இந்த முறை நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா தன் எதிரி பாக்கிஸ்தானிடம் அடி வாங்கி, பின் பாக்கிஸ்தான் ஆஸ்திரேலியாவை தோரகடிக்குமா என்று கவலையில் நோம்பி...இறுதியில் எனக்கு ஒரு கண்ணு போட்சுனா என் எதிரிக்கு ரெண்டு கண்ணு போகும்னா நான் அந்த ஒரு கண்ண விட்டுகுடுதுறேன்கிற மாதிரி பாகிஸ்தான் பண்ணுன தோல்வி தியாகம் ,,, (சரி விடுங்க நம்ம பயலுக எப்பவும் இப்டித்தான், உலக கோப்பையிலேயே பெர்முடா வங்காளதேசத ஜெயுக்குமான்னு நம்மள சாமி கும்புட வுட்டவனுகதான இவனுக)... இது எல்லாம் சேந்து தோனி & கோவ தென் ஆப்ரிகாவ விட்டு தொரத்தி அடிச்சிடுச்சு.... சேவாக் இருந்திருந்தா பாகிஸ்தானுக்கு டவுசர் கிழிஞ்சிருக்கும்... ஏற்கனவே அவர் இல்லாம ல தோத்துட்டு நடைய கட்டுனனுக இப்ப சாம்பியன்ஸ் கோப்பையிலும்.... இது கண்டிப்பா என்ன மாதிரி சேவாக் ரசிகர்களுக்கு கெத்துதான்... இப்ப யுவராஜ் வேற இல்ல,, சோ பாக்கிஸ்தான் அடிச்சது ஒரு புள்ள பூட்சியதான் , அதனால அதுக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட கொடுக்க கூடாதுன்னு அடி வாங்குன 100 கோடி இந்தியர்களின் சார்பா கேட்டுகிறேன்....
டெண்டுல்கர் பேசாம தேவையே இல்லாத ஆட்டத்துல மட்டும் விளையாடுங்க, முக்கியமான ஆட்டத்துல நீங்க விளையாடவே வேண்டாம் , கண்டிப்பா பத்து ரன்னுக்கு மேல அடிக்க மாட்டீங்க...டிராவிட் யாரும் அடிக்கலான நீங்க அடிக்கிறீங்களா இல்ல நீங்க அடிச்சா மத்தவங்க அடிக்க மாட்டேன்கிராங்களா.... பாவம் நீங்க விஜய் படங்கள்ல இசை அமைப்பாளர் மட்டும் நல்லா வேளை பாக்குற மாதிரி நீங்க மட்டும் விளையாண்டா எப்புடி?டோனி இப்ப தெரியுதா மத்தவங்க தேரமையுல ரொம்ப நாள் காலம் தள்ள முடியாதுன்னு... எதுக்கும் நீங்க கல்கத்தா காளி கோவிலுக்கு போய் பரிகாரம் பண்ணுங்க.. கங்குலி வுட்ட சாபம் நீங்கிடும்..

இப்ப இருக்குற நெலமையுல கோப்பைய வாங்குற முழு தகுதியும் பாக்கிஸ்தான் இல்ல ஆஸ்திரேலியாவுக்குதான் இருக்குன்னு நெனைக்கிறேன்.... ஆஸ்திரேலியா ஜெயிக்கணும்னு கடவுள வேண்டிகிறேன்.. நமக்கு ரெண்டு கண்ணு போனாலும் எதிருக்கு ஒரு கண்ணாவது போகணும்ல.... நியூசிலாந்து இதுவரைக்கும் ரெண்டே ரெண்டு கோப்பதான் (உலக கிண்ணம் கிடையாது சாதரண கிண்ணம்) வாங்கிருக்காம், இந்த தடவ அதுக்கும் வாய்ப்பு இருக்கு பாப்போம், முதல் முறையா அவங்க பெரிய கிண்ணம் வாங்க வாழ்த்துக்கள்....
No comments:
Post a Comment