Followers

Copyright

QRCode

Monday, January 10, 2011

அசிங்கபட்ட கங்குலி , சந்தோஷ நிட்டினி ( வாழ்க BCCI , வளர்க அதன் புகழ்)

நாடெங்கும் கிரிக்கெட் ஜூரம் பற்றி எரிய ஆரம்பிச்சாச்சி ... நானும்  கிரிக்கெட் பற்றி பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சி .... இப்பதான் ஐபிஎல் ஏலம் முடிஞ்சதாம் , பசங்க சொன்னாணுக , அண்ணே நம்ம தானை தலைவன் , கொல்கத்தா சிங்கம் கங்குலி அவர்களை யாருமே ஏலத்தில் எடுக்கவில்லை என்று , மனசுக்குள்ள பிளஷ்பேக் ஒட்டி பாத்தேன் ,  பத்து டையரும் பஞ்சராக்கி கெடக்க , டெண்டுல்கர்கிற  ஒத்த டையர வச்சி ஓடிக்கிட்டு இருந்த இந்தியன் டீம , தன்னோட முதல் டெஸ்ட் மேச்லயே லார்ட்ஸ்  அரங்கத்தில் அந்த நாட்டிற்க்கு எதிராகவே சதம் அடித்து தோற்க  வேண்டிய ஆட்டத்தை வெற்றி பெற வைத்து அணிக்குள் சிங்கம் போல் நுழைந்தவர் (ரஜினி பட அறிமுக காட்சி போல இருந்தது அவரின் வருகை ) , சரியான கூட்டணி கிடைக்காமல் தனியாக போராடிகொண்டு இருந்த சச்சினுக்கு சிறந்த கம்பெனியாக இருந்தவர்... சச்சினே அப்பொழுது பேட்டிகளில் கூறுவார் கங்குலி வந்த பின்னர் தன்னுடய சுமை பாதி குறைந்து விட்டது , பதட்டம் இல்லாமல் விளையாட முடிந்தது என்று



தன்னுடய போராடும் குணத்தினால் கூடிய விரைவிலேயே அணியின் தலைவனாகவும் உயர்ந்தார் ... அதர்க்கு பிறகுதான் ஐசியுவில் மரண படுக்கையில் இருந்த இந்திய அணி வெற்றிகளை அதிரடியாக குவிக்க தொடங்கியது , அதர்க்கு முக்கிய காரணம் இவரின் வழிநடத்தலும் , பல புதுமுகங்களை அவர்களின் திறமையின் மேல் நம்பிக்கை வைத்து அறிமுகபடுத்தியதும் , அவர்களை  திறமையாக பயன்படுத்துயதும்.. அவரின் வழிநடத்துதலில் இந்திய ரசிகர்களின் கனவான  உலககோப்பையின் மிக அருகில் அதாவது இறுதி போட்டி வரை முன்னேறியது .... அது ஒரு தலைவனாக கங்குலி அணிக்கு , அதன் ரசிகர்களுக்கு தேடி தந்த பெருமை ...

இப்படி தலைவனாக அவர் செய்த சாதனைகளை விட  ஒரு துடுப்பாட்டக்காரனாகவும் பத்து வீச்சாளராகவும்  அவர் செய்த சாதனைகள் அதிகம், டெஸ்ட் ஆட்டத்தில் முதல் போட்டியில் சதம் , அதுவும் லர்ட்ஸ் மைதானத்தில் , இந்த சாதனையை செய்த முதல் இந்தியர் அவர்தான் , முதல் ஆட்டத்தில் அந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரரும் அவர்தான்(133)...

1997 சகாரா கோப்பை அவருக்கு மிக பெரிய பெயரை பெற்று தந்தது .. ஐந்து ஆட்டங்களில் தொடர்ந்து நான்கு ஆட்டங்களை இந்தியா வென்றது ... அந்த நான்கு ஆட்டங்களிலும் அவர்தான் man of the match …. அதில் ஒரு ஆட்டத்தில் அவர் 16 ஓட்டங்களை மட்டுமே விட்டு கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்... அவரை சிறந்த பந்து வீச்சாளராகவும் அறிய செய்த போட்டி அது...


டெண்டுல்கரும் இவரும் இணையாக  8277 ஓட்டங்களை குவித்துள்ளனர்  ... இது ஒரு உலக சாதனை (first biggest partnership runs )... டெண்டுல்கருடன் மட்டும் இல்லை டிராவிட்டுடனும் இணைந்து இதுவரை 4363 ஓட்டங்களை குவித்துள்ளார்... இது ஐந்தாவது  பெரிய partnership சாதனை ஆகும் ...

1999 உலக கோப்பையில் இவரும் டிராவிட்டும் இணைந்து 318 ஓட்டங்களை எடுத்திருக்கிறார்கள் , இது ஒரு உலக கோப்பை சாதனை , வேறு எந்த உலக கோப்பை போட்டிகளிலும் எந்த இணையும் இதைவிட அதிக ரன் எடுக்கவில்லை ...

சச்சினுக்கு பிறகு ஒரு நாள் ஆட்டங்களில் 10,000 ஓட்டங்களை கடந்த ஒரே இந்திய வீரர் இவர் மட்டுமே ... உலக அளவில் ஐந்தாவது ஆளாக இந்த சாதனையை செய்துள்ளார்...

புகழ் பெற்ற விஸ்டன் புஸ்தகம் வெளியிட்ட  கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரர்கள் வரிசையில் ஆறாவது இடம் இவருக்கு ... இவருக்கு முன்னாள் இருக்கும் ஒரே ஒரு இந்திய வீரர் சச்சின் மட்டுமே ...


சச்சினுக்கு அடுத்து ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்துள்ள இந்திய வீரர் இவர் மட்டுமே (22 சதங்கள்),

இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம் அவரின் சாதனை பட்டியலை ... சச்சின் என்று ஒருவரை நீக்கி விட்டு பார்த்தால் இந்திய அணியில் அதிக சாதனைகளின் சொந்தக்காரர் இவர்தான் ... இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த இரண்டாவது வீரர் என்று அவரை கூறலாம் ... ஆனால் அவரை வழி அனுப்பி வைத்த விதம் மிக கொடுமையானது .... அவர் வளர்த்து விட்ட ஆட்களே அவரை அணியை விட்டு துரத்தினார்கள் .. ஆனால் அவர் தளர்ந்துவிடவில்லை ... 2008ம் ஆண்டு நீண்ட இடைவேளைக்கு பின்னர் அணியில் இடம் பிடித்தார் ... எதிரணி தென்னாப்பிரிக்கா... அணிக்கு திரும்பிய முதல் போட்டியிலேயே சதம் ... அவரை குறை சொன்னவர்களுக்கு எல்லாம் சரியான பதிலடி கொடுத்தார் .. ஆனால் அதன் பிறகும் ஏன்? எதற்க்கு? என்று சொல்லபடாமலேயே அணியை விட்டு தூக்கி எறியபட்டார்... அதன் பிறகு நல்ல பார்மில் இருந்தும் அணிக்குள் இருந்த சில அரசியல் காரணங்களுக்காய் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவே இல்லை .. பொறுத்து பொறுத்து பார்த்த அவர் வேறு வழி இல்லாமல் ஓய்வு முடிவை எடுத்தார் ... ஆனால் அவர் ஓய்வை இந்திய அணி நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை ஏதோ நான்கு ஆட்டம் ஆடிவிட்டு ஓய்வு பெற்ற ஒரு நாளாம்தர வீரனை போல அவரை விடை கொடுத்து அனுப்பியது இந்தியா... அது என்னை போன்ற அவரின் ரசிகர்களுக்கு பெரிய வேதனை ... ( இவர் ஸ்ரீலங்காவிற்க்கோ இல்லை பாகிஸ்தான் அணியிலோ இடம்பெற்று இவ்வளவு சாதனைகளை செய்திருந்தால் அவர்தான் அந்நாட்டின் சிறந்த வீரானாய் இருந்திருப்பார் .... அதற்குரிய மரியாதையும் அவருக்கு இருந்திருக்கும் .... இந்திய அணிக்காக விளையாடி சாதனை படைத்ததுதான் அவர் செய்த பெரிய தவறு ... )


இன்று அதைவிட பெரிய அசிங்கத்தை அவருக்கு கொடுத்து விட்டது நம் அணி ... IPL போட்டிகளில் அவரை குறைந்தபட்ச ஏல தொகை கொடுத்து எடுக்கக்கூட எந்த அணியும் முன்வரவில்லை ... இதில் அவரின் தவறும் இருக்கிறது ஏன்றாலும் , பணம் என்ற விசயத்தின் முன்னால் ஒரு சிறந்த வீரன் , அணிக்காக அதிகம் உழைத்த ஒருவன் அவமானபடுத்த பட்டு விட்டான் என்றே எடுத்து கொள்ள தோன்றுகிறது... இதுதான் அவரின் சாதனைகளுக்கு நம் அணி தரும் மரியாதையா? அவர் அணிக்காக செய்த விசயங்களை மறந்துவிட்டு காசுக்காக அவரை அவமானபடுத்தி விட்டீர்களே ...இதை அவர் எப்படி எடுத்துக்கொண்டாரோ இல்லையோ எனக்கு தெரியவில்லை , ஆனால் அவர் அணிக்காக ஒவ்வொருமுறை நன்றாக ஆடிய பொழுதெல்லாம் பெருமையாகவும் சந்தோசமாகவும் பார்த்து கொண்டு இருந்த ஒவ்வொரு இந்திய ரசிகனும் கண்டிப்பா வருத்தபடுவான் ...   நீங்கள் நினைத்திருந்தாள் அவரை ஏதாவது ஒரு அணியில் இடம்பெற செய்து இருந்திருக்கலாம் ... இன்று அவரால் பெரிய லாபம் உங்களுக்கு இல்லை என்றாலும் அவரின் பழைய சாதனைகளுக்கு மரியாதை கொடுக்கும் விதமாகவாது இதை நீங்கள் செய்து இருக்கலாம் ... அவரை விட உங்களுக்கு அந்த ஐந்து கோடி பணம்தானே பெரியதாக தெரிகிறது ... விளையாட்டை பணம் காய்க்கும் மரமாக நீங்கள் மாற்றி விட்டீர்கள் , ஆனால் ரசிகர்கள் நாங்கள் அப்படி இல்லை ... அது எங்களை பொறுத்தவரை நாட்டின் கவுரவம் ... அதில் இந்தியாவை தலை நிமிர செய்த அனைவருமே நம் நாட்டின் பெருமையான சின்னங்களே... காசுக்காக அவர்களை அவமானபடுத்தாதீர்கள் ....


கடைசியாக  கங்குலிக்கு ரசிகனாக ஒரு விண்ணப்பம் , தல தயவு செய்து ஒதுங்கி விடுங்கள் .. உங்கள் மேல் தவறே  கிடையாது .. சென்ற IPL போட்டிகளில் நீங்கள் நன்றாகவே விளையாடி இருந்தீர்கள் ... (14 ஆட்டங்கள் 493 ரன்) ... உங்களை விட குறைந்த ரன் குவித்தவர்கள் எல்லாம் பல கோடிகளுக்கு  எடுக்கபட நல்ல பார்மில் இருந்தும் நீங்கள் ஒதுக்கபடுகிறீர்கள்..... இதற்க்கு மேலும் நீங்கள் காயப்பட  வேண்டாம் .... கிரிக்கெட்டை உண்மையாக நேசிக்கும் எங்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை ... 

கடைசியாக பிசிசிஐக்கு , உலக அளவில் பெரிய பணக்கார அணி நீங்கள்தானாம் ... வாழ்த்துக்கள் இன்னும் நிறைய பணம் சம்பாதிக்க ... ஆனால் உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் தயவு செய்து பணதிர்க்காக கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு இருக்கும் மரியாதையை  அழித்து விடாதீர்கள் ...


சந்தோஷ நீடினீ
நேற்று தென் ஆபிரிக்கா அணி நிர்வாகம் நீட்டினிக்கு கொடுத்த மரியாதையை பார்த்த பொழுது சந்தோஷமாக இருந்தது ... நான் நேற்று நெட்டில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் அந்த போட்டியை பார்த்தேன் ... அதனால் தென் ஆபிரிக்க நாட்டு ஒளிபரப்பில் காண வாய்ப்பு கிடைத்தது ... போட்டி முழுவதும் அவர்கள் ஒளிபரப்பிய விளம்பரங்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம்... விளம்பரங்கள் மிகவும் குறைவாக ஒளிபரப்பபட்டன ... ஆனால் நம் நாட்டு ஒளிபரப்பில் பார்க்கும் போது ஏதோ விளம்பர கம்பெனிகள் அவர்கள் விளம்பரங்கள் ஒளிபரப்பிய நேரம் போக மீதி நேரத்தில் போனால் போகிறது என்று போட்டியை ஒளிபரப்பியது போல இருந்தது ... போட்டியை ரசிக்கும் மனநிலையை இழந்து  ஏதோ விளம்பர சந்தைக்குள் என்னை வலுக்கட்டாயமாக இழுப்பதை போன்று எனக்கு தோன்றும் ...

nitini விடை பெரும் பொழுது மிக சந்தோஷமாக இருந்தார் ... அங்கே பணத்தை விட கிரிக்கெட்டுக்கு அதிக மரியாதை கொடுக்கிறார்கள் .. அதனால்தான் அவர்களால் சந்தோஷமாக விடை பெற முடிகிறது .. ஆனால் இங்கே விளையாட்டை விட பணத்திர்க்குதானே அதிக மரியாதை ... உன்னால் லாபம் இல்லை என்றாள் நீ எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் உனக்கு மரியாதை கிடையாது என்று கங்குலி விஷயத்தில் மறைமுகமாக  சொல்லி இருக்கிறார்கள் ...வாழ்க BCCI , வளர்க அதன்  புகழ்     



Thursday, January 6, 2011

என் அன்பு தோழியே ...( நினைவு நாடாக்கள் -- பாகம் 1 )


எனக்கு கல்யாணமாம் ... இதை என் அப்பா என்னிடம் சொன்னதும் எனக்கு முதலில் ஞாபகம் வந்தது அவள்தான் ... அவளுக்கு என்று ஒரு பெயர் உண்டு ... ஆனால் அது இங்கே வேண்டாம் ... அவளை அவள் என்றே கூப்பிடுவோம் ... அவள் அப்படி ஒன்றும் பெரிய அழகி இல்லை , ஆனால் என்னை எப்பொழுதும் அவளை சுற்றியே நினைக்க  வைத்துக்கொண்டே இருக்கும் ஏதோ ஒரு ஈர்ப்பு அவள் முகத்திலோ, இல்லை அவள் சிரிப்பிலோ , அவள் குரலிலோ,  ஏதோ ஒன்றில் இருந்தது ... எந்த பெண்ணிடமும் இல்லாத அது எது என்று கண்டுபிடிப்பதில் வைரமுத்து போல கடைசி வரை முயன்றும் தோற்று  விட்டேன் .. இது எல்லாம் சேர்ந்ததுதான் அவள் ...

அவள் சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்னால்தான் என் வாழ்வில் நுழைந்தால், ஆனால் நானே அப்பொழுது நினைத்து பார்க்கவில்லை என் வாழ்வில் மிக பெரிய தாக்கத்தை உண்டு பண்ண போகிற பெண் இவள் என்று... முதல் ஆறு மாதம் அவள் நட்பு மழை சாரளாய்  கூட என்னுள் அடிக்கவில்லை ... சத்தியமாய் அப்பொழுது நினைத்துக்கூட பார்க்கவில்லை அது பின்னாளில் அடைமழையாய் என் வாழ்வில் அடித்து கொண்டே இருக்க போகிறது என்பதை... எங்களுக்குள் முதல் அறிமுகம் எப்பொழுது தெரியாது .. ஆனால் நினைவில் இருக்கும் முதல் அறிமுகம் உங்களோட ஃபோன் நம்பர் கொடுங்க என்று அவள் கேட்ட அந்த நொடியும் , அன்று மாலையே என் தொலைபேசியில் ஒலித்த அவள் குரலும்தான் ...

நீண்ட வருடங்களுக்கு பின்னர் ஒரு பெண் குரல் என் தொலைபேசியில் நல்லா இருக்கீங்களா? என்று கேட்கிறது ... அதுதான் அவள் என்னுடன் பேசிய முதல் தொலைபேசி உரையாடல் .... அரைமணி நேரம் பேசினால் அவளை பற்றி,,, வள்ளுவர் சொல்லியதை போல அன்று என் செவிக்கு நல்ல உணவு ...

அப்பொழுது அவள் கணிப்பொறியியல் இறுதிவருடம் படித்து கொண்டு இருந்தாள்  ... அதனால் அவளுக்கு என்று தனியாக தொலைபேசி இருக்கவில்லை ... அவள் குடும்பம் கீழ்தட்டு நடுத்தர வர்க்கம் ... எனவே அவள் அப்பாவின் தொலைபேசியில் அவர் இல்லாத போது மட்டுமே என்னுடன் பேசுவாள் ... இதில் மிகவும் கஷ்டபட்டு போவது நானே ... காரணம் நான் நினைத்த மாத்திரத்தில் அவளுடன் பேச இயலாது , ஒவ்வொரு நாளும் அவள் எப்பொழுது பேசுவாள் என்று காத்திருக்க ஆரம்பித்தேன் ...


அவள் பேச்சில் எப்பொழுதும் குறும்பு அதிகம் இருக்கும் ... அதை விட நட்பு இன்னும் அதிகம் இருக்கும் ... அவள் ஏன் என்னுடன் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறாள் என்று எனக்கு புரியவில்லை , அவளிடம் இதை கேட்கவும் மனதில்லை , ஆனால் அவளிடம் பேசிய கொஞ்ச நாட்களிலேயே அவளை பற்றி முழுவதும் புரிந்தது ... அந்த மனம் உண்மையான தன்னை காயபடுத்தாத நட்பை விரும்புகிறது என்பது ... காரணம் அவள் வளர்ந்த சூழல் அப்படி ...ரொம்பவும் கண்டிப்புடன் வளர்க்க பட்ட பெண் அவள் ... எத்தனை கண்டித்தாலும் வாலிபம் நம் மனதில் ஆசைகளை தூவி செல்ல மறப்பதில்லையே ... அதிலும் எதிர்பால் இனத்தின் மேல் ஒரு இனம் புரியா ஈர்ப்பு அந்த வயதில் எல்லாருக்கும் வந்து விடுமே ... அப்படிதான் அவளுக்கும் , ஆனால் அவளுக்கு ஆண்களின் நட்பின் மேல் நம்பிக்கை இல்லை, பெரும்பாலும் ஆண்கள் நட்பை காதலில் முடிக்கவே ஆசைபடுகின்றனர் என்பது அவள் எண்ணம் ... அவளுக்கு காதலில் நம்பிக்கை இருந்தாலும் தன் குடும்பத்தின் மேல் பாசம் அதை விட அதிகம் ஆனால் நான் ஏதோ ஒருவகையில் அவளிடம் நம்பிக்கையை உண்டு பண்ணி இருக்கிறேன் இவன் எப்பொழுதுமே நான் உன்னை காதலிக்கிறேன் என்று மனதில் ஆசையோடு வந்து தன்னை காயபடுத்த மாட்டான் என்று ....அவளுக்குள் அந்த நம்பிக்கை எப்படி வந்தது என்று நான் கடைசி வரை கேட்கவும் இல்லை ...

தினமும் தொலைபேசியிலும் எப்பொழுதாவது நேரிலும் என்னுள் நட்பு மழை பொழிந்து கொண்டு இருந்தாள் அவள் ... திடீரென்று ஒரு வாரமாய் அவளிடம் இருந்து அழைப்பே இல்லை, முதலில் எனக்கு ஒன்றும் பெரியதாய் தோன்றவில்லை என்றாலும்  ஒரு வாரத்தில் என் மனம் அவளுடன் பேச ஏக்கம் கொண்டு அழைந்தது .. துணிந்து அவள் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தேன் .. எதிர் முனையில் அவள் அப்பா ... எனக்கு போனை துண்டிக்க மனம் இல்லை , அவள் பெயரை சொல்லி இருக்கிறாளா என்று கேட்டேன் ... ஒரே வார்த்தையில் அந்த முனையில் இருந்து பதில் அப்படி யாரும் இங்கே இல்லை என்று  வந்தது , உடனே அழைப்பும் துண்டிக்கபட்டது ... அந்த அழைப்போடு சேர்ந்து எங்கள் நட்பும் துண்டிக்கபட்டதாகவே அப்பொழுது நான் உணர்ந்தேன்.... ஆனால் 


(தொடரும்)


 (இந்த தொடர் என் மனதில் நீண்ட நாட்களாய் இருந்த ஒரு குழப்பத்தை  எழுத்தின் மூலம் என் மனதில் இருந்து இறக்கி வைப்பதற்காக நான் எடுக்கும் ஒரு சின்ன முயற்சி.. நல்ல எழுத்தை உங்களுக்கு தர கண்டிப்பாய் முயற்சிக்கிறேன் இந்த தொடரில் ... நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில்

     

LinkWithin

Related Posts with Thumbnails