இந்த படத்திற்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்கள் கண்டிப்பாக வேறு எந்த படத்திற்கும் கிடைத்திருக்காது , பல திசைகளில் இருந்து பலவிதமான காரணங்களுடன் பலரும் இந்த படத்தை மிக பெரிய தோல்வியாக மாற்றியே ஆகவேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டார்கள் என்பது உண்மை , சரி அப்படி இந்த படத்துக்கு எதிராக செயல்பட என்ன காரணம் என்று பார்த்தால் அது சத்தமே இல்லாமல் துளி விளம்பரம் இல்லாமல் வெளிவந்த இந்த படத்துக்கு கிடைத்த மிக பெரிய ஒபெநிங்... இதற்க்கு முன்னாள் இதை போன்ற பெரிய ஒபெநிங் கிடைத்த படம் எந்திரன்தான் , ஆனால் அதில் ரஜினி இருந்தார் , ஷங்கர் இருந்தார் , ரகுமான் இருந்தார் , ஐஸ்வர்யா ராய் இருந்தார் , இவற்றுக்கெல்லாம் மேலாக விளம்பரபடுத்த சன் டிவி இருந்தது , நொடிக்கொரு முறை விளம்பரம் , ஒருவாரத்துக்கு முன்பிருந்தே ரஜினி , ஷங்கர் என்று படத்தில் வேலை பார்த்த அத்தனை பேரின் பேட்டிகள் என்று பெரிய ஆராவாரத்தோடு வெளி வந்த படம் அது , ஆனால் பில்லா கதையே வேறு படத்தின் ரிலீஸ் தேதியே படம் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர்தான் தெரியவந்தது , பெரிய அளவில் விளம்பரம் கிடையாது , இயக்குனரும் தயாரிப்பாளரும் கிட்டத்தட்ட புதுசு , ஆனால் இதையெல்லாம் மீறி எந்திரனை மிஞ்சியது இதன் ஒபெநிங் , இதை படித்து கொண்டிருக்கும் பலருக்கும் சென்னையில் படத்தை பார்க்க முதல் மூன்று நாட்கள் டிக்கெட் கிடைத்திருக்காது என்பது மறுக்கமுடியாத உண்மை , இத்தனைக்கும் மாயாஜாலில் எந்த திரைப்படத்துக்கும் இல்லாத அளவுக்கு முதல் மூன்று நாட்கள் நாளொன்றுக்கு 92 காட்சிகள் படம் திரையிடபட்டிருக்கிறது...
சென்னையில்தான் இந்த நிலைமை என்று இல்லை , சென்னையை தாண்டியும் படத்தின் ஒபெநிங் பிராமதபடுத்தியிருகிறது , நான் பார்த்த திரையரங்கில் நான்கு காட்சிகள் என்று போட்டிருந்தார்கள் , முதல் காட்சி காலை 10 :30 தொடங்கும் , ஆனால் 9 :00 மணிக்கே திரையரங்கம் housefull , படத்தை ஆரம்பித்து விட்டார்கள் , படமும் சின்ன படம் என்பதால் அன்று மட்டும் 6 காட்சிகள் அத்தனையும் housefull .. இத்தனைக்கும் அது வெளிவந்தது பண்டிகை நாளிலோ இல்லை வர இறுதி விடுமுறை நாளோ கிடையாது , ஒரு சாதாரண வெள்ளி கிழமை... இவ்வளவு பெரிய கூட்டத்தை திரையரங்கிற்கு இழுத்து வந்ததது ஒன்றே ஒன்றுதான் அது அஜித் ....
அஜித்தின் இந்த வளர்ச்சியை பொறுக்கமுடியாத சிலர்தான் படத்தை பற்றி இன்னமும் எதிர்மறையாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள் , ஆனால் என்னை பொறுத்தவரை இந்த படம் இவ்வளவு வசூலித்திருக்கிறது என்றால் கண்டிப்பாக அது அஜித்தின் மிக பெரிய வெற்றிதான் , காரணம் இது வழக்கமான சினிமா கிடையாது , சராசரி தமிழ் சினிமா ரசிகனுக்கு பிடித்த அவன் அதிகபடியாக ரசிக்கும் காமெடி காட்சிகளோ இல்லை குத்து பாடல்களோ இதில் இல்லை , பெண்களுக்கு பிடிக்கும்படியான குடும்ப செண்டிமெண்டோ இல்லை காதல் காட்சிகளோ , டூயட் பாடல்களோ இதில் இல்லை , படத்தில் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வருவது மாதிரியான திடீர் திருப்பங்கள் திரைகதையில் பேருக்கு கூட இல்லை , படம் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை நேர்கோட்டில் செல்கிறது , இதற்க்கு முன்னாள் தமிழில் இப்படியாக வெளிவந்த எந்த படத்தையாவது உங்களால் காட்டமுடியுமா? அப்படி வெளிவந்தாலும் பில்லாவை போல ரசிக்கும்படியான படமாக அது இருந்திருக்குமா?இதையெல்லாம் தாண்டி படம் அதிகம்பேரால் ரசிக்கபட்டிருப்பதன் காரணம் இரண்டே இரண்டுதான் ஒன்று அஜித் , இன்னொன்று இந்த படத்தில் அவர் ஏற்று நடித்திருக்கும் பில்லா என்ற கதாபாத்திரம் திரையில் வெளிபடுத்தப்பட்ட விதம்..இந்த படத்தில் காட்டபட்டிருக்கும் பில்லா என்ற கதாபாத்திரம் எந்த ஆதரவும் இல்லாமல் தனியாளாக தன் வாழ்க்கையில் முன்னேறியிருக்கும் அனைவருக்கும் கண்டிப்பாக பிடித்திருக்கும் , அப்படிப்பட்டவர்கள் இந்த படத்தின் ஏதாவது ஒரு காட்சியிலாவது இல்லை வசனத்திலாவது தன்னுடைய வாழ்க்கையை பொருத்தி பார்க்க முடியும் , அதேபோல எந்த பிடிமானமும் இல்லாமல் தனியாளாக போராடிகொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த பில்லா ஏதாவது ஒருவகையில் முன்னோடியாக இருப்பான். ((இந்த காதாபத்திரத்தை பற்றிய என்னுடைய எண்ணங்களை ஒரு தனி பதிவாகவே எழுதலாம்...)
பெரிய பெரிய நடிகர்களே படம் ஓட காமெடி நடிகர்கள் கால்ஷீட்டை முதலில் புக் பண்ணிவிட்டு படத்தை ஆரம்பிக்கும் இந்த காலத்தில் படத்துக்கு எது தேவையோ அது மட்டும் இருந்தால் போதும் , அதை சரியாக கொடுத்து விட்டால் மசாலா படங்களுக்குரிய எந்த இலக்கணமும் இல்லாமலே படத்தை வெற்றி பெற வைக்க முடியும் என்று நிரூபித்து காட்டியிருக்கும் இந்த படம் என்னைபொறுத்த வரை தமிழ் சினிமாவில் ஒரு மாற்று முயற்சிதான்... .இப்படியான ஒரு மாற்று சினிமாவை கொடுக்கும் தைரியம் இருப்பதற்காகவே அஜித்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம் , அதைவிட்டு விட்டு அவர் மேல் பொறாமை கொண்டு எங்கள் தலைவருக்கு இருப்பது போல குடும்ப ரசிகர்கள் உனக்கு இல்லை , அமெரிக்காவில் படம் பலாப் , உகாண்டாவில் படம் வெளியாகவே இல்லை என்று சப்பைக்கட்டு கட்டுவதெல்லாம் அஜித்தின் மீதான அவர்களின் பொறாமைதான் காட்டுகிறதே தவிர வேறேதுமில்லை...