Followers

Copyright

QRCode

Wednesday, July 14, 2010

ஆர்குட் படுத்தும் பாடு!!!! திருந்துங்கப்பா!!!


நம்ம பசங்களுக்கு எங்க இருந்துதான் இப்படியெல்லாம் ஐடியா வரும்னே தெரிய மாட்டேங்கிது.... ஒரு பொண்ண மடக்குறதுக்கு அவனுக எப்படி எல்லாம் யோசிக்கிராணுக பாருங்களேன்...  ஒரு பையன் காலேஜ்ல சேர்ந்த உடனே பண்ணுற முதல் வேலை என்னவா இருக்கும் தெரியுமா? படிக்க தேவையான புஸ்தகம் வாங்குறதோ ,குலசாமி கோயிலுக்கு நடை பயணமா போயி  மொட்ட போடுறதோ  இல்லை... ஜிமெயில் அக்கௌன்ட் கிரியேட் பண்ணி ஆர்குட்ல கடலை போடுறதுதான் .. இன்னும் சில பேர் ரொம்ப ஸ்பீடா இருக்கானுக ... எங்க எதிர்த்த வீட்டு பையன் ஒருத்தன் இந்த வருசம்தான் ஐந்தாம் வகுப்பு போறான் .. அண்ணா உங்க ஜிமெயில் ஐடி கொடுங்கன்னான்னு கேட்டான் ... சின்ன பையன் இவன் எதுக்கு நம்ம ஜிமெயில் ஐடி கேக்குறன்னு குழப்பமா பாத்துகிட்டு இருந்தேன் ... அண்ணா உங்க ஆர்குட்டுக்கு நான் friend request அனுப்புறேன் .. மறக்காம accept பண்ணிடுங்க அப்படின்னான் ...  பயபுள்ள ஏதோ ஆர்வகோளாறுல engineering படிக்கிற அவன் அண்ணன்கிட்ட சொல்லி ஆர்குட் profile create பண்ணி வச்சிருக்கும் , கடலை போடுறதுன்னா என்னனே தெரியாது  , இவனுக்கெல்லாம் யாரு பிரண்டா இருக்க போறாங்கன்னு அவன் profile ஒப்பேன் பண்ணி பாத்தா , எல்லாம் ஒரே பொண்ணுங்க .... அதும் அவன் ரேஞ்சிக்கு ஏத்த மாதிரி elementry school பொண்ணுங்க ... பையன் scrap book முழுதும் பொண்ணுங்க அனுப்புன scrapதான் ... அப்படியே என்னோட scrap book ஒப்பேன் பண்ணி பாத்தேன் ... ஒரு பொண்ணு கூட இல்ல ... எல்லாம் பசங்கதான் .... 

இப்படி ஆளாளுக்கு ஆர்குட் profile create பண்ணி வச்சிக்கிட்டு பண்ணுற இம்சை தாங்க முடியாது ... எனக்கெல்லாம்  ஆர்குட்ல தேவையில்லாம வழிய போய் பொண்ணுங்ககிட்ட ஜொள்ளு விடுற பார்டிகள பாத்தாலே புடிக்காது ... ஏதாவது பண்ணி அவனுகள காலி பண்ணுன பின்னாடிதான் அந்த எடத்த விட்டே நான் காலி பண்ணுவேன் .. அவ்ளோ நல்ல மனசு எனக்கு 

ஒரு பொண்ணோட போட்டோ கமெண்ட்ல ஒருத்தன் இப்படி கமெண்ட் போட்டிருந்தான் ... hi nice pictures .. u on tat saree .. try wearing white or red saree ... u will be luking amazing... bye .. tc...  நான் அதுக்கு இப்படி reply பண்ணுனேன் "ஆமா இவரு பெரிய fashion designer .. பேச்ச குறைங்கடா ... டேய்.." அதுக்கப்புறம் பயபுள்ள ஆளையே காணோம் ... 

அடுத்து ஒருத்தன் அதே போட்டோவுக்கு கிறுக்குத்தனமா ஒரு கமெண்ட் போட்டிருந்தான்... "hi u look like a traditional angel in this photo.. i just hav crossed your profile... u r such a amazing person to share friendship.. can you be part of a friend circle?  " என்ன பண்ணுனாலும் திருந்த மாட்டீங்களாடான்னு மறுபடியும் ஒரு கமெண்ட் போட்டேன் "டேய் பன்னாட ... முன்ன பின்ன நீ ஏஞ்சல பாத்திருக்கயா? அது என்ன traditional angel ? வாய்க்கு வந்ததெல்லாம் அடிச்சி விடுறது... அப்புறம் அது என்ன சர்கிள், ரவுண்டுடுன்னு கத வுட்டுகிட்டு இருக்க ... இன்னொரு தடவ இந்த ஏரியா பக்கம் வந்த உன் அக்கௌன்ட் டெலிட் ஆகிடும் படவா"... அதுக்கப்புறம் அந்த பொண்ணு சர்ச்சைக்குரிய அந்த போட்டோவ டெலிட் பண்ணிட்டு ஆர்குட்ட க்ளோஸ் பண்ணிட்டு ஏரியாவ காலி பண்ணிட்டு ஓடிடுச்சி...

இன்னும் சில பேரு பண்ணுற scraps பாத்தா பயங்கர காமடியா  இருக்கும் ... 

"hi tis is mani frm sennai ....int in bein ma frand.. just scrab me"
மூணு லைன்ல முன்னூறு ஸ்பெல்லிங் மிஸ்டேக் .. இந்த டாக்குகேல்லாம் ஆர்குட் ஒரு கேடா? 

"hello .. am a engineering student who ignoring books and and trying to orkut with you how about you?"
டேய் இத உங்க அப்பா அம்மா பாத்தாங்க .. உனக்கு சங்குதாண்டி 

"hai you are so cute.. more if you are in my friend list!!!! wat do u say?"
அடடா என்ன ஒரு அறிவாளித்தனம்... இவ்வளவு புத்திசாலித்தனம் ஒரு மனுஷனுக்கு ஆகாதுடா?

"அன்னைக்கி ரவியோட பிறந்தநாள் பார்டியில ராஜாவோட வந்த நவீனாவோட தங்கையோட பக்கத்து வீட்டு பொண்ணோட பிரண்டுதான நீ" 
டேய் மானங்கெட்டவனே இப்படியெல்லாம் அவசியம் கடலை போடணுமா நீ?

"hey spain has won the FIFA world cup... come on lets be a friend"
மக்களே நீங்களே சொல்லுங்க இத பாத்ததுக்கு பின்னாடியும் பொறுமையா இருக்க முடியுமா? 

கடைசியா  உங்களுக்கெல்லாம் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்க ஆசபடுறேன் .... 

"மண்ணு விழுந்த கண்ணும் 
பொண்ணு விழுந்த மனசும் 
இருட்டாகிடும்"

தயவு செஞ்சி திருந்துங்கடா?


13 comments:

எல் கே said...

losl ungaluku vaysaiduchunu naan ninaikiren

அகல்விளக்கு said...

சூப்பரப்பு.....

ஆர்குட்ல இதேமாதிரி இன்னும் நிறைய குல்மால் வேல நடக்குதுங்கோவ்....

ராம்ஜி_யாஹூ said...

எல்கே சொல்வது சரி.

வலைப்பதிவிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கடலை, காதல் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

காதல், கடலை எல்லாம் அந்த அந்த வயது கோளாறு, இதற்காக ஒர்ற்குட், வலைப்பதிவு, த்விட்டேர்கள் என்ன செய்யும்.

நாம் பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது இந்த வசதிகள் இல்லையே என்கிற எரிச்சல் உங்களைப் போலவே எனக்கும் இருக்கிறது, என்ன செய்ய

Yoganathan.N said...

எனக்கு இந்த ஆர்க்குட்டில் உடன்பாடே இல்லை. Friendster-இல் இருந்து இப்போ தான் Facebook-கிற்கு வந்திருக்கிறேன்.
'கடலை' என்றால் ஓரளவு இப்போது என்ன என்றூ தெரிகிறது. ஹிஹி

Yoganathan.N said...

வேலையில் பயங்கர டெண்சன். ஒரு ஐந்து நிமிடம் என்னை வாய்விட்டு சிரிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி.
உங்களுடைய கமேண்டுகள் எல்லாம் சூப்பரா இருந்தது. இது தான் பெஸ்ட், இப்படி எல்லாமா பேசிட்டு திரியுதுங்க?

"hey spain has won the FIFA world cup... come on lets be a friend"

Btw, உங்களுடைய காமெண்டுகளில் அண்ணன் கவுண்டமனியின் தாக்கம் அதிகம் தெரிகிறதே... அவருடைய தீவிர ரசிகரா?

"ராஜா" said...

@lk
ஹீ ஹீ ... நாங்க இன்னும் யூத்துதான் பாஸ். ஆனா ரொம்ப நல்லவங்க

@ அகல்விளக்கு
கோல்மால் இருந்தாதான சுவாரஷ்யமா போகும் வாழ்க்கை .. நன்றி தங்கள் வருகைக்கு

@ ராம்ஜி_யாஹூ
நமக்கு ஆர்குட்லாம் தேவையே இல்ல தல ...straight dealingதான் நம்ம பாணி ..lol

@ Yoganathan.N
ஐயோ இப்படி அநியாயமா ஒரு நல்ல பையன கெடுத்திட்டேனோ? நக்கல் பண்ணனும்னா கவுண்டர் பாணிதான் சரி வரும் ... நான் அவரின் நக்கலுக்கு ரசிகன்

வினோத் கெளதம் said...

செம காமெடி தல..:))

"ராஜா" said...

@ வினோத்கெளதம்

நன்றி தல வருகைக்கும் கருத்துக்கும்

Sukumar said...

உங்கள் நகைச்சுவை உணர்வு ரசிக்கும்படியாக உள்ளது. வாழ்த்துக்கள்...

dearbalaji said...

hey spain has won the FIFA world cup... come on lets be a friend"
மக்களே நீங்களே சொல்லுங்க இத பாத்ததுக்கு பின்னாடியும் பொறுமையா இருக்க முடியுமா?
.....அலுவலகத்தில் சிரிக்காம அடிக்கி வாசிச்சிட்டு இருந்தேன் இதை வாசித்ததும் குபீர் என்று சிரித்து விட்டேன்

John David said...

"மண்ணு விழுந்த கண்ணும்
பொண்ணு விழுந்த மனசும்
இருட்டாகிடும்"

super

"ராஜா" said...

@ sukumar swaminathan
நன்றி அண்ணே ... கலைஞர் கையால செம்மொழி விருது வாங்குன மாதிரி உடம்பு புல்லரிக்குதுங்க .... நன்றி ..

@ dearbalaji

நன்றி தல ...

@ sukumar

எல்லாம் அனுபவ பாடம்தான் இப்படி எல்லாம் எழுத முடியுது .... lol

"ராஜா" said...

நன்றி தெய்வ சுகந்தி மேடம்

LinkWithin

Related Posts with Thumbnails