அது ஒரு மாலை மயங்கும் நேரம் , ஆனா எனக்கு அது டாஸ்மாக்கில் மயங்கி கிடந்த நேரம். மூடியில இத்துனூண்டு பீர ஊத்தி நானூறு மீட்டருக்கு அப்பால வச்சாலே அந்த வாசனையில மப்பு மண்டைக்கி ஏறி என்னால உன்ன மறக்க முடியல " ப்ரியா"ன்னு எங்க அப்பா செல்லுக்கு SMS அனுப்புற அப்புராணி பய நான் , இன்னைக்கி யாருமே துணைக்கு இல்லாம ஒரு ஹாப்பும் ரெண்டு புல் பீரும் அடிச்சா?
டாஸ்மாக் படிக்கட்டு பழனி மல படிக்கட்டு மாதிரி மலைப்பா தெரிய அப்டியே மயங்கி விழுந்துட்டேன்...இதுக்கெல்லாம் காரணம் அந்த நாசமா போன காதல் .... அழகா பொறந்து தொலைச்ச அந்த ப்ரியா.... .
ப்ரியா நான் காதலிச்ச முதல் பெண் , ஆனா அவ என்ன காதலிக்கல. ஏன்னா நான் அவள காதலிச்ச விசயத்த அவகிட்ட சொல்லாமலே மறச்சி வச்சி இருந்தேன்....
ப்ரியானா பயம் ...எல்லாருக்கும் பயம், செருப்பால அடிப்பாங்கிற பயம். செருப்பு பிய்யிற வரைக்கும் அடிப்பா , மாசத்துக்கு எப்படியும் நாலு செருப்பு மாத்துவா . எங்க ஊரு செருப்பு கட பாயே அவ பிறந்த நாளுக்கு "எங்க குடும்பத்த வாழ வைக்கிற தெய்வமே" ன்னு போஸ்டர் அடிச்சி ஒட்டுவாரு , அந்த அளவுக்கு எங்களால அவருக்கு பிசினஸ். அவகிட்ட பேசுறதுக்கே எல்லாரும் பயப்படுவாணுக....
ஆனா அவள பாத்த மொத நாளே அந்த பாழா போன காதல் எனக்குள்ள வந்து தொலச்சிடுச்சே... எப்படி என்னோட காதல அவகிட்ட சொல்லுறதுன்னு எனக்கு புரியாம பைத்தியம் பிடிச்சி அலைஞ்சிக்கிட்டு இருந்தேன் . அப்பத்தான் கடவுள் கணக்கு வாத்தியார் ரூபத்துல வந்தாரு.
நான் பொண்ணுகள கணக்கு பண்ணி கணக்கு பண்ணி கணக்குல பெரிய புலியாகிட்டேன். ப்ரியாவுக்கு அழக அதிகமா படைச்ச ஆண்டவன் அறிவ சுத்தமா வலிச்சி எடுத்துட்டான். காலாண்டுல கணக்குல பல்ப் வாங்கிட்டா, கணக்கு வாத்தி அவளுக்கு நெறைய கேள்விகள கொடுத்து , இத எல்லாம் சால்வ் பண்ணிட்டு வந்தாதான் உன்ன அடுத்த பரிட்ச எழுத விடுவோம் இல்லைன்னா அடுத்த வருசமும் நீ இங்கதான் இருக்கணும்னு அவ சால்வ் பண்ண மாட்டாங்கிற தைரியத்துல அவள அடுத்த வருசமும் சைட் அடிக்கலாம்னு ஜொள்ளு விட்டுகிட்டே சொல்லி இருக்காரு. அவளுக்கு அப்ப கடவுளா தெரிஞ்சது நான் மட்டும்தான்....
எனக்கு அது, ஆண்ட்ரோஜன் அப்பத்தான் அது வேலைய காட்ட ஆரம்பிச்ச கால கட்டம் , அதுவரைக்கும் பாத்து பயந்துகிட்டு இருந்த பள்ளிகூடத்து மிஸ்கள எல்லாம் இப்ப பாத்தா பயத்துக்கு பதிலா வேற ஏதோ தோணுது.... எதிர் வீட்டு ஆண்டி இடுப்புல கொழந்தைய தூக்கி வச்சிருந்தா ஓடி பொய் அந்த கொழந்தைய தொட்டு கொஞ்சி தூக்கி திரும்பவும் அந்த ஆண்டிகிட்டயே கொடுத்து கொழந்தைக்கு கொடுக்குற முத்தத்துல பாதிய ஆண்டிக்கும் கொடுக்குற வயசு... ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டாரா ஒத்த காலுல நின்னுகிட்டு இருந்த மனசுல , ஷகீலா அரகுற டிரஸ்சோட(சில சமயம் டிரஸ்ஸே இல்லாம ) படுக்க ஆரம்பிச்ச நேரம் .... கூட்டமே இல்லாத பஸ்ஸ விட்டுட்டு கூட்டமா இருக்குற பஸ்சுக்காக காத்துகிட்டு இருந்த மனசு... இப்படி டெண்டுல்கர் அடிக்கிற பந்து மாதிரி எல்லா திசையிலும் பறந்துகிட்டு இருந்த என் மனச இஷாந்த் ஷர்மா வீசுற பந்து மாதிரி ஒரே இடத்துல விழ வச்சவ அவதான்........ "ப்ரியா"...
(தொடர்ந்து வருவா)
Followers
Copyright
Wednesday, March 3, 2010
Monday, March 1, 2010
விண்ணை தாண்டி வருவாயா? - திரையில் ஒரு தாஜ்மஹால்
டிஸ்கி 1: காதல் , கவிதை , பெண்களை பற்றிய வர்ணனை என்றாலே ஆள விட்டா போதும்டா சாமி என்று ஓடுறவரா நீங்க? கண்டிப்பா இந்த படத்த பாக்காதீங்க
பைக்குள உங்க லவ்வர உக்கார வச்சி ஊரை சுத்திகாட்ட உங்களுக்கு ரொம்ப புடிக்கும்மா ? சினிமா தியேட்டேர் ஜோடி ஜோடியா உக்காந்து ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கிற காதல் ஜோடிகள பாத்து உங்களுக்கு ஏக்கம் வருமா ? பீச்சில பார்க்குல ஒண்ணா சுத்திகிட்டு இருக்கிற பையனையும் பொண்ணையும் பாத்தா ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு பீலிங்க்ஸ் விடுற பார்ட்டியா நீங்க ? சீக்கிரம் போங்க பாஸ் நம்ம படம் இது உடனே போய் பாருங்க படத்த....
கௌதம் மேனன் இயக்கத்துல சிம்பு நடிச்சிருக்கிற இந்த படத்துல சிம்புவுக்கு ஜோடியா நம்ம த்ரிஷா நடிச்சிருக்காங்க இல்ல இல்ல வாழ்ந்து இருக்காங்க... கண்டிப்பா த்ரிஷாவுக்கு இது life time படம்... கதையெல்லாம் படத்துல கெடையாது படம் முழுவதும் காதல் காதல் காதல் மட்டும்...
த்ரிஷாவ தேடி சிம்பு கேரளா போற சீன்ல அவர சர்ச்சில சிம்பு பாத்தவுடனே சிம்புவோட சேந்து நாமளும் சந்தோசத்துல துள்ளி குதிக்கிறோம் .... அப்படி உங்களுக்கு சந்தோசம் வரலையா? பாஸ் உங்களுக்கு வயசாயிடுச்சி.... சிம்புவும் த்ரிஷாவும் ட்ரைன்ல ஒண்ணா சென்னை வர்ற சீன்... சிம்புவோட காதல ஏத்துக்கவும் முடியாம அத ஒதுக்கி தள்ளவும் முடியாம சிம்பு கொடுக்கிற முத்தங்களை எல்லாம் சந்தோசமா ஏத்துகிட்டு கடைசியில அவர பாத்து மொறைக்கிற த்ரிஷா அப்படியே இந்த காலத்து பொண்ணுங்களோட மன நிலைய பிரதிபலிசிருக்காங்க.... நின்னு போன கல்யாண வீட்டுல நைட் சிம்புவும் த்ரிஷாவும் பேசுற சீன் ஒரு கவிதை .... வாரணம் ஆயிரம் படத்துல காதல செயற்கையா சொல்லி மண்ணை கவ்வுன கௌதம் இந்த படத்துல அத யதார்த்தமா காட்டி பாக்குற நம்மையும் அத அனுபவிக்க வச்சிருக்காரு ...
சிம்பு இந்த படத்துல ரொம்ப அமைதியா வராரு... ஆனா நமக்கு சிம்புனாலே ஞாபகத்துக்கு வர்றது அவரோட ஓவரான பில்ட் அப்கள்தான்.. அமைதியான பையனா சிம்பு நம்ம மனசுல ஓட்ட மாட்டேங்கிறாரு... அவருக்கு பதிலா வேற யாரையாவது போட்டு இருக்கலாம்...
படத்துல முக்கியமான ரெண்டு விஷயங்கள் இசை , ஒளிப்பதிவு ... ரெண்டையும் பத்தி சொல்ல தேவை இல்ல ... இசை சில இடங்களில் நம்மை துள்ளி குதிக்க வைக்கிறது சில இடங்களில் நம்மை மௌனமாய் அழ வைக்கிறது .... ஒளிப்பதிவு நம்மை படத்தோடு ஒன்ற வைத்து விடுகிறது.....
நீங்க காதல் செய்து முடித்தவரா? உங்களுக்கு உங்கள் பழைய நினைவுகளை மீட்டு தரும் ... நீங்கள் காதல் செய்து கொண்டு இருப்பவரா? உங்களை கண்டிப்பாய் அழ வைத்து விடும்.... நீங்கள் காதல் செய்ய ஆசை படுபவரா? உங்களை கண்டிப்பாய் ஏங்க வைத்து விடும்...
நீங்கள் காதல் என்றாலே பயந்து ஒடுபவரா? உங்களுக்கு கண்டிப்பாய் தலைவலியை கொடுத்து விடும்.....
காதலுக்கு மரியாதை கொடுத்து அதற்க்கு தமிழ் சினிமா கட்டிய கோட்டையில் இந்த படம் ஒரு வைர கல்லாய் மின்னும்
Subscribe to:
Posts (Atom)