“ஸார் நான் புதுசா
ஒரு வலைப்பூ ஆரம்பிக்க போறேன் ,
நீங்க ரெண்டு வருஷமா எழுதிக்கிட்டு இருக்கீங்கன்னு கேள்விபட்டேன் , அதான் நம்ம பதிவையும் நாலு பேரை எப்படி படிக்க
வைக்கலாம்னு ஐடியா கேக்கலாம்னு வந்திருக்கேன் ஸார்”
“அப்படியா தம்பி
ரொம்ப சந்தோஷம் , ஆமா வலைப்பூ ஆரம்பிக்கணும்னு ஆசை உனக்கு எப்படி வந்தது ”
“அண்ணே , நமக்கு ஓட்டை வாயின்னே , எங்க நட்பு வட்டத்தில் எந்த மேட்டர் நடந்தாலும் தெரியிதோ இல்லையோ
சம்பந்தமே இல்லாம ஆஜராகி பஞ்சாயத்து பண்ணுவேன் , நான் பஞ்சாயத்து பண்ணுனா அந்த பிரச்சனை சரியாகுதோ
இல்லையோ, கண்டிப்பா அவனுக்களுக்குள்ள
வேறொரு பெரிய பிரச்சனை உருவாகிரும்... இப்படித்தான் நம்ம பசங்க ரெண்டு பேரு
ஜட்டிக்காக சண்ட போட்டுகிட்டு இருந்தாணுக , நான் நடுவுல புகுந்து ஜட்டி சண்டைய ஜாதி சண்டையாக்கி விட ,
இன்னைக்கு அவனுங்க ரெண்டு பேர் குடும்பமும் அருவாளை தூக்கிக்கிட்டு அலையுது....”
“தம்பி இந்த திறமை ஒண்ணு போதும் நீ பெரிய ஆளா வருவ.. சரி வலைப்பூ தொடங்கி
அதுல என்ன எழுத போற?”
“அண்ணே
நிறைய விஷயம் எழுதுவேண்ணே ... இந்த மும்பையில குண்டு
வெடிக்குதுல அதை பத்தி நிறைய எழுதுவேன்.. தீவிரவாதிகளை கிழி கிழின்னு கிழிப்பேண்ணே ”
“தம்பி
அப்படி எழுதுனா நீ பிரபலம் ஆக முடியாது ... உனக்கு ப்ராப்ளம்தான் ஆகும்... நீ முஸ்லிம் தீவிரவாதிகளை பற்றி எழுதினால் ஒரு கும்பல் அயோத்தியில பாபர்
மசூதியை இடிச்சப்ப நீ ஏன் அதை பத்தி எழுதவில்லைன்னு கேப்பானுக”
“அண்ணே
அது எப்படிண்ணே , அப்பதான் என்கிட்ட வலைபூவே இல்லையே , எப்படி நான் எழுதமுடியும்”
“அப்ப
இல்லைனா என்ன , இப்ப இருக்குல்ல ஏன்
எழுதலைன்னு சண்டைக்கு வருவாணுக , அதுமட்டும்
இல்லை உன்னை காவி பயங்கரவாதின்னு முத்திரை குத்தி உனக்கே தெரியாமல் உன்னை ஆர்எஸ்எஸ்ல சேத்திடுவாணுக ”
“ஐயையோ... அப்படினா
நான் ஏதாவது ஒரு ஹிந்து போலி சாமியாரை பத்தி எழுதி நான் ஆர்எஸ்எஸ் இல்லைன்னு
நிரூபிச்சிட்டு போறேன்,”
“அப்படியா? அப்ப இன்னொரு குரூப்,, ஏன் நம்ம
நாட்டுல ஹிந்து சாமியார் மட்டுந்தான் தப்பு பண்ணுராணுகலா? கிறிஸ்டின் பாதிரியார்கள் எல்லாம் ரொம்ப ஒழுக்கமா? அவனுங்களை பத்தி ஏன் எழுதமாட்டேன்கிற? நீ ஒரு கிருஸ்தவ போதகனா? அப்படின்னு கன்னாபின்னானு
கேள்வி கேட்டு உன்னை கலங்கடிப்பாணுக”
“ஐயையோ... விடுங்க
நான் மதங்கள் சம்பந்தமாவே எழுதவில்லை , அரசியல்
கட்டுரை எழுதி பிரபலம் ஆகிடுறேன்”
“என்ன
எழுதுவ?”
“கலைஞர்
பத்தியும் அவர் குடும்ப உறுப்பினர்கள் பண்ணிய
ஊழல்கள் , அக்கிரமங்கள் பத்தி எழுதுவேன் ... நான் மதுரை காரன்னேன்... இது சம்பந்தமா நெறையா
தெரியும் .. நேர்லயே பாத்திருக்கேன் ,
அனுபவிச்சிருக்கேன்”
“ தம்பி இப்படி
எழுதுனாலும் உன்னை பார்ப்பனன்னு முத்திரை குத்த ஒரு கூட்டம் ரெடியா இருக்கும், திராவிட தலைவனின் மேல் சேற்றை வாரி இரைக்கும்
இந்த பதிவு “பார்ப்பன இந்து மதவெறியர்களின் பாசிச பதிவு” என்பது போன்ற தலைப்புகளில் உனக்கு
எதிர்பதிவுகள் வந்து குவியும் ... மந்திரம் ஓதாம மணி ஆட்டாம உன்னை ஐய்யர்
ஆக்கிடுவாணுக..”
“அது
சரி , ஆணியே புடுங்க வேணாம் , கலைஞர பத்தி மட்டும் இல்லை யாரை பத்தியும் தப்பா எழுதவில்லை .. வேணும்னா அம்மாவை பத்தி நல்லாவிதமா நாலு வார்த்தை எழுதி
பிரபலம் ஆகிட்டு போறேன்”
“தம்பி வேற வினையே
வேண்டாம் ... உன்னை தேடி உன் வீட்டுக்கே வந்து பூணூல் மாட்டி விட்டுட்டு
போயிடுவாணுக”
“அரசியலே வேணாம்ணே...
நான் கிரிக்கெட் பத்தி பதிவு எழுதி பிரபலம்
ஆகிடுறேன்”
“அப்பவும்
சும்மா இருக்கமாட்டாணுக , நாட்டுல
சாதி சண்டையில
பல பேரு செத்துக்கிட்டு இருக்கான், ஊழல்
பெருகி போகி நாடே நாசமா போய்கிட்டு இருக்கு, அதை
பத்தியெல்லாம் பேசாம இப்படி கிரிக்கெட் பத்தி எழுதிகிட்டு
இருக்கையே , நம்ம நாடு முன்னேறாம
இருக்கிறதுக்கு காரணமே உன்னை மாதிரி ஆளுங்கதான் அப்படின்னு ஒரு கும்பல்
உன்னை சுத்தி கும்மி அடிக்கும்”
“அப்படின்னா அன்னா
ஹஜாரே பத்தி எழுதி என் நாட்டு பற்றை நிரூபிச்சிட்டு போறேன்”
“தம்பி நீ இன்னும்
வளரனும் ... ஹஜாரேவ ஆதரிச்சி பதிவு
எழுதினால் உன்னை போலி நாட்டுபற்று விளம்பரதாரர்கள் கும்பலில் ஒருவனா
சித்தரிப்பானுக .. இல்லை அன்னாவை பத்தி குறை சொல்லி எழுதினால் வயசான காலத்துல அவரே
சாப்பிடாமல் நம்ம நாட்டுக்காக உண்ணாவிரதம் இருக்காரு , அவரை பத்தி தப்பா எழுதுரையே , நீ பாக்கிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளியாத்தான் இருக்கணும்னு
கேப்டன் மாதிரி வசனம் பேசுவாணுக”
“எதுவுமே வேணாம்ணே , சினிமா பதிவுகளா எழுதி காலத்தை ஒட்டிடுறேன்”
“சினிமா பத்தி என்ன
எழுதுவ தம்பி”
“நானும் கொஞ்சம் உலக
படமெல்லாம் பாத்திருக்கேன் , அதை
வைத்து தமிழ் படங்கள் எந்தெந்த படங்கள் எல்லாம் காப்பி அடிச்சி எடுக்கபட்டதுங்கிரத
ஆதாரத்தோடு எழுதுவேன்”
“தம்பி அப்படி
எழுதுனா தமிழ் கலைஞர்களை கேவலபடுத்தி எழுதிறயே நீயெல்லாம் தமிழனான்னு சண்டைக்கு வருவாணுக... இன்னும் சில பேர் உன் முப்பாட்டன்
கேரளாக்காரன் , நீ ஒரு மலையாளி... அதான் தமிழ் சினிமாவை பத்தி
தப்பா பேசுரன்னு உன் பூர்வீகத்தை பத்தி உனக்கே தெரியாத விசயங்களை எல்லாம் எடுத்தி
விடுவாணுக”
“சரி விடுங்க மொக்கை
படங்களா எடுக்கிற விஜய் மாதிரி நடிகர்களை கிண்டல் பண்ணி எழுதுறேன்”
“நீ விஜய் இல்லை அஜீத் பத்தி கிண்டல் பண்ணுனா , அவர்கள்
ரசிகன் எவனாவது ஏன் ரஜினிகூட இப்படிதான் நடிக்கிறாறு அவரை ஏன் கிண்டல் பண்ண
மாட்டேங்கிரன்னு கேப்பான்,
அதுக்காக நீ ரஜினியை கிண்டல் பண்ணி எழுதுனா ரஜினியை பத்தி எழுதி ஹிட்ஸ் வாங்க
இப்படி அலையுரையே நீ ஏன் எம்ஜிஆர் பத்தி கிண்டல் பண்ண மாட்டேன்கிற... இன்னொரு தடவை ரஜினி பத்தி தப்பா பேசுன வீட்டுக்கு ஆட்டோ வரும்
அப்படினு ரஜினியின் தொண்டர்கள் யாராவது வந்து மிரட்டிபோவான் "
“அண்ணே அப்படினா
தமிழ் சினிமா பத்தி ஏதாவது பதிவு எழுதணும்னா தியாகராஜ பாகவதர் காலத்துல இருந்து
இப்ப வரைக்கும் அதோட வரலாற்றை முழுசா சொல்லிட்டுதான் எழுதணுமா?”
“அப்படிதான் நிறைய
பேர் எதிர்பார்ப்பாணுக “
“சரிண்ணே அப்படினா
நான் எனக்கு புடிச்ச நடிகரை பத்தி நல்லாவிதமா எழுதி பொழச்சிக்றேன்னே”
“தம்பி அதுலையும் பெரிய சிக்கல் இருக்கு , இப்ப நீ அஜீத் ரசிகனா
இருந்து மங்காத்தா பிடிக்கிதுன்னு எழுதிட்டு , நாளைக்கே வேறு ஒரு படத்துல ஏதாவது ஒரு குறை சொன்னேன்னு வச்சிக்கோ, நீ
அஜீத் ரசிகன் அதான் மத்த படங்கள் ஓடிற கூடாதுன்னு
குறை சொல்லுற , ஹீரோயிசத்தை ரசிக்கிற உனக்கு
இந்த மாதிரி கலை படைப்புகளை குறை சொல்லும் தகுதி கிடையாதுன்னு உன்னை ஒதுக்கி
வச்சிடுவாணுக”
“
அண்ணே இப்படி எல்லாத்துக்கும் நின்னா குத்தம் நடந்தா குத்தம்னு சொன்னா நாம
என்னத்ததான் எழுதுறது?”
“தம்பி அது
தெரியாமத்தான் நானும் அல்லாடிக்கிட்டு இருக்கேன்.. பேசாம நம்ம பதிவை படிக்கிற
இவங்ககிட்டயே கேட்டிடுவோம்”
“நாங்க என்னதான் எழுத?”
23 comments:
ஹஹஹா பதிவுலக அரசியல் மட்டுமில்ல ..யதார்த்தமும் இது தான் ! ))))
haa haa ஹா ஹா நக்கலு
ரைட்டு நடக்கட்டும்...
ha hahahas.))))))))))))))
இந்த பிரச்சனையே வேண்டாமென்றுதான் நான் பதிவை படிச்சோமா , முடிந்தால் கமெண்ட் போட்டோமா என இருக்க முடிவு செய்து ,
அந்த வேலையை ஆரம்பித்துள்ளேன்
நண்பா பதிவுலக அரசியலை நல்லா புட்டு புட்டு வைக்குறீங்க நானும் சில பதிவுகள் போட்டு இப்படி திண்டாடி இருக்கேன்..
தமிழ்மணம்-7
நன்றி கந்தசாமி , செந்தில் அண்ணே , சௌந்தர் , அத்தரி
மனோகரன் என்னால அப்படி இருக்கமுடியல
k.s.s.Rajh எல்லாருமே கண்டிப்பா பாதிக்கபட்டிருப்பங்க தல ...
7 வது ஓட்டுக்கு நன்றி
சேட்டைக்காரன் நன்றி பாராட்டுக்கு மட்டும்
:-)
ரொம்ப டமாச எழுதுறீங்க தம்பி நீங்க
இனிய இரவு வணக்கம் நண்பா,
பதிவுலகை நன்றாகத் தான் புரிந்து வைத்திருக்கிறீங்க.
ரசித்தேன்.
செமையாகப் பலரைக் கலாய்ச்சிருக்கிறீங்க.
நல்ல பதிவுதான், விஜய் பற்றி இழுக்கும்வரை. விஜய் மீதான உங்கள வயிற்று எரிச்சல் உங்களின் ஒவ்வொறு பதிவுளும் தெரிகுறது. சத்தியமாக விஜய் ரசிகர்கள் கூட அவர்களின் ஒவ்வொரு பதிவிலும் விஜய் பற்றி எழுத மாட்டார்கள். உங்கள் வயிற்று எரிச்சல் தான் அவரை வாழ வைக்கிறது. நன்றிகள் கோடி.
அனுபவப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
ஆமினி, ரத்னா , நிரூபன் நன்றி ..
rocket ranga இந்த பதிவில் நான் சொல்லியிருக்கும் விஷயங்கள் காமெடி இல்லை , உண்மைதான் என்று உங்கள் கமெண்ட் சொல்லிவிட்டது ..
என்ன பண்றது வீட்டுல அம்மா வைக்கிற கோழி பிரியாணியவிட , ப்ளாக்ல நானா வைக்கிற அணில் பிரியாணி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ... அணில் பிரியாணிக்கு சைடு டிஷ் நெறைய கிடைக்குது பாஸ் (நான் உங்களை சொல்லவில்லை)
அப்பறம் முன்ன எல்லாம் உங்க ஆளுங்க இப்படி கமெண்ட் போடும்போது தளபதி வேலாயுதத்தில் உங்களுக்கு பதில் சொல்லுவார் , நன்பனில் உங்களை நசுக்குவார் என்று வாய்சவாடல் விடுவீர்களே , இப்ப எல்லாம் அப்படி சொல்லவே மாட்டேன்றீங்க உங்க தளபதி மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லையோ?
ராஜராஜேஸ்வரி நன்றி
நான் சில ப்லோக்ஸ் ரெகுலர் ஆக படித்தாலும், கமெண்ட்ஸ் செக்ஷன் பெரும்பாலும் படித்ததில்லை. அதனால் நீங்கள் குறிப்பிட்ட அந்த வாய் சவடால் பற்றி எனக்கு தெரிய வாய்ப்பில்லை.
நான் கல்லுரி படிப்பை முடித்து 5 வருடங்கள் ஆகி விட்டது. கடந்த 2, 3 வருடங்கள் ஆக வேலைபளுவின் காரணமாகவும், விஜய் நடித்த குருவி, வில்லு படங்களை பார்த்து நொந்து போனதாலும் நான் ஒரு விஜய் ரசிகன் என்பதையே மறந்து போயிருந்தேன். வேட்டைக்காரன், சுறா போன்ற படங்களை நான் இதுவரை பார்க்கவில்லை. அனால் உங்களை போன்றோர் ஓயாமல் அனுப்பும் SMS, e-mail, blog links, போன்றவை தான் நான் ஒரு விஜய் ரசிகன் என்பதை மீண்டும் எனக்கு உணர்தவைதது. சோ, உங்கள் வயிற்றெரிச்சல் அவரை வாழ வைக்கிறது என்று நான் சொன்னதும் உங்களை மட்டும் இல்லை. உங்களை போன்று பலரை. கண்டிப்பாக என்னை போல தான் ஒரு விஜய் ரசிகன் என்பதையே மறந்திருந்த பலரை உங்களை போன்றோரின் செயல்பாடுகள் மீண்டும் விஜய்' ரசிகராக மாற்றியிரிகும் என்று நம்புகிறேன்.
மீண்டும் நன்றி.
நகைச்சுவையாச் சொன்னாலும்..
உண்மையை அழகாகச் சொல்லியிருக்கீங்க நண்பா..
rocket ranga
இந்த பதிவை நான் அஜீத் விஜய் சந்தையாக திசை திருப்ப விரும்பவில்லை.. அதனால் இப்போதைக்கு நன்றி
முனைவர் குணசீலன்
பாராட்டுக்கு நன்றிங்க முனைவர்
சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.
பேசாம எங்களை மாதிரி மொக்கை ப்ளாக் எழுத சொல்லுங்களேன்.. ஆனா யாரும் படிக்க மாட்டாங்க.. படிக்கிறவங்களும் கமெண்ட் பண்ண மாட்டாங்க...
நல்லா எல்லா கோணத்திலும் அனலைசு பண்ணி இருக்கீங்க.
என் வலைப்பூவை தொடர்வதற்கு நன்றி , நீங்கள் என் சிறு கதையை படித்து இன்னும் ஓட்டு போடவில்லை எனில்,
உடன் செய்க. ஏற்கனவே போட்டிருந்தால் ,என் நன்றிகள் பல. தொந்தரவிற்கு மன்னிக்கவும்.
//பேசாம எங்களை மாதிரி மொக்கை ப்ளாக் எழுத சொல்லுங்களேன்.. ஆனா யாரும் படிக்க மாட்டாங்க.. படிக்கிறவங்களும் கமெண்ட் பண்ண மாட்டாங்க...
ஸார் என்னே ஒரு தன்னடக்கம் உங்களுக்கு...
அண்ணே.. கலக்கிப்புட்டீங்க..
Post a Comment