(மீண்டும் ஒரு தல பதிவு )
இன்றய நிலமையில் சினிமா நடிகர்கள் மேல் இருக்கும் பெரிய குற்றசாட்டு மன்றங்கள் என்ற பெயரில் பல இளைங்கர்களின் வாழ்க்கையை தங்கள் சுய லாபதிர்க்காய் அழிக்கிறார்கள் என்பதுதான் ... அது உண்மையும் கூட .... எம்ஜிஆர் காலம் தொடங்கி இன்று இருக்கும் நண்டு சுண்டு நடிகர்கள் வரை , ஊர் ஊருக்கு ரசிகர் மன்றங்களை தொடங்கி வைத்து கொண்டு , அவர்களை தங்கள் சொந்த லாபத்திர்க்கு பயன்படுத்திக்கொண்டு இருந்திருக்கிறார்கள் .... எம்ஜிஆர் , சிவாஜி , விஜயகாந்த் என்று சில பெரிய நடிகர்கள் அவர்கள் ரசிகர்களை பயன்படுத்தி அரசியலில் இறங்கி தனக்கும் தன் குடும்பத்திர்க்கும் லாபம் தேடி கொண்டார்கள் ... ஆனால் அவர்களை நம்பிய ரசிகர்கள் இன்னமும் மூட்டை தூக்கி கொண்டும் , கந்து வட்டிக்கு கடன் வாங்கியும்தான் பிழைப்பை ஒட்டி கொண்டு இருக்கிறார்கள் ..
நடிகர்கள் ரசிகர் மன்றங்கள் வைத்திருப்பதான் பின்னணி என்ன? முதல் காரணம் தங்கள் படத்திர்க்கு அதிக வசூல் கிடைக்க வேண்டும் , தான் கோடிகளில் புரள வேண்டும் என்பதுதான் ... இன்று கோடிகளில் புரளும் பெரிய நடிகர்களின் முதுகெலும்பே இந்த ரசிகர்கள்தான்... அவர்கள்தான் எவ்வளவு பணம் கொடுத்தேனும் தன் தலைவனின் படத்தை பார்க்க தயாராக இருப்பார்கள் ... சொல்ல போனால் ஒரு நடிகனின் உயிர் நாடியே இந்த ரசிகர்கள்தான்.... படங்களில் கதாநாயகர்கள் பன்ச் வசனம் பேசுவது , பறந்து பறந்து சண்டை போடுவது ,எல்லாமே இந்த மாதிரியான ரசிகர்களை தனக்கென்று உருவாக்க வேண்டும் என்பதர்க்காகவே....
அடுத்தது அவர்களை வைத்து அரசியலில் காய் நகர்த்தி கோடிகோடியாய் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசை ... சமீபத்தில் ஒரு நடிகர் கூட இப்படி அரசியலுக்கு வர ஆசைபட்டு நாகபட்டினத்தில் ஒரு மீட்டிங் நடத்தியது ஞாபகத்தில் இருக்கலாம் ... அவர் ஒன்றும் பெரிய சமூக சேவகர் கிடையாது , இல்லை அவர் பரம்பரையிலும் யாரும் சமூக சேவை செய்தது கிடையாது .. ஆனால் அவர் அரசியலுக்கு வந்தால் ஊருக்கு நூறு ஒட்டாவது விழும் .. காரணம் இந்த ரசிகர் மன்றங்கள் ... இவர்களை பயன்படுத்தி அரசியல் பேரத்தில் பெரிய தொகையை உருவிவிடலாம் ...
ஆரம்ப காலகட்டதில் வெறும் ரசிகர் மன்றங்களாக உருவாகும் இவை , போக போக நற்பணி இயக்கமாக மாறும் .... அடுத்து கட்சியாக உருவெடுக்கும் .... மன்றாமாக இருக்கும் பொது ஐந்து கோடி சம்பளம் வாங்கிய அந்த நடிகர் நற்பணி இயக்கமாக மாறும் பொது பத்து கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு வளந்திருப்பார்... பின்னர் கட்சிக்கு தலைவனானவுடன் அவர் டீலிங் 500 கோடி 1000 கோடி என்ற அளவில்தான் இருக்கும் ... ஆனால் அவர்களின் பின்னால் கொடி பிடித்து கொண்டு அழைந்த ரசிகர்கள் நிலை? எங்கள் தெருவிலேயே ஒரு பெரிய நடிகருக்கு ரசிகராக இருந்து , அவருக்காகவே வாழ்ந்து இன்று தன்னுடய வாழ்க்கையை தொலைத்து சாப்பாட்டிற்க்கே பிச்சை எடுத்து கொண்டு இருக்கும் ஒருவரை நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன்....
ரசிகர்மன்றங்கள் ஆரம்பிக்கும் ரசிகர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாகவே இருப்பார்கள் .. அவர்களின் அறியாமையை கிறுக்குதனத்தை நடிகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்... நான் அரசியலுக்கு நாளைக்கு வருவேன் நாளன்னைக்கு வருவேன் என்று அவர்களை உசுப்பி விட்டு கொண்டே இருப்பதும் , தடாலடியாக அரசியலுக்கு வந்து ரசிகனாக இருந்த அவனை தொண்டனாக பதவி உயர்வு அளிப்பதும் , கொடி பிடித்து மீனவர்களுக்காக உண்ணா விரதம் இருப்பதும் அவர்களின் இந்த கிறுக்குதனத்தை மேலும் அதிகரிப்பதர்க்காகவே ... தேள் கடித்த குரங்குகளுக்கு சாராயம் கொடுக்கும் வேலையைத்தான் இன்று வரை எல்லா நடிகர்களும் செய்து கொண்டு இருக்கிறார்கள் ...
ஆனால் இன்று முதன் முறையாக ஒரு நடிகன் யாரும் செய்ய துணியாத செய்வதற்க்கு அஞ்சிய ஒரு செயலை செய்துள்ளான் .... எனக்கு ரசிகர்மன்றமே வேண்டாம் என்று தடாலடியாக தெரிவித்துள்ளார் ... அதற்க்கு காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் ஆனால் இவரின் இந்த செயல் கண்டிப்பாக பாராட்டுக்குரியது... அவர் தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கபடும் அஜீத் குமார்... தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்மன்றங்களை கொண்டிருக்கும் நடிகர் அவர்... தன் ரசிகர்களை இதுவரை தன் சுயநலதிர்க்காக பயன்படுத்த தயங்கும் ரஜினி கூட செய்ய அஞ்சிய ஒரு செயலை சர்வ சாதாரணமாக செய்து விட்டார் தல... இதன் மூலம் தமிழ் சினிமாவில் நான் என்றுமே ஜென்டில்மென் தான் என்பதை அழுத்தமாக பதியவைத்து விட்டார்...
இப்படி செய்வதன் மூலம் அவருக்கு கிடைக்க போகும் லாபத்தை விட நஷ்டம்தான் அதிகமாக இருக்கும் .. காரணம் அவர் ரசிகர்களின் நடிகர் ... அவருக்கு இருக்கும் பெரிய பலமே அவர் ரசிகர்கள்தான்... இதன் மூலம் பல ரசிகர்கள் அவருக்கு எதிராக போக வாய்ப்பு உண்டு , அவரின் படங்களின் வசூலில் ஆப்பு வைக்க நிறைய வாய்ப்பு உண்டு .... மற்ற நடிகர்கள் எல்லாம் அஞ்சியது இதற்காக மட்டுமே ..
இன்று மற்ற நடிகர்கள் எல்லாம் சினிமாவையும் தாண்டி அவர்களை தன் முதல்வர் நாற்காலி ஆசைக்கு பலிகொடுத்து கொண்டு இருக்கும் போது அவர்களை எல்லாம் விட அதிகமான ரசிகர்களை தன் பின்னால் வைத்திருக்கும் தல , அவர்களை பயன்படுத்தி ஏழைகளுக்கு தையல் மெஷின் கொடுக்கிறேன் லேப்டாப் கொடுக்கிறேன் என்று அரசியலுக்கு அடி போடாமல் , உங்கள் வேலையை பாருங்கள் என்று அவர்களை கட்டவிழ்த்து விட்டு இதுவரைக்கும் அவர்களை ரசிகர் மன்றங்களில் அடைத்து வைத்து தான் செய்த பாவத்தை போக்கி கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும் ...
குடும்பத்தை முதலில் கவனியுங்கள் மத்தத அப்பறம் பார்த்து கொள்ளலாம் என்று மற்ற நடிகர்கள் எல்லாம் வாய்மொழியாக மட்டும் சொல்லி கொண்டு இருந்ததை இன்று தல செயலில் காட்டி விட்டார் ... தன் ரசிகர் மன்றங்களை கலைத்து இருந்தாலும் , மற்ற எந்த நடிகணும் தன் ரசிகனுக்கு கொடுக்க முடியாத சந்தோஷத்தை தல எங்களுக்கு தந்திருக்கிறார்.. ஆம் பெருமையாக சொல்லி கொள்ளுவோம் நாங்கள் இவரின் ரசிகர்கள் என்று ... மற்றவர்களை போல பன்ச் வசனம் கேட்டு ரசிகனானவர்கள் இல்லை நாங்கள் , அவரின் தைரியமான நடவடிக்கைகளுக்காக ரசிகர்கள் ஆனவர்கள் ...
எங்களுக்கு மன்றங்கள் தேவை இல்லை , தல எப்பொழுதும் இதே போல வெளிப்படையாக , நேர்மையாக இருந்தால் போதும் ...