தமிழ்நாட்டில் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு ஜல்லிக்கட்டுதான் . காளைமாட்டை காப்பாற்றுகிறோம் பேர்வழி என்று PETA என்ற அமைப்பு களமிறங்க அதற்க்கு உச்சநீதிமன்றமும் துணை நிற்க இந்த வருடமும் ஜல்லிகட்டுக்கு தடை. பல நூறு வருடங்களாக ஜல்லிக்கட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது , இவர்கள் சொல்வது போல ஜல்லிகட்டால் காளை இனத்துக்கு ஆபத்து என்பது உண்மையாயிருந்தால் இந்நேரம் காளை மாடுகள் எல்லாம் டைனோசர் காலத்திலேயே அழிந்திருக்க வேண்டும். ஆனால் யதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கிறது. இனபெருக்கம் செய்வதை தவிர வேறு ஒன்றுக்கும் உதவாத காளை மாடுகள் இன்னமும் அழியாமல் இருக்க ஒருவகையில் இந்த ஜல்லிக்கட்டும் காரணம். தென்தமிழகத்தில் காளைமாடுகள் ஜல்லிக்கட்டுக்க மட்டுமே வளர்க்கப்பட்டு வருகின்றன . ஒரு காளை மாடு வளர்க்க வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும் , எவ்வளவு நேரம் அதற்காக அந்த குடும்பம் செலவழிக்க வேண்டும் என்பது அதை வளர்த்து பார்த்தால்தான் தெரியும் . இவ்வளவு செலவு , கால விரையம் இதையெல்லாம் மீறி காளை மாடுகள் வளர்க்கபடுகின்றன என்றால் இரண்டே காரணம்தான் . ஒன்று ரேக்ளா ரேஸ் , இன்னொன்று ஜல்லிக்கட்டு. எனக்கு தெரிந்து உலகத்திலேயே பணத்துக்கு முக்கியத்துவம் தராத ஆபத்தான விளையாட்டுக்கள் என்றால் இவை இரண்டுமாகத்தான் இருக்கும். எங்கெல்லாம் ஆபத்துகள் அதிகமாக இருக்குமோ அங்கெல்லாம் பணமும் அதிகமாக கிடைக்கும். ஆனால் பணம் இல்லாமல் முழுக்க முழுக்க வீரத்துக்கும் , இன கௌரவத்துக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் பாரம்பரியமான விளையாட்டுகள் இவைதான். காளை மாட்டை காரணம் காட்டி இந்த விளையாட்டுகளை முடக்க பார்பதற்கு பின்னால் ஏதோ பெரிய அரசியல் அல்லது வியாபார காரணம் கண்டிப்பாக இருக்க வேண்டும். எனக்கு தெரிந்து பால் மார்கெட்டில் கை வைக்க ஏதோ சூழ்ச்சி நடப்பதாகவே தெரிகிறது . இனி ஜல்லிகட்டே நடக்காது என்ற நிலையை கொண்டு வந்து , காளை மாட்டு வளர்ப்பை கட்டுபடுத்தி அதன் மூலம் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப ஏதோ புதிய விஷயத்தை வெளிநாட்டில் இருந்து இறக்கி நம்மை கேனையனாக்க நடக்கும் முயற்சியாகவே இது தெரிகிறது .இது கண்டிப்பாக நம் நீதி துறைக்கும் தெரிந்திருக்கும் ஆனாலும் சட்டம் என்று ஒன்றுக்கும் உதவாத ஒரு விசயத்துக்கு அவர்கள் மரியாதை கொடுத்துதானே ஆகவேண்டும். நாடே வேண்டாம் என்று எதிர்த்த ஒரு அயோக்கியனுக்கு சிறுவன் என்று உப்பு சப்பில்லாத காரணத்தை காட்டி விடுதலை கொடுக்கவும் , ஒரு மாநிலமே வேண்டும் என்று போராடும் விசயத்துக்கு மிருகவதை என்று தடை செய்யவும் நம் இந்திய சட்ட அமைப்பால்தான் முடியும் .
Followers
Copyright
Thursday, January 14, 2016
ஜல்லிக்கட்டும் சாராயமும்
தமிழ்நாட்டில் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு ஜல்லிக்கட்டுதான் . காளைமாட்டை காப்பாற்றுகிறோம் பேர்வழி என்று PETA என்ற அமைப்பு களமிறங்க அதற்க்கு உச்சநீதிமன்றமும் துணை நிற்க இந்த வருடமும் ஜல்லிகட்டுக்கு தடை. பல நூறு வருடங்களாக ஜல்லிக்கட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது , இவர்கள் சொல்வது போல ஜல்லிகட்டால் காளை இனத்துக்கு ஆபத்து என்பது உண்மையாயிருந்தால் இந்நேரம் காளை மாடுகள் எல்லாம் டைனோசர் காலத்திலேயே அழிந்திருக்க வேண்டும். ஆனால் யதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கிறது. இனபெருக்கம் செய்வதை தவிர வேறு ஒன்றுக்கும் உதவாத காளை மாடுகள் இன்னமும் அழியாமல் இருக்க ஒருவகையில் இந்த ஜல்லிக்கட்டும் காரணம். தென்தமிழகத்தில் காளைமாடுகள் ஜல்லிக்கட்டுக்க மட்டுமே வளர்க்கப்பட்டு வருகின்றன . ஒரு காளை மாடு வளர்க்க வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும் , எவ்வளவு நேரம் அதற்காக அந்த குடும்பம் செலவழிக்க வேண்டும் என்பது அதை வளர்த்து பார்த்தால்தான் தெரியும் . இவ்வளவு செலவு , கால விரையம் இதையெல்லாம் மீறி காளை மாடுகள் வளர்க்கபடுகின்றன என்றால் இரண்டே காரணம்தான் . ஒன்று ரேக்ளா ரேஸ் , இன்னொன்று ஜல்லிக்கட்டு. எனக்கு தெரிந்து உலகத்திலேயே பணத்துக்கு முக்கியத்துவம் தராத ஆபத்தான விளையாட்டுக்கள் என்றால் இவை இரண்டுமாகத்தான் இருக்கும். எங்கெல்லாம் ஆபத்துகள் அதிகமாக இருக்குமோ அங்கெல்லாம் பணமும் அதிகமாக கிடைக்கும். ஆனால் பணம் இல்லாமல் முழுக்க முழுக்க வீரத்துக்கும் , இன கௌரவத்துக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் பாரம்பரியமான விளையாட்டுகள் இவைதான். காளை மாட்டை காரணம் காட்டி இந்த விளையாட்டுகளை முடக்க பார்பதற்கு பின்னால் ஏதோ பெரிய அரசியல் அல்லது வியாபார காரணம் கண்டிப்பாக இருக்க வேண்டும். எனக்கு தெரிந்து பால் மார்கெட்டில் கை வைக்க ஏதோ சூழ்ச்சி நடப்பதாகவே தெரிகிறது . இனி ஜல்லிகட்டே நடக்காது என்ற நிலையை கொண்டு வந்து , காளை மாட்டு வளர்ப்பை கட்டுபடுத்தி அதன் மூலம் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப ஏதோ புதிய விஷயத்தை வெளிநாட்டில் இருந்து இறக்கி நம்மை கேனையனாக்க நடக்கும் முயற்சியாகவே இது தெரிகிறது .இது கண்டிப்பாக நம் நீதி துறைக்கும் தெரிந்திருக்கும் ஆனாலும் சட்டம் என்று ஒன்றுக்கும் உதவாத ஒரு விசயத்துக்கு அவர்கள் மரியாதை கொடுத்துதானே ஆகவேண்டும். நாடே வேண்டாம் என்று எதிர்த்த ஒரு அயோக்கியனுக்கு சிறுவன் என்று உப்பு சப்பில்லாத காரணத்தை காட்டி விடுதலை கொடுக்கவும் , ஒரு மாநிலமே வேண்டும் என்று போராடும் விசயத்துக்கு மிருகவதை என்று தடை செய்யவும் நம் இந்திய சட்ட அமைப்பால்தான் முடியும் .
Saturday, November 14, 2015
வேதாளம் - தெறி
(என்னை அறிந்தால் படத்துக்கு எதுவும் எழுதாமல் இந்த படத்துக்கு எழுதுறானே அப்படின்னு நீங்க (வேற யாரு நம்ம அண்ணாவின் விழுதுகல்தான்) கேட்டா , அப்ப நான் ரொம்ப பிசி , இப்பவும் பிசிதான் இருந்தாலும் நீங்க எல்லாம் நம்மள மறந்துரகூடதுல அதான் சும்மா ஞாபக படுத்திட்டு போகலாமேன்னு )
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த எல்லா நடிகர்களுக்கும் அவர்கள் சினிமா கேரியரில் சில படங்கள் திருப்புமுனையாக அமையும் . ஆனால் மிக சிலருக்குதான் ஒரே ஒரு படம் அவர்களை உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்து அழகு பார்க்கும் . தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான எம்ஜி ஆர் , ரஜினி ஆகியோருக்கும் அப்படி ஒரு படம் அவர்கள் கேரியரில் அமைந்ததது. அதுவரைக்கும் ஒரு சாதரமான ஆக்சன் ஹீரோவாக இருந்த அவர்களை தெறி ஹீரோக்களாக மாற்றியது அந்த படங்களே. கதையோ , திரைக்கதையோ , லாஜிக்கோ எதுவும் இல்லாமல் அவர்கள் ஸ்க்ரீன் ப்ரசென்ஸ் மட்டும் போதும் பார்வையாளனை மயக்க என்று நிரூபித்த படங்கள் அந்த படங்கள் . ரஜினிக்கு பிறகு அப்படி ஒரு படம் யாருக்கும் அமையாது என்பதுதான் நான்கு வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவின் நிலைமை . ஆனால் மங்காத்தா படம் வந்த பொழுது அந்த நிலைமையை கொஞ்சம் அசைத்து பார்த்தார் . அடுத்தடுத்து தல கொடுத்த சூப்பர் ஹிட்டுகளை மெஹா ஹிட்டாக மாற்ற சிவாவுடன் சேர்ந்து தல போட்ட பக்கா தெறி ப்ளான் வேதாளம் மூலம் அதை சுத்தமாக அடித்து நொறுக்கி அந்த வரிசையில் கம்பீரமாக அடுத்து அமர்ந்து விட்டார் தல. வேதாளம் படம் அவரின் சினிமா கேரியரில் மிக மிக முக்கியமான படம் . இந்த படத்தில் தல தவிர வேறு யார் நடித்திருந்தாலும் கண்டிப்பாக கழுவி கழுவி ஊற்றியிருப்பார்கள் . அப்படியான அடித்து துவைத்து காயபோட்ட ஒரு பழைய கதைதான் இந்த வேதாளம் , ஆனாலும் தல என்ற ராட்சசனின் ஸ்க்ரீன் ப்ரசென்ஸ் படத்தை தெறி ஹிட்டாக மாற்றியிருக்கிறது. கப்பலில் நடக்கும் சண்டையில் அழுது கொண்டே தன் முகத்தை கொடூரமாக மாற்றும் காட்சியில் நரம்பு முறுக்கேராதவன் கண்ணாடியை மறந்து வீட்டில் வைத்து விட்டு படம் பார்க்க வந்தவனாகத்தான் இருக்கும். நீ கெட்டவன்னா நான் கேடு கேட்டவன் என்ற வசனத்துக்கு பேமிலி ஆடியன்சே கை தட்டுகிறார்கள். திரையில் புளியோதரையாக சாப்பிட்டு சலித்து போயிருக்கும் அவர்களுக்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு காரமான செட்டி நாட்டு சிக்கன் பிரியாணி கிடைத்திருக்கிறது, கொண்டாடுகிறார்கள். கிளைமேக்ஸ் சீனுக்கு முன்னாள் தங்கை லக்ஷிமேணனை ஹோச்பிடலில் இருந்து அழைத்து வரும் ஸீன் தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் 1000 முறைக்கும் மேல் வந்திருக்கும் , ஆனால் அந்த காட்சியில் தல விரலை வைத்து காட்டும் ஸ்டைலில் திரையரங்கமே அதிர்கிறது. சிவா தல ரசிகர்களை தெறிக்க விட வேண்டும் என்பதற்காவே இந்த படத்தை எடுத்திருப்பார் போல , ஆனால் தல அவர்களையும் தாண்டி பார்க்கும் எல்லோரையும் தெறிக்க விட்டிருக்கிறார். ஆனால் ஒன்றே ஒன்று சொல்ல வேண்டும் , அவர் சிரிச்சா விசில் சத்தம் பறக்குது , அவர் நடந்தா திரையாராங்கமே அதருது , அவர் ஆடுனா இவனுங்கலும் ஆடுராணுக. அவர் அழுதா இவனுங்களும் அழுவுராணுக, அவர் உடம்ப முறுக்கிக்கிட்டு நின்னா இவனுங்கலும் முறுக்கேறி நெஞ்ச நிமித்திகிட்டு கத்துராணுக .. தல இப்படியான ரசிகர்கள் கூட்டம் கிடைக்க நீ புண்ணியம் பண்ணியிருக்கணும்.படத்தில் சொதப்பலே இல்லையா என்று கேட்கலாம்... அதையெல்லாம் படிக்கனும்னா காண்டேரி கெடக்குற புலி அண்ணா ரசிகர்களின் பிளாக்குல போய் படிச்சிகோங்க , சிக்கன் பிரியாணி ஆர்டர் பண்ணிட்டு இதுல ரசத்தை ஊத்தி சாப்பிட்டா கேவலமா இருக்கு, திருநெல்வேலி அல்வா மாதிரி இது இனிக்க மாட்டேன்கிதுன்கிற ரேஞ்சில எழுதி இருப்பானுக அதையெல்லாம் படிச்சிட்டு படத்தை போய் பாருங்க , அவனுங்களை தேடி வந்து காரி துப்புவீங்க.
அப்பறம் படத்தோட கலெக்சன் பத்தி நெறைய நியூஸ் வருது , தல எப்பவுமே கிங் ஒப் ஒபெநிங் தான் அதுல சந்தேகமே கிடையாது , அவரோட படங்களுக்கு சாதாரண நாளில் கிடைக்கும் ஒபெநின்க்தான் மற்ற நடிகர்களுக்கு தீபாவளியில் கிடைக்கும் , இதுல அவர் படம் தீபாவளிக்கு வேற வந்திருக்கு சொல்லவா வேணும் . எங்கள் ஊர் மதுரைக்கு அருகில் இருக்கும் சின்ன நகரம் . அதில் எனக்கு தெரிந்த நண்பர்கள் சேர்ந்து வேதாளம் படத்தின் முதல் நாள் 5 காட்சிகளை 6 லகரங்களுக்கு குத்தகைக்கு எடுத்து ஓட்டினார்கள், மாலை 6 மணி காட்சியை தவிர மற்ற நான்கு காட்சிகளும் அரங்கம் நிறைந்த காட்சிகள் , எல்லா காட்சியிலும் நின்று கொண்டு படம் பார்த்தவர்களே நூற்றுக்கும் அதிகம். அந்த ஒற்றை நாளில் அவர்கள் சம்பாதித்த பணம் வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு வேலை பார்த்து நாம் சம்பாதித்ததை விட அதிகம். இரண்டாம் நாள் நிலைமை முதல்நாளை விட தெறி. இந்த இரண்டு நாளிலேயே தியேட்டர்காரன் போட்ட பணத்தைவிட அதிகம் எடுத்து விட்டான் , இனி வருவது முழுவதும் அவனுக்கு லாபம்தான். இது என் கண்ணால் நான் கண்ட காட்சி அதனால் எழுதுகிறேன் மத்தபடி சிபி (sifi) சொல்லிட்டான் , பிஹைண்ட் வூட்(behindwood) கூவிட்டான் என்று வரும் செய்திகளையெல்லாம் நான் எந்த காலத்திலும் நம்புவதில்லை..வேதாளம் ஒத்த வார்த்தையில் சொல்லனும்னா "வீரம் மாஸ்னா இது பக்கா மாஸ்". சிவா அடுத்த ஆட்டத்தை சீக்கிரம் ஆரம்பிங்க நம்ம தலையோட சேர்ந்து .. அணில் குஞ்சுகளை மறுபடியும் வீடுகட்டி அடிப்போம்.
Tuesday, January 14, 2014
வீரம் - இது எங்க பொங்கல் மாமே
சமீபகாலமாகத்தான் தெலுங்கு படங்கள் பார்க்கும் பழக்கம் தொற்றி கொண்டது உலக படங்கள் பார்கிறவன்தான் அறிவாளிகள் மசாலா படங்களை பார்கிறவனெல்லாம் முட்டாள்கள் என்ற இணைய தனக்குதானே அறிவாளிகளின் பேச்சை கேட்டு வரிசையாக பல உலக மதகா படங்களை பார்த்து மனம் நொந்து கிட்டதட்ட அவர்களை போன்றே அறிவாளியான பைத்தியம் ஆயிடுவோமோ என்று பயந்து கொண்டிருந்த நிலையில்தான் சில தெலுங்கு மாஸ் மசாலா படங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது அதில் சி ல படங்களை பார்த்த பொழுது இப்படியான பக்கா மசாலா படங்கள் நம்மூரில் வராதா என்று ஏங்கியதுண்டு ஆனால் எங்க தலயே அப்படி ஒரு படம் தருவார் என்ரு சத்தியமாக நினைக்கவில்லை
சொல்லியடிக்கும் கதை விறுவிறுப்பான திரைக்கதை அதிரடியான சண்டைகள் அழகான குடும்ப பேக் ட்ராப் இது எல்லாம் இருந்தால் மொக்க ஹீரோ நடித்தாலே கில்லியாக இருக்கும் இதில் தல மாதிரியான மாஸ் ஹீரோ நடித்தால் அட்டகாசமான மங்காத்தாவாக இருக்குமல்லவா , இதுதான் வீரம்.
முதல் பாதியில் பாசக்கார அண்ணனாக வந்து எதிரிகளை பந்தாடுவதாகட்டும் இரண்டாம் பாதியில் ஒரு குடும்பத்தின் பாசக்கார மாப்பிள்ளையாக வந்து வீரமான ஆம்பிள்ளையாக வில்லன்களை வதம் செய்வதாகட்டும் தல அதகளப்படுத்தியிருக்கிறார் முதல் பாதியில் வரும் டெண்டர் சீன் அக்மார்க் ரஜினி டைப் மசாலா அதில் தல பேசும் வசனங்கள் அதிரடி.(இந்த படத்துக்கு வசனம் எழுதியவர் அழுகிய தமிழ் மகனை எழுதி இயக்கியவராம் என்ன வசனம் எழுதுறோம்னு முக்கியமில்லை யாருக்கு எழுதுறோம்கிறதுதான் முக்கியம்)
இடைவேளைக்கு முன்னால் வரும் ரயில் சண்டை மாஸ். என்னடா இவன் இந்( மாஸ் மாஸ்னு எழுதிகிட்டு இருக்கானேன்னு டென்ஷனாகாதீங்க படத்தில அங்கங்க மாஸா இருந்தா கொஞ்சமா எழுதலாம் படமே மாஸா இருந்தா?
இவ்வளவு மாஸாக முதல் பாதியில் அதகளம் பண்ணும் தல இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் தமன்னாவுக்காக சாந்தமான ஆளாக மாறுகிறார் அய்யய்யோ இது தப்பாச்சே என்று நம் உள் மனம் எச்சரிக்கை செய்ய ஆனால் நேர்மாறாக அதே தமன்னாவுக்காக மீண்டும் தல அரிவாளை தூக்க மீண்டும் மாஸ் ஆரம்பம். குழந்நையுடன் தல ஆடும் கண்ணாமுச்சி, தன் பாணியில் வில்லனிடம் கெஞ்சி அவனை நார்த் இந்தியா அனுப்புவது ,+ சோறு போட்டவளெல்லாம் தாய் சொல்லி கொடுத்தவெனெல்லாம் அப்பா என்று வசனம் பேசி கொண்டே வில்லன்களை பந்தாடுவதாகட்டும் மாஸ் மாஸ் மாஸ்...
இந்த படம் ஆரம்பித்த பொழுது சிவாவின் மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை
ஆனால் படம் பார்த்த பிறகு வி லவ் யூ சார் தலயோட உங்க அடுத்த படத்துக்கு காத்து கொண்டிருக்கிறோம் சார்
மொத்தத்தில் இந்த பொங்கல் தல பொங்கல் இப்பத்தான் தல தீபாவளி கொண்டாடினோம் இப்ப பாக்ஸ் ஆபிஸில் பொங்கலையும் எங்களுக்கே பரிசலித்திருக்கிறார் தல இது எங்களுக்கு ஸ்பெஷல் பொங்கல் திருப்பி கொடுத்தோம்ல அதான் ஸ்பெஷல்
மங்காத்தாவில் ஆரம்பித்த தலயின் மாஸ் ப்ளஸ் வசூல் வேட்டை இந்த வீரம் வீரம் வரைக்கும் வீரியமாக தொடர்கிறது 2014 just We are strong. Still we are unstoppable.. இந்த பொங்கல் தல பொங்கல் மாமே தறுதலை பொங்கல் கொண்டாட ஆசைப்பட்ட அணில் குஞ்சகளே உங்களுக்கு இந்த தடவை போகியே இல்லையே எப்படி பொங்கல் கொண்டாட? வழக்கம் போல சிபி பிகைன்ட்வுட்டுன்னு வாயிலேயே வடை சுடுவீங்களா? அந்த ஊசி போன வடைகூட இந்த தடவை உங்களுக்கு கிடையாது போல... வேற ஏதாவது வடை சுட்டு அந்த ஊசி போன வடைய நீங்களே திண்ணுட்டு வியித்து கடுப்புல இங்க வந்து வாந்தி எடுங்க அணில் குஞ்சஸ்
தல ரசிகனாக என்னை பொறுத்தவரை வீரம் மங்காத்தாவுக்கு கொஞ்சம் கீழே பில்லா ஆரம்பத்துக்கு மேலே
என்ன நான் சொல்லுறது?
Thursday, November 14, 2013
ஆரம்பம்
படம் வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது , கிட்டதட்ட ஐந்து முறை படம்
பார்த்தாகிவிட்டது ஆனால் இப்பொழுதான் அதை பற்றிய பதிவு எழுதுவதற்க்கு வாய்ப்பு
கிடைத்திருக்கிறது , இந்த பத்து நாட்களாக நேரம் கிடைக்கும் சமயங்களில் இணைய
வசதி இல்லாமல் போய் விட்டது , இணைய வசதி இருந்த சமயங்களில் இதை பற்றி எழுத
நேரம் கிடைக்காமல் போய் விட்டது . இனிமேல் இதை எழுதினால் யாரும் படிப்பார்களா
என்று தெரியவில்லை , ஆனால் ஒரு தல ரசிகனாக இருந்து கொண்டு ஆரம்பம் படத்தை
பற்றி எதுவும் எழுதாமல் போனால் நாளைக்கு எதிரிகள் நம் வரலாற்றை திரித்து எழுதி
விடுவார்கள் என்பதால் இந்த கடமையை கொஞ்சம் தாமதம் ஆனாலும் முடித்து விடலாம்
என்று இந்த பதிவை எழுதுகிறேன் ..
முன்பு எல்லாம் தல படம் வந்தால் காக்கா மாமாவின் ரசிகர்களுக்கு வயிறெரியும் ,ஆனால் இப்பொழுது வேறு சிலருக்கு வயிற்று வலியே வந்து விடுகிறது
, அவர்கள் வழியில் வாந்தி எடுத்து வைத்து விடுகிறார்கள் . மங்கத்தாவில் சாதாரண
வயிற்று கடுப்பாக ஆரம்பித்தது , பில்லா 2 வில் வயித்து போக்காக மாறி இப்பொழுது
ஆரம்பத்தில் அவருக்கு அல்சரே வந்து விட்டது... இப்படியே போனால் அண்ணனுக்கு
பொங்கலில் கேன்சரே வந்தாலும் வரலாம் அந்த கோச்சடையாந்தான் அவரை காப்பாற்ற
வேண்டும். இந்த படத்தில் தல தன்னை அடுத்த ரஜினியாக காட்டிக்கொள்ளவில்லை ,படத்துக்கு வெளியே ரஜினியையோ இல்லை அவரின் ரசிகர்களையோ எந்த விதத்திலும்
சீண்டவில்லை , இருந்தும் சில ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து காண்டாவது
ஒரு தல ரசிகனாக எனக்கு சந்தோசமே...
நான் ஏற்கனவே பில்லா 2 வில் சொல்லியதுதான் , ஒரு மசாலா படத்தை தனி ஒரு ஆளாக
தூக்கி பிடித்து அதை வெற்றியடைய செய்யும் திறமை ஒரு சிலருக்கே அமையும் , அதில்
ரஜினிக்கு என்றுமே முதலிடம்தான் , பாட்ஷா , அருணாசலம் , படையப்பா போன்ற
படங்களில் எல்லாம் ரஜினியை எடுத்தி விட்டு பார்த்தால் படத்தில் ஒன்றுமே
இருக்காது , அவருக்கு பின்னர் அந்த திறமை இருக்கும் ஒரே நடிகர் தலதான் ,பில்லா
, மாங்காத்தா இந்த இரண்டு படங்களிலும் அஜித்தை நீக்கி விட்டு பார்த்தால்
பூஜியம்தான் , அதே போல ஒரு நடிகர் என்ன செய்தாலும் அதை பார்த்து திரையரங்கமே
ஆர்பாரிக்கும் என்றாள் அதுவும் ரஜினிதான் , இந்த ஆரம்பத்தில் அந்த
மேஜிக்கையும் நிகழ்த்தி விட்டார் தல , போலீஸ் கஷ்டடியில் இருந்து தப்பிக்கும்
அஜீத் அடுத்த காட்சியிலேயே துபாய் செல்கிறார் , உக்கார்ந்த இடத்தில்
இருந்துகொண்டு ஒரு சாட்டிலைட் நெட்வொர்க்கையே ஸ்தம்பிக்க செய்கிறார் ,ஜேம்ஸ்பாண்ட் ஒருவரால் கூட ஹேக் செய்ய முடியாது என்னும் அளவுக்கு செக்யூர்
செய்ய பட்ட வங்கி செர்வரை ரொம்ப சாதாரணமாக ஹேக் செய்கிறார் ... ஆனால் இந்த
லாஜிக் மீறல்கள் அனைத்துமே படத்தில் தெரிந்தேதான் வைக்கபட்டுள்ளது , விஷ்ணு
என்னும் இயக்குனரின் ஸ்டைலான காட்சியமைப்பும் , யுவனின் அதிரடியான பின்னணியும்
, கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிபதிவும் எல்லாவற்றிருக்கும் மேலாக தலயின்
மேஜிக்கலான ஸ்கிரீன் பிரெஸென்சும் இருக்கும் பொது லாஜிக்காவது
மண்ணாங்கட்டியாவது ... இதற்க்கு முன் சிவாஜியில்தான் இப்படி தெரிந்தே லாஜிக்கே
இல்லாமல் காட்சிகளை அமைத்து அதில் வென்றும் காட்டியிருந்தார்கள் .. சிவாஜியில்
நிகழ்த்தபட்ட அந்த அதிசயத்தை பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவும்
அஜித்தும் தமிழ் சினிமாவில் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். ஒரு பைக்கை
காட்டியவுடன் விசில் சத்தம் விண்ணை பிளக்கிறது இது வேறு எந்த சம கால நடிகனின்
படத்திலும் சாத்தியமே இல்லை ..
தல படத்தை முதல் நாள் பார்ப்பது என்பது என்றுமே மகிழ்ச்சியான விஷயமே ,படத்துக்கு படம் அவரின் ஒப்பேனிங் பிரமாண்டமாய் கூடிக்கொண்டே செல்கிறது..
தளபதி பாட்ஷா காலத்து ரஜினி பட முதல் நாள் காட்சிகளில் இருந்த எனர்ஜி ,உற்சாகம்
, வெறி , ஆட்டம் பாட்டம் எல்லாம் ரஜினியோடு முடிந்து விடும் என்று எல்லாருமே
சொல்லிக்கொண்டு இருக்கும் போது அந்த மொத்த என்ர்ஜியையும் , உற்சாகத்தையும் ,கொண்டாட்டத்தையும் இன்றைய இளைங்கர்களிடம் மறு உருவாக்கம் செய்து
கொண்டிருக்கிறார் தல ... முதல் மூன்று நாட்கள் பல திரையரங்குகளில்
(அருப்புக்கோட்டை , சென்னை ) இந்த படத்தை பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்
ஒரு ஜாதிய கட்சியின் ஊர்வலத்தில் கூட இவ்வளவு கொண்டாடத்தை பார்க்க முடியாது.
அஜீத் படம் வெளிவரும்போது மட்டும்தான் இந்த கூட்டமும் வெளியே வரும் , மற்ற
நாட்களில் இவர்கள் எங்கே இருப்பார்கள் என்றே தெரியாது . இந்த கூட்டத்தை தனது
சுயநலத்துக்காக தல பயன்படுத்தாமல் இருக்கும் வரை இது பெருகிகொண்டேதான் போகும்..
Wednesday, August 21, 2013
தலைவ்வ்வ்வ்......வா
Monday, April 29, 2013
தன்னை தானே செதுக்கியவன்- Ajith Birthday Special
Wednesday, March 20, 2013
பரதேசி - நியாயமாரெ
Thursday, February 14, 2013
விஸ்வரூபம்
Friday, December 14, 2012
கமல் ஒரு சிறந்த வியாபாரியா? பாகம் 1
தொடரும் ..........








