சமீபகாலமாகத்தான் தெலுங்கு படங்கள் பார்க்கும் பழக்கம் தொற்றி கொண்டது உலக படங்கள் பார்கிறவன்தான் அறிவாளிகள் மசாலா படங்களை பார்கிறவனெல்லாம் முட்டாள்கள் என்ற இணைய தனக்குதானே அறிவாளிகளின் பேச்சை கேட்டு வரிசையாக பல உலக மதகா படங்களை பார்த்து மனம் நொந்து கிட்டதட்ட அவர்களை போன்றே அறிவாளியான பைத்தியம் ஆயிடுவோமோ என்று பயந்து கொண்டிருந்த நிலையில்தான் சில தெலுங்கு மாஸ் மசாலா படங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது அதில் சி ல படங்களை பார்த்த பொழுது இப்படியான பக்கா மசாலா படங்கள் நம்மூரில் வராதா என்று ஏங்கியதுண்டு ஆனால் எங்க தலயே அப்படி ஒரு படம் தருவார் என்ரு சத்தியமாக நினைக்கவில்லை
சொல்லியடிக்கும் கதை விறுவிறுப்பான திரைக்கதை அதிரடியான சண்டைகள் அழகான குடும்ப பேக் ட்ராப் இது எல்லாம் இருந்தால் மொக்க ஹீரோ நடித்தாலே கில்லியாக இருக்கும் இதில் தல மாதிரியான மாஸ் ஹீரோ நடித்தால் அட்டகாசமான மங்காத்தாவாக இருக்குமல்லவா , இதுதான் வீரம்.
முதல் பாதியில் பாசக்கார அண்ணனாக வந்து எதிரிகளை பந்தாடுவதாகட்டும் இரண்டாம் பாதியில் ஒரு குடும்பத்தின் பாசக்கார மாப்பிள்ளையாக வந்து வீரமான ஆம்பிள்ளையாக வில்லன்களை வதம் செய்வதாகட்டும் தல அதகளப்படுத்தியிருக்கிறார் முதல் பாதியில் வரும் டெண்டர் சீன் அக்மார்க் ரஜினி டைப் மசாலா அதில் தல பேசும் வசனங்கள் அதிரடி.(இந்த படத்துக்கு வசனம் எழுதியவர் அழுகிய தமிழ் மகனை எழுதி இயக்கியவராம் என்ன வசனம் எழுதுறோம்னு முக்கியமில்லை யாருக்கு எழுதுறோம்கிறதுதான் முக்கியம்)
இடைவேளைக்கு முன்னால் வரும் ரயில் சண்டை மாஸ். என்னடா இவன் இந்( மாஸ் மாஸ்னு எழுதிகிட்டு இருக்கானேன்னு டென்ஷனாகாதீங்க படத்தில அங்கங்க மாஸா இருந்தா கொஞ்சமா எழுதலாம் படமே மாஸா இருந்தா?
இவ்வளவு மாஸாக முதல் பாதியில் அதகளம் பண்ணும் தல இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் தமன்னாவுக்காக சாந்தமான ஆளாக மாறுகிறார் அய்யய்யோ இது தப்பாச்சே என்று நம் உள் மனம் எச்சரிக்கை செய்ய ஆனால் நேர்மாறாக அதே தமன்னாவுக்காக மீண்டும் தல அரிவாளை தூக்க மீண்டும் மாஸ் ஆரம்பம். குழந்நையுடன் தல ஆடும் கண்ணாமுச்சி, தன் பாணியில் வில்லனிடம் கெஞ்சி அவனை நார்த் இந்தியா அனுப்புவது ,+ சோறு போட்டவளெல்லாம் தாய் சொல்லி கொடுத்தவெனெல்லாம் அப்பா என்று வசனம் பேசி கொண்டே வில்லன்களை பந்தாடுவதாகட்டும் மாஸ் மாஸ் மாஸ்...
இந்த படம் ஆரம்பித்த பொழுது சிவாவின் மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை
ஆனால் படம் பார்த்த பிறகு வி லவ் யூ சார் தலயோட உங்க அடுத்த படத்துக்கு காத்து கொண்டிருக்கிறோம் சார்
மொத்தத்தில் இந்த பொங்கல் தல பொங்கல் இப்பத்தான் தல தீபாவளி கொண்டாடினோம் இப்ப பாக்ஸ் ஆபிஸில் பொங்கலையும் எங்களுக்கே பரிசலித்திருக்கிறார் தல இது எங்களுக்கு ஸ்பெஷல் பொங்கல் திருப்பி கொடுத்தோம்ல அதான் ஸ்பெஷல்
மங்காத்தாவில் ஆரம்பித்த தலயின் மாஸ் ப்ளஸ் வசூல் வேட்டை இந்த வீரம் வீரம் வரைக்கும் வீரியமாக தொடர்கிறது 2014 just We are strong. Still we are unstoppable.. இந்த பொங்கல் தல பொங்கல் மாமே தறுதலை பொங்கல் கொண்டாட ஆசைப்பட்ட அணில் குஞ்சகளே உங்களுக்கு இந்த தடவை போகியே இல்லையே எப்படி பொங்கல் கொண்டாட? வழக்கம் போல சிபி பிகைன்ட்வுட்டுன்னு வாயிலேயே வடை சுடுவீங்களா? அந்த ஊசி போன வடைகூட இந்த தடவை உங்களுக்கு கிடையாது போல... வேற ஏதாவது வடை சுட்டு அந்த ஊசி போன வடைய நீங்களே திண்ணுட்டு வியித்து கடுப்புல இங்க வந்து வாந்தி எடுங்க அணில் குஞ்சஸ்
தல ரசிகனாக என்னை பொறுத்தவரை வீரம் மங்காத்தாவுக்கு கொஞ்சம் கீழே பில்லா ஆரம்பத்துக்கு மேலே
என்ன நான் சொல்லுறது?