Followers

Copyright

QRCode
Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Monday, June 7, 2010

கவிதை கார்னெர் - I

புதுமை பெண்கள்


பள்ளிக்கு தினமும் சைக்கிளில் அழைத்து சென்ற
பக்கத்து வீட்டு தோழியின் அண்ணன் ;

பள்ளியில் ஆசிரியரின் பாடங்கள் அறுவை ஆகும் போது
சீட்டு அனுப்பி விளையாடிய பள்ளி நண்பன்;

டியூஷன் முடிந்து வீடு செல்லும் இரவுகளில்  ரோட்டோர "ரேமொகளின்"
கிண்டல்களிலிருந்து காப்பாற்ற கூட வரும் பக்கத்து தெரு சிநேகிதன்;

பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு இரவெல்லாம் கண் முழித்து
அலாரம் வைத்து உதவிய ஒருதலை காதலன்;

பொது தேர்வு விடுமுறை நாட்களில் ஊர் சுற்றி காட்டிய
தூரத்து உறவு அத்தை மகன்;

கல்லூரி நாட்களில் பொழுது போகா மாலை  வேளைகளில்
தொலைபேசியில் குறுந்தகவல் அனுப்பி விளையாடிய வெட்டி பசங்க;

இறுதி ஆண்டு நாட்களில் தினமும் பைக்க்கும் வாரம் ஒருமுறை ஊட்டிக்கும்
அழைத்து சென்ற காதலன் ;

இவர்கள் எல்லோரையும் மறைத்து விட்டு தன் கணவனிடம் சொன்னாள்
"நான் காதலிக்கவில்லை.. .. காரணம் ஆண்கள் எல்லாம் அயோக்கியர்கள்";

அவனும் வெகுளியாய் கேட்டு கொண்டான்; பின்னாளில் தானும் அந்த
 லிஸ்டில் சேர்வோம் என்பதை அறியாமலே...


கவிதை போட்டி 

கவிதை போட்டியாம் 
கவிதை வேண்டுமாம் 
ஓவிய போட்டி என்றால் 
உன்னை வரைந்து அனுப்பளாம் 
காவிய போட்டி என்றால் 
நம் காதல் கதை அனுப்பளாம்


கவிதை போட்டிக்கு 
உன் பெயரை அனுப்பலாமா?
வேண்டாம் உன்னை அனுப்புகிறேன் 
போய் கொஞ்சும் உன் குரலில் 
""அச்சச்சோ!"
"ஊஹூம்…"
"
ம்க்கும்!"
"
ப்ச்..ப்ச்.."
"
ஹேய்…"
   என்று சொல் 
பரிசு உனக்குத்தான்...

கவிதையடி நீ

கவிதை என்று

எழுதினால்

என் பேனா

உன் பெயரை

எழுதுகிறது....

எழுத்து பிழை

என்று அழித்தால்
ரப்பரில் ரத்தம்

கொட்டுகிறது ....
எழுத்துக்கும் உயிர்

வருகிறது உன்னால்...


கொல்லும் புன்னகை


              மணிக்கணக்கில் பேசி

முடித்ததும்

கேட்பாய் நான்

போகட்டுமா என்று...

உலகம் அழியும்

கடைசி நொடியை விட

கொடுமையாய் இருக்கும்

எனக்கு அந்த நொடி...



அடுத்து எப்ப

பாக்கலாம் என்ற

கேள்விக்கு பதில் சொல்லாமல்

சென்று விடுவாய் புன்னைகையை

மட்டும் உதிர்த்து விட்டு...

குருதி வடியும் புண்ணில்

பாய்ந்த குண்டு போல்

உன்னை காணும் வரை

அந்த புன்னைகை

கொஞ்சம் கொஞ்சமாய் என்னை


கொன்று கொண்டு இருக்கும்


Friday, May 21, 2010

கடலை ஒரு அற்புத அனுபவம்


"ஆணும் ஆணும் வெட்டியா பேசுனா அதுக்கு பேரு அரட்டை...
பொண்ணும் பொண்ணும் வெட்டியா பேசுனா அதுக்கு பேரு புரணி...
ஆணும் பொண்ணும் வெட்டியா பேசுனா அதுக்கு பேருதான்  கடலை...."



இருபத்தியோராம் நூற்றாண்டு வந்துடுச்சி, இன்னமும் நீங்க கடலைக்கூட போட தெரியாத அப்பாவியா இருந்தீங்கன்னா நீங்க யூத்தா இருக்கிறதுல ஒரு பிரயோஜனமும் இல்லை பாஸ்... அதான் எதோ என்னால முடிஞ்ச அளவுக்கு , எனக்கு தெரிஞ்ச சில விசயங்களை வச்சி ஒரு பொண்ணுகிட்ட எப்படி கடலை போடுறதுன்னு சொல்லி கொடுக்கலாமேன்னு இந்த பதிவு... (சுய சொரிதல்)


கடலை போட ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு விசயத்தை நல்லா தெரிஞ்சிக்கோங்க கடலைன்கிறது எந்த ஒரு காரணமோ ,இல்ல தேவையோ இல்லாம ஒரு குறிப்பிட்ட விசயத்துக்குள்ள நம்ம பேச்ச சுருக்கிகொள்ளாமல் எல்லை கடந்து நம்ம மனசுக்கு தோன்றிய , அவங்களுக்கு பிடிச்ச பல விசயங்களை தேவையே இல்லாம பேசுறதுதான் ... அங்க போய்கிட்டு உங்க அறிவாளிதனத்த காட்டுற மாதிரி மாவோயிஸ்டுகளை பத்தியோ , இல்ல உலக பொருளாதாரத்தை பத்தியோ பேசக்கூடாது...மீறி பேசுனீங்க கண்டிப்பா அடுத்த தடவ அவ உங்களை கூப்பிடவே மாட்டா , (அறிவாளிங்க கடலை போட தகுதி இல்லாதவங்க பாஸ்)


கடலை போடுறதுல இன்னொரு முக்கியமான விஷயம் டைமிங் ... அவ எந்த விசயத்தை பத்தி பேசி முடிச்சாலும் நாம டக்குன்னு அதுக்கு பதில் சொல்லணும் , யோசிக்கவே கூடாது , மீறி யோசிச்சீங்க அந்த சின்ன கேப்புல எவனுக்காவது மிஸ்டு கால் கொடுத்து கடலையை அங்க விளைக்க ஆரம்பிச்சிடுவாளுக.... ஆரம்பத்துல இந்த டைமிங் கொஞ்சம் மிஸ் ஆகத்தான் செய்யும் , அப்புறம் போக போக அது தானா வந்திடும் ... (வேல வெட்டி இல்லாதவங்க நெறைய பேரு திரியிறாங்க பாஸ்)


அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் கடலை போட ஆரம்பிச்சிடீங்கன்னா அதுதான் உங்க முழு நேர வேலையா இருக்கனும் ப்ரோக்ராம் எழுதுறதும் , மெசின் துடைகிறதும் மற்ற பல ஆணிகள் புடுங்கிறதும் சைடுலதான் பண்ணனும் ... அவ எப்பவாது கடலை போட விருப்பபட்டு உங்களுக்கு மிஸ்டு கால் கொடுத்து நீங்க வேலை பிஸில அப்புறம் பேசலாம்னு சொல்லிடீங்க , அவ்ளோதான் அப்புறம் கடைசி வரை ஆணி மட்டுந்தான் புடுங்கனும் , அடுத்து நீங்களா போய் ஏன் செல்லம் ரெண்டு நாளா பேசவே இல்லைன்னு கேட்டாலும் இல்லடா நீ பிஸியா இருப்பனுதான் உன்ன தொந்தரவு பண்ண வேணாமேன்னு கால் பண்ணலைன்னு பழிய உங்க மேல தூக்கி போட்டுடுவா...அப்புறம் அவள கூல் பண்ண தியேட்டர் , பீச் , ஷோப்பிங்க்னு அவள கூப்பிட்டுட்டு போய் சில பல ஆயிரங்கள் செலவழிக்க வேண்டி வரும் (கடலை கொஞ்சம் காஸ்ட்லிதான் தலைவா)

அப்புறம் நீங்க தேவ இல்லாம அவள தொந்தரவு பண்ணகூடாது , அவ எப்ப கூப்புடுராளோ அப்ப மட்டும்தான் கடலை போடணும் ... (மொத்ததுல அடிமையா இருக்கணும் )


அவகிட்ட நேர்ல பேசும்போது அவ கண்ண பாத்து பேசுங்க .. கழுத்துக்கு கீழ பாத்தீங்க அவ்ளோதான் .... பேச்சு நின்னு போய் வெறும் மூச்சிதான் வரும்... (நெறைய பேரு இதுலதான் மாட்டிக்குவாணுக ஜாக்கிரதை)

அவள கிண்டல் பண்ணி மொக்கை போடதீங்க , அவளுக்கு பிடிக்காத பொண்ணுங்கள நல்லா ஓட்டுங்க... அவ சொல்லுற மொக்க ஜோக்ஸ்க்கு எல்லாம் விழுந்து விழுந்து சிரியுங்க.. அடிக்கடி ஆக்சிவலி, ஸோ நைஸ்... போன்ற ஆங்கில வார்த்தையை யூஸ் பண்ணுங்க ...அது உங்கள இங்கிலிஷ் பட ஹீரோவா அவளை நினைக்க வைக்கும்....(பேசுறதுக்கு முன்னாடி அவளுக்கு இங்கிலீஷ் தெரியுமான்னு தெரிஞ்சிகோங்க)

அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம் , அப்பப்ப அவளை புகழ்ந்து பேசிக்கிட்டே இருக்கணும்... அவ போட்டுக்கிட்டு வர்ற கேவலமான டிரஸ்சகூட ஸ்ரேயா சிவாஜில போட்டது மாதிரியே இருக்குன்னு கூசாம சொல்லணும் ... ஆனா அதுவே ரொம்ப ஓவரா போய்டகூடாது , அவ கண்டிபிடிக்காத அளவுக்கு பொய் சொல்லி புகழ்ந்தா போதும் ... (ஓவர் பில்ட் அப் கடலைக்கு ஆகாது தலைவா)


ஆனா உங்களை பத்தி பெருமையா பேசிறாதீங்க, அது அவளுக்கு பொறாமைய கெளப்பி விட்டு கடலை கட் ஆகுற அளவுக்கு கொண்டு போய் விட்டுடும்... (நம்ம அளவுக்கு அவங்களுக்கு பறந்து விரிஞ்ச மனசு கெடையாது பாருங்க (நான் உள்ள இருக்கிற மனச சொன்னேன்))



அப்புறம் நேர பாத்து பேசுறப்ப காது கொடையுறது மூக்க நோண்டுவது , சொறியிறது மாதிரி குரங்கு சேட்டைகளை பண்ணாதீங்க , ஹோட்டலுக்கு போய் சாப்டுகிட்டே பேசுற மாதிரி இருந்தா அளவா, நீட்டா சாப்டுங்க... சோத்துல பாத்தி கட்டுறது , சைட் டிஷ மெயின் டிஷ் மாதிரி சாப்புடுறது எல்லாம் பண்ண கூடாது... பாத்தியெல்லாம் அவ போன பின்னாடி சரக்கடிச்சிட்டு மிலிடரி ஹோடேலுல கட்டிக்கலாம், அவ முன்னாடி உங்க பேமிலியே ரொம்ப டீசென்டான பேமிலி மாதிரி காட்டிகோங்க.... (அவளுக நம்ம முன்னாடி அப்படி நடிக்கிறப்ப நாமளும் நடிக்கலாம் தப்பில்ல)


அப்புறம் கடல போட ஆரம்பிச்சிடீங்கனா மாச மாசம் ஆயிரம் ரூபாயாவது மொபைல் பில் வரும் அத பத்தியெல்லாம் கவலை படகூடாது .... அவளுக விபரமா மாசம் ரெண்டாயிரம் ப்ரீ SMS  இருக்கிற மாதிரி மொபைல் டாப் அப் பண்ணிட்டு , மினிமம் பேலன்ஸ் மைண்டைன் பண்ணிக்கிட்டு மிஸ்டு கால் கொடுத்தே காலத்த ஓட்டுவாளுக ... அந்த மினிமம் பேலன்ஸ் கூட நீங்கதான் போட்டு விடனும் ... அவளுகளுக்கு பைசா செலவு இருக்காது .. ஆனா இத பத்தி நீங்க அவகிட்ட பேசிடவே கூடாது (அவளுகளுக்கு ஆயிரம் இளிச்சவாயர்கள் கெடைப்பானுக.. நமக்கு? அதனால செலவ பத்தி கவலைப்படகூடாது)

சரிங்க , இவ்ளோ சொல்லிட்டேன் ... பிடிச்சிருந்தா நீங்களும் சீக்கிரம் ஒரு பொண்ண பிடிச்சி விடிய விடிய கடலை போட்டு குஜாலா இருங்க... அப்படியே எனக்கு ஒரு வோட்டையும் போட்டுட்டு போங்க ... நாங்களும் குஜாலா சந்தோஷ படுவோம்ல ...

Thursday, April 22, 2010

காதலித்து பார்... இப்படில்லாம் மொக்க போட வரும்...


       அழகியல் 

சேலை கட்டினால் 
அழகு கூடும் என்றேன் 
எனக்கா? என்று ஆசையாய் 
கேட்டாய் நீ ..
சேலைக்கு என்றேன் 
அழகின் உச்சத்தை 
உன் வெட்கத்தில் காட்டி 
விட்டு சென்றாய்...


ஹைக்கூ 

ஆசையாய் 
அணைத்து முத்தமிட்டதும் 
பரவியது உதட்டில் 
ஒரு வெப்பம் 
சிகரெட்...

தொலைபேசி 

உன் பிரிவில் 
துயரம் கொள்வது 
நான் மட்டும் இல்லை..
தினமும் இரவில் 
நீ தரும் முத்தத்தில் 
சூடாகிபோன என் 
தொலைபேசியும்தான்....

     தேவதை 

குடுகுடுப்பைகாரன் 
சொல்லியதை நான் நம்பியதில்லை 
உன் வீட்டின் முன் நின்று 
இங்கே ஒரு தேவதை வாழ்கிறது 
என்று அவன் சொல்லியதை கேட்கும் வரை...


    இரவில் நீ 

பெண்களுக்கு 
வெட்கம்தான் அழகு 
என்று எண்ணி இருந்தேன் 
உன்னோடு நான் தங்கிய 
அந்த இரவில் 
நீ பண்ணிய அடாவடிகளை 
காணும் வரை...


     யுத்தம் 

கொடுப்பவரும் 
வாங்கியவரும் 
சுகம் காணும் 
ஒரே யுத்தம் 
முத்த யுத்தம்....




கவிதை எழுதி ரொம்ப நாலு ஆச்சேன்னு நேத்து ரொம்ப பீல் பண்ணி எழுதின 
கவிதை இதெல்லாம் ....பிடிச்சிருந்தா கமெண்ட் போடுங்க... மொக்கையா இருந்தா திட்டியாவது போடுங்க.... யாருப்பா அது சொல்லிக்கிட்டு இருக்கும்போதே க்ளோஸ் பட்டன  அமுக்குறது... ஒரு ஓட்டயாது போட்டுட்டு போகலாம்ல....


Wednesday, March 3, 2010

ப்ரியமுடன் ப்ரியா --- Autograph 1

அது ஒரு மாலை மயங்கும் நேரம் , ஆனா எனக்கு அது டாஸ்மாக்கில் மயங்கி கிடந்த நேரம். மூடியில இத்துனூண்டு பீர ஊத்தி நானூறு மீட்டருக்கு அப்பால வச்சாலே அந்த வாசனையில மப்பு  மண்டைக்கி ஏறி என்னால உன்ன மறக்க முடியல " ப்ரியா"ன்னு எங்க அப்பா செல்லுக்கு SMS அனுப்புற அப்புராணி பய நான் , இன்னைக்கி யாருமே துணைக்கு இல்லாம ஒரு ஹாப்பும் ரெண்டு  புல் பீரும்  அடிச்சா?

டாஸ்மாக் படிக்கட்டு பழனி மல படிக்கட்டு மாதிரி மலைப்பா தெரிய அப்டியே மயங்கி விழுந்துட்டேன்...இதுக்கெல்லாம் காரணம் அந்த நாசமா போன காதல் .... அழகா பொறந்து தொலைச்ச அந்த  ப்ரியா.... .
ப்ரியா நான் காதலிச்ச முதல் பெண் , ஆனா அவ என்ன காதலிக்கல. ஏன்னா நான் அவள காதலிச்ச விசயத்த அவகிட்ட சொல்லாமலே மறச்சி வச்சி இருந்தேன்.... 

ப்ரியானா பயம் ...எல்லாருக்கும் பயம், செருப்பால அடிப்பாங்கிற பயம். செருப்பு பிய்யிற வரைக்கும் அடிப்பா , மாசத்துக்கு எப்படியும் நாலு செருப்பு மாத்துவா . எங்க ஊரு செருப்பு கட பாயே அவ பிறந்த நாளுக்கு "எங்க குடும்பத்த வாழ வைக்கிற தெய்வமே" ன்னு போஸ்டர் அடிச்சி ஒட்டுவாரு , அந்த அளவுக்கு எங்களால அவருக்கு பிசினஸ். அவகிட்ட பேசுறதுக்கே எல்லாரும் பயப்படுவாணுக....

ஆனா அவள பாத்த மொத நாளே அந்த பாழா போன காதல் எனக்குள்ள வந்து தொலச்சிடுச்சே... எப்படி என்னோட காதல அவகிட்ட சொல்லுறதுன்னு எனக்கு புரியாம பைத்தியம் பிடிச்சி  அலைஞ்சிக்கிட்டு இருந்தேன் . அப்பத்தான் கடவுள் கணக்கு வாத்தியார் ரூபத்துல வந்தாரு.

நான் பொண்ணுகள கணக்கு பண்ணி கணக்கு பண்ணி கணக்குல பெரிய புலியாகிட்டேன்.  ப்ரியாவுக்கு அழக அதிகமா படைச்ச ஆண்டவன் அறிவ சுத்தமா வலிச்சி எடுத்துட்டான். காலாண்டுல கணக்குல பல்ப் வாங்கிட்டா, கணக்கு வாத்தி அவளுக்கு நெறைய கேள்விகள கொடுத்து , இத எல்லாம் சால்வ் பண்ணிட்டு வந்தாதான் உன்ன அடுத்த பரிட்ச எழுத விடுவோம் இல்லைன்னா அடுத்த வருசமும் நீ இங்கதான் இருக்கணும்னு அவ சால்வ் பண்ண மாட்டாங்கிற தைரியத்துல அவள அடுத்த வருசமும் சைட் அடிக்கலாம்னு ஜொள்ளு விட்டுகிட்டே சொல்லி இருக்காரு. அவளுக்கு அப்ப கடவுளா தெரிஞ்சது நான் மட்டும்தான்....

எனக்கு அது, ஆண்ட்ரோஜன் அப்பத்தான் அது வேலைய காட்ட ஆரம்பிச்ச கால கட்டம் , அதுவரைக்கும் பாத்து பயந்துகிட்டு இருந்த பள்ளிகூடத்து மிஸ்கள எல்லாம் இப்ப பாத்தா பயத்துக்கு பதிலா வேற ஏதோ தோணுது.... எதிர் வீட்டு ஆண்டி இடுப்புல கொழந்தைய தூக்கி வச்சிருந்தா ஓடி பொய் அந்த கொழந்தைய தொட்டு கொஞ்சி தூக்கி திரும்பவும் அந்த ஆண்டிகிட்டயே கொடுத்து கொழந்தைக்கு கொடுக்குற முத்தத்துல பாதிய ஆண்டிக்கும் கொடுக்குற வயசு... ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டாரா ஒத்த காலுல நின்னுகிட்டு இருந்த மனசுல , ஷகீலா அரகுற டிரஸ்சோட(சில சமயம் டிரஸ்ஸே இல்லாம ) படுக்க ஆரம்பிச்ச நேரம் .... கூட்டமே இல்லாத பஸ்ஸ விட்டுட்டு கூட்டமா இருக்குற பஸ்சுக்காக காத்துகிட்டு இருந்த மனசு... இப்படி டெண்டுல்கர் அடிக்கிற பந்து மாதிரி எல்லா திசையிலும் பறந்துகிட்டு இருந்த என் மனச இஷாந்த் ஷர்மா வீசுற பந்து மாதிரி ஒரே இடத்துல விழ வச்சவ அவதான்........ "ப்ரியா"...

(தொடர்ந்து வருவா)

LinkWithin

Related Posts with Thumbnails