Followers

Copyright

QRCode
Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Wednesday, May 4, 2011

வானம் – என் பார்வையில்


விண்ணை தாண்டி வருவாயா என்ற மொக்கை படத்திர்க்கு பிறகு சிம்பு நடித்து வெளிவரும் படம் ... ஹீரோவாக இருந்து நம்ம பேரரசு , சுரேஷ் கிரிஷ்ணா போன்றவர்களால் காமெடியானாக depromote செய்யபட்ட பரத்தும் நடித்திருக்கிறார் ... அனுஷ்கா வேற விபசாரியா நடிச்சிருக்காங்க, தெலுங்குல சூப்பர் டூப்பர் ஹிட் ஆன வேதம் படத்தோட ரீமேக் இப்படி முதல் இரண்டு மைனஸ்களோடும் அடுத்த இரண்டு பிளஸ்களோடும் வெளிவந்திருக்கும் படம் வானம்...


ஆயுத எழுத்து படம் போலவே இதிலும் ஐந்து வெவ்வேறு கதைகள் கடைசியில் ஒரு இடத்தில் வந்து சந்திக்கிறது ... சென்னையில் ஒரு சேரியில் வாழும் சிம்பு பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில்  ஒரு பணக்கார வீட்டு பெண்ணை பல பொய்களை சொல்லி ஏமாற்றி காதலிக்கிறார் , அந்த பெண்ணின் அம்மாவிடம் திருமணம் பற்றி பேச அந்த பெண் அவரை ஒரு ஹோட்டலில் நடக்கும் நியூ இயர் பார்ட்டிக்கு வர சொல்கிறார் , ஆனால் அந்த பார்ட்டிக்கு நுழைவு கட்டணமே நாப்பதாயிரம் ரூபாய்... சிம்பு அந்த பணதிர்க்காக அழைவது ஒரு கதை ...

இன்னொரு கதையில் தன் மகனின் பணதிர்க்காக சரண்யா மோகனும் அவர் அப்பாவும் கிட்னியை விற்று நாற்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்க சென்னை வருகிறார்கள் ...

பரத் தன் வாழ்கையின் லட்சியமாக நினைக்கும்  லைவ் ஸ்டேஜ் ஷோவில் கிதார் வாசிக்க தன் ட்ரூப் நண்பர்களோடு சென்னை வரும் வழியில் நடக்கும் சில விஷயங்கள் என்று ஒரு கதை ...


இன்னொருத்தியின் கம்பெனியில் விபசாரியாக பணிபுரியும் அனுஷ்கா சென்னை வந்து தானே சொந்தமாக கம்பெனி ஆரம்பிக்க படும் கஷ்டங்கள் என்று ஒரு கதை ...

  தன் மனைவியின் டெலிவரிக்காகவும் , தன் தம்பியை தேடியும் சென்னை வரும் பிரகாஷ்ராஜின் தனி கதை ஒன்று..இப்படி ஐந்து கதைகள் இருந்தும்  சரண்யா மோகன் வரும் கதையை தவிர மற்ற கதைகளில் ஒரு முழுமையோ ஈர்ப்போ இல்லாமல் போனதுதான் படத்தின் பெரிய மைனஸ் ...

சிம்புவிர்க்கு இந்த கதாபாத்திரத்தில் எப்படி நடிப்பது என்றே தெரியவில்லை ... அதற்க்கு காரணம் அந்த கதாபாத்திரத்தை அரைகுறையாக வடிவமைத்திருக்கும் இயக்குனர் ... அவர் நல்லவரா? கெட்டவரா? என்று கதை எழுதிய அவருக்கும் தெரியவில்லை , நடித்த சிம்புவிர்க்கும் தெரியவில்லை , படம் பார்க்கும் நமக்கும் கடைசி வரை தெரியவில்லை ... மேலும் பணக்கார பெண்கள் எல்லாருமே லூசாகத்தான் இருப்பார்கள் என்ற தமிழ் சினிமாவின் அரைவேக்காட்டுதனம் இந்த படத்திலும் உண்டு...


சரண்யா தன் கிட்னியை நாற்பதாயிரம் ரூபாய்க்கு பேரம் பேசி முடிக்கும் அடுத்த காட்சியிலேயே நியூ இயர் பார்ட்டிக்கு சிம்புவுக்கு நாற்பதாயிரம் தேவைபடுவதாய் காட்டும் போதே கடைசியில் என்ன நடக்க போகிறது என்பது இருபது வருடமாய் தமிழ் படங்கள் பார்த்து கொண்டிருக்கும் என்னால் கண்டுபிடிக்க முடியாதா  என்ன? அதனால் அந்த இரண்டு கதைகளிலும் சுவாரஷ்யாமே இல்லாமல் போயி விட்டது... ஆனால் வட்டி பணதிர்க்காக  கிட்னியை விற்க்கும் சரண்யாவை பார்க்கும் போது எனக்கு பகீர் என்றது ... இவர் காட்சி வரும்போதெல்லாம் பின்னனியில் உதயசூரியன் சின்னத்தை காட்டி கொண்டே இருக்கிறார்கள் ...     

சரண்யாவின் மாமாவாக வரும் அந்த தாத்தா யார் என்று தெரியவில்லை , ஏழைகளின் வலியை அப்படியே வெளிபடுத்துகிறார் ... இடைதரகராக வருபவன் முதலில் அந்த பெரியவரிடம் பாதி காசை ஆட்டைய போட்டிருந்தாலும் கடைசியில் மேலும் மூன்றாயிரத்தை கேட்டு வாங்கும் காட்சியில் தியேட்டரில் இருக்கும் அனைவரும் இது படம் என்பதையும் மறந்து அவனை மனதிர்க்குல் காரி உமிழ்திருப்பார்கள் ...  அதற்க்கு காரணம் அந்த பெரியவரின் நடிப்பு ....

அதே போல பிரகாஷ்ராஜ் , சூழ்நிழைகளாலும் ஒரு போலீஸ் அதிகாரியாளும் தீவிரவாதியாக தவறாக சிறையில் அடிபடும் கதாபாத்திரம் ... பல இடங்களில் ஓவர் ஆக்டிங் சில இடங்களில் நச் நடிப்பு... கமலின் காற்று இவரிடமும் அடிக்க ஆரம்பித்திருக்கிறது என்று எண்ணுகிறேன்... கடைசியில் அந்த போலீஸ் அதிகாரியை முதுகில் சுமந்து உயிரை காப்பாற்றி அவருக்கு நன்னயம் செய்து விடுகிறார்... இந்த கருத்தை சொல்வதற்க்கு பிரகாஷ்ராஜ் , சோனியா அகர்வால் , ஒரு போலீஸ் அதிகாரி வேடம் , ஒரு தீவிரவாதி கதாபாத்திரம் என்று தயாரிப்பாளருக்கு பெரிய செலவு வைத்திருக்கிறார் இயக்குனர் .. போங்கையா இதைதான் வள்ளுவன் உங்களை விட அழகாய் இரண்டே வரிகளில் ஒரு ஓலை சுவடி செலவில் சொல்லிவிட்டானே...


அனுஷ்கா பாத்திரம் எதற்க்கு என்றே தெரியவில்லை? அவருக்கு ஒரு அக்கா(அண்ணன்)  வேறு இந்த படத்தில்... வேசித்தனம் பண்ணும் அவர் கடைசியில் ஒரு சாவை பார்த்து திருந்தி விடுகிறாராம்... இப்படிபட்ட நம்பமுடியாத மனமாற்றங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் மட்டுமே சாத்தியம்... பட விளம்பரங்களில் அரைகுறையாய் சூடேற்றும் வகையில் போஸ் கொடுத்து இளைங்கர்களை படத்திர்க்கு வர வைத்ததை தவிர வேறு ஒன்றும் இவர் படத்தில் பெரியதாய் செய்யவில்லை...


 படத்தின் ஒரே ஆறுதல் யுவனின் பாடல்கலும் அதற்க்கு சிம்புவின் நடனமும்தான்... ஆனால் எவண்டி உன்னை பெத்தான் கையில கெடச்சான் செத்தான் போன்ற வரிகள் தேவையா யுவன்? "நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனிடா" பாடல் செம்ம டப்பாங்குத்து....


பரத் என்ன சொல்ல? நீங்க இந்த படத்திர்க்கு தேவையா என்பதை படம் பார்த்த பொழுது நீங்களே நினைத்திருப்பீர்கள்... தேவையே இல்லாத கதாபாத்திரம் , அதற்க்கு இரண்டு பாடல்கள் , ஒரு சண்டை வேறு  .... இது இயக்குனர் தவறா? இல்லை வேறொருவரின் உள்குத்தா தெரியவில்லை?

தீவிரவாதிகள் என்றாலே அவர்கள் முஸ்லிம்களாய்த்தான் இருக்க வேண்டுமா? வேறு யாருமே தீவிரவாதம் செய்ததில்லையா? இன்னும் எததனை காலத்திற்க்குதான் இப்படியே காட்டுவீர்கள்?பார்த்து பார்த்து போர் அடித்து விட்டது.. வித்தியாசமா யோசிங்கப்பா?

வானம் மப்பும் மந்தாரமுமாய் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்திருக்க வேண்டியது , ஆனால் அக்னி நட்சத்திரமாய் சுடுகிறது...

LinkWithin

Related Posts with Thumbnails