Followers

Copyright

QRCode
Showing posts with label தளபதி. Show all posts
Showing posts with label தளபதி. Show all posts

Friday, October 28, 2011

வேலாயுதம் - ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கே


முதலில் பத்து வருடங்களுக்கு முன்னாள் வந்த ஒரு தெலுங்கு  படத்தை இப்பொழுது தமிழில் எடுத்து தமிழனின் ரசனையை கேவலபடுத்தியதர்க்காக இயக்குனருக்கு ரசிகர்கள் சார்பில் கண்டனங்கள் .... ஷங்கர் 1990 இல் இருந்து 2004 வரை கசக்கி பிழிந்து சாறு எடுத்த ஒரு கதையை, அவரே இனி இது உதவாது  என்று 8 வருடங்களுக்கு முன்னரே தூக்கி  குப்பையில் போட்ட கதையை மீண்டும் தோண்டி  எடுத்திருக்கிறார்கள் .... குப்பையை தோண்டினால் வைரமா வரபோகிறது குப்பைதான் வந்திருக்கிறது .... கேப்டன் முதல் சியான் வரை பலரும் செய்த மக்களை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ வேலையை கொஞ்சம் கூட அச்சு பிசகாமல் இந்த படத்தின் ஹீரோவும் செய்கிறார் ... ஆனால்மக்களை ரசிக்க வைக்க  எட்டு வருடங்களுக்கு முன்னரே அந்நியனில் இதே மக்களை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ கதைக்கு multiple personality என்று ஒரு புத்தம் புது ஊறுகாய் தேவைப்பட்டது ஷங்கருக்கு  .... ஆனால் இவர்கள் டி ஆர்  காலத்து தங்கச்சி சென்டிமென்ட்டை தூசி தட்டி ஊறுகாய் ஆக்கியிருக்கிறார்கள் ... பாஸ் இந்த ஊசி போன ஊறுகாயை எத்தனை நாளைக்குதான் நாங்க சாப்பிடுறது ...

இந்த படத்தின் ஆக பெரிய பலவீனம் என்னவென்றால் கதை திரைகதை காட்சியமைப்புகள் , பாடல்கள் , என்று எதிலுமே புதுசாக எதுவும்  கிடையாது எல்லாமுமே யூகிக்க கூடியது என்பதுதான்... முதல் பாதியில் ஹீரோவும் அவர் தங்கையும் காமெடி பண்ணுகிறோம் என்று சொல்லி மொக்கை போடுவார்கள்.. தியேட்டரில்  இருந்த ஹீரோவின்  ரசிகர்களை தவிர வேறு யாரும் சிரிக்கவில்லை ... அந்த காமெடிக்கு  சிரித்து கொண்டிருந்த ஒரு  ரசிகனை அவருடைய நண்பர்களே ஏதோ வேற்று கிரக வாசியை பார்ப்பது போல பார்த்தார்கள் ... முதல்  பாதியில் கொஞ்சமேனும் ரசிக்க வைத்த விஷயம் சந்தானம் வரும்   சில காட்சிகள்  ... அதை தவிர்த்து பெரியதாக ஒன்றும் இல்லை  ...

இரண்டாம் பாதிதான் படத்தின் மிக பெரிய மொக்கை ....வழக்கம் போல மக்களை காப்பாற்றுகிறேன்  என்று படம் பார்க்கும் நம்மை சாகடிக்கிறார் ஹீரோ....  கொஞ்சம்கூட சுவாரஸ்யமே இல்லாத காட்சியமைப்புகள் , லாஜிக்கே  இல்லாத திரைகதை , ஏற்கனவே ஷங்கர் படங்களில் கேட்டு கேட்டு புளித்துப்போன வசனங்கள் , மொக்கையான கிளைமாக்ஸ் என்று பொறுமையை அளவுக்கு மீறி சோதித்து அனுப்புகிறார்கள் ... இந்த படம் ஒரு பத்து வருடங்களுக்கு முன் வந்திருந்தால் ரசித்திருக்கலாம் .... இன்றைய காலகட்டத்தில் இதை போன்ற படங்கள் கண்டிப்பாக பார்பவர்களுக்கு கடுப்பைதான் வரவழைக்கும் ...  வேலாயுதமும் அதைதான் செய்கிறது  ....

ஜெனிலியா , ஹன்சிகா , சரண்யா மோகன் என்று எல்லாருமே வீணடிக்கபட்டிருக்கிறார்கள்  ... மொத்தத்தில் என்னை பொறுத்தவரை வேலாயுதம் மழுங்கி போன பழைய ஆயுதம்  ... 


(இந்த படத்தை பற்றி எழுதம் போது  ஏதோ கே டிவி யில் பார்த்த பழைய படத்தை பற்றி எழுதுவது போல ஒரு பீல் வருவதால் இதற்க்கு மேல் எதுவும் எழுத பிடிக்கவில்லை... இந்த படத்தையும் நல்லா இருக்கு என்று சொல்லும் இந்த பட ஹீரோவின்  ரசிகர்களை பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு காய்ந்து போய் இருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது ... இனிமேலாவது அவர்களின் ஆஸ்தான நடிகர் இதை உணர்ந்து நல்ல படங்கள் கொடுத்தால் அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும்  நல்லது ... இல்லை எனக்கு சினிமாவே  வேண்டாம் நான் முதலமைச்சர் ஆக போகிறேன் என்று அரசியலில் இறங்கி விட்டால்  தமிழ் சினிமாவுக்கே நல்லது)




Thursday, January 13, 2011

காவலன் பிரிவியூ - கவுண்டர் ஸ்பெஷல்

( இந்த பதிவில் வரும் சம்பவங்கள் முழுக்க முழுக்க கற்பனையே ... யாரையும் குறிப்பிடுவன அல்ல ... மீறி அப்படி யாராவது இருந்தால் கோபபடாமல் ஜாலியா எடுத்துக்கொங்கங்கோ)


காவலன் படம் விரைவில் வெளிவர போகிறது , நம்ம இளையதளபதி எப்படியாவது படத்தை ஓட வைக்க வேண்டும் என்று பசுமாடெல்லாம் தானம் பண்ணுனாறு  தயாரிப்பாளர் காசுல .... அடுத்து கண்டிப்பா அதே தயாரிப்பாளர் காசுல தமிழ் திரை உலகில் இருக்கிற எல்லா நடிகர்களுக்கும் , நடிகைகளுக்கும் , டெக்னீசியன்சுக்கும் ஒரு பிரிவியூ ஷோ நடத்துவாரு  ... அத பாத்திட்டு தியேட்டர விட்டு வெளிய வந்துகிட்டு இருக்கிற நடிகர்கள்கிட்ட நம்ம கவுண்டர் அண்ணன் பேட்டி எடுத்தா எப்படி இருக்கும் ..... ஸ்டார்ட் ம்யூசிக்



முதலில் நம்ம சூப்பர் ஸ்டார்

கவுண்டர் : ஸார் என்ன ஸார் படம் முடிய இன்னும் அரைமணி இருக்கு அதுக்குள்ள எழுந்திருச்சி வந்துடீங்க?

ரஜினி : முடியல ஸார்... நான் கலைஞர் ஐய்யாவோட பெண் சிங்கம் பாத்துருக்கேன் , என் பொண்ணு எடுத்த கோவா பாத்திருக்கேன் ஆனா இப்படி ஒரு படம் பாத்ததில்ல ஸார்... உள்ள இருந்தா செந்திருவனோண்ணு பயமா இருந்திச்சு வந்துட்டேன்

கவுண்டர் : பயந்துட்டீங்களா அப்படி என்ன ஸார் இருக்கு படத்துல பயமுறுத்திர  மாதிரி...  கொரில்லாவா?

ரஜினி : அதெல்லாம் விட பயங்கரமா ஒண்ணு இருக்கு ஸார் .. பஞ்ச் டையலாக் பேசியே கொல்லுது... ஒரு சீன்ல அத குளோஸ் அப்புல காட்டுராணுக பாருங்க  பேய நேர்ல  பாத்தமாதிரி அவ்வளவு பயங்கரமா இருக்கு ...

கவுண்டர் : அப்படி எது ஸார் இந்த படத்துல இருக்கு ... ஏதும் கிராபிக்ஸ் பண்ணி இருக்காணுகலா? கொஞ்சம் அது யாருண்ணு காட்டுங்க பாப்போம் ...

ரஜினி பக்கத்தில் இருக்கும் இந்த போஸ்டரை காட்டுகிறார்   



கவுண்டர் : ஐயய்யோ .. காட்டு பண்ணி ... இதெல்லாமா இந்த படத்துல நடிச்சிருக்கு ... காமெடி படம்னு சொன்னாணுக ... இது திகில் படமா இருக்கும் போலயே


அடுத்து கமல் வருகிறார்

கவுண்டர்  : எண்ணன்னே நல்லா  பாத்து ரசிச்சீங்களா?

கமல் : ஹி.. ஹி... பக்கத்துல கௌதமி இருந்தாங்க , அதனால எனக்கு முன்னாடி உக்காந்து இருந்த  அசின அடிக்கடி பாத்து ஜொள்ளு விட முடியல ...

கவுண்டர் : (மனதுக்குள்) (படவா ராஸ்கல் நான் படத்த ரசிச்சியாண்ணு கேட்டா என்ன பதில் சொல்றாங்க பாரு)இப்ப என்ன அடுத்து கே .எஸ். ரவிக்குமார கூப்பிட்டு வேண்டாம்டா வம்புண்ணு  ஒரு படம் எடுத்து அசின புக் பண்ணி ஆப்ரிக்கா,  அண்டார்டிக்காண்ணு எங்கயாது கூப்பிட்டு போயி நல்லா என்ஜாய் பண்ண வேண்டியதுதான...

கமல் : நல்ல ஐடியா நேத்துதான் HBO ல ஒரு படம் பாத்தேன் அண்டார்டிக்காவுல நடக்குற கதை , உடனே என் பெயரை போட்டு படத்த ஆரம்பிச்சிட வேண்டியதுதான் .... (கே எஸ் உடன் போனில் பிஸி ஆகி விடுகிறார்)

கவுண்டர்(கடுப்பாகி)  : ஹலோ இவ்வளவு நேரம் ஒரு படம் பாத்தீங்களே , அத பத்தி சொல்லுங்க ...

கமல் : படமா? யோவ் என் பக்கத்துல கௌதமி இப்படி உக்காந்து இருக்கும்போது 


அவள விட்டுட்டு படம் பாக்க நான் என்ன கேனையானா?

கவுண்டர் : அடேங்கப்பா... நீ ஆனா வூன்னா எல்லா நிகழ்ச்சிக்கும் ஏன் இந்த குட்டியோட  வரேண்ணு இப்பதான புரியுது ... என்ஜாய் ....மனசுக்குள் (கருமாந்திரம் புடிச்சவணுக எப்படியெல்லாம் பிளான் பண்ணுராணுக பாருயா? இனிமே எவனாவது இந்த டுபாக்கூர் சுரா  மண்டையன் நடிச்ச படத்த பாக்க கூப்பிட்டா இதே ஐடியாவ   ஃபாலோ பண்ணி படத்த பாக்காம எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான் )


அடுத்து நம்ம தீவிர விஜய் ரசிகர் ஒருவர் வருகிறார்


கவுண்டர் : வாங்க தம்பி .. நல்ல இருக்கீங்களா? இன்னமும் எப்படி உங்களாள இந்த ஆளு படத்துக்கு முதல் நாளே நம்பி வர முடியிது...

ரசிகர் : ஸார் எங்க தளபதி யாருண்ணு நெணச்சீங்க.... அவர் அழகிய தமிழ் மகன் ஸார் ... அவர் படம் ஓடல அப்படின்னு சொல்றதெல்லாம் பொய் ஸார் ....  தளபதி எங்க  தல எடுத்திடுவாரோண்ணு சில விசமிகள் பண்ணுற பொய் பிரசாரம் ... நான் கேட்ட வரைக்கும் மவுத் டாக் ஓகேதான்...

கவுண்டர் : அது எப்படி தம்பி படமே இன்னும் வெளிய வரல.. அதுக்குள்ள மவுத் டாக் பத்தி எல்லாம் பேசுர .... சரி படத்துல ஏதாவது தேறுமா...

ரசிகர் : ஸார் அந்த பட்டாம்பூச்சி பாட்டுல 00:48 செகண்ட்ல இருந்து 01:23 செகண்ட் வரைக்கும் வர்ற டான்ஸ் பாருங்க ஸார் ... நாங்க எல்லாம் தளபதிய ஏன் ரசிக்கிறோம்னு தெரியும் ...


கவுண்டர் : அப்ப மூணு மணிநேர படத்துல அந்த முப்பது செகண்ட் மட்டும்தான் நல்லா இருக்கும்னு நீயே ஒத்துக்கிற... ஆடடடா எவ்ளோ நல்ல மனசு உங்களுக்கு...

ரசிகர் : ஸார் நீங்க என்ன வேணா சொல்லுங்க படம் கேரளாவுள பெரிய ஹிட்..... யுட்யூப்ல வீடியோ காட்டவா?


கவுண்டர் : கொஞ்சம் பொறு  தம்பி இன்னும் ஒரு வாரத்துல படமே யுட்யூப்ல வந்திடும் நான் அத பாத்துக்கிறேன் ...

ரசிகர் : யுஎஸ்ல இருக்கிற என் ஃப்ரெண்ட் நேத்து நைட்டே படம் பாத்துடானாம் ... படம் நல்லா இருக்குடா, நீ இன்னும் பாக்கலையா? இந்நேரம் இது எங்க தல படமா மட்டும் இருந்ததுனா  நான் தியேட்டர விட்டு வெளியில வரவே மாட்டேண்ணு  சொன்னான் ... அவன் தல ரசிகன் ... அவனே சொல்லிட்டான் படம் ஹிட்டுதான் ஸார்...

கவுண்டர் : அவன் பாவம் தூக்கமும் கெட்டு காசும் வீணா போன கடுப்புல உன்னை பழிவாங்க அப்படி சொல்லிருப்பான் ... ஒவ்வொரு படத்துக்கும் அதையும் நம்பி நீ ஏமாறுரையே ... இன்னமுமா உங்க தளபதிய நீ நம்புர...

ரசிகர் : ஸார் சத்யம்ல வர்ற வெள்ளிக்கிழமை வரைக்கும் டிக்கெட் புல்லாம் ....

கவுண்டர் : அட்ராசக்க அட்ராசக்க .. நீ அந்த டுபாக்கூர் சுரா மண்டையனோட ரசிகன்கிறத நிரூபிச்சிடடா... உங்க ஆளு  படம் வெள்ளிக்கிழமைக்கு அப்புறம்தான் ரிலீஸ் ஆகுது ...  நீ புல்லா இருக்குன்னு நெட்ல பாத்த படம் பலான இங்கிலீஷ் படம் ... இந்த படத்துக்கு வர்ற கூட்டத்த பாத்துட்டு தியேட்டர் ஒனர் உங்க படத்த எடுக்கவா வேணாமாண்ணு யோசிக்கிறானாம்...  

ரசிகர் : நீங்க என்ன சொன்னாலும் நான் மாற மாட்டேன் .. வாழ்க இளைய தளபதி .. வளர்க அவர் புகழ்...

கவுண்டர் : இனி பேசி பிரயோசனம் இல்லை ... உன் மூஞ்சில முழிச்சா காலங்காத்தால கக்கூஸ் கூட ஒழுங்கா போகாது ... ஓடி போய்டு இனிமே இந்த ஏரியா பக்கம் வந்த இந்த குரங்க விட்டு கடிக்க விட்டுடுவேன் .......


அடடடடடா ...  நம்ம மூட கெடுத்துட்டானே  .... சீக்கிரம் இந்த காந்த கண்ணழகிய கூப்பிட்டு போய்  பூ மிதிச்சாதான் டென்ஷன் குறையும் ....
காந்த கண்ணழகி நாம பூ மிதிக்க போவோமா?






Tuesday, November 2, 2010

சுறாவும் பாட்ஷாவும் பின்னே நானும்....







வருடம் 1996, பாட்சா என்ற மாபெரும் வெற்றி பெற்ற திரைபடத்தின் வெள்ளி விழா ... தமிழ் நாட்டின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசுகிறார் ... வரிக்கு வரி அனல் பறக்கிறது , அன்றைக்கு தமிழகத்தை ஆண்டு கொண்டு இருந்த ஜெயலலிதாவிர்க்கு சவால் விடும் பேச்சு அது ... காரணம் அந்த காலகட்டத்தில் தமிழகம் எங்கும் நடந்து  கொண்டு இருந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள்... இவர் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால்கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று பயப்படாமல் நேருக்கு நேராய் ஜெயலலிதாவை எதிர்த்து பேசினார் .. அந்த பேச்சில் ஒரு உண்மை இருந்தது , தமிழ்நாட்டின் மேலும் தமிழ் மக்கள் மேலும் அவருக்கு இருந்த ஒரு அக்கறை தெரிந்தது , குறிப்பாய் சுயநலம் இல்லாத பொதுநலம் அந்த பேச்சில் தெரிந்தது ... அந்த பேச்சை தொடர்ந்து தமிழகத்தில் பெரும்பான்மையான மக்களின் மனதில் ஒரு மாற்றம் ... அந்த மாற்றம் அடுத்த தேர்தலில் எதிரொலித்தது .. ஜெயலலிதா மக்களால் தோற்கடிக்கபட்டார் ... அதுவும் படுபயங்கரமான தோல்வி ... எப்படி  என்றால் அவரால் கூட  பர்கூர் தொகுதியில் ஜெயிக்க முடியவில்லை ... அவரின் இந்த அதல பாதாள வீழ்ச்சிக்கு ரஜினியின் அந்த பேச்சும்  மிக பெரிய காரணம் ... ஆனால் ரஜினி தனக்கு இருக்கும் இந்த மாஸை பயன்படுத்தி   அரசியலில் இறங்கி முதல்வர் பதிவியை பிடிக்க வேண்டும் என்று ஆசைபடவில்லை  .... அன்றய சூழ்நிலையில் அவர் நினைத்திருந்தாள் ஒரு கட்சி ஆரம்பித்து இன்றைக்கு தமிழக  அரசியலில்  ஒரு அசைக்க முடியாத சக்தியாக ஏன் தமிழகத்தை ஆளும் சக்தியாக கூட இருந்திருக்கலாம்.... ஆனால் சுயநலத்திர்க்காக அரசியலில் இறங்குபவர் இல்லை அவர் என்பதை  அழுத்தமாக் நிரூபித்தார் ....தன் சக்தியை கொண்டு வேறு ஒருவரை ஜெயிக்க வைத்தார் (பின்னாளில் அதுவே அவருக்கு ஆப்பாக அமைந்தது வேறு கதை... இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது என்பதால் அதை பற்றி எழுதவில்லை  )...   

ஆனால் இன்று ஒரு சில நடிகன்கள் அடிக்கிற கூத்துகளை பார்க்கும்  பொழுது கடவுள் ரஜினியை மட்டும் ஏன் அவ்வளவு பெரிய உயரத்தில் அமர வைத்தான் என்பது நமக்கு விளங்கும் .. அவர் அதை ஒரு போதும் தவறாக உபயோகிக்க மாட்டார் என்று தெரிந்துதான்  இவ்வளவு பெரிய மக்கள் சக்தியை அவர் பின்னாளில் வர வைத்தான் போல ...  அவருக்கு இருக்கும் புகழில் கால் தூசி கூட இல்லாத இருவரை  பற்றிய பதிவுதான் இது ...

முதலில் விஜயகாந்த் இன்று தமிழக அரசியலில் இருக்கும் ஒரு விஷ கிருமி... ரசிக படையை வைத்து சினிமாவில் சம்பாதிப்பதை விட அரசியலில் பல மடங்கு அதிகம் பணம் சம்பாதிக்க முடியும் என்று வெளிச்சம் போட்டு காட்டியவர் இவர் ....  தோட்டத்தில் இருக்கும் களை செடி  அவர் கட்சி ... தானும் வாளராது அடுத்தவனையும் வளர விடாது ...  கலைஞர்  காசு தருகிறார் என்பதற்காய் தனித்து நிர்க்கிறேன் என்று அம்மாவிர்க்கு விழும் ஓட்டுகளை பிரித்து கொண்டு இருக்கிறார் ... போன நாடாளுமன்ற தேர்தலிலேயே எந்திரன் பட்ஜெட்டை விட ரெண்டு மடங்கு  அதிகமான பணம் அவருக்கு கொடுக்கபட்டதாக பேச்சு... இந்த முறை ரெண்டு பெரிய தலைகளிடமும் மாறி மாறி பேரம் பேசி வருகிறாராம் ... யார் அதிகமாக கல்லாவை நிரப்புகிறார்களோ அவர்களுக்கு சாதகமாக முடிவு எடுக்க போகிறாராம் ... அய்யா கொடுத்தால்  வழக்கம் போல தனித்து நிற்பது ... அம்மா கொடுத்தால் அவருடன் கூட்டணி என்பது முடிவாம் .. ஆக மொத்தம் மக்களுக்கோ  இல்லை அவரின் ரசிகர்களுக்கோ நல்லது செய்ய வேண்டும் என்று அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை, எல்லாம் டப்புக்காக மட்டும்தான் ...  ரஜினியின் மாஸில் கால்வாசிக்கூட இல்லாத இவரே இவ்வளவு சம்பாதிக்கும் பொழுது ரஜினி நினைத்தால் தமிழ்நாட்டையே எழுதி வாங்கலாம்,,,

இவர விடுங்க அடுத்தவர் ,,, தொடர்ந்து ஆறு அடிவாங்கின படங்களை கொடுத்து,,, அவர் ரசிகர்களே கண்டுகொள்ளாமல் இருக்கும் காவலன் என்னும் படத்தில் நடித்து கொண்டு ,,, கூடிய விரைவில் காணாமல் போனவர்கள் லிஸ்டில் சேரும் அபாயம் நிறைந்த ஒரு ஜீவன்,,,, தளபதி என்று அவருக்கு அவரே பெயர் சூட்டி கொண்டு அந்த வார்த்தையவே அசிங்கபடுத்திய விஜய. காவலன் சூட்டிங்க்ல ஒரு பேட்டி கொடுத்திருக்காராம்.. “கோவையில் சிறு குழந்தையை கடத்தி கொன்றவர்கள் தண்டிக்கபட  வேண்டியவர்கள் ... தமிழகம் முழுவதும்  இப்படிப்பட்ட செயல்கள் நடந்து கொண்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது...தமிழகம் இப்பொழுது எங்கே சென்று  கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை அப்படின்னு ரொம்ப அக்கறையா ஒரு பேட்டி .... தமிழ்நாட்டு மேல யாரு அக்கறைபடுராங்கண்ணு பாத்தீங்களா? ஆரம்ப காலத்தில எப்படியாவது தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட நடிப்பு வராத தானும் சின்னதா ஒரு இடத்த பிடிச்சிரனும்னு சங்கவியையும், சுவாதியையும் வச்சி பலான படமா தன்னோட அப்பாவ வச்சி எடுத்து டெவளப் ஆன ஒரு நடிகன்.. இவ்வளவு கஷ்டபட்டு மாமியார் முதுகுக்கு  சோப்பெல்லாம் போட்டு அவர் நடிகனா டெவளப் ஆனது எதுக்கு பின்னால கட்சி ஆரம்பிச்சி மக்களுக்கு நல்லது செய்யவா? இல்ல தமிழ் சினிமாவை ஆஸ்கார்  உயரத்திர்க்கு  கொண்டு போகவா? டப்புக்காக மட்டும்தான்... சினிமா ஒரு தொழில் அதில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் படம் எடுத்து சம்பாதிக்கலாம் ... ஆனால் அடுத்த கட்டமாக கட்சி என்று அவர்கள் இறங்கும் பொழுதுதான்  நம் அடிமனதில் கோபம் கரை புரண்டு ஓடுகிறது... நாட்டுல எவ்வளவோ நல்லவனுக எல்லாம் அமைதியா இருக்கும் போது , இவரு ஏன் இப்படி தமிழ் நாட்டு மக்களை நினைத்து நீலி கண்ணீர் விடுகிறார் என்று தெரியவில்லை? இவர் கொடுத்த இந்த பேட்டியை பாத்தா ஒரு சின்ன கொழந்தகூட சரியா சொல்லிடும் எலி அம்மணமா ஆடுறது  விஜயகாந்த் மாதிரி அரசியலில் இறங்கி காசு பார்க்கத்தான் என்று .... நல்ல வேலை இன்றய இளைங்கர்கள் கொஞ்சம் உஷார் ... அதனாலத்தான் எஸ்எம்எஸ் . இ – மெயில் என்று இவரை கிழி கிழி என்று கிழித்து இவர ஒரு காமெடி பீஷா மாத்திட்டாணுக்க... ஆனால் இன்னமும் மனசுக்குள் தன்னை ஒரு ரஜினியாக நினைத்து கொண்டு இவர் பண்ணுகிற கூத்துகளை பார்க்கும் பொழுது ஒருபுறம் சிரிப்பாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கடுப்பாக இருக்கிறது .. ரஜினி பேசுவதர்க்கு ஒரு மதிப்பு இங்கு மக்கள் தருகிறார்கள் என்றால் காரணம் அதில் எப்பொழுதும் சுயநலம் இருக்காது , அப்படிப்பட்ட அவரே ஒரு முறை ராமதாஸை பழி தீர்க்க ரெட்டை இலைக்கு ஓட்டு கேட்டு மூக்குடைபட்டார்... ஆனால் தன் ஒவ்வொரு செயலிலும் சுயநலமாகவே செயல்படும் விஜய் இன்னமும் இப்படி உதார் விட்டு கொண்டு இருப்பது பார்பதர்க்கு காமெடியாக இருக்கிறது...

யார் இதை எல்லாம் சீரியஸாக எடுத்து கொள்ளுவார்கள் என்று அவர் எதிர்பார்க்கிறார்... அவரும் அவர் அப்பாவும் வேண்டுமானால் இவரின் இந்த பேட்டியை பெரிய விஷயமாக நினைக்கலாம் .. மற்றபடி யாரும் இவரின் இது போன்ற செயல்களை பெரியதாய் எடுத்து கொள்ளுவதே இல்லை .. இதை எழுதும் என்னை போன்ற ஒன்றிரண்டு பேரும் அவரை நக்கல் அடித்துதான் எழுதுகிறார்கள்..  மக்கள் ஒண்ணும் ஏமாளிகள் இல்லை ... இப்படி அதிகமா ஆசபட்டு பின்னாடி ஆப்பு வாங்குறதுக்கு பதிலா   போயி உருப்படியா நல்ல கதையா செலக்ட் பண்ணி நடிங்க ... அதிலயாவது நாலு காசு பாக்குறீங்க அதிகமா ஆசபட்டு இதையும் விட்டுடாதீங்க....

(, படிப்பு , சமூக தொண்டு இப்படி எந்த தகுதியும் இல்லாமல் சினிமாவின் மூலம் ஏமாற்றி மக்கள் மனதில் புகுந்து பஞ்ச் டயலாக் பேசி அது மூலமா ஒரு கூட்டம் தனக்கு பின்னாடி வந்தவுடனே பெரிய அப்பாடக்கரை போல (நன்றி சந்தானம் )  வாய்க்கு வந்தபடி பேசும் இவரை போன்ற நடிகர்களை பார்க்கும் பொழுது எனக்கு எப்பவும் ஒரு காண்டு வரும் .. இன்று தினமலரில் இவரின் இந்த பேட்டியை பார்த்த பொழுதும பயங்கர கோபம் வந்தது அதனால் தான் இந்த பதிவு) 

Saturday, May 29, 2010

மீண்டு வருவார் விஜய் ....







இன்று அவரை மிரட்டுபவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் அவரின் படத்தை எவ்வளவு விலை கொடுத்து வேண்டுமானாலும் வாங்க தயாராக வரிசையில் நின்றவர்கள்தான் ... மறுபடியும் இவர்கள் அனைவரும் அதே வரிசையில் நிற்கத்தான் போகிறார்கள்... அது நடக்க வேண்டுமானால் விஜய் கொஞ்சம் மாறினால் போதும் ..


விஜயின் இந்த நிலைமைக்கு காரணம் சினிமாவில் வெற்றி பெற்ற தன மகனை அரசியலிலும் வெற்றி கோடி நாட்ட வைக்க வேண்டும் என்ற அவர் தந்தையின் பேராசைதான்... கில்லி , திருப்பாச்சி, சிவகாசி என்று வெற்றி படிக்கட்டில் ஏறி கொண்டு இருந்தவரை சடாரென்று தோல்வி பாதையில் இறக்கி விட்டது அவரின் இந்த ஆசை ....

விஜய் ஒன்றும் எந்த திறமையும் இல்லாதவர் இல்லை .. அவரின் கில்லி படம் பெற்ற பெரிய வெற்றிக்கு அவரின் துள்ளலான நடனம் , இளமையான நடிப்பு , சண்டைகாட்சிகளில் அவர் காட்டிய வேகம் எல்லாமும் ஒரு காரணங்கள் .. அடித்து சொல்லலாம் அவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் அந்த படம் அவ்வளவு பெரிய வெற்றியை பெற்று இருக்காது....அந்த விஜயைதான் மக்களும் அவரின் ரசிகர்களும் எதிர்பார்கிறார்கள் ... 

இவ்வவளவு தோல்விகளுக்கு பிறகும் விஜய் திரை துறையில் இன்னமும் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறார் என்றால் அவரின் ரசிகர்கள்தான் காரணம் ... இரண்டு தோல்விகளிலே முடங்கி போன எத்தனையோ ஹீரோக்கள் உண்டு நம் தமிழ் திரை உலகில் ... அவரை வாழ வைத்து கொண்டு இருப்பவர்கள் அவரது ரசிகர்கள்தான் என்று அவர் வாய் வழியாக மட்டும் சொல்லாமல் மனதளவில் நினைத்து சொல்லுகிறார்  என்றால் அந்த ரசிகர்களுக்கு பிரதி உபகாரமாக அவர் இனி நல்ல  கதைகளை தெரிவு செய்து நடிக்க வேண்டும் ... உங்களால் பணம் சம்பாதித்து இன்று உங்களையே தூற்றுபவர்களை  மீண்டும் உங்கள் பின்னால் வர வைத்து உங்கள் ரசிகர்களை தலை நிமிர செய்யுங்கள் ... அரசியல் ஆசையை கொஞ்சம் ஓரங்கட்டி வையுங்கள் தலைவா ... உங்களை நீங்கள் முதலில் நிரூபியுங்கள் ... பதவியும் பட்டமும் தானாக தேடி வரும் உங்களை நோக்கி .. 
ரஜினியை பாருங்கள் .. எவ்வளவு வெற்றிகளை கொடுத்திருந்தாலும் அவரே சந்தரமுகி போன்ற நல்ல கதைகளைத்தான் தெரிவு செய்து நடிக்கிறார் ... மக்களுக்கு எது பிடிக்குமோ அதை கொடுங்கள் மக்கள் மீண்டும் உங்களை வெற்றி படிக்கட்டில் ஏற்றுவார்கள் ...

இந்த தடுமாற்றங்களில் இருந்து விஜய் மீண்டு வர தல ரசிகர்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ...

Thursday, April 29, 2010

சுறா - ஹிட்டு இல்ல மச்சி அட்டு






நாளைக்கு வரபோவுது நம்ம தளபதியின் சுறா.... தமிழ் மக்கள் எல்லாம் இந்த படத்தோட tarilor பாத்துட்டு வாந்தி பேதி வந்து ஆஸ்பத்திரியில கெடக்குராங்கன்னு நெறைய பேரு இப்பவே வதந்திய கெளப்பி வுட்டுகிட்டு இருக்கானுக... அத எல்லாம் நம்பாதீங்க, நம்ம இளைய தளபதிய நீங்க எல்லாம் குடும்பத்தோட டீவீயில பாத்து ரசிக்கிறவங்க , அப்படியே நாளைக்கு திரை அரங்கத்திற்கும் குடும்பத்தோட போய் சுராவ பாருங்க... நம்ம தளபதி கண்டிப்பா உங்கள ஏமாத்த மாட்டாரு... 




உங்களுக்கு என்ன வேணும் , நீங்க எல்லாம் என்ன உலக படமா பாக்க போறீங்க , அந்த அளவுக்கு உங்களுக்கு அறிவு இருக்கா ? (உங்களுக்கெல்லாம் அது இருந்தா அங்காடி தெருவும் , நான் கடவுளும் இருநூறு நாள் ஓடி இருந்திருக்குமே?)உங்களுக்காகவே நம்ம தளபதி சுறா படம் எடுத்து வச்சிருக்காரு .... படம் ஆரம்பிச்ச உடனே தளபதி ஒரு பொண்ண காப்பாத்த பொருக்கிககூட சண்டைய போடுவாரு .... சண்ட முடிஞ்சதும் இவ்வளவு நாளா உங்க வீட்டுல பொடி பசங்க அடிக்கடி DVDஇல போட்டு கேட்டுகிட்டு இருந்த குத்து பாட்டு வரும் அதுல தளபதி வெறும் முண்டா பனியனும் முக்கா பேண்டும் போட்டுகிட்டு ஆடுவாரு ... அத பாத்துட்டு உங்க வீட்டு நண்டு சுண்டு எல்லாம் போடுற ஆட்டத்த பாத்தா உங்களுக்கும் சந்தோசமா இருக்கும் ... (காசு கொடுத்து படம் பாத்தா சந்தோசமா இருக்கனும்ல... நம்ம தளபதி படம் பாத்த உங்களுக்கு அது கண்டிப்பா இந்த வழியில கெடைக்கும் )


பாட்டு முடிஞ்சதா அப்புறம் என்ன நீங்க எல்லாம் ஆவலா எதிர்பாத்துகிட்டு இருந்த தளபதியோட வலது கை அண்ணன் வடிவேலு வருவாரு... அவரும் அண்ணனும் சேந்து நெறைய காமெடி பண்ணுவாங்க.. அது நல்லா இருக்கோ இல்லையோ நீங்க சிரிப்பீங்க , நமக்கு அந்த அளவு நகைசுவை உணர்வு கெடையாது பாருங்க ... வடிவேலு முகத்த டீவீயில பாத்தாலே சிரிக்கிற மக்கள்தான நாம , அது தெரிஞ்சிதான தளபதி முக்கியமான படங்களுள எல்லாம் வடிவேலுவ கூட சேத்துகுவாறு ... அப்புறம் தமன்னா அக்கா வருவாங்க அவங்கள பாத்த வுடனே இவ்வளவு நேரமும் கடுப்பா உக்காந்துகிட்டு இருந்த உங்க வீட்டு வயசு பசங்க குசியாகிடுவாணுக ( அவனுகளையும் குசிபடுத்தனும்ல .. சூப்பர் ஸ்டார் படம்னா எல்லாருக்கும் புடிக்கணும் ... )


அடுத்த அர மணி நேரத்துக்கு நம்ம தளபதி தமன்னா அக்காவ பாத்து வித விதமா ஜொள்ளு விட்டுகிட்டு இருப்பாரு .... அத பாத்து அந்த பசங்களுக்கு சூடு ஏறி போகும்... அப்பறம் என்ன அந்த சூட்ட தணிக்க ஒரு ஜாலி பாட்டு வெளிநாட்டுல , அதுல தளபதி ஆடுற டான்ச பாத்து உங்க வீட்டு வயசு பொண்ணுங்க கிறங்கி போய் கெடக்குங்க .... அப்புறம் என்ன நடக்கும் , இதுகூட தெரியாதா உங்களுக்கு , எத்தன ரஜினி படம் பாத்திருப்பீங்க நீங்க , வில்லன் கோஷ்டி கதைக்குள்ள வருவானுக , 


தளபதி அவனுகள பாத்து பஞ்ச் வசனமெல்லாம் பேசுவாரு ... நீங்களும் அத கேட்டு வெறி ஏறி போய் கெடப்பீங்க (பேசுற தளபதி மேல இல்லீங்க , அவருக்கு கெடுதல் பண்ணுற வில்லங்க மேல) , இந்த நேரத்துலதான் வில்லனுக சூழ்ச்சி பண்ணி நம்ம தளபத்திய தோற்கடிச்சிராணுக... நம்ம தளபதி வீடு , காதல் , சொத்து சுகம் எல்லாத்தையும் விட்டுட்டு நடு தெருவுல நிப்பாரு ... அத பாத்துட்டு உங்க குடும்பமே கண்ண கசக்கிகிட்டு உக்காந்து இருக்கும் ... அந்த ஸீன் வரும் போது படம் ஆரம்பிச்சி ஒன்னே கால் மணி நேரம் ஆகிருக்கும் , உங்க வீட்டு குட்டி பையன் மம்மி பாத்ரூம் போகணும்னு அடம் பிடிக்க ஆரம்பிப்பான், கரெக்டா அந்த நேரத்துல நம்ம தளபதி வில்லன் வீட்டுக்குள்ள புகுந்து பஞ்ச் வசனம் பேசி அவன்கிட சவால் விட்டுட்டு வீட்ட விட்டு வெளிய வருவாரு இடைவேளை விட்டுடுவாணுக.... (பின்ன சூப்பர் ஸ்டார் ஆகணும்னா மக்களோட மனச மட்டும் இல்ல அவங்களுக்கு எப்ப எப்ப பாத்ரூம் வரும் . எப்ப தம் அடிக்க போவாங்க இப்படி எல்லாத்தையும் புரிஞ்சி வஞ்சி அதுக்கு ஏத்த மாதிரி படம் தரனும்ல... நம்ம தளபதி அதுல கில்லாடி)


அப்பறம் என்ன pop corn, ice cream, cool drinks , முட்ட போண்டா இப்படி எல்லாத்தையும் சாப்டுட்டு , நம்ம தளபதி அடுத்து என்ன பண்ண போறாரோன்னு ஆவலா உக்காந்துகிட்டு இருப்பீங்க... பக்கத்து தியேட்டருல அங்காடி தெரு படம் ஓடிகிட்டு இருக்கும் , அந்த சத்தத கேட்டுட்டு , ச்சே போன வாரம் அந்த படத்துக்கு போனதுக்கு போகாமலே இருந்திருக்கலாம் , ஒரு பாட்டும் சரி இல்ல , நல்ல சண்ட இல்ல , குடும்ப செண்டிமெண்ட் இல்ல , குத்துபாட்டு இல்ல இந்த வாண்டு படமே பாக்கல தூங்கிட்டான் ,என்ன படம் எடுத்து வட்ச்சிருக்காங்க, இன்னைக்கு பாரு எப்பிடி குதிச்சிகிட்டு இருக்கான்னு நீங்க சொல்லிக்கிட்டு இருக்கும்போதே தளபதி டாட்டா சுமோல வந்து எறங்குவாறு ... சங்கர் மகாதேவன் குரலுல பேக் கிரௌன்ட்ல தளபதி ரசிகர்கள உசுப்பேத்துற மாதிரி ஒரு பாட்டு வரும் ,, சும்மா தியேட்டரே அதிரும் விசில் சத்தத்தில,, அத கேட்டு உங்க வீட்டு குட்டி வாலும் மம்மி நானும் விசில் அடிக்கிறேன்னு சொல்லிக்கிட்டு வாயில கைய வச்சி ஊதிகிட்டு இருப்பான்.. வெறும் காத்துதான் வரும் இருந்தாலும் அவன பாத்து ஈன்ற பொழுதிலும் பெருதுவக்கும் தாயா மாறி போய் இருப்பீங்க , 

அந்த ஒரே பாட்டுல தளபதி வில்லனுக்கு இணையா பெரிய ரௌடியா வளந்திடுவாறு... தமன்னா அக்கா அவர தேடி வருவாங்க விஜய் அவங்கள யாருன்னே தெரியாதுன்னு சொல்லி அனுப்பிச்சிட்டு கைய வானத்த நோக்கி காட்டிக்கிட்டு " இந்த உசிரு எப்ப போகும்னு அவனுக்கு மட்டும்தான் தெரியும் , இந்த யுத்தத்துல நான் தனியாத்தான் நின்னு போராடுவேன் , அவ பாவம்டா அவளாது நல்லா இருக்கட்டும்"ன்னு பேசுற வசனத்த மறஞ்சி நின்னு தமன்னா கேட்டுருவாங்க... அப்புறம் என்ன ஸ்லொவ் மோஷன்ல ஓடி வந்து விஜய கட்டி பிடிக்க , அங்க போடுவோம்ல ஒரு குத்து பாட்டு ... அத பாக்குற உங்களுக்கு தமன்னாவும் விஜயும் சேந்த சந்தோசம் பிளஸ் ஒரு குத்து பாட்டுன்னு டபுள் ட்ரீட்... அப்புறம் வழக்கம் போல வில்லன் விஜயோட வளர்சிய பாத்து மெரண்டு போய் கெடப்பான் , அந்த கேப்புல தளபதி வில்லன போட்டு தள்ளிட்டு தமன்னா அக்காவ தள்ளிக்கிட்டு போய்டுவாரு ... சுபம் போட்டுடுவாங்க ... 


இது போதாதா உங்களுக்கு ... உங்களை என்ன கமலஹாசன், மணிரத்னம், பாலா படங்கள பாக்கவா கூப்புடுறோம் , அந்த படங்கலஎல்லாம் பாக்குறதுக்கு மூளைன்னு ஒன்னு வேணும் ... ரொம்ப யோசிக்க வப்பாணுக படத்துல , நமக்கு அதெல்லாம் தெரியாது ... அதான் சொல்லுறேன் நீங்க பாக்குற மாதிரி படம் தமிழ் சினிமாவுல தொடர்ந்து வரணும்னா நாளைக்கு உடனே போய் சுராவ பாத்திடுங்க .. கவலைபடாதீங்க தளபதி வித்தியாசமாலாம் படம் எடுத்து உங்களை கஷ்டபடுத மாட்டாரு... காலங்காலமா ரஜினி உங்கள பழக்கபடுத்தி வச்சிருக்கிற அதே ரூட்டுலதான் இவரும் போறாரு.. அதனால உங்களுக்கு புடிக்கும்... உங்களுக்கு மட்டும்தான் புடிக்கும் ... நீங்களே பாக்கலாட்டி வேற யாரு பாப்பா இவரு படத்த? ஆனா உங்க குடும்பத்துல தப்பி தவறி யோசிக்க தெரிஞ்ச ஒருத்தன் இருந்தான் அவன் செத்தான் .... அவனும் படத்த ரசிக்க முடியாது உங்களையும் ரசிக்க விட மாட்டான் அதனால படம் பாக்குறதுக்கு முன்னாடியே அவன கழட்டி விட்டுடுங்க , இல்லாட்டி உள்ள வந்து உங்க ரசனைய குறை சொல்லுவான்...



தளபதியின் சுராவை குடும்பத்துடன் கண்டு எல்லாரும் முக்தி நிலை அடிய எல்லாம் வல்ல கலாநிதி மாறன் அருள் புரிவாராக... 


LinkWithin

Related Posts with Thumbnails