
பாண்டிங்: சச்சின் கடந்த சில வருடங்களாய் ரன்களை மட்டுமே எடுத்து வருகிறார், அவரால் அணியை வெற்றி பெற செய்ய முடியாது....
இன்று தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை வாய் பேச்சில் சொல்லாமல் மட்டையின் மூலம் செய்து காட்டி விட்டார்...... எத்தன நாள் ஆச்சி இப்டி ஒரு அடிய பாத்து , இந்திய தோற்று இருந்தாலும் மனதளவில் வெற்றி சச்சினுக்குதான் , அந்த இரண்டு மணி நேரமும் என்னால் கண்களை மூட இயலவில்லை, ஒரு மணித்துளி மூடி இருந்தாலும் , அந்த இடைவெளியில் அருமையான shot ஒன்றை அடித்து விடுகிறார், கடவுள்கூட நேற்று அவர் வேலைகளையெல்லாம் விட்டு விட்டு சச்சினின் ஆட்டத்தைத்தான் பார்த்து ரசித்திருப்பார்.... பாண்டிங் கூட கண்டிப்பாய் முதலில் கடுப்பாகி இருந்தாலும் பின்னர் ரசிக்க ஆரம்பித்து இருப்பார்..... ஆஸ்திரேலியர்களே கொண்டாடி குதூகளிதிருப்பார்கள், கிரிகெட்டில் இப்டி ஒரு ஆட்டம் காண்பது அரிது என்பதால்....
நான் கிரிகெட் ரசிகனாய் ஆனது சச்சினால்தான், 93 ம் வருடம் என்று நினைக்கிறன், அது பாக்கிஸ்தானுக்கு எதிரான ஆட்டம், இம்ரான்கான் பந்து வீசுகிறார். முதல் பந்து அவரின் தலையை பதம் பார்க்கிறது, இரண்டாவது அவரின் நெஞ்சை உரசி செல்கிறது , மூன்றாவது அவரால் அடிக்க முடியாத உயரத்தில் செல்கிறது, பௌலேர் அவரிடம் ஏதோ கிண்டலாய் சொல்கிறார் , இவரும் சிரித்து கொண்டே ஒன்றும் சொல்லாமல் போகிறார், அடுத்த பந்து வழக்கம் போல் எகிறி வர துள்ளி குதித்து அடிக்கிறார், எல்லை கோட்டை தொட்டு விடுகிறது. பௌலேர் இப்பொழுது அவரை முறைக்க, இவர் ஒன்றும் சொல்ல வில்லை, அடுத்த இரண்டு பந்துகளும் எல்லை கோட்டை நோக்கி அடிக்க படுகின்றன.... அப்பொழுது சிறு வயது என்பதால் பாக்கிஸ்தான் காரனை பரம எதிரியாய் எண்ணிய வயது. ஒரு பாக்கிஸ்தான்காரனை கதற வைத்த சச்சின் அப்பொழுது எனக்கு ஹீரோவாய் தெரிந்தார்.அன்று முதல் கிரிகெட் tv யில் வந்தால் சச்சின் out ஆகும் வரைக்கும் பார்ப்பேன், பின் எழுந்து போய் விடுவேன் (நம்ம பசங்க T20 உலக கோப்பையை வாங்குற வரை).
சச்சின் தொடக்க ஆட்டகாரராய் நிகழ்த்திய சாதனைகள் எத்தனை... ஸ்ரீகாந்த், சித்து, கங்குலி, சேவாக் என்று யாருடன் இணை போட்டாலும் இவரின் அடி என்றும் மாறியதில்லை... எத்தனை முறை வீழ்ந்தாலும் வீழும் போதெல்லாம் அதை விட பல மடங்கு எழுந்து நிற்கும் அதிசய பிறவி, நான் 6 வயது சிறுவனாய் தொடக்க பள்ளிக்கூடத்துக்கு போன காலத்திலும் இவரை ரசித்திருக்கிறேன், 15 வயதில் மீசை அரும்பிய பருவத்திலும் இவரின் ஆட்டம் என்னை கவர்திலுதிருக்கிரது, கல்லூரி காலங்களிலும் எத்தனை முறை இவரின் ஆட்டம் என் வகுப்பை மட்டம் போட வைத்திருக்கிறது, கல்லூரி முடித்து வேலை தேடி அலைந்த காலத்திலும் இவரின் ஆட்டம் பல நேரங்களில் பசியை மறக்க வைத்திருக்கிறது, பின் M.E., படித்த கால கட்டத்திலும் இவர் திறமை குறையாமல் ஆடி கொண்டு இருந்தார் , இன்று இல்லை நேற்றும் காட்டி விட்டார் தன் ருத்ரதாண்டவத்தை. இப்படி இருபது ஆண்டு காலமாய் என்னை சந்தோஷ படுத்திய சச்சினுக்கு இந்த சாதரண ரசிகனின் கோடன கோடி நன்றிகள், இன்னும் இந்த சந்தோஷ நிமிடங்கள் எல்லாம் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்குதான் என்று என்னும் போது கண்டிப்பாய் வருத்தம் வரத்தான் செய்கிறது, b'coz some things are can not be created again by GOD, sachin is on the top of this list....