இணையம் எங்கும் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக
விவாதிக்கபட்டு கொண்டிருக்கும் விஷயம் விஸ்வரூபம்தான் ... ரஜினி ரசிகர்கள் கூட
தங்கள் தலைவரை துதி பாடுவதை கொஞ்சநாள் நிறுத்தி வைத்து விட்டு ,
விஸ்வரூபத்துக்கு ஆடிட்டர் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள் , தங்களுக்கு தாங்களே விஸ்வரூபத்தை மட்டம் தட்டி கொண்டு தங்கள் வயிற்று வழி(லி)யை
தீர்க்க வழிதேடுகிறார்கள் (அது தீராத வலி என்பதை எப்பொழுது உணருவார்களோ?) ... இவர்களின் வயிற்று வழியை பார்க்கும் பொழுதுதான் கமலின் வீச்சு
தெரிகிறது .. எந்திரன் படம் வந்த சமயம், படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கிறது
என்று ரஜினி ரசிகர்கள் வெகுளியாக சொல்லும் போதெல்லாம் என்னை போன்ற கமல் ரசிகர்கள்
கோபம் கொள்ளாமல் அவர்களின் வெகுளி தனத்தை எண்ணி ஒற்றை சிரிப்போடு நகர்ந்து
கொண்டோம் .. விஸ்வரூபத்தை அப்படி கடந்து போகமுடியாதல்லவா?
அதான் கல்லெறிகிறார்கள் ...
சரி படம் எப்படி? என்னுடைய பார்வையில் இயக்குனர் கமல்
எடுத்திருக்கும் அதிரி புதிரி விஸ்வரூபம்தான்
இந்த விஸ்வரூபம்.. உலக படங்களை பற்றியெல்லாம் எனக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லை ...
ஆஸ்கார் வாங்கும் படங்கள் எல்லாம் உலக படங்கள் என்று சொல்லும் தகுதி உடையவைகள்
என்று பல அறிவு ஜீவிகள் சொல்ல கேட்டிருக்கிறேன் , அந்த
வகையில் slumdog millionarie ஒரு ஓலக படம்தானே ... அந்த படத்தை பார்த்தவன் என்ற
முறையில் அந்த படத்துக்கு எந்த வகையிலும் குறையாத ஏன் அதை விட உருவாக்கம் , காட்சியமைப்பு என்று பல விதங்களில் சிறந்த இந்த விஸ்வரூபம் ஒரு ஓலக
படம்தான் ... இளம் ஜிகாத் ஒருவன் ஊஞ்சலில் ஆடும் அந்த ஒரு காட்சி போதும் , கிலோ கணக்கில் ஆஸ்காரை கமல் காலடியில் கொண்டு வந்து கொட்டலாம்... இந்த
படத்திலேயே ஆக சிறந்த பகுதி அந்த தலிபான்கள் சம்பந்தப்பட்ட பகுதிதான்...
போராளிகளின் வாழ்க்கையை யாரும் இவ்வளவு நெருக்கமாக தைரியமாக காட்டியதில்லை , கலைஞனுக்கு ஆண்மை வேண்டும் என்று சொல்லுவார்கள் ,
படத்தில் பெண்மை கலந்த பாத்திரத்தில் கலக்கும் கமலுக்கு நிஜ வாழ்க்கையில் அது
அதிகாமாகவே இருக்கிறது... வேறு எந்த இயக்குனராலாவது இந்த விஷயத்தை இவ்வளவு நேர்மையாக
காட்டியிருக்க முடியுமா? உடனே கமலுக்கு இலங்கை பிரச்சனையை பற்றி படம் எடுக்கும்
தைரியம் இருக்கிறதா என்று கேட்டு விடாதீர்கள் , பத்து
வருடங்களுக்கு முன்னதாகவே தெனாலி என்ற நகைசுவை படத்தில் ஒரு இலங்கை பெண்ணின்
அவலத்தை காட்டியிருக்கும் கமலுக்கு அந்த
தைரியம் ரொம்பவே இருக்கிறது , கேள்வி கேட்கும்
உங்களுக்குதான் பொறுமை வேண்டும் கமல் அப்படியான படைப்பை பிரசவிக்கும் வரை ...
படத்தின் ஆரம்ப காட்சிகளில் கமல் கொஞ்சம் பெண்மைதானதோடு
நடக்கிறார் , நடனமாடுகிறார் ... எனக்கு படத்தில் எரிச்சலை உண்டு பண்ணிய
காட்சிகள் இவைகள் மட்டுமே ... கமலுக்கு இது தேவையில்லாதது ... பனிரெண்டாம் வகுப்பு
மாணவன் எனக்கு மனப்பாடமாக தெரியும் , எப்படி ஒப்பிக்கிறேன்
பார் என்று கண்ணை மூடி கொண்டு பெருமையாக ஒப்பித்தாள் எப்படி அபத்தமாக இருக்குமோ
அப்படி இருக்கிறது அந்த கதாபாத்திரம் ... கமல்
என்றாலே நடிப்புதானே... அதை நிரூபிக்க மீண்டும் மீண்டும் எதற்க்கு கஷ்டப்பட
வேண்டும்... இங்கே மற்ற யாரும் இன்னும் எல்கேஜி கூட தாண்டவில்லை மிஸ்டர்.கமல்...
ஆனால் கமலின் இந்த முயற்சியால் நமக்கு கிடைத்த பேரானந்தம் உன்னை காணாத பாடலும்
அதற்க்கு கமல் கொடுக்கும் அபிநயங்களும்தான்
... கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமாவில் உருவாக்கபட்ட சிறந்த நடன
அமைப்பு இதுதான் .. தேசிய விருது கமிட்டி புண்ணியவாங்களே தயவு செய்து இந்த
பாடலுக்கு விருது எதுவும் கொடுத்து
கேவலபடுத்தி விடாதீர்கள் , வழக்கம் போல யாரவாது கைலியை
தூக்கி பிடித்து கொண்டு இரண்டு புட்டங்களையும் ஆட்டி காட்டுவார்கள் அவர்களுக்கே
கொடுத்து அந்த விருதின் பெருமையை காப்பாற்றி கொள்ளுங்கள் ...
எப்படியோ இருக்கும் ஊரில் கோவணம் கட்டியவன் பிழைக்க
தெரியாதவன் என்று சொல்வார்களே ,
அப்படிதான் இருக்கிறது கமலின் இன்றைய நிலமையும் ... ஆனால் ஒருகாலத்தில் அம்மணமாக
இருந்த ஊரை இன்று கோவணம் கட்டும் அளவுக்காவது கொண்டு வந்ததில் கமலின் பங்கு
அளப்பரியது .. இன்று விஸ்வரூபத்தில் கமல் சோக்கா பிரிட்டிஸ்காரன் மாதிரி சட்டையும்
, பேண்டும் தனக்கு மாட்டி கொண்டிருக்கிறார்... இனி மற்றவர்கள்
குறைந்தபட்சம் பட்டாபட்டி அளவுக்காவது தங்களை
வளர்த்து கொள்வார்கள் என்று நம்பலாம்