Followers

Copyright

QRCode
Showing posts with label தல. Show all posts
Showing posts with label தல. Show all posts

Saturday, April 30, 2011

ரசிகர் மன்றங்கள் தேவையா? - Hats off Ajith


(மீண்டும் ஒரு தல பதிவு )


இன்றய நிலமையில் சினிமா நடிகர்கள் மேல் இருக்கும் பெரிய குற்றசாட்டு மன்றங்கள் என்ற பெயரில் பல இளைங்கர்களின் வாழ்க்கையை தங்கள் சுய லாபதிர்க்காய் அழிக்கிறார்கள் என்பதுதான் ... அது உண்மையும் கூட  .... எம்‌ஜி‌ஆர் காலம் தொடங்கி இன்று இருக்கும் நண்டு சுண்டு நடிகர்கள் வரை , ஊர் ஊருக்கு ரசிகர் மன்றங்களை தொடங்கி வைத்து கொண்டு , அவர்களை தங்கள் சொந்த லாபத்திர்க்கு பயன்படுத்திக்கொண்டு இருந்திருக்கிறார்கள் ....  எம்‌ஜி‌ஆர் , சிவாஜி , விஜயகாந்த் என்று சில பெரிய நடிகர்கள் அவர்கள் ரசிகர்களை பயன்படுத்தி அரசியலில் இறங்கி தனக்கும் தன் குடும்பத்திர்க்கும் லாபம் தேடி கொண்டார்கள் ... ஆனால் அவர்களை நம்பிய ரசிகர்கள் இன்னமும் மூட்டை தூக்கி கொண்டும் , கந்து வட்டிக்கு கடன் வாங்கியும்தான் பிழைப்பை ஒட்டி கொண்டு இருக்கிறார்கள் ..

நடிகர்கள் ரசிகர் மன்றங்கள் வைத்திருப்பதான் பின்னணி என்ன? முதல் காரணம் தங்கள் படத்திர்க்கு அதிக வசூல் கிடைக்க வேண்டும் , தான் கோடிகளில் புரள வேண்டும் என்பதுதான் ... இன்று கோடிகளில் புரளும் பெரிய நடிகர்களின் முதுகெலும்பே இந்த ரசிகர்கள்தான்... அவர்கள்தான் எவ்வளவு பணம் கொடுத்தேனும் தன் தலைவனின் படத்தை பார்க்க தயாராக இருப்பார்கள் ... சொல்ல போனால் ஒரு நடிகனின் உயிர் நாடியே இந்த ரசிகர்கள்தான்.... படங்களில் கதாநாயகர்கள் பன்ச் வசனம் பேசுவது , பறந்து பறந்து சண்டை போடுவது ,எல்லாமே இந்த மாதிரியான ரசிகர்களை தனக்கென்று உருவாக்க வேண்டும் என்பதர்க்காகவே....

அடுத்தது அவர்களை வைத்து அரசியலில் காய் நகர்த்தி கோடிகோடியாய் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசை ... சமீபத்தில் ஒரு நடிகர் கூட இப்படி அரசியலுக்கு வர ஆசைபட்டு நாகபட்டினத்தில் ஒரு மீட்டிங் நடத்தியது ஞாபகத்தில் இருக்கலாம் ... அவர் ஒன்றும் பெரிய சமூக சேவகர் கிடையாது , இல்லை அவர் பரம்பரையிலும் யாரும் சமூக சேவை செய்தது கிடையாது .. ஆனால் அவர் அரசியலுக்கு வந்தால் ஊருக்கு நூறு ஒட்டாவது விழும் .. காரணம் இந்த ரசிகர் மன்றங்கள் ... இவர்களை பயன்படுத்தி அரசியல் பேரத்தில் பெரிய தொகையை உருவிவிடலாம் ...

ஆரம்ப காலகட்டதில் வெறும் ரசிகர் மன்றங்களாக உருவாகும் இவை , போக போக நற்பணி இயக்கமாக மாறும் .... அடுத்து கட்சியாக உருவெடுக்கும் .... மன்றாமாக இருக்கும் பொது ஐந்து கோடி சம்பளம் வாங்கிய அந்த நடிகர் நற்பணி இயக்கமாக மாறும் பொது பத்து கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு வளந்திருப்பார்... பின்னர் கட்சிக்கு தலைவனானவுடன் அவர் டீலிங் 500 கோடி 1000 கோடி என்ற அளவில்தான் இருக்கும் ... ஆனால் அவர்களின் பின்னால் கொடி பிடித்து கொண்டு அழைந்த ரசிகர்கள் நிலை? எங்கள் தெருவிலேயே ஒரு பெரிய நடிகருக்கு ரசிகராக இருந்து , அவருக்காகவே வாழ்ந்து இன்று தன்னுடய வாழ்க்கையை தொலைத்து சாப்பாட்டிற்க்கே பிச்சை எடுத்து கொண்டு இருக்கும் ஒருவரை நான் கண்கூடாக பார்த்து இருக்கிறேன்.... 

ரசிகர்மன்றங்கள் ஆரம்பிக்கும் ரசிகர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களாகவே இருப்பார்கள் .. அவர்களின் அறியாமையை கிறுக்குதனத்தை நடிகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்...  நான் அரசியலுக்கு நாளைக்கு வருவேன் நாளன்னைக்கு வருவேன் என்று அவர்களை உசுப்பி விட்டு கொண்டே இருப்பதும் , தடாலடியாக அரசியலுக்கு வந்து ரசிகனாக இருந்த அவனை தொண்டனாக பதவி உயர்வு அளிப்பதும் , கொடி  பிடித்து மீனவர்களுக்காக உண்ணா விரதம் இருப்பதும் அவர்களின் இந்த கிறுக்குதனத்தை மேலும் அதிகரிப்பதர்க்காகவே ... தேள் கடித்த குரங்குகளுக்கு சாராயம் கொடுக்கும் வேலையைத்தான் இன்று வரை எல்லா நடிகர்களும் செய்து கொண்டு இருக்கிறார்கள் ...


ஆனால் இன்று முதன் முறையாக ஒரு நடிகன் யாரும் செய்ய துணியாத செய்வதற்க்கு அஞ்சிய ஒரு செயலை செய்துள்ளான் .... எனக்கு ரசிகர்மன்றமே வேண்டாம் என்று தடாலடியாக தெரிவித்துள்ளார் ... அதற்க்கு காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் ஆனால் இவரின் இந்த செயல் கண்டிப்பாக பாராட்டுக்குரியது... அவர் தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கபடும் அஜீத் குமார்... தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்மன்றங்களை கொண்டிருக்கும் நடிகர் அவர்... தன் ரசிகர்களை இதுவரை தன் சுயநலதிர்க்காக பயன்படுத்த தயங்கும் ரஜினி கூட செய்ய அஞ்சிய ஒரு செயலை சர்வ சாதாரணமாக செய்து விட்டார் தல... இதன் மூலம் தமிழ் சினிமாவில் நான் என்றுமே ஜென்டில்மென் தான் என்பதை அழுத்தமாக பதியவைத்து விட்டார்... 


இப்படி செய்வதன் மூலம் அவருக்கு கிடைக்க போகும் லாபத்தை விட நஷ்டம்தான் அதிகமாக இருக்கும் .. காரணம் அவர் ரசிகர்களின் நடிகர் ... அவருக்கு இருக்கும் பெரிய பலமே அவர் ரசிகர்கள்தான்... இதன் மூலம் பல ரசிகர்கள் அவருக்கு எதிராக போக வாய்ப்பு உண்டு , அவரின் படங்களின் வசூலில் ஆப்பு வைக்க நிறைய வாய்ப்பு உண்டு .... மற்ற நடிகர்கள் எல்லாம் அஞ்சியது இதற்காக மட்டுமே .. 

இன்று மற்ற நடிகர்கள் எல்லாம் சினிமாவையும் தாண்டி அவர்களை தன் முதல்வர் நாற்காலி ஆசைக்கு பலிகொடுத்து கொண்டு இருக்கும் போது அவர்களை எல்லாம் விட அதிகமான ரசிகர்களை தன் பின்னால் வைத்திருக்கும் தல , அவர்களை பயன்படுத்தி ஏழைகளுக்கு தையல் மெஷின் கொடுக்கிறேன் லேப்டாப் கொடுக்கிறேன் என்று அரசியலுக்கு அடி போடாமல் , உங்கள் வேலையை பாருங்கள் என்று அவர்களை கட்டவிழ்த்து விட்டு இதுவரைக்கும் அவர்களை ரசிகர்  மன்றங்களில் அடைத்து வைத்து தான் செய்த பாவத்தை போக்கி கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும் ...


குடும்பத்தை முதலில் கவனியுங்கள் மத்தத அப்பறம் பார்த்து கொள்ளலாம் என்று மற்ற நடிகர்கள் எல்லாம் வாய்மொழியாக மட்டும் சொல்லி கொண்டு இருந்ததை இன்று தல செயலில் காட்டி விட்டார் ... தன் ரசிகர் மன்றங்களை கலைத்து இருந்தாலும் , மற்ற எந்த நடிகணும் தன் ரசிகனுக்கு கொடுக்க முடியாத சந்தோஷத்தை தல எங்களுக்கு தந்திருக்கிறார்.. ஆம் பெருமையாக சொல்லி கொள்ளுவோம் நாங்கள் இவரின் ரசிகர்கள் என்று ... மற்றவர்களை போல பன்ச் வசனம் கேட்டு ரசிகனானவர்கள் இல்லை நாங்கள் , அவரின் தைரியமான நடவடிக்கைகளுக்காக ரசிகர்கள் ஆனவர்கள் ... 

எங்களுக்கு மன்றங்கள் தேவை இல்லை , தல எப்பொழுதும் இதே போல வெளிப்படையாக , நேர்மையாக இருந்தால் போதும் ... 

Friday, January 21, 2011

ராஜாவின் பார்வை : நிறைய கிரிக்கெட், கொஞ்சம் சினிமா


கிரிக்கெட் – சினிமா



உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் ஒருமாதத்திர்க்கும் குறைவான நாட்களே இருக்கிறது .. எல்லா நாட்டு அணிகளும் தங்கள் அணி வீரர்களை அறிவிக்க ஆரம்பித்து விட்டார்கள்... இந்த மாதம் முழுவதும்  எல்லா முதல்நிலை அணிகளும் இன்னொரு முதல்நிலை அணியுடன் மோதிகொண்டு   இருக்கிறது, உலக கோப்பையின் முன்னோட்டமாக  தங்கள் அணியின் திறனை பரிசோதித்து பார்க்க நல்ல வாய்ப்பாக இதை அவர்கள் நினைக்கின்றனர் .. ( இந்தியா – தென் ஆபிரிக்கா , இங்கிலாந்து – ஆஸ்ட்ரேலியா , பாகிஸ்தான் – நியூசிலாந்து என்று கிட்டத்தட்ட ஒரு pre world cup போட்டிகள் நடந்து கொண்டு இருக்கிறது)  ... இந்த போட்டிகளில் ஒவ்வொரு அணியும் எப்படி விளையாடி இருக்கிறது என்பதை கொண்டு நாம்  உலக கோப்பையில் என்ன நடக்கும் என்பதை  கிட்டத்தட்ட கணித்து விடலாம்...

முதலில் இந்தியா – தென் ஆஃப்ரிகா ஆட்டம் .... இந்த டூர் ஆரம்பத்தில் இந்தியா மரண அடி வாங்கினாலும் , பின்னர் விஸ்வரூபம் எடுத்து தென் ஆஃப்ரிகா அணியினரை கதிகலங்க வைத்து கொண்டு இருக்கிறது .... உலக கோப்பையை பொறுத்த வரை ஒரு அணியின் சமீபத்திய டெஸ்ட் வெற்றிகள்  பெரிய இம்பாக்ட் உருவாக்க போவதில்லை .. அந்த அணியின் தற்போதைய ஒருநாள் ஆட்டதிறனே அந்த அணியின் உலக கோப்பை வாய்ப்பை முடிவு செய்யும் ... இதில் இந்த இரண்டு அணிகளை கவனித்து பார்த்தால் இந்திய அணியின் கையே சற்று ஓங்கி இருக்கிறது... முதல் ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்து இருந்தாலும் , அடுத்த இரண்டு ஆட்டங்களில் திரில் வெற்றியை ருசித்து இருக்கிறது ...முதல் ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசம் இரண்டாம் ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசம்  என்று வெற்றி வித்தியாசங்கள் மிக குறைவாகவே இருப்பதால் இரண்டு அணிகளும் சம பலம் கொண்ட அணிகளாக உங்களுக்கு தெரியலாம் , ஆனால் இரண்டு அணிகளையும் வேறுபடுத்துவது போட்டி நடக்கும் இடம் மற்றும் அதில் ஆடும் அணி வீரர்கள் ...

நாங்க ஏன் நம்பர் 1 :



போட்டி நடப்பது தென் ஆஃப்ரிகா , அங்கு இருக்கும் ஆடுகளங்கள் இப்பொழுது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்படி அமைக்க பட்டு உள்ளன ... முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டேயின் மற்றும் திஸோட்சோப் வீசிய பந்துகள் எகிறிய எகிறில் இருந்தே அதை அறிந்து கொள்ளலாம்... அதில் இந்தியா படு தோல்வி அடைந்தது .. ஆனால் அடுத்த இரண்டு ஆட்டங்களில் மைதானம் சுழல்  பந்து வீச்சிர்க்கு ஸலாம் போட ஆரம்பித்தது... ஹர்பஜனின் சுழலை சமாளிக்க முடியாமல் தென் ஆஃப்ரிகா சறுக்கியது ... இதுதான் உலககோப்பையில் இரு அணிகளுக்கும் இருக்க போகும் பெரிய வித்தியாசமே.. சொந்த மைதானத்திலேயே இந்திய வீரர்களின் ஸ்பின் பௌலிங்கை சமாளிக்க தினரும் அவர்கள் ஸிபின்னுக்கு சாதகமாக அமைக்கப்பட்டு இருக்கும் இந்திய பிட்ச்களில் ஜொலிப்பது கஷ்டமே ... இந்திய அணியினருக்கு அவர்கள் தென் ஆஃப்ரிகா மைதானங்களில்  பந்து வீச்சில்  கலக்கியது  ஆறுதலான விஷயம் .. குறிப்பாக ஜாகீர் கான் பந்து வீச்சில் ஃபார்ம்முக்கு திரும்பி இருப்பது தோனிக்கு பெரிய நிம்மதியை கொடுத்திருக்கும்...


அடுத்து இன்னொரு முக்கியமான விஷயம் , இந்த தொடரில் தென் ஆஃப்ரிகா தன்னுடய முழு பலத்தையும் காட்டி விளையாடி இருக்கிறது , ஆனால் இந்திய அணியில் முன்னணி துடுப்பாட்டக்காரர்கள் பாதி பேர் விளையாடவில்லை .. குறிப்பாக  சேவாக் , கம்பீர் , டெண்டுல்கர் என்று அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் யாரும் களமிறங்கவில்லை ... குறிப்பாக சொல்ல வேண்டும் என்றாள் தென் ஆஃப்ரிகாவின் முதல் நிலை அணியை இந்தியாவின் இரண்டாம் நிலை அணி திணறடித்து கொண்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் ... இப்பொழுது தெரிந்திர்க்கும் அவர்களுக்கு ஏன் இந்திய அணி நம்பர் ஒன் என்று சொல்லப்படுகிறது என்று ...



ஓவர் பேச்சு உடம்புக்கு ஆகாது தம்பி :

இந்தியாவை போல இந்த மாதம் ஆட்டத்தில் கலக்கி கொண்டு இருக்கும் இன்னொரு அணி இங்கிலாந்து ... ஆஸ்ட்ரேலியா மண்ணிலேயே பேட்டிங் பௌலிங் ஃபீல்டிங் என்று எல்லா துறையிலும் அவர்களை விட பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது ... ஆனால் அவர்களால் இந்திய அணியை ஜெயிக்க முடியுமா? அப்படி ஒரு போட்டியில் யார் ஜெயிப்பார்கள்? இதுதான் இன்று கிரிக்கெட் உலகில் மில்லியன் டாலர் கேள்வி... இதற்க்கு ஒரு அதிமேதாவி இப்பொழுது இருக்கும் இங்கிலாந்து அணி ஒரு வாரம் முழுவதும் விளையாண்டாலும் அந்த ஏழு ஆட்டங்களிலும் இந்தியாவை ஜெயிக்கும் பலம் வாய்ந்தது என்று திருவாய் மலர்ந்து இருக்கிறது .. 2003 உலக கோப்பையில் இதே போல ஒரு ஆதி மேதாவியின் வாய்  சச்சின் ஒன்றும் பெரிய பேட்ஸ்மென் கிடையாது அவரை தன்னால் எந்த ஆட்டத்திலும் அவுட் ஆக்க முடியும் என்று திருவாய் மலர்ந்து சச்சின் அடித்த அடியில் வாயில் புண்ணோடு ஊர் போயி சேர்ந்தது .. அவர்கள்  இதே போல நிறைய பேச வேண்டும் என்பதே என் ஆசை ... கண்டிப்பாக பேசிய பேச்சுக்கு ஏற்றவாறு அடி கிடைக்கும் ...


கவுத்திராதீங்கப்பு :


இந்திய அணிக்கு இந்த உலக கோப்பை ஒரு பெரிய வாய்ப்பு ... 2003 உலக கோப்பையில் அணி எந்த ஃபார்மில் இருந்ததோ அதைவிட அருமையான ஃபார்மில் இப்பொழுது இருக்கிறது ... 2003 இல் நமக்கு வில்லனாக இருந்த ஆஸ்ட்ரேலியா இப்பொழுது பலமிழந்து ஒரு காமெடி பீஸாக காட்சி தருகிறது .. சமீப காலங்களில் மற்ற எல்லா அணியினரையும் நாம் மண்ணை கவ்வ வைத்திருக்கிறோம் (வெஸ்ட் இண்டீஸ் , பாகிஸ்தான் தவிர...  அவர்களுடன் நீண்ட காலமாக விளையாடவே இல்லை ஆனால் அவர்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பார்மில் இல்லை) எனவே இது நமக்கு நல்ல வாய்ப்பு ... 2007 போல  திடீரென்று எல்லாரும் பார்ம் இழந்து கவுத்திராதீங்கப்பு...


இந்தியாவை தவிர்த்து பார்த்தால் இந்த உலக கோப்பையை வாங்கும் தகுதியுடன் தற்போது இருக்கும் அணிகள் இங்கிலாந்து மற்றும் தென் ஆஃப்ரிகா ... ஆனால் இந்த இரண்டு அணிகளுமே ஸ்பின்னில் ஒழுங்காக விளையாட தெரியாத அணிகள் .. இந்திய மைதானங்களில் அவர்களால் இந்தியாவை வெல்ல இயலுமா என்று தெரியவில்லை .. ஆனால் ஆஸ்ட்ரேலியாவையும் ஒதுக்கி வைக்க முடியாது .. எப்பொழுது வேண்டுமானாலும் முழு திறனுடன் மீண்டு வரும் அணி அது ... இதை தவிர்த்து இந்திய ஆடுகளங்களில் இந்தியாவை வெல்லும் திறன் படைத்தவை என்று பார்த்தால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஸ்ரீலங்காவை கூறலாம் ... ஆனால் இரண்டும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சமீபத்தில் விளையாடவில்லை ... ஆனால் எது வேண்டுமானாலும் நடக்கும் கிரிக்கெட்டில் .. திடீரென்று பங்களாதேஷ் கூட கோப்பையை வெல்லலாம்... (1983 ஞாபகம் வருகிறது .. அன்று இந்திய அணி அப்படிதானே இருந்தது )  அதானே அந்த விளையாட்டின் சுவாரஷ்யமே ....  


சினிமா :

மாங்காத்தா பட ஸ்டில்ஸ்களில் தல நரைத்த முடியுடன் காட்சி தருகிறார் .. பார்க்க படம்


சில ரசிகர்கள் இதை ரசித்தாலும் சில ரசிகர்களுக்கு இது பிடிக்கவில்லை ...என்னை கேட்டால் படம் வெளிவரும் வரை இதை பற்றி எதுவும் பேச வேண்டாம் என்றுதான் சொல்லுவேன் ... தல ஒரு விஷயம் செய்தால் அது சினிமாவில் ஒரு ஃபேஷன் போல எல்லாராலும் பின்பற்றபடுகிறது... இன்று போல பெரிய பெரிய நடிகர்கள் தொடங்கி நண்டு  சுண்டு நடிகனெல்லாம் படத்தில் கோட்டு சூட்டு போட்டு நடிப்பது அதையே காட்டுகிறது ... யாருக்கு தெரியும் நாளைக்கு இதுவும் ஒரு பெரிய ஃபேஷன் ஆகலாம்... தல பவர் அப்படி ... என்ன ஓவரா பேசுறேண்ணு நினைக்கிறீங்களா? அப்ப இந்த மேட்டர படியுங்கள்



யார் வசூல் சக்கரவர்த்தி?
எங்க படத்த குடும்பம் குடும்பமா வந்து பாக்குறாங்க... சின்ன கொழந்தைங்க எல்லாருக்கும் பிடிச்ச நடிகர் எங்காளுதான்... எங்காலு டான்ஸ் ஒண்ணு போதும் படம் ஓட .. எங்க பாட்டு எப்பவுமே சூப்பர் ஹிட்டுதான்... நாங்கதான் வசூல் சக்கரவர்த்திகள் ... என் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் ம்யூசிக் போடனும் ... பெரிய இயக்குனர்கள் படத்துல மட்டும்தான் நடிப்பேன் ... நொடிக்கு நூறு முறை விளம்பரங்கள் தரனும் ...இப்படி என்னணவோ சொல்லிகிட்டு இருந்தவணுக நடிச்ச எந்த படமும் இந்த லிஸ்டில் கிடையாது ...

குடும்ப ஆடியன்ஸ் அவ்வளவாக கிடையாது .. கொழந்தைகள் ரசிக்கும்படி இன்னமும் படம் கொடுக்கவில்லை ... நடனம் சுத்தமாக தெரியாது ... பாட்டு நல்லா இருந்தாலும் ஊடகங்கள் புறக்கணித்து விடும்... படங்களுக்கு எந்த விளம்பரமும் கிடையாது ... இப்படி எந்த விஷயமும் இல்லாமல் ரசிகர்கள் பலம் ஒன்றை மட்டுமே  நம்பி இருக்கும் ஒருவரின்  படங்கள் இரண்டு இந்த லிஸ்டில் இடம் பிடித்து உள்ளன ..

காரணம் சிம்ப்ளி ஒரே வார்த்தை அது “தல” ... இதில் வரலாறு பெரிய ஆச்சரியம் நொடிக்கு நூறு முறை விளம்பரம் போடப்படும் படங்கள் வசூலிக்க முடியாத தொகையை குறைந்த பட்சம் பேப்பரில்கூட விளம்பரம் கொடுக்கபடாத ஒரு படம் வசூலித்திருக்கிறது ... இந்த படத்திர்க்கு நூறாவது நாள் விளம்பரம் தூத்துக்குடி ரசிகர்களால் தினத்தந்தி பேப்பரில் போடபட்டது ... தூத்துக்குடியிலும் நாகர்கோவிலிலும் படம் நூறு நாட்கள் ஓடி இருந்தது ... இப்படி தயாரிப்பாளர் மொத்தமாய் கைகழுவிய படம் .. ஆனால் வசூல் சாதனை ... தரமான விசயங்களுக்கு விளம்பரம் தேவை இல்லை என்று அழுத்தமாக சொல்லி இருக்கிறது வரலாறு... வசூல் சக்கரவர்தி என்று தங்களுக்கு தாங்களே முடிசூட்டி கொண்டவர்கள் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்?


இன்னொன்று பில்லா .. நான்தான் எப்பவும் kinf of opening என்று அஜித் அழுத்தமாய் தன் போட்டியாளர்களுக்கு உணர்த்திய படம் .. அருப்புக்கோட்டை தமிழ்மணி திரை அரங்கில் இதற்க்கு அமைந்த ஒபேணிங்க் மாஸ் இதுவரை வேறு எந்த படத்திர்க்கும் நான் கண்டதில்லை ... டிக்கெட் கிடைத்து உள்ள போன கூட்டத்தை விட டிக்கெட் கிடைக்காமல் வெளியேறிய கூட்டம் அதிகம் ... ஒரு மணிநேரத்திர்க்கு தியேட்டர் அமைந்திருந்த விருதுநகர் – அருப்புக்கோட்டை சாலையில் பேருந்துகள் செல்ல முடியவில்லை ... தல இதை போன்ற தான் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் படங்களாய் தெரிவு செய்து நடிக்க வேண்டும் என்பதே ஒரு ரசிகனாய் என்னுடய ஆசை... 

Sunday, December 19, 2010

2010 தமிழ் சினிமா - கோவா முதல் காவலன் வரை ஒரு பார்வை

ஆமா இவரு பெரிய மணிரத்தினம்  இருபத்தினாலு மணிநேரமும் சினிமாவ பத்தியே யோசிச்சிக்கிட்டு சினிமாவிலேயே வாழ்ந்துக்கிட்டு இருக்காரு நானும் சினிமாவும் அப்படின்னு கட்டுரை எழுத வந்துட்டாறு என்று நீங்கள் திட்டுவது புரியிது ... சினிமாவுக்கும் எனக்கும் நேரடியான தொடர்புகள் எதுவும் இல்லை என்றாலும் சினிமாவை வாழ வைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் இந்த வருடம் நான் பார்த்த சினிமாக்களை பற்றி ஒரு சின்ன பார்வைதான் இந்த பதிவு ...

அதுக்கு  முன்னாடி நீங்க இந்த வருஷம் எந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருந்திருக்கீங்கண்ணு டெஸ்ட் பண்ண ஒரு சின்ன க்விஸ் ... ரெண்டே ரெண்டு கேள்விதான் ... நீங்க நல்லவரா , ரொம்ப ரொம்ப நல்லவரா இல்ல கெட்டவராண்ணு நான் சொல்லுறேன்.. ஆனா ஒண்ணு பிட் அடிக்காம எக்ஸாம் எழுதனும் , அப்பதான் என்னால கரெக்டா சொல்ல முடியும் ...

கேள்விக்கு போகலாமா?\

கேள்வி 1 :

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஷகீலா ஆண்டி நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
    a) பரிமளா
    b) சியாமளா  
    c) விமலா  

கேள்வி 2

நித்தி ரஞ்சி விடியோவில் ரஞ்சி அணிந்திருந்த செருப்பின் நிறம் என்ன?

   a) கறுப்பு
   b) வெள்ளை
   c) செறுப்பே அணியவில்லை

மேல இருக்கிற ரெண்டு கேள்விக்கும் பதில் கண்டுபிடிச்சாசா வெயிட் வெயிட் அவசரபடக்கூடாது முடிவை நான் பதிவோட கடைசியில சொல்லுறேன் ... அதுவரைக்கும் இந்த மொக்கையை கொஞ்சம் படிங்க


2010இல் நான் ரசித்த சிறந்த ஐந்து படங்கள் :


2010ல நான் மொத்தம் 32 படம் தியேட்டர்ல போய் பாத்திருக்கேன் ... இதுல நான் மிகவும் ரசித்த ஐந்து படங்கள் அதே வரிசையில் ( இது என்னுடய பார்வையில் மட்டுமே )

  1. களவாணி – இந்த வருசத்தின் மிக சிறந்த பொழுதுபோக்கு படம் இதுதான்
  2. பாஸ் என்கிற பாஸ்கரன் – சென்டிமெண்ட் ஹீரோயிசம் என்று எந்த தலைவலியும் இல்லாமல் முழுக்க முழுக்க சிரிக்க வைத்த படம்
  3. மைனா – எந்த இடத்திலும் போர் அடிக்காத திரைக்கதை
  4. எந்திரன் – ரஜினியின் வில்லத்தனம்
  5. ஆயிரத்தில் ஒருவன் – விறுவிறுப்பான முதல்பாதி மட்டும்


சென்ற வருடம் நான் அதிகமுறை தியேட்டரில் பார்த்த படம் அசல் , மொத்தம் ஐந்து முறை . முதல் இரண்டு தடவை தலைக்காக மட்டும் .. அடுத்த இரண்டு தடவை தலைக்காக மட்டும்  கடைசி ஒருமுறையும்  தலைக்காக மட்டும் .... (படம் எங்கள் ஊரில் இருபது நாட்கள் மட்டுமே ஓடியது என்பது குறிப்பிடதக்கது)

அதற்க்கு அடுத்து நான் இரண்டு முறை பார்த்த படம் களவாணி .. எந்திரன் டிக்கெட் விலை அதிகமாக இருந்ததால் ஒரு முறையோடு நிறுத்தி கொண்டேன் ... இல்லை என்றால் குறைந்தது இரண்டு முறையாவது பார்த்திருப்பேன் ...



தியேட்டரில் சென்று பார்க்க முடியாமல் தவற  விட்ட நல்ல படம் நான் மகான் அல்ல


தியேட்டரில் சென்று பார்க்காமல் தப்பிய மொக்கை படங்கள் ஆறுமுகம் , தம்பிக்கு இந்த ஊரு , தீராத விளையாட்டு பிள்ளை, கோவா , காதல் சொல்ல வந்தேன்

மூன்று மணிநேரம் தியேட்டரில் கதற கதற அடிவாங்கிய படங்கள்
  1. சுறா – உயிர் பொழச்சது தமன்னா புண்ணியம்
  2. பையா – பாட்டு மட்டும் இல்லைனா படம் வடக்குபட்டி ராமசாமி காசு ஊதான்... 
  3. தில்லாலங்கடி – வடிவேலு மட்டும் இல்லைனா  இந்த படம் ஜெயம் ரவியின் கேரீயரில் மிகப்பெரிய ஊத்தாக அமைந்திருக்கும்  
  4. மதராசபட்டினம் – டைட்டானிக்க ஏற்கனவே நான் பத்து தடவைக்கு மேல பாத்துட்டேன் அதனால இந்த படம் பாக்கும் போது  பயங்கர தலைவலி ...
  5. குட்டி – இப்படி ஒரு கதைய ரீமேக் பண்ணுற தைரியம் தனுசுக்கு மட்டும்தான் வரும் .. வளர்ந்த இடம் அப்படி ... நான் இண்டர்வெல் விட்டதும் எழுந்திருச்சி வெளிய வந்த ஒரே படம் இதுதான் ...
  6. மாத்தியோசி – தயாரிப்பாளர் அவ்வளவு காச எங்கையில கொடுத்திருந்தாக்கூட இதவிட நல்ல படம் எடுத்து கொடுத்திருப்பேன் .. அந்த அளவுக்கு மட்டமான படம்
  
சென்ற வருடம் வந்த படங்களில் நான் ரசித்த இரண்டு பாடல்கள்

  1. காதல் அணுக்கள் – எந்திரன்
      ஷங்கர் சொல்லியதை போலவே ரொம்பவே பிரீஷியான பாடல். இதில் ரஜினி ஒரு சிவப்பு கலர் டி ஷர்ட் போட்டு நடந்து வரும் சீன் செம மாஸ் ...  

  1. இதுவரை – கோவா
      யுவன் சங்கர் ராஜாவின் தி பெஸ்ட் பாடல் இது ... காதலர்களுக்கான உண்மையான பாடல் இது ...



விஷுவலில் என்னை கவர்ந்த பாடல் விண்ணைத்தாண்டி வருவாயாவில் வரும் மன்னிப்பாயா பாடல் , அந்த ஆற்றங்கரை வீடும் , இரவில் ஒளிரும் மின் விளக்குகளும் , பவுர்ணமி இரவில் படகு சவாரியும் அதைவிட பட்டு சேலையில் தேவதை போல பளபளக்கும் திரிஷாவும் (திரிஷா இப்ப எல்லாம் ரொம்ப அழகாய்கிட்டே போறாங்க என்ன ரகசியம்னே தெரியல) என ஒட்டுமொத்தமாக என்  மனதை மொத்தமாக அள்ளிய பாடல் இது ...


வருஷம் முடியபோகுது ஆளாளுக்கு விருது குடுக்க ஆரம்பிச்சிடுவாணுக, இதோ என்னுடய பங்குக்கு நானும் இவங்களுக்கெல்லாம் விருது கொடுக்க போறேன்

  1. “அஞ்சா நெஞ்சன்” விருது – சக்தி சிதம்பரம் (பெருந்தலைகள் எல்லாம் கவுக்க பாக்குற , வரிசையா மண்ண கவ்விக்கிட்டு இருக்கிற தளபதி நடிச்ச  காவலன் படத்த தைரியமா காசு கொடுத்து வாங்கி இப்ப படத்த ரிலீஸ் பண்ண போராடுற தைரியத்துக்காக )
  2. “நினைத்ததை முடிப்பவன்” விருது – ரஜினிகாந்த் (ஐஸ்வர்யா ராயுடன் நடித்தே ஆக வேண்டும் என்ற தன் ஆசையை நிறைவேற்றி கொண்டதால் )
  3. “வெள்ளி விழா நாயகன்” விருது – “இளையதளபதி டாக்டர் விஜய் (அவர் நடித்த ஜோஸ் ஆளுக்காஸ் விளம்பரம் நூற்றி அம்பது நாட்களை தாண்டி இன்னமும் திரையரங்குகளில் தூக்கபடாமல் ஓடிக்கொண்டிருப்பதால்)
  4. “நான் உண்மையிலேயே ஏழைங்கோ”  விருது – கருணாநிதி (அவர் காட்டிய சொத்து கணக்கு விபரத்திற்க்காக )
  5. “நானும் ரௌடிதான்” விருது – ஜாக்குவார் தங்கம்  (அஜித் ரஜினிக்கு எதிராக வாய்சவாடல் விட்டதால் )
  6. “எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் ” விருது- விக்ரம் (கந்தசாமி , ராவணன் என்று அடி மேல் அடி வாங்கியதால் )

கொஞ்சம் சீரியஸ் விருதுகள்

கண்டிப்பா சிறந்த நடிகன் அப்படின்னு இந்த வருசத்துல சொல்லணும்னா நந்தலாலாவில் வந்த அந்த சின்ன பையானத்தான் நான் சொல்லுவேன் ... மிகைபடுத்தபடாத நடிப்பை அவனிடம் இருந்த வாங்கிய மிஷ்கினை பாராட்டலாம்...

அதே மாதிரி சிறந்த இயக்குனர்னா அது என்னை பொறுத்தவரை களவாணி இயக்கிய சற்குணம்தான் ... நான் கொஞ்சம் கூட சலிப்படையாம இந்த வருடம் பார்த்த ஒரே ஒரு திரைபடத்தை அவர் இயக்கியதால் அவரை நான் சொல்லுவதே முறை ... இவரின்  அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பாக்கிறேன் .. சொதப்பாமல் இருந்தால் சரி...

சிறந்த இசை என்றாள்  ஏஆர். ரகுமான் அவர்கள்தான் .. வழக்கம் போல இந்த வருசமும் இசை அமைத்த எல்லா பாடல்களும் ஹிட் ... அப்ப அவரைதான  சொல்ல வேண்டும் சிறந்த இசையமைப்பாளர் என்று ...

சிறந்த காமெடினா அது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல சந்தானம் பண்ணுனதுதான்   ....  

இந்த வருடம் பதிவுலகில் நான் அதிகம் காண்டாகிய ஒரு விஷயம் சில அதிமேதாவிகள் எழுதும் சினிமா விமர்சனங்கள்தான் ...

சினிமா விமர்சசனம் எழுதும் பதிவர்களே , நீங்க காசு கொடுத்து பாக்குற சினிமாவ விமர்சனம் பண்ண உங்களுக்கு முழு உரிமையும் இருக்கு ,, ஆனா சில பேர் சினிமா விமர்சனம் எழுதுரேங்கிர பேருள கொஞ்சம் அதிகமாகவே அந்த படத்தை டெமேஜ் பண்ணி எழுதுராங்களோண்ணு தோணுது ... ஒரு படத்த விமர்சனம் பண்ணும் போது படத்துல இருக்கிற குறைகளை சொல்லலாம் தப்பே இல்ல ஆனால் இவனேல்லாம் ஒரு இயக்குனரா ? நீயெல்லாம் எதுக்கு நடிக்கிற ... என்று வரம்பு மீறி எழுதுவதெல்லாம் ரொம்ப ஓவர் ... சிறந்த விமர்சனம் அந்த படங்களின் நிறை குறைகளை அலசுவதுதான் என்று நான் எண்ணுகிறேன் ... அதை விட்டு விட்டு உங்கள் அதிமேதாவிதனத்தை அதில் காட்டுவதை தவிர்க்கலாமே ... ஒரு பேச்சுக்கு நீங்க எழுதிக்கிட்டு இருக்கிற பிளாக்க யாராவது இப்படி ரொம்ப மோசமா விமர்சனம் செஞ்சா உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்? சந்தானம் பாணியில சொல்லணும்னா ஓசியில அஞ்சுபைசா செலவில்லாம பதிவு எழுதிர நமக்கே இவ்வளவு அடப்பு இருந்ததுனா , கோடி கோடியா செலவு பண்ணி படம் எடுக்கிற அவனுகளுக்கு எவ்வளவு இருக்கும் ... நான் எல்லா படங்களையும் நல்லாவிதமா எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை .. படம் பற்றிய உண்மையை அப்படியே எழுதலாம் தப்பில்லை ஆனால் நாலு பேரு அதிகமா உங்க பதிவை படிக்க வேண்டும் என்பதற்காக வரம்பு மீறி விமர்சனம் செய்வதை தவிர்க்கலாமே ... (அதே சமயம் சினிமாவை தவறாக பயன்படுத்த நினைக்கும் சிலரை ஓட ஓட அடிக்கலாம் தப்பே இல்லை ...)

இந்த வருடம் சோகமயமான வருஷமா அமைந்தது நம்ம இளைய தளபதி ரசிகர்களுக்குதான், சுரா என்று ஒரே ஒரு படம்தான் தளபதிக்கு , அதுவும் மரண அடி வாங்கி விட்டது ... அதுகூட பரவா இல்லை , அடுத்து அவர் எடுத்து முடித்து ஒரு படம் பல மாதங்களாய் ரிலீஸ் ஆக தியேட்டர் கிடைக்காமல் பெட்டியில்  உறங்கி கொண்டு இருக்கிறது ... அவர் ரசிகர்கள்  நிதிகள் எல்லாம் சேர்ந்து விஜய்க்கு எதிராக சதி பண்ணுகிறார்கள் என்று கலாநிதியையும் , உதயநிதியையும் குறை சொல்லி கொண்டிருக்கிறார்கள் ... ஒரு காலத்தில் இதே நிதிகளை பயன்படுத்தி அஜித் படங்களுக்கு எதிராக விஜையின் அப்பா சதி பண்ணி கொண்டிருக்கிறார் என்று அவர் ரசிகர்கள் கூறியபோது தளபதியின் ரசிகர்கள் ஒரு பாடலை பாடி காட்டுவார்கள் ... இன்று அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் இந்த குற்றசாட்டுக்கும் அதே பாடல்தான் பதில் ...

“யாரோட உயர்வையும் யாராலும்
தடுக்க முடியாதுடா
கெடுக்க முடியாதுடா”

என்ன பண்ண விஜய் ...”வினை விதைத்தவன் வினை அறுப்பாண்ணு” பெரியவங்க சும்மாவா சொல்லி இருக்காங்க...  


சரி சரி நாம கேள்வி பதில் மேட்டருக்கு வருவோம் ... சரியான பதில்கள் பரிமளா , செறுப்பே அணியவில்லை .. ரெண்டு கேள்விக்கும் பிட்டு கிட்டு அடிக்காம சரியா பதில் சொன்னவங்க உண்மையிலேயே ரொம்ப ரொம்ப நல்லவங்களாத்தான் இருப்பீங்க ... பின்ன ரஞ்சி நித்தி  விடியோவில பார்த்து மகிழ எவ்வளவோ குஜால் மேட்டர்கள் இருக்கும்போது ரஞ்சிதா போட்டிருந்த செருப்ப பாத்தவங்க உண்மையிலேயே நல்லவங்களாத்தான் இருப்பீங்க .. ஆனா இன்னும் கொஞ்சம் நீங்க வளரனும் பாஸ் ... உலகம் எங்கையோ போய்கிட்டு இருக்கு பாஸ் ... இப்படி அப்பாவியா இருந்தீங்கன்னா பயபுள்ளைக ஏமாத்திடுவாணுக ...

               தீயா வேல பாக்கணும் பாஸ் ...

அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ  இயர் வாழ்த்துக்கள்  

Monday, December 6, 2010

நந்தலாலா- இவர்கள் நடித்திருந்தால்


இப்ப தமிழ் கூ(நா)றும்  பதிவுலகத்தில சூடான பேச்சு மிஸ்கினின் நந்தலாலாவை பற்றித்தான்... ஆனந்த விகடன் பத்திரிகையில் மிஸ்கின் ஒருமுறை இப்படி கூறி இருந்தார் .. "இந்த கதையை நான் பல ஹீரோக்களிடம் சொன்னேன் .. ஆனால் அவர்கள் ரொம்ப கஷ்டமா இருக்கும்போல என்று சொல்லி நடிக்க பயந்தார்கள் .. அதனால்தான் நானே நடித்து விட்டேன்" .. இது வழக்கமாய் ஹீரோவா நடிக்க வர்ற எல்லா இயக்குனர்களும் சொல்லுரதுதான்னாலும் நான் இத கொஞ்சம் சீரியஸா எடுத்து ஒரு வேலை அந்த ஹீரோக்கள் எல்லாம் இந்த படத்தில் நடிக்க ஒத்து கொண்டிருந்தாள் படம் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பார்த்தேன் ... அதன் விளைவுதான் இந்த பதிவு ...


முதலில் நம்ம தளபதி விஜய் அவர்கள் ...


2011 முதல் விஜய் உலகபடங்களில் நடிக்க போகிறார் என்று அவர் தந்தை திருவாய் மலர்ந்திருந்தார் அல்லவா .. அது இந்த நந்தலாலாதான்...




மிஸ்கின் : சார் படத்தோட ஆரம்பத்துல நீங்க மனநல மருத்துவமனையில் இருந்து தப்பிக்கிறீங்க ..



எஸ்.ஏ.சி: நிறுத்து நிறுத்து .. என் பையன மென்டலா நடிக்க சொல்லுறியா?



மிஸ்கின் : சார் உங்க பையன் மென்டலா நடிக்கவே வேண்டாம் சார் .. அவர் எப்பவும் ங்ங்ங்கண்ணா போட்டு பேசுவாரே அதே மாதிரி பேச சொல்லுங்க போதும் ... அப்பறம் பாருங்க உங்க வீட்டுக்கு தேசிய விருதே தேடி வரும் ...



எஸ்.ஏ.சி:  நீ என் பையனோட மாஸ் தெரியாம பேசுற ... என் பையன மட்டும் மென்டலா காட்டுன தமிழ்நாடு மட்டும் இல்ல கேரளாவும் சேந்து எரியும் ...நீ கேரளாகாரன்தான பேசாம நான் சொல்லுற மாதிரி கதைய மாத்து , உன்ன விஜய் ஆரம்பிக்க போற வி.மு.காவோட கேரளா மாநில கொள்கை பரப்பு செயலாளரா ஆக்கி என் பையனை கும்புட்டு நிக்கிறமாதிரி என் பையனோட செலை பக்கத்துல உனக்கு ஒரு செலை வச்சிருவோம்...

விஜய்: நைனா நீ கொஞ்சம் கம்முண்ணு கெட .. ங்ங்ண்ணா... நீங்க முழு கதையையும் சொல்லுங்க்ண்ணா ...


(மிஷ்கின் முழு கதையையும் சொல்லி முடிக்கிறார்...)

விஜய்: கதை ஓ.கே.. எங்கப்பா சின்ன சின்ன சேஞ்ச் சொல்லுவாறு ... அத கொஞ்சம் திருத்திக்கிட்டீங்கன்னா .. படத்த ஆரம்பிச்சிடலாம்னா...

எஸ்.ஏ.சி : மொத இந்த படத்துல விஜய் மெண்டல் கிடையாது ... அவர் சின்ன வயசுல அவங்க ஊருள ஏழைகளை கொடுமபடுத்திர பண்ணையார போட்டு தள்ளிட்டு ஜெயிலுக்கு போராறு ... ஜெயிலில இருக்கும் போது அவரு அம்மா ஞாபகம் வர , அவங்க அம்மாவ பாக்கணும்னு ஜெயில விட்டு தப்பிக்கிராறு .. அப்பதான் அந்த சின்ன பையன வழியில பாக்குராறு... அவனும் அவங்க அம்மாவ பாக்க போய்கிட்டு இருக்கான் .. விஜய் போர ஊரு திருப்பாச்சி .. பையன் போர ஊரு சிவகாசி ... ரெண்டுமே கேரளா பார்டெர்ல இருக்கு... அந்த பையன் கேரக்டெர்ல நம்ம குட்டி தளபதி சஞ்சய்தான் நடிக்கிராறு ... அவருக்கு ஓபெனிங்க் சீனே தூள் பரக்கணும் ... அவர் கால மொதல்ல காட்டி அப்படியே தமிழ்நாடு  மேப் ஒண்ணு சுத்தி சுத்தி வந்து அவர் காலடியில விழனும்... பின்னாடி 2030 அப்படின்னு எழுத்து போடனும் .. 2030ல அவர்தான் தமிழக முதல்வர் அப்படிங்கிரத சிம்பாலிக்கா காட்டனும் ..

மிஷ்கின் : ஸார் இது அவார்ட் படம் ..

எஸ் ஏ சி : யோவ் அவார்ட் படம் எடுத்தா வார்ட் கவுன்சிலர் கூட ஆக முடியாது .. நான் சொல்ற மாதிரி படம் எடு அடுத்த விஜய் கவர்ன்மெண்ட்ல நீதான் கலை மற்றும் ஊடக துறை அமைச்சர்... உன் இஷ்டத்துக்கு பேட்டி கொடுக்கலாம்...

மிஷ்கின்: ஸார் நான் இலக்கிய புஸ்தகத்த மட்டும்தான் வாசிப்பேன் .. உங்களுக்கெல்லாம் வாசிக்க மாட்டேன் ...

கோபமாக அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார் மிஷ்கின்...

அடுத்த வாரம்  ஆனந்த விகடனில் பேட்டி

மிஷ்கின் : தமிழ் சினிமா நடிகர்களுக்கு சுத்தமாக ரசனை இல்லை ,, ரெண்டு மூணு பிட்டு படம் பார்த்து விட்டு நடிகனாக வேண்டும் என்று சினிமாவிர்க்குல் நுழைந்து விடுகிறார்கள்... சிறந்த நடிப்பை வெளிபடுத்த திரிஷாக்களுடன் நூறு முறை அமெரிக்காவில் டேட்டிங்க் போன அனுபவம்  மட்டும் போதாது .. இயக்குனர்களை மதிக்க தெரிய வேண்டும் ...

(அடுத்து மிஷ்கின் நம்ம தல வீட்டிர்க்கு கதை சொல்ல போகிறார்) ...



மிஷ்கின் : ஸார் இந்த படத்துல நடிக்க தகுதியான ஒரே ஆளு நீங்கதான்... கமலுக்கு அப்புறம்  இந்த கேரக்டர் நீங்க மட்டும்தான் சரியா பண்ண முடியும் ...

தல : எப்படி இவ்வளவு உறுதியா சொல்லுறீங்க?

மிஷ்கின் : நீங்க கதைக்கு   சம்பந்தமே இல்லாம எல்லா படத்துளையும் நடந்துகிட்டே இருப்பீங்க ... இந்த படத்துல கதை படியே நீங்க எப்பவும் நடந்துகிட்டேதான் இருக்கணும் ... அதான் சொன்னேன் ... நீங்க நடந்தா ச்சீ நடிச்சா படத்துக்கு பொருத்தமா இருக்கும்...

தல: ஏலே  .. இனிமே நா நடக்க மாட்டேன் .. என் படம்தான் ஓடும்...

மிஷ்கின்: (ஆகா பஞ்ச் டயலாக் பேச ஆரம்பிச்சிட்டாரே... ) இந்த கதையை நான் உங்ககிட்ட சொல்ல வந்ததுக்கு உங்களுக்கு பையன் இல்லாததும் இன்னொரு காரணம். .... ஏற்கனவே ஒரு குடும்பமே ஒண்ணு சேந்து என் கதையை கொல்ல  பாத்தானுக ... நீங்க தனி ஆள் தல அதான் தைரியமா வந்தேன்...

தல : ஏலே நான் தனி ஆள் இல்ல எனக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு ...

மிஷ்கின் : (நைசா பின்னாடி எட்டி பாத்து) தல உங்க பின்னாடி குப்பைகூடைதான் இருக்கு ...

தல : நீ ரொம்ப பேசுர ... கதையை என் பிஆர்ஓகிட்ட சொல்லிட்டு போ .. எனக்கு அடுத்த வாரம் தேனிக்கு பக்கத்துல அத்திபட்டில ரேக்லா ரேஸ் இருக்கு .. அத முடிச்சிட்டு உன்னை கூப்புடுறேன்...

அடுத்த வாரம் ஆனந்த விகடன்..

கேள்வி: நீங்களும் அஜித்தும் சேந்து பண்ண போற படம் என்னாச்சு?

மிஷ்கின் : நான் தலைக்கு மேல மயிரு இருக்கிறவங்ககிட்ட மட்டும்தான் வேலை செய்வேன்... மீசைக்கு கீழ மயிர் இருந்தா எனக்கு பிடிக்காது .. பாருங்க நானே அத எடுத்திட்டேன்...


இதற்க்கு அஜித்தின் பதில் என்ன என்று கேட்க எல்லா பத்திரிக்கைகளும் போட்டி போட்டு அவரை சந்திக்க முயல .. தல ரொம்ப கூலாக  வெங்கட் பிரபுவை வைத்து “எங்காத்தா” எடுக்க கிளம்பி விடுகிறார் ...  நான்கு மாதம் கழித்து மிஷ்கினுக்கு  பதில் சொல்லுகிறார்

“ நான் இல்லாம அவர் மூணு மொக்கை போட்டுட்டார் .. அவர் இல்லாம நான் இருபது மொக்கை போட்டுட்டேன் ...யாருக்கும் யாரும் தேவை இல்லை”


பெரிய நடிகர்களை நம்பி பயன் இல்லை என்று மிஷ்கின் அடுத்து நம்ம டீ.ஆரை தேடி போகிறார்


டீ ஆர்: வாங்க மிஷ்கின் ... தலைக்கு மேல மயிர் இருக்கிறவாங்கக்கூட மட்டும்தான் வேலை செய்வேண்ணு சொல்லிட்டு இப்ப உடம்பு முலுசும் மயிர் இருக்கிற என்ன தேடி வாரீங்கா...

மிஷ்கின் : எல்லாம் நேரம்தான்... சரி நான் கதைய சொல்லி முடிக்கிறேன் அப்பறம் நாம பேசிக்கலாம் ...

(கதையை சொல்லி முடிக்கிறார்)

டீ ஆர் :  “ நீ சொன்ன கதை டாப்பு
            ஆனா நான் இதுல நடிச்சா மக்கள் வப்பான் ஆப்பு
            நான் சொல்லுறேன் சில சேஞ்சு
            அத நீ செய்யி துணிஞ்சு
            அப்பால  எகிறும்பாறு உன் ரேஞ்சு
            யே டண்டனக்கா யே டனக்குனக்கா”

டீ ஆர் படம்னா தமிழ்நாடு  மட்டும் இல்ல ... இந்தியாவே எதிர்பார்க்கும் ... படத்துல ஹீரோவா  நான் நடிக்கிறேன் ... அந்த பையன் கேரக்டர்ல என் பையன் குறள் நடிப்பான் ...

"யாருக்கும் அடிபணியாது எங்கட்சி .. டீ ஆரோட பலமே தங்கச்சி"....  குரலரசனோட  நான் அவன் அம்மாவ தேடி போறேன் .. அவங்க அம்மாவ பாக்குற நான் அப்படியே ஷாக் ஆகி நிக்கிறேன் ... காரணம் அது நான் சின்ன வயசுல ரொம்ப பாசமா வளத்த என் தங்கச்சி... அந்த சீன்ல நான் போடுறேன் பாருங்க பேக்ரவுண்ட் ம்யூசிக் “ஆ சிம்ஸக் சீம்ஸக் .. டுமுக்கு டுமுக்கு சிம்ஜ்க்க் சிஜக்க் ... டுப்பு டுப்பு ... “ (வாயிலேயே ம்யூசிக் போட்டு காட்டுகிறார் )அப்படியே ஆடியன்ஸ் கண்ணுல தண்ணி வர தியேட்டர்ல உக்காந்து இருப்பான் ... அப்பதான் ஒரு பிளாஷ் பேக் காட்டுறோம் சின்ன வயசுல முள் குத்தி அவ கால்ல வந்த  ரத்தத்த பாத்துதான் பாசத்துல அதிர்ச்சியாகி நான் மெண்டலாவே  ஆகிறேன்...
அப்படிபட தங்கச்சி ஏன் இப்படி ஆனா? அவங்க ஊரு எம்எல்ஏ பையன் அவளை ஏமாத்தி கெடுத்திரான்.. அவனுக்கும் அவளுக்கும் பொறந்த பையந்தான் குறள் ... இவங்க ரெண்டு பேரையும் அவங்க அப்பனோட சேத்து  வைக்க நான் எம்எல்ஏ வோட போராடுறேன் ... இதுதான் கதை ... படத்துல எனக்கு  ஜோடியா மும்தாஜ் நடிப்பாங்க ...

ஏற்கனவே என் பையன் சிம்புவ "லிட்டில் சூப்பர் ஸ்டார்" ஆக்கி ரஜினியோட கொட்டத்தை அடக்கியாச்சி ... இப்ப கமல்தான் என் குறி அதனால டைட்டில் போடும்  போது என் பையன் குரலரசன் பேருக்கு முன்னாடி “லிட்டில் உலக நாயகன்” அப்படின்னு போடனும் ... இந்த படத்த பாத்து கமல் உங்களை இவ்வளவு நாள் மதிக்காம போனது என் தப்புதான்னு என் கால்ல விழுந்து கதற கதற மன்னிப்பு கேக்கணும்... கேக்க வைப்பான் ஸார் என் பையன் ... கேக்க வப்பான் ...அவன் புலிக்கு போறந்தவன் ஸார்...

மிஷ்கின் : (மனதிர்க்குல் கரடிக்கு பிறந்தவண்ணு சொல்லு கரெக்டா இருக்கும் )அப்ப உங்க வீட்டுல எல்லாமே புலிதானா? நீங்க வெறும் டம்மி பீசா? ...

"இப்படி ஒரு படம் எடுக்கிறதுக்கு பதிலா நான் கேரளாவுக்கு அடிமாடா போய்டலாம்... நீங்க யாருமே வேணாம் நானே நடிக்கிறேன் ஹீரோவா..."

சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார் மிஷ்கின் ...


இந்த படம் வெளிவந்த பின்னர் படத்தை பற்றி கருத்து கூறுமாறு விஜயின் தந்தை எஸ்ஆசியிடம் கேட்கபட்டது ..

எஸ்ஏசி: ஸார் மிஷ்கின் இவ்வளவு பெரிய திருடனா இருக்க கூடாது ஸார்? கதைய திருடலாம் தப்பில்லை ஆனா டைட்டில் கார்ட்ல அந்த ஒரிஜினல் படத்தோட பேரையாவது போட்டு இருக்கலாம்... ஒரு கிரியேட்டரா என் மனசு ரொம்ப கஷ்டபடுது ஸார்? நானும் என் மகனும் ரொம்ப கஷ்டபட்டு சங்கவியோட டேட்ஸ் வாங்கி எடுத்த படம் ஸார் விஷ்ணு .. அந்த படத்த அப்படியே ஆட்டைய போட்டிருக்காரு ஸார் இவர்... அதுல விஜயும் சங்கவியும் காடு மலைண்ணு நடந்தே சங்கவியோட கிராமத்துக்கு பயணம் போவாங்க... அவங்க பயணத்தோட நடுவுல நெஞ்ச குத்துற மாதிரி(சங்கவி நெஞ்சை விஜய்)  எத்தன சீன் கஷ்டபட்டு யோசிச்சி எடுத்தேன் தெரியுமா ஸார்? மிஷ்கின் கொஞ்சம் கூட சொரணையே  இல்லாமல் என் கதையை கொஞ்சம் மாத்தி எடுத்து “தமிழ் சினிமாவில் நெஞ்சை தைக்கிற மாதிரியான படம் “ அப்படின்னு பேர் எடுத்துட்டாறு... எனக்கு நன்றினு ஒரு சிலைடு கூட போடலேண்ணுதான் எனக்கு வருத்தமா இருக்கு...


இந்த பேட்டியை கேட்டு ஒரு இயக்குனர் அடுத்த நாள் சூசைட் பண்ணி கொள்கிறார்.. அவர் வேறு யாரும் இல்லை நந்தலாலாவின் ஒரிஜினல் கிகுஜிரோவின் இயக்குனர் “டகேஷி கிடோனா”


போனஸ் :

எனக்கு வந்த ஒரு விஜய் எஸ்எம்எஸ்

கஸ்டமர் : இந்த டீவீ என்ன விலை?

சேல்ஸ்மேன்: 2 லட்சம்

கஸ்டமர் : அப்படி என்ன இருக்கு இந்த டிவியில?

சேல்ஸ்மேன்: விஜய் படம் வந்தா அதுவா ஆஃப் ஆகிக்கிடும்..

கஸ்டமர் : அப்ப உயிர காக்கிற டிவியிண்ணு சொல்லுங்க.. 

(அப்ப தல படம் வந்தா டிவி கீழ விழுந்து தற்கொலை பண்ணிக்கிடுமாண்ணு பின்னூட்டம் போட நினைப்பவர்கள் கடையில் காவலன் படத்தில் விஜய் பேசி இருக்கும் அத்துணை பஞ்ச் டயலாக்க்குகளும் பின்னூட்டதில் போடபட்டு வைரஸ் அட்டாக் நடத்தி கடை காலி செய்யபடும்)



LinkWithin

Related Posts with Thumbnails