Followers

Copyright

QRCode
Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

Sunday, March 13, 2011

ராஜாவின் பார்வை - வாழ்வியலும் சில புஸ்தகங்களும்....


நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஏதோ ஒரு கணத்தில் ஒரு மூன்றாவது மனிதன் எடுக்கும் முடிவினால்தான் பெரும்பாலும் அமைகிறது ... என் அப்பா என் அம்மாவை திருமணம் செய்வதர்க்கு முன்னாள் அவருக்கு வேறு ஒரு பெண் பார்பதர்க்காய் மதுரையை அடுத்த மேலூருக்கு சென்றுக்கிறார் ... அந்த வயதில் அவர் அப்படியே இந்த வயதில் நான் ... தாடியை ஒரு ஆண்மையின் அடையாளமாக கருதி எப்பொழுதும் அதை தன்னுடனே வைத்திருப்பாராம் ... பெண் பார்க்க சென்ற பொழுதும் அவர் அண்ணன் தம்பிகள் எவ்வளவு கெஞ்சியும் மிரட்டியும் அவர் தன் தாடியை எடுக்கவில்லை ... எனக்கு என்னை பிடித்த பெண் மட்டும் தேவை இல்லை அவளுக்கு என் தாடியும் பிடித்திருக்க வேண்டும் என்பது அவர் எண்ணம் ... அவருக்கு அந்த வயதில் தாடியின் மேல் அவ்வளவு பாசம் ... அவர் எண்ணியதை போலவே அந்த பெண்ணுக்கு இவரை பிடித்து விட்டதாம் ... குறிப்பாய் தாடி வைத்த என் அப்பாவை .... ஆனால் பெண்ணின் வீட்டார் பெண்ணின் அண்ணன் வியாபார விஷயமாக பர்மா சென்றிப்பதாகவும் அவர் ஒருவாரத்தில் வந்து விடுவதாகவும் அவர் வந்து மாப்பிள்ளையை பார்த்து அவருக்கும் பிடித்திருந்தாள் மேற்கொண்டு பேசலாம் என்றும் சொல்லி இருக்கிறார்கள் .. என் அப்பாவும்  தன் தாடியை பிடித்த ஒரு பெண் கிடைத்த சந்தோசத்தில் அதர்க்கு சரி என்று சொல்லி வந்து விட்டார் ....

ஒரு வாரத்தில் சரியாக அந்த பெண்ணின் அண்ணன் வந்து பார்த்திருக்கிறார் ... அதன் பின்னர் ஒரு வாரம் கழித்தும் எந்த பதிலும் பெண் வீட்டாரிடம் இருந்து வரவில்லை ... பிறகு என் அப்பா புரோக்கர்ரிடம் கேட்டு தெரிந்துகொண்டாராம் , அந்த ஆளுக்கு என் அப்பாவின் தாடி பிடிக்கவில்லை , என் அப்பாவை சுத்த பத்தமில்லாத ஆள் என்று நினைத்துக்கொண்டு வேணாம் என்று சொல்லி விட்டானாம் ... தாடியை எடுக்கமாட்டேன் என்ற என் அப்பாவின் பிடிவாதமும் , தாடி இருந்தால் அவன் சுத்தபத்தமில்லாதவன் என்ற அந்த மூணாவது மனிதனின் எண்ணமும்தான் இன்று நான் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்க காரணம் ... இந்த இருவரில் ஒருவர் மாறி இருந்திருந்தாலும் நான் இன்று இங்கு இல்லை ... ஒருவேளை இருவரில் ஒருவர் மாறி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நான் எங்கு இருந்திருப்பேன்? இருந்திருப்பேனா இல்லையா? இருந்திருந்தால் இதே உருவம் எனக்கு இருந்திருக்குமா? இல்லை வேறு உருவத்தில் இருந்திருப்பேனா? என்னுடைய குணநலங்கள் மாறி இருந்திருக்குமா? அப்படி என்றாள் நான் என்ற எனக்கான அடையாளம் எது?    இந்த கேள்வி  என் மூளையின் ஒவ்வொரு செல்களிலும் நுழைந்து அதர்க்கான விடையை தேடி கிடைக்காமல் சம்பட்டியால் அடித்த தலைவலியாய் மூளையோடு  உறைந்து போகிறது.... புரியாத புதிர்தானே வாழ்க்கை ....



சென்ற வாரம் இரண்டு புத்தகங்களை படிக்க நேர்ந்தது... இரண்டுமே சினிமா சம்பந்தபட்டவர்கள் எழுதிய பிளாஷ்பேக் புத்தகங்கள் .. ஒன்று பாலாவின் இவன்தான்  பாலா இன்னொன்று பிரகாஷ்ராஜின் சொலுவதெல்லாம் உண்மை .. இரண்டும் ஆனந்த விகடனில் தொடராக வந்தது ...  இந்த இரண்டு புத்தகங்களிலும் எனக்கு பிடித்த விஷயம் எதர்க்கும் அஞ்சாமல் உள்ளதை உள்ளபடி கூறிய அவர்களின் நேர்மை .... குறிப்பாய் பாலா .. எட்டாம் வகுப்பில்  டோப்பு அடித்தது , பத்தாம் வகுப்பிலேயே கொலை செய்ய பிளான் பண்ணியது , இன்னும் ஒரு வருடம்கூட உயிருடன் இருக்கமாட்டான் என்று அவர் குடும்பத்தினரே என்னும் அளவுக்கு போதையில் ஊறி போயி இருந்தது என்று தன்னுடய கடந்த காலத்தை எதர்க்கும் அஞ்சாமல் அப்படியே புட்டு புட்டு வைத்திருக்கிறார் ... 

சமூகத்தில் வெற்றி பெற்ற எவருமே தன்னை பற்றி சிறு வயதில்இருந்தே கடுமையாக உழைப்பவன் என்று பொய்யாக ஒரு பிம்பத்தை உருவாக்கவே நினைப்பார்கள் ... என்னை போல நீங்கள் ஆவது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம் எல்லாராலும் அது முடியாது என்று ஏதோ கடவுள் விசேசமாக அவர்களை மட்டும் உலகிர்க்கு ஆசீர்வதித்து அனுப்பியதை போல அள்ளி விடுவார்கள் .. ஆனால் பாலா சொல்லியதோ வேறு : நானே இவ்வளவு உயரத்தை தொடும் போது நீங்கள் எல்லாம் தங்கம் ... எதை வேண்டுமானாலும் அடையலாம் ஏர்வாடியில் வைத்து அவரின் நண்பன்  கூறினானாம் பாலா நீயும் இங்க இப்படி ஒரு பைத்தியமா இருந்திருக்க வேண்டியவன் ஜஸ்ட் எஸ்கேப் என்று .படித்த எனக்கு கிறுகிறுத்தது ..... 

சிறு வயது அனுபவங்களை பெரிய ஆள் ஆனவுடன் மரக்கின்ற அல்லது மறந்ததை போல நடிக்கின்ற ஆட்களுக்கு மத்தியில் அந்த அனுபவங்களை காலம் காலமாய் தன்னோடு சுமந்து செல்கிற பாலா எனக்கு தெரிந்து இப்போதைய தமிழ் சினிமாவின் உண்மையான பிதாமகன் .... அந்த அனுபவங்கள்தான் அவரின் மூன்றாவது கண் அல்லது ஏழாவது புத்தி என்று எண்ணுகிறேன் .... 

ரோட்டில் போகும் பிச்சைக்காரனை பார்க்கும் போது முதலில் பரிதாபம் எழும் , இரண்டாவது முறை காணும் போது எரிச்சல் எழும் , அடுத்த தடவை அந்த எரிச்சல் கோபமாய் மாறும் ... பிச்சைக்காரர்களிடம் நான் காட்டிய உணர்வு சுழற்சியை மொத்தமாய் மாற்றி போட்டது பாலாவின் அந்த ஏழாவது அறிவு ... இன்று ஏதாவது ஒரு பிச்சைக்காரனை பார்க்கும் போது அவர்களின் வாழ்க்கையின் பின்னால் இருக்கும் பயங்கரம் என்னை நடுநடுங்க வைக்கிறது .என்றாள் காரணம் பாலாவின் அனுபவங்களும் அதை திரையில் அப்படியே  கொண்டு வந்த அவரின் திறமையும்தான் ... உலக படம் எடுக்கிறேன் என்று நம்மை வாட்டி வதைக்கும்  அறிவு ஜீவி இயக்குனர்கள் பாலாவிடம் கற்று கொள்ள நிறைய இருக்கிறது ...


பிரகாஷ்ராஜின் சொல்லுவதெல்லாம் உண்மை தலைப்பை போலவே உள்ளே இருப்பதெல்லாம் உண்மை ... தொழியோடு இரவில் லாட்ஜில் இருந்தது , வீட்டு வேலை பார்க்க வந்த சித்தாலுடன் ஒரு மாதம் குடும்பம் நடத்தியது , ஷூட்டிங் ஸ்பாட்ட்டில் நடிகையுடன் ஒவ்வொருவராக உடலுறவு கொண்டது என்று தன் காமத்தையும் மறைக்காமல் பந்தியில் பரிமாறிய தைரியம் எல்லாருக்கும் அமையாது ... இந்த புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு குறும்படம் பார்த்த உணர்வை கொடுத்தது ... காதல் , அம்மா பாசம் , காமம் , பொறாமை , இழப்பு , துரோகம், ஈகோ  என்று எல்லாவற்றையும் பற்றி ஒரு ஞானியை போல தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை வைத்தே நமக்கு விளக்கி இருப்பார் .... இந்த புஸ்தகம் படித்த பின்னர் எனக்கு பிரகாஷ்ராஜின் மேல் இருந்த மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது ... ஆனால் இதை படித்த பின்னர் தன் மனைவியின் மீது இவ்வளவு பாசத்தை பொழிந்த ஒரு மனிதன் எவ்வாறு அவரை விவாகரத்து செய்தான் என்று எனக்கு விளங்கவே இல்லை the most dynamic component in the world is human’s mind... இந்த இரண்டு புஸ்தகங்களும் எனக்கு சொல்லி தந்தது  அதுதான்  ....


இந்த இரண்டு புஸ்தகங்களும் நண்பர் குண்டு ராஜகோபால் அவர்களின் வலைத்தளத்தில் இருந்துதான் தரவிறக்கம் செய்து பிடித்தேன் ... சிறந்த புஸ்தகங்களை தேடி தேடி தன் தளத்தில் போதும் நண்பர் குண்டுவிர்க்கு நன்றிகளும் வாழ்துக்களும்... தொடரட்டும் நண்பா உங்கள் பணி ... அவரின் தளத்தில் இருந்து சுஜாதாவின் பல நூல்களை தரவிறக்கம் செய்துள்ளேன் .. இனிதான் படிக்க வேண்டும் ... ஆனால் எனக்கு சுஜாதா மீது அவ்வளவு ஈர்ப்பு கிடையாது .. அவர் ஒரு படைப்பாளி என்று ஏற்றுக்கொள்ள எனக்கு முடியவில்லை ..... என்னை பொறுத்த வரை அவர் ஒரு எழுத்துலக விரிவுரையாளர் அவ்வளவே... மேலும் அவர் வாழ்க்கையோடு இயந்த கதைகளோ இல்லை படைப்புகளையோ இதுவரை கொடுத்ததில்லை ... பத்தினியின் கணவனுக்கு மட்டுமே கடவுள் தெரிவார் என்ற லாஜிக்தான் சுஜாதாவின் பெரிய வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன் .... ஆனால் எங்கெங்கோ படித்த பல விசயங்களை கோர்வையாக நமக்கு புரியும்படி எளிமையாக கொடுப்பதில் அவருக்கு இணை  அவர்தான் ... மற்றபடி மனதை விட்டு நீங்காத படைப்புகளை அவரால் கடைசி வரை தர முடியவில்லை.... காரணம் நாம் வாழ்வியலோடு அவருக்கு இருந்த அன்னியதன்மை .... திரை உலகில் கூட அவரின் இந்த அன்னியதன்மை தெளிவாக ஒவ்வொரு படைப்பிலும் தெரியும் ... விக்ரமும் சரி எந்திரனும் சரி என் மனதில் ஒட்டாமல் போனதர்க்கு காரணம் அந்த யதார்த்தமின்மைதான் ... சுஜாதா சிறந்த பொழுதுபோக்குவாதி ஆனால் சிறந்த படைப்பாளி அல்ல ...    

LinkWithin

Related Posts with Thumbnails