Followers
Copyright
Thursday, March 31, 2011
Friday, March 25, 2011
உலககோப்பைக்கு விடுதலை.. bye bye பாண்டிங்
பதிமூன்று வருடங்களாக சிறைக்குள் அடைபட்ட கைதியை போல ஆஸ்ட்ரேலியா அணியின் வசம் அகப்பட்ட கிடந்த உலக கோப்பையை தோனி அண்ட் கோ பிடிங்கி பொதுவில் வைத்து விட்டார்கள் அது மட்டும் இல்லாமல் பாண்டிங்கின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுபுள்ளியும் வைத்தாகி விட்டது... இந்த உலக கோப்பையில் நடந்த மிக சிறந்த விஷயம் இவை இரண்டும்தான்....
கிட்டதட்ட பதிமூன்று வருடங்கள் , கிரிக்கெட் உலகில் கோலோச்சிய ஒரு அணி , நேற்று அகமெதாபாத்தில் அடியோடு நொறுங்கியது .... 1992க்கு பிறகு ஒரு வேர்ல்டு கப் ஃபைனல் நடக்க போகிறது அதில் ஆஸ்ட்ரேலியா இல்லாமல்.... லீக் சுற்றிலேயே பாகிஸ்தான் அவர்களின் தொடர் வெற்றிக்கு முற்றுபுள்ளி வைத்திருந்தாலும் , அவர்களை முழுமையாய் இந்த உலககோப்பையில் இருந்து வெளியேற்றியது நாம் இந்திய அணி தான் .... 2003 உலககோப்பை ஃபைனலில் காயம்பட்ட ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் மனதும் வராதா வாரதா என்று காத்து கிடந்த நாள் நேற்றுதான் வந்தது ... போட்டியின் முடிவில் மைதானத்தில் யுவராஜ் கொக்கரித்ததை விட அதிகமாய் ஒவ்வொரு ரசிகனும் தன் மனதிர்க்குள் கொக்கரித்திருப்பான்.... இந்த முறை யார் ஜெயித்தாலும் பரவாயில்லை இவர்களை வெளியேற்றியதே இந்தியாவுக்கு பெரிய வெற்றிதான்...
ஆனாலும் அந்த அணியை குறை சொல்லவும் முடியாது .. கடைசி வரை ரத்தம் சொட்ட சொட்ட போராடினார்கள் ... என்ன இருந்தாலும் பதிமூன்று வருட பெருமை அல்லவா? அது நம்மை விட்டு போய்விட கூடாது என்னும் துடிப்புடன் அவர்கள் முடிந்தவரை போராடினார்கள் .. ஆனால் டெண்டுல்கர் மற்றும் கம்பீர் இணைந்து அமைத்து கொடுத்த வலுவான தளத்தில் யுவராஜும் , ரெய்னாவும் ஆஸ்ட்ரேலியாவுக்கு வலுவான சமாதியை கட்டி முடித்தனர் ..
டீம் ஸ்பிரிட் டீம் ஸ்பிரிட் என்று சொல்லுவார்களே , அதை நேற்று இந்திய அணியில் பார்க்க முடிந்தது... பௌலிங் ஃபீல்டிங் , பேட்டிங் என்று அனைத்திலும் ஒருங்கிணைந்து விளையாடினார்கள்... வாட்சனை அஸ்வின் போல்ட் ஆக்கியதும் ஆரம்பித்தது ஆஸ்ட்ரேலியாவுக்கு சனி , 200 ஓட்டங்களைக்கூட தொட மாட்டார்கள் என்றுதான் நான் எண்ணினேன் .. ஆனால் எளியவர்களின்(கஷ்டபடுபவர்களின்) மேல் கருணை காட்டும் நம்மவர்களின் கருணை குணம் பாண்டிங்கின் மேலும் வெளிபட்டது ... அதுவரைக்கும் இருபதை தாண்டவே திணறி கொண்டிருந்த அவர் எளிதாக நூறை கடக்க ஆஸ்ட்ரேலியா கொஞ்சம் கவுரவமான இலக்கை எட்டியது ... இது பாண்டிங் அவர்களுக்கு கடைசி ஆட்டமாக அமைய அதிக வாய்ப்பு இருக்கிறது ...(குறைந்தபட்சம் உலக கோப்பையிலாவது)... சயீத் அன்வர் 2003இல் இந்தியாவுடனான சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இதே போல்தான் சதம் அடித்து தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடித்து கொண்டார் ... எனக்கு அவரின் ஞாபகம்தான் வந்தது நேற்று பாண்டிங்கை பார்த்த பொழுது ... இருவருமே இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடியவர்கள் , அவர்களின் முடிவும் (கிட்டதட்ட) இந்திய அணியினாலயே எழுதபட்டது துரதிருஷ்டம் ....
260 என்பது எதிரணிக்கு பெரிய சவால் இல்லை , ஆனால் அதே போல சுருட்டவே முடியாத அடிமட்ட இலக்கும் இல்லை , அதுவும் எதிரணி இந்தியா , எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்றே தெரியாது ... வென்று விடலாம் என்ற நம்பிக்கையில்தான் ஆஸ்ட்ரேலியா பந்து வீச ஆரம்பித்தது ... ஆனால் அவர்கள் கெட்ட நேரம் , பவுன்ஸ் பந்துகளாக போடுகிறேன் என்று அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகள் அனைத்தும் ஆரம்பத்தில் வைட் பந்துகளாக போக , இந்திய அணியின் அபாயகரமான துவக்க ஆட்டக்காரர்கள் தங்கள் வேலையை ஆரம்பித்தார்கள் ... ஓவர் ஓவருக்கு பவுண்டரிகள் பறக்க ஆரம்பித்தது ... ஆனால் சேவாக் நேற்று கொஞ்சம் பயந்தது போலவே விளையாடினார்... எங்கே மறுபடியும் ஜான்சன் பந்தில் ஆட்டமிழந்து விடுவோமோ என்ற பயமா என்று தெரியவில்லை(கடைசி பதினைந்து ஆட்டங்களில் அவர் ஒன்பது முறை ஜான்சன் பந்தில் வீழ்ந்திருக்கிறார்).... ஆனால் நேற்று அவரை வாட்சன் வெளியேற்ற ஆட்டத்தில் பதட்டம் ஆரம்பித்தது ... அடுத்து வந்த கம்பீரும் நன்றாக விளையாடினாலும் உடலில் பதட்டம் தெரிந்தது .... மறுமுனையில் சச்சின் அரைசதம் அடிக்க என் மனம் கவலை கொள்ள ஆரம்பித்தது எங்கே இன்றும் அவர் சதம் அடித்து இந்தியாவை தோற்கடிக்க வைத்து விடுவாரோ என்று (அவர் ராசி அப்படி), ஆனால் அவர் 52 ஓட்டங்களில் வெளியேற இந்திய அணிக்கு நெருக்கடி இன்னமும் அதிகரித்தது... அடுத்து வந்த கோக்லியும் வந்த வேகத்தில் வெளியேற , யுவ்ராஜ் வந்து கம்பீரை ரன் அவுட் செய்ய ஆட்டம் ஆஸ்ட்ரேலியா வசம் சாய்ந்தது....
நேற்று நடந்த போட்டியில் மன்னிக்கவே முடியாதபடி மகா மட்டமாக விளையாடிய ஒரே ஒரு இந்திய பேட்ஸ்மேன் தோனி மட்டும்தான் ... அணி இக்கட்டான நிலையில் இருக்கும்பொழுது இவ்வளவு அசால்டாக விளையாடிய அவரை எவ்வளவு திட்டினாலும் தகும்.. அதிர்ஷ்டத்தால் மட்டுமே அவர் அணியில் இருக்கிறார் .. இல்லை என்றாள் அவரை தூக்கி விட்டு யூசூஃப் பதானையும் ரெய்னாவையும் நிரந்தரமாக டீமில் வைத்து விடலாம் .... இதுவரை அவர் அணிக்காக எந்த பங்களிப்பையும் தரவில்லை கேப்டன் சுமையை சுமப்பதை தவிர ....
அவர் அவுட் ஆனவுடன் கிட்டதட்ட இந்தியாவுக்கு சங்கு ஊதிவிட்டார்கள் , தோனியின் கேப்டன் பதவிக்கும் , சச்சினின் உலக கோப்பை கனவுக்கும் சாவு மணி அடித்து விட்டார்கள் என்றுதான் நினைத்தேன் ... ஆனால் கடைசி கட்டத்தில் யுவ்ராஜ் மற்றும் ரெயினாவின் அற்புதமான ஆட்டம் அந்த மணியை ஆஸ்ட்ரேலியாவுக்கு மாற்றி அடித்து விட்டது(dead song for Australia and Ponting) ... இவர்களின் பாட்னர்ஷிப் 2003 சூப்பர் சிக்ஸில் பாகிஸ்தானுக்கு எதிராக டிராவிட்டும் யுவ்ராஜும் போட்ட பாட்னார்ஷிப்பை நினைவுபடுத்தியது .. ஆனால் அதை விட இது ஒருபடி மேல் .... ரெயினா பதானை நிறுத்திவிட்டு தன்னை டீமுக்குள் கொண்டுவந்தது சரிதான் என்பதை அழுத்தமாய் நிரூபித்து இருக்கிறார் .. ஆனால் இது இறுதி போட்டி வரை தொடரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்....
நேற்று கடைசி கட்டத்தில் பாண்டிங்கின் முகத்தை பார்க்கவே எனக்கு பாவமாக இருந்தது .... கிரிக்கெட் உலகில் சிங்கமாக வலம் வந்த அவர் நேற்று என்ன செய்வது என்றே தெரியாமல் பரிதாபமாக நின்று கொண்டிருந்தது கொஞ்சம் அவர் மேல் வருத்தபடவே வைத்தது .. என்ன செய்ய பாண்டிங் உச்சத்தில் இருக்கும் எல்லாருக்குமே கண்டிப்பாக அஸ்தமன காலம் ஒன்று வரத்தானே செய்யும் ... ஆனால் கிரிக்கெட் இருக்கும் வரை அவர் கண்டிப்பாக எல்லார் மனதிலும் நிலைத்து நிற்பார்... bye bye ponting…..
Thursday, March 24, 2011
ஆடு கோழியயாவது விட்டு வையுங்கப்பா?
தேர்தல் கமிசனா? இல்லை தாதா கமிசனாயா இது.... ரோட்டுல ஓடுற ஒரு வண்டிய விட்டு வைக்கிறது கிடையாது... எல்லாத்தையும் கைமறைச்சி நிறுத்தி சோதனைங்கிர பேர்ல இம்சை பண்றது ... உங்களுக்கு கவர்மெண்ட் சம்பளம் தருது .. நீங்க எவ்வளவு நேரம் வேணும்னாலும் வண்டியை நிறுத்தி சோதனை போடலாம் .. ஆனா நாங்க? வண்டியில ஆட்ட ஏத்திக்கிட்டு போய்கிட்டு இருக்கோம் ... சரியா இன்னும் அரைமணிநேரத்துல பார்ட்டி கையில எல்லா ஆட்டையும் ஒப்படைக்கணும் ...அப்பத்தான் அவன் அத பிரியாணி போட முடியும் ... எங்களுக்கும் காசு கிடைக்கும் ... இல்லைனா பெருசா வப்பான் ஆப்பு .... நான் மட்டும் இல்லை , என்னை மாதிரி ஏகப்பட்ட “வணிகர்கள்” இதனால பாதிக்கப்பட்டு இருக்காங்க தெரியும்ல.... நம்ம தமிழின தலைவர் அய்யா கலைஞர் கூட இத பத்தி அறிக்கை விட்டிருக்காரு ...
அவரு எவ்வளவு பெரிய ஆளு , அவரே எங்களுக்கு சப்போர்ட் பண்ணி இருக்காரு ... அவரு எவ்வளவு பெரிய ஆளுன்கிறதுக்கு ஒரு சின்ன உதாரணம் ... எனக்கு அப்ப சின்ன வயசு (இப்ப வரைக்கும் நான் சின்ன பையந்தான்) எங்க ஊருல தேர்தல் வந்துச்சி .... வோட்டு போட போற எல்லாரையும் ஏத்திக்கிட்டு போக கருப்பு சிவப்பு வண்டி ஒண்ணும் , முன்னாடி எம்ஜிஆர் படம் போட்ட வண்டி ஒண்ணும் எங்க தெருக்குள்ள சுத்திக்கிட்டே இருந்திச்சி ... எங்கப்பா எம்ஜிஆர் விசிறி .. அதனால கருப்பு சிவப்பு வண்டிய விட்டுட்டு எம்ஜிஆர் படம் போட்ட வண்டியில ஏறுனாறு ... நான் எங்கப்பாகிட்ட கெஞ்சி கூத்தாடி , அவரோட எம்ஜிஆர் படம் போட்ட அந்த வண்டியில ஏரிக்கிட்டேன் .... வண்டி நேர எங்க ஊருல ஒதுக்குபுறமா இருந்த டீ கடைக்கு போச்சி ... எங்கப்பா என்ன வண்டியிலேயே இருக்க சொல்லிட்டு டீ கடைக்குள்ள போனாறு ... அங்க கரை வேட்டி கட்டுன நாலு பேரு எங்கப்பாவுக்கு டீயும் நாலு வடையும் வாங்கி கொடுத்தாணுக , கூட வந்த எனக்கும் ஒரு டீ , ரெண்டு வடை கிடச்சது ... எங்க கூட வந்த எங்க பெரியப்பா அப்படியே கடைக்கு பின்னாடி பெரிய தோட்டம் இருந்தது அதுக்குள்ள போய்ட்டாறு .. ஒரு பத்து நிமிஷம் கழிச்சி எங்க பெரியப்பா வந்தாறு , கிட்ட போனா அவரு வாயில இருந்து சாராய நெடி .. நான் எங்கப்பாகிட்ட கேட்டேன் “ஏம்ப்பா வீட்டுல இருந்து வண்டியில கூப்பிட்டு வந்து ,ஓசியில டீ வடை எல்லாம் வாங்கி தாரணுக?” அவரு “தேர்தல எம்ஜிஆர் ஜெயிக்கணும்னா , நிறைய பேரு ரெட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடணும் , அதான் எல்லாருக்கும் டீ வடை வாங்கி கொடுத்து ரெட்டை இலைக்கு ஓட்டு போட வைக்கிறாணுக” அப்படின்னு ,, அப்போ உதைய சூரியனுக்கு யாருமே ஓட்டு போட மாட்டாங்களேன்னு அப்பாவியா நான் கேட்டேன் .. அதுக்கும் இப்படி நாலு பேரு டீ வடை வாங்கி கொடுத்துக்கிட்டு இருப்பானுகடான்னு சொன்னாரு ... இப்படி கேவலம் டீக்கும் வடைக்கும் எங்க அப்பங்க எல்லாம் அந்த காலத்துல ஓட்ட அடமானம் வச்சிக்கிட்டு இருந்தாணுக... ஆனா இன்னைக்கு நிலமை அப்படியா? என்னோட ஒரு ஓட்டுக்கு இன்னைக்கு மதிப்பு என்ன தெரியுமா? ஒரு டிவி , ஒரு காஸ் அடுப்பு , 3000 பணம், ரெண்டு கிராம் தங்கம் அது மட்டும் இல்லாம மிக்ஸி கிரைண்டர் , 3ஜி மொபைல் இதெல்லாம் வந்துகிட்டு இருக்காம்.... எப்பூடி???? இந்த மாபெரும் மாற்றதுக்கு யார் காரணம்? இந்த தேர்தல் கமிசனா? இல்லை ஊழல் ஊழல்னு தெனமும் கூப்பாடு போட்டுகிட்டு இருக்குற சுப்ரீம் கோர்ட்டா? எங்க கலைஞர் அய்யாயா..... எங்க அய்யாதான் காரணம்....
இப்படி ஒரே தலைமுறையில இவ்வளவு பெரிய புரட்சிய செஞ்ச அவரையே பொலம்ப வைக்கிறாணுக இந்த தேர்தல் கமிஷன் பன்னாடைக... அவரு எங்கள மாதிரி வணிகர்கள் ரொம்ப கஷ்டபடக்கூடாதுன்னு எவ்வளவு அக்கறையா பேசுராறு? இந்த நல்ல மனசு யாருக்குயா வரும்? இத நம்ம தோஸ்து ஒருத்தங்கிட்ட சொன்னேன் ,, அவன் இன்னா சொல்லுறானா ... “யோ கூமுட்ட... பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டுளையும் ஆட்டுறாராறு உங்க தலைவரு... ஊரு உலகத்துல இவரு மட்டுமா கட்சி நடத்துராறு ... மத்தவங்க எல்லாம் சும்மா இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் வலிக்கிது? இப்படி அறிக்கை விட்டே எங்கப்பன் பரண்ல இல்லைன்னு இவரே ஒளரிக்கிட்டு இருக்காரு... வணிகர்கள் மேல அக்கறை உண்மையிலேயே இவருக்கு இருந்துச்சுனா , மின்சாரம் அரைகுறையா கொடுக்க மாட்டாறு , பெட்ரோல் விலைய தாறுமாறா ஏத்தி விட்டிருக்க மாட்டாறு , விலைவாசி இப்படி செவ்வாய் கிரகத்த தொட்டு இருக்காது ... அதை எல்லாம் பண்ணாம ஏதோ இந்த கெடுபிடினால உங்க வியாபாராமே நொடுஞ்சி போறது மாதிரி இதுக்கு எதிரா அறிக்கை விட்டிருக்காரே இதுக்கு காரணம் நீ நெனைக்கிற மாதிரி உன் மேல இருக்கிற அக்கறை இல்லடா? “ மக்கள் ஆப்பு வைக்க ரெடியா இருந்தா காச கொடுத்து ஆஃப் பண்ணிடலாம் , அந்த காசுக்கே ஆப்பு வந்தா?” இதுதான் அவரு இப்படி பம்மிக்கிட்டு அறிக்கை விட காரணம் ....
இவன் இப்படி சொன்னதும் எனக்கு பகீர்னுது ... “பின்ன இவணுக இப்படி பயங்கர கெடுபிடியா இருந்தா மறுபடியும் நாங்க ஒரு டீக்கும் , ஓட்ட வடைக்கும் , ஒரு டம்ளர் சாராயத்துக்கும் எங்க வோட்ட அடமானம் வைக்க வேண்டியதுதானா?” தமிழனின் தலைவிதி மாறவே மாறாதா?
எங்கள மாதிரி ஆளுங்க இப்படி கஷ்டபடவேண்டாமேன்னுதான் நம்ம ஹை கோர்ட் புண்ணியவானுங்க தேர்தல் கமிஷனுக்கு கடிவாளம் போட்டுட்டாணுக... ஆமா சும்மா சும்மா ஆதாரம் இல்லாமல் எந்த வண்டியையும் நிப்பாட்டி சோதனை பண்ண கூடாதாம்.... இத கேட்ட பின்னாடிதான் எனக்கு நிம்மதியே.... இனி அய்யா தைரியமா மினி பஸ்லயும் , டிராவல்ஸ் வண்டிலேயும் , சரக்கு லாரிலயும் பண மூட்டையை ஊர் ஊருக்கு அனுப்பி வைக்கலாம்.. இனி எங்க ஊருக்கு வர்ற மினி பஸ்ல டெய்லி சரக்கு பாட்டிலும் , முனியாண்டி கடை பிரியாணியும் வந்து சேந்திரும்.... தேர்தல் வரைக்கும் ஜாலிதான்...
ஏண்ணே நமக்கு இந்த வேண்டாத வேலை
இருளை விளக்க வந்த விடிவெள்ளியாய் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் தோன்றி இருக்கிறது ... அந்த சுயமரியாதையின் மொத்த உருவம் , தேவர் குல சிங்கம் தமிழ்நாடு முழுவதும் தனித்து போட்டி போட போகிறதாம் .... நம் முழு ஆதரவையும் கொடுத்து அவரை தாறு மாறாக வெற்றி பெற செய்தால் மட்டுமே தமிழ் நாடு சுபிட்சம் பெரும் ....
அண்ணே 234 தொகுதி இருக்குற தம்ழ்நாட்டுல வெறும் நாப்பது தொகுதியில மட்டும் போட்டி போடுறீங்களே , அதுக்கு காரணம் தமிழ்நாட்டுல மொத்தமே நாப்பது பேருதான்(உங்களையும் சேத்து) உங்க கட்சியில இருக்காணுக அப்படின்னு எதிர்க்கட்சிகாரங்க ஏளனமா பேசுராங்க... எனக்கு என்ன டவுட்னா உங்களையும் நம்புறதுக்கு நாப்பது பேர் இருக்குராணுகளா?
காலிறுதி யாருக்கு இறுதி?
இன்னைக்கு இந்தியாவுக்கு வாழ்வா சாவா போட்டி ... நமக்கு சங்கு ஊதுறதுக்குன்னே காலிறுதில ஆஸ்ட்ரேலியாகூட மோத வைக்கிறாணுக ... போண்டிங்க் வேற இன்றோடு டெண்டுல்கரின் உலக கோப்பை கனவுக்கு முடிவு கட்டுவோம்னு தெனாவெட்டா அறிக்கை விடுராறு .... அண்ணே நாங்க எல்லாம் சுனாமிலேயே சிக்சர் அடிக்கிறவணுக நீங்க எல்லாம் ஜூஜூப்பி ... இன்னும் இருபது வருஷம் கழிச்சும் உங்க பையன் இதே மாதிரி பேட்டி கொடுத்துக்கிட்டு இருப்பான் ... வயசானவுடனே டீம விட்டு தூக்குறதுக்கு தெண்டுல்கர் என்ன ஆஸ்ட்ரேலியன் டீம்லயா விளையாடுராறு .... இது இந்தியன் டீம் ... 2003ல ஒரு மாட்ச் ஜெயிக்க வச்ச ஆஷிஷ் நெஹ்ராவ அதுக்காகவே பத்து வருஷமா டீம்ல வச்சிருக்கோம் ... டெண்டுல்கர அவ்வளவு சீக்கிரம் விட்டிடுவோமா? ஆனா ஒண்ணு உறுதி இன்னைக்கு நீங்க தோத்தா இதுதான் உங்களுக்கு கடைசி மாட்ச் , ... பாத்து சூதானமா விளையாடுங்க ராசா ....
Sunday, March 13, 2011
ராஜாவின் பார்வை - வாழ்வியலும் சில புஸ்தகங்களும்....
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஏதோ ஒரு கணத்தில் ஒரு மூன்றாவது மனிதன் எடுக்கும் முடிவினால்தான் பெரும்பாலும் அமைகிறது ... என் அப்பா என் அம்மாவை திருமணம் செய்வதர்க்கு முன்னாள் அவருக்கு வேறு ஒரு பெண் பார்பதர்க்காய் மதுரையை அடுத்த மேலூருக்கு சென்றுக்கிறார் ... அந்த வயதில் அவர் அப்படியே இந்த வயதில் நான் ... தாடியை ஒரு ஆண்மையின் அடையாளமாக கருதி எப்பொழுதும் அதை தன்னுடனே வைத்திருப்பாராம் ... பெண் பார்க்க சென்ற பொழுதும் அவர் அண்ணன் தம்பிகள் எவ்வளவு கெஞ்சியும் மிரட்டியும் அவர் தன் தாடியை எடுக்கவில்லை ... எனக்கு என்னை பிடித்த பெண் மட்டும் தேவை இல்லை அவளுக்கு என் தாடியும் பிடித்திருக்க வேண்டும் என்பது அவர் எண்ணம் ... அவருக்கு அந்த வயதில் தாடியின் மேல் அவ்வளவு பாசம் ... அவர் எண்ணியதை போலவே அந்த பெண்ணுக்கு இவரை பிடித்து விட்டதாம் ... குறிப்பாய் தாடி வைத்த என் அப்பாவை .... ஆனால் பெண்ணின் வீட்டார் பெண்ணின் அண்ணன் வியாபார விஷயமாக பர்மா சென்றிப்பதாகவும் அவர் ஒருவாரத்தில் வந்து விடுவதாகவும் அவர் வந்து மாப்பிள்ளையை பார்த்து அவருக்கும் பிடித்திருந்தாள் மேற்கொண்டு பேசலாம் என்றும் சொல்லி இருக்கிறார்கள் .. என் அப்பாவும் தன் தாடியை பிடித்த ஒரு பெண் கிடைத்த சந்தோசத்தில் அதர்க்கு சரி என்று சொல்லி வந்து விட்டார் ....
ஒரு வாரத்தில் சரியாக அந்த பெண்ணின் அண்ணன் வந்து பார்த்திருக்கிறார் ... அதன் பின்னர் ஒரு வாரம் கழித்தும் எந்த பதிலும் பெண் வீட்டாரிடம் இருந்து வரவில்லை ... பிறகு என் அப்பா புரோக்கர்ரிடம் கேட்டு தெரிந்துகொண்டாராம் , அந்த ஆளுக்கு என் அப்பாவின் தாடி பிடிக்கவில்லை , என் அப்பாவை சுத்த பத்தமில்லாத ஆள் என்று நினைத்துக்கொண்டு வேணாம் என்று சொல்லி விட்டானாம் ... தாடியை எடுக்கமாட்டேன் என்ற என் அப்பாவின் பிடிவாதமும் , தாடி இருந்தால் அவன் சுத்தபத்தமில்லாதவன் என்ற அந்த மூணாவது மனிதனின் எண்ணமும்தான் இன்று நான் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்க காரணம் ... இந்த இருவரில் ஒருவர் மாறி இருந்திருந்தாலும் நான் இன்று இங்கு இல்லை ... ஒருவேளை இருவரில் ஒருவர் மாறி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நான் எங்கு இருந்திருப்பேன்? இருந்திருப்பேனா இல்லையா? இருந்திருந்தால் இதே உருவம் எனக்கு இருந்திருக்குமா? இல்லை வேறு உருவத்தில் இருந்திருப்பேனா? என்னுடைய குணநலங்கள் மாறி இருந்திருக்குமா? அப்படி என்றாள் நான் என்ற எனக்கான அடையாளம் எது? இந்த கேள்வி என் மூளையின் ஒவ்வொரு செல்களிலும் நுழைந்து அதர்க்கான விடையை தேடி கிடைக்காமல் சம்பட்டியால் அடித்த தலைவலியாய் மூளையோடு உறைந்து போகிறது.... புரியாத புதிர்தானே வாழ்க்கை ....
சென்ற வாரம் இரண்டு புத்தகங்களை படிக்க நேர்ந்தது... இரண்டுமே சினிமா சம்பந்தபட்டவர்கள் எழுதிய பிளாஷ்பேக் புத்தகங்கள் .. ஒன்று பாலாவின் இவன்தான் பாலா இன்னொன்று பிரகாஷ்ராஜின் சொலுவதெல்லாம் உண்மை .. இரண்டும் ஆனந்த விகடனில் தொடராக வந்தது ... இந்த இரண்டு புத்தகங்களிலும் எனக்கு பிடித்த விஷயம் எதர்க்கும் அஞ்சாமல் உள்ளதை உள்ளபடி கூறிய அவர்களின் நேர்மை .... குறிப்பாய் பாலா .. எட்டாம் வகுப்பில் டோப்பு அடித்தது , பத்தாம் வகுப்பிலேயே கொலை செய்ய பிளான் பண்ணியது , இன்னும் ஒரு வருடம்கூட உயிருடன் இருக்கமாட்டான் என்று அவர் குடும்பத்தினரே என்னும் அளவுக்கு போதையில் ஊறி போயி இருந்தது என்று தன்னுடய கடந்த காலத்தை எதர்க்கும் அஞ்சாமல் அப்படியே புட்டு புட்டு வைத்திருக்கிறார் ...
சமூகத்தில் வெற்றி பெற்ற எவருமே தன்னை பற்றி சிறு வயதில்இருந்தே கடுமையாக உழைப்பவன் என்று பொய்யாக ஒரு பிம்பத்தை உருவாக்கவே நினைப்பார்கள் ... என்னை போல நீங்கள் ஆவது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம் எல்லாராலும் அது முடியாது என்று ஏதோ கடவுள் விசேசமாக அவர்களை மட்டும் உலகிர்க்கு ஆசீர்வதித்து அனுப்பியதை போல அள்ளி விடுவார்கள் .. ஆனால் பாலா சொல்லியதோ வேறு : “நானே இவ்வளவு உயரத்தை தொடும் போது நீங்கள் எல்லாம் தங்கம் ... எதை வேண்டுமானாலும் அடையலாம்”… ஏர்வாடியில் வைத்து அவரின் நண்பன் கூறினானாம் “ பாலா நீயும் இங்க இப்படி ஒரு பைத்தியமா இருந்திருக்க வேண்டியவன் ஜஸ்ட் எஸ்கேப் “ என்று .படித்த எனக்கு கிறுகிறுத்தது .....
சிறு வயது அனுபவங்களை பெரிய ஆள் ஆனவுடன் மரக்கின்ற அல்லது மறந்ததை போல நடிக்கின்ற ஆட்களுக்கு மத்தியில் அந்த அனுபவங்களை காலம் காலமாய் தன்னோடு சுமந்து செல்கிற பாலா எனக்கு தெரிந்து இப்போதைய தமிழ் சினிமாவின் உண்மையான பிதாமகன் .... அந்த அனுபவங்கள்தான் அவரின் மூன்றாவது கண் அல்லது ஏழாவது புத்தி என்று எண்ணுகிறேன் ....
ரோட்டில் போகும் பிச்சைக்காரனை பார்க்கும் போது முதலில் பரிதாபம் எழும் , இரண்டாவது முறை காணும் போது எரிச்சல் எழும் , அடுத்த தடவை அந்த எரிச்சல் கோபமாய் மாறும் ... பிச்சைக்காரர்களிடம் நான் காட்டிய உணர்வு சுழற்சியை மொத்தமாய் மாற்றி போட்டது பாலாவின் அந்த ஏழாவது அறிவு ... இன்று ஏதாவது ஒரு பிச்சைக்காரனை பார்க்கும் போது அவர்களின் வாழ்க்கையின் பின்னால் இருக்கும் பயங்கரம் என்னை நடுநடுங்க வைக்கிறது .என்றாள் காரணம் பாலாவின் அனுபவங்களும் அதை திரையில் அப்படியே கொண்டு வந்த அவரின் திறமையும்தான் ... உலக படம் எடுக்கிறேன் என்று நம்மை வாட்டி வதைக்கும் அறிவு ஜீவி இயக்குனர்கள் பாலாவிடம் கற்று கொள்ள நிறைய இருக்கிறது ...
பிரகாஷ்ராஜின் சொல்லுவதெல்லாம் உண்மை தலைப்பை போலவே உள்ளே இருப்பதெல்லாம் உண்மை ... தொழியோடு இரவில் லாட்ஜில் இருந்தது , வீட்டு வேலை பார்க்க வந்த சித்தாலுடன் ஒரு மாதம் குடும்பம் நடத்தியது , ஷூட்டிங் ஸ்பாட்ட்டில் நடிகையுடன் ஒவ்வொருவராக உடலுறவு கொண்டது என்று தன் காமத்தையும் மறைக்காமல் பந்தியில் பரிமாறிய தைரியம் எல்லாருக்கும் அமையாது ... இந்த புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு குறும்படம் பார்த்த உணர்வை கொடுத்தது ... காதல் , அம்மா பாசம் , காமம் , பொறாமை , இழப்பு , துரோகம், ஈகோ என்று எல்லாவற்றையும் பற்றி ஒரு ஞானியை போல தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்தே நமக்கு விளக்கி இருப்பார் .... இந்த புஸ்தகம் படித்த பின்னர் எனக்கு பிரகாஷ்ராஜின் மேல் இருந்த மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது ... ஆனால் இதை படித்த பின்னர் தன் மனைவியின் மீது இவ்வளவு பாசத்தை பொழிந்த ஒரு மனிதன் எவ்வாறு அவரை விவாகரத்து செய்தான் என்று எனக்கு விளங்கவே இல்லை… the most dynamic component in the world is human’s mind... இந்த இரண்டு புஸ்தகங்களும் எனக்கு சொல்லி தந்தது அதுதான் ....
இந்த இரண்டு புஸ்தகங்களும் நண்பர் குண்டு ராஜகோபால் அவர்களின் வலைத்தளத்தில் இருந்துதான் தரவிறக்கம் செய்து பிடித்தேன் ... சிறந்த புஸ்தகங்களை தேடி தேடி தன் தளத்தில் போதும் நண்பர் குண்டுவிர்க்கு நன்றிகளும் வாழ்ததுக்களும்... தொடரட்டும் நண்பா உங்கள் பணி ... அவரின் தளத்தில் இருந்து சுஜாதாவின் பல நூல்களை தரவிறக்கம் செய்துள்ளேன் .. இனிதான் படிக்க வேண்டும் ... ஆனால் எனக்கு சுஜாதா மீது அவ்வளவு ஈர்ப்பு கிடையாது .. அவர் ஒரு படைப்பாளி என்று ஏற்றுக்கொள்ள எனக்கு முடியவில்லை ..... என்னை பொறுத்த வரை அவர் ஒரு எழுத்துலக விரிவுரையாளர் அவ்வளவே... மேலும் அவர் வாழ்க்கையோடு இயந்த கதைகளோ இல்லை படைப்புகளையோ இதுவரை கொடுத்ததில்லை ... பத்தினியின் கணவனுக்கு மட்டுமே கடவுள் தெரிவார் என்ற லாஜிக்தான் சுஜாதாவின் பெரிய வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன் .... ஆனால் எங்கெங்கோ படித்த பல விசயங்களை கோர்வையாக நமக்கு புரியும்படி எளிமையாக கொடுப்பதில் அவருக்கு இணை அவர்தான் ... மற்றபடி மனதை விட்டு நீங்காத படைப்புகளை அவரால் கடைசி வரை தர முடியவில்லை.... காரணம் நாம் வாழ்வியலோடு அவருக்கு இருந்த அன்னியதன்மை .... திரை உலகில் கூட அவரின் இந்த அன்னியதன்மை தெளிவாக ஒவ்வொரு படைப்பிலும் தெரியும் ... விக்ரமும் சரி எந்திரனும் சரி என் மனதில் ஒட்டாமல் போனதர்க்கு காரணம் அந்த யதார்த்தமின்மைதான் ... சுஜாதா சிறந்த பொழுதுபோக்குவாதி ஆனால் சிறந்த படைப்பாளி அல்ல ...
Tuesday, March 1, 2011
உலகக்கோப்பை- 2011 இதுவரை
பத்தாவது கிரிக்கெட் உலக கோப்பை விறுவிறுப்பாக நடந்து வருகிறது .... இதுவரைக்கும் நடந்த முக்கியமான போட்டிகளின் சின்ன அலசல்தான் இந்த பதிவு ...
முதலில்
இங்கிலாந்து நெதர்லாந்து :
எல்லா உலக கோப்பையிலும் ஒரு அதிர்ச்சிகரமான , யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் கண்டிப்பாக நடக்கும் .. ஏதாவது ஒரு குட்டி அணி வலிமை வாய்ந்த பெரிய அணியை போட்டு தள்ளி ஆப்பு அடிக்கும் ... 2003 இல் கென்யா , 2007 இல் பங்களாதேஷ் இந்த வேளையை கச்சிதமாக செய்தன ... இந்த உலக கோப்பையில் அப்படி ஒரு ஆட்டமாக அமைந்திருக்க வேண்டிய போட்டி இது ... போட்டி தொடங்கும் முன்னர் இங்கிலாந்து எளிதாக வெற்றி பெரும் என்றுதான் அனைவரும் நினைத்திருப்பார்கள் ஆனால் நெதர்லாந்து அணியின் கச்சிதமான ஆட்டம் ஒரு இறுதி போட்டிக்கு உரிய பரபரப்பை ஆட்டத்தில் கொண்டு வந்து விட்டது ...இங்கிலாந்து அணி இன்னொரு இந்தியா என்றுதான் சொல்ல வேண்டும் ... பேட்டிங் பலமாக இருந்தாலும் பந்து வீச்சு அணியை அதலபாதாளத்தில் தள்ளி விடுகிறது ... நெதர்லாந்து அணி அவர்கள் பந்து வீச்சை நொறுக்கி தள்ளி பெரிய இலக்கை எட்ட இங்கிலாந்து அணிக்கு பெரிய தலைவலியாக மாறிவிட்டது போட்டி ... ஆனால் அவர்கள் பேட்டிங் அவர்களுக்கு கைகொடுத்தது .. இந்திய ஆடுகளத்தில் எப்படி ஆடவேண்டும் என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள் ... எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் ஒன்று இரண்டாக தட்டி கிடைக்கும் வாய்ப்பில் ஃபோர் சிக்ஸ் என்று அடித்து எதிர் அணிக்கு விக்கெட் எடுக்கும் வாய்ப்பே கொடுக்காமல் விளையாடி ஒரு வழியாக ஆட்டத்தை ஜெயித்து விட்டார்கள் ... ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து வெற்றி பெற்று இருந்தாலும் மாரல் வெற்றி என்னவோ நெதர்லாந்துக்குதான் .. அவர்கள் தன்னம்பிக்கை இந்த ஆட்டத்தின் மூலம் எக்குதப்பாக எகிறி இருக்கும் .. கண்டிப்பாக எதிர்வரும் போட்டிகளில் ஏதாவது ஷாக் டிரீட்மெண்ட் எந்த பெரிய அணிக்காவது கிடைக்கலாம் இவர்கள் மூலம் ... எனக்கு என்ன பயம் என்றாள் அது இந்தியா வாக இருந்து விட கூடாது என்பதுதான் ... நம்ம பௌலிங் வேற மகா மட்டமா இருக்கு….
இந்தியா – இங்கிலாந்து:
இந்த உலக கோப்பையில் இதுவரைக்கும் நடந்த போட்டிகளில் ரசிகர்களை கடைசி வரை சீட்டின் நுனியில் அமர வைத்து பார்க்க வைத்த ஒரே போட்டி இதுதான் ...அன்று இரவு இந்தியா முழுவதும் அனைவருக்கும் இதய துடிப்பு எகிறியிருக்கும் ... அன்று என் இதயம் துடித்த சத்தம் எனக்கே கேட்டது ஒரு வித்தியாசமான அனுபவம் ... பரிட்சை ரிசல்ட் நெட்டில் பார்ப்பதை போல , கலந்து கொண்ட நேர்முக தேர்வின் ரிசல்ட் அறிவிக்கபடுவதை கேட்பதை போல பரபரப்பாக இருந்தது அந்த ஆட்டம் ... நான் முதலிலேயே சொல்லியதை போல இங்கிலாந்தும் இந்தியாவும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் .. பேட்டிங்கில் தூள் கிளப்புகிறார்கள் ஆனால் பந்து வீச்சில் கோட்டை விட்டு விடுகிறார்கள் ... இந்தியாவை பொறுத்தவரை பேட்டிங் கவலையே இல்லை .. சேவாக் அடிக்கிறார் அவர் போனால் சச்சின் , அவரும் கைகொடுக்கவில்லையா கம்பீர் , ஒரு வேலை அவரும் காலை வாரினால் கோலி , யுவராஜ் தோனி , பதான் என்று பெரும் படையே இருக்கிறது ... இவ்வளவு பெரிய பேட்டிங் வரிசையை வைத்து கொண்டு அதுவும் சச்சின் ஆரம்பத்தில் பெரிய அடித்தலம் அமைத்து தந்தும் நம்மவர்கள் எடுத்தது 338 ... கடைசி நான்கு ஓவர்களில் பழைய இந்திய அணியை பார்க்க முடிந்தது ... இந்த ஆட்டத்தில் இந்தியா செய்த முதல் தவறு இது ... இன்னும் முப்பது ரன்கள் அதிகம் வந்து இருந்தால் மனதளவில் இங்கிலாந்து வீரர்களுக்கு பெரிய அழுத்தத்தை உண்டு பண்ணி இருக்கலாம் ... 338 என்பது பெரிய இலக்குதான் என்றாலும் அடிக்கவே முடியாத இலக்கு இல்லை முயன்றால் அடிக்கலாம் , இதுதான் இங்கிலாந்து அணியினர்க்கு ஒரு தெம்பை கொடுத்தது ... அதுவும் இந்திய ஆடுகளங்களில் எவ்வளவு பெரிய இலக்கையும் எட்டலாம் , ஆனால் ஒரே ஒரு விஷயம் ஸ்பின் பந்து வீச்சை சமாளிக்க வேண்டும் .... அவர்கள் அதை அருமையாக செய்தார்கள் .. பந்து வானத்தில் பறக்கவே இல்லை .. ஆனால் தரையில் உருண்டு கொண்டே இருந்தது ... அயர்லாந்து அணிக்கு எதிராக எப்படி விளையாடினார்களோ அதே போல எதிரணிக்கு அவ்வளவாக வாய்ப்பே கொடுக்காமல் அதே நேரம் தேவையான ரன் விகிதமும் அதிகரித்து விடாமல் safety play செய்தார்கள் .. அவர்களை மிரட்டும் அளவுக்கும் இந்திய அணியின் பந்து வீச்சு அமையவில்லை ... ஒரு கட்டத்தில் இந்திய பௌலிங் படை ஸ்டிராஸ் முன்னாள் சரணடைந்து விட்டது ... ஸ்டிராஸ் தன்னுடய வாழ்நாள் ஆட்டத்தை அன்று ஆடி விட்டார் .. என்னை பொறுத்தவரை அன்று சச்சினை விட மிக சிறந்த ஆட்டம் ஸ்டிராஸ்சினுடையது... ஆனால் கடைசியில் கேப்டன் தோனிக்கு எப்பொழுதும் ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் ஒரே பௌலர் ஜாகீர் கான் தன் ஒரே ஓவெரிலேயே ஆட்டத்தை எதிர்திசையில் மாற்றி விட்டார் ... அந்த ஓவரில் இங்கிலாந்து பக்கம் விழுந்து கொண்டிருந்த பூனை மீண்டும் மதில் மேல் ஏறி விட்டது ... அடுத்து அடுத்து வந்த ஓவெர்களில் விக்கெட் மளமளவென சரிய பூனை இந்தியாவின் பக்கம் விழ ஆரம்பித்தது ... நமக்குதான் பூனை என்று நினைத்திருக்க கடைசி இரண்டு ஓவெர்களில் அடிக்கபட்ட சிக்ஸெர்கள் மீண்டும் பூனையை மதில் மேல் ஏற்றிவிட , நல்ல வேலை கடைசி வரை அது அப்படியே யார்பக்கமும் விழாமல் நின்று விட்டது ... எனக்கு இந்த ஆட்டத்தை பார்த்த பொழுது ஒரே ஒரு விசயம்தான் மனதில் தோன்றியது “we miss you kumble “… அவரின் இடம் அணியில் இன்னமும் நிரப்பபடாமலேயே இருக்கிறது” .... இப்பொழுது இருக்கும் நிலமையில் இந்தியா 350 ரன்னுக்கு மேல் அடித்தாள் மட்டுமே உறுதியாக சொல்ல முடியும் வென்று விடலாம் என்று ... இல்லை என்றாள் கஷ்டம்தான் போல ...
இந்த இரண்டு அணிகளுமே சம பலத்துடன் இருக்கிறார்கள் .. இவர்களில் யாராவது ஒருவர் கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது .. ஆனால் அது யார் என்பதை இனி வரும் ஆட்டங்களில் யார் தன் பௌலிங் டிபார்ட்மெண்ட்டை பலபடுத்துகிறார்கள் என்பதை பொறுத்துதான் இருக்கிறது .. பெங்களூர் இவர்களுக்கு கற்று கொடுத்திருக்கும் பாடம் பந்து வீச்சை பலபடுத்தினால் நீங்கள் கோப்பையை வெல்லலாம் என்பதே .. பார்ப்போம் எந்த அணி அதை சரியாக புரிந்து கொண்டு தன்னை சரிபடுத்தி கொள்கிறது என்று..
பாகிஸ்தான் இலங்கை :
இந்த உலககோப்பையில் திடீரென ஃபார்முக்கு வந்திருக்கும் அணி ... அஃப்ரீடி நாங்கள் கண்டிப்பாக இறுதி போட்டிக்கு நுழைவோம் என்று சொல்லி இருக்கிறார் ... அதுவும் நடக்கலாம் காரணம் அவர்களின் பௌலிங் ... வேகத்தில் அக்தர் மிரட்ட , சுழலில் அஃப்ரீடி கலக்குகிறார் ... இதுவரை நடந்த ஆட்டங்களை வைத்து பார்க்கும் போது பௌலிங் மிரட்டலாக இருப்பது இவர்களுக்குதான்... இது இப்படியே தொடர்ந்தால் அஃப்ரீடி சொல்லியதை போல இறுதி வரை கலக்கலாம் ... இலங்கை மைதானத்திலேயே அவர்களை தோற்கடித்ததில் மனதளவில் பெரிய உற்சாகத்தில் இருப்பார்கள் ...
ஆனால் இவர்கள் இறுதி போட்டிக்கு வந்தால் ஒரு பெரிய சிக்கல் காத்து கொண்டு இருக்கிறது ... அது போட்டி நடப்பது மும்பையில் ... சிவசேனா இவர்களை உள்ளேயே விடமாட்டோம் என்று மிரட்டி கொண்டு இருக்கிறது ... எனவே இவர்கள் ஒருவேளை நன்றாக விளையாடினாலும் ஐசிசி ஏதாவது செய்து இவர்களை இறுதி போட்டிக்கு வர விடாமல் செய்து விடும் என்றே நினைக்கிறேன்....
இவர்களை தவிர்த்து ஆஸ்ட்ரேலியா சௌத் ஆபிரிக்கா என்று இரண்டு பெரிய அணிகள் இருக்கிறார்கள் ... இவர்கள் இன்னமும் ஆட்டத்தை (பெரிய அணிகளுடன் ) ஆரம்பிக்கவே இல்லை , இவர்களும் ஆரம்பித்தாள் போட்டி இன்னமும் சூடு பிடிக்க ஆரம்பிக்கும் .... நம் ஒவ்வொருவரின் ஆசையும் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் எனபதே ... ஆனால் இங்கிலாந்து உடனான ஆட்டத்தின் பின் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை குறைந்து விட்டது ... ஐயா தோனி ஏதாவது பண்ணி பௌலிங் டிபார்ட்மெண்ட்ட டெவலப் பண்ணுயா… இத விட்டா வேற நல்ல வாய்ப்பு நமக்கு திரும்ப கெடைக்காது ...
Subscribe to:
Posts (Atom)