Followers

Copyright

QRCode

Friday, January 14, 2011

ஆடுகளம் – என் பார்வையில்



இந்த பொங்கலை சந்தோஷமாக கொண்டாட காவலன் படம் பார்க்க வேண்டும் என்று நானும் என் நண்பர்களும்  காலையிலேயே கிளம்பி சென்றோம் ... தியேட்டர் சென்ற பின்னர்தான் தெரிந்தது படம் இன்று வெளிவரவில்லை என்று ... கொஞ்சம் ஏமாற்றம்தான் சரி கிளம்பி வந்ததுக்கு ஆடுகளம் பார்த்து விட்டு  செல்லாம்  என்று வண்டியை அந்த தியேட்டர் பக்கம் திருப்பினோம் .. போகும் வழியிலேயே டிராபிக் போலீஸ் பிடித்து கொண்டார்கள் , மூன்று பேர் சென்றோம் வண்டியில் ... அவர்களிடம் தண்டமாக அம்பது ரூபாய் அழ வேண்டி வந்தது , என்னடா இப்படி வெட்டி செலவு வருதே  சகுனம் சரி இல்லையே என்று அப்பொழுதே சுதாரித்திருந்தால் முன்னூறு ரூபாயும் மூன்று மணி நேரமும்  தப்பி இருந்திருக்கும்... என்ன பண்ண விதி வலியது ...


படம் முழுவதும் எனக்கு தோன்றிய ஒரு விஷயம் வெற்றிமாறன் இன்னமும் பொல்லாதவன் பாதிப்பில்  இருந்து வெளியே வரவில்லை என்பது  ..  சேம் ட்ரீட்மெண்ட் .... பாதி படம் இருட்டிலேயே எடுத்திருக்கிறார்கள் பார்க்கும் நமக்குதான் கண்ணை கட்டிக்கொண்டு வருகிறது ... படத்தின் மெயின் மேட்டரே சேவல் சண்டைதான் ... சேவல் சண்டையில்  கொடி காட்டி பறக்கும் கோஷ்டி பேட்டைக்காரன் கோஷ்டி  அதன் தலைவர் பேட்டைக்காரன்  வயது அறுபது ... அவர் கோஷ்டியில் முக்கியமான இருவர் தனுஷ், கிஷோர் .. சேவல் சண்டையில் இவர்களை அடிக்க அந்த பகுதியில் யாருமே இல்லை... சேவல் சண்டையில் அவர்களின் ஒரே எதிரி அந்த பகுதியில் இன்ஸ்பெக்டர் வேலை பார்க்கும் ஒருவன் .. இந்த இரண்டு கோஷ்டியில்  யார் பெரியவன் என்பதை நிரூபிக்க ஒரு சேவல் சண்டை  போட்டிக்கு ஏற்பாடு பண்ணுகிறார்கள் ... அதில் தனுஷ் பேட்டைக்காரன் பேச்சை கேட்காமல்  தன் சேவலை போட்டியில் இறக்கி இன்ஸ்பெக்டர் சேவலை வீழ்த்தி விடுகிறார் ... இதனால் ஓவர் டேயில் அவருக்கு மவுசு ஏறி  விடுகிறது ... எங்கே தனுஷ் வளர்ந்து  விட்டால் தன்னை யாரும் மதிக்காமல் போய் விடுவார்களோ என்று பயப்படும் பெரியவர்  கூட இருந்தே தனுஷுக்கு குழி பறிப்பதே கதை ... அந்த குழியில் யார் விழுந்தார் யார் மண்ணை போட்டு மூடினார் என்பதே கதை ...

படத்தில் இடையில் ஒரு காதல் கதை வேறு வருகிறது ஏன் எதற்க்கு என்று தெரியாமலே ....  படத்தின் உட்சபட்ச அறுவையே அந்த காதல்தான் ... கோழி திருட போகும் வீட்டில் அவளை தனுஷ் முதலில் பார்க்கிறார் .. பார்த்தவுடன் காதல் ... அவளும் இரண்டாவது சந்திப்பிலேயே தன் வீட்டுக்கு திருட வந்த ஒருவனை  தானும் காதலிக்கிறேன் என்று நாடு ரோட்டில் வைத்து கூறுகிறாள்... அதை கேட்டு பயங்கர சந்தோசத்தில் யத்தே யாத்தே என்று நாடு ரோட்டில் ஆடிக்கொண்டே வீடு வரை  போய் செருகிறார் தனுஷ்   அடுத்த காட்சியிலேயே  வேறு ஒருவனிடம் இருந்து தப்பிக்கவே அவ்வாறு கூறியதாக சொல்லுகிறாள்  உடனே நம்மாளுக்கு கோபம் வர கெட்ட  வார்த்தையில் அவளை திட்டி  விடுகிறார் நெக்ஸ்ட்  என்ன வழக்கமாய் எல்லா ஹீரோக்களும் பண்ணுவதை போல   சரக்கடித்து பீலிங்க்ஸ் விடுகிறார் ... ஆனால்\அடுத்த காட்சியிலேயே ஏன் எதற்க்கு என்று தெரியாமலேயே அவளுக்கு தனுஷ் மேல் காதல் வந்து விடுகிறது....   நண்பர்களுடன் சரக்கடிக்கும் தனுஷை பார்த்து இப்படி சந்தோஷமாக எப்பொழுதுமே நான் இருந்ததில்லை என்று சோகமாகிறார் ...எங்கே தனுஷுடன் அவரும் சேர்ந்து சரக்கடிக்க ஆரம்பித்து விடுவாரோ என்று பார்க்கும் எனக்கு பயமாக இருந்தது  .. அடுத்து இரவு  முழுவதும் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள் ... ஆனால் அவள் வீட்டில் இருவரையும் நண்பர்கள்தான் என்று நம்புகிறார்கள் .. அட போங்கையா .... இந்த காதலுக்காக அவள் கடைசியில் கையையெல்லாம் வேறு கிழித்து கொள்கிறாள் ...   


 ஹீரோ வில்லனிடம் அடி வாங்கி வாயில் இருந்து ரத்தம் ரத்தமாக கக்கி கிட்டத்தட்ட சாகும் நிலைக்கு வந்து விட்டு  திடீரென வீரம் வந்து ரெண்டே அடியில் வில்லனை சாய்பதை போலத்தான் இதுவரை தமிழ் சினிமாக்களில் நாம் பார்த்திருப்போம் .. ஆனால் இங்கேதான் வெற்றிமாறன் பயங்கரமாக யோசித்து ஒரு வித்தியாசத்தை புகுத்தி இருக்கிறார் ... இந்த படத்தில் ஹீரோவின் சேவல்  வில்லனின் சேவளிடம் கால்மணி  நேரம் கதற கதற அடி வாங்கி மயக்கம் போடும்   நிலைக்கு வந்து  திடீரென்று ஏன் எப்படி என்று தெரியாமலேயே வீறு கொண்டு எழுந்து ரெண்டே ரெண்டு தடவை தன் அலகால் கொத்தி வில்லன் சேவலை கொன்று விடுகிறது ... சேவ குஞ்சி எல்லாம்   ஹீரோயிசம் பண்ணுதேடா என்று சந்தானம் பாணியில் தியேட்டரில் ஒரு கமெண்ட் வந்தது ...

படத்தில் நடிப்பில் படையை கிளப்பி இருப்பவர் பேட்டைக்காரனாய் வரும் அந்த பெரியவர்தான் ... வெயிலில் பரத் அப்பாவாக வருவாறே அவர்தான் என்று எண்ணுகிறேன் .. பெயர் தெரியவில்லை ... போலீஸ் ஸ்டேஷனில் அடி வாங்கி நிற்க்கும் போது அவமானத்தில் அவர் உடல் நடுங்கும் காட்சி ஒன்று போதும் அவரை பாராட்ட ...

அண்ணன் தம்பி போல பழகும் இருவருக்கு இடையே ஒரே காட்சியில் திடீரென ஈகோ பிரச்சனை வந்து எதிரும் புதிருமாக பிரிகிறார்கள் .. அந்த காட்சிதான் படத்தின் மிக முக்கியமான இடமே .. கிட்டத்தட்ட கிழக்கு சீமையிலே படத்தில் வரும் அந்த கோயில் திருவிழா காட்சியை போன்ற ஒன்று இது .. எவ்வளவு கவனமாக எடுத்திர்க்க வேண்டிய காட்சி  ..ஆனால் அதை காட்சிபடுத்துதலில்  பாரதி ராஜா காட்டிய அழுத்தம் வெற்றிமாரனிடம் இல்லை ... அதர்க்கு அடுத்து வரும் காட்சிகளில் நம்மால் ஒன்றி போய் பார்க்க முடியாமல் போவதார்க்கு காரணம் அந்த காட்சியில் அவர் செய்திருக்கும் பிழைதான்  ...

தனுஷ்  , புதுப்பேட்டை  யாரடி மோகினி  குட்டி  இப்படி படத்துக்கு படம்  எப்படி வித்தியாசமே காட்டாமல் நடித்திருப்பாரோ அப்படியே இந்த படத்திலும் ... பேச்சில் காட்டும் அதிமேதாவிதானத்தை கொஞ்சம் நடிப்பிலும் காட்டலாம் அவர் ... இந்த படத்தில் தனுஷ் பேசி இருக்கும் மதுரை தமிழுக்கும் புதுபேட்டையில் அவர் பேசி இருக்கும் சேரி தமிழுக்கும் ஏதாவது இரண்டு வித்தியாசம் கண்டுபிடிப்பவர்களை அடுத்த செம்மொழி மாநாட்டில் முனைவர் பட்டம் கொடுத்து கவுரவிக்கலாம்...

ஹீரோயின் புதுமுகமாம்.. நடிப்புதான் வரவில்லை பரவாயில்லை பார்க்க அழகாவாது இருந்திருந்தால் கொஞ்சம் சந்தோசபட்டு இருக்கலாம் ...

யாத்தே யாத்தே பாடலும்  அதை படமாக்கி இருந்த விதமும் சூப்பர் ... பின்னணியில் இந்த படத்திலும் தன் மாமா பெயரை கெடுத்திருக்கிறார் பிரகாஷ் ...

சுப்ரமணியபுரம் பருத்திவீரன் போல ஒரு படம் எடுக்க ஆசைபட்டதில் தப்பில்லை ஆனால் திரைக்கதையிலும்  காட்சி அமைப்புகளிலும் கொஞ்சம் உழைப்பை கொட்டி இருக்கலாம் ...குறிப்பாக இரண்டாம் பாதியில் தேவை இல்லாமல் இழுத்து கொண்டே போகிறார்கள் ...

மொத்தத்தில் இந்த ஆடுகளத்தில் வெற்றிமாறன் டீம் ஆடியிருக்கும் ஆட்டம் கொஞ்சம் சொதப்பலான  ஆட்டம் ...


Thursday, January 13, 2011

காவலன் பிரிவியூ - கவுண்டர் ஸ்பெஷல்

( இந்த பதிவில் வரும் சம்பவங்கள் முழுக்க முழுக்க கற்பனையே ... யாரையும் குறிப்பிடுவன அல்ல ... மீறி அப்படி யாராவது இருந்தால் கோபபடாமல் ஜாலியா எடுத்துக்கொங்கங்கோ)


காவலன் படம் விரைவில் வெளிவர போகிறது , நம்ம இளையதளபதி எப்படியாவது படத்தை ஓட வைக்க வேண்டும் என்று பசுமாடெல்லாம் தானம் பண்ணுனாறு  தயாரிப்பாளர் காசுல .... அடுத்து கண்டிப்பா அதே தயாரிப்பாளர் காசுல தமிழ் திரை உலகில் இருக்கிற எல்லா நடிகர்களுக்கும் , நடிகைகளுக்கும் , டெக்னீசியன்சுக்கும் ஒரு பிரிவியூ ஷோ நடத்துவாரு  ... அத பாத்திட்டு தியேட்டர விட்டு வெளிய வந்துகிட்டு இருக்கிற நடிகர்கள்கிட்ட நம்ம கவுண்டர் அண்ணன் பேட்டி எடுத்தா எப்படி இருக்கும் ..... ஸ்டார்ட் ம்யூசிக்



முதலில் நம்ம சூப்பர் ஸ்டார்

கவுண்டர் : ஸார் என்ன ஸார் படம் முடிய இன்னும் அரைமணி இருக்கு அதுக்குள்ள எழுந்திருச்சி வந்துடீங்க?

ரஜினி : முடியல ஸார்... நான் கலைஞர் ஐய்யாவோட பெண் சிங்கம் பாத்துருக்கேன் , என் பொண்ணு எடுத்த கோவா பாத்திருக்கேன் ஆனா இப்படி ஒரு படம் பாத்ததில்ல ஸார்... உள்ள இருந்தா செந்திருவனோண்ணு பயமா இருந்திச்சு வந்துட்டேன்

கவுண்டர் : பயந்துட்டீங்களா அப்படி என்ன ஸார் இருக்கு படத்துல பயமுறுத்திர  மாதிரி...  கொரில்லாவா?

ரஜினி : அதெல்லாம் விட பயங்கரமா ஒண்ணு இருக்கு ஸார் .. பஞ்ச் டையலாக் பேசியே கொல்லுது... ஒரு சீன்ல அத குளோஸ் அப்புல காட்டுராணுக பாருங்க  பேய நேர்ல  பாத்தமாதிரி அவ்வளவு பயங்கரமா இருக்கு ...

கவுண்டர் : அப்படி எது ஸார் இந்த படத்துல இருக்கு ... ஏதும் கிராபிக்ஸ் பண்ணி இருக்காணுகலா? கொஞ்சம் அது யாருண்ணு காட்டுங்க பாப்போம் ...

ரஜினி பக்கத்தில் இருக்கும் இந்த போஸ்டரை காட்டுகிறார்   



கவுண்டர் : ஐயய்யோ .. காட்டு பண்ணி ... இதெல்லாமா இந்த படத்துல நடிச்சிருக்கு ... காமெடி படம்னு சொன்னாணுக ... இது திகில் படமா இருக்கும் போலயே


அடுத்து கமல் வருகிறார்

கவுண்டர்  : எண்ணன்னே நல்லா  பாத்து ரசிச்சீங்களா?

கமல் : ஹி.. ஹி... பக்கத்துல கௌதமி இருந்தாங்க , அதனால எனக்கு முன்னாடி உக்காந்து இருந்த  அசின அடிக்கடி பாத்து ஜொள்ளு விட முடியல ...

கவுண்டர் : (மனதுக்குள்) (படவா ராஸ்கல் நான் படத்த ரசிச்சியாண்ணு கேட்டா என்ன பதில் சொல்றாங்க பாரு)இப்ப என்ன அடுத்து கே .எஸ். ரவிக்குமார கூப்பிட்டு வேண்டாம்டா வம்புண்ணு  ஒரு படம் எடுத்து அசின புக் பண்ணி ஆப்ரிக்கா,  அண்டார்டிக்காண்ணு எங்கயாது கூப்பிட்டு போயி நல்லா என்ஜாய் பண்ண வேண்டியதுதான...

கமல் : நல்ல ஐடியா நேத்துதான் HBO ல ஒரு படம் பாத்தேன் அண்டார்டிக்காவுல நடக்குற கதை , உடனே என் பெயரை போட்டு படத்த ஆரம்பிச்சிட வேண்டியதுதான் .... (கே எஸ் உடன் போனில் பிஸி ஆகி விடுகிறார்)

கவுண்டர்(கடுப்பாகி)  : ஹலோ இவ்வளவு நேரம் ஒரு படம் பாத்தீங்களே , அத பத்தி சொல்லுங்க ...

கமல் : படமா? யோவ் என் பக்கத்துல கௌதமி இப்படி உக்காந்து இருக்கும்போது 


அவள விட்டுட்டு படம் பாக்க நான் என்ன கேனையானா?

கவுண்டர் : அடேங்கப்பா... நீ ஆனா வூன்னா எல்லா நிகழ்ச்சிக்கும் ஏன் இந்த குட்டியோட  வரேண்ணு இப்பதான புரியுது ... என்ஜாய் ....மனசுக்குள் (கருமாந்திரம் புடிச்சவணுக எப்படியெல்லாம் பிளான் பண்ணுராணுக பாருயா? இனிமே எவனாவது இந்த டுபாக்கூர் சுரா  மண்டையன் நடிச்ச படத்த பாக்க கூப்பிட்டா இதே ஐடியாவ   ஃபாலோ பண்ணி படத்த பாக்காம எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான் )


அடுத்து நம்ம தீவிர விஜய் ரசிகர் ஒருவர் வருகிறார்


கவுண்டர் : வாங்க தம்பி .. நல்ல இருக்கீங்களா? இன்னமும் எப்படி உங்களாள இந்த ஆளு படத்துக்கு முதல் நாளே நம்பி வர முடியிது...

ரசிகர் : ஸார் எங்க தளபதி யாருண்ணு நெணச்சீங்க.... அவர் அழகிய தமிழ் மகன் ஸார் ... அவர் படம் ஓடல அப்படின்னு சொல்றதெல்லாம் பொய் ஸார் ....  தளபதி எங்க  தல எடுத்திடுவாரோண்ணு சில விசமிகள் பண்ணுற பொய் பிரசாரம் ... நான் கேட்ட வரைக்கும் மவுத் டாக் ஓகேதான்...

கவுண்டர் : அது எப்படி தம்பி படமே இன்னும் வெளிய வரல.. அதுக்குள்ள மவுத் டாக் பத்தி எல்லாம் பேசுர .... சரி படத்துல ஏதாவது தேறுமா...

ரசிகர் : ஸார் அந்த பட்டாம்பூச்சி பாட்டுல 00:48 செகண்ட்ல இருந்து 01:23 செகண்ட் வரைக்கும் வர்ற டான்ஸ் பாருங்க ஸார் ... நாங்க எல்லாம் தளபதிய ஏன் ரசிக்கிறோம்னு தெரியும் ...


கவுண்டர் : அப்ப மூணு மணிநேர படத்துல அந்த முப்பது செகண்ட் மட்டும்தான் நல்லா இருக்கும்னு நீயே ஒத்துக்கிற... ஆடடடா எவ்ளோ நல்ல மனசு உங்களுக்கு...

ரசிகர் : ஸார் நீங்க என்ன வேணா சொல்லுங்க படம் கேரளாவுள பெரிய ஹிட்..... யுட்யூப்ல வீடியோ காட்டவா?


கவுண்டர் : கொஞ்சம் பொறு  தம்பி இன்னும் ஒரு வாரத்துல படமே யுட்யூப்ல வந்திடும் நான் அத பாத்துக்கிறேன் ...

ரசிகர் : யுஎஸ்ல இருக்கிற என் ஃப்ரெண்ட் நேத்து நைட்டே படம் பாத்துடானாம் ... படம் நல்லா இருக்குடா, நீ இன்னும் பாக்கலையா? இந்நேரம் இது எங்க தல படமா மட்டும் இருந்ததுனா  நான் தியேட்டர விட்டு வெளியில வரவே மாட்டேண்ணு  சொன்னான் ... அவன் தல ரசிகன் ... அவனே சொல்லிட்டான் படம் ஹிட்டுதான் ஸார்...

கவுண்டர் : அவன் பாவம் தூக்கமும் கெட்டு காசும் வீணா போன கடுப்புல உன்னை பழிவாங்க அப்படி சொல்லிருப்பான் ... ஒவ்வொரு படத்துக்கும் அதையும் நம்பி நீ ஏமாறுரையே ... இன்னமுமா உங்க தளபதிய நீ நம்புர...

ரசிகர் : ஸார் சத்யம்ல வர்ற வெள்ளிக்கிழமை வரைக்கும் டிக்கெட் புல்லாம் ....

கவுண்டர் : அட்ராசக்க அட்ராசக்க .. நீ அந்த டுபாக்கூர் சுரா மண்டையனோட ரசிகன்கிறத நிரூபிச்சிடடா... உங்க ஆளு  படம் வெள்ளிக்கிழமைக்கு அப்புறம்தான் ரிலீஸ் ஆகுது ...  நீ புல்லா இருக்குன்னு நெட்ல பாத்த படம் பலான இங்கிலீஷ் படம் ... இந்த படத்துக்கு வர்ற கூட்டத்த பாத்துட்டு தியேட்டர் ஒனர் உங்க படத்த எடுக்கவா வேணாமாண்ணு யோசிக்கிறானாம்...  

ரசிகர் : நீங்க என்ன சொன்னாலும் நான் மாற மாட்டேன் .. வாழ்க இளைய தளபதி .. வளர்க அவர் புகழ்...

கவுண்டர் : இனி பேசி பிரயோசனம் இல்லை ... உன் மூஞ்சில முழிச்சா காலங்காத்தால கக்கூஸ் கூட ஒழுங்கா போகாது ... ஓடி போய்டு இனிமே இந்த ஏரியா பக்கம் வந்த இந்த குரங்க விட்டு கடிக்க விட்டுடுவேன் .......


அடடடடடா ...  நம்ம மூட கெடுத்துட்டானே  .... சீக்கிரம் இந்த காந்த கண்ணழகிய கூப்பிட்டு போய்  பூ மிதிச்சாதான் டென்ஷன் குறையும் ....
காந்த கண்ணழகி நாம பூ மிதிக்க போவோமா?






LinkWithin

Related Posts with Thumbnails