Followers

Copyright

QRCode

Friday, April 30, 2010

மதுரை நாற்பது வருடங்களுக்கு முன்னாள் ..

ன்று நண்பன் ஒருவன் எனக்கு மதுரை மாநகரின் பழைய தோற்றம் பற்றிய  சில படங்களை மெயிலில் அனுப்பி வைத்து இருந்தான் ... எனக்கு மதுரை மாநகரம் மிகவும் பிடித்த ஒரு ஊர். அதற்க்கு பல காரணங்கள் உண்டு , சிறு வயதில் இருந்தே எனக்கு அந்த ஊரின் மேல் ஒரு பிரமிப்பு உண்டு , அது இன்னும் என்னை விட்டு அகலவில்லை... தெற்கு வாசல் , பெரியார் நிலையம் , கோரிப்பாளையம் , மாட்டுத்தாவணி , அண்ணா நகர், பசுமலை, பழங்காநத்தம் , திருப்பரங்குன்றம், காளவாசல், ஆரப்பாளையம் , புதூர் , அவனியாபுரம் என்று மதுரையில் ஊர் சுற்ற நிறைய இடங்கள் , நிறைய நண்பர்கள் எனக்கு உண்டு ... 

எனக்கு தெரிந்து இரவு எத்துனை மணிக்கு நீங்கள் மதுரையில் வந்து இறங்கினாலும் உங்களுக்கு எங்கு செல்ல வேண்டுமானாலும் பேருந்து இருக்கும் , நீங்கள் வயிறார சாப்பிட சுவையான சாப்பாடு கிடைக்கும். இந்த பெருமை மதுரையை தவிர தமிழ்நாட்டில் வேறு எந்த ஊருக்கும் கிடையாது...பக்தி மார்கத்திலும் மிக சிறந்த ஊர் எங்கள் மதுரை , மீனாட்சி அம்மன் கோவில் , திருப்பரங்குன்றம் முருகன் கோவில் , பெரிய பள்ளி வாசல் , செயின்ட் மேரி கத்தோலிக்க சர்ச் என்று அனைத்து மத கடவுள்களுக்கும் பிரபலமான ஊர் எங்கள் ஊர். என்னை போன்று மதுரையை நேசிக்கும் அனைவருக்காகவும் நம் மதுரையின் பழைய தோற்றம் அடங்கிய புகைப்படங்கள் இதோ ,








புது மண்டபம் மற்றும் ஏழு கடல் தெரு



தாமரை குளம் மற்றும் ராஜ அம்மன் சன்னதிகள்  

திருமலை நாயக்கர் மகாலின் ஒரு பகுதி (தற்போது மாவட்ட பதிப்பாளர் அலுவலகம் )



தெப்பகுளம் 


யானைமலை 


விளக்குத்தூண் 

வைகை கல்பாலம் 


வைகை நதி மண்டபம் 

ராணி மங்கம்மா அரண்மனை (தற்போது காந்தி மியூசியம்)



162 அடி தெற்கு கோபுரம் 


எழுகடல் தெரு - ராஜ கோபுரம் - புது மண்டபம் 


மேல இருக்கும் ஒவ்வொரு இடங்களை பற்றியும் தனித்தனியே ஒரு பதிவே போடலாம் , அவ்வளவு விஷயங்கள் உள்ளன அந்த இடங்களில், முடிந்தால் சில இடங்களை பற்றி மட்டும் எனக்கு தெரிந்த விபரங்களை இனி வரும் பதிவுகளில் தர முயற்சி செய்கிறேன்.


பிடிச்சிருந்தா இந்த புகைப்படங்கள் நிறைய பேரை சென்றடைய வோட்ட போடுங்க... 

Thursday, April 29, 2010

சுறா - ஹிட்டு இல்ல மச்சி அட்டு






நாளைக்கு வரபோவுது நம்ம தளபதியின் சுறா.... தமிழ் மக்கள் எல்லாம் இந்த படத்தோட tarilor பாத்துட்டு வாந்தி பேதி வந்து ஆஸ்பத்திரியில கெடக்குராங்கன்னு நெறைய பேரு இப்பவே வதந்திய கெளப்பி வுட்டுகிட்டு இருக்கானுக... அத எல்லாம் நம்பாதீங்க, நம்ம இளைய தளபதிய நீங்க எல்லாம் குடும்பத்தோட டீவீயில பாத்து ரசிக்கிறவங்க , அப்படியே நாளைக்கு திரை அரங்கத்திற்கும் குடும்பத்தோட போய் சுராவ பாருங்க... நம்ம தளபதி கண்டிப்பா உங்கள ஏமாத்த மாட்டாரு... 




உங்களுக்கு என்ன வேணும் , நீங்க எல்லாம் என்ன உலக படமா பாக்க போறீங்க , அந்த அளவுக்கு உங்களுக்கு அறிவு இருக்கா ? (உங்களுக்கெல்லாம் அது இருந்தா அங்காடி தெருவும் , நான் கடவுளும் இருநூறு நாள் ஓடி இருந்திருக்குமே?)உங்களுக்காகவே நம்ம தளபதி சுறா படம் எடுத்து வச்சிருக்காரு .... படம் ஆரம்பிச்ச உடனே தளபதி ஒரு பொண்ண காப்பாத்த பொருக்கிககூட சண்டைய போடுவாரு .... சண்ட முடிஞ்சதும் இவ்வளவு நாளா உங்க வீட்டுல பொடி பசங்க அடிக்கடி DVDஇல போட்டு கேட்டுகிட்டு இருந்த குத்து பாட்டு வரும் அதுல தளபதி வெறும் முண்டா பனியனும் முக்கா பேண்டும் போட்டுகிட்டு ஆடுவாரு ... அத பாத்துட்டு உங்க வீட்டு நண்டு சுண்டு எல்லாம் போடுற ஆட்டத்த பாத்தா உங்களுக்கும் சந்தோசமா இருக்கும் ... (காசு கொடுத்து படம் பாத்தா சந்தோசமா இருக்கனும்ல... நம்ம தளபதி படம் பாத்த உங்களுக்கு அது கண்டிப்பா இந்த வழியில கெடைக்கும் )


பாட்டு முடிஞ்சதா அப்புறம் என்ன நீங்க எல்லாம் ஆவலா எதிர்பாத்துகிட்டு இருந்த தளபதியோட வலது கை அண்ணன் வடிவேலு வருவாரு... அவரும் அண்ணனும் சேந்து நெறைய காமெடி பண்ணுவாங்க.. அது நல்லா இருக்கோ இல்லையோ நீங்க சிரிப்பீங்க , நமக்கு அந்த அளவு நகைசுவை உணர்வு கெடையாது பாருங்க ... வடிவேலு முகத்த டீவீயில பாத்தாலே சிரிக்கிற மக்கள்தான நாம , அது தெரிஞ்சிதான தளபதி முக்கியமான படங்களுள எல்லாம் வடிவேலுவ கூட சேத்துகுவாறு ... அப்புறம் தமன்னா அக்கா வருவாங்க அவங்கள பாத்த வுடனே இவ்வளவு நேரமும் கடுப்பா உக்காந்துகிட்டு இருந்த உங்க வீட்டு வயசு பசங்க குசியாகிடுவாணுக ( அவனுகளையும் குசிபடுத்தனும்ல .. சூப்பர் ஸ்டார் படம்னா எல்லாருக்கும் புடிக்கணும் ... )


அடுத்த அர மணி நேரத்துக்கு நம்ம தளபதி தமன்னா அக்காவ பாத்து வித விதமா ஜொள்ளு விட்டுகிட்டு இருப்பாரு .... அத பாத்து அந்த பசங்களுக்கு சூடு ஏறி போகும்... அப்பறம் என்ன அந்த சூட்ட தணிக்க ஒரு ஜாலி பாட்டு வெளிநாட்டுல , அதுல தளபதி ஆடுற டான்ச பாத்து உங்க வீட்டு வயசு பொண்ணுங்க கிறங்கி போய் கெடக்குங்க .... அப்புறம் என்ன நடக்கும் , இதுகூட தெரியாதா உங்களுக்கு , எத்தன ரஜினி படம் பாத்திருப்பீங்க நீங்க , வில்லன் கோஷ்டி கதைக்குள்ள வருவானுக , 


தளபதி அவனுகள பாத்து பஞ்ச் வசனமெல்லாம் பேசுவாரு ... நீங்களும் அத கேட்டு வெறி ஏறி போய் கெடப்பீங்க (பேசுற தளபதி மேல இல்லீங்க , அவருக்கு கெடுதல் பண்ணுற வில்லங்க மேல) , இந்த நேரத்துலதான் வில்லனுக சூழ்ச்சி பண்ணி நம்ம தளபத்திய தோற்கடிச்சிராணுக... நம்ம தளபதி வீடு , காதல் , சொத்து சுகம் எல்லாத்தையும் விட்டுட்டு நடு தெருவுல நிப்பாரு ... அத பாத்துட்டு உங்க குடும்பமே கண்ண கசக்கிகிட்டு உக்காந்து இருக்கும் ... அந்த ஸீன் வரும் போது படம் ஆரம்பிச்சி ஒன்னே கால் மணி நேரம் ஆகிருக்கும் , உங்க வீட்டு குட்டி பையன் மம்மி பாத்ரூம் போகணும்னு அடம் பிடிக்க ஆரம்பிப்பான், கரெக்டா அந்த நேரத்துல நம்ம தளபதி வில்லன் வீட்டுக்குள்ள புகுந்து பஞ்ச் வசனம் பேசி அவன்கிட சவால் விட்டுட்டு வீட்ட விட்டு வெளிய வருவாரு இடைவேளை விட்டுடுவாணுக.... (பின்ன சூப்பர் ஸ்டார் ஆகணும்னா மக்களோட மனச மட்டும் இல்ல அவங்களுக்கு எப்ப எப்ப பாத்ரூம் வரும் . எப்ப தம் அடிக்க போவாங்க இப்படி எல்லாத்தையும் புரிஞ்சி வஞ்சி அதுக்கு ஏத்த மாதிரி படம் தரனும்ல... நம்ம தளபதி அதுல கில்லாடி)


அப்பறம் என்ன pop corn, ice cream, cool drinks , முட்ட போண்டா இப்படி எல்லாத்தையும் சாப்டுட்டு , நம்ம தளபதி அடுத்து என்ன பண்ண போறாரோன்னு ஆவலா உக்காந்துகிட்டு இருப்பீங்க... பக்கத்து தியேட்டருல அங்காடி தெரு படம் ஓடிகிட்டு இருக்கும் , அந்த சத்தத கேட்டுட்டு , ச்சே போன வாரம் அந்த படத்துக்கு போனதுக்கு போகாமலே இருந்திருக்கலாம் , ஒரு பாட்டும் சரி இல்ல , நல்ல சண்ட இல்ல , குடும்ப செண்டிமெண்ட் இல்ல , குத்துபாட்டு இல்ல இந்த வாண்டு படமே பாக்கல தூங்கிட்டான் ,என்ன படம் எடுத்து வட்ச்சிருக்காங்க, இன்னைக்கு பாரு எப்பிடி குதிச்சிகிட்டு இருக்கான்னு நீங்க சொல்லிக்கிட்டு இருக்கும்போதே தளபதி டாட்டா சுமோல வந்து எறங்குவாறு ... சங்கர் மகாதேவன் குரலுல பேக் கிரௌன்ட்ல தளபதி ரசிகர்கள உசுப்பேத்துற மாதிரி ஒரு பாட்டு வரும் ,, சும்மா தியேட்டரே அதிரும் விசில் சத்தத்தில,, அத கேட்டு உங்க வீட்டு குட்டி வாலும் மம்மி நானும் விசில் அடிக்கிறேன்னு சொல்லிக்கிட்டு வாயில கைய வச்சி ஊதிகிட்டு இருப்பான்.. வெறும் காத்துதான் வரும் இருந்தாலும் அவன பாத்து ஈன்ற பொழுதிலும் பெருதுவக்கும் தாயா மாறி போய் இருப்பீங்க , 

அந்த ஒரே பாட்டுல தளபதி வில்லனுக்கு இணையா பெரிய ரௌடியா வளந்திடுவாறு... தமன்னா அக்கா அவர தேடி வருவாங்க விஜய் அவங்கள யாருன்னே தெரியாதுன்னு சொல்லி அனுப்பிச்சிட்டு கைய வானத்த நோக்கி காட்டிக்கிட்டு " இந்த உசிரு எப்ப போகும்னு அவனுக்கு மட்டும்தான் தெரியும் , இந்த யுத்தத்துல நான் தனியாத்தான் நின்னு போராடுவேன் , அவ பாவம்டா அவளாது நல்லா இருக்கட்டும்"ன்னு பேசுற வசனத்த மறஞ்சி நின்னு தமன்னா கேட்டுருவாங்க... அப்புறம் என்ன ஸ்லொவ் மோஷன்ல ஓடி வந்து விஜய கட்டி பிடிக்க , அங்க போடுவோம்ல ஒரு குத்து பாட்டு ... அத பாக்குற உங்களுக்கு தமன்னாவும் விஜயும் சேந்த சந்தோசம் பிளஸ் ஒரு குத்து பாட்டுன்னு டபுள் ட்ரீட்... அப்புறம் வழக்கம் போல வில்லன் விஜயோட வளர்சிய பாத்து மெரண்டு போய் கெடப்பான் , அந்த கேப்புல தளபதி வில்லன போட்டு தள்ளிட்டு தமன்னா அக்காவ தள்ளிக்கிட்டு போய்டுவாரு ... சுபம் போட்டுடுவாங்க ... 


இது போதாதா உங்களுக்கு ... உங்களை என்ன கமலஹாசன், மணிரத்னம், பாலா படங்கள பாக்கவா கூப்புடுறோம் , அந்த படங்கலஎல்லாம் பாக்குறதுக்கு மூளைன்னு ஒன்னு வேணும் ... ரொம்ப யோசிக்க வப்பாணுக படத்துல , நமக்கு அதெல்லாம் தெரியாது ... அதான் சொல்லுறேன் நீங்க பாக்குற மாதிரி படம் தமிழ் சினிமாவுல தொடர்ந்து வரணும்னா நாளைக்கு உடனே போய் சுராவ பாத்திடுங்க .. கவலைபடாதீங்க தளபதி வித்தியாசமாலாம் படம் எடுத்து உங்களை கஷ்டபடுத மாட்டாரு... காலங்காலமா ரஜினி உங்கள பழக்கபடுத்தி வச்சிருக்கிற அதே ரூட்டுலதான் இவரும் போறாரு.. அதனால உங்களுக்கு புடிக்கும்... உங்களுக்கு மட்டும்தான் புடிக்கும் ... நீங்களே பாக்கலாட்டி வேற யாரு பாப்பா இவரு படத்த? ஆனா உங்க குடும்பத்துல தப்பி தவறி யோசிக்க தெரிஞ்ச ஒருத்தன் இருந்தான் அவன் செத்தான் .... அவனும் படத்த ரசிக்க முடியாது உங்களையும் ரசிக்க விட மாட்டான் அதனால படம் பாக்குறதுக்கு முன்னாடியே அவன கழட்டி விட்டுடுங்க , இல்லாட்டி உள்ள வந்து உங்க ரசனைய குறை சொல்லுவான்...



தளபதியின் சுராவை குடும்பத்துடன் கண்டு எல்லாரும் முக்தி நிலை அடிய எல்லாம் வல்ல கலாநிதி மாறன் அருள் புரிவாராக... 


Wednesday, April 28, 2010

தல பிறந்தநாள் கவிதை - happy b'day thala





அன்பு தலைக்கு அர்ப்பணம்
தன்னம்பிக்கை
கொண்டு உன்னை
நீயே உந்தி
கொண்டாய்.
ஆயிரம் சோதனை
உன்னை ஆட்டுவித்தாலும்
அயராது வெற்றி
கண்டாய்
அதனால் தான்
நீ தலை.
உன் காலடியில்
தவம்
கிடக்கிறது
கலை.
நீ மானுரு
ஏந்தி மண்ணில்
வசிக்கும்
மாமலை.
சில பேடிகள்
முயன்றால்
அடங்கி விடுமோ
உந்தன் அலை.
துடிப்பான நடிப்பை
கொண்டாய்.
சில நேரம்
நடிப்பையே
நாடி துடிப்பாய்
கொண்டாய்.
நீ வென்றது
நிழல் திரையில்
மட்டும் அல்ல.
எங்கள் நித்திரையிலும்
மன திரையிலும்
தான்.
உன்னை வேரோடு
சாய்க்க திட்டம்
தீட்டினார்கள்.
நீயோ விருட்சமாய்
வளர்ந்து வலிமை
கூட்டினாய்.
நீ வறுமையில்
வார்தெடுக்க பட்ட
தங்கம்.
அதை மின்னி
பறை சாற்று கிறது
உன் அங்கம்.
நீ விளம்பரம்
விழையாத
மனிதன்.
ஆனாலும் உன்னை
விளம்பர படுத்தி
விடுகின்றன.
உன் பணிவும்
துணிவும் கனிவும்.
யார் யாருக்கோ
யார் யாரோ
இருந்தார்கள்.
உச்சத்தில் தூக்கி
விட.
ஆனால் உனக்கோ
ஊரே இருந்தது.
உன் அச்சத்தை
போக்கி விட.
நீ எங்களில்
ஒருவன்.
இல்லை இல்லை
எங்களுக்காகவே
ஒருவன்.
உன் கரங்கள்
பிறருக்கு
கொடுத்து சிவப்பது
பிறருக்கு தெரிய
கூடாது
என்பதற்காகவா
இயற்கையிலேயே
சிவப்பாக பிறந்தாய்.
நீ கொடை யில்
மட்டுமல்ல
எங்கள் போன்று
ரசிக படையிலும்
சிறந்தாய்.
வேடிக்கைக்காக படம்
பார்க்க வந்தவரை
கூட நீ
வாடிக்கையாக வர
வைத்தவன்.
நீ துவண்டு
விடாத வீர
களிறு.
வெற்றியில் அமைதி
காத்தது போதும்.
ஒரே ஒரு முறை
பிளிறு.
புலி என நடிக்கும்
எலிகள் மண்ணோடு
மண்ணாய் புதைந்து
போகட்டும்.
எத்தனை தடைகள் 
வந்து போனாலும்.
இங்கு ஆட்சி
புரிந்து கொண்டு
இருப்பது என்னவோ
மன்னனாகிய
நீ தான்!

ஒரு அஜித் ரசிகர் எழுதிய கவிதை இது .... தலையின் பிறந்தநாளுக்கு அன்பு பரிசாய் அவர் ரசிகர்களுக்கு இதை சமர்பிக்கிறேன்....

Friday, April 23, 2010

சுறா புது படங்கள்...










மேல இருக்குற எல்லா படங்களும் இளையதளபதியின் சுறா பட ஸ்டில்கள்தான்.... என்னதான் நான் அஜித் ரசிகனா இருந்தாலும் மேல இருக்குற படங்கள பாக்குறப்ப விஜய் வேட்டைகாரனவிட இந்த படத்துல கொஞ்சம் அழகா இருக்காருங்கிற உண்மைய ஒத்துகிட்டுதான் ஆகணும்... சுறா படம் பெரிய வெற்றி அடைந்து அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும் நீண்ட நாளாய் இருக்கும் தோல்வி சோகம் நீங்க வாழ்த்துக்கள்.... 

Thursday, April 22, 2010

காதலித்து பார்... இப்படில்லாம் மொக்க போட வரும்...


       அழகியல் 

சேலை கட்டினால் 
அழகு கூடும் என்றேன் 
எனக்கா? என்று ஆசையாய் 
கேட்டாய் நீ ..
சேலைக்கு என்றேன் 
அழகின் உச்சத்தை 
உன் வெட்கத்தில் காட்டி 
விட்டு சென்றாய்...


ஹைக்கூ 

ஆசையாய் 
அணைத்து முத்தமிட்டதும் 
பரவியது உதட்டில் 
ஒரு வெப்பம் 
சிகரெட்...

தொலைபேசி 

உன் பிரிவில் 
துயரம் கொள்வது 
நான் மட்டும் இல்லை..
தினமும் இரவில் 
நீ தரும் முத்தத்தில் 
சூடாகிபோன என் 
தொலைபேசியும்தான்....

     தேவதை 

குடுகுடுப்பைகாரன் 
சொல்லியதை நான் நம்பியதில்லை 
உன் வீட்டின் முன் நின்று 
இங்கே ஒரு தேவதை வாழ்கிறது 
என்று அவன் சொல்லியதை கேட்கும் வரை...


    இரவில் நீ 

பெண்களுக்கு 
வெட்கம்தான் அழகு 
என்று எண்ணி இருந்தேன் 
உன்னோடு நான் தங்கிய 
அந்த இரவில் 
நீ பண்ணிய அடாவடிகளை 
காணும் வரை...


     யுத்தம் 

கொடுப்பவரும் 
வாங்கியவரும் 
சுகம் காணும் 
ஒரே யுத்தம் 
முத்த யுத்தம்....




கவிதை எழுதி ரொம்ப நாலு ஆச்சேன்னு நேத்து ரொம்ப பீல் பண்ணி எழுதின 
கவிதை இதெல்லாம் ....பிடிச்சிருந்தா கமெண்ட் போடுங்க... மொக்கையா இருந்தா திட்டியாவது போடுங்க.... யாருப்பா அது சொல்லிக்கிட்டு இருக்கும்போதே க்ளோஸ் பட்டன  அமுக்குறது... ஒரு ஓட்டயாது போட்டுட்டு போகலாம்ல....


Tuesday, April 20, 2010

தெக்குசீமையில என்ன பத்தி கேளு...


ஒரு படம் நடிக்க பத்து கோடி தரவும் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்... இந்த ஆறு மாத இடைவேளையில்   ஒரு படம் நடித்து பத்து கோடி சம்பாதித்து விடலாம்.ஆனால் தனக்கு கார் பந்தயங்களில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக படம் எதையும் ஒத்துகொள்ளாமல் போர்முல 2 பந்தயத்தில் கலந்து கொள்ள சென்று விட்டார் தல. அதில் அவருக்கு முதலில் ஸ்பொன்சர் செய்ய யாரும் முன்வரவில்லை. இருந்தாலும் தன சொந்த காசை செலவு செய்து அதில் கலந்து கொள்ளும் முடிவுக்கு வந்தார் தல , இறுதியில் eurosia நிறுவனம் அவருக்கு ஸ்பொன்சர் கொடுக்க முன்வந்து செலவில் குறிப்பிட்ட அளவை ஸ்பொன்சர் செய்த்தது. 


முதலில் நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் அவர் கடைசி இடங்களையே பெற முடிந்தது. மொத்தம் இருபத்து மூன்று பேர் கலந்து கொண்ட அந்த போட்டியில் அவர் கடைசியாகவே வந்தார்.  அவரை தவிர போட்டியில் பங்கு பெற்ற அனைவருமே தொழில்முறை போட்டியாளர்கள். அவர்களிடம் போட்டி போடுவதே தலைக்கு பெரிய கௌரவம்தான் .. 

அதன் பின்னால் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் தல பதினெட்டாவது இடத்தை பிடித்து அசத்தி விட்டார். அவருக்கு பின்னால் நான்கு தொழில்முறை வீரர்கள். இது குறித்து தல தெரிவிக்கையில் போட்டியில் "வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கலந்து கொள்ளவில்லை, இதில் பங்குபெருவதே பெரிய கௌரவம்தான், முதல் போட்டியிலேயே நல்ல இடம் பிடித்து இருப்பது சந்தோசம் தருகிறது, இதன் பின்னர் வரும் போட்டிகளில் இன்னும் சிறந்த வெற்றிகளை பெறுவேன்" என்று கூறினார்.  கண்டிப்பா அவர் ஒரு தொழில்முறை கார் பந்தய வீரராக இருந்தால் இன்னும் நிறைய சாதனைகளை புரிந்திருப்பார். 


சினிமாவில் சம்பாதித்த பணத்தை கொண்டு கட்சி ஆரம்பித்து , கோட்டையை பிடித்து இன்னும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவுகளோடு திரியும் இந்த சினிமா உலகில் , தன்னுடைய இளவயது கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக கார் பந்தயங்களில் பங்கேற்று குறிப்பிடத்தகுந்த வெற்றியும் பெற்று இருக்கிறார் தல. என்னை போன்ற தல ரசிகனுக்கு இது பெருமையான விஷயம். மேலும் இவரெல்லாம் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு என்ன செய்ய போகிறார் என்று சொல்லிய பல பேரின் வாயை இந்த வெற்றியின் மூலம் அடைத்து விட்டார் தல.. தன்னுடைய கன்னி போட்டியில் குறைந்த கால பயிற்சியை மட்டுமே கொண்டு இந்த இடத்தை பிடித்துள்ளார் தல... அவர் இனிவரும் போட்டிகளில் இதைவிட சிறந்த வெற்றிகளை பெற வாழ்த்துகிறோம் அவர் ரசிகர்களின் சார்பாய்... 

தல அடுத்து மே மாதம் மொராக்கோவில் துவங்கும் போட்டிகளில் கலந்து கொள்ள போகிறார்... எல்லா பந்தயங்களும் முடிந்த பின்னர்தான் , கௌதம் மேனனின் படம் ஆரம்பிக்க இருக்கிறது. உண்மையான ஹீரோவின் அடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துவோம்...


(என்னதான் தல கார்பந்தயங்களில் கலந்து கொள்ள சென்று இருந்தாலும் அவரின் ரசிகர்கள் அவரின் அடுத்த படத்த மிக சீக்கிரம் ஆரம்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க துவங்கிவிட்டனர். ஆனால் தல எல்லா போட்டிகளும் முடிந்த பிறகுதான் கால்ஷீட் தந்து உள்ளாராம். செப்டம்பர் மாதம் படம் துவங்கும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது. எது எப்படியோ தல அடுத்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் விதமாய் தந்தால் போதும்)

Monday, April 19, 2010

சுறா vs வாடா



பிச்சை எடுத்த பெருமாள தெரியுமா?... இந்த கலியுகத்துல அவர எங்கயாவது பாத்து இருக்கீங்களா? அது வேற யாரும் இல்ல நம்ம இளைய தளபதி அண்ணன் விஜய்தான்... பாவம் அவரு படத்த ஓட வைக்க என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு... கிட்டத்தட்ட கலாநிதி மாறன் காலுலே விழுந்துருவாறு போல...

அண்ணே அவனுகள பத்தி தெரியாதா உங்களுக்கு , அவனுக எடுத்த படம் எதுவுமே நல்லா இருந்தது கெடையாது அயன தவிர... ஆனா எல்லாத்தையும் அவங்கதான் ஓட வச்சத மாதிரி ஒரு கெத்த  டெவலப் பண்ணிகிட்டாணுக.... இப்ப ஒரு பேச்சிக்கு உங்க சுறா படம் தப்பி தவறி நல்லா இருந்து(யாருப்பா அது இது விஜய் படம்னு எனக்கு ஞாபகம் படுத்துறது , அதான் ஒரு பேச்சுக்குன்னு சொல்லிட்டேன்ல), உங்க ரசிக கண்மணிகள்( என்னது அவர் ரசிகர்கள் எல்லாம் "கண்ணில்லாதமணி"கள்தானா? யெப்பா நான் பதிவுலகத்துக்கு புதுசு ... விஜய் ரசிகர்கள பகைச்சிகிட்டு இங்க யாராவது கடையில டீ ஆத்த முடியுமா?) படத்த பத்து பத்து தடவ பாத்து ஹிட் ஆக்கிட்டாலும் நம்ம மக்கள் "அடிச்சது யாரு நம்ம கைப்பிள்ளைலங்கிற" ரேஞ்ச்ல "எடுத்தது யாரு நம்ம சன் பிக்ஷர்ஸ்லன்னு" பேசிருவாங்க...

கண்ணில்லாத மணிகளே கொஞ்சம் 15 வருஷம் பேக்ல போங்க... ரசிகன் விஷ்ணு செந்தூரபாண்டி படமெல்லாம் ஞாபகம் வருதா... அந்த படமெல்லாம் பத்து நாலாவது ஓடுச்சினா அது யாருக்காக?... சுவாதி , யுவராணி ஆண்டிகலுக்காகதான ஓடுச்சி... ஆனா நீங்க அப்ப என்ன சொன்னீங்க , உங்க தளபதியின் நடனத்திற்காகவும் , அவர் பாடிய பாடல்களுக்காவும் , அவர் அப்பா எழுதிய உலக தரமான கதைக்காகவும்தான் அந்த படம் ஓடிச்சுன்னு கண்கட்டி வித்தை காட்டுனீங்க... சுவாதி யுவராநிஎல்லாம் விட்ட சாபம்தான் இப்ப உங்க தலைவரை கண்டவங்கிட்ட எல்லாம் பிச்சை எடுக்க வக்கிது.... சுறா ஓடுச்சின்னா அது சன் பிக்ஷர்சின் மற்றுமொரு வெற்றி படம் , இல்லை என்றால் அது விஜயின் மற்றுமொரு தோல்வி படம் ...

சன் பிக்சர்சின் சுறா பீதியை கெளப்பிகிட்டு இருக்கிற இந்த நேரத்துல தமிழ் நாட்டை தாக்க ஒரு சுனாமியே வந்துகிட்டு இருக்கு ,, அது நம்ம குஷ்பூ அக்காவோட வூட்டுகாரரு அண்ணன் சுந்தர். சி நடிச்சி வெளி வர போற "வாடா" என்ற காவியம்தான்.. இந்த சுனாமியில சுறாவெல்லாம் சின்னா பின்னமாக போவது உறுதி... நாங்க எல்லாம் வேட்டைகாறனவே சமாளிச்சவங்க இதெல்லாம் சுசூப்பின்னு சொல்லுறவங்க எல்லாம் கீழ இருக்குற படத்த பாத்திட்டு உயிரோட இருந்தா , சுந்தர்.சி அண்ணன கொறச்சி பேசுனதுக்கு பரிகாரமா "வாடா" என்ற இந்த உலக தரமான திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கி படத்த பாக்க போங்க .. அங்க ஸ்ரீ ஸ்ரீ சுந்தரானந்தாவும் , மொக்கைமிகு விவேக்ஆனந்தாவும் (விவேகாணந்தர் மன்னிப்பாராக) உங்களை மோட்ச நிலை அடைய செய்து விடுவார்கள்.


இதோ அந்த படம் உங்களுக்காக ...





(நன்றி: ஜெட்லி)


வேட்டைகாரன்ல "வாடா" ன்னு வில்லன் ஒரு சவுண்ட் விடுவாரு அதுக்கே படம் பிச்சிகிட்டு ஓடுச்சி ... இப்ப அந்த பேர்ல ஒரு படமே வர போகுது ... தமிழ் நாடு தாங்காதுங்கன்னா?

Thursday, April 15, 2010

கொத்துங்க எஜமான் கொத்துங்க


கல்லூரியில் படித்த காலத்தில் எனக்கு இருந்த ஒரே பெரிய பொழுது போக்கு தமிழ் சினிமாதான். அதுவும் செமஸ்டர் விடுமுறையில் தினமும் இரண்டு படங்கள் பார்த்த அனுபவம் எல்லாம் உண்டு... கல்லூரி திறந்து விட்டால் கேட்கவே வேண்டாம் ,, திங்கள் கிழமை ஆனால் போதும் , என் நண்பர்கள் எல்லோரும் அருப்புகோட்டை பேருந்து நிலையத்தில் ஒன்று கூடி விடுவார்கள் காலையிலேயே.... 

எங்கள் கல்லூரியில் ஒரு வழக்கம் உண்டு வார இறுதியில் இரண்டு நாள் விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்பதற்காய் வெள்ளிகிழமை எங்களுக்கு ஏதேனும் ஒரு அசைன்மென்ட் கொடுத்து விடுவார்கள்.. அதை நாங்கள் திங்கள் கிழமை சுப்மிட் செய்ய வேண்டும்.... 

திங்கள் கிழமை காலையில் பேருந்து நிலையத்தில் கூடும் அந்த கூட்டம் அசைன்மென்ட் எழுதாத கூட்டம்.. அந்த கூட்டத்தில் எப்பொழுதும் நான் இருப்பேன்.... அசைன்மென்ட் எழுதாமல் கல்லூரிக்குபோனால் எப்படியும் ஆப்சென்ட்தான் போடுவார்கள், எதற்கு கல்லூரிக்கு பொய் கொண்டு என்று முடிவு செய்து அனைவரும் சினிமாவிற்கு சென்று விடுவோம்.. வார வாரம் திங்கள் கிழமை காலையில் ஒன்று மதியம் ஒன்று என்று இரண்டு படம் பார்த்து விடுவோம்... 

அதேபோல்தான் வெள்ளி கிழமை வந்து விட்டாலே எங்களுக்கு ஒரு அசதி வந்து விடும் , மூன்று நாள் தொடர்ந்து கல்லூரிக்கு சென்ற அசதி... அன்றும் சினிமாதான்... இப்படி நண்பர்களுடன் மட்டும் வாரா வாராம் நான்கு சினிமாக்கள் பார்த்த காலம் அது... நம்ம தமிழ் சினிமாவ பத்தி உங்களுக்கே தெரியும் வருசத்துக்கே நாலு நல்ல படம்தான் வரும் , இதுல நாங்க வாரத்துக்கு நாலு படம் பாத்தா , அதுல பெரும்பாலும் மொக்க படமாதான் இருக்கும் ...
அப்படி நான் பாத்த மொக்க படத்துல என்னால இன்னமும் மறக்க முடியாத சில படங்கள் பத்திதான் இந்த பதிவு..

1. ஆஞ்சநேயா :

                        நான் கல்லூரி காலத்துல (இப்பயும்தான்) தலையோட தீவிர விசிறி ... (முந்தி பாயிண்ட் அஞ்சுல சுத்துன விசிறி , இப்ப ரெண்டுலதான் சுத்திக்கிட்டு இருக்கேன் , காரணம் நிறைய ஆணி புடுங்க வேண்டி இருக்கு , தலையும் முந்தி மாதிரி நெறைய படங்கள நடிக்கிறது இல்லை) 

வில்லன் படம் முடிஞ்சி அடுத்த வருஷம் தலைக்கு வந்த ஒரே ஒரு படம்... விஜயகாந்த வச்சே வல்லரசுன்னு ஒரு ஹிட் படம் கொடுத்த மகாராஜன் இயக்குன படம் , எங்களோட பரம எதிரி விஜயோட திருமலையோட மோதுற படம் அப்படி இப்படின்னு படத்துக்கு பயங்கர எதிர்பார்ப்பு...படம் தீபாவளிக்கு ரிலீஸ்... மொத நாள் மொத ஷோ போய் உக்காந்தாச்சி.... 

ஆனா படம் ஆரம்பிச்ச பத்தாவது நிமிசமே தெரிஞ்சிருச்சி படம் அவ்ளோவ்தான்னு... அதுல தலையும் மீரா அக்காவும் பண்ணுற காமெடிய மிஞ்ச இனிமே எந்த காமெடியானாலும் முடியாது... சும்மா தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிது.... தல உனக்கு இதெல்லாம் தேவையான்னு தோணுச்சி... 

இடைவேளைக்கு முன்னாடி புல்லா இருந்த தியேட்டர் , இன்டர்வெல்லுக்கு அப்புறம் காத்தாடுச்சி.... நான் கடைசி வரைக்கும் எனக்கு முன்னாடி உக்காந்து இருந்த ஒரு சூப்பர் பிகருக்காக மட்டும்தான் உக்காந்து இருந்தேன்...  எனக்கு அந்த படத்தோட கத இன்னமும் தெரியாது , யாராவது தெரிஞ்சா பின்னூட்டத்துல சொல்லுங்க....

2. புதிய கீதை:

         நான் எவ்வளவோ கெஞ்சியும் என் நண்பன் கேக்காம என்ன வலுகட்டாயமா பாக்க வச்ச படம் இது .. அவன் ஒரு விஜய் ரசிகன் ... ஊரே விஜய் படத்த காறி துப்புனாலும் இவன் மட்டும் பயங்கரமா பாராட்டுவான்... இந்த படத்த பாத்துட்டு இதுல விஜய்க்கு கொடுத்திருக்கிற கேரக்டர் மாதிரி இதுவரைக்கும் எந்த ஹீரோவுக்கும் அமைந்ததில்லை என்று சொன்னான்... 

அதற்க்கு முன்னாடிதான் டும் டும் டும் என்று ஒரு படம் , ஊரே நல்லா இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சி...அவன் மட்டும்தான் படம் நல்லா இருக்குடா உனக்கு கண்டிப்பா பிடிக்கும் என்று சொல்லி என்னை பார்க்க வைத்தான்... எனக்கும் படம் பிடித்து இருந்தது... அதனால்தான் அவன் சொல்லியவுடன் நம்பி அந்த மட்டமான படத்துக்கு போனேன்...

 படம் ஆரம்பிச்சதுல இருந்து ரசிக்கிற மாதிரி ஒரு ஸீன் இப்ப வரும் அடுத்து வரும்னு எதிர்பாத்துகிட்டே இருந்தேன் ... கிரகம் அப்படி ஏதும் அந்த டைரக்டர் யோசிக்கவே இல்லை ... நான் ரசிச்ச ஒரே ஒரு ஸீன் கடைசியில சுபம்னு போடுற ஸீன்தான்... 

அந்த படத்துல விஜய் அடிக்கடி ஒரு வசனம் பேசுவாரு "தீ சாரதி"ன்னு.... மொத ரெண்டு தடவ அந்த வசனத்த அவர் பேசுனப்ப பொறுத்துகிட்டேன்... மூணாவது தடவ அவர் அந்த வசனத்த பேசும்போது கண்டிப்பா நாம திருப்பி ஒரு வசனத்த பேசணும்னு நெனசிகிட்டு இருந்தேன்...

அவரு அந்த வசனத்த அடுத்த தடவ பேசும்போது நான் என்ன சொல்லனும்னு நெனச்சேனோ அதே வசனத்த வேற ஒருத்தன் சத்தமா கத்துனான்... அது வரைக்கும் சலனமே இல்லாம இறுக்கமா இருந்த தியேட்டர்ல முதல் முறையா சிரிப்பலை ...
(அது என்ன வசனம்னு இங்க சொல்ல முடியாது ரொம்ப அசிங்கமான வார்த்தை வேணும்னா ஒரு சின்ன க்ளு தரேன் அந்த வார்த்த "பு" ல ஆரம்பிச்சி "தீ" ல முடியும்... ).. 

படம் முடிஞ்சி வெளிய வந்தோம் .. ஒரு விஜய் ரசிகன் தியேட்டர்ல இருந்த விஜய் கட் அவுட் மேல கால வச்சி கிட்டு இனிமே இப்படி பட்ட படத்துல நடிப்பியா? நடிப்பியான்னு கேட்டு கிட்டே ஷூவால மிதிச்சிக்கிட்டு இருந்தான் ... பாவம் வில்லு படம் வந்தப்ப அவன் என்ன பண்ணுனான்னு தெரியல ... கட் அவுட் மேல ஏறி விழுந்து தற்கொலை பண்ணிருப்பானோ?

3. கஜேந்திரா 
  
 நம்ம கேப்டனோட படம் .... பாபாவ படுக்க வச்சி , ஆளவந்தான அந்தரத்துல தொங்க விட்ட சுரேஷ் கிருஷ்ணா இயக்கம்... படம் இப்படிதான் இருக்கும்னு தெரிஞ்சேதான் போனேன்.... மூணு மணி நேரம் மூச்சு தெனற தெனற அடிச்சானுக.... அந்த படம் பாத்ததுனாலதான் சுதேசி , எங்கள் ஆசான் , தர்மா, உளவுத்துறை, மரியாதை  போன்ற மரண மொக்கைகளிடம் இருந்து தப்பிக்க முடிந்தது.. பின்ன கஜேந்திரா பாத்த பின்னாடியும் கேப்டன் படம் பாக்குற தைரியம் அவர தவிர வேற யாருக்கு இருக்கு?..

4. மாயாவி 
                
     வரிசையா நெறைய ஹிட்டுகளுக்கு அப்புறம்(நந்தா , மௌனம் பேசியதே,பிதாமகன், காக்க காக்க) சூரியா நடிச்சி வெளி வந்த படம் , அதுல சூர்யா தலையோட ரசிகரா வேற வராருன்னு கேள்விபட்டேன்... விடுவேனா மொத நாள் மொத ஷோ.... படத்துல பெரிய கொடுமை ஜோதிகா சொந்த கொரலுல பேசி இருப்பாங்க... உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகள படுத்துறாங்க அப்படின்னு வடிவேலு சொல்லுறது இந்த படத்துல சூரியாவுக்கு பொருந்தும்.... இந்த படத்த எத நம்பி எடுத்தாங்க? எப்படி  யோசிச்சும் எனக்கு கடைசி வர புரியவே இல்லை... சூர்யா ஜோதிகா முப்பது நாள்  சேர்ந்து இருந்து தங்கள் காதல வளர்த்துக்கொள்ள உதவி பண்ணுனத தவிர இந்த படத்துல சொல்லிக்கிற மாதிரி எதுவுமே கெடையாது... 

5. அருள் 

           
  எவனா இருந்தாலும் வெட்டுவேன்.. இந்த படத்துல விக்ரம் பேசுற பஞ்ச்...அதோட அர்த்தம்  படம் பாக்க எவன் வந்தாலும் வெட்டுவோம்கிரதுதான்னு எனக்கு அந்த படத்த பாத்த பின்னாடிதான் தெரிஞ்சது... இதுவும் மொத நாள் மொத ஷோ... உச்சத்துல இருந்த விக்கிரம கீழ தள்ளி விட்ட பெருமை இந்த படத்துக்கு உண்டு.. அப்ப விழுந்த விக்ரம்தான் பாவம் இன்னமும் எழுந்திருக்க முடியாம கஷ்டப்படுராறு.... கந்தசாமிக்கெல்லாம் அண்ணன் இந்த அருள்...

6. குசேலன் 

தலைவர் படம் அப்படின்னு நம்பி போய் பட பாத்து ஏமாந்த கோடான கோடி ரசிக பெருமக்களில் நானும் ஒருவன்...  என்னத்த சொல்ல தலைவர் கடைசி காட்சியில பேசுற வசனத்த தவிர ஒன்னும் கெடையாது படத்துல... அந்த வசனத்தையும் நான் பாக்கள தூங்கிட்டேன் அப்புறம் கலைஞர் டிவியில போடும் போதுதான் பாத்தேன்....

இவ்வளவு படம் பாத்த பின்னாடியும் நாங்க திருந்தல... அதுக்கு அப்புறம் சுட்டபழம், பெருமாள், வில்லு, கந்தசாமி ஆதவன் வேட்டைக்காரன் , போன வாரம் பாத்த பையா வரைக்கும் இந்த லிஸ்ட் போய்கிட்டேதான் இருக்கும்... இந்த பதிவு ரொம்ப பெருசா இருக்குன்னு நெனசீங்கனா அதுக்கு நான் காரணம் கெடையாது ,,,, இவ்வளவு மொக்க படம் எடுத்த இயக்குனர்கள்தான் காரணம்....

(எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை ... கமல் படம் எல்லா படங்களையும் தியேட்டர்ல போய் பாத்துடுவேன்... அவர் படத்துல பாதி படம் பத்து நாள் கூட ஓடாது... ஆனா எனக்கு இதுவரைக்கும் அவர் நடிச்ச எந்த படமும் மொக்கையாவே தெரியல ... மும்பை எக்ஸ்பிரஸ் கூட ரெண்டுவாட்டி பாத்தேன்... ஏன் எனக்கு உலக சினிமா ரசனை ரொம்ப இருக்கோ?)

Saturday, April 3, 2010

யார் கவிஞன்?

                               

                                 தேடி சோறு நிதம் தின்று


                                  கூடி பல சின்னச்சிறு கதைகள் பேசி


                                  மனம் வாட துன்பம் மிக உழன்று


                                  பிறர் வாட தீமை பல செய்து


                                   நரை கூடி கிழப்பருவம் எய்து


                                   கொடுகூற்றுக்கிரையென மாயும்


                                   பல வேடிக்கை மனிதர் போல்


                                   நான் வீழ்வேன் என நினைத்தாயோ?



என் மனம் கவர்ந்த பாரதியாரின் பாடல் , நேற்று தூத்துக்குடியில் இருந்து அருப்புகோட்டைக்கு பேருந்தில் பயணம் செய்தேன், வண்டி எட்டயபுரம் வழியாக சென்றது , அப்பொழுதுதான் பாரதியாரின் நினைவு வந்தது எனக்கு.... எவ்வளவு பெரிய கவிஞன் அவர், எதற்காகவும் தன்னுடைய கொள்கைகளை விட்டு கொடுக்காமல் கடைசி வரை வறுமையுடனே வாழ்ந்தவர்.... தன்னுடைய கவித்திறமையை என்றைக்குமே காசுக்கு விற்க்காதவர்.... பாரதியாரின் காலத்தில் நம் சமூகத்திற்கு தேவையாய் இருந்தது அந்நிய சக்திகளிடம் இருந்து விடுதலை... அவர் தன திறமையை அதற்காக பயன்படுத்தினார்... அவர் நினைத்திருந்தால் அன்று ஆங்கிலேயர்களுக்கு சொம்பு தூக்கி பதவி பணம் என்று தன வாழ்க்கையும் தன பிள்ளைகளின் வாழ்க்கையையும் மேம்படுத்தி இருக்கலாம், அவர் செய்யவில்லை.... கடைசி வரை அவர்களுக்கு எதிராகவே மக்களிடம் விடுதலை உணர்ச்சியை தூண்டும் விதமாகவே அவர் பாடல்கள் இருந்தன.....



இன்றைய காலகட்டத்தில் ஏன் அவரை போன்ற ஒரு கவிஞன் தமிழ்நாட்டில் இல்லை... தமிழனின் திறமை குறைந்து விட்டதா? இல்லை அவனின் தன்மானம் அழிந்து விட்டதா? இன்றும் நம் நாட்டில் பல கவி பேரரசுகள் இருக்கிறார்கள் , நாட்டில் பல பிரச்சனைகளும் இருக்கின்றன.... ஆனால் பாரதி போல ஒருவரும் இல்லை ... திறமை இருக்கின்றவர்கள் இன்று ஆளுபவர்களுக்கு கூஜா போட்டு கொண்டு இருக்கிறார்கள் இல்லை சினிமாவில் கதாநாயகியின் மார்பை வர்ணித்து கொண்டு இருக்கிறார்கள்....

அவர்கள் திறமை பாரதியை போல மக்களிடம் விழிப்புணர்ச்சியை உண்டாக்க பயன்படவில்லை... மாறாக ஆளுபவர்களின் முதுகு சொறியத்தான் பயன்படுகிறது... மக்களுக்காக பாட்டு எழுதி வறுமையில் வாழ்ந்து அனாதையாய் சாக அவர்கள் ஒன்றும் பாரதி இல்லையே? அவர்களுக்கு இந்த சமூகத்தை விட அவர்களின் வாழ்க்கை அவர்கள் பிள்ளைகளின் சொகுசுதான் முக்கியம்... இருந்து விட்டு போகட்டும் , எல்லாரும் அப்படிதானே , எனக்கு இதில் ஒரு கோபம் என்ன வென்றால் மக்களுக்கு பயன்படாத கவிதைகள் எழுதும் இவர்களுக்கு ஏன் கவிபேரரசு , வாலிப கவிஞன் என்று பட்டம், இவர்களை நாம் இப்படி பட்டம் வைத்து கூறினால் அது நாம் பாரதிக்கு செய்யும் பெரிய அவமானம் .... பாரதிக்கு வாழும் பொது எதுவுமே கொடுக்காத நாம் , அவர் இறந்த பிறகு அவருக்கு செய்யும் ஒரே ஒரு மரியாதை கவிஞன் என்னும் பட்டம் அவருக்கு மட்டுமே, வேறு யாரையும் அந்த பட்டம் கொடுத்து அழைக்காமல் இருக்கலாம்... மற்றவர்களை பாடல் ஆசிரியர் என்று அழைத்தால் போதாதா?



ஆனால் இது நடக்காது , கலைஞர் என்னும் பட்டம் என்றுமே ஒருவருக்கு மட்டுமே , வேறு யாருமே அந்த பட்டதை தன பெயருக்கு முன்னாடி வைத்து கொள்ளமுடியாது.. அவர் எந்த கலையில் அறிஞர் என்பது அவருக்கே தெரியாது , இருந்தாலும் கடைசி வரை அவர் மட்டுமே கலைஞர் .... காரணம் அதிகாரம்........ திறமை , நல்ல மனம் இவற்றை விட அதிகாரம்தான் எதையும் சாதிக்கும்.... நம்மால் எதையும் சாதிக்க முடியாது நம்மால் இயன்ற ஒரே ஒரு விஷயம் நாமாவது இனி மேல் இவர்களை கவிங்கர்கள் என்று கூறாமல் இருக்கலாம்... ஏதோ அந்த மகா கவியின் திறமைக்கும், அவரின் அடிபணியாமல் வாழ்ந்த வாழ்க்கைக்கும் நம்மால் செய்ய முடிந்த ஒரு சின்ன மரியாதை....
 
(நான் முதல் பத்தியில் எழுதியிருக்கும் பாடலை வெறும் கற்பனையாய் பாரதி எழுதவில்லை , அதை போலவே வாழ்ந்து காட்டியவர் அவர்... இன்று தன்னை கவின்கர்கள் என்று சொல்லி கொள்ளும் அனைவரும் அந்த பாடலில் பாரதி கூறியதிற்கு எதிர்மறையாய் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் , இவர்களை எப்படி பாரதியை போல கவிஞர் ஜாதியில் சேர்க்க முடியும் , கவிதை எழுதுபவர் எல்லாம் கவிங்கனா?)

LinkWithin

Related Posts with Thumbnails