Followers

Copyright

QRCode
Showing posts with label இளையதளபதி. Show all posts
Showing posts with label இளையதளபதி. Show all posts

Friday, October 28, 2011

வேலாயுதம் - ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கே


முதலில் பத்து வருடங்களுக்கு முன்னாள் வந்த ஒரு தெலுங்கு  படத்தை இப்பொழுது தமிழில் எடுத்து தமிழனின் ரசனையை கேவலபடுத்தியதர்க்காக இயக்குனருக்கு ரசிகர்கள் சார்பில் கண்டனங்கள் .... ஷங்கர் 1990 இல் இருந்து 2004 வரை கசக்கி பிழிந்து சாறு எடுத்த ஒரு கதையை, அவரே இனி இது உதவாது  என்று 8 வருடங்களுக்கு முன்னரே தூக்கி  குப்பையில் போட்ட கதையை மீண்டும் தோண்டி  எடுத்திருக்கிறார்கள் .... குப்பையை தோண்டினால் வைரமா வரபோகிறது குப்பைதான் வந்திருக்கிறது .... கேப்டன் முதல் சியான் வரை பலரும் செய்த மக்களை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ வேலையை கொஞ்சம் கூட அச்சு பிசகாமல் இந்த படத்தின் ஹீரோவும் செய்கிறார் ... ஆனால்மக்களை ரசிக்க வைக்க  எட்டு வருடங்களுக்கு முன்னரே அந்நியனில் இதே மக்களை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ கதைக்கு multiple personality என்று ஒரு புத்தம் புது ஊறுகாய் தேவைப்பட்டது ஷங்கருக்கு  .... ஆனால் இவர்கள் டி ஆர்  காலத்து தங்கச்சி சென்டிமென்ட்டை தூசி தட்டி ஊறுகாய் ஆக்கியிருக்கிறார்கள் ... பாஸ் இந்த ஊசி போன ஊறுகாயை எத்தனை நாளைக்குதான் நாங்க சாப்பிடுறது ...

இந்த படத்தின் ஆக பெரிய பலவீனம் என்னவென்றால் கதை திரைகதை காட்சியமைப்புகள் , பாடல்கள் , என்று எதிலுமே புதுசாக எதுவும்  கிடையாது எல்லாமுமே யூகிக்க கூடியது என்பதுதான்... முதல் பாதியில் ஹீரோவும் அவர் தங்கையும் காமெடி பண்ணுகிறோம் என்று சொல்லி மொக்கை போடுவார்கள்.. தியேட்டரில்  இருந்த ஹீரோவின்  ரசிகர்களை தவிர வேறு யாரும் சிரிக்கவில்லை ... அந்த காமெடிக்கு  சிரித்து கொண்டிருந்த ஒரு  ரசிகனை அவருடைய நண்பர்களே ஏதோ வேற்று கிரக வாசியை பார்ப்பது போல பார்த்தார்கள் ... முதல்  பாதியில் கொஞ்சமேனும் ரசிக்க வைத்த விஷயம் சந்தானம் வரும்   சில காட்சிகள்  ... அதை தவிர்த்து பெரியதாக ஒன்றும் இல்லை  ...

இரண்டாம் பாதிதான் படத்தின் மிக பெரிய மொக்கை ....வழக்கம் போல மக்களை காப்பாற்றுகிறேன்  என்று படம் பார்க்கும் நம்மை சாகடிக்கிறார் ஹீரோ....  கொஞ்சம்கூட சுவாரஸ்யமே இல்லாத காட்சியமைப்புகள் , லாஜிக்கே  இல்லாத திரைகதை , ஏற்கனவே ஷங்கர் படங்களில் கேட்டு கேட்டு புளித்துப்போன வசனங்கள் , மொக்கையான கிளைமாக்ஸ் என்று பொறுமையை அளவுக்கு மீறி சோதித்து அனுப்புகிறார்கள் ... இந்த படம் ஒரு பத்து வருடங்களுக்கு முன் வந்திருந்தால் ரசித்திருக்கலாம் .... இன்றைய காலகட்டத்தில் இதை போன்ற படங்கள் கண்டிப்பாக பார்பவர்களுக்கு கடுப்பைதான் வரவழைக்கும் ...  வேலாயுதமும் அதைதான் செய்கிறது  ....

ஜெனிலியா , ஹன்சிகா , சரண்யா மோகன் என்று எல்லாருமே வீணடிக்கபட்டிருக்கிறார்கள்  ... மொத்தத்தில் என்னை பொறுத்தவரை வேலாயுதம் மழுங்கி போன பழைய ஆயுதம்  ... 


(இந்த படத்தை பற்றி எழுதம் போது  ஏதோ கே டிவி யில் பார்த்த பழைய படத்தை பற்றி எழுதுவது போல ஒரு பீல் வருவதால் இதற்க்கு மேல் எதுவும் எழுத பிடிக்கவில்லை... இந்த படத்தையும் நல்லா இருக்கு என்று சொல்லும் இந்த பட ஹீரோவின்  ரசிகர்களை பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு காய்ந்து போய் இருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது ... இனிமேலாவது அவர்களின் ஆஸ்தான நடிகர் இதை உணர்ந்து நல்ல படங்கள் கொடுத்தால் அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும்  நல்லது ... இல்லை எனக்கு சினிமாவே  வேண்டாம் நான் முதலமைச்சர் ஆக போகிறேன் என்று அரசியலில் இறங்கி விட்டால்  தமிழ் சினிமாவுக்கே நல்லது)




Wednesday, December 8, 2010

பிரபலங்களின் பயோடேட்டா

குமுதம்ல வந்துகிட்டு இருக்கிற பயோடேட்டா பகுதி நான் விரும்பி படிக்கும் ஒன்று ... அதே போல நானும் எழுதவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை .. இப்ப அரசியல் சீசன் வேற ,வழக்கம் போல இதுக்கும் ஆதரவு கொடுக்க  நாலு பேராவது தயாரா இருப்பாங்கன்னு நம்பி அப்பப்ப நம்ம அரசியல்வாதிகளை பற்றி பயோ டேட்டா எழுதலாமேன்னு முடிவு பண்ணிட்டேன் ... ...

இது முதல் பதிவு என்பதால் இந்த முறை நம்ம அம்மாவும் , சூப்பர் ஸ்டாரும், அடுத்த முதல்வர் விஜய் அவர்களும்  அவங்க பயோடேட்டாவ சொல்ல போறாங்க ...

முதலில் அம்மா

பெயர் : அம்மா

புனை பெயர் : அதுவும் அம்மா

சமீபத்திய தொழில்: போராட்டம் நடத்துவது

நீண்ட கால் தொழில் : கொடநாட்டில் ஓய்வெடுப்பது


நண்பர்கள் : தன காலில் விழும் அனைவரும்

எதிரிகள் : ஒரு பரம்பரை முழுவதும் 

அடிமைகள் : கூட்டணி கட்சி தலைவர்கள்

நம்புவது : ராகுல் மற்றும் இளங்கோவன்

நம்பாதது : அன்னையை


விரும்புவது : மக்களின் மறதி

வெறுப்பது : மக்களின் பணத்தாசை

சமீபத்திய சாதனை : மதுரையில் மக்கள் வெள்ளம்

நீண்டகால சாதனை : தனி ஆளாக கட்சியை கட்டிக்காப்பது

சமீபத்திய சந்தோசம் : ஸ்பெக்ட்ரம்

நீண்டகால சந்தோசம் : இறந்த பின்னும் MGR ரசிகர்கள் அவருக்காக  ஒட்டு 
போடுவது


அடுத்து நம்ம சூப்பர் ஸ்டார்


பெயர் ; சிவாஜி ராவ் கெயிக்வாட்

புனைபெயர் : ரஜினிகாந்த்

பிடித்த பெயர் : சூப்பர் ஸ்டார்

பழையதொழில் : பஞ்ச் வசனம் பேசுவது படங்களில்

புதியதொழில் : பஞ்சராகி வசனம் பேசுவது  மேடைகளில்

நண்பர்கள் : இமயமலை ஞானிகள்

எதிரிகள் : மேடையில் அவர் பக்கத்திலேயே இருப்பார்கள்

ரொம்ப நல்லவர்கள் : ரசிக கண்மணிகள்

சமீபத்திய கடவுள் : பால்தாக்ரே

நீண்டகால கடவுள் : பாபா

பிடித்தது : விசில் அடிக்கும் ரசிகன்

பிடிக்காதது :  கேள்வி கேட்கும் ரசிகன்

சமீபத்திய எரிச்சல் : பிரியாணி கேட்ட ரசிகன்

நீண்டகால எரிச்சல் : அரசியலுக்கு கூப்பிடும் ரசிகன்  

சமீபத்திய சாதனை : 150 கோடியில் தமிழில் ஒரு படம்

நீண்ட கால சாதனை : தியேட்டர்களை வாழ வைத்தது ...

சமீபத்திய சந்தோசம் : மகளின் திருமணம்

நீண்ட கால் சந்தோசம் : என்றும் சூப்பர் ஸ்டார் பட்டம்


அடுத்து நம்ம இளையதளபதி விஜய்


பெயர் : ஜோசப் விஜய்

பிடித்த பெயர் : இளையதளபதி

விரும்பும் பெயர் : முதல்வர் விஜய்

நண்பர்கள் : அவர் அப்பா மட்டுமே

எதிரிகள் : அதுவும் அவர் அப்பா மட்டுமே

பிடித்த விஷயம் : உளறுவது பேட்டிகளில்

பிடிக்காத விஷயம் : நடிப்பது படங்களில்

நம்புவது : நடிகைகளின் சதையை

நம்பாதது : இயக்குனரின் கதையை

பிடித்த விசயம் : ரீமேக் 

பிடிக்காத விசயம் : நஷ்டத்தை சரிகட்ட பணம் கொடுப்பது 

சமீபத்திய திட்டம் : முதல்வர் ஆவது

நீண்டகால திட்டம்: அமெரிக்க ஜனாதிபதி ஆவது

சமீபத்திய சாதனை : மலை உச்சியில் இருந்து அடிபடாமல் குதிப்பது

நீண்டகால சாதனை : ஹிட்டே கொடுக்காமல் அம்பது படம் எடுத்தது

சமீபத்திய எரிச்சல் : காங்கிரசில் மூக்குடைபட்டது

நீண்டகால எரிச்சல் : அரசியலில் எவனும் கண்டுகொள்ளாதது

ஆக விரும்புவது : ரஜினியாக

ஆகி கொண்டு இருப்பது : டி .ஆராக

சமீபத்திய பெருமை : டாக்டர் பட்டம் வாங்கியது  

சமீபத்திய அசிங்கம் : அதே பட்டத்தை விஜயகாந்தும் வாங்கியது  

                                                                                                                   --- (தொடரும்)

LinkWithin

Related Posts with Thumbnails