பூமியே சுற்றும்
நிலவு நீ....
உன் அழகை
இரவல் வாங்கித்தான்
சூரியனும் பிரகாசிகிறதோ....
நீ சோம்பல் முறித்தால்
சோம்பல் குறைகிறதோ
இல்லையோ...
உன் அழகு கூடுகிறது...
கேளுங்கள் தரப்படும்
என்ற கடவுளிடம்
என்ன கேட்டு
வங்கி கொண்டாய்
இவ்வளவு அழகை....
நீ வாரம்
தவறாமல் செல்லும்
ஆலயத்திற்கு
நானும் வாரம் தவறாமல்
வருகிறேன்...
உன்னை பார்க்க அல்ல...
கடவுளை பார்க்கும் ஆசையோடு....
நீ கண்மூடி ஜெபிக்கும்
அழகை பார்க்க
கடவுளும் ஒரு நாள்
கட்டாயம் வருவார்...