சரியாக 8 வருடங்கள் முன்பாக , நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு
படித்து கொண்டிருந்தேன்,
திருமங்கலத்தில் ஒரு சர்சில் சுவிசேஷ வழிபாட்டு கூட்டம் ஒன்று நடந்தது.
எங்கள் குடும்பம் மிக தீவிரமான கடவுள் கடவுள் பக்தி உடைய குடும்பம்... எனவே நாங்கள் எல்லாரும் அந்த
கூட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானித்தோம், ஆனால் அது ஒரு வெள்ளிக்கிழமை என்பதால்
என்னுடைய அப்பாவும் , அம்மாவும் விடுப்பு எடுத்து கலந்து
கொள்வதில் சிக்கல் , எனவே என்னை மட்டும்
அனுப்பிவைத்தார்கள்.. என்னுடன் என் பங்காளி முறை அண்ணன் தம்பி , தங்கைகள் சிலர் வந்திருந்தனர் , எங்களை வழிநடத்துவதற்க்கு எங்களுடன் சித்தி ஒருவரும்
வந்திருந்தார்... திருமங்கலம் செல்லவேண்டும் என்றாள் அருப்புக்கோட்டையில் இருந்து
விருதுநகர் சென்று அங்கிருந்து மதுரை வண்டி பிடித்து செல்ல வேண்டும்... நாங்கள்
விருதுநகர் வண்டி பிடிக்க அருப்புக்கோட்டை பேருந்து நிலையத்திர்க்கு
சென்றிருந்தோம்..
வரிசையாக இரண்டு தனியார் பேருந்துகள் நின்றுகொண்டிருந்தன, அதில் சந்திரா பேருந்தின் முன்பாக அந்த வண்டியின் டிரைவர் புகை பிடித்துக்கொண்டிருந்தார், அவரிடம் எந்த வண்டி முதலில் செல்லும் என்று கேட்டோம் , இந்த வண்டி கிளம்ப இன்னும் பத்து நிமிடங்கள் ஆகும் அந்த ஜெயவிலாஸ் வண்டி இன்னும் ஐந்து நிமிடத்தில் சென்றுவிடும் என்று இன்னொரு வண்டியை காட்டினார் , அவர் காட்டிய ஜெயவிலாஸ் வண்டியில் உக்கார இடம் இல்லை , எனவே ஐந்து நிமிடம் தாமதம் ஆனாலும் பாராவாயில்லை எண்டு சந்திரா வண்டியில் ஏறினோம். நானும் இன்னொரு அண்ணனும் டிரைவர் சீட்டின் பின் சீட்டில் அமர்ந்தோம் , எங்களுக்கு அடுத்தடுத்த இருக்கைகளில் எங்களுடன் வந்தவர்கள் அமர்ந்தனர்... வண்டியில் ஓடிய டிவியில் எம்ஜிஆர் ஏதோ ஒரு வடநாட்டு நடிகையின் ஜாக்கெட்டை பிடித்து கிழித்து கொண்டிருந்தார், நான் அதை ஆர்வமாய் பார்த்து கொண்டிருந்த பொது குடிக்க தண்ணி வேண்டும் என்று யாரோ கேட்க நான் இறங்கி தண்ணி வாங்க சென்றேன் , அப்பொழுது எதேச்சையாக ஜெயவிலாஸ் வண்டியை பார்க்க அங்கே வரிசையாக ஐந்து சீட்டுகள் காலியாக இருந்தன . வண்டியில் ஏறியவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக இறங்கி விட்டிருந்தனர்.. நான் எங்கள் சித்தியிடம் அதை சொல்ல உடனே அனைவரும் இறங்கி ஜெயவிலாஸ் வண்டியில் காலியான இருக்கைகளில் அமர்ந்து விட்டோம்... அப்பொழுது எனக்கு தெரிந்த ஒரு நபர் சந்திரா வண்டியில் ஏறினார் , நான் அவரிடம் ஜெயவிலாஸ் வண்டிதான் முதலில் செல்லுமாம் , அங்கே உக்காரவும் இடம் இருக்கிறது என்று சொல்லி அதில் ஏற சொன்னேன் , ஆனால் அவரோ அந்த வண்டியில் டிவி இல்லை , நான் டிவி பார்த்துக்கொண்டே சந்திரா வண்டியில் வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு சந்திரா வண்டியில் ஏறி கொண்டார்...

நாங்கள் சரியாக 1 மணி 15 நிமிடங்களில் திருமங்கலம் சென்று விட்டோம், அப்பொழுது மணி காலை 9:30 , சுமார் பதினொன்று மணி அளவில்
அந்த சர்ச் வாசல் முன்பாக ஒரு கார் வந்து நின்றது , அதிலிருந்து என் அப்பாவும் அவர்
நண்பரும் இறங்கினார்கள் , என் அப்பாவின் முகத்தில் ஏதோ ஒரு பதட்டம் , உள்ளே வந்ததும் அவர் கண்கள் என்னை தேடி அங்கும் இங்கும்
அலைபாய்ந்து கொண்டிருந்தது , என்னை
பார்த்த அந்த நொடியில் அவர் மயக்கம் அடைந்து விழுந்து விட்டார்... எனக்கு ஒன்றும்
புரியவில்லை , பிறகு என் அப்பாவின் நண்பர் சொல்லிதான் எனக்கு தெரிந்தது , காலையில் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் சென்ற
சந்திரா வண்டியும் , செங்கோட்டையில் இருந்து அருப்புக்கொட்டை
வந்துகொண்டிருந்த அரசு பேருந்தும் அருப்புக்கோட்டையில் இருந்து 7 கிலோ மீட்டர்
தொலைவில் நேருக்கு நேராக மோதி பெரிய விபத்து நடந்திருக்கிறது.. நாங்களும்
அதே நேரத்தில்தான் விருதுநகருக்கு சென்றதால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பயம் , நானும் அந்த பேருந்தில் சென்றிருப்பனோ என்று.. அப்பொழுது
செல்போன் வசதி எல்லாம் கிடையாது எனவே உடனே எங்களை தொடர்பு கொள்ளமுடியவில்லை, விபத்து நடந்த இடத்திர்க்கும் சென்று பார்பதற்க்கு பயம், எனவே ஒரு வாடகை காரை எடுத்து கொண்டு என் அப்பா
திருமங்கலத்திற்கே வந்துவிட்டார்..
என் அப்பா கண்விழித்தவுடன் ஒரு எஸ்டிடி பூத் சென்று எங்கள் வீட்டிற்கு ஃபோன் போட்டு என் அம்மாவுடன் பேச சொன்னார் , நான் பேசிய ஹேலோ என்ற வார்த்தையை கேட்டவுடனே என் அம்மா உடைந்து அழ ஆரம்பித்து விட்டார்கள்... அந்த அழுகையிலேயே தெரிந்தது கடந்த இரண்டு மணிநேரமாக அவர்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்று... விபத்து நடந்த வண்டி நாங்கள் ஏறி இறங்கிய அதே சந்திரா வண்டிதான், வண்டியின் டிரைவர் சீட்டிலிருந்து அடுத்த நாலு சீட்டு வரைக்கும் அமர்ந்திருந்த அத்தனை பேரும் சம்பவ இடத்திலேயே உயிரழந்து விட்டனர்.. அந்த டிரைவரின் உடல் டிவி பெட்டிக்குள் சொருகி மிகவும் கொடூரமான முறையில் கிடந்திருக்கிறது... அன்று முழுவதும் எங்கள் ஊரே உறைந்து போயிருந்தது... அதுவரை செய்தியாக மட்டுமே பார்த்த விபத்து , முதல்முறையாக என் வாழ்க்கையை லேசாக உரசி சென்றது.. அன்றிலிருந்து எந்த விபத்து நடந்தாலும் என் அம்மாவின் அழுகையும் , என் அப்பாவின் மயக்கமும்தான் என் ஞாபகத்திற்கு வருகிறது...

சரி விசயத்திற்கு வருகிறேன் , நேற்று எங்கேயும் எப்போதும்
படம் பார்த்தேன். அதிலும் ஒரு விபத்தைதான் மாறி மாறி காட்டியிருந்தனர் , அதை பார்த்தபொழுது என் அம்மாவின் அழுகை ஞாபகம் வந்ததா என்றாள் இல்லை எனக்கு
எரிச்சல்தான் வந்தது... அதற்க்கு காரணம் காலம்காலமாய் ஊனமுற்றவர்களை
காட்டி பார்க்கும் நம்மை பரிதாபபடவைத்து தங்கள் கல்லாவை நிரப்பி கொள்ளும் போலி மனிதாபிமான படைப்புகளில் வரிசையில் வந்து சேந்திருக்கும் இன்னொரு படம்தான் இது .. ஒரே வித்தியாசம்
ஊனத்திற்கு பதிலாக விபத்து ... தில்லாலங்கடி
என்று ஒரு படம் , அதில் மனநிலை பிழன்ற
குழந்தைகளின் மருத்துவசெலவுக்கு பணம் சேர்க்க ஹீரோ கொள்ளையடிக்கிறான், அதை நியாபடுத்த பல
மனநிழைபிழன்ற குழந்தைகளை திரையில் காட்டுவார்கள், அதை பார்த்தவுடன்
நமக்கும் ஒரு பரிதாப உணர்ச்சி உருவாகும் , அந்த பரிதாபம் அவர்களுக்காக உழைக்கும் அந்த ஹீரோவின் மேல் ஒரு மரியாதையாக மாறும் , அதுவே அந்த படம் நமக்கு
பிடித்துபோக ஒரு காரணமாகும் , நாமும் வெளியே நான்கு
பேரிடம் சொல்ல அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பரவி படம் பெரிய ஹிட்டாகி தயாரிப்பாளரின்
கல்லா நிரம்பும் , ஹீரோவின் அடுத்த படம் சம்பளம் இரட்டிப்பாகும் , ஆனால் இவர்கள் யாரை வைத்து
சம்பாதித்தார்களோ அந்த குழந்தைகளின் நிலமை அப்படியேத்தான் இருக்கும்... ரோட்டில் தன்
குழந்தையின் உடலை கீறி அந்த ரத்தத்தை காட்டி பிச்சை எடுக்கும் வித்தைக்காரர்களுக்கும்
இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை , சொல்லபோனால் வித்தைக்காரன் வரும்
பணத்தில் அந்த குழந்தைக்கும் செலவழிப்பான் ஆனால் இவர்கள்?
இந்த படமும் இப்படிதான் , படம் முடிந்து வெளியேவரும்
பொது நம் ஞாபகத்தில் இருப்பது அந்த விபத்துதான் , இதற்க்கு முன் நாம் பார்த்த
படித்த அல்லது நமக்கு நேர்ந்த விபத்துகள் நம் மனதில் உருவாக்கியிருக்கும் தழும்புகளில் கத்தி விட்டு ஆட்டியிருக்கிறது இந்த படம் , அதனால்தான் படம் முடிந்து வெளியே
வரும்போது நம் மனம் வலிக்கிறது... அது மட்டுமே இந்த படத்தின் வெற்றி... விபத்தை திரையில் காட்ட உழைத்திருப்பது மட்டுமே
அவர்கள் வேலை , மற்றபடி அந்த காட்சி நம் மனதில்
உருவாக்கும் வலிகளுக்கு அவர்களின் கற்பனையோ , உழைப்போ காரணம் இல்லை , இதற்க்கு முன் நாம் பார்த்த விபத்துகளின் பாதிப்பே
காரணம்... நியாயமாக பார்த்தால் இந்த
படத்தின் மூலம் வரும் வருவாயில் பாதி மட்டுமே இவர்களுக்கு சொந்தம் , மீதியை இதுவரை நடந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு
சமர்பிக்க வேண்டும்... ஆனால் இந்த போலி மனிதாபிமானிகள் அதை மட்டும் செய்யவே
மாட்டார்கள்... ஆனால் நான் விபத்து குறித்த விழிப்புணர்வுடன் ஒரு நல்ல படத்தை இந்த
சமூகத்திர்க்கு தந்துவிட்டேன் என்ற பெருமையை மட்டும் சாகும்
வரைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்...... இவர்களைத்தான் “லேட்டஸ்ட் மனிதாபிமானிகள்” என்று நம் சமூகமும் தலையில் தூக்கி
வைத்து கொண்டாடபோகிறது..
அனன்யா வரும் காதல் காட்சிகளுக்காக வேண்டுமானால் படத்தை ஒருமுறை
பார்க்கலாம்...