பில்லை ஆனால் நாலு பேரு அதிகமா உங்க பதிவை படிக்க வேண்டும் என்பதற்காக வரம்பு மீறி விமர்சனம் செய்வதை தவிர்க்கலாமே ... (அதே சமயம் சினிமாவை தவறாக பயன்படுத்த நினைக்கும் சிலரை ஓட ஓட அடிக்கலாம் தப்பே இல்லை ...)

இந்த வருடம் சோகமயமான வருஷமா அமைந்தது நம்ம இளைய தளபதி ரசிகர்களுக்குதான், சுரா என்று ஒரே ஒரு படம்தான் தளபதிக்கு , அதுவும் மரண அடி வாங்கி விட்டது ... அதுகூட பரவா இல்லை , அடுத்து அவர் எடுத்து முடித்து ஒரு படம் பல மாதங்களாய் ரிலீஸ் ஆக தியேட்டர் கிடைக்காமல் பெட்டியில்  உறங்கி கொண்டு இருக்கிறது ... அவர் ரசிகர்கள்  நிதிகள் எல்லாம் சேர்ந்து விஜய்க்கு எதிராக சதி பண்ணுகிறார்கள் என்று கலாநிதியையும் , உதயநிதியையும் குறை சொல்லி கொண்டிருக்கிறார்கள் ... ஒரு காலத்தில் இதே நிதிகளை பயன்படுத்தி அஜித் படங்களுக்கு எதிராக விஜையின் அப்பா சதி பண்ணி கொண்டிருக்கிறார் என்று அவர் ரசிகர்கள் கூறியபோது தளபதியின் ரசிகர்கள் ஒரு பாடலை பாடி காட்டுவார்கள் ... இன்று அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் இந்த குற்றசாட்டுக்கும் அதே பாடல்தான் பதில் ...

யாரோட உயர்வையும் யாராலும்
தடுக்க முடியாதுடா
கெடுக்க முடியாதுடா

என்ன பண்ண விஜய் ...வினை விதைத்தவன் வினை அறுப்பாண்ணு பெரியவங்க சும்மாவா சொல்லி இருக்காங்க...  


சரி சரி நாம கேள்வி பதில் மேட்டருக்கு வருவோம் ... சரியான பதில்கள் பரிமளா , செறுப்பே அணியவில்லை .. ரெண்டு கேள்விக்கும் பிட்டு கிட்டு அடிக்காம சரியா பதில் சொன்னவங்க உண்மையிலேயே ரொம்ப ரொம்ப நல்லவங்களாத்தான் இருப்பீங்க ... பின்ன ரஞ்சி நித்தி  விடியோவில பார்த்து மகிழ எவ்வளவோ குஜால் மேட்டர்கள் இருக்கும்போது ரஞ்சிதா போட்டிருந்த செருப்ப பாத்தவங்க உண்மையிலேயே நல்லவங்களாத்தான் இருப்பீங்க .. ஆனா இன்னும் கொஞ்சம் நீங்க வளரனும் பாஸ் ... உலகம் எங்கையோ போய்கிட்டு இருக்கு பாஸ் ... இப்படி அப்பாவியா இருந்தீங்கன்னா பயபுள்ளைக ஏமாத்திடுவாணுக ...

               தீயா வேல பாக்கணும் பாஸ் ...

அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ  இயர் வாழ்த்துக்கள்  

Saturday, December 18, 2010

ஈசன்- திரை பார்வை




மிகவும் சாதாரண பழி வாங்கும் கதை ஆனால் அதை எடுத்த விதத்தில் மீண்டும் ஒருமுறை ஜெயித்திருக்கிறார் சசிகுமார் .. இந்த படத்தை நான் முதல்நாளே பார்க்க காரணம் இது சுப்ரமணியபுரம் எடுத்த இயக்குனரின் படம் என்பதால்தான் ...  அந்த படம் போன்று இதிலும்  ஏதாவது ஒரு ஷாக்கிங் ட்ரீட்மெண்ட் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் எல்லாம் படத்திர்க்கு செல்லவில்லை , அது ஒருவகையில் தமிழ் சினிமாவில் உட்சபட்ச படைப்பு அதை போன்ற ஒருபடத்தை சசிகுமாரால்கூட இன்னொரு முறை தர முடியாது என்பது எனக்கு நன்றாக புரிந்திருந்ததால் நான் அந்த எதிர்பார்பில் செல்லவில்லை ... ஆனால் ஏதாவது ஒருவகையில் வித்தியாசமான ஒரு உணர்வை இந்த படம் தரும் என்ற நம்பிக்கை இருந்தது .. அதனால்தான் ஒரு நல்ல படைப்பை எதிர்பார்த்து சென்றேன் .. இந்த முறை சசிகுமார் பிரமிக்கவைக்கவில்லை என்றாலும் ஏமாற்றவில்லை ...

1980 களில் வாழ்ந்த கீழ்தட்டு கிராம இளைங்கர்களின்  வாழ்வையும் ,அவர்களை சீரழித்த கீழ்மட்ட அரசியலையும் சுப்ரமணியபுரத்தில் காட்டிய சசி இந்த முறை எடுத்திருப்பது 2010இல் சென்னை போன்ற ஒரு மெட்ரோபாலிட்டன் நகரத்தில் வாழும் இளைங்கற்களை, அவர்களின் கலாச்சாரத்தை , கோடிகள் புழங்கும் மேல்மட்ட அரசியலை பற்றி ...

ஒரு பெரிய அரசியல்வாதியின் மகன் மற்றும் அவனின் நண்பர்கள் செய்யும் தவறினால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் கதை ...   வைபவ் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சக்தி என்று தன்னை அடையாளபடுத்தி இருக்கும் ஒரு பெரிய அரசியல்வாதியின் பையன் ... அவருக்கு மூன்று நெருங்கிய நண்பர்கள் ... அவர்களின் பொழுதுபோக்கே பப்புகளில் தண்ணி அடிப்பது பெண்களுடன் படுக்கையை பகிர்வது ... வைபவிர்க்கு ஒரு பெண்ணின் மேல் காதல் வருகிறது ... அவள் விஜய் மல்லையா போன்ற ஒரு பெரிய பிசினஸ்மெனின் ஒரே மகள்... அவர் இந்த கல்யாணதிர்க்கு சம்மதிக்க மறுக்கிறார் ... வைபவின் தந்தை எப்படியாவது மகனுக்கு அவளை கல்யாணம் பண்ணி சொத்துக்களை எல்லாம் சுருட்ட வேண்டும் என்று அந்த பெண்ணிடம் நல்லவர் போல நடித்து அவளை தற்கொலைக்கு முயற்ச்சி செய்ய வைத்து அவள் அப்பாவின் மனதை மாற்றி கல்யாணத்திர்க்கு சம்மதிக்க வைக்கிறார் ... இந்நிலையில் வைபவை யாரோ கடத்தி கொண்டு போயி விடுகிறார்கள் ... அது யார்? வைபவ் என்ன ஆனார் என்பதே மீதி கதை ...  

 கதாநாயகன் என்று ஒருவர்  இல்லாமல் வந்திருக்கும் தமிழ் படம்... ஆனால் ஈசன் என்ற பெயரில் ஒரு கதாபாத்திரம் படத்தில் இருக்கிறார் ... படத்தின் மிக பெரிய பலமும் இந்த கதாபாத்திரமே .... அந்த கதாபாத்திரத்தை பற்றி சொன்னால் படம் பார்க்கும் உங்களுக்கு சுவாரஷ்யம் போய்  விடும் .. எனவே படத்தில் பார்த்து கொள்ளுங்கள் ...

 
சமுத்திரக்கனி சங்கையா என்னும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார் ... படம் முழுவதும் இவர் வருகிறார் ஆனால் இவரை கதாநாயகன் என்று சொல்ல முடியாது ... இவர் கதாபாத்திரம் கொஞ்சம் குழப்பமான வகையில் இருக்கிறது படத்தில் ... ஒரு காட்சியில் அரசியல்வாதிகளை மிரட்டுகிறார் ஆனால் அடுத்த காட்சியிலேயே தன் மேலதிகாரி அறிவுரை வழங்கியதும் அடங்கிபோகிறார்... இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்... ஆனால் நடிப்பில் குறை சொல்லமுடியாத அளவுக்கு நன்றாகவே செய்திருக்கிறார் .....

 வைபவ் முதல் பாதி படம் இவரை சுற்றியே செல்கிறது ஆனால் இரண்டாம் பாதியில் கொஞ்சநேரம் மட்டுமே வருகிறார் ...

நாடோடிகள் அபிநயா இரண்டாம் பாதியில் வருகிறார் ... வழக்கமாக தமிழ் சினிமாவில் பழிவாங்கும் கதை என்றால் ஒரு பிளாஷ்பேக் இருக்கும் அல்லவா அப்படி ஒரு பிளாஷ்பேக்கில்தான் அம்மணி வருகிறார் ... பாலியல் பலாத்காரம் செய்யபட்ட ஒரு பெண்ணின் உடல் வலிகளை அற்புதமாக வெளிபடுத்தி இருக்கிறார் நடிப்பில் ... welldone ….

படம் முழுவதும் காட்சி அமைப்புகளில் சின்ன சின்ன சுவாரஷ்யங்களை கொடுத்து கொண்டே இருக்கிறார் இயக்குனர் ... தொழிலதிபர் தன் மகள் ஒரு அரசியல்வாதியின் பையனை காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் வைபவை தன் கஷ்டடியில் கொண்டுவந்து அந்த அரசியல்வாதியை மிரட்டுவது , அடுத்த காட்சியிலேயே அந்த பெண்ணை அரசியல்வாதி தன்னுடய வீட்டுக்கு  அழைத்து வர வைத்து அந்த தொழில் அதிபரை மிரட்டும் காட்சி ஒரு உதாரணம்... இதை போல அட போட வைக்கிற பல காட்சிகள் படம் முழுவதும் இருப்பதுதான் படத்தின் பெரிய பிளஸ் ...

அதே போல வசனம் படத்தின் இன்னொரு பலம்... சசியின் நக்கலும் நையாண்டியும் வசனத்தில் பளிச்சிடுகிறது ... இசை ஜேம்ஸ் வசந்தன் பின்னணி இசையில் கோட்டை விட்டாலும் பாடல்களில்  அள்ளுகிறார் .. கடற்கரையில் நைட் எஃபக்டில் எடுக்க பட்டிருக்கும் விலைமாதர்களை பற்றிய பாடல் காரமான ஊறுகாய் என்றால் பிளாஷ்பேக்கில் வரும் குடும்ப பாடல் அம்மா கையால் சாப்பிடும் ருசியான தயிர் சாதம் ... பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் மிரட்டி இருந்திருக்கலாம் ...

படத்தில் இடைவேளை விடும் போது நமக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு உருவாகிறது யார் இந்த ஈசன் என்று ... அப்பொழுதுதான் ஈசன் கதாபாத்திரம் படத்தில் நுழைகிறது... படம் பார்க்கும் அனைவரையும் சமுத்திரக்கனிதான் அந்த ஈசன் என்று நினைக்க வைக்கும் அளவிர்க்கு முதல் பாதியில் திரைக்கதை அமைத்து இருப்பது சசியின் புத்திசாலிதனம்...

 படத்தின் பெரிய பலவீனம் படத்தின் முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாதது ... அதனாலயே படம் முடியும் போது நமக்கு ஏதோ இரண்டு படங்கள் பார்த்தை போன்ற உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை ... குறிப்பாக வைபவிர்க்கு காதல் வருவதும் அவருக்கு திருமணம் நிச்சயமாவதும் எதர்க்காக படத்தில் வருகிறது என்றே தெரியவில்லை ... அதே போல ஒரு ஆஸ்பத்திரியில் இருக்கும் மெயில் செர்வரை ஹேக் பண்ணி அதில் இருக்கும் மெயிலை modify பண்ணுவது எல்லாம் காதில் பூ சுற்றும் வேலை ...

ஒரு டிராக்கில் பார்ட்டி என்ற பெயரில் இன்று நம் நாட்டில் நடக்கும் கூத்துகளையும் அதனால் அப்பாவி பெண்கள் எப்படி எல்லாம் பாதிக்க படுகிறார்கள் , அவர்களின் குடும்பம் எப்படி சீரழிகிறது என்பதையும், இன்னொரு டிராக்கில் இன்றய அரசியல்வாதிகளும் பெரிய பெரிய பிசினஸ் மக்னெட்டுகளும் எப்படி எல்லாம் ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள்  என்பதையும் அப்பட்டமாய் காட்டி இருப்பதற்காகவே சசிக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம் ...
   
 குறைகளை எல்லாம் தவிர்த்து பார்த்தால் இந்த ஈசன் இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சி என்று நம்மை கண்டிப்பாக நினைக்க வைக்கும் ....
  
முதல் படத்தில் மிக பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர்கள் , இரண்டாம் படம் எடுப்பது என்பது அந்தரத்தில் கம்பியில் நடப்பதை போன்றது .. கொஞ்சம் தவறினாலும் மண்ணை கவ்வ வேண்டியதுதான்... ஆனால் சசி இதில் ஜெயித்து விட்டார் என்றே நினைக்கிறேன்....     

Wednesday, December 15, 2010

நாங்களும் கவிதை எழுதிருக்கோம்ல!!

கொஞ்சம் ஆணிகள் அதிகமாக இருப்பதால் புதுசா யோசிச்சி பதிவு எழுத நேரம் இல்ல .. அதான் கொஞ்சம் பழைய சரக்கு ... கவிதை என்ற பெயரில் நான் போட்டிருக்கும் மொக்கைகளை படித்துவிட்டு என்னை அடிக்க வேண்டும் என்று தோன்றினால் இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருக்கவும் .. புதிய பதிவோடு வருகிறேன் அங்கே வைத்து கும்மவும் .




என்னை ஊர் கிறுக்கன் என்றது...

நீ நடந்து

விட்டு சென்ற

உன் பாதசுவடுகளுக்கு

குடை பிடிதேனாம்....

அவர்களுக்கு எங்கே தெரியும்

உன் பாதம் பட்டால்

மண்ணும் உயிர் பெரும் என்று...

உன் விழி பட்டு

உயிர் பெற்ற

என் இதயத்திற்கு தானே

அது தெரியும்......



காற்றில் ஆடும்

உன் கலைந்த

முடியில்

ஊசல்ஆடியது என் இதயம்....

நீ அழகாய் அதை

உன் கையால்

உன்னோடு இழுத்து

கொண்ட போது

முடியோடு சேர்ந்து

உன்னோடு வந்து விட்டது

என் இதயமும் ........





நீ சோம்பல் முறித்தால்

சோம்பல் குறைகிறதோ

இல்லையோ...

உன் அழகு கூடுகிறது...


கேளுங்கள் தரப்படும்

என்ற கடவுளிடம்

என்ன கேட்டு

வங்கி கொண்டாய்

இவ்வளவு அழகை....


நீ வாரம்

தவறாமல் செல்லும்

ஆலயத்திற்கு

நானும் வாரம் தவறாமல்

வருகிறேன்...

உன்னை பார்க்க அல்ல...

கடவுளை பார்க்கும் ஆசையோடு....

நீ கண்மூடி ஜெபிக்கும்

அழகை பார்க்க

கடவுளும் ஒரு நாள்

கட்டாயம் வருவார்....








உலகில் உள்ள சில புனிதமான உணர்வுகளில் காதலும் ஒன்று.... எவராலும் மாற்ற முடியாத பல விசயங்களை நொடியில் மாற்றி போடும் சக்தி அதற்க்கு உண்டு. எதோ ஒருவகையில் பண்டமாற்று முறையை போல் மாறி விட்ட பல உறவுகளுக்கு நடுவே எதையும் எதிர்பார்க்காமல் எல்லாமும் தரும் உறவு அது. மனதோடு மனது உரசினால் வரும் தீ அது. காம தீயை அடக்கும் குளிர்ச்சியும் அதே,  அவள் தரும் உதட்டு முத்தம் என்றுமே காம தீயை உருவாக்குவதில்லை , அது காதல் தீயவே மேலும் கொழுந்து விட்டு எரிய செய்யும் நம் மனதிற்குள். காதல் செய்தால் பெண்களை அவர் உணர்வுகளை மதிக்கும் குணம் நம்முள் வந்து விடும்.

பெண்கள் மனம் ஒரு புரியாத புதிர், அதை புரிந்து கொள்ள ஒரே வழி காதல்.... ஆண்கள் மனம் சீறி பாயும் காட்டாறு, அதை ஒழுங்கு படுத்தும் ஒரே வழி காதல்.... 

LinkWithin

Related Posts with Thumbnails