Followers

Copyright

QRCode

Saturday, August 29, 2009

வாரான் வாரான் பூச்சாண்டி



ஒரு வீடு இரு திருடர்கள்
அது அவர்களுடைய தொழில்.
கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.
நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல
அவர்களுக்கு தொழில் தர்மம்.
ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்
குறுக்கிடும் தொழில் தர்மம்.

ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,
கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.
அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.
யார் தொழில் செய்வது?
யார் பின்வாங்குவது?
முடிவு காண முடியவில்லை திருடர்களால்.

முதல் திருடன் சொன்னான்,
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.
இரண்டாம் திருடன் சொன்னான்
‘திருடுவது நம் உரிமை
அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.
அவன் முன் வாக்குப்பெட்டி.
யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி
வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய
அறிவு புகட்டப்பட்டது.
இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.
கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.

பின்குறிப்பு: கவிதையில் ‘திருடர்கள்’ என்கிற வார்த்தை
‘திருடர்கள்’ என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதை ‘அரசியல்வாதிகள்’ என்று யாராவது பொருள் கொண்டால்
அது நம் தவறல்ல.


இந்த கவிதையை எழுதியது இலங்கை பிரச்ச்சனைகாய் உயிர் நீத்த முத்துகுமார்




Wednesday, August 26, 2009

நம்ம ஹீரோகளுக்கு புடிச்ச வடிவேலு டையலாக்குகள்

ரஜினி: பில்டிங் ஸ்ட்ராங்கு ஆனா பேஸ்மட்டம் வீக்கு

கமல்: ரிஸ்க் எடுகுரதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்டுற மாதிரி

அஜித்: பிகினிங் எல்லாம் உண்ட நல்லாதான்யா இருக்கு, ஆனா பினிசிங் சரி இல்லையே

விஜய்: நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாய் போய் விட்டதே...

விக்ரம : இப்டி உசுபேத்தி விட்டு உசுபேத்தி விட்டு உடம்ப ரணகள படுத்திரானுகளே...

சூர்யா: ராஜ தந்திரங்களை கரைத்து குடித்து விட்டாயடா....

விஜயகாந்த்: என்ன இதுவரைக்கும் யாரும் அடிச்சதில்ல ... அது இந்த மாசம் நான் சொன்னது போன மாசம்

கார்த்திக்: வேணாம் விட்டுடு வலிக்கிது அழுதிடுவேன்

சரத் குமார்: மாப்பு வட்சிடாண்டா ஆப்பு

சிம்பு: இது வாலிப வயசு...

தனுஷ்: இது அண்ணன் கிழிச்ச கோடு... தாண்ட படாது...

ஜே. கே. ரித்தீஷ்: போங்க தம்பி போங்க எங்கள அடிச்சி அருவா கம்பு எல்லாம் டையர்டு ஆகி போய் ரெஸ்ட் எடுத்துகிட்டு இருக்குதுக நீங்க என்ன அடிச்சி பெரிய ரௌடினு பேரு வாங்க போறேங்கலாக்கும்...

சேரன்: எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்... இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிடானுகடா

நம்ம அரசியல்வாதிக,

மன்மோகன் சிங்: இவனுக மத்தியில உயிர் வாழ்றதே நமக்கு பெரிய வேலையா போட்சே...

கருணாநிதி : இன்னுமாடா இவங்க நம்மள நம்புராங்கே....

ஜெயலலிதா: மல்லாக்க படுத்துகிட்டு விட்டத்த பாக்குறது எவ்ளோ சுகம்....

ராமதாஸ்: போட்சா.. போட்சா... போட்சா....

அழகிரி: சூனா பானா... போ..போ.. போய்டே இரு ... நம்மள எவனும் ஒன்னும் பண்ண முடியாது ...

வை.கோ: ஒய் ப்ளட்.. சேம் ப்ளட்

Sunday, August 23, 2009

கந்தசாமி -- நொந்தசாமி



என்னத்த சொல்ல பாதி அந்நியன் மீதி சிவாஜி, வேற ஒண்ணுமே இல்ல சொல்லிக்க, விக்ரம் நல்ல நடிக்கிறார் ஆனா இந்த படத்துக்கு அது தேவையே இல்ல, ஸ்ரேயா பாவம் படு வேஸ்ட், இடுப்ப ஆட்டி நல்ல டான்ஸ் ஆடுறாங்க, அப்பஅப்ப வந்து விக்கிரம மெரட்டுராங்க , காதிலிக்கிற மாதிரி நடிகிறாங்க கடசில உண்மைலேயே காதலிகிறாங்க, வில்லனா ரெண்டு பேரு செம காமெடி பீசா இருக்காங்க, வடிவேலு காமெடி கை கொடுக்கல, இருந்தாலும் திரைல அவர பாத்தா மக்கள் சிரிக்றாங்க , இடைவேளை வரை பொறுமையா பாக்கலாம், அப்பறம் வரும் பாருங்க அந்த ஜெர்மனி சீன் , வடிவேலு பாணியில சொல்லனும்னா முடியல, அதுல சுசி கணேசன் வேற ஏதோ CBI officerஆ வராரு , அவரு ஏன் வராரு அப்டிங்கிறது அவருக்கு மட்டுந்தான் தெரியும் நமக்கு புரியவே இல்ல, அதும் விக்ரம் ஸ்ரேயாவோட அப்பாவோட பேங்க் அக்கௌன்ட்ட ஹேக் பண்ற சீன் செம காமெடி , நம்ம ஜிமெயில் அக்கௌன்ட் துக்கு கூட அத விட செக்யூரிட்டி அதிகமா இருக்கும் அவரு மூனே மூணு கேள்வில 45,000கோடிய அசால்ட அடிச்சிட்டு போய்டுவாரு, படத்துல ஒரே ஒரு ஆறுதல் பாடல்கள் மட்டுந்தான், தேவி ஸ்ரீ பிரசாத் பின்னிருக்காரு, ஆனா சில பாடல்கள் எடுத்த விதம் ரொம்ப சுமார். excuse me பாட்டு நான் ரொம்ப ஏமாந்து போனேன்.படத்தோட கிளைமாக்ஸ் இந்திய சினிமாக்கு ரொம்ப ரொம்ப புதுசு அப்டின்னு எதிர்பார்த்து போனா அதே அந்நியன் கிளைமாக்ஸ் .படத்தோட எடிட்டிங், கேமரா எல்லாமே சுமார்தான், அதும் அந்த ஜெர்மனி சீகுவன்சில ரொம்ப மோசம். சுசி கணேசன் என்ன நெனச்சி இந்த படத்த எடுத்தாருன்னு தெரில, தாணு நீங்க ரொம்ப நல்லவரு அவ்ளோதான்,
வில்லுக்கு அப்புறம் அதவிட மோசமான ஒரு படம் இது....

Friday, August 21, 2009

விஜய் ரஜினியாக முடியுமா?



விஜய் ரசிகர்களுக்கும், வெறியர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்...ரஜினி தளபதி என்பதால், இளைய தளபதி என்று பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் விஜய் சூப்பர் ஸ்டார் ஆகி விட முடியாது, ரஜினிக்கும் விஜய்க்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசங்கள் கீழே..
ரஜினி தன் ஸ்டைல், திறமையால் நடிக்க வந்தார்..
விஜய் அவரது அப்பாவின் மூலம் பின் வாசல் வழியாக வந்தவர்..
ரஜினியின் ஆரம்ப கால படங்களான அபூர்வ ராகங்கள், பைரவி, மூன்றுமுடுச்சுஉள்பட பல படங்களில் ரஜினியின் அபார நடிப்பை உலகறியும்..(இத்தனைக்கும்அப்பொழுது அவருக்கு சரியாக தமிழ் பேச வராது)..
விஜயின் ஆரம்ப கால படங்களான நாளைய தீர்ப்பு, விஸ்ணு, ரசிகன் போன்ற படங்களில் நாம் பார்த்தது மாமியாருக்கு சோப்பு போடும் மிட் நைட் மசாலாக்களை தான்.. (சங்கவியே சாட்சி)
ரஜினி பாலசந்தர், மகேந்திரன், பாரதி ராஜா போன்ற அபார இயக்குனர்களிடம் பாடம் கற்றவர்..
விஜய்க்கு பாடம் கற்பித்தவர் அவரது தந்தை, அது என்ன பாடம் என்பதை சொல்ல தேவையில்லை..
1980 களில் பில்லாவை தொடர்ந்து, முரட்டு காளை, போக்கிரி ராஜா , தனிகாட்டு ராஜா , நான் மஹான் அல்ல , புதுக்கவிதை , மூன்று முகம் , படிக்காதவன், தீ , வேலைக்காரன், தர்மத்தின் தலைவன், Mr. பரத் , மாவீரன் போன்ற ஹிட் களை கொடுத்துதான் அவர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றார்..
பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, கில்லி தவிர வேறு எந்த ஹிட் படங்களையும் விஜய் கொடுக்கவில்லை.. மற்ற சில, ஹிட் ஆக்கப் பட்டனவே தவிர, உண்மையான ஹிட் அல்ல என்பது அப்படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும்..
ரஜினி அப்போதைய சூப்பர் ஸ்டார் ஆனா புரட்சித் தலைவரை காப்பி அடிக்கவில்லை, (அவர் வழி தனி வழி)
விஜய் முதலில் சங்கவி ரசிகர்களை குறி வைத்தார், பின் ரஜினி ரசிகர்களை இப்பொழுது புரட்சித் தலைவரை..
ரஜினியோ, ரஜினியின் ஆட்களோ மீடியாவை மிரட்டியதாகவும், அவர் சம்பந்தப்பட்ட கருத்துகளுக்கு மீடியா மன்னிப்பு கேட்டதாகவோ ஒரு செய்தியும் இல்லை.
ஆனால் குமுதம், விஜய் டிவி யின் லொள்ளு சபா, மாலை மலர், தின மணி போன்றவை விஜய் மற்றும் அவரது தந்தையாரால் மிரட்டப்பட்டது உலகறியும்..
ரஜினி அமைதியானவர்
விஜய் அப்படி நடிப்பவர்..
எப்பொழுதும் ஊர்க் 'குருவி' - 'கழுகு' ஆக முடியாது.. உண்மையாய்சொல்லுங்கள் நடனத்தை தவிர விஜய் நடிப்பிலும், J.K. ரித்திஸ் நடிப்பிலும்என்ன பெரிய வித்தியாசம்???

Thursday, August 20, 2009

தல தலைதான்




இது நம்ம தல அஜித்தோட வரலாறு (எனக்கு தெரிஞ்சத) சொல்லுற பதிவு.... நீங்க நடிச்ச மொத படம் தெலுங்கு படமா போட்சு தல அதான் அத இதுவரைக்கும் பாக்க முடியல.... ஆனா தமிழ்ல உங்கள அறிமுக படுத்துன செல்வாவுக்கு நன்றி சொல்லியே அகனும் தல ,அமராவதில உங்கள இப்பவும் tvல பாக்கும் போது உங்க ஷார்மிங் என்ன ஆச்சர்ய பட வட்சிருக்கு தல, உங்க மொத படத்துலையே காதல காட்சிகளுல அருமையா நடிசிருப்பீங்க, அப்பறம் நீங்க நடிச்ச ரொம்ப படங்கள் (பவித்ரா , பாசமலர்கள் ...) பயங்கரமா ஊதிகிட்சு.... நீங்க அவ்ளோதான்னு அப்பவும் சிலர் சொன்னாங்க தல , நானும் அப்ப அத நம்பிட்டேன் ,,,சரி இவன் கத முடிஞ்சதுனு, ஆனா யாரும் கொஞ்சமும் எதிர்பார்க்காத நேரத்துல ஆசைல பட்டைய கேளப்புநீங்க தல, அப்பத்தான் உங்கள மேல எனக்கு கொஞ்சம் பிரியம் வந்தது தல , உங்கள பத்தி எது நியூஸ் வந்ததுனா ஆர்வமா கேக்குற அளவுக்கு, அடுத்து வந்த வான்மதி படத்த படம் வரதுக்கு முன்னாடியே, இந்த படத்த தியேட்டர்ல போய் பாக்கனும்னு முடிவு பண்ணி பாத்தேன் தல , அதுலயும் நீங்க ஏமாத்தல தல, அதுக்குள்ளே விஜய் அவரோட முன்னேற்றத்துக்கு உங்கள யூஸ் பண்ண அரம்பித்சாரு , அவரோட போட்டியாளரா உங்கள உருவகம் பண்ணி அவரோட ரசிகர்கள உங்க ரசிகர்களோட மோத விட்டு தன்ன வளத்துகிட்டு இருந்தாரு, அந்த கால கட்டத்துல நீங்க தந்த ரெண்டு படங்கள் கல்லூரி வாசல் , மைனர் மாப்பிள்ளை சூப்பெர் டூப்பேர் பிளாப், ஆனா அப்ப விஜய் பூவே உனக்காக படம் பயங்கரமான ஹிட், என்ன தல இப்டி ஆகிடுசெனு நாங்க எல்லாம் பீல் பண்ணிக்கிட்டு இருந்தப்ப மறுபடியும் ஒரு விஸ்வரூபம் எடுத்த தல காதல் கோட்டை மூலமா, அப்ப அந்த படத்துக்கு உனக்கு விருது தரலனாலும் பின்னாடி நீ வாங்குன பல விருதுகளுக்கு அதான் தல ஆரம்பம்...அப்பலாம் நாங்க விஜய் ரசிகர்கள பாத்தோம்னா சட்ட காலரா தூக்கி விட்டுடு பெருமையா நடப்போம் தல(இப்பவும்தான்).....ஆனா அதுக்கு பின்னாடி நீ வரிசையா கொடுத்த பிளாப் , அஞ்சி படம் நேசம், ராசி, உல்லாசம் , ரெட்டை சட வயசு ,பகைவன்னு ... அப்ப குமுதம்னு ஒரு பத்திரிகைல ஒரு கேள்வி பதில் வரும் தல ,அதுல ஒருத்தர் கேட்ட கேள்விக்கு பதில் இப்டி இருந்தது "அஜித்தா யாரு அது?" , அந்த நேரம் பாது விஜய்க்கு காதலுக்கு மரியாதை வந்து பயங்கரமான ஹிட்டு ,அவர் ரசிகர்களெல்லாம் எங்கள பழி வாங்க ஆரம்பிட்சிடனுக, அப்பத்தான் உனக்கு உன் நண்பன் சரண் கெடைச்சாரு ,
அவர் எங்களுக்கு தந்த பெரிய கிப்ட் "காதல் மன்னன்", அந்த படம் உங்க படத்துல உங்கள மட்டும் ரசிச்சு பாத்த மோத படம் தல.... அப்புறம் வந்த அவள் வருவாளாவும் எங்கள ஏமாத்தல தல, ஆனா பெரிய அளவுல அப்ப உனக்கு படம் வரல தல, மொதலுக்கு மோசம் இல்லாம ஓடுன படங்கள்தான் அப்ப வந்துச்சி தல , அப்ப விஜய்க்கு ஒரு படம் துள்ளாத மனமும் துள்ளும் வந்து பெரிய ஹிட் , அப்பவே எனக்கு தோனுச்சி தல உனக்கு ஒரு படம் கண்டிப்பா அமையும்ன்னு, ஆனா நாங்களே நெனச்சி பாக்காத அளவுக்கு ஒரு படம் பண்ணுன தல , மொத்த தமிழ்நாடும் உனக்குள்ள இவ்வளவு திறமை இருக்கான்னு ஆச்சர்யமா பாத்த படம் தல அது , "வாலி" அதுல டபுள் ஆக்சன்ல நீங்க பின்னி பெடல் எடுதுருப்பீங்க தல, நான் பாத்த தமிழ் படங்களையே டிரஸ், மேக்அப் ல எந்த வித்தியாசமும் இல்லாம முக பாவனைகள் , கண் அசைவுகளில் இரட்டை வேடங்களை வித்தியாச படுத்திய முதல் ஆள் நீங்கதான் தல.... ஆனா அப்பவும் சில பேரு உங்கள பத்தி தாறுமாறா சொல்லிக்கிட்டு இருந்தாங்க, உங்க முதுகுல ஆப்பரேஷன் பன்னுதுனால நீங்க நடக்க முடியாம படுத்த படுக்கையா இருக்குறதாவும் இனிமே நீங்க எழுதிருகவே முடியாது உங்க கத அவ்ளோதனு எழுதுனாங்க தல, மறுபடியும் உங்க நண்பர் சரண் அட்டகாசமா ஒரு அமர்க்களம் thanthaar உங்களுக்கு, ஒரு ஆக்ஷன் ஹிட் பிளஸ் ஒரு காதல் மனைவி அந்த படம் மூலமா உங்களுக்கு கெடச்சாங்க,, அந்த படத்துல வாசுவா வர உங்கள






மறக்க முடியாது தல, கோபம், ஏமாற்றம், காதல், பாசம் , துரோகம் இப்டி எல்லாத்தையும் உங்க கண்ணே காட்டும் , அந்த படத்துக்கு பின்னாடி நான் பெருமையா சொல்லிகிட்டேன் நான் உன்னோட ரசிகன்னு,
அந்த படத்துக்கு பின்னாடி உன் காட்டுல சரியான மழை, தொட்டதெல்லாம் ஹிட் . முகவரி , நீ வருவாய் என, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இப்டி எல்லாமே சூப்பர் ஹிட். அதுலயும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்துல "சந்தன தென்றலை " பாட்டு இன்னைக்கி வரைக்கும் என்னோட ஏன் உங்க ரசிகர்கள் எல்லாரோட favorite பாட்டுனா அதுதான் . இப்டி நாங்க எல்லாம் பயங்கர குஷியா இருந்தப்பதான் தல அடுத்த சரவெடியா வந்தது "தீனா", அந்த படத்த மொத நாள் மொத ஷோ பாத்த அனுபவம் இன்னமும் என் மனசுல அப்டியே இருக்கு தல சீனுக்கு சீன் அதிரடிதான், அதுவும் அந்த தீம் மியூசிக் "தினக்கு தினக்கு தின தீனா" அன்னைக்குதான் தல எங்களுக்கு உண்மைலேயே தீபாவளி கொண்டாட்டம்... அடுத்து வந்த சிடிசன் நீ போட்டு வந்த வித விதமான கெட்அப் காகவே நாங்க எல்லாம் பல தடவ பாத்தோம். ஆனா என்னதான் நீ கஷ்டப்பட்டு நடிச்சாலும் எங்களுக்குள்ள ஒரு சின்ன குறை இருந்துச்சி தல, விஜய் படத்துல எல்லாம் பாட்டு நல்லா இருக்கும் உன்னோட படங்களுல பாட்டுக்கு அவ்ளோ முக்கியத்துவம் இருக்காதுன்னு..அப்பத்தான் நம்ம எழில் அண்ணனும் வித்யாசாகரும் சேந்து நமக்கு ஒரு சூப்பர் ஹிட் ஆல்பம் கொடுத்தாங்க தல , "பூவெல்லாம் உன் வாசம்", அதுல்ல வர காதல் வந்ததும் , திருமண மலர்கள் பாட்டெல்லாம் சன் மியூசிக்ல வராத நாளே இல்ல தல, அப்ப எல்லாம் சன் மியூசிக்ல உன் பாட்ட போடவே மாட்டானுக, இந்த படம் வந்துதான் அந்த டிரென்ட்ட மாத்தி வுட்டுச்சி..... இதுக்கு அப்புறம்தான் தல நமக்கு பயங்கர சோதனை காலம் ஆரம்பம் ஆச்சி....

(தொடரும் )

Tuesday, August 11, 2009

காதல் வந்ததும்

எனக்கு சில சமயங்களில் மனதுக்குள் எதோ ஒரு கவலை அமர்து கொண்டு துன்பபடுதினால் அதை துடைத்தெரிய பயன்படுவது இசையே. அதுவும் இசையை நல்ல பாடல் வரிகளோடு இணைத்து கேட்கும்போது மனதிற்கு இதமாய் இருக்கும். இப்படி பட்ட மனதை உருக்கி நம்மை முழுசாய் ஆட்கொள்ளும் இசை பெரும்பாலும் நம் தமிழ் உலகில் அய்யா ராசாவிடம் இருந்தோ அல்லது நம்ம ரஹுமாண்ட இருந்தோதான் வரும்.... ஆனால் அத்தி பூத்தாற்போல சில சமயங்களில் மற்ற இசை அமைபாளர்களிடமிருந்தும் வரும். அதில் முக்கியமானவர் நம்ம வித்தியாசாகர்.

காதல் வந்ததும் கன்னியின்
உள்ளம் காதலை
யாருக்கும் சொல்லுவதில்லை


என்று தொடகுங்கும் அந்த பாடல் அவரின் திறமைக்கு ஒரு சோறு....

தனக்கு விருப்பமான ஆணின் மீது தனக்கு காதல் வந்ததும் காதலி பாடும் அந்த பாடல் காதலின் அனுபவத்தை கேட்கின்ற நமக்கும் தந்து விட்டு போகும்...
இதோ அந்த பாடலின் முழு வரிகளும்.

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு..
சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு..
தன்னன்னானன...தன்னன்னானன..தன்னன்னானன...தன்னன்னானன..
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை..ஆ..ஆ..ஆ....

தூங்காத காற்றே துணை தேடி ஓடி
என்சார்பில் எந்தன் காதல் சொல்வாயா
நில்லாத காற்று சொல்லாது தோழி
நீயாக உந்தன் காதல் சொல்வாயா
உள்ளே எண்ணம் அரும்பானதா
உன்னால் இன்று ருதுவானவ
நானதை சோதிக்கும் நாள் வந்தது..
தன்னன்னானன...தன்னன்னானன..தன்னன்னானன...தன்னன்னானன..

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
புத்தகம் மூடிய மயிலிறகாக
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை

நீ வந்து போனால் என் தோட்டம் எங்கும்
உன் ஸ்வாச வாசம் வீசும் பூவெல்லாம்
நீ வந்து போனால் என் வீடு எங்கும்
உன் கொலுசின் ஓசை கேட்ட்கும் நாளெல்லாம்
கனா வந்தால் மெய் சொல்கிறாய்
கண்ணில் கண்டால் பொய் சொல்கிறாய்
போவென்னும் வார்த்தையால் வா எங்கிறாய்
தன்னன்னானன...தன்னன்னானன..
தன்னன்னானன...தன்னன்னானன..


"தூங்காத காற்றே துணை தேடி ஓடி
என்சார்பில் எந்தன் காதல் சொல்வாயா" இந்த வரிகளுக்கு நான் அர்த்தம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வைரமுத்துவின் அழியா கவிதைகளில் இதுவும் ஒன்று. சும்மா சும்மா பாட்டுல ஆரம்பத்துல இருந்து கடைசி வர சின்ன புள்ள தனமா ரீ ஆக்சன் காட்டிடு கடைசில நான் நீ இல்லாடி செத்து போய்டுவேன்னு கேன தனமா படம் புடிக்காம காதலர்களின் உண்மையான சீண்டல்கள், வெட்கங்கள், முகபாவனைகளை அழகாய் படம் பிடித்திருப்பார் இயக்குனர் எழில். காதலர்களும் காதலிக்க ஆசைபடுகிரவர்களும் கண்டிப்பாய் கேக்க பாக்க வேண்டிய பாடல் இது.

Thursday, August 6, 2009

கௌண்டர் ஸ்பெஷல் (விஜய்)



தன்னுடைய அடுத்த  படத்துக்காக விஜய் கதை கேட்டுகொண்டிருப்பதை கேள்விப்பட்டு நம்முடைய கோடம்பாக்கத்து மசாலா பேக்டரிகள் மசாலா அரைக்க அவரை தேடி செல்கின்றனர்.... கூடவே நம்ம அண்ணன் கவுண்டமணியும் இருக்காரு...
முதல் ஆளா  நம்ம அண்ணன் பேரரசு வராரு ....
பேரரசு: கவலைபடாதீங்க விஜய் உங்க படத்த உலகமே கொண்டாடுற மாதிரி எடுத்துருவோம்...

கவுண்டமணி: அடேயப்பா இவரு பெரிய ஸ்பீல்பெர்க்கு இவரு படம் எடுத்தா உலகமே கொண்டடபோது... நீ ஒரு மொள்ளமாரி, அவன் ஒரு முடிச்சவிக்கி... டேய் உன் ரேஞ் என்னவோ அதுக்கு எத்தமாரி மட்டும் பேசு...

பேரரசு: நீங்க அமெரிக்கால அணுகுண்டு தயாரிச்சிட்டு இருக்கீங்க...

கௌண்டர்: யாரு இவனா? ஏன்டா உனக்கு கோலிகுண்டாவது செய்ய தெரியுமா? அணுகுண்ட கண்ணால பாதுருக்கயா? அது என்னனாவது உனக்கு தெரியுமா? அதுளா என்ன மாதிரி scientist பண்ற வேலைடா ஜாங்கிரி தலையா.... இவனுக்கு தெரிஞ்ச ஒரே அணுகுண்டு சாப்ட பின்னாடி போடுவாங்களே அது மட்டுந்தான்....

பேரரசு: உங்களுக்கு ஒரே ஒரு தங்கச்சி அவள நீங்க ஈராக்குல கட்டி கொடுகிறீங்க.... அங்க இருக்குற தீவிரவாதிகலால உங்க தங்கட்சிக்கு பிரச்சன வருது.... உடனே நீங்க ஈராக்குக்கு பொய் அங்க இருக்குற டெர்ரரிஸ்ட்கள எல்லாம் பஞ்ச் டையலாக் பேசியே கொள்ளுறீங்க....

கௌண்டர்: ஏண்டா இவன் பஞ்ச் டையலாக் பேசி தமிழ்நட்டுகாரண கொன்னது பத்தாதுன்னு அமெரிக்காகாரனையும் கொல்ல போறீங்களா.... ஆண்டவா என்ன ஏன் இந்த கலுசட பயலுககூட எல்லாம் கூட்டு சேர வைக்கிற.... எங்க ஒரு டையலாக்எடுத்து வுடு பாப்போம்...

பேரரசு: டேய எச்சி துப்பி அணைக்க நான் தீக்குச்சி இல்லடா, எட்டி புடிக்க முடியாத எரிமல

கௌண்டர்: தம்பி கொஞ்சம் எழுதிரிசி திரும்பி நில்லு... (பேரரசு எழுதிரிசி நிக்க கௌண்டர் தன் ஸ்டைலில் அவரை எத்தி மிதிக்கிறார்) ( விஜையை பார்த்து)  இவனுககூடலம் சேந்த உன்ன உச்சி வெயில்ல பழநிமலை அடிவாரத்துல பிச்ச எடுக்க வுட்டுருவானுக,, இப்ப இருக்குற நெலமைல நீ போன அங்க இருக்குற பிச்சகாரன் கூட உன்ன சேத்துக்க மாட்டான்....

அடுத்து நம்ம தரணி கத சொல்ல வராரு

தரணி: விஜய் இந்த படம் வந்த பின்னாடி அடுத்த முதல்வர்னு சொல்லிக்கிட்டு இருக்குற உங்க ரசிகர்கள் எல்லாம் உங்கள அடுத்த பிரதமர்னு சொல்ல அரம்பிட்சிடுவாங்க... அப்டி ஒரு பவர்புல் கத இது....

கௌண்டர்: என்னது அடுத்த பிரதமரா? உலக மகா பில்ட்டப்புடா சாமீ....

தரணி: நம்ம நாட்டோட பிரதமர பின்லேடன் கடத்திட்டு போயிடுறான்.. அப்பா ஆப்கானிஷ்தானுக்கு கபடி விளையாட போயிருந்த நீங்க பின்லேடன அடிச்சி போட்டுடு நம்ம பிரதமர கூப்பிட்டு ஆப்கானிஷ்தானுல ரோட் ரோட அலையுறீங்க... ....

கௌண்டர்: ஐயய்யோ.... ஏண்டா பின்லேடன என்ன உங்க வீட்டுல பேப்பெர்போடுற பையன்னு நெனட்சியா.... அமெரிக்கால அணுகுண்டு போடுறவன்டாஆனானப்பட்ட அமெரிகாகரனே அவன ராக்கெட்டு விட்டு தேடியும் கெடைக்க மாட்டேன்றான்.... இந்த பேரிக்கா தலையன் கண்டுபுடிசிடுவானா? எழுந்திரிச்சி வந்தேன் ஏறி மிதிச்சிடுவேன்... ஓடி போய்டு ....(விஜயை பாத்து) இன்னொரு தடவ கத கேட்டு சொல்லுங்கன்னேனு இந்த மாதிரி பசங்கள கூப்டுடு வந்த தெரு நாய விட்டு கடிச்சி கொதறி புடுவேன்....

விஜய்: சரிங்கண்ணா அப்டினா நீங்களே நல்ல கதையா சொல்லுங்க...

கௌண்டர்: அப்டி கேளுடா... இதுக்குதான் ஊருக்கு ஒரு ஆல் இன் ஆள் அழகு ராஜா வேணும்கிறது.... நீ என்ன பண்ற செந்தில் நடிச்ச படத்தையெல்லாம் வங்கி பாக்குற... அடுத்த படத்துல இருந்து நீதான் எனக்கு செந்தில்... அவன் ஹீரோவா நடிக்க போனதுல இருந்து அடிக்க ஆள் இல்லாம எனக்கு ஒரே கஷ்டமா இருக்கு....
விஜய் : யார பாத்து என்ன சொல்லுற? தமிழ் நாட்டுல என்ன பாத்து காமெடியனா நடிக்க சொன்ன மொத ஆளு நீதான்...

கௌண்டர்: அது என்னடா எதுகேடுதாலும் ஒரு பஞ்ச் டையலாக்கு.... நீ நடிச்ச படத்த எல்லாம் பாதுருக்கயடா?

விஜய் : இல்லனா அந்த ரிஸ்கெல்லாம் எடுக்குறது கெடையாதுனா... நடிகிரதோட மட்டும்தாண்ணா,, அதையெல்லாம் பாக்குறது கெடையதுனா?

கௌண்டர்: என்னது நடிக்கிறயா?  நீ பண்றதெல்லாம் நடிகிரதுனா அப்ப நம்ம நடிகர் திலகம் பன்னுனதேல்லாம்....ஆம்மா உண்ட ரொம்ப நாளா ஒரு கேள்வி கேக்கனும்னு நெனசிருந்தான்.... புதிய கீதைனு ஒரு படம் நடிச்சையே அந்த படத்தோட கத என்னடா?

விஜய்: எண்னனா இப்டி கேக்குறீங்க.. ஊருக்கு நல்லது பண்ண நமக்கு நல்லது தானா நடக்கும் இதுதான்னா அந்த படத்தோட கத....

கௌண்டர் : அதுல என்னடா பைக் ஸ்டாண்ட் தட்டி விட்டு கீழ விழுகுற.. இந்தியாலேயே பைக் ஸ்டாண்ட் தட்டி விட்டு கீழ விழுந்த ஒரே ஹீரோ நீ மட்டுந்தாண்டா...

விஜய்: அதெல்லாம் வித்தியாசமா இருக்கட்டுமேனு வட்சதுன்னே...
கௌண்டர்: சரி விடு எதாவது ஒரு படதுலையது கெட் - அப் மாத்தி நடிசிருக்கயா

விஜய்: என்னன்னா இப்டி கேட்டுடீங்க... அந்த படத்துல ஆறு விரல் வச்சி நடிசிருப்பேனே பாக்கலையா நீங்க....

கௌண்டர்: ஒன்ன எல்லாம் காமெடியனா நடிக்க கூப்டதுல தப்பே இல்லடா...
அது சரி ஏன் எப்ப பாத்தாலும் உயரமான எடத்துல இருந் கீழ விழற மாதிரியே நடிக்கிற , சினிமாலயும் நீ மேல இருந்து கீழ விழுந்துகிட்டு இருக்கங்கிரத  சிம்பாலிக்கா காட்டுரயா?சரி சரி நீ உன் படத்துக்கு சுறான்னு பேரு வச்சதுல இருந்து கடல்ல இருக்குற சுறா மீனெல்லாம் தற்கொல பண்ணிகிடுசாமே ஏன் உனக்கு இந்த கொலைவெறி...


விஜய்: (கோபமாக) சாமிகிட்ட மட்டுந்தான் சாந்தமா பேசுவேன் உன்ன மாதிரி சாக்கடகிட்ட எல்லாம் இல்ல...

கௌண்டர்: உனகெல்லாம் கௌண்டமணி உத பத்தாதுடா வேற வேற பின்லேடன் படதாண்டா  வேணும்.... சீ இவனுக கூட  சேந்து  எனக்கும் பஞ்ச்  டயலாக் பத்திகிடுசே... இனிமே இவனுக கூட எல்லாம் சவகாசமே வச்சிக்க கூடாதுடா சாமி... 
ஷோவை அவசர அவசரமாக முடித்து கொண்டு பின்வாசல் வழியே ஓடுகிறார் கௌண்டர்

(கவுண்டர் ஸ்பெஷல்  அடுத்த சிறப்பு விருந்தினர் வேற யாரு நம்ம தலதான்)


Wednesday, August 5, 2009

ஒரு காமடியனும் இன்ன பிற காமெடியர்களும்

வடிவேலு: தம்பி இன்னிள இருந்து நான் கட்சி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.... நீ ஆரம்பிச்சா முதல்வர் ஆக பத்து வருஷம், எனக்கு அஞ்சே வருஷம்....

விஜய்: கூட நடிகிரயேனு பாக்குறேன், இல்ல குருவி படத்த பத்து தடவ பாக்க வச்சி கொண்ணே புடுவேன்...

வடிவேலு: சரி விடு, நீ ஆரம்பிச்சா என்ன? நான் ஆரம்பிச்சா என்ன? எனக்கு மொத்ததுல இந்த நாடு உருப்படாம போகணும் அவ்ளோதான்....

(நான்: எப்பப்பா..... பதிவு எழுதி விஜைய அசிங்கபடுதுரதுல எவ்ளோ சுகம்.... அதுலயும் வடிவேலு காமடிய உல்டா பண்றதுல என்ன ஒரு ஆனந்தம்....)
------------------------------------------------------------------------------------------------
கவுண்டமணி: ச்சே போன்ன எடுத்தா ஒரே நச்சு நட்சுன்ரானுக.... எதோ வில்லுனு ஒரு விஜய் படமாம் அத விஜய் ரசிகர்களாலே பாக்க முடிலயாம் என்ன வந்து பாக்க சொல்லுறானுக... அட இதகூட விடுப்பா நயண்தராகண்டி பாத்துடலாம்... ஆனா விஜய் பாட்டுக்கெல்லாம் அவன்கூட சேந்து ஆட சொல்லுரனுகப்பா... நான் என்ன ஆடா இல்ல மாடா அவநோடெல்லாம் சேந்து ஆடுறதுக்கு... ச்சே ஒரே குஷ்டமப்பா சீ கஷ்டமப்பா....

விஜய்: போன் வயர் பிஞ்சி நாலு நாள் ஆட்சி.... பில்லு கட்ட காசு இல்ல... அதான் கட் பண்ணிட்டு போய்டனுக...

கவுண்டமணி: டேய் பேக்கிரி மண்ட தலையா.... எனக்கு தெரியாதா அது... இது என்னோட செல்போண்டா... போண்டா தலையா.... உன்னைலம் வச்சி கட்சி ஆரம்பிக்க போறானே அவன சொல்லனும்டா....

விஜய்: சரி அத விடுங்கண்ணே... இப்ப என்னோட "வேட்டைக்காரன் " பாட்ட கேளுங்கண்ணே " ஹேய் நான் அடிச்சா தாங்க மாட்ட நூருனாலு தூங்க மாட்ட"

கவுண்டமணி: டேய் நிறுத்துடா.... நான் மிதிச்சேன் நீ சட்னி ஆயடுவ... நாலு படம் ஊத்துன பொறகும் நாய்க்கு எகதாளத்த பாரு.. வேட்டைகாரன்னு பேரு வட்சவுடனே நீ எம்.ஜி.ஆர். ஆயடுவையடா... மவனே எட்டி மிதிச்சேன் ஏரியா தாண்டிபோய் விழுந்துடுவ...

-----------------------------------------------------------------------------------------------
விஜய்: நான் ஆட்சிக்கு வந்தால் வீட்டில் வேலை இல்லாமல் இருக்கும் என்னுடைய எல்லா ரசிகர்களுக்கும் டாக்டர் பட்டம் தந்து அவர்களுக்கு கிளினிக் ஆரம்பிக்க இலவசமாக நிலமும் தருவேன்....

விஜய் ரசிகர்கள்: இளைய தளபதி விஜய் வாழ்க!!! தமிழகத்தின் மருத்துவமே!!! எய்ட்ஸ்கிருமியை எரிக்க வந்த எரிமலையே வாழ்க!!!

விவேக்: அட பாவிகளா... டாக்டர் பட்டம்னா என்னனு தெரியுமாடா உங்களுக்கு.... அதுக்கெல்லாம் வருஷ கணக்கா உக்காந்து ஆராய்ச்சி பண்ணனும்டா... அத வச்சி வைதியம்லா பண்ண முடியாதுடா.... இது தெரியாம அவன்தான் அள்ளி விடுரன்னா நீங்களும் நம்புரீங்கலேடா... உங்கள எல்லாம் தௌசண்ட் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா....

விஜய்: இங்கே இருக்கும் பேருந்துகளையெல்லாம் ரயில் நிலையங்களாகவும்... ரயில்வே ஷ்டேசன்கள் எல்லாம் விமான நிலையங்களவும் மாற்றி காட்டுவேன்....

விவேக்: அப்டியே ஏர்போர்ட்ல எல்லாம் தண்ணிய நிரப்பி அதுல கப்பல் விடுவேன்னு சொல்ல வேண்டியதுதான? கேக்குறவன் உன் ரசிகன் மாதிரி கேண பயலா இருந்தா வேட்டைக்காரன் படம் ஆஸகார் வாங்கும்னு சொல்லுவடா நீ....ஏய் தமிழகமே இவனெல்லாம் கட்சி ஆரம்பிசித்தான் உன்ன காப்பதனுமா.... இதுக்கெல்லாம் ஒரு விடிவு காலமே கிடையாதாட...

கணினி வீரன்

நம்ம கம்பெனி பெஞ்சுல பருத்தி வீரனும் செவ்வாளையும் ஒக்காந்துட்டு இருக்காங்க. அந்த இடத்துல நம்ம டக்லஸ் அண்ணன் புதுசா சாப்ட்வேர் இன்ஜினியரா செர்த்துருக்கார். அங்க நடக்குற ஒரு நிகழ்ச்சி:
மேனேஜர் (பருத்தி வீரன் செவ்வாளையை பார்த்து): ஏண்டா இப்பிடி வெட்டியாவே பெஞ்ச தேச்சுட்டு இருக்கிங்களே.. போயி ஒழுங்கா எதாச்சும் புராஜெக்ட் பண்ணுங்கடா... எண்டா செவ்வாள கூடயே சுத்துரையே நீயாது அவனுக்கு கோடிங் எழுத சொல்லி தர கூடாது....
செவ்வாளை: எங்க சார் கேக்குறான்? கண்ட நாய்ங்க எல்லாம் புத்தி சொல்லும் வாடா, கோடிங் எழுதலாம்னு சொன்னா கேக்க மாட்டேங்கிறான் . இதோ இப்போ நீங்க சொல்லிட்டிங்கள்ள....
மேனேஜர்: 'ஏண்டா நக்கலா? ஒழுங்கா ஒரு ப்ராஜக்ட தேடி பிடுச்சு வேலைய பாருங்க டா!'
செவ்வாளை(டக்லஸ் அண்ணனை கைகாட்டி): அத மேனேஜர சொல்ல சொல்லுயா
மேனேஜர்: யார்ரா மேனேஜரு?
செவ்வாளை: இதோ நம்ம டக்லஸ் அண்ணே தான்
மேனேஜர் (டக்லஸ் அண்ணன பார்த்து ): ஏண்டா உன்ன நேத்து தான் ப்ராஜெக்ட்ல சேர்த்தேன். நீயா மேனேஜரு?
செவ்வாளை (மேனேஜர பார்த்து ): யோவ் மரியாதையா பேசு யா .. அவரே உன்ன பாவம்னு ப்ராஜக்ட்ல செதுருக்காரு. வெரட்டி விட்டுட போறாரு
மேனேஜர்: இந்த வெண்ண என்ன டா என்ன வெரட்டி விட ... (டக்லஸ் அண்ணன பார்த்து ) ஏண்டா பெஞ்சு பசங்க கிட்ட இப்டித்தான் சொல்லிட்டு திருஞ்சுட்டு இருக்கியா? கெளம்புடா மொதல்ல ப்ராஜக்ட்ல இருந்து ...
டக்லஸ் அண்ணன் (செவ்வாளையை பார்த்து ): சந்தோசமா?
செவ்வாளை: அப்பா நீ மேனேஜர் இல்லையா? (மேனேஜரிடம்) அவன் அப்பிடிதாங்க சொன்னான். பயபுள்ள பொய் சொல்லிட்டான் போல இருக்கு ....

LinkWithin

Related Posts with Thumbnails