Followers

Copyright

QRCode
Showing posts with label சிகப்பு ரோஜாக்கள். Show all posts
Showing posts with label சிகப்பு ரோஜாக்கள். Show all posts

Monday, February 21, 2011

நடு நிசி நாய்கள்- ஒரே சிரிப்பு சிரிப்பா வருது .....


நண்பர்களுக்கு வணக்கம் .. பதிவு எழுதி நிறைய நாட்கள் ஆகி விட்டது .... காரணம் எனது திருமணம் .... சென்ற வாரம் புதன்கிழமை தென்காசி அருகே இருக்கும் புளியங்குடியில் இனிதே நடந்து முடிந்தது ... திருமணத்தை பற்றிய பதிவை நான் எழுதி அதை பதிவிட முடியாமல் ட்ராஃப்ட்டில் வைத்திருந்தேன் , ஆனால் நேரம் கிடைக்காமல் போய்விட்டபடியால் அதை கடைசி வரை பதிவில் ஏற்றவே  முடியவில்லை... என் எழுத்தின் மூலம் கிடைத்த நண்பர்களை என் மனவிழாவிற்க்கு அழைக்க முடியாமல் போனதர்க்கு வருந்துகிறேன் .. பதிவுலகில் இருந்து நண்பர் பாலா மட்டும் வந்திருந்தார் ... அவர் தன்னுடய தளத்தில் இந்த பதிவில் எங்களுக்கு வாழ்த்துகள் சொல்லி இருந்தார் ... அவருக்கும் அதில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றிகள் .... முன்னரே பதிவில் தெரிவிக்க முடியாமல் போனது எனக்கு மிகவும் வருத்தமே .... 

 நாய்கள் :

நடுநிசி நாய்கள் படம் பார்க்கும் அவல நிலை எனக்கு நேற்று நேர்ந்தது .. நல்ல வேலை என் மனைவியை அழைத்து செல்லவில்லை .. அவளுக்கு படம் பார்க்கவே பிடிக்காதாம் .... பேசாமால் நானும் அப்படியே இருந்திருக்கலாம், இந்த மாதிரியான மரண மொக்கைகளை பார்க்காமல் மூன்று மணிநேரம் ரண வேதனையை  அனுபவிக்காமல்  இருந்திருக்கலாம்...  

சின்ன வயசில் பேய் கதை நிறைய கேட்டு இருந்திருப்போம் ... அதில் ஒரு பாழடைந்த பங்களாவில் ஒரு சூனியக்கார கிழவி இருப்பாள் , அவளுக்கு அடிமையாக அவள் சொல்லுவதை எல்லாம் கேட்டு நடக்க ஒரு பூதம் கூடவே இருக்கும் .. அந்த சூனியக்காரி தனக்கு மாயமந்திர சக்திகள் கிடைக்க வேண்டும் என்பதற்காய் ஊரில் இருக்கும் அழகான கன்னி பெண்களை எல்லாம் பூதத்தை கொண்டு கடத்தி வந்து நரபலி கொடுப்பாள் ... ஆனால் கதாநாயகி மட்டும் கடைசியில் தப்பி விடுவாள்... இதெல்லாம் நான் சின்ன பையனாக இருந்த போது வழக்கில் இருந்த திகில் கதைகள் ...இந்த கதையை saw hostel , Friday the 13 என்று தினந்தோறும் எச்பிஓ வில் பார்த்து கொண்டு இருக்கும்  இந்த காலத்து  சின்ன பசங்ககிட்ட சொன்னா அவன்கூட  பயப்பட மாட்டான் .. ஆனா இதே கதையை கொஞ்சம் டிங்கரிங் வேலை பார்த்து , மல்டிபில் பேர்சொனாலிட்டி சாயம் பூசி முழு படமா எடுத்திருக்கார் நம்ம கௌதம் ... திகில் படம்னு நினைத்து எடுத்திருக்கிறார் ஆனால் பார்க்கும் எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் ... அதுவும் கடத்தி/வசியம் செய்து  கொண்டு போகும்  பெண்களை ஹீரோ  என்ன செய்கிறார் என்பது படத்தின் உட்சபட்ச காமெடி ...  இயக்குனர் இந்த வகையான saw hostel போன்ற படங்கள் எல்லாம் பார்த்ததில்லை போல(மிஷ்கினிடம் இந்த மாதிரியான படங்களின் DVD கலெக்ஷன் இருக்கும் கேட்டு வாங்கி பாருங்கள் கௌதம்).

அந்த படங்களை போல இல்லை என்றதும்  நம் மக்களுக்கு ஏற்றது போல படத்தை எடுத்திருக்கிறார் என்று நீங்கள் நினைத்தால் , நீங்கள் பெரிய முட்டாளாக மாற நிறைய வாய்ப்பு இருக்கிறது ... படத்தில் வரும் பாலியல் வன் புணர்வு காட்சிகள் இதுவரை தமிழ் சினிமா உலகில் காண கிடைக்காதது .... அதுவும் ஒரே ஆண் பல பெண்களுடன் வண்புணர்வு செய்கிறான் ... ஒவ்வொன்றையும் கேமேரா நீண்ட நேரத்திர்க்கு ரொம்ப கவனமாக பதிவு செய்திருக்கிறது ... வேட்டையாடு விளையாடுவில் இவருக்கு பிடித்த காம காய்ச்சல் இந்த படத்தில் ஜூரமாக வெடித்திருக்கிறது ...தயவு செய்து குடும்பத்துடன் சென்று விடாதீர்கள் .... 


சின்ன குழந்தைகளை கூட்டி சென்று அவர்கள் கெட்டு  போக நீங்களே காரணமாக இருந்து விடாதீர்கள் ... அதுவும் ஹீரோ சின்ன வயது பையனாக காட்டபடும் காட்சிகள் ஆபாசத்தின் உட்சம்... எல்லா உறவுகளையும் கேவலபடுத்தி ஆகி விட்டது ...உருப்படியாக இருப்பது பெற்றோர் பிள்ளை உறவுதான் ... அதையும் கவுதம் இந்த படத்தில் சீரழித்து விட்டார் ... ஒருவன் எதனால் சைக்கோ ஆகிறான் என்று காட்ட வேறு வழியே தோன்றவில்லையா உங்களுக்கு? .... ஏதோ ஒன்றை வக்கிரமாக காட்டி மக்களை ரசிக்க வைத்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார் .... பார்க்கும் போது சகிக்க முடியவில்லை ... 


அதுவும் ஹீரோ ஒரு பெண்ணுடன் ஒரு காட்சியில் உறவு கொள்கிறான் . அடுத்த காட்சியில் அவளை “மீனாட்சி அம்மா “(அவள் பெயர் மீனாட்சி ) என்று கூப்பிடுகிறான் .. கருமம்டா சாமி ... சென்சார் போர்டு என்ன செய்து கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை ...


சிவப்பு ரோஜாக்கள் போல ஒரு படம் தரவேண்டும் என்ற இயக்குனரின் ஆசையில் தவரே இல்லை ... ஆனால் அதர்க்கு ஏற்றார் போல நல்ல சரக்குடன் இறங்கி இருந்தால் பாராட்டி இருக்கலாம் ... இரண்டாம் பாதி பெரிய மொக்கை ... இயக்குனர் ரசிகர்கள் சீட் நுனியில் அமர்ந்து பார்ப்பார்கள் என்று நினைத்து எடுத்திருக்கும் ஸீன்களில் எல்லாம் அரங்கம் முழுவதும் சிரிப்பு சத்தம் கேட்கிறது ... ஹீரோ பேசும் மாடுலேசன் பயங்கர காமெடி ... அதுவும் அவர் இரண்டு குரல்களில் மாற்றி மாற்றி பேசுவதெல்லாம் அன்னியனிலேயே பாத்தாச்சி ....  

எனக்கு சைக்கோ படம் எடுக்கும் இயக்குனர்களிடம் ஒரு கேள்வி .. சைக்கோ என்றாள் பெண்களை கடத்தி கொடூரமாக கற்பழித்து கொலை செய்பவனாகத்தான் இருப்பானா? ஏன் உலகத்தில் வேறு மாதிரியான சைக்கோகளே இல்லையா? அந்த மாதிரியான சைக்கோ படங்கள் ஏன் எடுக்க மாட்டேங்கிறீங்க? கிளுகிளுப்பா எதுவும் காட்ட முடியாது என்ற பயமா? இதுக்கு பேசாம நீங்க ஷகீலாவ வச்சி ஒரு பிட்டு படம் எடுத்து ஓட்டலாம்... என்னை பொறுத்த வரைக்கும் ரெண்டும் ஒண்ணுதான் ...  


நடுநிசி நாய்கள் : தலைப்பில் நாய் என்று குறிப்பிடபட்டு இருப்பது இயக்குனரையோ என்ற சந்தேகம் படம் பார்த்ததும் எனக்கு வந்து விட்டது... 



LinkWithin

Related Posts with Thumbnails